காதல்- 25

காதல் -25 
 

 

கல்லூரி வளாகத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த ராஜாவின் அருகில் வந்த சூர்யா 
“என்ன மச்சான் சோகமா இருக்க?” என்று கேட்டான்.

ராஜாவோ “கீத்து மூன்னு நாளா காலேஜ் வரல சூர்யா. அவளை பார்க்காமல் இருக்க முடியலடா. அன்னிக்கு வேற கோபமா பேசிட்டேன். பாவம் அழுது இருப்பா.” என்று கீதாவை நினைத்து கவலைக் கொண்டான்.

அவனோ “ம் கண்ணு கெட்டதுக்கு அப்புறம் சூரிய நமஸ்காரமா? அன்னிக்கு நானே பயந்துட்டேன்டா. நீ அந்த கம்பத்துல குத்தும் போது பாவம் சின்ன பொண்ணு பயப்படாதா ராஜா.”

“டேய் நீ வேற சும்மா இரு சூர்யா. நானே என் கீத்துவ பார்க்க முடியாமல் வருத்தத்துல இருக்கேன்.” என்று நண்பனை அதட்டினான். 

சூரியாவோ பெருமூச்சோடு “நீ மட்டுமா? நானும் தான்டா. என் ரம்மிய மூன்னு நாளா பார்க்காமல் இருக்கேன்.” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறியவனை பார்த்து,

“யாருடா அந்த ரம்மி?” என்று கேட்டான்.

சூர்யாவோ “யாரு அந்த ரம்மியா? டேய் உனக்கு ரம்மி யாரு தெரியாதா” என்று நண்பனை முறைத்துக் கொண்டு கேட்க.

அவனோ இதழ் பிதுக்கி “தெரியாது மச்சி. நீ ரம்யாவை தானே லவ் பண்ற. அப்புறம் யாரு இந்த ரம்மி நடுவுல” என சிரீயஸாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் ராஜா.

மேலும் நண்பனை முறைத்துக் கொண்டே “ரம்யாவை தான் ரம்மின்னு சொன்னேன்”. என்றான்.

இன்பா “ஈஈஈ” என பல்லை காட்டி “சாரி மச்சி. நீ உன் ஆளுக்கு செல்ல பெயர் வச்சி இருப்பேனு எனக்கு தெரியாது இல்லையா. அதான்டா அப்படி கேட்டேன்”. என்று சொன்னவனை வெட்டவா குத்துவா என்று இருந்தது அவனுக்கு. 

“ஏன்டா நீங்க மட்டும் செல்ல பெயர் வைக்கலாம். நான் வைக்க கூடாதா?” என சூர்யா கேட்டுக் கொண்டு இருக்கும் நேரம்,

ரம்யா அவர்களை நோக்கி வருவதை பார்த்த இன்பா வேகமாக ரம்யாவிடம் சென்று “கீத்து வரலையா?” என்று கேட்டான்.

“இல்ல அண்ணா அவள் காலேஜுக்கு வந்து மூன்னு நாள் ஆச்சு”. என்றவளை பார்த்த சூர்யா,

“ஆமா மேடமும் காலேஜிக்கு வந்து மூன்னு நாள் ஆச்சு” என்றான் நெக்கலாக.

ரம்யாவோ “நான் காலேஜிக்கு வந்துட்டு தான் இருக்கேன்” என்று சொன்னதை கேட்டு அதிர்ந்து,

“என்னது காலேஜிக்கு வந்துட்டு தான் இருக்கியா? அப்புறம் எதுக்கு என் கண்ணுல படல. நான் உன்னை தேடாத இடம் இல்லை. பொய் சொல்லாமல் சொல்லுடி” என்று சூர்யா கோபமாக கேட்டான்.

ரம்யாவோ “என்ன டி யா? ஹலோ மரியாதை கொடுத்து பேசுங்க. அப்பறம் நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது. நான் எதுக்கு உங்க கண்ணுல படணும். நீங்க எதுக்கு என்னை தேடணும்”. என்று தன் காதலை மறைத்துக் கொண்டு கேட்டவளை, ஒரு நிமிடம் உற்று கவனித்து விட்டு வேறு பக்கமாக திரும்பிக்கொண்டான் சூர்யா.

