திருக்குறள்
திருக்குறள்
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
காமத்துப்பால் அதிகாரம் புணர்ச்சி விதும்பல் குறள் எண் 1283
அத்யாயம் -12
லேலக்நிற குர்தியில் அட்டகாசமாக இருந்தவளை ரசிக்கும் மன நிலையில் அப்போது அவன் இல்லை. இருப்பினும் அடர் நீல சட்டையில் அம்சமாக இருந்தவனை அவள் ரசித்தாள். அவள் அப்பட்டமாக சைட் அடித்தது எல்லாம் அவனுக்கு பாவம் தெரியவில்லை போலும். காபி மஃகை எடுத்து லேசாக உறிய த் தொடங்கியவளிடம் முதலில் ஒரு சின்ன புன்னகையை சிந்தி விட்டு பிறகு ஆரம்பித்தான். தான் தன்னுடைய படிப்பு, பெற்றோர் விருப்பம் நிறைவேற்றாமல் அந்த பொறுப்பை தங்கையிடம் செலுத்தியது என்று எல்லாம் சொன்னான். இது எல்லாம் நமக்குத் தெரிந்தது தான். பிறகு வந்த காலங்களில் கீர்த்தி நன்றாகவேப் படித்தாள் . இயல்பாகவே பொறுப்பான பெண் என்பதால் பெற்றவர்களுக்கும் மனதில் ஆசை துளிர் விட ஆரம்பித்தது. மகன் டாக்டர் ஆக வேணும் என்று யோசித்தவர்கள் மகளைப் பற்றி எல்லாம் அத்தனை யோசிக்கவில்லை. இப்போது நான் சொல்லிக் கொண்டிருப்பது நீட் என்ற தேர்வு முறை வராத காலம். அதனால் ஒரே வீட்டில் இருவரை மருத்துவர் ஆக்க முடியுமா என்றால் அதற்கு பணம் வேண்டும் என்று சொன்னால் போதாது. விஷயம் தெரிந்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரிந்திருக்கும்.
பணம் என்ற ஒற்றைக் காரணத்தினால் மகனுக்கு அடுத்து மகளை ஏதாவது ஒரு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு அப்போது இருந்தது. அதற்கும் வரதட்சணை நகை சீர் திருமணம் என்று கணக்கு பார்த்தால் இருவருக்கும் செய்ய நிறையவே பணத் தேவை இருந்தது .
இப்போது மகன் விஷயம் வேறு மாதிரி ஆனாலும் மகள் மருத்துவம் படித்தால் கூட நல்லது தான் அதையும் ஏற்றுக் கொண்டார்கள்.
மருத்துவராக நுழைவுத் தேர்வு எழுத படித்தாள் . பிறகு அங்கே இங்கே பல இடங்களுக்கும் சென்று நுழைவுத் தேர்வு எழுத என்று சென்று வந்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் தேர்வு நடக்கும். அப்போது ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் தான் எழுத முடியும். இவ்வாறு ஒவ்வொரு இடமாக சென்று விட்டு வந்தார்கள். அப்படி ஒரு இடத்துக்குச் சென்ற பொது திடீரென கேள்வித் தாளை பார்த்து விட்டு ஓ வென்று கத்தி விட்டு கீழே விழுந்து விட்டாள்.
நல்ல மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்தவளை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்தார்கள். எல்லாருமே சொன்ன ஒரே விஷயம். எந்த பிரச்சனையும் இல்லை. சீக்கிரம் சரியாகிடும். . அதிர்ச்சி தான் காரணம். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. அவங்க இதுலேர்ந்து மீண்டு வந்துட முடியும்.
பல மனநல மருத்துவர்கள், கௌன்சிலிங் என்று பிறகு வந்த காலங்களில் ஓரளவு தேறி விட்டாள்.
பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதலாவதாக வந்தப் பெண் கல்லூரிக்கு கூட போகவில்லை. பிறகு வந்த காலங்களில் தனக்குள்ளேயே ஒடுங்கி இருதவளை மீட்டுக் கொண்டு வர படாத படு பட்டர்கள். அருகில் இருந்த ஒரு பெரிய கணினி வகுப்புக்கு அனுப்பி அவளுக்கு எது எல்லாம் வேண்டுமோ அத்தனையும் படிக்க வைத்தார்கள். பிறகு தபாலில் தான் படித்தாள்.
ரவி சொல்லிக் கொண்டிருக்க அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் வந்தனா
அதுக்கு அப்புறமும் அவள் வாழ்க்கைல கடவுள் ரொம்பா விளையாடிட்டாரு வந்தனா
பெரு மூச்சு விட்டு கண்களை இறுக்கி மூடிக் கொண்டான் ரவி .
அடுத்து இன்னும் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை பற்றி கூறப் போகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.
அவன் தன்னை தயார் செய்துக் கொள்ளட்டும். அமைதியாக இருந்தாள்.
