மயக்கம் தயக்கம் 22

மருத்துவருடன் உள்ளே நுழையும் பொழுது சந்தனா கண்டது விஜயராகவன் மருந்துகளின் உபயத்தில் தூங்கி கொண்டிருப்பதைத்தான். ஒருவகையில் சந்தனாவுக்கு இது பெரிய ஷாக் என்றுதான் சொல்ல வேண்டும்.இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு பிரபல ஆங்கில வார இதழில் அவனது பேட்டி வந்திருந்தது. அதில் அவர்களது நிறுவனத்தின் அடுத்த அரை ஆண்டுக்கான தொழில் திட்டங்களையும்,முன்னெடுப்புகளை பற்றியும் விவரமாக சொல்லியிலிருந்தான். பங்குச்சந்தையில் அவர்கள் நிறுவன பங்குகளில் முதலீடுகள் செய்வது மூலமாக கிடைக்கும் இலாபம் குறித்தும் பேசியிருந்தான்.

சந்தனா கூட அவர்கள் வெளியிட இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இவ்வாறான நிலையில் நிறுவனத்தின் சிஇஓ வை காண்பது என்பது கற்பனையிலும் வந்திராத ஒன்று.

அன்று காலையில் தான் மயக்கம் தெளிந்து இருந்திருக்கிறது. மயக்கத்திலிருந்து வந்தவன் வலியில் துடித்து கதறியிருக்கிறான். மருத்துவரின் பரிந்துரையில் அவனுக்கு தூக்க மருந்து செலுத்தப்பட்டு தூங்க வைக்கப் பட்டிருக்கிறான். கொஞ்சமாவது காயங்கள் ஆறினால்தானே வலி குறையும். அதற்க்கு இன்னமும் ஒரு வாரம் ஆகும் என்றார் மருத்துவர்.

 

விதவிதமான நோயாளிகளையும்,அவர்களது உடல் உபாதைகளையும் கண்டுகொண்டிருக்கும் சந்தனாவுக்கு  அவளையும் அறியாது பெருமூச்சு எழுந்தது. மருத்துவர் சொன்னவற்றை குறித்து அங்கே ஐ சி யு பிரிவில் இருக்கும் நோயாளியின் கோப்பில் வைத்தவள் மருத்துவருடனேயே கிளம்பிவிட்டாள்.

மாலையில் வீடு திரும்புவதற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை சென்று விஜயராகவனை காண்பதற்க்கென்று சென்றாள். அங்கே காரிடாரில் அவனது பெற்றவர்கள் அமர்ந்திருந்தார்கள்.ஏற்கனவே தயாவுடன் அவளது பாட்டியை பார்த்திருந்ததால் சந்தனாவால் எளிதாக அவர்களிடம் சென்று பேச முடிந்தது.

தயாவின் பாட்டியால் ஒருமுறைதான் பார்த்திருந்தாலும் சந்தனாவை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சந்தனா சிறிதுநேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவள் விஜயராகவனின் உடல்நிலைமை குறித்து பெரியதாக எந்த  தகவலையும் அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. பொதுவான ஓரிரு வார்த்தைகள். அவளது கண்கள் தயாவை தேடியது.

நடுவில் தயா இங்கே அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது இவளையே கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஞாபகங்கள். பெரியவர்களிடம் அதை கேட்கவும் செய்தாள்.

“தயா எங்கே மேடம். பாக்க முடியலையே? வீட்டுலயே இருக்காளா ..இங்கே கூட்டிட்டு வரலியா?”

ஆம் என்று தலையசைத்த பெரியவள்,”இங்கே வந்து அவளோட அப்பாவை பார்த்தா பெரிய ரகளையே செஞ்சிருவா.கொஞ்சம் விஜய் எழுந்திரிச்சிட்டா பிறகு கூட்டிவரலாம்னு தான்”  பதில் அளிக்க கேட்டுக்கொண்ட சந்தனா அவர்களிடம் ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு  அங்கிருந்து கிளம்பினாள்.