ரம்யாவோ வேதனையோடு மனதில் ‘ஐயம் ரியலி சாரிடா சூர்யா. உன் தவிப்பையும் உன் அன்பையும் நான் உணராமல் இல்லை. ஆனா உன்னை பத்தி தெரிஞ்சுதுக்கு அப்புறமும் நான் எப்படிடா உனக்கு பொருத்தமா இருப்பேன். நீயும் ஒரு பணக்காரன்னு தெரியும். ஆனால் ராஜா அண்ணாவுக்கு சரிசமமா இருப்பிங்கனு தெரியாமல் என் மனசுல ஆசைப்பட்டுடேன். உங்க ஸ்டேட்டஸ் எங்க? நாங்க எங்க? கண்டிப்பா நம்ம சேர மாட்டோம்னு தெரிஞ்சே உன் மனசுல ஆசையை வளர்க்க விரும்பலடா. அதான் நான் இந்த மாதிரி உன்கிட்ட நடந்துக்க வேண்டியதா இருக்கு. “என்று என்று மனதிற்கு மறுக்கிக்  கொண்டு இருந்தவளை உணர்வுக்கு கொண்டு வந்தான் இன்பராஜா.

“ரம்யா”

“சொல்லுங்க அண்ணா”

“கீத்து ஏன் காலேஜ் வரல?” என்று கேட்டான்.

“அது அண்ணா அவளுக்கு உடம்பு சரியில்லை. அவங்க அப்பா அம்மாவும் வீட்ல இல்ல. ஊருக்கு போய் இருக்காங்க. பீச்சுக்கு போய்ட்டு வந்ததிலிருந்து  பீவர். நான் உங்கக்கிட்ட சொல்லட்டுமானு கேட்டேன். அவ தான் வேண்டாம் அப்பறம் இன்பா கவலைப்படுவான். நான் பார்த்துக்கிறேனு சொல்லிட்டா. நைட் டைம்ல எங்க வீட்டிலும் வெளியே தங்க அனுமதிக்க மாட்டாங்க அண்ணா. அது மட்டும் இல்ல.” என்று சற்று தயங்கியவளை பார்த்து,

“சொல்லுமா என்ன ஆச்சு கீத்துக்கு வேற ஏதாவது பிரச்சனையா. எதுவா இருந்தாலும் சொல்லுமா” என்று கவலையுடன் இன்பா கேட்க,

ரம்யாவோ “அவள் முகம் எல்லாம் அழுது வீங்கி போய் இருந்தது. என்ன ஆச்சுனு கேட்டதுக்கு அவள் சொல்லல. நான் கோபமா கேட்டதுக்கு அப்புறம் தான் சொன்னா.  நீங்க அன்னிக்கு கோபப்பட்டு பேசுனீங்கன்னு.” என்று சங்கடத்துடன் முடித்தாள்.

அதை கேட்ட ராஜாவோ தடுமாற்றத்துடன் “அது வந்து ரம்யா நான் அன்னிக்கு” என பேச வந்தவனை தடுத்தாள் ரம்யா.

“இருங்க ராஜா அண்ணா நான் முழுசா சொல்லிடுறேன். கீதா அன்னிக்கு பீச்சுல இருந்து கிளம்பலாம்னு சொன்னதுக்கு காரணம். என்ன தெரியுமா? அன்னிக்கு அவளை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்து அது உங்களிடம் சொன்னால் தேவை இல்லாத பிரச்சனை தான் வரும், என்றும் வேற வழி இல்லாமல் தான் அங்கு இருந்து கிளம்பலாம்னு சொன்னா அண்ணா” என்று ரம்யா சொன்னத்தை கேட்ட ராஜா தன்னை தானே கடிந்துக் கொண்டு அவன் மீதே அவனுக்கு கோபம் தோன்ற அருகிலிருந்தில் மரத்தில் ஓங்கி குத்தினான்.

அதை பார்த்த ரம்யாவோ பயந்து ஒரு அடி பின்னால் சென்றாள்.

