காதல்-33
சூர்யா இன்பாவை அழைத்துக்கொண்டு கீதாவின் அறைக்கு வர, அங்கு அவள் இருந்த இடம் காலியாக இருந்ததை கண்டு ஆடிப்போயினர் அனைவரும்.
மருத்துவமனையே அதிரும் அளவுக்கு கத்தினான் இன்பா. அவன் கோபத்தை பார்த்த அனைவரும் மிரண்டு போக என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினார்கள்.
“கையில் கிடைத்த பொக்கிஷத்தை இப்படி தொலைச்சிட்டோமே. ஏன் ஆண்டவா, என் புள்ளைங்களுக்கு இப்படி சோதனை குடுக்கிற. என் மருமகள் உனக்கு என்ன பாவம் பண்ணா? இன்னும் அவளுக்கு ஏன் கஷ்டத்தை தர?. என் புள்ளை ஆறு வருஷமா இழந்த வாழ்க்கை மறுபடியும் கிடைக்க போகுதுனு சந்தோஷத்தில் இருந்தானே. இப்படி இடியை தூக்கி எங்க தலையில் போடுட்டியே! அய்யோ கீதாமா, எங்கடா போனா உனக்கு நினைவு வந்துடுச்சா?. எதுவுமே எங்களுக்கு தெரியலையே” என்று அழுது புலம்பினாள் வசந்தா.
ரவி தினேஷ் அருண் சூர்யா, எல்லாரும் மருத்துவமனை முழுவதும் அலசி பார்த்துட்டு விட்டார்கள். கீதா போனதுக்கு ஒரு அடையாளம் கூட இல்லை. ஏன் அவள் அந்த ஹாஸ்பிட்டல் அட்மிட் ஆன சுவடு கூட இல்லாமல் இருந்தது.
ஒரு கட்டத்தில் “அப்படி ஒரு பெண் இருக்கிறாளா?” என்று கூட சில பேர் பேசிக்கொண்டார்கள். “இல்லை இவங்க கற்பனை செய்றாங்களா?” என்று சிலபேரும் “அது எப்படி எல்லாருக்கும் ஒரே மாதிரி கற்பனை வரும்” என்றும் சில பேர் பேசிக் கொண்டார்கள்.
இன்பாவுக்கு தன் உயிரே தன்னை விட்டு போனது போல் இருந்தது. ‘எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறடி என்னால. அப்படி நான் உனக்கு என்ன பண்ணிட்டேனு என் உயிர் முக்கியமுனு, உன் காதலையே அடகு வச்சு உன் அப்பா அம்மாவை இழந்து, ஏன்டி ஏன் இப்படி வலியை மட்டும் அனுபவிச்சுட்டு இருக்க. எல்லாம் முடிஞ்சு இனிமேல் உன்னை கண்ணுக்குள்ள வச்சு தாங்கு தாங்குனு தாங்கணும்னு நினைச்சு உன்னை ஆசையா பார்க்க வந்தா உன்னை தொலைச்சிட்டேனேடி.’ அவன் மனதிற்குள் வேதனையை அடைக்கிக் கொண்டு கோபத்துடன் அந்த மருத்துவமனை அதிகாரியை சராமரியாக திட்டித்தீர்த்தான்.
“அது எப்படி சார் உங்க கண்காணிப்புல இருக்கிற நோயாளி காணாமல் போவாங்க?. அவங்களுக்கு கண்டிப்பா கான்சியஸ் வராதுனு சொல்றிங்க. சிசிடிவி புட்டேஜை யாரோ டெலிட் பண்ணிட்டாங்கனு சொல்றிங்க சரியா?” என்ற கேள்வியோடு நிறுத்தினான்.
அவரோ பயந்துக் கொண்டே “ஆ..ஆம்..ஆமா, சார்” என்றார்.
ராஜாவோ அடக்கப்பட்ட கோபத்துடன் “அப்ப இதுக்கு என்ன அர்த்தம். என் மனைவியை யாரோ கடத்திக்கிட்டு போய் இருக்காங்க அதானே சார் அர்த்தம்” என்று கேட்டான்.
