மௌனத்தால் உடைந்த காதல் 22

கமலாவும் மகள் ,மருமகனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

இருவருக்கும் தனிமையை கொடுக்க எண்ணி, அனைவரும் கிளம்பிய பின், மனைவியின் முகத்தை பார்த்தான் .

அவளோ யோசனையில் உழன்று இருக்க.

” என்ன சுதா?” என்று அவள் கையைப் பிடித்தான்.

அதன் பிறகு, குழந்தைகள் இருப்பதை உணர்ந்து,”ரெண்டு பேரும் விளையாடுங்க , இல்லைனா படிக்கிறதா இருந்தா பாருங்க ஓடுங்க” என்றதும், குழந்தைகளும் சரின்னு விளையாட ஓடி விட்டனர்.

அதன் பிறகு ,அவளை அழைத்துக்கொண்டு வந்து ஒரு இடத்தில் உட்கார வைத்து ,தானும் உட்கார்ந்தவன்,” என்ன அம்மு யோசனை?”என அவள் கைகளை அழுத்தப் பற்றி தட்டிக் கொடுத்தான்.

  “நான் உங்களையும் , பசங்களையும் நம்ப வீட்டிலிருந்து பிரிக்கிற மாதிரி இருக்கு ஆதி”என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்,

வேகமாக அவளை இழுத்து தன்னுள் ஆழப் புதைத்துக் கொண்டவன்.” நீ கண்டதையும் யோசிக்காத  அம்மு, இங்க எதுவுமே தப்பா இல்ல சரியா? நீ நீயா இருடி முதல்ல. எனக்காக ,பசங்களுக்காக , அம்மாவுக்காக, இப்படி யாருக்காகவும் யோசிக்காத அம்மு. இதுவரை நீ அடுத்தவங்களுக்காக யோசிச்ச வர போதும் .கொஞ்சமேனும் சுயநலமா இரு தப்பில்ல” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்து, நெற்றியில் முரண்ட முடிகளை காதின் ஓரம்  ஒதுக்கி விட்டவன்.

” இனி நமக்கான நேரமா இருக்கட்டும் அம்மு ” என்றான்  குழைவாக அவளின் கன்னத்தில் கன்னம் வைத்து உரசியபடி,

” அப்புறம்  இப்ப மட்டும் எப்படி இருக்கீங்களாம் சார்?” என்றாள் அவனின் கன்னத்தை லேசாகக் கடித்து,

“உன்ன!” என்று அவளின் நெற்றியில் முட்டி விட்டு, அவள் காதில் இனிமையாக சாரசமாக பேச ஆரம்பித்திருந்தான்.

“ஆதி உங்கள” என்று அவன் இடுப்பில் கிள்ளி  விட்டு, எழுந்து ஓட முற்பட்டவளின் கையைப் பிடித்து,இழுத்து மடியில் உட்கார வைத்து ,சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தான்.

அதன் பிறகு, குழந்தைகளுடன் அன்றைய நாளை செலவிட்டனர்.குழந்தைகளும் குதூகலத்துடன்  தாயும், தந்தையும் பழையபடி தங்களுடன் பேசி, விளையாடியதில் சந்தோசமாக இருந்தனர்.

குழந்தைகளுக்கான நேரமும், குடும்பத்துடன் இருப்பதற்கான நேரமும் இப்பொழுதுதான் கிடைக்கிறது. வார இறுதி நாட்களிலும் அங்கும், இங்கும் அலைந்தபடி இருந்தனர். அதை இருவரும் உணர்ந்து தங்களுக்குள் பேசிய முடிவு எடுத்தனர்.

ஒரு வாரம் இந்த பாட்டி வீட்டுக்கு, ஒரு வாரம் அந்த பாட்டி வீட்டிற்கு, எனக்கு கொண்டுவந்து விட்டு சென்றாலும், இன்னொரு வாரம் தங்களுக்காக குடும்பமாக மகிழ்ச்சியாக இருப்பதற்கான வாரம் என முடிவு செய்து கொண்டு ,அதை அவர்களிடமும் கூறினர் .

