ஆடி வரும் வண்ண மயிலே-25

அத்தியாயம்:25 

மண்டபத்தில் துப்பாக்கி வேட்டு சத்தமும் அதை தொடர்ந்து…மக்களின் அலறல் குரலும் கேட்க கிருபா, ராகுல், தர்மா கூடவே சில கார்ட்ஸ்…உள்ளே ஓடி போனார்கள்.  

மயூரின் தாண்டவத்தை தங்களை மெய் மறந்து மக்கள்…பக்தி பரவசத்தோடு ரசித்து பார்த்து கொண்டு இருந்தனர்…அவள் ஆடி முடிந்து கூட இன்னும் அவர்கள் தங்கள் நிலைக்கு வரவில்ல.  

மயூரி சபைக்கு நமஸ்காரம் வைத்து விட்டு…நின்றுக்க தான் அவர்கள் எல்லாம் தங்கள் நிலைக்கு வந்தது…கொஞ்ச நேரத்தில் அந்த இடமே கரவொலியால் அதிர்ந்தது… 

மயூரிக்கு அவள் நடனத்தின் மைல்கல் தான் இது…அவள் தன்னை மறந்து சிவபார்வதியாக…தன்னை நினைத்து ஆடியதற்க்கு கிடைத்த வெற்றி இது.  

அவள் சியாமளா பெண்ணு என்று இல்லாது…தனக்கென்று தனியாக ஒரு முத்திரையை தஞ்சையில் பதித்து விட்டாள்…சக்ரபாணிக்கு கண்கள் கலங்க கல்யாணி அழுதே விட்டார்.  

அந்த அளவுக்கு பேத்தியின் நடனத்தோடு அவர்கள் ஒன்றிணைத்து இருந்தார்கள்…குரு மூர்த்திக்கு மீனாவுக்கு இருவரின் நிலை புரிய… அவர்களுக்கு ஆதரவாக நின்றிருந்தார்கள்.  

ராகவன் மேடையே பார்த்து கொண்டு இருந்தவன்… வாய் சியாமி என அழைத்தது அவன் மனசில் ஏதோ ரணவலி ஏற்பட்டது…அவன் அருகில் இருந்த புவனா அவன் கைகளை அழுத்தி விட்டவள்.  

“ அண்ணி நேரில் ஆடியது போலவே இருக்கா அண்ணா..? எனக்கு இன்று அப்படி தான் தோன்றியது…நான் மயூவை பார்க்கவில்லை அண்ணியை தான் பார்த்தேன். 

முதல் தடவை அவங்க நடனத்தை பார்த்து…உறைந்து போய் நின்று இருந்தேனோ அப்படி இன்று நின்றிருந்தேன்…எதை எல்லாம் நீ இழந்து இருக்க என பாரு மயூ உன் சொந்த ரத்தம்.  

அவளை கூட பார்த்து கொள்ள முடியாத அளவுக்கு…மாலதி மேலே உனக்கு அப்படி என்ன அன்பு…?மன்னித்து விடு நான் இப்படி பேசுவதற்க்கு…தவறு மாலதி, பாண்டி மேலே மட்டும் இல்ல உன் மேலேயும் தான்.  

நீ சியாமளா அண்ணி மேலே வைத்திருந்து அன்பு கலந்த காதல்…மாலதி மேலே வைத்திருந்தது அந்த நேரத்து சலனம்…சலனம் எப்பவுமே நிலைத்து நிற்காது படித்த உனக்கு இது கூடவா தெரியாது..?  

ஒரு புருஷனாக மட்டுமல்ல ஒரு அப்பாவாகவும் நீ தோற்று போய் நிற்கிற…உன் பெண்ணு மனதில் நீ அவள் அம்மாவை கொன்ற… கொலைகாரன் என்ற எண்ணம் தான் இருக்கு…அதை என் கிட்ட அம்மா கிட்ட லேசாக வேறு மாதிரியாக கேட்பாள்.  

நாங்க பேச்சை மாற்றி விடுவோம்…சக்ரா அங்கிள் கிட்ட கூட இப்படி கேட்டதாக ஆன்ட்டி சொன்னாங்க…அவர் அதற்க்கு காலம் தான் பதில் சொல்ல வேணும் என்று சொல்லி…பேச்சை மாற்றி விட்டதாக சொன்னாங்க.  