“ச்சை தப்பு பண்ணிட்டேன். நான் மட்டுமே அன்னிக்கு அவளை சரியாக கவனிச்சி இருந்தா இந்த பிரச்சனையே இல்ல. என்னை பத்தி நினைக்கவே அசிங்கமா இருக்கு. அவ கஷ்டத்த கூட புரிஞ்சிக்காமல் அவளையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்திக்கிட்டேன்.” என்றான் ராஜா.

சூர்யாவோ ராஜாவின் செய்கையில் அதிர்ந்தவன் “அட இவன் வேற பாக்குற இடமெல்லாம் பஞ்ச்பேக் மாதிரி குத்திட்டு இருக்கான். ஏன்டா இப்படி பண்ற. அதான் உன் தங்கச்சி சொன்னால கீத்துக்கு உடம்பு சரி இல்லையின்னு. வா போய் பார்த்துட்டு வரலாம் “என அவனை இழுத்துக்கொண்டு ரம்யாவை கேள்வியாக பார்க்க.

அவளோ “என் கிட்ட ஸ்கூட்டி இருக்கு” என பதில் தந்தாள்.

பின் தன் நண்பனை காரில் ஏற்றிக்கொண்டு பறந்தான் சூர்யா.

காலிங் பெல் சத்தத்தில் கண்விழித்தவள் எழுந்திருக்க முடியாமல் தடுமாறினாள் கீதா.

ஓயாமல் அழைப்பு மணி சத்தம் கேட்கவே தட்டு தடுமாறி அறை மயக்கத்தில் முகம் எல்லாம் வீங்கி போய் சரியாக சாப்பிடாமல் இரண்டு நாளுக்கு தாக்கு பிடித்தவளால், இன்று காய்ச்சல் அதிகமாக அப்படியே படுக்கையில் சரிந்தவள் தூங்கிவிட்டாள்.

கதவு தட்டும் சத்ததில் எழ முடியாமல் எழுந்து தலைசுற்ற மெல்ல அடிவைத்து சென்று கதவை திறக்கவும் கீதா மயங்கி விழவும் சரியாக இருந்தது.

சட்டென்று சுதாரித்த இன்பா தன்னவளை கீழே விழாமல் தாங்கி பிடித்தான்.

அவள் கன்னத்தில் தட்டி எழுப்ப எந்த அசைவும் இல்லாமல் போனது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

டாக்டர் பரிசோதித்து ஊசி போட்டு ட்ரிப்ஸ் ஏற்றி விட்டு “கீதா எழுந்ததும் கஞ்சி சாப்பிட கொடுங்க. இவங்களுக்கு 104 டிகிரி காய்ச்சல் இருக்கு. சரியா சாப்பிடாமல் மயக்கம் போட்டு இருக்காங்க. ஒன்டே மட்டும் ஆஸ்பத்திரில இருக்கட்டும். நாளைக்கு வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க” என்று தன் பணியை பார்க்க சென்றார்.

அவள் அருகில் அமர்ந்து கலைந்த தலைமுடி அழுது வீங்கி இருக்கும் கன்னங்கள் என முகம் முழுவதும் கவலையுடன் தெரிந்த கீதாவை பார்த்தவன் மிகவும் வேதனைப்பட்டான்.

‘தன்னால் தான் கீதாவிற்கு இந்த நிலைமை’ என்று வருந்தியவன் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்தான்.

ரம்யாவோ “அண்ணா நான் வீட்டுக்கு போய் கீதாவுக்கு கஞ்சி காய்ச்சி எடுத்துட்டு வரேன். நீங்க அதுவரைக்கும் கீதாவை பார்த்துக்கோங்க” என்று தன் தோழியின் நிலைமையை பார்த்து கண்ணீருடன் வெளியே சென்றவளின் பின்னால் சூர்யாவும் சென்றான்.

“ரம்மி ஏன் இப்ப அழுகுற. அதான் கீதாக்கு எதுவும் ஆகல. அப்பறம் எதுக்கு அழுகுற. உன் கண்ணீரை என்னால் பார்க்க முடியல ப்ளீஸ் டி அழாத” என்று ரம்யாவின் கண்ணீரை தன் பெருவிரல் வைத்து துடைத்துவிட்டான்.