குழந்தைகளுக்கு சந்தோஷம், கூச்சலுடன் தாய், தந்தையை கட்டியணைத்து முத்தமிட்டனர். “நாங்களே சொல்லணும்னு இருந்தோம் பா” என்று கொஞ்சிக் குலாவினர். அதன் பிறகு, குழந்தைகளுக்காக நேரத்தை செலவழித்து விட்டு, நாள் வரும் ஒன்றாக சேர்ந்து ,சமைத்து உண்டு விட்டு ,படுத்து விட்டனர்.

அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்து அவர்களுக்கான நாட்கள்.. தங்களுக்கான நாட்களாக செல்ல ஆரம்பித்தது.

வேலைப்பளு தினமும் இழுத்துக் கொள்ள, குழந்தைகளும் பள்ளி சொல்ல ஆரம்பித்திருந்தனர்.

வார இறுதி நாட்கள், தாய், தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பொழுது மட்டுமே, குழந்தைகளை மட்டும் அழைத்துச் சென்று சுதாவை இங்கு விட்டு செல்வான்.

அங்கு மாமியார் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது, சுதாவிடமும் “நீயும் வரியா?” என்று கேட்க.

சிறிது தயங்கினாள். முதல் வாரம்.
சங்கடமாக உணர்ந்தாள் மாமியார் வீட்டிற்கு செல்லாமல்,  தாய் வீட்டிற்கு மட்டும் எப்படி செல்வது  என ?

“சுதா நீ உங்க அம்மா வீட்டுக்கு போக கூடாதுனு எதும் இல்ல. அத்தை அங்க தனியா இருக்காங்க.நீயும் போய் இருந்துட்டு வா. அங்க இருந்தா நீ ரெஸ்ட் எடுக்க தான் போற, அத்தையும் உன்ன வேலை வாங்கப் போறது கிடையாது, அத்தைக்கும் உன் கூட இருந்த சந்தோஷம் இருக்கும் ,உனக்கும் அம்மாவோட இருந்த சந்தோஷம் இருக்கும் ,ஏற்கனவே உன் தம்பி வரப்போக இருக்கிறது இல்ல. வா  சுதா அவங்களை ஏன் கஷ்டப்படுத்தணும் நம்ம பிரச்சனைல . அம்மா ,அப்பா தப்பா எடுத்துக்க மாட்டாங்க. புரிஞ்சிப்பாங்க இல்லானாலும், அப்பா புரிய வைப்பாங்க. நீ பீல் பண்ணாத “என்றான் .

அதன் பிறகு ,குழந்தைகளுடன் தானும் சென்று விட்டு வருவாள்.

ஒருவாரம் இருவரும் தனிமையில் இருப்பார்கள். அவர்களுக்கான நேரங்களாக ஒதுக்கி கொண்டார்கள். இன்னொரு வாரம் குழந்தைகளுடன் வீட்டில் இருப்பார்கள், ஒரு வாரம் குழந்தைகளுடன் வெளியே சென்று வருவது  என இப்படியே நாட்கள் உருண்டோடிக்கொண்டு இருந்தது .

இருவருக்குமான நெருக்கம் இன்னும் கூடியிருந்தது என்று தான் சொல்ல வேண்டும் .அங்கு வேலைகளுக்கு நடுவில் வீட்டு வேலைகளும் இருக்கும், அங்கு பெரிதாக ஆதி வீட்டு வேலைகளில் பங்கு கொள்வதில்லை. எப்போதாவது தான் வீட்டு வேலைகளில் பங்கு கொள்வான்.  ஆனால் ,இங்கு மனைவி தனியாக கஷ்டப்படுவதால், குழந்தைகளும் சேர்ந்து தாங்களும் செய்கிறோம் என்று அரட்டை அடித்து செய்வர், இவனும் செய்வான்.