மயூரி மனதில் அப்பா ஏக்கம் தர்ஷன்,தியா போல இருக்கு அண்ணா…மயூரியை சக்ரா அங்கிள் தங்க தட்டில் இல்ல வைர தட்டில் வைத்து…பார்த்து கொள்கிறார் தான் ஆனால் லேசாக அவள் மனதில் அப்பா ஏக்கம் இருக்கு. 

ஒரு பெண்ணுக்கு அப்பா தான் ஹூரோ அந்த ஹூரோ ஜீரோவாக போனால்….அந்த பெண்ணு வாழ்க்கையே கேள்வி குறியாகி விடும்… 

அவள் உன் காதலின் பரிசு அவளை முழுதாக இழந்து விடாதே…நீ தான் முடிவெடுக்க வேணும் யோசி இன்னும் நேரம் இருக்கு…” என பேசி விட்டு நிமிர தியா தூக்கத்தில் சிணுங்க தொடங்கினாள்.  

அவள் பசிக்கு தான் அழுகிறாள் பீடிங் பாட்டிலில் எடுத்து வந்த பால்லை கொடுக்கலாம்…என்று நினைத்தவள் மகனுக்கும் இப்போ பசிக்கும் என்ற.. ஞாபகம் வர அவனை தேடினாள்.  

மீனா மடியில் தானே அவன் இருந்தான்…எங்கே அவனை காணோம் என சட்டென பதறி போக… அம்மா என அழைக்க மீனா அவளை பார்த்தார்.  

புவனா “ அம்மா தர்ஷ் குட்டி எங்கே அவனை காணோம்…அப்பா இல்ல அங்கிள் கிட்ட இருக்கிறானா..? என ஒரு தடவை பாரு…அவனுக்கு இப்போ பசியெடுக்க ஆரம்பித்து இருக்கும்…ஸ்நாக்ஸ் கொடுக்க வேணும்…” என்றாள்.  

மீனா “ என் மடியில் தான் இருந்தான்…எப்போ இறக்கி போனான் என்று தெரியவில்லை…தாத்தா கிட்ட போக போகிறேன் என்றான் இரு உன் அப்பா கிட்ட இருக்கிறானா..? என்று பார்க்கிறேன்…” என சொன்னவர் …எட்டி குரு மூர்த்தியை பார்க்க அங்கும் அவன் இல்லை.  

இப்போ அவரும் பதறி போனவர்…மகளிடம்  

“ புவனா அங்கே இல்லை மா இவன் எங்கே போனான்…?பவதீப்பை பார்த்து விட்டு அவன் கிட்ட போய் விட்டானா..? இல்லையே அங்கும் இல்லை…” என சொல்ல புவனா பதறி போனவள். 

”அண்ணா தர்ஷனை காணோம்..”  என கண்கள் கலங்க… தன் அருகே இருந்த தமையனிடம் சொன்னாள்.   

ஏதோ யோசனையாக இருந்த ராகவன்… தங்கையின் கலங்கிய குரலில் சட்டென நிமிர்ந்தவன்.  

“ புவா என்ன மா இது அவன் சின்ன பையன்…ஒரு இடத்தில் கட்டி போட முடியாது இங்கே தான் இருப்பான்…நீ அழாதே பாப்பாவை பார்த்து கொள்ளு நான் அவன் எங்கே இருக்கிறான்..? என்று பார்த்து வருகிறேன்…” என்று சொல்லி விட்டு எழ போக.  

துப்பாக்கி வேட்டு சத்தமும் மயூரின் தாத்தா என்ற… அழுகை குரலும் கேட்டது.. 

சட்டென அனைவருமே திரும்பி பார்க்க…நடனம் முடிந்து மேடையில் இருந்து இறங்க போனவளை …மஸ்தி இழுத்து பிடித்து அவள் நெற்றியில் துப்பாக்கியை வைத்திருந்தான்.  

காசிப் நிதானமாக நடந்து வந்து மேடையில் ஏறியவன்…தலைக்கு மேலே ஒரு கும்பிடு போட்டவன்…தன் கையில் உள்ள துப்பாக்கியால் மேலே சுட்டான்…அதை பார்த்த மக்கள் அலற தொடங்கினார்கள்.  

அடுத்த ஒரு வேட்டை இறக்கியவன்…சுத்த தமிழில் பேச தொடங்கினான்.  

