அத்தியாயம்-30

அபி வீட்டில், அவளது அறையில் அடைக்கப்பட்டு இதோடு மூன்று நாட்கள் ஆகிறது.

காலையில் தனது தாயிடம் வேலை இருக்கிறது என்று சீக்கிரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு சந்துரு அலுவலகம் கிளம்பி விட, 

தனது மகன் வேலைக்கு சென்று விட்டான் என்ற நிம்மதியில் இருந்த தாட்சாயணி, அவனது பெட்ரூம் கதவை திறந்தவர்,  அங்கே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அபியை கண்டு கோபமுற்றார். அருகில் வந்து தண்ணீரை மேலே ஊற்றி அவளை எழுப்பி விட்டார்.

அதில் வேகமாக எழுந்தவள், “என்னாச்சு அத்தை? ஏன் இப்படி பண்றீங்க?” என்று கேட்டாள்.

“வா, என் புள்ள போய்ட்டான். எத்தனை நாளைக்கு நான் உனக்கும் சேர்ந்து பணிவிடை செய்யறது? எந்திரி, குளிச்சிட்டு வா. இந்த மூணு நாள் உனக்கு சேவகம் பண்ணி என்னால முடியல. உடம்பு, கை, கால் எல்லாம் வலிக்குது,” என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், கர்ப்பிணி என்றும் பாராமல் வேலை வாங்கினார்.

அவர் வெளியே சென்றவுடன், அவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு குளித்து உடை மாற்றி வெளியே வந்தாள். தன்னுடைய செல்போனையும் அவருக்கு தெரியாமல் இடுப்பில் சொருகிக் கொண்டு வந்தாள். எப்படியாவது இன்று இதை சரி செய்து, தான் இருக்கும் நிலையை யாரிடமாவது சொல்லி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்து வேலையும் செய்து முடித்தாள்.

காலை உணவு தயார் செய்து, மதிய உணவையும் செய்து முடித்தவள் ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மாமியாரின் அருகில் வந்து, “அத்தை, சமைச்சுட்டேன், சாப்பிடலாம்,” என்றாள்.

“சரி சரி, நீ உன் அறைக்கு போ. அதே மாதிரி என் பிள்ளை கிட்டயும் நீ சமைச்சேன்னு சொல்லக்கூடாது. அப்படி சொன்னாலும் என் புள்ள நம்ப மாட்டான். வாய் திறந்து ஏதாவது சொன்ன அவ்வளவுதான்,” என்று மிரட்டியவர், அவள் உள்ளே சென்றவுடன் , “நீயும் போய் உனக்கு போட்டுட்டு சாப்பிடு,” என்றார்.

அந்த பதிலில் அவரை திரும்பி ஆச்சரியமாக பார்த்தாள் அபி. அவளது பார்வையை உணர்ந்து, “என்னாச்சு? எதுக்கு அப்படி பாக்குற?” என்றார்.

“ஒண்ணும் இல்லை,” என்பது போல் பார்த்தவள், தனக்கு தேவையான உணவை எடுத்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

அவள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவளது அறை கதவை பூட்ட எண்ணி அவர் செல்ல, அந்த நேரத்தில் வாசல் கதவு காலிங் பெல் அடித்தது. “இதோ வரேன்,” என்று சொல்லிக் கொண்டு கதவை திறக்க, அங்கே பக்கத்து வீட்டு பெண்மணி நின்று இருந்தார்.

“வாவா அமலா, என்ன காலையிலேயே? வீட்டு சமையல் வேலை எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டுக் கொண்டே இருவரும் உள்ளே வந்தனர்.

“அதெல்லாம் ஆச்சு. நம்ம போன வாரம் பேசிட்டு இருந்தோமே அந்த புது கடை திறப்பு விழா — நேற்று திறந்துட்டாங்க. நிறைய ஆஃபர் கொடுக்கிறாங்களாம். நேத்துதான் எதுத்த  வீட்டு யசோதா போயி வாங்கிட்டு வந்திருக்கா. எல்லாமே கலெக்ஷன்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு. நம்மளும் போயி சீக்கிரம் வாங்கிட்டு வந்துடலாம். அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட வந்தேன். என்ன, சமையல் வேலை எல்லாம் ஆச்சா? எங்க உன் மருமகளை காணோம்?” என்றார்.

