கரண் அதிவேகமாக தனது தந்தை வீட்டிற்கு சென்றான். சென்னைக்கு வந்த பின் நண்பர்களுடன் அபியின் இல்லத்தில் அவளை இறக்கி விட்டவன், அவளிடமும் பெற்றோரிடமும் பேசிவிட்டு, அவசரம் என்றால் அழைக்கச் சொல்லி நண்பர்களுடன் பிரிந்தான். அவன் செல்லும் முன்பு தன்னை திரும்பிப் பார்ப்பான் என்று அபி நினைத்தாலும் அது நடக்கவில்லை.
ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து நண்பர்களுடன் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டு, தனது எதிர்கால திட்டங்களை பகிர்ந்தான். அவர்களின் நலனிலும் அக்கறை கொண்டு பேசினான். அவன் திரும்பி வந்து தனது வாழ்க்கையை சரி செய்ய முனைந்ததில் அவர்கள் மகிழ்ந்தனர். மறுநாள் காலை வீட்டிற்கு சென்றவன் யாரையும் பார்க்காமல் தனது அறைக்குள் சென்றான்.
அறையை சுத்தம் செய்து தாயின் புகைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவன், தனது நோக்கங்களை மனதில் உறுதி செய்து கொண்டான். பின்னர் கீழே சென்றான். அங்கு குடும்பத்தினரை பார்த்தும், யாருடனும் நெருக்கமாக பேசாமல் அமைதியாக இருந்தான். தனது வருகைக்கு வேறு காரணம் இருப்பதாக தெளிவாக கூறினான்.
மேகநாதன் அவனை தனது மகளுடன் இணைக்க திட்டமிட்டார். ஆனால் கரண் யாருடைய அக்கறையையும் ஏற்காமல், கம்பெனிக்குச் செல்ல முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினான்.
கம்பெனியில் ஊழியர்கள் வரவேற்க முயன்றதும் அதை தவிர்த்து, நேராக தனது புதிய அலுவலக அறைக்குச் சென்றான்.
அங்கு இன்டீரியர் பிடிக்காமல், வினோத்திடம் ஒரு மணி நேரத்தில் மாற்ற சொல்லி, அபியின் உதவியை பயன்படுத்தச் சொன்னான்.
அதன் பின் முக்கியமான மீட்டிங்கிற்காக இருவரும் தயாராகி, அறையை விட்டு வெளியேறினர்.
மீட்டிங் ஹாலில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க, கரண் சிம்மமாக உள்ளே நுழைந்தவுடன் அங்கு நிசப்தம் நிலவியது.
வினோதன் அனைவருக்கும் ஒரு பேப்பர் கொடுத்து, கரண் அருகில் நின்றான்.
செந்தில்நாதன் தனது மூத்த மகன் கரணை புதிய சிஇஓவாக அறிவித்தார். கரண் வெளியில் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் கோபம் கொண்டிருந்தான்.
ஒரு போர்டு மெம்பர் இரண்டாவது மகனை குறை கூறி, முதலீட்டை திரும்ப பெறப்போகிறோம் என்றார்.
மற்றவர்களும் ஒப்புக்கொண்டனர். அதற்கு வினோதன் அவர்கள் கையில் இருந்த பேப்பரை பார்க்கச் சொன்னான். அதில் அடுத்த ஒன்றரை ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் லாப விவரங்கள் இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இன்னும் நம்பிக்கை இல்லையெனக் கேட்டபோது, வினோதன் ஒரு லிங்க் அனுப்பினான்.
அதில் கரண் முன்பு வேலை செய்த பெரிய கம்பெனியின் வளர்ச்சி, அவன் சாதனைகள், உயர்ந்த சம்பளம் ஆகியவை இருந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து, அவனை நம்பத் தொடங்கினர்.
இறுதியில் அனைவரும் ஒருமனதாக கரணை சிஇஓவாக ஏற்றுக் கொண்டனர். ஆனால் கரண், சிஇஓ ஆக வேண்டுமெனில் ஷேர் வேண்டும் என்றான். ஷேர் ட்ரான்ஸ்ஃபர் ஆவணத்தில் தனது தந்தையிடமிருந்து கையெழுத்து வேண்டும் என்றான்.
அவர் முதலில் மறுத்தார் அனைத்தையும் கொடுப்பதற்கு. முதலீட்டாளர்கள் அழுத்தம் கொடுத்ததால், செந்தில்நாதன் விருப்பமின்றி கையெழுத்திட்டார்.
