அத்தியாயம்:23
அடுத்து மயூரின் நடனம் தான் முதலில் புனே பெண்ணு ஆடிய முடிய …அடுத்து ஆடி கொண்டு இருப்பது கல்கத்தா பெண்ணு…ஆடி கொண்டு இருந்தது.
கண்மணி மயூரிக்கு லைட் டச்சப் கொடுத்து கொண்டு இருக்க…யசோதா மயூரின் முகநூல், இன்ஸ்டாகிராம் அவளுக்கு என்று இருக்கும் பான்ஸ் பேஜ்ஜில்…அவள் நிகழ்ச்சியை பற்றி அவள் புகைபடங்களை… பதிவேற்றி கொண்டு இருந்தாள்.
அப்போது மயூ என்று அழைத்து கொண்டு சாரதா வந்தார்…அவர் கையில் பூஜை கூடை இருக்க அதில் சாமி முன்னாடி… வைத்து பூஜை பண்ணிய சலங்கைகள் இருந்தது…
மிஸ் என்று அழைத்து கொண்டு மயூரி எழுந்து நின்றாள்…பொது இடங்களில் சாரதாவை அவள் மிஸ் என்று தான் அழைப்பாள்…நடனம் எல்லாம் முடிய தான் உறவு முறை சொல்லி அழைப்பாள்.
சாரதா மயூரி அருகில் வந்து அவளை ஒரு தடவை…எல்லாம் சரியாக இருக்கிறதா..? என பார்த்து விட்டு.
“ கண்மணி கொஞ்சம் மயூரிக்கு அதிகமாக கண் மை போடு லிப்ஸ்டிக் கூட கொஞ்சம் அதிகமா போடு மா…அப்போ தான் பிளாஷ் லைட்டில் நல்லா ப்ரைட்டாடக தெரியும்.
சேப்டி பின் கூட கொஞ்சம் அதிகமாக குத்தி விடு…மயூரி தாண்டவம் ஆட போகிறாள் அதில்… உக்கிரம் அதிகமாக இருக்கும் புடவை நழுவி விட கூடாது.
மயூ சாப்பிட்டு விட்ட தானே வாஷ் ரூம் எல்லாம்…போய் வந்திருப்ப என தெரியும்…சரி இந்தா பிரசாதம் வாயை திற…” என்றவர்.. சக்கரை பொங்கலை ஊட்டி விட்டவர்…அவள் வாயை துடைத்து விட்டு.
சாரதா “ கிட்ட தட்ட இருபது வருடங்களுக்கு பிறகு…இந்த இடத்தில் நான் சியாமளா ஆடுவதை பார்க்க போகிறேன் மயூரி…இன்று வந்திருக்கும் கூட்டமும் சியாமளா நடனத்தை பார்த்து ரசித்த கூட்டம்.
அவள் நடனத்தை ரசிக்க என்றே ஒரு கூட்டம் இருந்தது…அது தான் அவள் போன பிறகு பெரிதாக நடனத்தின் மேலே ஈடுபாட்டை யாரிடமும் காண முடிந்தது இல்லை…
அவங்களை சொல்லியும் தப்பு இல்லை… இப்போ எல்லாம் பணத்தேவை, ஆடம்பரத்துக்கு தானே… முக்கியத்துவம் கொடுக்கிறாங்க.
மயூரி இன்று நீ முன்னே விட பல மடங்கு ஈடுபாடு, உன் உழைப்பை கொடுக்க வேணும்…இது உன் அம்மா ஆடிய இடம், மேடை அவள் பெயரை நீ காப்பாற்ற வேணும்…மக்கள் உன்னை சியாமளாவின் பெண்ணாக மட்டும் பார்க்க கூடாது.
மயூரிகாவாகவும் பார்க்க வேணும்…அதை தான் நான் மட்டுமல்ல உன் அம்மாவும் விரும்புவோம்…உன் நடனத்தின் வெற்றி தான் என் கற்பித்தலின் வெற்றி கூட.
எனக்கு பரத நாட்டியத்தில் தெரிந்த அத்தனையும் உனக்கு கற்று கொடுத்து விட்டேன்…நீ என் மாணவி மட்டுமல்ல பெண்ணும் கூட…நீ வெற்றி பெற வேணும் அதில் தான் என் சந்தோஷம் இருக்கு.
இத்தனை நாள் உன் நிகழ்ச்சிக்கு வராது இருந்த உன் தாத்தா வந்திருக்கிறார்…எதற்காக தன் பேத்திக்காக நீ மீண்டும் உன் நடனத்தின் மூலமாக அவர்…பெண்ணை அவர் கண் முன்னே கொண்டு வர வேணும்.