சந்தனாவின் வாழ்க்கையில் எந்த பெரிய மாற்றமும் இல்லை.ஆனால், அரவிந்தனின் வாழ்க்கையில் அவன் விரும்பாத விஷயங்கள் நடக்க தொடங்கிவிட்டது. அவன் அம்மா அவனது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அமைதியக இருப்பதாக இல்லை. ஊருக்கு வந்து சேர்ந்த அன்று மாலையே அவனுக்கு நிச்சயதார்த்த நாளாக அமைந்து விட்டது.

அவன் வீட்டுக்குள் நுழையும் பொழுதே வாசலில் பெரிய கோலம் போடப்பட்டு வாழை மரங்களை கேட்டில் இருபக்கமுமாக கட்டிக்கொண்டு இருந்தார்கள். வீடு நிறைந்த உறவினர்கள். பெற்றவர்களிடம் வாயை திறந்து எதுவும் பேசவும் முடியவில்லை.கேட்கவும் முடியவில்லை.அவனது அறைக்குள் சூட்கேசுடன் அரவிந்தன் நுழைய அவனது அப்பா உள்ளே கூடவே வந்து அவனுக்காக எடுக்கப்பட்டிருந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கான உடுப்புகளை கொண்டுவந்து தந்தார்.

அவர் சொன்னது இவ்வளவு தான்,”மற்றது எல்லாம் நிச்சயம் முடிஞ்ச பிறகு பேசிக்கலாம். சாயங்காலம் ஆறு மணிக்கு உன்னோட நிச்சயம். எதுவும் பேசாம,கேக்காம தயாராகு. இதுல உன்னோட தங்கச்சி வாழ்க்கையும் அடங்கி இருக்கு . மறந்திடாதே!”

மனம் முழுவதும் வெம்மை. இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கு அவன் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கும் பொழுது இதென்ன இவ்வளவு அவசரமாக திருமண ஏற்பாடுகள். அந்த பெண்ணிடம் நான் தான் யோசிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேனே. பின்னே என்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல் ,இந்த கல்யாண ஏற்பாட்டுக்கு எப்படி ஒப்புக்கொண்டாள் ” என்று அவனுக்குள் கேள்விகள்.

 

திருமணம் செய்துகொள்ளப்போகும் அந்த பெண்ணுக்கு அழைத்து கேட்கலாம் என்றால் அவளுடைய எண் இவனிடம் இல்லை. ஆம், அவளிடமிருந்து அவளது அலைபேசி எண்ணை வாங்கவே இல்லை. தான் எவ்வளவு தூரம் இந்த திருமணத்திலிருந்து தன்னை தூர நிறுத்தியிருந்திருக்கிறோம் என்று தெளிவாகவே புரிந்து கொண்டான்.

இன்று மாலையில் நிச்சயதாம்பூலம் வைத்து தன்னை பெற்றவர்கள் கார்னர் செய்வதிலிருந்து தனது விருப்பமின்மையை தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தவனுக்கு அடிவரை கசந்து வழிவதை தடுக்க முடியவில்லை.

மகனுக்கு பிடிக்காத ஒரு பந்தத்தை கட்டாயமாக தலையில் கட்டிவைத்து எதை சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. பிடித்தமின்மை புரியும் தனது அம்மாவுக்கு நிச்சயம் எனது பிடித்தம் பற்றியும் தெரிந்திருக்குமே!”ஓ.. அப்படியென்றால் அதன் விவ்வளைவுதான் இப்போது நடந்து கொண்டிருப்பவை ‘என்று உணர்ந்தவனுக்கு அடுத்து என்ன ,எப்படி என்றெல்லலாம் புரியவே இல்லை.  மகனது விருப்பத்திற்கு மாறாக ஒரு முடிவு எடுக்கிறார்கள் என்னும்பொழுது அவனது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் என்று யோசிக்க வேண்டாமா? எல்லாவற்றையும் பணத்தை வைத்து மட்டும் அளவிட்டுவிட முடியுமா?

