காதல்- 32

காதல்-32

ஆறு மாதத்திற்கு பிறகு,

“டைம் ஆச்சுடா சீக்கிரம் கிளம்பு மச்சி” என சூர்யா ராஜாவின் அறை பார்த்து, கீழே இருந்து கத்திக்கொண்டு இருக்க,

“இருங்கப்பா சாப்பிட்டு போங்க, வெறும் வயித்துல கிளம்பினால் அப்புறம் மயக்கம் தான் வரும்” என்று வசந்தா கூறிவிட்டு சாப்பாட்டை எடுத்து வைக்க சென்றாள்.

“அய்யோ அம்மா உங்களை எப்படி பாராட்டுறதுனே தெரியலமா, இவனுங்க கூட போனா என்னை பட்டினி போட்டு சாகடிச்சிடுவாங்கமா” என்று ராம் சூர்யாவை பார்த்து சிரித்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

சூர்யா அவனை முறைத்து விட்டு “சரியான சாப்பாடு ராமன்” என்று அவனும் சாப்பிட அமர்ந்தான்.

ராம் சாப்பாட்டை முழுங்கிக்கொண்டே, “நீ மட்டும் என்னடா, என்னை சொல்லிட்டு நீயும் தான சாப்பிடுற?” என்றான்.

“நானாவது சாப்பிடுறேன். ஆனா நீ? கொட்டிக்கிற சரியா தான் உங்க அப்பாவும் அம்மாவும் உனக்கு பேரு வச்சு இருக்காங்க ராமன்னு” என்று ராமிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசினான் சூரியா.

வசந்தாவோ “பிள்ளைங்கலா சாப்பிடுற அப்ப என்ன பேச்சு? சீக்கிரம் சாப்பிடுங்க. அப்புறம். ராஜா வந்தா பறப்பான் டைம் ஆச்சுன்னு. ம்ம் சீக்கிரம் சீக்கிரம் சாப்பிடுங்க. நான் போய் உங்களுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்கிறேன். எத்தனை நாளுக்கு அங்க தங்க போறீங்களோ தெரியல” என்று சமையலறைக்குள் செல்ல எத்தனித்த. அந்நேரம்,

“ஹாய் சார், நான் ரெடி போலாமா” என்று துணிப் பையை தூக்கிக்கொண்டு வந்தான் அருண்.

“வாப்பா நீயும் வந்து சாப்பிடு. ராஜா இன்னும் கீழே வரல” என்றபடி அவனுக்கும் சாப்பாட்டை பரிமாறினார் வசந்தா.

“சரிங்கம்மா”. என்று சொல்லிவிட்டு எந்த தயக்கமுமின்றி அருணும் சாப்பிட ஆரம்பித்தான்.

சூரியாவோ “டேய் எத்தனை வாட்டி சொல்றது சார் கூப்பிடாதனு. ஒன்னு பேரு சொல்லி கூப்பிடு. இல்லையா வாடா போடா சொல்லு. ராஜா தான் உனக்கு பாஸ். நாங்க இல்லை புரியுதா” என்று பொய்யாக முறைத்தான்.

ராமோ சட்டென்று “டேய் சூர்யா, நாங்கன்னு ஏன்டா என்னை சேர்க்குற. உனக்கு அவனை பிடிச்சு இருந்தா நீ அவன் கூட பேசு. என்னலாம் சொல்லாத” என்று கையை கழுவிக் கொண்டு அருணை முறைத்துப்பார்த்து விட்டு, “நான் போய் ராஜா கிளம்பிட்டானானு பார்த்துட்டு வரேன்” என்று கூறியவனை படியில் ஏறினான். கடைசி படிக்கட்டு வரை அருணை முறைத்துக்கொண்டே சென்றான் ராம்.

அதை பார்த்த சூரியா “விடு அருண், அவன் எப்பவும் அப்படி தான். ஆறு மாசமா நீயும் தான அவனை பார்த்துட்டு இருக்க. சும்மா வீம்பு தான் மத்தபடி வேற எதுவும் இல்லைடா, நீ சாப்பிடு” என அருணை சமாதானம் செய்தான்.

அருணோ “இல்ல சூர்யா, அவரு மேல என்ன தப்பு இருக்கு எல்லாம் என் மேல தானே. அவரு கோபப்படுறதிலும் ஒரு நியாயம் இருக்கு” என்றூ கூறியவன் பாதி சாப்பாடில் கை கழுவிக்கொண்டு எழுந்து “நான் வெளியே வெயிட் பண்றேன் சூர்யா. நீங்க சீக்கிரம் வாங்க” என்று சென்று விட்டான்.