“ஆமா, சார்” என்று மீண்டும் அவர் கூற,
ராஜா அனல் பார்வையோவோடு “அவங்களை கடத்தும் போது யாருமே பார்க்கல. யாரும் உதவி பண்ணலணு சொல்றிங்க. அப்படி தானே?” என்று கேட்டவன் சற்று நிறுத்தி
“இந்த மாதிரி தப்பு இதுவரைக்கும் உங்க ஹாஸ்பிட்டல நடக்கவே இல்லை சரியா சார்”.என அந்த மருத்துவமனை எம்.டியை கோபத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தான் இன்பா.
அவருக்கு, என்ன சொல்வது எப்படி சொல்வது என்றே தெரியவில்லை ‘அதான் நான் சொல்ல வேண்டியதை அவரே சொல்லிட்டாரு. தன் ஊழியர்களை முறைத்துவிட்டு கையை பிசைந்து கொண்டு தவித்தார்.
அது மிக பெரிய மருத்துவமனை அங்கு இந்த மாதிரி ஒரு தப்பு இதுவரை நடந்தது இல்லை. அதுவும் கடத்திட்டு போனவங்க ஒரு சின்ன அடையாளம் கூட விட்டுட்டு போல. அந்த எம்.டிக்கு கூட ஒரு நொடி அப்படி ஒரு பெண் இருக்கிறாளா என்று சந்தேகம் வந்தது போனது.
இன்ஸ்பெக்டர் வந்து விசாரிக்க எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் குழம்பினார். கீதா இருந்த அறை சிசிடிவியில் பதிவாகமல் இருந்தது. ஏன் அவள் அந்த மருத்துவமனையில் உருண்டு கீழ விழுந்தது கூட வீடியோவில் பதிவாகவில்லை.
இன்ஸ்பெக்டருக்கும் சந்தேகம் வந்தது. ‘ச்ச, ச்ச அது எப்படி எல்லாருக்கும் ஒரே கற்பனை வரும்’ என்று நினைத்துக் கொண்டே, இன்பாவிடம் “கடைசியா எப்போ உங்க மனைவியை பார்த்திங்க” என்று விசாரித்தார்.
பிறந்தநாள் அன்று நடந்ததை சொல்லிவிட்டு கீதாவை பற்றி மீதம் தெரிந்த அனைத்தையும் சொன்னான்.
மின்னல் வேகத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது. கீதாவை கடத்தித்தான் சென்று இருக்கிறார்கள் என்று முடிவானது. ஆனால், யார் ஏன் எதற்கு..என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. அவள் இருந்த சுவடே இல்லாமல் போன ரகசியம் என்ன என்று குழம்பிப் போனார்கள்.
இன்பா துடிதுடித்து விட்டான். தன்னவளின் நிலைமை இப்போது எப்படி இருக்கும் என அவனால் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை. அவள் பத்திரமாக தான் இருப்பாள் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான். கீதாவின் புகைப்படத்தை வாங்கிக் கொண்டு கீதாவை கண்டுபிடிக்கும் படலம் ஆரம்பம் ஆனது.
ராஜாவின் பவரை வைத்து அனைத்து ஊருக்கும் கீதாவின் புகைப்படம் அனுப்பி விசாரிக்க செய்தான். மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் எச்சரிக்கையிட்டு அங்கே கண்காணிக்க நான்கு நபரை காவலுக்கு வைத்தான் ராஜா.
பின் இந்துவையும் கணேஷையும் வெளியே வர முடியாதபடி அவர்கள் மேல் மோசடி வழக்கு கொலை முயற்சி வழக்கு..என்று இன்னும் இரண்டு மூன்று வழக்குகளை சேர்த்து இருவர் மேலும் போட்டு உள்ளே தள்ளினான்.