அங்கு தாய் இருக்கிறார் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம். அதற்காக தாய் தனியாக வேலை செய்யட்டும் என்று எல்லாம் அவன்  இருந்தது கிடையாது. முழுவதுமாக கணவன், மனைவிக்காக நேரம் நிறையவே கிடைத்தது. வேலைகளுக்கு நடுவில் தங்களுக்கான கால நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள ஆரம்பித்து இருந்தனர்.

நன்றாக சென்று கொண்டிருந்தது. அன்று ஆதி ஆபீஸ் விட்டு  வருவதற்கு நேரம் ஆகும் என்று கூறிவிட்டு சென்றிருந்தான் . வேலைப்பளு காரணமாக, ஆகையால், தாயுக்கும் ஃபோன் செய்து தான் இன்று அங்கு வர முடியாது, தனக்கு அதிகப்படியான வேலை இருக்கு. வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்கு நேரம் சரியாக இருக்கும் என்று கூறியும் இருந்தான்.

அவரும் “சரிடா” என அமைதியாகி விட்டார்.

தினமும் தாய் ,தந்தையை பார்த்துவிட்டு தான் வருகிறான். தனிமையில் இருப்பதைப் போல் உணர வேண்டாமே !என்ற எண்ணம். அதேபோல் நேரில் சென்று ஒரு நாள் உதயாவையும் பார்த்து விட்டு  வந்தான்.

அவளோ, ” என்ன அண்ணே மொத்தமா என்ன குடும்பத்தோட ஒதுக்கி வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? நான் வீட்டுக்கு போனாலும் அம்மா என்கிட்ட பெருசா முகம் கொடுத்து பேச மாட்டேங்குது. சரி ஆரம்பத்துல ரெண்டு மூணு நாள் வரவேணான்னு சொல்லுச்சுனு நானும் ஒரு வாரம் நம்ம வீட்டு பக்கம் போகல .அதுக்கு அப்புறம் போனாலும் பெருசா பேச மாட்டேங்குது. நான் பண்ணது தப்பாவே கூட இருக்கட்டும் .

அதுக்காக என் உறவே வேணாம்னு முடிவு பண்ணி இருக்கீங்களா? எனக்கும் தப்பா பட்டுச்சு ,ஊர்ல இருக்குறவங்களும் நிறைய பேச செஞ்சாங்க, அதை வந்து நான் அம்மாகிட்ட சொன்னேன். மத்தபடி எனக்கு ஒன்னும்  உன் கிட்ட இருந்து உன் பொண்டாட்டியை பிரிக்கணும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது” என்றாள் அழுகையாகவே,

தங்கையை அமைதியாக பார்த்தபடி நின்றான்.

துரைத்தான் ,”அதிகமா பேசிட்டு போற நீ ! நீ பேசினது  எல்லாம் சரி என்ற மாதிரியும், நீ பண்ணதெல்லாம் சரின்ற மாறில மாப்பிள்ளை கிட்ட குரலை உயர்துற?”என்றான் காட்டமாக

“நான் என் அண்ணா கிட்ட பேசுறேன் .நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா ? நான் பண்ணது தப்புன்னு புருஷனா தட்டி கேட்டிங்க அமைதியா இருக்கேன் இல்ல. இப்பயும் நா அங்க குடும்பத்துக்குள்ள எந்த குட்டையும் குழப்ப போகல. அதுக்காக என்ன நான் பொறந்த வீட்டு உறவை இழந்து நிக்க சொல்றீங்களா ? நான் பண்ணது தப்பாவே இருந்தாலும், என்னை மொத்தமா ஒதுக்கி வச்சிடலாம்னு இருக்கீங்களோ ?இல்ல, மொத்தமா உறவை முடிச்சி விடலாம்னு  முடிவு பண்ணி இருக்கீங்களா?  நீங்களே என்ன என் குடும்பத்தில் இருந்து பிரிக்க நினைக்கிறீங்களா?”என்றாள் அழுகையுடன் .