அதற்கு மேல் சூர்யாவுக்கும் சாப்பாடு இறங்காமல் அவனும் கை கழுவ,

“என்னப்பா? ஏன் என்ன ஆச்சு? சாப்பாடு பிடிக்கலையா” என்று வசந்தா கேட்டுக் கொண்டே அங்கே வந்தார்.

சூரியாவோ மென்புன்னகையோடு “சாப்பாடு பிடிச்சி இருக்குமா. ஆனா, உள்ளே தான் இறங்கல” என்று சொல்ல, வசந்தாவுக்கு ஒரு மாதிரியாகி போனது.

“அய்யயோ என்னை யாராவது காப்பாத்துங்க. சீக்கிரமா வாங்கடா. இல்லனா இவன் என்னை, டேய் வாங்கடா” என்று ராம் கூச்சலிட்டான்.

“என்னப்பா, ராம் கத்துறான் போல என்னாச்சுனு பாருப்பா” என்று வசந்தா சொல்லிவிட்டு சென்றார்.

“இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை. ச்சை எப்போ பாரு இப்படியே பண்றாணுங்க” என்னனு தலையில் அடித்துக் கொண்டவன், “டேய் ராம் கத்தாத வரேன்டா” என்று சொல்லிக் கொண்டே ராஜாவின் அறைக்கு சென்று பார்த்தவன் சிரிக்க ஆரம்பித்தான்
ராம் இருக்கும் நிலையை பார்த்து.

ராமின் சத்தம் கேட்டு வெளியே இருந்த அருணும் வந்து பார்க்க, அவனும் சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

“ஏன்டா நான் இங்க மரணத்து விளிம்பில் தொங்கிட்டு இருக்கேன். உங்களுக்கு சிரிப்பு வருதா?” என்று அருணை பார்த்து முறைத்து கொண்டே கேட்க,

அருணால் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் கீழே உருண்டு பிரண்டு சிரிக்க,  சூர்யாவும் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க ஆரம்பித்தான்.

பின்ன  ஒருத்தன் ரொமான்ஸ் பண்ணும் போது அவனை போய் தொந்தரவு செய்தால் இப்படி தான பண்ணுவாங்க. ராம், ராஜாவை கூப்பிட அவன் அறைக்கு வந்தவன் கதவை தட்டினான்.  

அந்த சமயம் அறையினுள்
“இன்பா டேய் இன்பா டைம் ஆச்சுடா, எழுந்துடு அத்தை ரொம்ப நேரமா கூப்பிடுறாங்க பாரு. ம்ம்ம் எழுந்துடு எழுந்துடு” என தன்னவனை எழுப்ப, இன்பாவோ தன்னவளின் கையை பிடித்து இழுத்தான். இழுத்த வேகத்தில் இன்பாவின் மேல் ஒரு பூ குவியல் போல் விழ அப்படியே அவளை இறுக்க அணைத்து அவன் மூச்சு காற்று அவளின் கழுத்தில் படர்ந்து போக அதில் கிறங்கியவள் தன்னவனின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.

அவளின் இந்த செயலில் மேலும் இன்பா தன்னவளை நெருங்க அவள் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு சிணுங்க, அவளின் நெற்றியில் இதழ் பதித்து பிறகு அவள் கையை நகர்த்தி கண்களிலும் இதழ் ஒற்றி எடுத்து, பிறகு தன்னவளின் மூக்கோடு தன் மூக்கை உரச, அதில் மேலும் அவள் முகம் வெட்கத்தில் சிவக்க, அவளது சிவந்த கன்னத்தில் தன் கன்னம் வைத்து எடுத்து தன்னவளின் செவ்விதழில் தன் இதழை நோக்கி இதழ் பதிக்க போகும் போது,

‘டொக்..டொக்..டொக்..’ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டு, தன்னவனை தள்ளிவிட்டு எழுந்து தன்னை சரி செய்துக்கொண்டாள். இதில் கடுப்பாகி போனான் இன்பா.(பின்ன இருக்காதாங்க. கண்ணா லட்டு தின்ன ஆசையானு கேட்டு அதை வாய்கிட்ட எடுத்துட்டு போகும் போது டக்குன்னு பிடுங்கினா யாருக்கா இருந்தாலும் கடுப்பு வர தான செய்யும்😉😉😉)

அந்த கடுப்போடு கதவை திறந்து பார்க்க, ராம் பல்லை இளித்துக்கொண்டு ராஜாவை தள்ளிவிட்டு தொப்பென்று மெத்தையில் படுத்தான்.

“மச்சான் கிளம்பல? டைம் ஆகுதுடா, சும்மா சொல்ல கூடாதுடா மெத்தை மெத்து மெத்துன்னு இருக்குடா”. என்று படுத்துக்கொண்டே குதித்துக்காட்ட இதுக்கு மேல அவன் சும்மாவ விடுவான்.