பரத் மேல் வைத்த அன்பு நட்பு நம்பிக்கை எல்லாம் இப்போது கோபம் ஆத்திரம், நம்பிக்கை துரோகம்.. என்று…அவன் மேல் கொலைவெறியில் இருந்தான் ராஜா.
நாட்கள் கடந்து மாதங்கள் ஆனது. அன்று மருத்துவமனையில் தன் கணவர் என்றும் பாராமல் அடித்து அனுப்பினார் வசந்தா.
அடி வாங்கிய அவமானத்தில் தன் சொந்த ஊருக்கு போனவர் அந்த அவமானத்திலே இரண்டு மாதத்தில் இறந்துப் போனார் சுந்தர்.
தெரிந்தவர்கள் மூலம் தகவல் வந்தும் தன் மகனின் வாழ்க்கையை அழித்து இத்தனை வருடம் அதை மறைத்து ஒரு பாவமும் அறியாத பெண்ணின் குடும்பத்தையே அழித்தவர் என சொல்லி தன் கணவரின் இறுதி சடங்கிற்கு கூட போகாமல் உள்ளுக்குள்ளே தன் கணவரை நினைத்து அழுதார்.
இன்பராஜா அதை எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் தன் தந்தையை கடைசியாக அவர் முகத்தை பார்க்க சென்றான். இந்த கடைசி நேரத்தில் கூட தன் கணவரை பார்க்க வராமல் பிடிவாதமாக இருந்த தாயை நினைத்து கோபம் கொண்டான்.
இன்பா, தன் தாயிடம் கூட பேசுவதை கொஞ்ச கொஞ்சமாக குறைத்துக்கொண்டான். இதற்கு இடையில் சூர்யா, ராமுக்கு நடந்த அனைத்தையும் சொல்லி வர வைத்தான்.
ராஜா அவ்வபோது மட்டும் ஆபிஸ்க்கு சென்று வந்து மீதி நேரத்தில் தன்னவளை பற்றி விசாரிக்க தொடங்கினான். அருண் தான் ஆபிசின் அனைத்து வேலையையும் பார்க்கத் தொடங்கினான்.
அவ்வபோது கீதாவின் நினைவு அவனையும் மீறி நினைக்க தோன்றும். பின் இது தவறு இன்னொருத்தருக்கு சொந்தமானவளை தான் நினைப்பது தவறு என்று..வேளையில் முழ்கினான்.
பாவம், அவனும் கீதாவின் மீது தன் காதல் வைத்தவன் தானே. மறக்க சிறிது காலம் ஆகும் தானே.
ராம், அருணை பார்க்கும் போது எல்லாம் வேண்டாத வெறுப்பு தான் அவனுக்குள் தோன்றும். தன் நண்பனின் மனைவியை காதலித்தவன் என்ற நினைப்பே அருண் மேல் வெறுப்பு உண்டாக காரணம் ஆனது.
இதில் சூர்யா மட்டும் தான் அருணை புரிந்துக் கொண்டான். அருண் தெரிந்தேவா கீதாவை காதலித்தான், தெரியாமல் தானே அவன் காதலித்தான். அவள் யார் என்று தெரிந்ததும் தன் காதலை மறக்க நினைத்தவன் அல்லவா என்று அருண் மேல் தனி மரியாதை உண்டானது.
தினேஷும் தனுவும் தன்னால் முடிந்த அளவிற்கு கீதாவை தேட முயற்சி செய்தார்கள். ரவி தான் கீதாவின் பிரிவில் கவலைப்பட்டு கவலைப்பட்டு படுக்கையே கதி என்று ஆனார்.
விஜயாவின் மனதும் கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பம் ஆனது. தனுவின் தந்தை பெரிய பணக்காரனாக இருந்தாலும் ராஜாவின் பணத்திற்க்கு முன் அவர் பணம் கால் தூசி அளவாக போனது.