கரண் 58% ஷேருடன் சிஇஓ பொறுப்பை ஏற்று, இனி தன் முடிவுகள் இறுதி என்றும், ஏமாற்ற முயன்றால் கடுமையான விளைவுகள் இருக்கும் என்றும் எச்சரித்துவிட்டு வெளியேறினான்.
பின்னர் மேகநாதன், செந்தில்நாதனிடம் கேட்டபோது, முதலீட்டாளர்களின் அழுத்தத்தால் எல்லா ஷேரையும் கரணுக்கு மாற்றியதாக கூறினார். மீதமுள்ள ஷேர்களை பின்னர் சேர்த்துக்கொள்ளலாம் என்றாலும், மேகநாதன் கோபமாக இருந்தான்.
அடுத்த நாட்களில் கரன் தினமும் இரவு அபியின் வீட்டுக்கு சென்று, அபியை அமைதியாக பார்த்துவிட்டு திரும்புவான்.
அவள் அவனை மறக்க முயன்றாலும், உள்ளுக்குள் அவன் நினைவால் வாடினாள். கௌரி அவளை கவனித்துக் கொண்டார்.
கம்பெனியில் பிரச்சனைகளை கரன், வினோதன் சேர்ந்து தீர்த்து, 15 நாட்களில் எல்லாம் சரியாகியது.
ஒரு நாள் ஆராத்யா கரனை அணுக முயன்று அவன் அறையில் அவனை அணைத்தபோது, அபி அதை பார்த்து செல்ல முயன்றாள். கரன் ஆராத்யாவை அரைத்து தள்ளிவிட்டவன், செல்லப் போன அபியை அணைத்து அமர வைத்தான்.
அபி கொண்டு வந்த உணவை தட்டி விட முயன்ற ஆராத்யாவின் செயலை உணர்ந்து கூடையை எடுத்துவிட கண்ணாடி டேபிளில் விழுந்து காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வந்த வினோதனை வைத்து ஆராத்யாவை திட்டி வெளியே அனுப்பினான் அவளோ இருவரையும் வன்மம் கடுக்கும் விழிகளுடன் பார்த்து வெளியேறினாள்.
பின்னர் கரன் அபியை கவனித்து, இருவரும் பழைய நினைவுகளுடன் நெருக்கமாகினர்.
கரன் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று, அவளுக்கான வளைகாப்பு செலவுகளை தானே ஏற்க முடிவு செய்ததை அபியும் பெற்றோரிடம் உரைத்தான். அவளின் பெற்றோருக்கும் இது சந்தோஷமாக இருந்தது.
அடுத்த நாள் அவளை வெளியே அழைத்து சென்று, நகரம் முழுவதும் சுற்றி, அவளை அன்பாக கவனித்தான். அவனின் அன்பால், மனதில் பழைய காதல் மீண்டும் உயிர்த்தது. என்னதான் வெளியில் சுற்றினாலும் வெண்ணவிளக்கு தகுந்த உணவையும் தண்ணீரையும் மற்ற விஷயங்கள் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தான். இரவு லாங் டிரைவில், கடல் காற்றை ரசித்துக் கொண்டு அவள் மன அமைதியை உணர்ந்தாள்.
அன்று இரவு, தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு இல்லத்திற்கு வந்தான் கரன்.
அவனை எதிர்பார்த்து வீட்டில் அனைவரும் அமர்ந்திருந்தனர். யாரையும் கண்டு கொள்ளாமல், தனது அறைக்கு சென்று உடை மாற்றி ஃப்ரெஷ் ஆகி கீழே வந்தான்.
சோபாவில் இருந்தவர்களைப் பொருட்படுத்தாமல் டைனிங் டேபிளில் அமர்ந்தான். மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டாலும், அவனிடம் பேசி காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதால், ஜெயந்தி, மேகநாதன், செந்தில்நாதன், நவீன், நந்தினி அனைவரும் உணவு மேஜைக்கு வந்தனர்.
பணியாளர் பரிமாற முயன்றபோது, “வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான்.
“கரண், நல்லா சாப்பிடு பா” என்று ஜெயந்தி போலி பாசத்துடன் அவனது தட்டில் சப்பாத்தி வைக்க முயன்றார். ஆனால், கரண் பிளேட்டை இழுத்துக் கொண்டு அவரை நோக்கிப் அழுத்தமான பார்வையை பார்த்தான்.