சரி டைமாகி விட்டது உன் எண்ணம் எல்லாம்…பரமேஸ்வரன், நடனத்தில் மட்டும் தான் இருக்க வேணும்…உனக்கு துணையாக எப்பவுமே அவர் இருப்பார்…” என்றவர் அவள் நெற்றியில் முத்தம் வைத்தவர்.
அவளுக்கு லேசாக திருநீறு பூசி விட்டவர்…சலங்கையை கட்டி விட்டார் மயூரி சாரதாவின் பாதம் பண்ணிய…சாரதாவும் அவளை அணைத்து கொண்டார்…மேடையில் அறிவிப்பு செய்யும் பெண் தோன்றியவள்.
“ அடுத்து நீங்க ஆவலாக எதிர்பார்த்த செல்வி மயூரிகா ராகவனின் நடனம் ஆரம்பமாகும்…மயூரிகா வேறு யாருமல்ல மறைந்த நாட்டிய தாரகை சியாமளா ராகவனின் புதல்வி.
சியாமளா பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவை இல்லை…இந்த தஞ்சை மக்கள் அவங்க நாட்டியம் பற்றி அறிவார்கள்…அது போல இந்த பெரிய கோவிலில் அவர்களின் கால் படாத இடம் இல்லை.
இன்று அது போல அவரின் பெண்ணு வழியாக…நம்ம திரும்பவும் அவர் நாட்டியத்தை பார்க்க போகிறோம்…மயூரிகாவின் நடன ஆசிரியை நடன சிகாமணி சாரதா கண்ணன் அவர்கள்…
செல்வி மயூரிகாவும் தன் நடனத்தால் தனக்கு என்று தனியாக முத்திரை பதித்தவர்…அவரை இந்த தமிழ்நாடு நடன தாரகையாக பெற்றதற்காக பெருமை கொள்கிறது.
அவர் நடனத்தை இனி அனைவருமே கண்டு கழிக்கலாம்…” என அறிவிப்பு செய்து விட்டு போனதும் திரை விலக மயூரி…வணக்க முத்திரை பதித்தபடியே நின்றிருத்தாள்.
சாரதா நாட்டுவாங்கத்தை ஆரம்பிக்க தாண்டவம் ஆரம்பமாகியது…தாண்டவத்தில் முக்கிய தாண்டவாக 108 தாண்டவங்கள் இருக்கிறது…அதில் முக்கிய தாண்டவம் நான்கு
ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், சந்தியா தாண்டவம்…இதில் சிவன் மாகாளியுடன் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தை தான் மயூரி ஆட தொடங்கினாள்.
அதுவும் அவளே சிவன், சக்தியாக மாறி மாறி ஆட தொடங்கினாள்…மயூரி ஆட தொடங்கியது கூட்டதில் சல சலப்பு எழுந்து பின் அடங்கியது…அவள் நடனத்தில் அனைவருமே கட்டுண்டு இருந்தனர்.
பவதீப்க்கு அவள் பெயரை அறிவிப்பு செய்ததும்…அவனையறியாது மேடையை தான் பார்த்தான் அவன் இது வரைக்கும்…அவள் நடனத்தை நேரில் பார்த்தது இல்லை.
குரு மூர்த்தி குடும்பம் பேசும் போது தான் கேட்டு இருக்கிறான்…தர்ஷன் கூட ஒரு தடவை மொபைலில் அவள் ஆடும் வீடியோவை…அவனிடம் கொண்டு வந்து காட்டியவன்.
“ அங்கிள் இங்கே பாரு இது தான் என் சித்தி…டான்ஸ் பண்ண போகிறாள் நாளை அவளை… பார்க்க நாங்க போகிறோம்…” என்று சொல்லி இருக்கிறான்.
பவதீப்க்கும் கலைகளுக்கும் வெகு தூரம்..அது மட்டுமல்ல மயூரிகா வயது பெண்ணு முதல்வரின் பேத்தி…அதனால் அவன் எட்டி நிற்க ஆரம்பித்தான்…அவனுக்கு தான் பெண்ணுங்க மேலே பெரிதாக எந்த ஈடுபாடும் இல்லையே.
இன்று ஏனோ மனசு தடுமாற அவன் மேடையை பார்த்தான்…மயூரி தன்னை சிவன், பார்வதியாக நினைத்து ஆடி கொண்டு இருந்தாள்…பவதீப் போல தான் மற்றவர்களும் இருந்தார்கள்.