தலையை பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டான் அரவிந்தன். மீண்டும் அவனது அறைக்குள் நுழைந்த அவனது அப்பா  அவனை அதற்க்கு மேல் யோசிக்க அனுமதிக்கவில்லை. “சீக்கிரம் ரெடியாகி வெளியே வா அரவிந்த். வீட்டுல இவ்ளோ ரிலேட்டிவ்ஸ் வந்திருக்கும் பொழுது நீ ரொம்பநேரம் உன்னோட ரூமுக்குள்ள இருக்குறது அவ்வளவு நல்லா இருக்காது.” என்று வந்து நின்றார்.

அரவிந்தனுக்கு எரிச்சல் மிகுந்தது. அப்பாவிடம் கேட்டே விட்டான்,”யாரை கேட்டு இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சு வச்சிருக்கீங்க.யோசிக்க நேரம் வேணும்னு சொல்லி ஒரு மாசம் தானே ஆகுது. நா  யோசிக்க கேட்ட நேரத்துக்குள்ள எனக்கு கல்யாணமே முடிஞ்சிரும் போல இருக்கு. மனசு தாங்க முடியாத வருத்தத்துல இருக்குப்பா. கல்யாணம் செஞ்சுக்குற வயசுன்னு பொண்ணு பாக்க தெரிஞ்ச உங்களுக்கு,மகனுக்குன்னு மனஸு,அதுல உணர்வுகள் ஆசைகள் எதிர்பார்ப்புகள் இருக்கும்.அதைப்பற்றி கேட்டுட்டு முடிவு செய்யணும்னு வரலையே! டாக்டர் பா நானு.அதுலயும் ஸ்பெஷலிஸ்ட். எனக்கு யோசிக்க தெரியும். பிலீவ் மீ. “என்று பொரிந்து தள்ளினான்.

எதற்கும் அவனது அப்பா பதில் சொல்வதாக இல்லை.மனைவி இவ்வளவு சீக்கிரம் ஏற்பாடுகளை செய்திருக்கிறாள் என்றால் நிச்சயம் அதில் அர்த்தம் இருக்கும் என்று தனது நம்பிக்கை முழுவதையும் மனைவி மீது வைத்தார்.

‘சரி,தவாறு என்பதை மீறி திருமண உறவில் அடிப்படை ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை.எத்தனை வருஷங்கள் ஆனாலும்,எவ்வளவு காரணங்கள் ,சூழ்நிலைகள் வந்தாலும்,யாருக்காகவும் தமது இணை மீதான நம்பிக்கையை விட்டுவிடக் கூடாது.அது உண்மை காதல்.’

 

நிச்சயதார்த்தம் என்று எல்லோரும் வந்திருக்க, மணப்பெண் அங்கே வரவில்லை. அவாளுக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால் வரவில்லை என்று காரணம் சொன்னார்கள். அரவிந்தணுக்குள் ‘ஒருவேளை அவளுக்கும் இந்த ஏற்பாடுகள் பற்றி சொல்லியிருக்க மாட்டார்களோ.. என்று தோன்றியது. அவளுக்கு இந்த திருமணம் மீது முழு இஷ்டம் இருக்கிறதா என்ற  கேள்வி வேறு. ஓருருவேளை தன்னை போலவே முழு ஈடுபாடு இல்லாமல் இந்த திருமணத்திற்கு ஒப்புகொண்டாளா..இல்லையே ,பெண் பார்க்க சென்ற  அன்றே தனது விருப்பத்தை சொல்லிவிட்டாளே “என்று தோன்ற மனதளவில் துவண்டு போனான்.

வீட்டுக்கு வந்த சந்தனாவுக்கு அவளது அப்பா அரங்கன் மூலமாக அரவிந்தனின் நிச்சயம் பற்றி தெரிய வர,அவளிடமிருந்து நிச்சயம் நிம்மதி பெருமூச்சு தான். எப்படியாவது அரவிந் எனது மீதான ஆசையை,காதலை விட்டுவிட்டால் நல்லது தானே!என்பதுதான்.