அந்த பார்வைக்கு பயந்த அவர் கையை நிறுத்தி, சப்பாத்தியை மீண்டும் ஹாட்பேக்கிலே வைத்தார். கரண் தானே பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, “எதுக்காக வீட்டுக்கு வர சொன்னீங்க?” என்று கரண் கேட்டான். செந்தில்நாதன் பேசுவதற்குள், “நான் தான் வரச் சொன்னேன். உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் பேசணும்,” என்றார் ஜெயந்தி. அவன் நிமிர்ந்து பார்க்க
அவர் தொடர்ந்தார்.
“நீ கம்பெனி பொறுப்பை எடுத்துட்ட, நல்லா போயிட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷம். அதே சமயம் உனக்கு கல்யாணத்தையும் பண்ணி வைக்கணும். உன் அப்பாவுக்கு உன் கல்யாணத்தை பார்க்கணும் என்று ஆசை என்றார் .
அப்போது மேகநாதன் இடையில் பேசி, “என்னோட பொண்ணு உனக்காக காத்திருக்கா. நீ சம்மதம் சொன்னா, கல்யாணம் உடனே நடக்கலாம்,” என்றார். ஜெயந்தி அதிர்ச்சியடைந்தார்.
இதைக் கேட்ட கரண், சாப்பிட்ட தட்டையை தூக்கி உடைத்து, “என் கல்யாணத்தை முடிவு பண்ண உங்களுக்கு யாரு உரிமை குடுத்தது?” என்று கத்தினான்.
“மிஸ்டர் செந்தில்நாதனுக்கும் அந்த உரிமை நான் கொடுக்கலை”, என்ற உடன் கோபமாக “நான் உன்னோட அப்பா” என்றார்.
கரண் சிரித்தபடி, “நீங்க எனக்கு அப்பாவா எப்ப நடந்துக்கிட்டீங்க? அந்த அன்பு எனக்கு கிடைக்கல. அப்புறம் எப்படி உங்களை அப்பா என்று கூப்பிட முடியும்?” என்றான்.
செந்தில்நாதன் கோபமாக, “உன்னை நான் தான் படிக்க வைத்தேன்,” என்றார்.
அதற்கு கரண் மேஜையை பலமாக அடித்து, “பெத்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க, வளர்த்தீங்கன்னு சொல்லாதீங்க. படிப்புக்காக காசு கட்டினது எல்லாம் ஒரு விஷயமா. உங்க பாசம் வேற பிள்ளைகளுக்குத்தான்” என்றான்.
அவன் தொடர்ந்து, “அம்மா இறந்தபோதும் உங்களுக்கு கவலையே இல்ல. என் வாழ்க்கையில் அம்மாவுக்குப் பிறகு உறவுன்னு நான் நினைப்பது அபி மட்டும் தான்,” என்றான்.
அதை கேட்டு செந்தில்நாதன், “நீ சொத்துக்காகத்தான் வந்திருக்கே,” என்று சொன்னார். அதைக் கேட்டு கரண் கையை உயர்த்தி, கோபமாக, “என் அம்மா எப்படி இறந்தாங்க, என்ன நடந்தது எல்லாம் எனக்கு தெரியும். அவங்க சொத்து எல்லாம் நீங்க அபகரிச்சீங்க. நான் வந்தது அதை மீட்டெடுக்கத்தான்,” என்றான்.
“இப்போ கம்பெனியில் இருக்கும் ஷேரும், சொத்தும் எல்லாம் என் பெயரில் தான் இருக்கு. இது என் அம்மாவோட உரிமை,” என்று தெளிவாக கூறினான்.
அதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். “நீங்க செய்த எல்லாத்தையும் நான் தெரிஞ்சுகிட்டேன். சரியான நேரத்துக்காக காத்திருந்தேன். இப்போ இந்த கம்பெனியில் உங்களுக்கு ஒரு பங்கும் கிடையாது,” என்றான். அப்போது மேகநாதன் மிரட்டும் விதமாக, “என் மகளை கல்யாணம் பண்ணிக்கலையென்றா, உன் காதலியும் அவள் வயிற்றிலுள்ள குழந்தையும் உயிரோட இருக்க மாட்டாங்க,” என்றார்.
இதைக் கேட்ட கரண், கோபத்தில் அவரின் கழுத்தைப் பிடித்து, “என் அபியையும் அவள் குழந்தையையும் பற்றி பேசினா உனக்கு உயிரே இருக்காது,” என்று எச்சரித்தான்.