‘பாக்க எவ்ளோ nநல்லா இருக்காரு. பாவம் மனசு முழுக்க எவ்ளோ வேதனை?’ஆறுதலாக அவன் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.
சில வருடங்களாக இருவரும் ஒன்றாகத் தான் வேலை செய்கிறார்கள். பார்த்தால் புன்னகை. தேவையானது வரை பேச்சு. அதுவும் வேலை விஷயமாக மட்டுமே. இப்போது அதைத் தாண்டி அவன் கைகள் அவள் கைகளுக்குள். அவள் உரிமையாக கையை எடுத்துக் கொள்ள அவனும் விரும்பியே கொடுத்தான். இப்போது அவனின் மனம் கை இரண்டுமே இப்போது அவள் வசம்.
“ஏற்கனவே என்னால எங்க அப்பாவுக்கு உடல் நலம் குறைய ஆரம்பிச்சுது. இந்த சம்பவத்துக்கு அப்புறம் அவருக்கு பஸ்ட் அட்டாக் வந்தது . பிறகு கீர்த்திக்கு கல்யாணம் நடந்தது. அதுல கொஞ்சம் உடம்பு தேறி., நல்லா தான் இருந்தாரு. பெரிய இடம். பாரின் மாப்பிள்ளை. எங்க அப்பாவோட ஹாஸ்பிடல் விழால பார்த்தங்களாம். அவங்களாவேதான் வந்து கேட்டாங்க. நாங்களும் சரின்னு சொல்லிட்டோம். அதே சமயம் நான் கீர்த்தி பத்தின எல்லா விஷயத்தையும் சொல்லிட்டோம். எதையும் நாங்க மறைக்க விரும்பல.
“அதுனால என்ன? எங்க பையன் டாக்டர் தான். எதுவும் பிரச்சனை இல்லை. கல்யாணத்தை மட்டும் எங்க ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி செய்திடுங்கன்னு” சொன்னாங்க . டீ நகர்ல ஜீ ஆர் டி ல தான் பண்ணோம். பையன நேர்ல பாக்கவே இல்ல. போட்டோ தான் . வீடியோ கால் பேசினோம். கீர்த்திக்கிட்ட கூட நல்லாத்தான் பேசினான். ஆனா எந்த … அதாவது புதுசா கல்யாணம் பணிக்க போறவங்க பேசக் கூடிய எந்த விஷயமும் அவகிட்ட அவன் பேசவே இல்லை. இவளுக்கும் அதைப் பத்தி எந்த விஷயமும் தெரியல. பின்னாடி கௌன்சிலிங் போன போது தான் இந்த விஷயம் எங்களுக்கு தெரிஞ்சுது.
கல்யாணம் ஆகி சில மாதங்கள் இவ இங்க தான் இருந்தா . அவங்களுக்குள்ள எந்த விஷயமும் நடக்கல. இவளும் எதுவும் வாய் திறக்கலை. அவன் அங்கே இருந்து இவளுக்கு விசா ப்ராசஸ் பண்ணவே இல்ல. நாங்க கேட்டபோதும் சரியா பதில் இல்ல. அப்புறம் அவனோட சோஷியல் மீடியா பக்கங்கள் அவனுக்கும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்கும் இருக்கற தொடர்பை காட்டியது. எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. அவங்க அம்மா அப்பா கிட்ட கேட்டதுக்கு அவங்களும் சரியாய் பதில் சொல்லல. அக்ஷுவாளா அவங்களுக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சுருக்கு. இருந்தாலும் வெளிநாட்டுப் பொண்ணு கூடாது. நம்ம ஊரு பொண்ணு தான் வேணுன்னு இவளை கட்டி இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல அவங்க சொன்ன காரணம்! இந்த மாதிரி பைத்தியம் புடிச்சு சரியானவளை யாரு கல்யாணம் கட்டிப்பா ?அவனுக்கு இவக் கூட ஒரே ரூமுல தனியா இருக்கவே பயமா இருக்கு. எப்படி இவளை மாதிரி ஒரு பைத்தியத்தை வச்சுக்கிட்டு அவன் வெளி நாட்டுல தனியா இருக்க முடியும்ன்னு கேட்டாங்க.”
சில நொடி மௌனம். மீண்டும் தொடர்ந்தான் .
“எல்லாம் தெரிந்து தானே கல்யாணம் செய்தீங்கன்னு நான் கேட்ட போது, இந்த மாதரி பொண்ணுன்னா வாய திறக்காம வீட்டோட வச்சுக்கறதுக்கு தான் உங்க வீட்டுப் பெண்ணை கல்யாணம் செய்தோம்னு சொன்னாங்க.”
கீர்த்தியை பைத்தியம்னு அவங்க சொன்ன வார்த்தை எங்க உசுர கொன்னுருச்சு . அவன்கிட்டே இருந்து கீர்த்தியை பிரிச்சு கொண்டு வர படாத பாடு பட்டோம்.
