விரகதாபம் தீருமோ விதுரா? 37

மனிஷா எழுதி வைத்த கடிதத்தை படித்தவன் கோபத்தோடு வெளியே வந்து அங்கு நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவின் கன்னத்தில் அறைந்தான்.

அடித்த அடியில் பிரதிக்ஷாவின்  கண்கள் கலங்கியது. ஏன் அடிக்கிறான் என்று தெரியாமல் பிரதிக்ஷாவும் அதிர்ந்து பார்க்க,

“உன்னால தாண்டி எல்லாம், நீ என்னைக்கு என் வாழ்க்கைக்குள்ள வந்தியோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு. உன்னால தான் சரஸ்வதி அம்மா என்கிட்ட கோபப்பட்டு போனாங்க, காலையில அம்பிகா அம்மாவும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க, இப்ப நான் ரெண்டு வருஷமா உயிருக்கு உயிரா காதலிச்ச மனிஷா, நீயும் நானும் இந்த வீட்டில புருஷன் பொண்டாட்டியா வலம் வர்றதை பார்த்து  மனசு கஷ்டப்பட்டு கொஞ்ச நாளைக்கு  எங்கையாவது நிம்மதியா இருக்க போறேன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்கா? இதுக்கெல்லாம் காரணம் யாரு? நீ ஒருத்தி தான், இந்த லெட்டர படிக்கும்போதே தெரியுது இந்த லெட்டர் எழுதும்போது அவ எவ்வளவு கஷ்டப்பட்டு அழுதுகிட்டே எழுதி இருப்பான்னு, 

கல்யாணம் முடிஞ்ச கையோட  சனியன் உன்ன தல முழுகி விட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்னு நெனச்சா, அதெல்லாம் நடக்காம உன்கூட ஆறு மாசம் குப்ப கொட்டணும்னு வேற சொல்லிட்டாங்க, வேற வழி இல்லாம நானும் வாழ்ந்து கிட்டு இருக்கேன், மனிஷா வீட்டை விட்டு போறதுக்கு காரணம் நீதான்னு ஏன் உள் மனசு சொல்லுது, நீ தான் ஏதோ சொல்லி அவளை வீட்டை விட்டு விரட்டி விட்டு இருக்க? 

அவ வீட்டை விட்டு போற அளவுக்கு என்னமோ பண்ணி இருக்க, அவ எங்க இருக்கான்னு தெரியல, முதல்ல அவளை தேடி கண்டுபிடிச்சுக்கிறேன். அப்புறம் இருக்குடி உனக்கு” என்று கோபமாக பேசிக் கொண்டே  தன்னுடைய கார் சாவியை எடுத்துக்கொண்டு  மனிஷாவை தேடி புறப்பட்டான் விதுரன்.

‘நான் என்ன பண்ணினேன். மனிஷா இந்த வீட்டை விட்டுப் போனதுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவதான் விதுரன் கிட்ட என்னைய மாட்டி கொடுக்கணும்னு ஏதோ பிளான் பண்ணிட்டு போயிருக்கா?’என்று யோசித்தவள் தன் கன்னத்தை தடவினாள். அதில் விதுரன் அடித்த இடத்தில் எரிச்சல் தர  ஆயில்மெண்டை எடுத்து போடலாம் என்று தன்னுடைய அறைக்கு சென்றாள்  பிரதிக்ஷா.

அறைக்கு சென்று ஆயில்மெண்டை எடுத்து கன்னங்களில் போட்டுக் கொண்டிருக்க அவளின் அலைபேசி அடிக்கும் சத்தம் கேட்டது.

யார் என்று பார்க்க அவளின் தோழி ரம்யா தான் அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்றவள் தன் குரலை செருமி  கொண்டு,  “ஹலோ ரம்யா எப்படி இருக்க, இப்பதான் என்னோட ஞாபகம் வந்துச்சா? ” என்று கேட்டாள் பிரதிக்ஷா.

“ஏண்டி நான் கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் நீ கேட்டுக்கிட்டு இருக்க?” என்று ரம்யா கேட்க, சிரிப்பு வந்தது பிரதிக்ஷாவிற்கு…!

நான் கேட்டா என்ன நீ கேட்டா என்ன? பதில் சொல்லு!” என்று  கூறினாள்  பிரதிக்ஷா.

“நான் நல்லா இருக்கேன் டி. நீ எப்படி இருக்க?”என்று ரம்யா கேட்க, நான் “நல்லா இருக்கேன் டி” என்று கூறினாள் பிரதிக்ஷா.

“சூப்பர் டி,  உன் கனவு கண்ணே அதான் விதுரன் அண்ணன் எப்படி இருக்காரு?” என்று ரம்யா நக்கலாக கேட்க,

“உன் பிரண்ட கல்யாணம் பண்ணி இருக்காருல அப்ப ரொம்ப நல்லா தானே இருப்பாரு” என்று பிரதிக்ஷாவும் பதில் கூறினார்.