இன்பராஜாவின் குடும்பம் அந்தஸ்தை அறிந்து தன் மகள் மேல் வைத்த பாசத்தை விடவும் வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை அவருக்கு. இதானல் தன் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவர்கள் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
இன்பாவுக்கு தான் கீதாவின் நினைவு அதிகமாக வாட்டி எடுத்தது. அவளுடன் இருந்த நினைவுகளை ஒவ்வொன்றாக நினைக்க தொடங்கினான்.
அந்த நினைவை தனக்கு என்று ஒரு உலகத்தை உருவாக்கி கற்பனையில் தன்னவளுடன் வாழ தொடங்கினான். கீதா அவனை சீண்டுவது, அவனை வேலைக்கு தயார்படுத்துவது, முத்தம் இடுவது கட்டி அணைப்பது..என்று நாளுக்கு நாள் கற்பனையுடனே அவளுடன் வாழ்ந்துக் கொண்டு இருந்தான்.
ஒரு நாள் சூர்யாவுக்கு தெரிந்ததும் தன் நிலைமை தான் தன் நண்பனின் நிலைமையாகி போனதை நினைத்து மிகவும் வருந்தினான்.
இதை அனைத்தும் பார்த்துக்கொண்டு இருந்த கடவுளே, இன்பராஜாவை பார்த்து இறக்கப்பட்டு இருப்பார் போல். இதற்கு எல்லாம் முடிவுக்கட்ட அருணை இன்பாவின் இல்லத்திற்கு அனுப்பிவைத்தார்.
“அருண் என்ன இந்த டைம்கு வந்து இருக்க” என சூர்யா கேட்க,
“ஆபிஸ் விசயமா சாரை பார்க்க வேண்டும்” என்று சொன்னான்.
சிறிது நேரம் ராஜாவிடம் வேலை சம்மந்தமான விசயத்தை பேசிவிட்டு கிளம்பும் சமயத்தில் அருணை தடுத்து நிறுத்தினான், இன்பா சந்தேகப் பார்வையுடன்.
“ஒரு நிமிசம் நில்லு அருண்”
“சொல்லுங்க சார்,ஏதாவது டவுட் இருக்கா. எல்லாமே சரியா பண்ணிட்டேனே சார்” என்று அவன் கோப்பைகளை மீண்டும் பார்த்தான்.
ராஜாவோ பார்வையை கூர்மையாகிக் கொண்டு “டவுட் இருக்கு தான் அருண், பைல் மேல இல்லை உன் மேல” என்று நேரடியாக விசியத்திற்கு வந்தான்.
இன்பா சொல்வதை கேட்டு சூர்யாவும் ராமும் ஒருவரை ஒருவர் பார்க்க அருண் என்ன என்று குழம்பினான்.
“நீங்க என்ன சொல்றிங்கனு புரியல சார்” என்று கேட்டான்.
ராஜாவோ கடுமையான குரலில் “கீதா எங்கே?” என்று கேட்க,
சூர்யாவும் ராமும் அதிந்து போயினர். அருண் மேலும் குழம்பத்துடன் “சார், நீங்க என்ன சொல்றிங்க. சத்தியமா எனக்கு புரியல சார்” என்றான்.
“நான் கொலைக்காரனா மாறுவதுக்குள்ள நீயாவே உண்மையை சொல்லிடு அருண்” என்று அவன் சட்டையை பிடித்துக் கேட்க, இப்போது தான் அருண் அதிர்ந்தான்.
ராஜா பல வழியில் கீதாவை பற்றி அறிய முயற்சி செய்துக்கொண்டு இருந்தான். ஒரு சிறிய துறும்பு கிடைத்தால் கூட தன்னவளை எப்படியாவது கண்டுப்பிடித்து விடலாம்..என்று எண்ணிய போது தான் அருண் ஆபிஸ் பற்றி பேச வந்தான்.