“ வணக்கம் சி.எம் சாப் இதை நீங்க எதிர்பார்க்கவே இல்லை போல…நாங்க இந்த நாளுக்காக தான் கிட்ட தட்ட ஆறு மாதம் காத்திருந்தோம்…இந்திய கவர்மெண்ட் இப்போ தான் அந்த வாய்ப்பை… எங்களுக்கு கொடுத்து இருக்கு.  

நாங்க இங்கே வந்தது உயிர்களை எடுக்க இல்லை…சில உயிர்களை காக்க தான் அதுவும் ஆளும் கட்சி, எதிர்கட்சி தலைவர்களை …ஒன்றாக ஒரு இடத்தில் பார்ப்பது எங்க அதிர்ஷ்டம் தான்.  

வணக்கம் மேஜர் பவதீப் ரவீந்திரன் எப்படி இருக்கிறீங்க..? உங்களுக்கு என்ன சந்தோஷமாக தான் இருப்பீங்க…ஆனால் நாங்க அப்படி இல்லையே ரொம்ப நாளாகி விட்டது உங்களை மீட் பண்ணி.  

அதைய வீரம், திமிர் எல்லாம் பல மடங்கு அதிகமாகி இருக்கு உங்க கிட்ட…முட்டாள்தனமாக நீங்க எதையுமே செய்ய மாட்டீங்க என நினைக்கிறேன்… 

நீங்க எங்களுக்கு எதிராக ஒரு விரலை அசைத்தால்…உங்க சி.எம் பேத்தி உயிர் மேலே போய் விடும்.  

முதலில் நீங்க உங்க ஆளுங்க துப்பாக்கியை எல்லாம்…கீழே போட சொல்லுங்க இல்ல உங்க சி.எம் பேத்தி… உயிருக்கு நாங்க உத்தரவாதம் இல்லை..” என்றான்.  

இது போல பல மிரட்டல்களை கண்ட பவதீப் அவன் சொன்னதை செய்யாது…அசையாமல் இருக்க மஸ்தி என காசிப் அழைக்க… 

அடுத்த செக்கன் மஸ்தியின் இரும்பு கரங்கள்.. மயூரின் பட்டு கன்னத்தை பதம் பார்க்க…அவள் தாத்தா என அழுதாள்.  

சக்ரபாணி பதறி போய் மூர்த்தி என அழைத்தவர்… 

“ மூர்த்தி உன் பாடி கார்ட் கிட்ட அவங்க சொன்னது போல செய்ய சொல்லுடா…இல்லை என்றால் நம்ம பேத்தியை அவங்க ஏதும் செய்து விடுவாங்க…” என சொன்னார்.  

குரு “ பவதீப் அவன் சொன்னது போல செய்…எனக்கு என் பேத்தி தான் முக்கியம்..” என்றார்…அவர் சொல்லியும் பவதீப் அசையாது நிற்க ராகவன்.  

“ பவதீப் உனக்கு என்ன காது டமாரம் கிழிந்து விட்டதா..? அது தான் பெரியப்பா சொல்கிறார் தானே..அதை கேட்க வேண்டியது வேலைக்காரனான உன் கடமை… 

என் பெண்ணுக்கு மட்டும் ஏதும் ஆயிற்று…அதற்க்கு பிறகு நீ உயிரோடு இருக்க மாட்ட…” என சத்தம் போட்டார்.  

பவதீப் ராகவனை அழுத்தமாக பார்த்தவன்.  

“ மினிஸ்டர் சார் நான் உங்க பெண்ணுக்கு பாடி கார்ட் இல்ல…சி.எம்க்கு தான் பாடி கார்ட் எனக்கு சம்பளம் நீங்க தரவில்லை…கவர்மெண்ட் தருகிறது அதனால் பார்த்து வார்த்தையை விடுங்க.  

நீங்க எனக்கு பாஸ் இல்ல சி.எம் தான் எனக்கு பாஸ்…வேணும் என்றால் நீங்க போய் அவங்க கூட சண்டை போட்டு…உங்க பெண்ணை காப்பாற்றுங்க இந்த வெற்று மிரட்டலுக்கு… எல்லாம் அடி பணியும் ஆள் நான் இல்லை…” என்றான்.  

ராஜவேலு “ டேய்..! என்ன டா பெரிய இவனா நீ..? உனக்கு உன் உயிர் தேவையில்லாது இருக்கலாம்…எங்களுக்கு எங்க உயிர் முக்கியம் தீவிரவாதிகள் உள்ளே வந்தது தெரியாமல்…நீ என்ன செய்து கொண்டு இருந்த.  