“அவ  மகராணி சாப்பிட்டு இருக்கா. நான் தான் எல்லா வேலையும் செய்யறேன். சாப்பிடுறீங்களா ஒரு வார்த்தை கூட கேட்கல. இனிமே தான் நான் இனிமேதான் சாப்பிட்டு கிளம்பணும்,” என்றார் தாட்சாயணி.

“சரி சரி, எல்லாம் அப்படித்தான் இந்த வளத்து புன்னகை எங்க மாமியார மதிக்குது. நீ சீக்கிரம் சாப்பிட்டு தயாராகு. நானும் போயி பாத்திரம் எல்லாம் ஒழிச்சு போட்டுட்டு வரேன். நம்ம ரெண்டு பேரும் போய் பாத்துட்டு வந்துரலாம்,” என்று அமலா கிளம்பினார்.

தாட்சாயணியும் சாப்பிட்டு முடித்துவிட்டு, அறைக்கு வந்து புடவையை மாற்றிக் கொண்டார்.

இவளது அறை கதவை மூடப் போக, மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டு வேகமாக வந்தார். அபியிடம் சொல்லாமல் வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்ப முயன்றார்.

“எதுக்கு பூட்டுற? உள்ளுக்குள்ள உன் மருமகள் இருக்காளே?,” என்றார் அமலா.

“இல்ல, அவ வீட்லதான் இருப்பா. கதவை திறந்து வைத்துவிட்டா, அவ தூங்குறப்போ யாராவது வந்துட்டாங்கன்னா என்ன பண்ணுறது? அதுக்காகத்தான். என் புள்ள அவளோட பாதுகாப்புக்காக என்னைய வெளிய போனா கூட்டிட்டு போக சொல்வான் அதனால் தான் அப்படி பண்றேன்,” என்று சொல்லி கதவை பூட்டிவிட்டு, செருப்பு ஸ்டாண்டில் இருக்கும் சந்துருவின் சூவின் கீழ் இருந்த பேப்பரை அகற்றி, அங்கே சாவியை வைத்துவிட்டு அமலாவுடன் சென்றார்.

இவர்கள் செய்த அனைத்தையும் மறைந்து இருந்து கேட்டுக் கொண்டிருந்த அபி, அவர் அறை கதவை பூட்டவில்லை என்பதில் சந்தோஷம் அடைந்தாலும், வீட்டு கதவு பூட்டப்பட்டதை நினைத்து கவலை கொண்டாள். 

எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்து, பெட்ரூம் ஜன்னல் வழியாக யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதியம் ஆகிவிட  யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்து காத்திருந்தாள். திடீரென்று யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு, “காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” என்று கத்தினாள்.

அவள் குரல் கேட்டு ஓடி வந்தவர், “எம்மா, நீங்க அபிராமி தானே?” என்று கேட்டார்.

“ஆமாம்… உங்களுக்கு எப்படி என் பேரு தெரியும்?” என்றாள்.

“அதெல்லாம் பிறகு சொல்றேன். நீ உள்ளே இப்படி அடைஞ்சு இருக்கே, என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனை இல்லையே?” என்றார்.

அவள் அவசரமாக, “சார், என் மாமியார் வெளியே போய்ட்டாங்க. தயவு செய்து வீட்டு கதவை திறந்து விடுங்க. என்னை வெளியே போக விடாம இந்த அறையிலேயே பூட்டி வச்சுருக்காங்க,” என்றாள்.

அவர் தயங்கி, “எப்படி பூட்டிய கதவை உடைக்க முடியும்? சத்தம் கேட்டா பிரச்சனை ஆகும்,” என்றார்.

“சார், எங்க வீட்டு முன்னாடி இருக்கும் ஷூ ராக்கில் முதல் படியில் இருக்கும் ஷூவின் கீழ் ஒரு சாவி இருக்கு. அதை எடுத்து திறந்து விடுங்க,” என்றாள்.