‘அருண் கீதாவை காதலித்ததை எப்படி மறந்தேன். ஒரு வேளை இவன் தான் கீதாவை மறக்க முடியாமல் கடத்தி இருப்பானா? ஆனால் அன்னிக்கு இவனும் எங்க கூட ஹாஸ்பிட்டல இருந்தானே. ச்சீ..ச்சீ அருண் அப்படிப்பட்டவன் இல்லை. என்ன தான் விளையாட்டு தனம் இருந்தாலும் பொறுப்பு உள்ளவன். அதுவும் கீதாவுக்கு சிறு தலைவலி என்றால் கூட இவன் அனைத்து வேலையையும் இழுத்து போட்டு செய்து முடித்து கொடுப்பவன். இப்போது கூட கீதாவை தேடி நான் அலையும் நேரத்தில் என் ஆபிஸை இவன் தானே சரியாக நடத்தி வருகிறான். அப்படிப்பட்டவன் எப்படி எங்களுக்கு கஷ்டத்தை தருவான்?’ என்று அருணை பார்த்ததிலிருந்தே குழம்பத்தோடு இருந்தான் ராஜா.
அதற்குள் “டேய் ராஜா! என்னடா பேசிட்டு இருக்? அருணை போய் சந்தேகப்படுறியா?” என சூரியா கேட்க,
ராம் இடையில் புகுந்து “டேய் சூர்யா அமைதியா இருடா. எனக்கு கூட இவன் மேல் ஆரம்பத்தில் இருந்து டவுட் தான். ராஜா சரியா தான் கேட்கிறான்” என்று கோபத்துடன் கூறினான்.
சூரியாவோ “டேய் ராம் அமைதியா இரு. அருண் அப்படி பண்றவன் இல்லை. ரொம்ப நல்ல பையன், நம்ம இப்ப கீதாவை காணோம்னு தவிக்கிறோமே. அப்படி தான் இவனும் தினம் தினம் தவிக்கிறான். டேய் ராஜா, நீயே நல்ல யோசிச்சுப் பாரு. எங்களை விட உனக்கு இவனை பத்தி நல்ல தெரியும். அருண் இந்த மாதிரி பண்றவன் இல்ல. உன் ஆபிஸ் இப்ப நஷ்டம் ஆகாம இருக்குனா. அதுக்கு காரணம் யாரு தெரியுமா இதோ இவன் தான்,
இவனை பத்தி என்னடா தெரியும் உனக்கு. நம்ம கூட எடுக்க முடியாத பெரிய பெரிய முடிவை கூட இவன் எடுத்து இருக்கான். அப்படிப்பட்டவனையா நீ சந்தேகப்படுற. தன் காதலையே காதலிக்கிற பொண்ணுகிட்ட சொல்லாமல் தான் காதலிச்ச பொண்ணு வாழ்க்கை நல்ல இருக்கணும்னு நினைச்சு தன் காதலை தியாகம் செய்தவன்டா. இவனை போய்”. என சூரியா ஆதங்ககத்தோடு பேசினான்.
ராஜாவிற்கு குற்றவுணராகி போனது. அவனுக்கே அவன் மீதே கோபம் கோபமாக வந்தது.
