விரகதாபம் தீருமோ விதுரா? 35

ரேணு சொன்னதை கேட்கவும் மனிஷா அதிர்ச்சியானாள். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி நாளைக்கு காலையில பத்து மணிக்குள்ள பணத்தை ரெடி பண்ணனும்னு நீதான சொன்ன அதுக்குள்ள நைட் பத்து மணிக்குள்ள பணத்தை ரெடி பண்ண சொன்னா என்ன அர்த்தம்,

அவ்வளவு பணத்தை எப்படி ரெடி பண்ண முடியும்? ” என்று மனிஷா கேட்க, “அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு தேவை பணம், அதுவும் நான் கேட்ட நேரத்துல என் கைக்கு வரணும் அவ்வளவுதான்!” என்று எதிர்ப்புறம் குரல் வந்தது.

“ஏய் கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசு, இப்பவே மணி எட்டு இன்னும் ரெண்டு மணி நேரத்துல எப்படி பத்து லட்ச ரூபாய் பணத்தை ரெடி பண்ண முடியும்” என்று கேட்க,

” நீ தான் பெரிய பெரிய பணக்கார முதலைகளை வளைச்சு போட்டு இருக்கியே, அவங்க யாருக்காவது போன் பண்ணி எனக்கு ஒரு பத்து லட்ச ரூபா குடுங்கன்னு கேட்டா அவங்க எதையும் யோசிக்காம உடனே கொடுக்க போறாங்க, நீ என்ன உழைச்சா கொடுக்க போற? ” என்று நக்கலாக ரேணு கேட்டாள்.

” இங்க பாரு நீ ரொம்ப ஓவரா பேசுற, நீ முதல்ல கேட்ட மாதிரி நாளைக்கு பத்து மணிக்கு நீ சொன்ன இடத்துக்கு பணத்தோட வர்றேன்.இப்ப பத்து மணிக்குள்ள என்னால பணத்தை ரெடி பண்ணி கொடுக்க முடியாது என்று மனச கோபமாக சொல்ல, ” அப்படியா! இப்ப  என்ன பண்றேன்னு பாரு!” என்று சொல்லிவிட்டு அழைப்பு அணைக்கப்பட்டது.

திடீரென்று அழைப்பு அணைக்கப்படும் என்று எதிர்பார்க்காத மனிஷா திகைத்தாலும், ” ஏதோ ஒரு ஃபிராடு, சும்மா நம்ம கிட்ட விளையாடுது! என்னதான் பண்ணுதுன்னு பாத்துக்கலாம்” என்று அலட்சியமாய் நினைத்துக் கொண்டிருக்க, மனிஷாவின் அறை தட்டும் சத்தம் கேட்டது. 

மனிஷா யாரு இந்த நேரத்துல என்று நினைத்துக் கொண்டே கதவை திறக்க அங்கு விதுரன் நின்று கொண்டிருந்தான்.

“என்னாச்சு விதுரா என்னோட ரூம் பக்கம் நீ இன்னும் தூங்கலையா?” என்று மனிஷா கேட்க,” உனக்கு சதீஷ்னு யாரையாவது தெரியுமா? ” என்று கேட்டான் விதுரன்.

” சதீஷா? அது யாரு அப்படி யாரும் எனக்கு தெரியாதே? ” என்று மனிஷா கேட்க, ” இப்போ எனக்கு ஒரு போன் கால் வந்துச்சு, அதான் அட்டென்ட் பண்ணி பேச யாரோ சதீஷ்ன்கிறவன் கால் பண்ணி இருந்தான். உன்னைய பத்தி உன் கேரக்டரை பத்தியும் தப்பு தப்பா சொன்னான். நீ யாரு மனிஷாவை பத்தி எனக்கு தெரியும் அவ அப்படிப்பட்டவை இல்லைன்னு நான் சொல்லவும், ” அப்போ வெயிட் பண்ணு அவளை பத்தின எல்லா ஆதாரங்களையும் உனக்கு அனுப்புறேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான், அதான் என்கிட்ட பேசினவன் உனக்கு தெரிஞ்சவனா இருந்தால் அவனோட மோட்டிவ் சரியில்ல, அதனால அவன்கிட்ட இருந்து கொஞ்சம் கேர்ஃபுல்லா இருன்னு சொல்றதுக்காக வந்தேன்!” என்று விதுரன் சொல்ல ஆடிப் போனாள் மனிஷா.