“ஏய் நெஜமாவா சூப்பர் டி, நான் ஊர்ல இருந்து வந்ததுல இருந்து உன் ஞாபகமா தான் இருந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க,  இப்ப நீ சொன்னதை கேட்கவும் ரொம்ப சந்தோசமா இருக்கு!” என்று ரம்யா சொல்ல,

“சும்மா இருடி நீ வேற இப்பதான் அடி வாங்கி ஆயில்மெண்டை தடவிக்கிட்டு இருக்கேன்!”என்று சலித்துக் கொண்டாள் பிரதிக்ஷா.

என்னாச்சு என்று ரம்யா கேட்க இதுவரை நடந்த அத்தனையும் சொல்லி முடித்தாள் பிரதிக்ஷா.

“என்னடி இவ்வளவு நடந்து இருக்கு இதை எதையும் எனக்கு சொல்லவே இல்லை?” என்று ரம்யா கேட்க,

“இங்க நடக்கிறது எல்லாம் பார்த்து நானே சங்கடப்பட்டு கிட்டு இருக்கேன்.இத எதுக்கு சொல்லி உங்க எல்லாரையும் சங்கடப்படுத்தணும்னு சொல்லல!” என்று கூறினாள் பிரதிக்ஷா.

“அதுக்காக எதையும் சொல்லாம இருப்பியா? இங்க பாரு பிரதிக்ஷா, நீ சொல்றத எல்லாம் பார்க்கும்போது விதுரனோட மனசு மாறும்னு எனக்கு தோணல, நீ தேவையில்லாத எதிர்பார்ப்ப உருவாக்குகிறாத! உன்னோட கேரியர் மேல கான்சென்ட்ரேஷன் பண்ணு!” என்று ரம்யா சொல்ல,

“கொஞ்ச நாளாவே எனக்கும் விதுரன் என்னைய ஏத்துக்க மாட்டாரோனு சந்தேகம் வந்துகிட்டு இருக்கு, ஆனாலும் அவரை விட்டு வர மனசு இல்ல. ஏன்னா அவர  காதலிக்கிறேன்” என்று பிரதிக்ஷா சொல்ல,

“எதிர்பார்க்காம குடுக்கிறது தான் உண்மையான அன்புனு நிறைய பேர் சொல்லுவாங்க.ஆனா பிராக்டிகலா யோசிச்சு பாரு, கல்யாணம்கிற கமிட்மெண்டுக்குள்ள ரெண்டு பேரும் அன்பு செய்யும்போது தான் அவங்களோட வாழ்க்கை நல்லா இருக்கும்! அத விட்டுட்டு ஒருத்தவங்களே அன்பு செஞ்சாலும் அந்தக் கல்யாணமோ காதலோ, எதுவாயிருந்தாலும் அதோட அஸ்திவாரம் ஸ்ட்ராங்கா இருக்காது!” என்று ரம்யா கூறினாள்.

“இப்ப கூட உனக்கு போன் பண்ணதுக்கு காரணம், நீ யார்கிட்ட ஜுனியரா சேர்ந்து வேலை பார்க்கணும்னு நினைச்சியோ அவர்கிட்ட வேலை பாக்குறதுக்கு உனக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு, நேத்து தான் அவர  தெரிஞ்சவங்களோட பிசினஸ் மீட்டிங்ல பாக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சுச்சு, அவர்கிட்ட உன்னை பத்தி சொன்னேன். அவரும் உன்னைய பத்தி எல்லா டீடைல்ஸும் கேட்டாரு, நானு சொன்னேன்.உடனே உன்ன அவர்கிட்ட ஜூனியரா சேர்ந்துக்கிற சொல்லிட்டாங்க, இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது, என்னமோ உன் அதிஷ்டம் கிடைச்சிருக்கு அதனால சீக்கிரமா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு  அவர்கிட்ட ஜூனியரா சேர்ந்துரு. எனக்கு தெரிஞ்சு நீ எப்படியும் டெல்லியில் தான் ஸ்டே பண்ண வேண்டியது இருக்கும்!” என்று கூறினாள் ரம்யா.

“ஹேய்  உண்மையாவா?நான் நினைச்சு கூட பாக்கல,அவர்கிட்ட எத்தனை நேரம் ஜூனியரா சேர முயற்சி பண்ணி முடியாமையே போயிருச்சு, இந்த தடவை விடமாட்டேன் கட்டாயம் நான் டெல்லி கிளம்பிடுவேன்… “என்று ஆர்வமாக பிரதிக்ஷா கூறினாள்.

“சூப்பர் டி, முதல்ல உன்னோட  கேரியர  பாரு உன் கல்யாண பிரச்சனையை பின்னாடி பாத்துக்கலாம் , ஒருவேளை நீ பிரிஞ்சு இருக்கிற இந்த காலகட்டத்தில் விதுரன் உன்னைய தேடி வந்தா ஏத்துக்க! இல்லையா , இதுதான் உன் வாழ்க்கையினு வாழு! யோசிச்சு முடிவெடு , எல்லார்கிட்டயும் பேசிட்டு எனக்கு பதில் சொல்லு,  நான் சார் கிட்ட பேசுறேன்!” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள்   ரம்யா.