ராமை தூக்கி ஃபேனில் ஒரு காலை மட்டும் கட்டி விட்டு தலை கீழாக தொங்க விட்டு குளிக்க சென்றான் இன்பராஜா.

குளித்து முடித்துவிட்டு ரெடியாகி இறுக்கமாக “போலாம் வாங்கடா” என்று சென்றுவிட்டான் அவன்.

அவனை கண்டுகொள்ளாமல் ராஜா போவதை பார்த்த ராம் “அடப்பாவி இங்க ஒருத்தன் தொங்கிட்டு இருக்கேன். ஆனா அவன் பாட்டுக்கு போறான். டேய் வந்து அவுத்து விடுங்கடா” என்று மற்ற இருவர்களையும் பார்த்துக் கேட்டான்.

சூர்யாவும் அருணும் அவனை கீழே இறக்கி விட,  ராமோ”மச்சி நான் ஒன்னும் பண்ணலடா. மெத்தை மெத்து மெத்து இருக்குனு மட்டும் தான்டா சொன்னேன். அதுக்கு போய் தொங்க விட்டுட்டான் மச்சி, என்று அழுவது போல் கூறினான் ராம்.

அவன் கூறியதை கேட்ட சூர்யாவுக்கு எல்லாம் புரிந்தது பின்ன இருக்காதா! தன் நண்பனை பற்றியும் கடந்த ஆறு மாதத்தில் அவன் படும் கஷ்டத்தை இரவு பகலாய் பார்ப்பவன் அவன் மட்டும் தானே.

ராமோ மேலும் கடுப்புடன் “ஆனா, மச்சி அவன் தொங்க விட்டது கூட எனக்கு பெருசா தெரிலடா. எதுவும் நடக்காத மாதிரி போறான் பாரு. அதை நினைச்சா தான்டா என்னால தாங்க முடியல மச்சி. ஒரு ஒரு பையனுக்குள்ளயும் ஒரு ஒரு பீலிங்ஸ் மச்சி” என்று படத்தில் வருவது போல் சொல்ல, அவனை இழுத்துக்கொண்டு வெளியே போனார்கள்.

அங்கே “தேவையானது எல்லாம் எடுத்து வச்சிக்கப்பா. பாத்து பத்திரமா போய்ட்டு வாங்கப்பா” என்று வசந்தா வருத்தமாக கூற, “ம்” என்ற ஒற்றை சொல்லில் அங்கே இருந்து நகர்ந்து காரில் ஏறி அமர்ந்தான் ராஜா.

“அம்மா நாங்க கிளம்புறோம். நீங்க பத்திரமா இருங்க. மாத்திரை வேளை வேளைக்கு சரியா போடுங்க. வீட்டு வேலையை இழுத்து போட்டு செய்யாதீங்க. அதையெல்லாம் பார்க்க வீட்டு வேலைக்காரங்க இருக்காங்க. ராஜாவை பத்தி கவலை படாதிங்கமா, நாங்க பாத்துக்கிறோம். எல்லா பிரச்சனையும் சீக்கிரம் முடிஞ்சிடும்னு நம்பிக்கையோடு இருங்க”.என்று சூர்யா வசந்தாவை சமாதானம் செய்துவிட்டு சென்றான்.

‘கடவுளே, இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு ஒரு முற்று புள்ளி வைச்சிடுப்பா’ என்று கடவுளிடம் வேண்டுகோள் விடுத்தார் வசந்தா. 
அவனை தொடர்ந்து அருணும் ராமும் வசந்தாவிடம் கூறிவிட்டு காரில் ஏறினர்.

காரில் ஏறிய சூரியாவோ “டேய் ராஜா உனக்கு மனசாட்சி இருக்கா? பாவம்டா அம்மா இன்னும் எத்தனை நாளைக்கு அவங்கள கஷ்டப்படுத்த போற?” என்று கேட்டான்.

“அமைதியா இரு சூர்யா. காரை பார்த்து ட்ரைவ் பண்ணு” என்று கூறி விட்டு கண்ணை இறுக மூடிக்கொண்டான் ராஜா.

“மச்சி விடு, அவனை பத்தி எங்களை விட உனக்கு தான்டா நல்ல தெரியும். சோ, அவனை கொஞ்சம் அமைதியா விடு. அவனே சரியாகிவிடுவான்” என்று ராம் சூர்யாவை சமாதானம் செய்ய, சூர்யா எதுவும் பதில் கூறாமல் காரை ஓட்டினான்.