அவளோ அவன் கையை தட்டிவிட்டு ‘என்ன எதுவும் ஆகவில்லையா? அவளை பார்த்தீங்களா? எப்படி இருக்கானு. அவ எப்பவும் எவ்வளவு சந்தோஷமா இருப்பா தெரியுமா? அவள் கூட இருக்குறவங்களையும் சந்தோஷமா வச்சி இருக்கிறவள். ஆனா இன்னிக்கு இப்படி  இருக்கான்னா, அதற்கு காரணம் நீங்களும் உங்க நண்பரும் தான். 
நீங்க மட்டும் அவ லைப்ல வராம இருந்து இருந்தால் அவ அழுது இருக்க மாட்டாள். இதுவரைக்கும் கீதா அழுது நான் பார்த்ததுக் கூட இல்லை. ராஜா அண்ணா கீதா லைஃப்ல வந்ததுல இருந்து அவ பேரன்ட்ஸ் கிட்ட கூட ரொம்ப நேரம் உட்கர்ந்து பேசுறது இல்ல. அவங்களுக்காக எப்பவும் டைம் ஒதுக்குவா. ஆனா இப்பலாம் அப்படி இல்ல. என்கிட்ட கூட அவ சரியா பேசுறது இல்ல. காரணம், உங்க ப்ரெண்ட்” என தன் தோழி மேல் இருக்கும் பாசத்தாலும் அக்கறையாலும் சூர்யாவிடம் அப்படி கோபமாக பேசினாளே தவிர, அவள் மனதிலும் வருத்தம் கொள்ளவே செய்தாள்.

ரம்யா  பேசியதைக் கேட்ட சூர்யாவுக்கு எரிச்சல் ஏற்பட்டது “இப்ப எதுக்கு நீ அழுகுறன்னு தானே கேட்டேன். என்னவோ‌ கீதா இந்த உலகத்தை விட்டுப் போனா மாதிரி பேசிட்டு இருக்க.” என்றான் சூரியா.

தன் நண்பன் அவன் பின்னால் இருக்கிறான் என்று அறியாமல் எப்பொழுதும் போல் கிண்டலாய் பேசுவதாக நினைத்து இவ்வளவு பெரிய வார்த்தையை விட்டான் சூர்யா.

‘கீதா இந்த உலகத்தை விட்டு போய் விட்டாளா’ என சொன்ன அடுத்த கணம் அவன் தரையில் கிடந்தான் கண்ணத்தைப் பிடித்துக்கொண்டு.

கீதா அருகில் இருந்த ராஜாவிடம் “டாக்டர் இந்த மருந்து வாங்கிட்டு வர சொன்னாங்க சார்”. என்று நர்ஸ் சொல்லிவிட்டு செல்ல,

அந்நேரம் தன் நண்பனை தேடியவன் அங்கு இல்லாததை எண்ணி அவனே மருந்தகம் நோக்கி சென்றான்.

அங்கு சூர்யாவுடன் ரம்யா அழுதுகொண்டு கோபமாக பேசியதை பார்த்து அவர்கள் அருகில் சென்றவன் செவிகளில்,

சூர்யா‌ கூறிய வார்த்தைகளைக் கேட்டு, ஏற்கனவே வேதனையில் இருந்தவனுக்கு இப்பொழுது கோபம் தலைக்கேறியது. தன் உயிர் நண்பன் என்றும் பாராமல் இருக்கும் இடத்தையும் அறியாமல் சூர்யாவை அடித்து விட்டான் இன்பராஜா.

நண்பனை கோபத்துடன் பார்த்து “சூர்யா வார்த்தையை பார்த்துப் பேசு. என் கீத்து இந்த” என்ற வார்த்தையை கூட அவனால் சொல்ல முடியவில்லை. “என்னால இந்த வார்த்தையை சொல்ல கூட முடியல. ஆனா, உனக்கு என்ன தைரியம் இருந்தா என் கீத்துவை பத்தி இப்படி பேசுவ?” என மேலும் சூர்யாவை அடிக்க போக,

ரம்யா சற்று கோபத்துடன் அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள். 

