பூர்ணிமா தன் ஹேண்ட் பேக்கில் இருந்த அந்தச் சிறப்பு ஸ்கெட்ச் பேனாவை எடுத்தாள். அது சூர்யாவின் கம்பெனியில் இரவு நேரத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ‘புளோரசன்ட்’ ஸ்கெட்ச். இருட்டில் மட்டுமே பிரகாசமாகத் தெரியும் ஒரு ரசாயனம் கொண்டு உருவாக்கப்பட்டது அது.
தள்ளாடி நடந்தபடியே, சுவற்றில் ஒரு கோட்டை இழுத்துக் கொண்டே போனாள். அவளது உணர்வுகள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கின. கால்கள் பின்னின. இறுதியில் ஒரு மூலையில் இருந்த இன்டோர் கேம்ஸ் அறையினுள் நுழைந்தவள், தரை விரிப்பில் மயங்கிச் சரிந்தாள்.
பார்ட்டியில்… சந்தோஷ மிகுதியில் அளவுக்கு அதிகமாக குடித்து இருந்த ஆகாஷும் அப்சராவும் மட்டையாகி சோபாவில் சரிந்து கிடந்தனர். சூர்யா இப்போதுதான் சுதாரித்தான். அவன் கண்கள் ஹால் முழுவதும் தேடியும் பூர்ணிமாவைக் காணவில்லை. அவனது இதயம் காரணமின்றிப் படபடத்தது.
‘முட்டாள், இங்கே தானே இருக்க சொன்னேன்? எங்கே போனாள்?’
விறுவிறுவென வெளியே வந்தவன் காரிடாரில் தேடினான். ஒரு மூலையில் பூர்ணிமாவின் ஒரு பக்கத் தோடு உடைந்து கிடப்பதைக் கண்டான். அவனது உள்ளம் உலைக்கலமானது.
“பூர்ணி…!” என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.
உடனே தன் கோட் பாக்கெட்டில் இருந்த அந்தச் சிறப்பு ‘யுவி’ (UV) கண்ணாடியைப் போட்டான். அந்தப் பிரத்தியேகக் கண்ணாடியை அணிந்தால் மட்டுமே அந்த ஸ்கெட்ச் கோடுகள் கண்களுக்குத் தெரியும்.
தரையிலும் சுவற்றிலும் ஒரு மெல்லிய பச்சை நிற ஒளிக்கோடு தெரிந்தது. அது ஒரு பாம்பைப் போல வளைந்து நெளிந்து ஒரு பாதையைக் காட்டியது. சூர்யா அந்த ஒளியைப் பின்தொடர்ந்து புயல் வேகத்தில் ஓடினான்.
ஒவ்வொரு அடியிலும் அவனது ஆக்ரோஷம் கூடியது. இறுதியில் அந்தப் பாதை ஒரு இருண்ட இன்டோர் கேம்ஸ் அறையில் முடிந்தது. கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். நிலவின் வெளிச்சத்தில், அங்கே தரை விரிப்பில் மயங்கி விழுந்து கிடந்தாள் பூர்ணிமா. அவளது கை இன்னும் அந்த ஸ்கெட்ச் பேனாவை இறுக்கமாகப் பற்றி இருந்தது.
அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று தெரிந்த பிறகுதான் அவனது மூச்சு சீரானது.
ஓடிப்போய் அவளை வாரி அணைத்துக் கொண்டு, “பூர்ணி… கண்ணைத் திறடி… நான் வந்துட்டேன்!” என்றான்.
முணகலாய், “சூர்யா…” என்றாள். ஆனால் மொத்தமாய் சுயநினைவை தொலைத்திருந்தாள்.
அவளது நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்தவன், “ரொம்ப பயந்துட்டியா?” என்று அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான்.
“அங்க, அந்த ரூம்ல… அந்த சுஜித்… அவன்…” என்று அத்தனை மயக்கத்திலும் தேம்பினாள்.