இப்போது துரைக்குமே சங்கடமாகிவிட்டது. தன் மச்சானைத்தான் பார்த்தான்.

அவனும்,” நான் பேசுற மாப்ள இருங்க .அதுக்காக தானே வீடு தேடி வந்து இருக்கேன்” என்று தங்கையை ஒரு சில நொடி ஆழ்ந்து பார்த்துவிட்டு ,அவள் அருகில் உட்கார, அவளோ வேகமாக அவனின் தோளில்  சாய்ந்து கொண்டாள்.

“கோபமா உதயா?” என அவளின் தலையை வருட,

“நீ என்கிட்ட பேசாத. கல்யாணம் ஆனதிலிருந்து என்னை பெருசா கண்டுக்க கூட உனக்கு நேரம் இல்லல” 

“அப்படிலாம் இல்ல மா”

” எனக்கு அதனாலதான் உன் பொண்டாட்டி மேல வெறுப்பு வந்துடுச்சு. வீட்டுல உனக்கு பொண்ணு பாக்கும் போது கூட, எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லி தான உனக்கு கட்டி வச்சேன். கல்யாணத்துக்கு முன்னாடி தங்கச்சி கை காட்றவளை கட்டிப்பேன் சொன்ன.ஆன, கல்யாணத்துக்கு அப்புறம் முழுசா மாறிட்ட இல்ல. உனக்குனு  குடும்பம் வந்த உடனே, என்ன ஒதுக்கி வச்சிட்ட  தானே.

அதும் உனக்கு குழந்தைங்க வந்த உடனே நான் சுத்தமாவே உன் கண்ணுக்கு தெரியவே இல்லைல. அதுக்கு முன்னாடி எப்படியெல்லாம் என்கூட பேசுவ, எனக்காக நேரம் ஒதுக்குவ, என் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு போவ, என்ன வெளிய கூட்டிட்டு போவ, இப்போ எல்லாமே மாறிடுச்சு இல்ல” என  அழுகையில் கறைந்தாள்.

அவளது வார்த்தைகள் அனைத்தும் உண்மை தானே! தன்னுடைய ஒவ்வொரு செயலும் அவளை சுதா மீது வெறுப்பை சுமக்க வைத்திருக்கிறது என்பதை  தான் சுதாவுமே அவனுக்கு உணர்த்தி இருந்தாள்.

“உதயா கெட்டவ கிடையாதுங்க. இப்படி பண்ணவும் ஏதோ ஒரு வகையில நம்ம எல்லாருமே காரணம் தானே. அவ என்ன கொஞ்சம் கொஞ்சமா வெறுக்க போய் தானே, மொத்தமா இப்படி ஒரு பேச்சு பேச வச்சுருக்கு” என்றாள்

அவன் அதிர்வாக பார்த்தவன்.” என்ன சுதா சொல்ற?” என்று கேட்க.

“நீங்க, அத்தை மாமா கிட்டயும் பேசுங்க .உதயாவையும் நேர்ல பார்த்து பேசுங்க உங்களுக்கே புரியும்  “என்று கூறியிருந்தாள்.

சரி என  தங்கையை பார்க்க வந்தவன் தங்கை அவ்வாறு கூறவும் தான் அவனின் தவறும் புரிந்தது.

“நான் உன்கிட்ட எப்பையும் போல தான  உதயா நடந்துக்கிறேன்”

” போ அண்ணே! “முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். “கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் உனக்கு நேரம் கிடைக்கும் போது ,வெளியே கூட்டிட்டு போவ ,கல்யாணம் ஆனதுக்கப்புறம் உன் பொண்டாட்டி கூட போன. ஆரம்பத்துல ஒரு மூணு நாலு மாசம் கூட என்ன அப்பப்ப கூட்டிட்டு போன, அதுக்கப்புறம் என்ன சுத்தமா நீ கண்டுக்கறது இல்ல  ,அதுவும் உன் புள்ளைங்க வந்ததுக்கப்புறம், என்ன நீ சுத்தமா கண்டுக்கல.