” ஒரு பக்கம் அப்பாவோட இறப்பு இன்னொரு பக்கம் கீர்த்தி எங்க.. அந்த சமயத்துல… “வார்த்தைகளை சொல்ல முடியாமல் தவித்தவனைப் பார்க்க கூட முடியவில்லை வந்தனாவுக்கு. இந்த நிமிடம் இவன் மனைவியாக இருந்திருக்கக்
கூடாதா என்ற எண்ணம் தான் அவளுக்கு வந்தது. காதலுக்காக இல்லை. உரிமையாக அவனை மடியில் சாய்த்து தலை கோதி “எது பத்தியும் நினைக்காதே” என்று சொல்லி இருந்திருக்கலாம். இப்போதும் அது சாத்தியம். வாயால் மட்டும் சொன்னாள் .
“சார் வேண்டாம் சார். எது பத்தியும் எனக்கு தெரிய வேணாம். வாங்க கிளம்பலாம்.”
இல்ல வந்தனா . நான் சொல்லி முடிச்சுடறேன். இல்லாட்டி எனக்கே தலை வெடித்து செத்துருவேனோன்னு பயமா இருக்கு. uங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா வந்தனா ? எங்க அப்பாவோட இறப்புக்கு அப்புறம் எங்க அம்மா எங்கிட்ட சுத்தமா பேசுவதே இல்ல . ஒரே ஒரு தடவை வாய் விட்டு அழுதுறுன்னு எத்தனை தடவை … ஒரு சொட்டு கூட அவங்க கண்ணீர் விடவே இல்ல . அப்பாவோட இறப்புக்கு நான் தான் காரணம்னு என்னோட மனசாட்சி குத்திகிட்டே இருக்கு தனா … தாங்க முடியல…அப்பதான் இறந்து போயிட்டாரு. கண்ணு எதிர்ல எங்க அம்மாஎனக்கு இருக்காங்க .இருந்தும் அவன் என்னை அவங்க கிட்ட கூட நெருங்க விட்டதில்லை . எங்க அம்மா என்னை வயத்துல சாய்ச்சுக்க மாட்டாங்களான்னு எனக்கு எத்தனை வருஷத்து ஏக்கம் தெரியுமா வந்தனா. நர்ஸு தானே. அவங்க. மருத்துவமனையில எவ்ளோ வேலை செய்வாங்க தெரியுமா? ராத்திரில கால் புடிக்கக் கூட என்னை அனுமதிச்சதில்லை.
இதுல எல்லாம் ஒரு பெரிய காமெடி இருக்குது தெரியுமா?
“அவன் சொல்லப் போகும் காமெடி கூட அவளுக்கு இப்போது திகிலாக இருந்தது. “சார் வேண்டாம் வாங்க போகலாம்.”
“இல்ல தானா . நீங்க கேக்கணும்.நீங்களே ஆச்சர்யப்படுவீங்க .
அவள் வேண்டாம் என்று சொன்னாலும் அவன் வேண்டுமென்றே சொன்னான்.
“என்னோட தங்கச்சிக்கு அமோக ஜாதகமாம். போற இடத்துல மகாராணியா இருப்பாளாம் எப்படி காமெடி நல்லா இருக்கா ?”
அவனே தொடர்ந்தான்
“நம்மளோட நம்பிக்கையை வைச்சு எப்படி எல்லாம் விளையாடறாங்க இல்ல? அன்னிக்கு நீங்க கூட செவ்வாய் தோஷம்னு சொன்ன போது எனக்கு சிரிப்பு தான் வந்தது.”
அவனின் ஏமாற்றம் இப்படி பேச வைக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது அந்த இடமே அமைதியாக இருந்தது.
அதுனால தான் தனா எனக்கு இந்த ஜாதகம் தோஷம் இதுல எல்லாம் நம்பிக்கையே இல்ல. ஏனோ உங்க அப்பாவை அந்த நிலமைல பாக்கவும்… எனக்கு எங்க அப்பா நினைவு வந்துடுச்சு. அதான் ஏதோ வேகத்தில உங்க அண்ணாகிட்ட அப்படி கேட்டுட்டேன்.
“ப்ளீஸ்! என்னை யாரும் தப்பா நினைக்காதீங்க. உங்க வீட்டு சந்தர்ப்பத்தை நான் உபயோகப் படுத்த நினைக்கல. ஏதோ அந்த நேரத்துல வாய் தவறி .. ப்ளீஸ் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லு வந்தனா. மத்தபடி என்னை ஏத்துக்கறதா வேண்டாமாங்கறது உங்க இஷ்டம்தான் . எதுவா இருநதாலும் நம்ம நட்பு அப்படியே இருக்கும் .
“யாருக்குடா உன்னோட நட்பு வேணும்? நீதாண்டா எனக்கு வேணும் . உங்க அம்மா என்னடா உன்ன நெஞ்சுல வயித்துலத் தாங்க நான் இருக்கேண்டி செல்லம் ‘
துடிக்கும் இதயம்………..