சூரியா பதில் சொல்லாமல் இருப்பத்தை பார்த்த ராம் “இதுக்கு இந்த சீட்டுக்கிட்ட சொல்லி இருந்தா கூட ,பதில் சொல்லி இருக்கும் போல. எல்லாம் உன்னை சொல்லணும்டா ராம் உன்னை சொல்லணும்” என்று தன் ஆட்காட்டி விரலை தன் கண்ணுக்கு நேராக வைத்து பேசிக்கொண்டு இருக்க, சூரியா சடன்ப்ரேக் போட்டதில் அவன் கண்ணை அவனே குத்திக் கொண்டான்.

“அய்யோ அம்மா” என்று கண்ணை மூடிக்கொண்டு கத்த, அவனை யாரும் கண்டு கொள்ளாமல் அவர்கள் வேலையை செய்வதை பார்த்தவன் “அடபாவிங்களா இங்க ஒருத்தன் காத்துறான். நீங்க உங்க வேலையை பார்த்துட்டு இருக்கிங்க” என்று குறைப்பட்டான்.

“டேய், சும்மா கை காலை வச்சுக்கிட்டு மூடிக்கிட்டு உட்காரு” என சூர்யா சொல்ல, அருண் வாயை பொற்றிக் கொண்டு சிரித்தான்.

அருணை பார்த்து முறைத்து விட்டு ‘சிரிக்கிறியா? சிரிடா சிரி. மவனே உனக்கு இருக்கு இதுக்கெல்லாம் சேர்த்து’ என்று நினைத்துக் கொண்டவன் வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

இன்பா கண்களை மூடிக்கொண்டு தன்னவளின் நினைவில் முழ்கினான். கிளம்பும் போது தன்னவனை இழுத்து அவனை இறுக்க கட்டிக்கொண்டு “பாத்து பத்திரமா போய்ட்டு வாடா. சீக்கிரமா வாடா உனக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்டா” என்று இன்பாவின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதவளை இறுக அணைத்து,

“இப்ப எதுக்குடி அழுகுற, நான் சீக்கிரம் வந்துடுவேன்டி. நீ அழுதா என்னால தாங்க முடியாதுனு உனக்கு தெரியும் தானே” என்று தன்னவளின் முகத்தை ஏந்திக் கொண்டு அவளின் நெற்றியில் இதழ் பதித்து “நான் சீக்கிரம் வந்துடுவேன்டி உன்னை தேடி”
என்று மேலும் தன்னவளை இறுக்க அணைத்த நேரம், சூர்யா போட்ட சடன் ப்ரேக்கில் கண்விழித்தவன் சூர்யாவை பார்க்க, சூர்யாவின் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவன் மீண்டும் கண் மூடினான். அவன் கண்களின் ஓரம் கண்ணீர் வருவதை பார்த்த சூர்யாவுக்கு குற்றவுணர்வு தோன்றியது.

‘என்னை மன்னிச்சிடு மச்சி’.என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டு, ‘இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறேன்’ என நினைத்தான்.

இவர்களது பயணம் கொடைக்கானலை நோக்கி பயணம் ஆனது.

ஆறு மாதத்திற்கு முன்னால்..

இன்பா மயக்க நிலையில் இருந்து வெளியே வந்து கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்க, சூர்யா தான் நடந்த அனைத்தையும் கூறினான்.

“என்னை மன்னிச்சிடுடா, என்னால தான்டா கீதாவுக்கு இப்படி ஆகிடுச்சு. ப்ளீஸ்டா, என்னை அடி இல்லையா திட்டு இப்படி எதுவும் பேசாமல் அமைதியா இருக்காத கில்டியா இருக்குடா. நான் ஆறு வருஷம் கழிச்சி திரும்பவும் உன்னை இந்த நிலைமைல பார்க்க முடியாம கீத்து கிட்ட முகம் கொடுத்து பேச முடியாமல் தான்டா, நான் அவ கண்ணுல பட கூடாதுனு நினைச்சேன். ஆனா அது இவ்வளவு பெரிய விளைவு கொண்டு வரும்னு நான் நினைக்கலடா” என்று குற்றவுணர்வோடு பேசினான் சூரியா.

அப்போதும் இன்பா இறுக்கமாக அமர்ந்து இருப்பதை பார்த்த சூரியா “சரி மச்சி, நீ என்னை மன்னிக்க வேண்டாம். ஆனா நான் என் தங்கைக்கு கொடுத்த வாக்க காப்பத்தணும். அதற்காவது நான் உன் கூட இருக்கேன்” என சூர்யா சொல்லிவிட்டு வெளியே போக இரண்டடி எடுத்த வைத்த நேரம்,

“மச்சி”என இன்பாவின் குரலில் திரும்பியவன் அவன் அழுவதை பார்த்து தாங்க முடியாமல் தன் நண்பனை கட்டிக்கொண்டு இவனும் அழ தொடங்கினான். மற்றவர்கள் இனி சூர்யா பார்த்துக்கொள்வான் என்று வெளியே சென்றார்கள்.