அருணோ வருத்தத்தோடு “சார் நீங்க என்னை சந்தேகப்பட்டது கூட நான் பெருச நினைக்கல சார். ஆனால் ஏஞ்சலை நான் கடத்தி இருப்பேனு நினைச்சிங்க பாருங்க! அதான் சார் என்னால தாங்க முடில. என் மேல தப்பு இருக்கு தான். ஏஞ்சல் யாருனு தெரியாமல் காதலிச்சேன். ஆனா அவ உங்களுக்கு சொந்தமானவனு தெரிஞ்சு நான் எந்த அளவுக்கு வேதனைப்பட்டேனு எனக்கு மட்டும் தான் சார் தெரியும். ஒரு விதத்தில் என் காதலை அவ கிட்ட சொல்லாமல் மறைச்சது கூட நல்லதுனு அப்ப அப்ப நினைச்சு நிம்மதி பட்டுப்பேன். அவ சீக்கிரம் கிடைக்கணும்னு நான் நினைக்காத நாள் இல்லை சார். உண்மையாவே அவள் தேவதை தான் சார். எவ்வளவு கஷ்டம் வேதனை அனுபவிச்சு இருந்தாலும் ஒரு நாள் கண்டிப்பா நீங்க அவளை தேடி வருவீங்கனு நினைச்சு இத்தனை வருஷம் வாழ்ந்து இருக்கா. அவளை நினைக்கும் போது எனக்கு காதலை விட மதிப்பு மரியாதை தான் அதிகம் தோன்றும். நம்ம காதலிச்சவங்க நமக்கு கிடைக்கலனா அவங்களை வெட்டிபோடுறது, ஆசிட் ஊத்துறது, கடத்திக்கிட்டு போய் உரு தெரியாமல் செய்வது இதெல்லாம் நான் கனவுல கூட நினைக்க மாட்டேன் சார். அது மிக பெரிய பாவம், அவ எப்பவும் சந்தோஷமா வாழணும்னு தான் நான் நினைக்கிறேன் சார். அதுவும் உங்க கூட ஏஞ்சல் சேர்ந்து வாழ்ந்தா தான் அவள் இதுவரைக்கும் இழந்த அனைத்து சந்தோஷமும் கிடைக்கும் சார். நீங்க எதை நினைச்சு என்னை சந்தேகப்பட்டிங்கனு தெரியல. ஆனா உங்க மனசுல சந்தேகம் வந்துடுச்சு அந்த சந்தேகத்தை போக்குற வரைக்கும் நான் உங்க கூட தான் இருப்பேன். கீதா கிடைச்சதும் தான் நான் உங்களை விட்டு போவேன் சார்” என்று வேதனையுடன் உறுதியாக பேசினான்.
பின் அங்கு இருக்கும் சோபாவில் போய் அமர்ந்தான். அதுவரை அடக்கி வைத்து இருந்த கண்ணீர் அவனை மீறி எட்டி பார்த்தது இருதுளிகள்.
சூரியாவோ சலிப்பாக “போதுமாடா? இப்ப உங்க இரண்டு பேருக்கும் நிம்மதியா? நான் புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு கூட நீ புரிஞ்சிக்கல ராஜா” என தன் நண்பர்களை திட்டி முறைத்து விட்டு, அருணை சமாதானம் செய்தான்.
இன்பாவுக்கு வருத்தமாக இருந்தது. இப்படிப்பட்ட ஒருத்தனை சந்தேகப்பட்டு விட்டோமே..என்று, ராமோ அருண் சொன்னதில் அவன் மனம் இளகினாலும் மூளை அதன் வேலையை சரியாக செய்தது.
அருண் தன் தந்தையிடம் ராஜாவின் வீட்டில் தங்க போவதை தகவல் சொல்ல, போனை எடுத்தவன் அப்போது தான் ஞாபகம் வந்தவனாய் வீடியோக்குள் போய் அன்று கீதா யாருடனோ கோபமாக பேசியதை பார்த்து அதை அருகில் அமர்ந்து இருக்கும் சூர்யாவிடம் காட்டினான்
அதைப்பார்த்த சூர்யா அதிர்ந்து “இது எப்போ எடுத்த அருண்” என கேட்க,
“ஆபிசுக்கு வரும் போது வழியில் கீதாவை பார்த்தேன். அப்போ ஒரு ஆளு கூட கோபமா பேசிக்கிட்டு இருந்தா. அவங்க பேசுனது எனக்கு கேட்கல. ஆனா அன்னிக்கு” என்று தயங்கி ராஜாவை பார்த்தான்.
அவனோ சூர்யா கிட்ட இருந்த கைப்பேசியை வாங்கி பார்த்து கொலை செய்யும் ஆத்திரத்தில் முகத்தை வைத்துக்கொண்டு அருண் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தான்.
அருண் தயங்கியதை பார்த்த சூர்யா “ம்ம் சொல்லுடா அன்னிக்கு என்ன ஆச்சுனு சொல்லு” என்றான்.