இப்ப வரை  நான தான உங்களை தேடி வந்து ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன். நீங்க என்ன வீடு தேடி வந்து பாக்குறீங்களா?  நல்லா யோசிச்சு பாரு. என்னை கட்டிக் கொடுத்ததுல இருந்து இந்த வீட்டுக்கு எத்தனை முறை வந்தன்னு, இந்த வீட்டுக்கு நீ சீர்வரிசை செய்ய மட்டும் தா என்ன பாக்க வந்திருக்க” என்றாள் அழுகையுடன் .

அவனுக்கு” ஐயோ!” என்று இருந்தது .துரை அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.

இவள் தான் தினமும் சென்று வருகிறாளே இதற்கு முன்பு நேரம் கிடைக்கும்போது சென்று கொண்டிருந்தவள். இப்போது ஒரு வருட காலமாக தினமும் கூட சென்று கொண்டுதான் இருக்கிறாள் என்று யோசித்தான் துரை .

“நீ அங்க அடிக்கடி வர்றதால தான் உதயா நான் இங்கு வரதில்ல, பசங்களோட தான நீ வர, மச்சானும் அப்பப்ப வந்து உங்களை கூட்டிட்டு போக கொண்டு வந்து விடனு வந்துட்டு இருக்காருல்ல அதனாலதான் உதயா”

” நான் உங்களை தேடி வரது பாசத்துல ,ஆனா, நீ ஆகட்டும் அப்பா,அம்மா ஆகட்டும் யாருக்கும் என் மேல பாசம் இல்லல. அவங்களுக்கு மருமக , பேர பிள்ளைங்க வந்தவுடனே அவங்க தான் ஒசத்தியா போயிட்டாங்க. என்ன மொத்தமா எல்லாரும் மறந்துட்டீங்க .நான்தான் ஒவ்வொரு முறையும் உங்களை தேடி தேடி வரேன்”

என்ன பேசுவது என்று அவனுக்கு புரியவில்லை. தங்கை அடிக்கடி வருகிறாள் என்பதால்தான் அவள் கூறுவது போல் சீர் வரிசை செய்ய மட்டும்தான் வருகிறான். தந்தை கூட பிள்ளையை கூப்பிட வர போக இருக்கிறார். நானும் அவ்வப்போது பிள்ளைகளை விட வர போக தான் இருக்கிறேன். அப்பொழுது வீட்டிற்குள் வந்து அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு, தங்கை கையில் ஒருவாய் காபி குடித்துவிட்டு சென்று விடுவான்.

ரொம்ப நேரம் உட்கார்ந்து அவளுடன் உரையாடுவதில்லை தான். வீட்டிலும் கூட தங்கை வந்தாலும் ,பெரிதாக தாயுடன் பேசுகிறாள். வேண்டுமானால் சுதாவுடன் பேசுகிறாள்.  என்பதால் இவன் அவளுடன் பழையபடி உட்கார்ந்து பேசுவதில்லை என்று உணர்ந்தான்.

நேரம் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். திருமணம் ஆகி பிள்ளைகள் வந்தவுடன் குடும்பம் பெரிதாக ,திருமணம் ஆகி குடும்பஸ்தன் ஆகியவுடன், குடும்பப் பொறுப்பை மொத்தமாக தன் கையில் எடுத்தவுடன், வேலை வேலை என்று ஓடுகிறான்.  நேரம் கிடைக்கும் நேரத்தில் குழந்தைகள், தாய் ,தந்தை மனைவியுடன் நேரத்தை செலவழித்துக்கொண்டு இருந்தான் .

இதில் தங்கையை மறந்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அவள் வரும்போது அவளுக்கு பிடித்தமானவை வாங்கி கொடுத்தானே தவிர . அவளுக்கு என்ன தேவை என்பதை பார்த்தேனே தவிர, பத்து நிமிடம் சேர்ந்தது போல அவளுடன் உட்கார்ந்து பேசவில்லை என்பதை அப்பொழுதுதான் புத்திக்கு உரைத்தது. 