“சாரிடா மச்சி, எனக்கு தெரியும் உன்னால கீத்துக்கு எதுவும் நடந்து இருக்காது. அவ தான் ஒழுங்கா படிக்கட்டை பார்த்து போயி இருக்க மாட்டா. அவளுக்கு சீக்கிரம் குணம் ஆகிடும்டா, அவளுக்கு நல்லாவே தெரியும் அவ இல்லாமல் என்னால இருக்க முடியாதுனு. நான் கோபமா இருக்கிறதுக்கு காரணம் இத்தனை நாளா எங்க எல்லாரையும் மறந்துட்டு யாரும் வேண்டாம்னு ஊர விட்டு போயிட்டல, போயிட்டலடா.. இப்ப மட்டும் எதுக்குடா வந்த போடா” என்று தன் நண்பனிடம் பொய் கோபத்தை காட்டினான் ராஜா.

சூர்யா அவனை அணைத்துக் கொண்டு “சாரிடா என்னால ரம்யாவை மறக்க முடியல. அதான் யாருக்கிட்டயும் சொல்லாம லண்டன் போய்ட்டேன்.  இரண்டு நாளுக்கு முன்னாடி தான்டா வந்தேன். சாரிடா” என்று சூர்யா கூறியவன் யோசனையாக “ஆமா, உன்னை யாருடா கொலை பண்ண முயற்சி பண்ணா?. அவன் மட்டும் யாருனு சொல்லு, அப்புறம் இருக்கு” என்று கோபமடைந்தான் சூரியா.

அதை கேட்ட ராஜாவின் முகம் இறுக்கமாக மாறியது “அவனுக்கு இல்லடா, அவளுக்கு” என இன்பா சொல்ல சூர்யா குழம்பினான். 
“இந்து தான் காரணம் சூர்யா” என்று நேற்று நடந்ததை சொன்னான்.

இன்பா சொன்னதும் கோபம் வந்தது சூரியாவிற்கு.  “இந்துவை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்டா. ஏதோ சின்ன பொண்ணுனு நினைச்சேன். ஆனா இந்த அளவு துணிந்து இருக்கா, அவளை இப்படியே விட்டால் இன்னும் என்ன என்னலாம் செய்வாளோ”.. என ஆவேசமாக பேசியவன் கோபத்தில் “கீதா அன்னிக்கு உன்னை பிரிந்து போனதிற்கு காரணம் இந்துவும் அவளோடு அப்பாவும் உங்க அப்பாவும் தான்டா” என்று சூரியா ஆத்திரத்தில் சொல்லிவிட்டான்.

சூரியா கூறியதை புருவங்கள் சுருக்கிக் கொண்டு “இப்போ என்னடா சொன்ன? என்று கேட்டான்.

ராஜா கேட்ட பிறகு தான், அவன் என்ன சொன்னோம் என்று உணர்ந்தவன் சற்று தடுமாற்றதுடன்,

“அது..அது..வந்துடா”..என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தான் சூரியா.

அச்சமயம் அங்கே வந்த சுந்தர்
“அதை நான் சொல்றேன்பா” என்று நடுவில் வர, மீண்டும் அங்கே படை சூழ்ந்தது.

அவர் என்ன சொல்ல போகிறார் என்று எல்லாரும் ஆவலுடன் அவர் பேசுவதை உன்னிப்பாக கேட்க தொடங்கினார்கள்.

********************************

அன்று திருமணம் ரிஜிஸ்டர் ஆன சந்தோஷத்தில் கீதாவுக்கு தலைகால் புரியவில்லை. தன்னவனை மனம் முழுக்க காதலோடு பார்த்துக் கொண்டு இருந்தாள். அது அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“ஏய், பொண்டாட்டி எதுக்குடி என்னையே பார்த்துட்டு இருக்க?”. நீ இப்படி காதலோடு பாக்குறத யாராவது பார்த்த கண்ணு வச்சுட போறாங்கடி, ஏற்கனவே நீ தாறுமாறா இருக்க. அப்படியே உன்னை கட்டிப் பிடிச்சு லிப் டு லிப் கிஸ் குடுக்கணும் போல இருக்கு. இதுல நீ வேற என்னை இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க? ம்ம் என்ன மேடம் கிஸ் குடுக்கவா” என்று கீதாவை சீண்டினான் ராஜா.

“டேய், ச்சி..என்ன பேசுறடா, எப்போ இருந்து நீ இப்படி அசிங்கமா பேச கத்திக்கிட்ட” என்று பொயாக முறைத்தாள் கீதா.