பொம்பளைங்க கூட தாயம் ஆடி கொண்டா இருந்த…இதில் பர்ஷனல் பாடி கார்ட் என்று பெயர் வேறு…முதலில் உங்க சம்பளத்தை எல்லாம் கட் பண்ண வேணும்…சேற்றுக்கு உங்களை எல்லாம் சிங்கியடிக்க வைக்க வேணும்.  

இங்கே பாரு அவன் சொன்னது போல செய்…பைத்தியக்கார பயல் சொன்னதை செய்து தொலைத்து விட்டான் என்றால்… 

என் மொத்த திட்டமும் வீணாக போய் விடும்.. துப்பாக்கியை கீழே போட சொல்லு டா…” என்றான்.  

பவதீப் “ வாயை மூடு ரொம்ப பேசின முதலில் உன்னை தான் போட்டு தள்ளி விடுவேன்…கவர்மெண்ட் கேட்டால் நீ தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்டாக பேசின…எனக்கு சந்தேகமாக இருந்தது அது தான் இப்படி செய்தேன் என சொல்வேன்…எப்படி வசதி உனக்கு…? என கேட்டான்.  

காசிப் “ மஸ்தி இவங்க எல்லாம் ரொம்ப பேசி சீன் கிரியேட் பண்ணி கொண்டு இருக்கிறாங்க…மேஜர் சாப் நீங்களும் ரொம்ப கெட்டு போய் விட்டீங்க…உங்க கிட்ட பேச்சே இருக்காது ஒன்லி ஆ‌க்சன் தான்.  

பட் சிட்டிக்குள்ளே வந்து இதோ இந்த வேஸ்ட் ஆளுங்க கூட சேர்ந்து…ரொம்ப மாறி விட்டீங்க நம்ம இரண்டு பேரின் கொள்கைக்கும் அதிகபடியான பேச்சு கூடாது…சோ நான் இப்போ ஆக்சனில் இறங்க போகிறேன்.  

மஸ்தி உயிருக்கு பயப்படாத மனிதர்கள் கூட மானத்துக்கு அஞ்சுவாங்க…நீ என்ன செய்கிற என்றால் சி.எம் பேத்தியின் மானத்தை எடுத்து விடு…அவள் மேலே உன் மூச்சு காற்று கூட பட கூடாது.  

ஆனால் அவள் மானம் அவள் தாத்தாக்கள், அப்பா இந்த மக்கள் முன்னே…பறி போக வேணும் அவள் மானத்தை காத்த நிற்க்கும்.. அவள் டிரஸை ரீமூவ் பண்ணி விடு.  

வயசு பெண்ணு மேரேஜ் ஆக வேண்டிய பெண்ணு…புருஷன் முன்னால் காட்ட வேண்டிய தன் அழகை ஊர் முன்னாடி காட்டட்டும்… 

அதற்க்கு பிறகு சி.எம் பேத்தி என்றாலும் கூட.. மானம் போனவளை எவன் கல்யாணம் பண்ண வருவான்.  

அழகான பெண்ணு வாழ்க்கை இப்படி முடிய வேணும் என விதி இருந்தால்…நம்ம என்ன செய்வது இப்போ தான் சோசியல் மீடியா எல்லாம் இருக்கே…இங்கே நடப்பதை உலகத்துக்கு காட்ட என்ற ஒரு கூட்டமும் இருக்கு.  

சி.எம் சாப், சக்ரபாணி சாப் கெட் ரெடி…உங்க பேத்தி அழகை நீங்க தான் இந்த உலகத்துக்கு காட்ட போகிறீங்க.. இதற்க்கு முழு பொறுப்பு நீங்க தான் மஸ்தி ஸ்டார்ட்…” என்றான்.  

மஸ்தி சின்ன சிரிப்போடு மயூரியின் புடவை மேலே கையை வைக்க போக…அவள் அவனை அறைந்து விட்டு சட்டென தள்ளி விட்டு ஓட போக…மஸ்தி அவளின் நீண்ட முடியை பற்றி இழுத்தவன்… 

அவள் கன்னத்தில் அறைய மயூரி கீழே விழந்தாள்… கீழே விழுந்த அவளை மஸ்தி நெருங்கி வர…மயூரி பின்னால் நகர்ந்து போனாள். 

மயில் ஆடி வரும்…
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page