சக்ரபாணியின் கண்கள் தன்னையறியாது கலங்கியது…தன் பெண்ணு சாகவில்லை தன் எதிரே இதோ ஆடி கொண்டு இருக்கிறாள்…அது போல ராகவன் முதல் தடவையாக மகளின் நடனத்தை நேரில் பார்க்கிறான்.
இது போல ஒரு நடனத்தை ஆடும் போது தான் அவன் சியாமளாவை கண்டது…அந்த நிமிடமே மனதை அவளிடம் பறி கொடுத்தான்…பொதுவாக சியாமளா கல்யாணி கூட தான் வெளியே போய் வருவாள்.
புவனாவும் அவளும் நண்பிகள் அதை விட குரு மூர்த்தி, சக்ரபாணி நண்பர்கள் என்பதால்…புவனாவை பார்க்க தாய் கூட குருவின் வீட்டுக்கு வருவாள்…அவள் வரும் போது ராகவன் வெளியே தலை போகும்… வேலை வந்தால் கூட போக மாட்டான்.
புவனாவிடம் பேச்சு கொடுத்து அவள் வருவதை பற்றி தெரிந்து கொள்வான்…அப்படி ஆசையாக காதலித்தவளை அவன் கொலை செய்தான் என்று சொல்வதை…அவனால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது…
அது போல தான் பாண்டி, மாலதி, சரிகா நேரில்… அவள் நடன திறமையை மட்டுமல்ல அவள் அழகை பார்த்தும் பொறாமை கொண்டார்கள்…
ராஜவேலு மனதில் இவள் தான் என் பொண்டாட்டி… என்ன செய்து என்றாலும் இவளை அடைய வேணும் என்று தீர்மானம் செய்தான்.
பவதீப் மயூரின் ஆட்டத்தை பார்த்து விட்டு.. .எதேச்சையாக திரும்பியவன் பார்வையில் ராகவன்… மடியில் தூங்கி கொண்டு இருக்கும் தியாவை பார்த்தது…பாப்பா இங்கே இருக்கிறாள் தர்ஷன் சக்ரபாணியிடம் தானே இருந்தான் ..
பிறகு மீனா மடியில் இருந்தான் இப்போ எங்கே ஆளை காணோம்…என்று நினைத்தவன் முகம் சட்டென மாறியது…
பையன் மிஸ்ஸிங் மை காட் இதை நான் கவனிக்கவே இல்லை…கண பொழுதில் என் சிந்தை தடுமாறிய விளைவு…என் கடமையில் இருந்து விலகி விட்டேனா..? என நினைத்தவன்.
சட்டென ராகுலுக்கு கால் பண்ணினான்…ராகுலும் அடுத்த செக்கன் கால் அட்டன் பண்ண மெதுவாக.
“ ராகுல் தர்ஷன் மிஸ்ஸிங் வெளியே யாருமே போக வாய்ப்பு இருக்காது…நீ என்ன செய்கிற வெளியே இருந்து யாருமே வர விடாதே…அது போல உள்ளே இருந்து யார் என்றாலும்.. என் கிட்ட பர்மிஷன் கேட்காது வெளியே அனுப்ப வேணாம்.
நம்ம கார்ட்ஸை அனுப்பி தர்ஷனை தேட சொல்லு…விஷயம் யாருக்குமே தெரிய கூடாது பிரஸ், மீடியா வந்திருக்கிறாங்க…ஜாக்கிரதையாக இரு எலக்சன் வேறு வருகிறது சார் பெயருக்கு எந்த டேமேஜ்யும் வர கூடாது.
சாரை விட்டு என்னால் நகர முடியாது…நீ எனக்கு அப்டேட் தந்து கொண்டே இரு தர்ஷன் உயிருக்கு எந்த ஆபத்தும் வர கூடாது…
வெளியே பசங்க விளையாடுகிறாங்க போல… முதலில் அங்கே அவன் நிற்கிறானா என பாரு..?
நான் இங்கே உள்ள நிலமையை பார்த்து விட்டு வருகிறேன்…நீ தர்மாவை அனுப்பி தேட சொல்லு…அலெக்ஸை இங்கே அனுப்பி விடு..” என்றான்.
அவர்கள் இருவருமே மிஷனில் இறங்கி…வெற்றி பெறுவதில் கில்லாடிகள்…எல்லோருமே பவதீப்பின் டீம் தான்…
தர்ஷன் விளையாடி கொண்டு இருக்கும் போது காசிப் ஆளுங்க டீசன்டாக உடை அணிந்து…பார்க்கவே பெரிய மனிதர்கள் போல இருந்த தன் ஆளுங்க இருவரை அனுப்பி இருந்தான்.