“மனிஷா நான் பேசிக்கிட்டே இருக்கேன், நீ என்ன அமைதியா இருக்க?” என்று விதுரன்  கேட்க, ” அது யாருன்னு தெரியல விதுரா, ஆனாலும் அவங்க சொன்னதை கேட்டுட்டு  நீ எதுவும் தப்பா நினைக்காம என்கிட்ட வந்து சொன்ன பாத்தியா உன்னை மாதிரி ஒரு லவ்வர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்!” என்று சொல்லி அவன் மார்பில் சாய்ந்தாள்.

விதுரன் அவளிடம் இருந்து சற்று நகர்ந்து,” எனக்கு உன்னைய பத்தி தெரியும், இருந்தாலும் நீ யாரையாவது நல்லவங்கன்னு நம்பி அவங்க உன் கூடவே இருந்து உனக்கு பின்னாடி போ, உன்னைய பத்தி தப்பா பேசிகிட்டு நம்பிக்கை துரோகம்  பண்ணிக்கிட்டு இருக்கலாம், அதான் அவங்க கிட்ட நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருன்னு சொல்றதுக்காக வந்தேன், சரி பார்த்து இருந்துக்க நான் போய் தூங்குறேன்!” என்று சொல்லிவிட்டு விதுரன் மாடி ஏறி தன்னரைக்குச் சென்றான்.

இங்கு மனிஷா விதுரன் அவ்விடத்தை விட்டு நகரவும் கதவை வேகமாக பூட்டிவிட்டு தன்னுடைய அலைபேசியை எடுத்து அந்த பிளாக் மெயிலருக்கு அழைப்பை விடுத்தாள். இரண்டு மூன்று முறை மனிஷா அழைப்பை விடுத்த அந்தப் பக்கம் ஏற்கப்படவே இல்லை.

அச்சச்சோ நம்ம கோவத்துல பேசினத வச்சுட்டு  விதுரனுக்கு எனக்கு போன் பண்ணி இருக்கான். ஆதாரத்த வேற அனுப்புறேன்னு விதுரன் கிட்ட சொன்னதா விதுரன் சொன்னானே, போச்சு எல்லாம் போச்சு, என் கனவு என் ஆசை எல்லாம் முடிஞ்சு போச்சு, அதை மட்டும் ஆதாரத்தை விதுரனுக்கு அனுப்புனால் கண்டிப்பா எனக்கு ஜெயில் தான். இதிலிருந்து எப்படி தப்பிக்கிறது. நான் ஏன் தான் அவன்கிட்ட அப்படி பேசினேனோ, என்றும் தன்னை தானே நொந்து கொண்டேன் மீண்டும் அந்த பிளாக்மெயிலருக்கு அழைப்பை விடுத்தாள்.

ரேணுவின் அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டே இருக்க ரேணுவோ சிரித்துக் கொண்டு அழைப்பை ஏற்கவே இல்லை.

“அம்மா பாத்தியா எப்படி தெனாவட்டா பேசினா? அண்ணனுக்கு போன போடவும்  பயந்துகிட்டு எத்தனை நேரம் போன் பண்றான்னு பாரு,  கொஞ்ச நேரம் பதறி சாகட்டும், அதுக்கப்புறம் எடுத்து பேசுறேன்!” என்று கூறினாள் ரேணு.

” நம்ம காலையில இங்கே இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி அந்த மனிஷாவை வீட்டை விட்டு துரத்தி இருக்கணும், அப்பதான் நம்ம வீட்டை விட்டு போறதுக்கு பிரயோஜனம் இருக்கும். ஒருவேளை மனிஷாவை வீட்டை விட்டு அனுப்ப முடியலைன்னா, நம்மை இல்லாத அந்த நேரத்த பயன்படுத்தி மனிஷா அவ நெனச்சத சாதித்துக்கொள்ளவா? அது மட்டும் நடக்கவே கூடாது!” என்று அம்பிகா சொல்ல,

“அம்மா அதுக்காகத்தானே இப்படி பிளான் பண்ணி இருக்கோம், இப்ப பாரு நான் பண்ண போற போன்ல அவ பெட்டி படிக்கையில துணிய எல்லாம்  எடுத்து வச்சுட்டு யார்கிட்டயும் சொல்லாம வீட்டை விட்டு ஓடுவா பாரு!” என்று சொல்லிவிட்டு மனிஷாவிற்கு அழைப்பை விடுத்தாள் ரேணு.

அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மனிஷாவோ வேகமாக அழைப்பை எடுத்து, ” ஏய் நான் விளையாட்டுக்கு தான் பேசினேன், என்னைய மன்னிச்சிரு நீ எதுக்கு விதுரனுக்கு போன் பண்ணுன? “என்று பவ்யமாக கேட்டாள் மனிஷா.

மனிஷா பவ்யமாக பேசுவதை கேட்ட அம்பிகாவும் ரேணுவும் வாயை பொத்திக் கொண்டே சிரித்தனர்.

“சார் லைன்ல இருக்கீங்களா?”என்று மனிஷா அடுத்த வார்த்தையை மரியாதையாக பேச, ” இருக்கேன் இருக்கேன்!” என்று கூறினாள் ரேணு.

” சாரி சார் என்னை மன்னிச்சிடுங்க உங்ககிட்ட அப்படி பேசினது தப்புதான், நீங்க விதுரன் கிட்ட சொன்ன மாதிரி எந்த எவிடென்ஸையும் அனுப்பிராதீங்க! நீங்க கேட்ட மாதிரி பத்து மணிக்குள்ள பணத்தை என் தலையை அடமானம் வச்சாவது உங்களுக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்துடுவேன்!” என்று மனிஷா சொல்ல  அம்பிகாவும் ரேணுவும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

‘இப்ப என்ன பண்றது’ என்று அம்பிகா ரேணுவிடம் சைகையாக கேட்க, ‘பொறுமையாய் இரு’ என்பதை போல் ரேணு கையசைத்தாள்.

“பணமா உன் பணம் யாருக்கு வேணும், நான் சொன்னத செய்யத்தான் போறேன்!” என்று ரேணு கோபமாக கூற,

“ப்ளீஸ் ப்ளீஸ் அப்படி எதுவும் பண்ணிராத, நீ கேட்டதை விட  அதிகமா பத்து லட்சம் கூட தரேன் அந்த மாதிரி எதுவும் பண்ணிராத?” என்று மனிஷா கெஞ்சினாள்.

“எனக்கு பணம் எல்லாம் வேண்டாம், அந்த விதுரன் கிட்ட உன்னை பத்தி சொல்ல என்கிட்ட உன்னைய பத்தி பெருமையா பேசுறான். ஃபிராடு உன்னைய பத்தி என்கிட்டையே பெருமையா பேசினா நான் கேட்டுகிட்டு சும்மா இருக்க முடியுமா? அதனால  நீ ஒன்னு பண்ணு, இப்ப விதுரன் வீட்டிலிருந்து உன்னோட துணி எல்லாத்தையும் எடுத்துட்டு சொல்லாம கொள்ளாம ஓடிப்போய்  எங்கையாவது வாழு!” என்று ரேணு சொல்ல அதிர்ந்து போனாள் மனிஷா.

” ஏய் என்ன சொல்ற, விதுரன் கூட இருக்கணும்னு தான் நான் இவ்வளத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கேன்!” என்று மனிஷா சொல்ல,

” நடிக்காத நீ விதுரன் மாதிரி இன்னும் எத்தனை பேர் கூட தொடர்புல இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும், அவன் என்னமோ  நீ பத்தினி  மாதிரி  எங்கிட்டயே சொல்றான், அதனால 

விதுரா நான் நல்லவ இல்ல உன்னோட பணத்துக்காக தான் உன்னைய காதலிச்சேன், இப்ப உன்னை விட பெரிய பணக்காரன் எனக்கு கிடைச்சுட்டான், இப்ப நீ எனக்கு தேவையில்லைனு  உன் கைப்பட ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு அங்க இருந்து ஓடிட்டேன்னு வச்சுக்க அவன் உன் மேல வச்சிருக்கற நம்பிக்கை பொய்யாயிரும், அதுதான் எனக்கு வேணும்!” என்று ரேணு கூறினாள்.

” பணமா அது எவ்வளவுனாலும் கேளு, நீ சொல்றது மட்டும் செய்ய முடியாது. நான் விதுரன் கூட தான் இருப்பேன்!” என்று மனிஷா சொல்ல,