பிரதிக்ஷாவின் வாழ்க்கையில் அவள் முக்கியமானதாக நினைக்கும் விஷயம்  இரண்டு. ஒன்று விதுரனின் காதல் மற்றொன்று, ஹரிஷ் சால்வே உடன் ஜூனியராக பணியாற்ற வேண்டும் என்பதே அவளின் மிகப்பெரிய கனவு. இன்று அவரிடம் ஜூனியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்க  மிகவும் சந்தோஷம் அடைந்தாள் பிரதிக்ஷா.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் விதுரன் கூட இருந்து அவனை தொந்தரவு செய்யாமல் சிறிது காலம் தன்னுடைய லட்சியத்துக்காக உழைக்கலாம் என்று முடிவெடுத்து விட்டாள்.

இங்கு மனிஷாவை தேடிச் சென்றவனோ, அவர்கள் இருவருக்கும் பொதுவான நபர்கள் அத்தனை பேரிடமும் கேட்டு விசாரித்தான். ஆனால் மனிஷாவை யாரும் பார்க்கவில்லை என்றும் அவளிடம் பேசியே வெகு நாளாயிற்று என்றும் கூறவும் உடைந்துவிட்டான்.

ரஞ்சித்தின் ஞாபகம் வர அவனுக்கு அழைப்பை விடுத்து,” ஹாய் ரஞ்சித் எப்படி இருக்க, பிசினஸ் எல்லாம் எப்படி போகுது” என்று கேட்டான் விதுரன்.

“இப்ப வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல அப்பா கூட இருந்து எல்லாத்தையும் சொல்லி தராரு! பாக்கலாம்” என்று ரஞ்சித் சொல்ல,

“சரி பிசினஸ் பத்தி ஏதாவது தெரியலைனா என்கிட்ட கேளு நான் சொல்றேன்” என்று கூறினான் விதுரன்.

இங்கு முகத்தை அலட்சியமாய் வைத்துக் கொண்டு ரஞ்சித், ” கண்டிப்பா உன்கிட்ட கேட்காம யார்கிட்ட கேட்க போறேன்” என்று கூற,

“மனிஷா அங்க வந்தாளா? ” என்று தயங்கிக் கொண்டே கேட்டான் விதுரன்.

“மனிஷா வா,  அவ அங்க தான இருந்தா?” என்று  ரஞ்சித் பதிலுக்கு கேட்க, ” இங்கே தான் இருந்தா திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்கா, என்று நடந்தது அனைத்தையும் சொல்ல அதிர்ந்து போனான் ரஞ்சித்.

“எல்லாம் அந்தப் பிரதிக்ஷாவால வந்துச்சு, யாரையும் நிம்மதியா வாழ விட மாட்டா போல” என்று ரஞ்சித்தும் தன் பங்குக்கு பிரதிக்ஷாவை குறை சொல்ல பிரதிக்ஷாவின் மேல் கோபம் அதிகமானது விதுரனுக்கு..!

 “சரி நீயும் தேடு நானும் தேடுறேன், எங்க இருக்கான்னு கண்டுபிடிப்போம்” என்று ரஞ்சித் சொல்லி விட்டு அழைப்பை அணைத்தான்.

‘ லூசு, எங்க போச்சு! நான் செய்ய வேண்டிய வேலையை எனக்கு பதிலா அங்க இருந்து செய்வானு பார்த்தா எதையோ எழுதி வச்சுட்டு ஓடிட்டான்னு விதுரன் சொல்றான், ஒன்னும் புரியல” என்று நினைத்துக் கொண்டே மனிஷாவின் அலைபேசிக்கு அழைப்பை மேற்கொள்ள அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

ரஞ்சித்திடம் பேசிவிட்டு அலைபேசியை அணைத்துவிட்டு காரை எடுக்க தூரத்தில் மணிஷாவை போல் ஒரு பெண் செல்வதை பார்த்த விதுரன் வேகமாக காரில் இருந்து இறங்கி  ஓட, எதிர்பாராத விதமாக அங்கிருந்து வந்த  பைக்கில் மோதி  கீழே விழுந்தான்.   விதுரனின் இரத்தம் அந்த சாலைகளில் பரவியது. அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஓடி வந்து  விதுரனை தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்ததை கேள்விப்பட்ட போலீஸ்காரர்கள் அந்த இடத்திற்கு வந்து விதுரனை பற்றிய அனைத்து டீடைல்சையும்  கலெக்ட் செய்து, விதுரனின் வீட்டிற்கு  தகவல் கொடுக்க,

விதுரன் ஆக்சிடென்டான செய்தி கேட்டு   அதிர்ச்சியில் கதறி அழுது கொண்டே போலீஸ்காரர்கள் சொன்ன மருத்துவமனை நோக்கி விரைந்து வந்தாள் பிரதிக்ஷா.

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page