“அண்ணா என்ன பண்ணிட்டு இருக்கிங்க? எல்லாரும் பார்க்குறாங்க பாருங்க. அவரை எதுக்கு இப்ப அடிச்சிங்க. தப்பு என் மேல இருக்கு” என்று அவள் முழுமையாக கூற விடாமல்  தடுத்தான் சூர்யா.

தன் நண்பனை பற்றி அறிந்து இருந்தவன் அவன் ஒருவன் தானே. ராஜாவிற்கு கோபம் வந்தால் என்ன செய்வான் என்று கணிக்க கூட முடியாது. அதனாலேயே ரம்யாவை பேசவிடாமல் தடுத்தான்.

இப்ப ராஜா இருக்குற கோபத்துக்கு ரம்யா வாய் திறந்து ஏதாவது கூறினால் கண்டிப்பாக, அங்கு என்ன நடக்கும்‌ என்று அறிந்திருந்தான் சூர்யா. 
தன் மேல் தான் தப்பு என்று ஒப்புக்கொண்டான்.

இன்பவால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் “எப்படி சூர்யா, என் கீத்துவை பத்தி அந்த வார்த்தையை சொல்ல முடிந்தது” என்று மீண்டும் கையை ஓங்க இந்த முறை ரம்யா குறுக்கில் வர அவள் கன்னத்தை பதம் பார்த்தது ராஜாவின் கரம். 

இதை எதிர்பார்க்காத ராஜா திகைத்து போனான்.

இதுவரை அடக்கி வைத்த கோபம் அனைத்தும் ரம்யாவை அடித்த உடன் வெளியே வந்தது சூர்யாவுக்கு.

ரம்யாவை அடித்த ஒரு நொடி இன்பா திகைத்து நிற்க, சூர்யா கோபத்தை கட்டுப்படுத்தாமல் இன்பாவை ஓங்கி அவன் கன்னத்தில் அறைவிட்டான்.

தன் நண்பன் தன்னை அடித்ததை நம்ப முடியாமல் இன்பா நிற்க..

ரம்யாவுக்கோ ‘தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம்’ என்று உணர்ந்தாள்.

சூர்யா ரம்யாவின் கையை பிடித்துக்கொண்டு சொடக்கிட்டு 
“இங்க பாருங்க மிஸ்டர் ராஜா, என்னை அடிக்கிறதுக்கும், கொலை பண்றதுக்கும் உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனால் என் ரம்யா மேல் கை வைக்குற உரிமை உங்களுக்கு இல்லை. இவ அழுறதை பார்க்க முடியாமல் தான், நான் அந்த வார்த்தையை சொன்னேனே தவிர மனசுல இருந்து வந்தது இல்லை. அது உன் மனசுக்கும் தெரியும். ஆனா நீ எதை பத்தியும் கவலைபடாமல், இருக்கிற இடம் எது என்றும் பார்க்காமல் கையை நீட்டிட்ட. அதுவும் ஒரு பொண்ணுக்காக உன் நண்பனையே அடிச்சுட்ட, உன் நண்பனின் காதலியையும் அடிச்சுட்ட. இனி உனக்கும் எனக்கும் இருக்குற நட்பு இன்னியோட முடிஞ்சிது”. என்று சூர்யா ஆத்திரத்தில் பேசினாலும் அவன் மனமும் கண்களும் கலங்கியது. பின் ரம்யாவின் கையை பிடித்துக்கொண்டு சென்றான் அங்கிருந்து சென்றான்.

ரம்யாவோ தன்னால் இவங்க நட்பு உடைவதை பார்த்து என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் தவித்தவள் இன்பாவை பார்த்துக்கொண்டே சூர்யாவின் பின்னால் சென்றாள்.

சூர்யா சென்று வெகு நேரம் ஆகியும் தன் நிலையை உணராமல் சிலையாகி நின்றவனை “நீங்க அழைச்சிட்டு வந்த பேஷன்ட்க்கு கான்ஷியஸ் வந்துடுச்சு. சீக்கிரம் மருத்து வாங்கிட்டு வாங்க” என்று நர்ஸ் உசுப்பிவிட்டு சென்றாள்.