அவர்களும் கையில் ஒரு பையோடு வந்து…அதில் இருந்து சாக்லேட், பிஸ்கட் கொடுக்க போக…அதை ஒரு சிறுவன் வாங்க போக தர்ஷன் அவன் கையை பற்றியவன்.
“ ஸ்ரீ இவங்களை உனக்கு தெரியுமா..? உன் அங்கிளா..? என கேட்டான்…அந்த ஸ்ரீ என்ற பையன் இல்லை என தலையாட்ட.
தர்ஷன் “ அப்போ எதற்காக அவங்க கிட்ட இருந்து சாக்லேட் வாங்குகிற…என் தாத்தா சொல்லி இருக்கிறார் தெரியாத ஆளுங்க எது தந்தாலும் வாங்க கூடாது…அவங்க பிள்ளை பிடிக்கும் ஆளுங்க நம்மை தூக்கி போய் விடுவாங்க.
பிறகு எங்களால் அம்மா, தாத்தா, பாட்டி, சித்தி, பாப்பா, அங்கிளை எல்லாம் பார்க்க முடியாது என்று…
அங்கிள் கூட சொல்லி இருக்கிறார் இவங்க எல்லாம் பாட் பாய்ஸ் என்று…உனக்கு சாக்லேட் அங்கிள் கிட்ட சொல்லி நான் வாங்கி தரேன்…வா இப்போ விளையாடலாம்…” என்றவனை காசிப் ஆளுங்க ஆச்சரியமாக பார்த்தார்கள்.
இந்த வயதில் என்ன தெளிவு கம்பீரமான பேச்சு…சும்மாவா முதல்வரின் பேரன் இல்லையா…? இவனை மடக்க வேணும் என்றார் வேறு வழியை தான்… பார்க்க வேணும் என்று நினைத்தார்கள்.
தர்ஷன் என அழைக்க அவன் திரும்பி அவர்களை பார்த்தான்… அதில் ஒருவன் தர்ஷன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்…
“தர்ஷா நாங்க உன் சித்தப்பாக்கள் உன் அப்பாவின் தம்பிங்க…உன்னை பாப்பாவை பார்க்க தான் வந்தோம்…உன் அம்மா, பாட்டி, தாத்தா, அங்கிளுக்கு எல்லாம் என்னை தெரியும்.
உன் சித்தி டான்ஸ் ஆடுகிறாள் நீ ஏன் அவள் டான்ஸை பார்க்க போகவில்லை…நாங்க கூட உன் சித்தி டான்ஸ் பார்க்க தான் வந்தோம்…நீ தான் எங்களை அங்கே அழைத்து போக வேணும்…” என அழாக பேசினான்.
தர்ஷன் என்ன பெரிய பையனா யோசிக்க…சித்தப்பா என்றதும் பையன் தடுமாறி விட்டான் அவன் முகம் மலர…
“ ஓ..! நீங்க இரண்டு பேருமே என் சித்தப்பாவா..? அப்பாவை உங்களுக்கு தெரியுமா..? ஆனா அவர் சாமி கிட்ட போய் விட்டார் இனி திரும்ப வர மாட்டார் என அம்மா சொன்னாங்களே…நீங்க அப்பாவை பார்த்தால் வர சொல்கிறீங்களா..?
என் ப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் அப்பா இருக்கு…அவங்க கூட தான் பைக் காரில் வருவாங்க அப்பா கூட தான் கிரிகெட் விளையாடுவதாக சொல்வாங்க…நானும் அப்பாவை பார்க்க வேணும்…” என ஏக்கமாக சொன்னான்.
அவன் அப்பா ஏக்கத்தை சரியாக புரிந்து கொண்ட காசிப் ஆளுங்க…
“ சரி தர்ஷன் உன்னை உன் அப்பா கிட்ட அழைத்து போகிறோம்…நீ எங்க கூட வருகிறாயா..? என கேட்டான்.
தர்ஷனும் தந்தையை பார்க்க போகும் ஆசையில்…தலையாட்டினான். அவனை ஒருவன் தூக்கி கொள்ள…இருவருமே கோவிலில் உள்ள பின்பக்கமாக போனார்கள்.
அதைய நேரம் கோவில் குளத்தில் கால்களை கழுவி கொண்டு…கம்பீரமான ஆண் ஒருவன் படிகளில் இருந்து மேலே ஏறி வந்து கொண்டு இருந்தான்.
மயில் ஆடி வரும்…