” சரி நீயா எழுதி வச்சுட்டு  போனால்  கூட   கொஞ்ச நாள் கழிச்சு விதுரன் கூட சேர்ற பாக்கியம் உனக்கு கிடைச்சிருக்கும். ஆனா நீ போக மாட்டேன்னு சொல்லி என் ஈகோவ டச் பண்ணிட்ட! இப்ப நான் என்ன பண்ணப் போறேன் உன்னைய பத்தின எல்லா ஆதாரங்களையும் விதுரனுக்கும் சந்துருவுக்கும் அனுப்பி வைக்கப் போறேன்! அவங்க ரெண்டு பேரும் அதை பார்த்துட்டு உன்னைய கழுத்த புடிச்சு வெளியில தள்ள போறாங்க, அதோட கடைசி வர உன் கனவு எதுவும் நடக்காமல் போகப் போகுது, ஏன் நீ பழையபடி வெளியில சுதந்திரமா நடமாட முடியுமான்கிறதே கேள்விக்குறிதான்! சந்துரு கூட உன்னைய விட்ருவான் ஆனால் உண்மை தெரிஞ்சால் விதுரன் உன்னைய ஜெயிலுக்குள்ள அனுப்பிருவான்!” என்று சொல்லி சிரிக்க அதிர்ந்து போனாள் மனிஷா.

“சரி உன்ன பத்தின எவிடென்ஸ எல்லாம் நான் அனுப்புறேன் போன வையி!’ என்று ரேணு சொல்ல, யோசித்த மனிஷா, ” சரி சரி  நீ எதுவும் பண்ணிராத! நீ சொன்ன மாதிரியே நான் எழுதி வச்சுட்டு இந்த வீட்டை விட்டு யார்கிட்டயும் சொல்லாமல் போயிடுறேன்!” என்று மனிஷா கூறினாள்.

” இப்போ இப்படி சொல்லிட்டு, ஒரு நாள் ரெண்டு நாள்ல திரும்பவும் விதுரனோட வீட்டுக்கு வரலாம், விதுரன் கிட்ட பேசலாமுனு   நினைக்காத! நீ என்னோட கண்காணிப்புல தான் இருக்க. நீ விதுரன சந்திக்க ஏதாவது முயற்சி பண்ணுனா அது எனக்கு தெரிஞ்சுரும், நீ ஏதாவது திட்டம் போட்ட அடுத்த நிமிஷமே உன்னைய பத்தின எல்லா ஆதாரங்களும் விதுரன் கைக்கு போயிரும்!” என்ற எச்சரிக்க,

” ப்ளீஸ் சார் நான் அப்படி எதுவும் பண்ண மாட்டேன், கொஞ்ச நாளைக்கு நான் எங்க சொந்த ஊருக்கு போயிடுறேன், உங்க கோபம் குறையவும் நம்ம பழையபடி டீல் பேசிகிறாளாம், அதுக்கிடையில்  நீங்களும் எதுவும் பண்ணாதீங்க, நானும் எதுவும் பண்ண மாட்டேன்!” என்று மனிஷா கூறினாள்.

“இந்த டில் எனக்கும் ஓகே, சரி இப்பவே உன்னைய பத்தி தப்பா உன் கை பட நீயே எழுதி வச்சிட்டு  வீட்டை விட்டு கிளம்பி போ! நீ யூஸ் பண்ற போன் நம்பர் எல்லாத்தையும் கழட்டி   துர வீசிட்டு போ!” எனக் கூறினாள் ரேணு.

“சரி சார்  இப்பவே நீங்க சொன்ன மாதிரி லெட்டர் எழுதி வச்சுட்டு நான் இங்கே இருந்து கிளம்புறேன். அதே மாதிரி நீங்களும்  என்கிட்ட சொன்ன மாதிரி என்னைய பத்தின எந்த எவிடென்சையும் விதுரனுக்கும் சந்துருவுக்கும் அனுப்பி விடாதீங்க!”என்று சொல்ல, ” நீ என் நம்பிக்கையை காப்பாற்றினால் நானும் உன்னோட நம்பிக்கையை காப்பாற்றுவேன், ஒருவேளை நீ காப்பாத்தலைன்னு எனக்கு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே உன்னைய பத்தின எல்லா எவிடென்ஸும் அவங்க ரெண்டு பேருக்கும் போய் சேந்துரும்!” என்று எச்சரிக்க ” அப்படிலாம் எதுவும் செஞ்சுறாதீங்க, இப்பவே நான் இங்கே இருந்து கிளம்புறேன், உங்க கோபம் தீரவும் நம்ம பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்!” என்று சொல்லி

அழைப்பை அணைத்துவிட்டு, லெட்டர் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய துணி மணிகளை எடுத்து சூட்கேசில் வைத்து விட்டு யாருக்கும் தெரியாமல் விதுரனின் வீட்டை விட்டு கிளம்பி வெளியே சென்றாள் மனிஷா.

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page