தன் மீதும் தவறு இருக்கிறது. இதற்கு முன்பு என்றால் தங்கையுடன் விளையாடுவது, அவளை வம்பு இழுப்பது என்று இருந்தவன் .இப்பொழுது அதை நிறுத்தி இருக்க, அது தான் முற்றிலுமாக தங்கைக்கு சுதாவின் மீது வெறுப்பை வர வைத்திருக்கிறது.

சுதா வந்த பிறகுதான் அனைத்தும் மாறி இருக்கிறது என்ற எண்ணத்தை அவளுக்கு உருவாக்கி இருக்கிறது .அதற்கு தானும் சரி ,தன் குடும்பத்தினரும் சரி ஒரு வகையில் காரணம் தான், சுதா கூறியது போல் என்பதை உணர்ந்தவன் . அவளிடம் மன்னிப்பு வேண்டி விட்டு,”  இனி அடிக்கடி வந்து பார்க்கிறேன். உன் கூடையும் நேரம் செலவு பண்றேன். நீயும் நம்ம வீட்டுக்கு வர போக இரு பசங்களோட, மச்சான் கூட்டிட்டு வாங்க “என்று எதிரில் இருந்த தன் மாப்பிள்ளையும் பார்த்து கூறியவன் .

அவளுடன் சிறிது நேரம் உட்கார்ந்து பழையபடி உரையாடி விட்டு, “ஒரு நாளைக்கு அம்மா அப்பாவின் கூட்டிட்டு வர . நம்ம வெளிய கூட போயிட்டு வரலாம் குடும்பமா” என்று கூறியவன் அவள் கையால் உண்டு விட்டு கிளம்பி இருந்தான்.

கையோடு சென்று தன் தாய் தந்தையை பார்த்து ,விபரத்தை முழுமையாக கூறியிருந்தான். அவர்களுக்கும் தங்களின் தவறுகள் புரிந்தது . உதயா முற்றிலுமாக இப்படி மாறியதற்கு தாங்களும் ஏதோ ஒரு வகையில் காரணம் தானே .அதுதானே  சுதா மீது அவளுக்கு முற்றிலுமாக வெறுப்பாக மாறி இருக்கிறது.

அந்த வெறுப்பு தானே அவளையும் அவ்வாறு பேச வைத்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் தாங்களும் காரணம் என்பதை உணர்ந்து ,”நாங்க ரெண்டு பேரும் உதயாவை பார்த்து பேசுறோம் பா “என்றார் நேசன்.

” அப்பா!” என்று அவன் கையை பிடிக்க.

” இல்லப்பா இத பத்தி எதுவும் பேச மாட்டோம் .பழையபடி அவ ஆசைப்பட்ட மாதிரி, அவ கூட நேரத்தை செலவு பண்றோம் .உன் அம்மா கூட அப்பப்ப அங்க வர போக இருக்கா,  சொன்னாலும்  சொல்லாட்டியும் நானும் பசங்களை விடப்போக மட்டும் தானே போறேன். மத்தபடி சீர்வரிசை செய்யறது தாண்டி தனியா போய் பார்க்கிறது இல்லை தானே ” என்றார்.

அதன் பிறகு, தான் சொல்ல வந்ததை முழுமையாக புரிந்து கொண்டார்கள் தாயும் ,தந்தையும் என்பதை உணர்ந்தவன் .

“சரி பா. நானும் வரேன். போய் பாத்துட்டு வரலாம்”  என்றான்.

“நீ வேலைய பாரு. நம்ம தனியா ஒரு நாள் போயிட்டு  , இருந்து பாத்துட்டு வர போல பார்க்கலாம் . காலையில போயிட்டு சாயங்காலம் வர மாதிரி பார்க்கலாம் “என்றார்.

“சரி “என்று தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தான் ஆதி.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page