பின் அவரை தள்ளி விட்டான்.
“இந்த வீட்டில் இருக்கணும்னா ஒழுங்கா இருங்க. இல்லையென்றால் இங்கிருந்து வெளியே போக வேண்டிய நிலை வரும். இந்த வீடும், சொத்தும் இப்போ என் பெயரில் தான் இருக்கு,” என்றான்.
செந்தில்நாதன், “இந்த வீடு என் பேர்ல இருக்கு,” என்றார்.
அதற்கு கரண் சிரித்தபடி, “நீங்க இதை அடகு வைத்தப்பவே, நான் பணம் கொடுத்து மீட்டேன். இப்போ இது என் பெயரில் தான் இருக்கு,” என்று முடித்தான். அவன் சொன்னதைக் கேட்டு நம்பாமல் பினான்சியருக்கு போன் செய்தார் செந்தில்நாதன்.
“என்ன நினைச்சுட்டு இருக்க? என் வீட்டை உன் பைனான்ஸ்ல அடகு வைத்தேன். யாராவது வந்தா என் அனுமதி இல்லாமல் கொடுத்துடுவியா?” என்று செந்தில்நாதன் கோபமாக பேச,
மறுபுறம் இருந்த பைனான்ஸியர் கடுமையாக பதிலளித்தார்.
“மூணு மாசமா வட்டி, அசல் எதுவும் கட்டலை. ஒப்பந்தத்திலேயே நேரம் கடந்து போனால் சொத்தை விற்கலாம் என்று நீயே சைன் பண்ணியிருந்த. அந்த பையன் காசு கொடுத்து வாங்கிட்டான்; இல்லனா வேற யாருக்காவது வித்திருப்பேன். இனிமேல் பணத்துக்காக வந்தா நல்லதா இருக்காது,” என்று சொல்லி போனை துண்டித்தார்.
அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கரண் சோபாவில் அமர்ந்து கேலியாக, “கடன் வாங்குறதுக்கு மட்டும் இல்ல, அதை திருப்பி கட்டணும். கம்பெனி பொறுப்பை தவறானவங்களுக்கு கொடுத்ததால்தான் இப்படி தான் ஆகும்” என்று சொல்லி, தானே எல்லா பிரச்சினைகளையும் சரி செய்து கம்பெனியை மீண்டும் நிலைநிறுத்தியதாக கூறினான்.
மேலும், “இனிமேல் கம்பெனி, சொத்து பற்றி பேசினா டாக்குமெண்ட்ஸ் எல்லாம் போலீஸ்க்கு கொடுத்து உங்களை வெளியேற்றிடுவேன். ஆனா என் அம்மாவுக்காக உங்களை விட்டுருக்கேன்,” என்று எச்சரித்து வெளியேறினான்.
அவன் சென்றதும் வீடு அமைதியாகி விட்டது. செந்தில்நாதன் கோபத்தில் ஜெயந்தியிடம் “சூரியகலாவுக்கு நீ தான் விஷம் கொடுத்தியா?” என்று கேட்டு, உண்மை வெளிவந்ததால் அவரை மனம் தாங்காமல் பெல்டை கழட்டி அடித்தார்.
பின்னர் தன் மனைவியின் மரணத்துக்கு தானே காரணம் என்று உடைந்து அழுதார்.
இதை எல்லாம் பார்த்த நந்தினி, தன் பெற்றோர்களின் தவறை நினைத்து அருவருத்தவள் “கரண் அண்ணா தான் சரி. நீங்க எல்லாரும் தப்பா நடந்திருக்கீங்க. இனிமேல் எனக்கு அவரைத் தவிர வேற யாருக்கும் உரிமை இல்லை,” என்று சொல்லி விட்டு சென்றாள்.
இதனால் செந்தில்நாதன் மனம் உடைந்து, மேகநாதனை வெறுத்து அவரை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னார்.
ஜெயந்தியும் தனது தவறை உணர்ந்து, “அண்ணா, உன் பேச்சைக் கேட்டுதான் நான் வாழ்க்கையை கெடுத்தேன்,” என்று மேகநாதனை குற்றம் சாட்டி, இனிமேல் தன்னைத் தேடி வர வேண்டாம் என்று சொல்லி மகனுடன் அங்கிருந்து சென்றாள்.
அனைவராலும் தள்ளப்பட்ட மேகநாதன், கோபத்துடன் பழி வாங்கும் எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.