“என்னது அசிங்கமா, அடிபாவி இதை வெளியே சொல்லாத அப்புறம் நீ மனுஷி தானா செக் பண்ண போறாங்க. ஒரு பொண்ணா கொஞ்சமாவது வெட்கப்படுறியா, அப்படியே உரிச்சி வச்ச ஏதோ ஒன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி பார்க்கிற”என இன்பா சொல்ல,

கீதா சிரித்துக்கொண்டே, “ம்ம்.. கோழி சொல்லுவாங்கடா. பார்க்குற இல்லை! உரிச்சி வச்ச கோழி மாதிரி இருக்கனு சொல்லுவாங்க. பழமொழி தெரியலனா எதுக்கு சொல்ற” என்று கூறியவள் “என் புருஷனை நான் அப்படி தான் பார்ப்பேன். யாரு என்ன சொல்றாங்கனு நானும் பார்க்கிறேன்” என இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே கீதாவின் கைப்பேசி அலறியது.

ராஜாவோ “யாருடி போன்ல” என்று கேட்டான்.

“தெரியலடா புது நம்பர். விடுடா, கட் ஆகிடுச்சு. சரி கிளம்பலாமா” என்று கீதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மறுபடியும் போன் வர..

“பர்ஸ்ட் ஃபோன ஆன் பண்ணி பேசிட்டு வா. நான் போய் பசங்க எல்லோரும் எங்க இருக்காங்க பார்த்துட்டு இழுத்துட்டு வரேன்” என்று ராஜா அங்கேயிருந்து நகர, கீதா போனை ஆன் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ யாருங்க”

எதிர்முனையில் கரகரவென சத்ததுடன் “நீ..கீதா தானே?” என்று கேட்டது.

“ஆமா நீங்க யாரு?” என்று யோசனையோடு கேட்டாள்.

ஓர் நிமிடம் அமைதிக்கு பின் “நான் ராஜாவோட அப்பா சுந்தர்.” என்று கேட்டத்தில் ஒரு கணம்  கீதா திகைத்தாலும் தைரியத்துடன் “சொல்லுங்க மாமா” என்றாள்.

மாமா என்ற வார்த்தையை கேட்ட சுந்தர் சற்று கோபத்துடன் “ஏய் யாருக்கு யாரு மாமா, இங்க பாரு நீ பேசுறதை கேட்க நான் உனக்கு போன் பண்ணலை. நான் பேசுறதை நீ கேட்கணும் கேட்டு தான் ஆகணும் உனக்கு வேற வழியும் இல்லை.” என்று  மிரட்டும் குரலில் கட்டளையாக கூறினார்.

கீதாவோ அசட்டையாக “என்ன மாமாவா, மாமாவை மாமா தான் கூப்பிட முடியும்” என்று நக்கலுடன் பேசினாள்.

சுந்தரோ அவளிடம் சுற்றி வளைக்காமல் “நான் சொல்லுறதை நீ கேட்கல. அப்புறம் உன் அன்பு காதல் புருஷன் உயிர் போயிடும்” என சுந்தர் மிரட்ட, கீதாவின் தலையில் இடியே விழுந்தது போல் உணர்ந்தாள்.

‘இவரு என்ன சொல்றாரு, இல்ல என் காது தான் சரியா கேட்கலையா’ என தனக்குத்தானே கேட்டுக் கொண்டவளின் அமைதியை உணர்ந்து,

“நீ நினைப்பது சரிதான்”.என சுந்தர் சொல்ல கடுமையான குரலோடு “உங்களுக்கு இப்ப என்ன வேண்டும்” என்றாள்.

“நீ என் பையன் விட்டு போகணும்”

அவளுக்கு அழுகை வந்தாலும் அதை அவரிடம் வெளிக்காட்டி கொள்ளாமல், “நான் என் புருஷனை விட்டு போக முடியாது. உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோங்க. நீங்க இல்லை வேற யாராலையும் எங்களை பிரிக்க முடியாது சார் என்றாள் அழுத்தமாக, அதே சமயத்தில் திருத்தமாகவும் சொன்னாள்.

“தெரியும், உங்க காதலை யாரும் பிரிக்க முடியாது. என்று எனக்கு தெரியும். அதுனால தான் உன்னைய போக சொல்றேன். அதுவும் என் பையன் திரும்பவும் தேடி வராத மாதிரி அவன் உன்னை வெறுக்கிற மாதிரி நடந்துட்டு நீ அவனை விட்டு போகணும்.”

“அதான் முடியாது சொல்றேன்ல சார். இன்பா தான் என் மூச்சு காற்று” என இருவரும் காரம் சாரமாக பேசினர்.