செவிலியர் சொன்னதைக் கேட்ட ராஜா இயந்திரமாக நர்ஸ் சொன்ன  மருந்தை வாங்கிக் கொண்டு தன்னவளை பார்க்க சென்றான்.

மெதுவாக எழுந்திருக்க முயற்சி செய்தவளின் தோள்களை தொட்டு அமர வைத்தான். 

“என்ன அவசரம் கீத்து உனக்கு. நான் வரமாட்டேனா” என்று பேச்சில் ஸ்ருதியே இல்லாமல் பேசியவனை கவனித்தாள் கீதா.

“நான் வீட்டுல தானே இருந்தேன். இங்க எப்படி வந்தேன். நீ, ஏன்டா டல்லா இருக்க” என கேட்டாள்.

தன்னவளின் நிலைமை சரியில்லாமல் இருப்பத்தை நினைத்து ‘இப்போதைக்கு எதுவும் கீத்துக்கு தெரிய வேண்டாம்’ என்று எண்ணி, “உனக்கு உடம்பு சரியில்லல அதான்” என்று பாதி உண்மையை மறைத்து கூறினான்.

“ம் காய்ச்சல் தானடா அது சரியாகிடும். என்னவோ நான் இந்த உலகத்தை விட்டு போன மாதிரி பீல் பண்ற” என்று அவனின் மன நிலை அறியாமல் கீதா சொல்ல,

“கீதா” என அவன் கத்தியதில் பக்கத்து அறையில் இருந்து ஆட்களே வந்து விட்டனர்.

அவன் கத்தியதில் சற்று பயந்தவள் “இன்பா‌ என்னாச்சு? ஏன் இப்ப இப்படி கத்துற? நான் சும்மா ஒரு பேச்சுக்கு தானடா அப்படி சொன்னேன்” என அவள் எவ்வளவு சமாதானம் செய்தும் ராஜாவின் கோபத்தை கட்டுப்படுத்த எந்த பலன் இல்லாமல் போக அமைதியாகி போனாள்.

ராஜா தன் கோபத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு அமைதியாக டாக்டர் கொடுத்த மாத்திரை கொடுத்து சாப்பிட சொன்னான்.

அவளோ குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு “எனக்கு ரொம்ப பசிக்குதுடா. சாப்பிடாமல் எப்படி மாத்திரை போடுறது” என்று கேட்டவுடன் தான் ஞாபகத்திற்கு வந்தது,

‘கஞ்சி ரெடி பண்ணிட்டு வருவதை சொன்ன’ ரம்யாவின் நினைவு.

அவன் மனமோ ‘ச்சா போயும் போயும் ஒரு பொண்ண அதுவும் சின்ன பொண்ணு அடிச்சிட்டோமே. சூர்யா எந்த அளவுக்கு ரம்யா மேல காதல் வச்சி இருக்கான்” என நண்பனை அந்நிலையிலும் பெருமையாக நினைத்து கொண்டான். 

பின் கீதாவிடம் “நான் போய் உனக்கு இட்லி வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு திரும்ப. ரம்யாவும் சூர்யாவும் நின்றுக்கொண்டு இருந்தனர்.

“அண்ணா நான் தான் கஞ்சி எடுத்துட்டு வரேனு சொல்லிட்டு போனேன்ல” என்று மலர்ந்த முகத்தோடு ரம்யா சொல்ல  இன்பாவுக்கு ஆச்சரியம் தான்.

தன் தோழிக்காக பட்ட அவமானத்தை மறந்து புன்னகையுடன் பேசியவளை பார்க்க குற்ற உணர்ச்சியாகியது இன்பராஜாக்கு.

தன் நண்பனை பார்க்க முடியாமல் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான். சூர்யாவும் எதுவும் பேசமால் மௌனமாக இருந்துவிட்டான்.

அதன் பிறகு நாட்கள் செல்ல, கீதாவின் பெற்றோர்கள் வரவரைக்கும் தன்னவளை தாங்கு தாங்கு என தாங்கினான் இன்பா.

ராஜாவின் அன்பில் கீதா திக்குமுக்காடி போனாள் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், நண்பர்களுக்குள் ஏற்பட்ட சிறு விரிசல் அப்படியே இருந்து  கொண்டே தான் இருந்தது.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page