அருணோ “அது.. வந்து.. அன்னிக்கு ஏஞ்சல் ரொம்ப அழகா இருந்தா. அதான் வீடியோ எடுத்தேன்” என்று சொல்லி முடித்து ராஜாவை பார்த்தான்.
ராஜாவோ அருணை நோக்கி அழுத்தமான காலடியோடு சென்றான்.
‘தன்னை அடிக்க தான் அருகில் வருகிறார்’ என உணர்ந்து கண்களை மூடினான் அருண்.
ஆனால் ராஜவோ அருணை கட்டிக் கொண்டு, “நீ வாழ்க்கையிலே செய்த உருப்படியான விசயம் இந்த வீடியோ எடுத்தது தான்.” என்று கூறினான்.
‘அப்போ நான் இவ்வளவு நேரமா பக்கம் பக்கமா வசனம் பேசுனது எல்லாம் உருப்படியான விசயம் இல்லையா?’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே “ஏன் சார் அந்த வீடியோல அப்படி என்ன இருக்கு” என கேட்டான்.
“என்ன இருக்கா” என ராஜா சற்று உற்சாகத்தோடு கேட்டான்.
ஆம் உண்மையாகவே அன்று அருண் எடுத்த வீடியோ தான், இன்று கீதா இருக்கும் இடத்திற்கு இவர்களை அழைத்துக் கொண்டு போக போவதை அறியாமல் எடுத்து இருந்தான் அருண்.
ராஜாவோ “கீதாவை பத்தி ஒரு சின்ன துரும்பு கிடைத்தா கூட, அவள் இருக்கிற இடத்தை என்னால கண்டு பிடிக்க முடியும் அருண்.” என்று நம்பிக்கையோடு கூறிய ராஜாவின் விழியோ அந்த வீடியோவை பார்த்தது,
“இந்த வீடியோல இருக்கிறது யார் தெரியுமா அருண்” என்று கேட்டான்.
அவனோ “தெரியாது சார்” என்று சொல்ல,
“இவன் தான் அந்த நம்பிக்கை துரோகி பரத். இவனை பத்தி நான் நினைக்கவே இல்லை அருண். சூர்யா ராம் இவன் மேல கோபம் இருந்ததே தவிர சந்தேகம் வரலடா. ஆனா எனக்கு இப்ப சந்தேகம் வருது கண்டிப்பா இவன் தான் என் கீத்துவை கடத்திக்கிட்டு போயிருக்கணும்” என்று சொல்லிவிட்டு,
இன்ஸ்பெக்டரிடம் தகவல் சொல்லி கொடைக்கானலில் தங்களுக்கு உதவ ஏதாவது ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டு இவர்கள் மூவரிடமும் நாளை கொடைக்கானல் போக ரெடியாக சொன்னான்.
“ஒரு நிமிசம் ராஜா. பரத் தான் கடத்தி இருப்பானு எப்படி நீ நம்புற. சரி அவனே கடத்தி இருந்தாலும் அவங்க கொடைக்கானல்ல தான் இருக்காங்கனு எப்படி உறுதியா சொல்றா” என சூர்யா கேட்க,
ராமும் “ஆமாடா, எப்படி சொல்ற” என்று கேட்டான்.
இன்பராஜா சிரித்து விட்டு “அவனை கொடைக்கானல்ல இருந்து அழைத்து வந்ததே நாங்க தான்டா. அவனை படிக்க வச்சதும் நாங்க தான்டா மறந்துடிங்கலா. அங்க அவனுக்கு ஒரு பாட்டி இருக்காங்க” என்றவன், நாளை கிளம்புமாறு கட்டளைவிட்டு சென்றான்.
இதோ இன்று,
நான் உன்னை தேடி வந்துட்டு இருக்கேன்டி கீதா” என மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டு கொடைக்கானலை நோக்கி பறந்தார்கள்.
அங்கு இன்பராஜா தன்னவளை சந்திப்பானா?. அப்படி சந்தித்தாலும் கீதாவிற்கு தன்னவனை ஞாபகம் இருக்குமா?.
அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