“அப்ப அந்த மூச்சு காற்றையே நான் நிறுத்திட்டா? என்ன பண்ணுவ” என்று சுந்தர் வேகத்துடன் கேட்டார்.

அதுவரை இருந்த தைரியம் தன்னவன் மூச்சு காற்றையே நிறுத்தி விடுவேன்..என்று கேட்ட பிறகு அவளுக்கு எங்கே போனது என்றே தெரியாமல் “என்ன சொல்றிங்க. அவரு உங்க மகன் உங்க பையனையே நீங்க எப்படி கொலை செய்விங்க”.என்று கீதா பயத்துடன் கேட்க,

“என் மகனை என் கையால கொலை பண்ண மாட்டேன். அங்க பரத் இருக்கானா? அவன் இப்ப என் மகனை முதுகில் தட்டி இருப்பானே. என் பையனும் முதுகை தேய்த்து இருப்பானே என்ன சரியா சொல்றேனா” என்று நேரில் பார்த்தது போல் பேசியதை கேட்டவள் சுற்றி முற்றி பார்வையை அலையவிட்டாள்.

அவள் அமைதியை உணர்ந்தவர் கேலியாக “அங்கு நடப்பது எப்படி இவருக்கு தெரியுதுனு தானே நினைக்கிற” என்று கேட்டவர் ஆத்திரத்துடன் “நல்லா ஒரு விசயத்தை கேட்டுக்கோ, இப்ப என் மகன் உடம்பில் விஷ ஊசி போட்டு இருக்கேன். அது கொஞ்ச கொஞ்சமா அவன் உயிரை எடுக்கப் போகுது. நீ எவ்வளவு சீக்கிரம் என் பையனை விட்டு போறியோ அவ்வளவு சீக்கிரம் என் பையனை நான் காப்பாத்த முடியும். என்னடா ஒரு அப்பனா இருந்துட்டு பெத்த புள்ளையே சாகடிக்க துணிந்துட்டானு நீ நினைப்ப. அதுவும் சரிதான் ஏன்னா எனக்கு என் பையன் உயிரை விட, என் அந்தஸ்து என் கௌரவம் தான் முக்கியம். உன் புருஷன் உயிர் முக்கியமா? இல்லை உன் காதல் முக்கியமா?. உன் புருஷன் உயிர் வேணும்னா, நீ உன் காதலை விலை கொடுத்து தான் ஆகணும். நல்ல முடிவை எடு” என்று போனை வைத்தார் சுந்தர்.

அதை கேட்டவள் உறைந்ததே போனாள். கீதாவுக்கு தன் உயிரே போவது போல் தோன்ற, அப்படியே கீழே அமர்ந்து அழுதாள். சற்று முன் தன் காதலை நினைத்து மகிழ்ச்சி அடைந்தவள் இப்போ தன் காதலையே தன் உயிராய் நினைக்கும் காதலனுக்காக அடமானம் வைக்க துணிந்தாள்.

சிறிது நேரத்தில் ஒரு முடிவுடன் கண்ணை துடைத்துக்கொண்டு அவளை அவளே கட்டுப்படுத்திக் கொண்டு தன்னவனை நோக்கி சென்றாள் (பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும்.)

கீதாவிடம் அப்படி பேசிவிட்டு 
போனை வைத்ததும் படபடப்புடன் கணேஷ் குடுத்த தண்ணீரை குடித்து விட்டு பெரு மூச்சு ஒன்றை விட்டார் சுந்தர்.

“அப்பாடா என்ன பொண்ணு இவ. என் பையன் மேல இந்த அளவுக்கு உயிரை வச்சு இருக்கா?. நான் என்னவோ தப்பு பண்ற மாதிரி ஒரு உணர்வு இருக்கு கணேஷ்” என சுந்தர் கூற,

“அப்படி எதுவும் இல்லைடா. உன் மகனுக்கு போட்டது வெறும் மயக்க ஊசி தான். என் நண்பன் டாக்டர் அவன் மூலமா தான் அந்த ஊசியை வாங்குனேன். அவனுக்கு எல்லாம் தெரியும்டா, அப்புறம் அந்த கீதா உன் மகனை காதலிக்கல, உன் கிட்ட இருக்கிற பணத்தை தான் காதலிச்சா”. என்று சுந்தரின் மனசை மாற்ற போராடினார் கணேஷ்.

ராஜா கீதாவை ரிஜிஸ்டர் திருமணம் செய்ய போகிறான் என்று கேள்விபட்ட இந்து தன் வீட்டையே இரண்டாக மாற்றினாள்.