“நீங்களும்,அம்மாவும் போக போறீங்களாப்பா?” என்றவளிடம்,”ம்ம்ஹும்ம்.. இல்லம்மா. அவங்க வீட்டோட வச்சு செய்யறாங்க.ரொம்ப நெருங்கிய ரிலேஷன் மட்டும் வச்சு பண்றதுனால எங்களுக்கும் தகவல் தான்.அழைப்பு கிடையாது “என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார். அவரது குரலில் நக்கல் வழிந்தது. அப்பா மனதிற்குள் என்ன நினைக்கிறார் என்று மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஏதோ சரியாக இல்லை என்பது வரை புரிந்துகொண்டாள். அதற்குப் பிறகு அவளுக்கு அரவிந் பற்றியோ அவனுக்கு நடக்கும் நிச்சயம் பற்றியோ எந்த அக்கறையோ இல்லை.

தனது அறைக்கு சென்று   வெதுவெதுப்பான நீரில் டெட்டால் விட்டு தனது ஆடைகளை நனைத்தவள், குளிர்ந்த நீரில் ஒரு குளியலை போட்டுவிட்டு வந்தாள். அவளது நினைவுகளை இன்று முழு ஆக்கிரமிப்பு செய்திருந்தது  விஜயராகவனுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் என்று யோசித்துக்கொண்டே மாலையில் குவிந்திருக்கும் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்தாள்.

மறுநாள் காலையில் மறுத்த்துவமனைக்கு செல்லும்பொழுது வழியில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு  மருத்துவமனைக்கு சென்றாள்.

 

மருத்துவமனைக்கு சென்றவுடன், தலைமை செவிலியரிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. “வாங்க  சந்தனா. இன்னிக்கு மட்டும் நீங்க ஆர்த்தோ பாருங்க.நாளைக்கு காலைலேந்து உங்களுக்கு திரும்ப வி ஐ பி பிளோர்ல ட்யூட்டி போட்டிருக்கு. ஜோஇன் பண்ணியிருக்குற சீனியர் நர்ஸ் ரெண்டு பேரும் ஓரளவுக்கு ட்ரெயின் ஆகியிருக்காங்க.சோ இங்கே மேனேஜ் செஞ்சுற முடியும். மேலே தான் இப்போ நீங்க தேவை படுறீங்க ” என்றார்.

‘சரி’ என்று தலையசைத்து சென்றவள் தனது வேலையை தொடங்கவாரம்பித்தாள். பத்து மணிக்கு மருத்துவர் வந்தார். கொஞ்ச நேரம் ஓபி பார்த்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் உள்நோயாளிகளை பார்க்க கிளம்பினார்.சந்தனாவும் அவருடன் கிளம்பினாள்.

” ஓஹ் சந்தனா. நாளைலேந்து திரும்ப உண்னை  மேல் பிளோர் அனுப்புறாங்கன்னு மெயில் வந்துச்சு. ஒரு டாலெண்டெட் நர்ஸ் கூட  வேலை செய்யுறதே ஒரு தனி பலம்தான் . “என்று சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது ஐ சி யு வந்துவிட ,மருத்துவர் அங்கே இருக்கும் ஐ சி யு நர்ஸிடம் நோயாளிகளின் ரிப்போர்ட்டை கேட்டு வாங்கி பார்வையிட்டவாறே நோயாளிகளை பார்த்துக்கொண்டு வந்தார்.

விஜயராகவனுக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரால் சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. கை கால்களில் அடி பட்டிருக்கும் இடங்களை ஆராய்ந்தவர், சில கூடுதல் மருந்துகளை பரிந்துரை செய்துவிட்டு மற்ற நோயாளிகளையும் பார்த்து விட்டு கிளம்பினார்.

விஜயன் உறங்கிக்கொண்டிருந்தாலும், அவன் கண்களில் ஓரத்தில் நீர் கசிந்திருந்தது.அது சந்தனாவின் பார்வையில் பட தவறவும் இல்லை. வலியால் இருக்கலாம் என்று தனது மனதுக்குள் சொல்லிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page