அவர் அவ்வாறே செய்து கதவை திறந்தார். அவள் வேகமாக செல்போனும் சிறிது பணமும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். அந்த நபருக்கு நன்றி சொல்லிவிட்டு ஓடினாள்.

அவர் பின்னால் ஓடிக் கொண்டே , “மா, வயித்துல குழந்தையை வச்சுக்கிட்டு இப்படி ஓடாதே! நில்லுமா!” என்று கூறி  கொண்டேன் வந்தார்.

அவள் திடுக்கிட்டு, “நான் பிரக்னண்ட் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

“எப்படி தெரியும் என்று சொல்ல முடியாது. ஆனா உனக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் நான் இருக்கேன். எங்க போகணும்னு சொல், நான் கொண்டு போய் விடுறேன்,” என்றார்.

அவள், “வேண்டாம், நான் பார்த்துக்கறேன்,” என்றாலும், அவர் பின்தொடர்ந்தார். இதை  அந்தத் தெருவில் சிலர் பார்த்து பேசிக் கொண்டனர். அதில் சங்கடமடைந்த அவள், “சார், நீங்க போய் எனக்கு ஒரு ஆட்டோ மட்டும் கூட்டிட்டு வாங்க!,” என்றாள்.

அவர் சென்றவுடன், அவள் வேறு வழியாக விரைவாக சென்றாள்.

பிறகு கடைவீதிக்கு சென்று, தனது செல்போனை ரிப்பேருக்கு கொடுத்தாள். “நாளைக்கு தான் கிடைக்கும்,” என்றபோது, “ரொம்ப அவசரம், நான் பிரக்னண்ட். ஒரு எமர்ஜென்சி  சீக்கிரம் செய்து கொடுங்கள்,” என்று கேட்டாள்.

அவர், “நாலு மணி நேரம் ஆகும்,” என்றார்.

அவள் சம்மதித்து, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அமர்ந்தாள். அங்கே நேரம் கழித்து, மதிய  நேரத்தில் வெளியே வந்து, சிறிது உணவு வாங்கி சாப்பிட்டு, ஒரு பார்க்கில் அமர்ந்தாள்.

அவள் மனதில் நடந்த அனைத்தும் திரும்பத் திரும்ப வந்தது. தனது வாழ்க்கை, கணவன், அவன் சந்தேகம், அவன் கூறிய கொடூரமான வார்த்தைகள் — எல்லாம் நினைவில் வந்து அவளை உலுக்கியது.

நேரம் கடந்ததும், மீண்டும் சென்று செல்போனை பெற்றுக் கொண்டாள். தாய் தந்தையிடம் அழைக்க நினைத்தாள். ஆனால், அவர்களுக்கு கவலை ஆகுமோ என்று தயங்கினாள். இறுதியில் அவர்கள் கவலை அடைந்தாலும் தனக்கு புகழிடம் அவர்கள் மட்டும்தான் பாதுகாப்பும் அவர்கள் மட்டும்தான் என்று  அழைத்தாள்.

அப்போது அவர்களிடம் பேச முடியாமல், செல்போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட்டது.

இதனால் அவள் மேலும் பதட்டமடைந்தாள். ஏற்கனவே பிரச்சனை, இப்போது இதுவும். மன அழுத்தம் காரணமாக அழுகை வந்தது.

அந்த நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. அவள் தனியாக நடந்து கொண்டே, தனது வாழ்க்கை, தனது குழந்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது திடீரென இரண்டு கார்கள் வந்து அவளை சூழ்ந்தன. ஈஸ்வரன் மினிஸ்டர்  அவளை கடத்தி பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்பு கரன் வந்து அவளை காப்பாற்றியது — இவை அனைத்தும் முதல் எபிசோடில் பார்த்தவை.

அப்பாடா… பிளாஷ்பேக் முடிந்தது.

இனி, கரண் எப்படி அவள் இருக்கும் இடத்திற்கு வந்தான், ஈஸ்வரன் எப்படி வந்தான் என்பதைக் அடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page