“கீதா முன்னாடி நான் அவமானப்பட கூடாதுப்பா. அத்தான் எனக்கு தான் கிடைக்கணும், அவர் சொத்தும் எனக்கு மட்டும் தான். இதுக்கு நடுவுல யாரு வந்தாலும் அவங்களை நான் கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்” என்று ஆவேசமாக பேசி கத்தியை எடுத்துக்கொண்டு கொலை செய்ய கிளம்பிவளை தடுத்து நிறுத்தினார் கணேஷ்.

எங்கே தன் மகள் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று விட்டால் சொத்து எதுவும் கிடைக்காமல் போய் விடும் என்ற அச்சத்தில் தடுத்தார்.

இந்துவை சமாதானம் செய்துவிட்டு சுந்தரை பார்க்க போகும் போது தான் கீதாவின் தந்தையை பார்க்க நேரிட்டது கணேஷிற்கு.

அன்பரசனை பார்த்து நடந்ததை கூறினார் ஆனால் அன்பரசன் மகள் மேல் உள்ள நம்பிக்கையில் நம்ப மறுத்தவரை கணேஷ் போராடி நேரில் அழைத்துக் கொண்டு போய் காண்பித்தார்.

தன் மகள் மேல் வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கை அவர் கண் முன்னே உடைந்தது. எப்படி வீட்டுக்கு வந்தார் என்று கூட தெரியாமல் புலம்பிக்கொண்டே தன் உயிரைவிட்டார்.

அன்பரசன் போனதும் சுந்தரின் வீட்டுக்கு போக திரும்பியவர் அங்கே பரத் ஒளிந்து கொண்டு இருப்பதை பார்த்து அவனிடம் போய் பரத்தை கட்டாயப்படுத்தி கையில் ஒரு ஊசியை திணித்தார்.

இதை ராஜாவுக்கு போடவில்லை என்றால் கீதாவை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதில் பரத் கணேஷ் சொன்னதை செய்தான். தான் போட்ட திட்டம் பாதி முடிந்ததை நினைத்து சுந்தரிடம் சென்று போராடி கெஞ்சி கீதாவிடம் அவ்வாறு பேச வைத்தார்.

ரிஜிஸ்டர் ஆபிஸில் மயக்கம் போட்டு விழுந்தவனை ராம் அட்மிட் செய்து சுந்தருக்கு தெரிவிக்க, சுந்தர் கணேஷ் இந்துவுடன் ஹாஸ்பிட்டலுக்கு வந்து கட்டாயப்படுத்தி ராமை அனுப்பி வைத்தார். பிறகு டாக்டர் ரூமுக்கு சென்று டாக்டரை பார்த்து கணேஷ் சிரிக்க மற்ற இருவரும் புரிந்துக் கொண்டு சிரித்தனர்.

*******************************

நடந்த அனைத்து  விசயத்தையும் சொல்லி முடித்து விட்டு தன் மகனை பார்த்து கையெடுத்து மன்னிப்புக் கேட்டவரை கொலைவெறியுடன் பார்த்தான் இன்பராஜா.

வசந்தா தன் கணவர் என்றும் பாராமல் அடித்து அவரை திட்டி அங்கே இருந்து வெளியே போக சொல்லி இனி என் முகத்திலே முழிக்காதிங்க என்று சொல்லிவிட்டு தன் மகன் அருகே சென்று மன்னிப்பு கேட்டாள்.

இன்பாவுக்கு கீதாவின் அப்பா அம்மா இறந்ததை ஜீரணிக்க முடியாமல் போனது. இந்த வினாடியே கீதாவை பார்க்க நினைத்தவன் எழுந்திருக்க அது முடியாமல் போனது.

சூர்யாவை அழைத்து ‘
“நான் இப்பவே என் கீதாவை பார்க்கணும்டா. என்னால அவ குடும்பத்தையும் அவ சந்தோஷத்தையும் மொத்தமா இழந்துட்டாள். அவ கிட்ட கூட்டிட்டு போடா” என்று உடைந்து போன குரலில் கேட்ட இன்பாவை பார்த்து, பாவமாக தோன்றினாலும் நண்பனின் உடல்நிலை கருத்தில் கொண்டு,

“டேய் டைம் இப்பவே நடுராத்திரி. நீ முதல ரெஸ்ட் எடு காலையில் போய் பார்க்கலாம்” .என சூர்யா சமாதானம் செய்ய, அதை எதையும் காதில் வாங்காமல் தன்னவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு தட்டுத்தடுமாறி எழுந்தவனை வேறு வழியின்றி பிடித்துக்கொண்டு கீதாவின் அறைக்கு சென்றவர்கள், அங்கு அவர்கள் கண்ட காட்சியை பார்த்து ஸ்தம்பித்து போனார்கள்.

ஆம் அங்கே அவள் இருந்த இடம் காலியாக இருந்தது.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page