நரம்புகள் புடைக்க, “விடு நான் பாத்துக்குறேன்” என்று சமாதானம் செய்தவன், அவளைத் தூக்கிக்கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றான். அவளை மென்மையாகப் படுக்கையில் கிடத்திவிட்டு, அறையை விட்டு வெளியேறியவனது முகம் இரும்பாய் இறுகிப்போயிருந்தது.
சூர்யா சுஜித் இருந்த அறையைத் தேடிச் சென்றான். அங்கே தோள்பட்டையில் குத்து வாங்கிக் கொண்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தான் சுஜித். அவனைக் கண்டதும் சூர்யாவுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்துக் கொண்டது.
தரையில் விழுந்து கிடந்த சுஜித்தின் சட்டையைப் பற்றி வெடுக்கெனத் தூக்கி, “என் பொண்டாட்டி மேலேயே கை வைக்கிறியாடா?” என்றவன் கர்ஜனை அந்த அறையின் நான்கு சுவர்களையும் அதிரச் செய்தது.
சூர்யாவின் இரும்பு போன்ற வலது கை முஷ்டி சுஜித்தின் தாடையைப் பதம் பார்த்தது. ‘மடார்’ என்ற சத்தத்தோடு அவனது கடவாய் பற்கள் உடைய ரத்தம் பீறிட்டது. அப்போதும் அவனை விடவில்லை சூர்யா; ஆத்திரம் அடங்காமல் சுஜித்தின் தலையைப் பிடித்து இழுத்துச் சென்று அருகிலிருந்த இரும்பு மேஜையில் ஓங்கி முட்டினான். முன் நெற்றியில் கீறல் விழுந்து ரத்தம் சொட்டியது…
சுஜித்தின் வயிற்றிலேயே தன் காலால் ஓங்கி மிதித்தவன், அங்குக் கிடந்த பூர்ணிமாவின் கத்தியைக் கையில் எடுத்தான். எதைப் பற்றியும் யோசிக்காமல், சுஜித்தின் வலது கண்ணில் பலமாக குத்தினான். அதுவரை வலியில் முனகிக் கொண்டிருந்த சுஜித், உயிர் போகும் வலியோடு ஒருமுறை உடலை வில்லாக வளைத்தான்.
“அம்மா…” என ஓலமிட்டு அலறியவன், அப்படியே ஆழ்ந்த மயக்கத்திற்கு போய்விட்டான்.
அவனது முகம் மொத்தமாய் சிதைந்து போனது. சூர்யா சட்டெனச் சுதாரித்தான். வேறு ஏதேனும் தடயத்தைப் பூர்ணிமா விட்டுச் சென்றிருக்கிறாளா என்று அந்த அறை முழுவதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்தான். அவளது உடைந்த தோடு, கத்தி என அனைத்தையும் தன் பாக்கெட்டில் மறைத்துக் கொண்டான். அதன் பிறகு ஒன்றும் தெரியாத பிள்ளை போல ஆம்புலன்ஸிற்கு அழைத்துத் தகவல் சொன்னான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் சுஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். விடிந்தும் விடியாத அதிகாலை நேரம் ஆகாஷிற்கு போதை தெளிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அடித்துப் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தார். தன் ஒரே மகன் குத்துயிரும் குலையுயிருமாக கிடப்பதைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் தலைக்கு ஏறியது.
“யாரு? யாரு இப்படிச் செஞ்சது? எவன் அவன்?” என்று அங்கிருந்த போலீஸைப் பிடித்து மிரட்டினார்.
“சார், அந்த ஃப்ளோர்ல எந்த சிசிடிவியும் இல்லை. விவிஐபி யூஸ் பண்றதால ப்ரைவசிக்காக க்ளீனா வச்சிருந்திருக்காங்க. சுஜித் சார் ரூம்லயும் எவிடென்ஸ் எதுமே கிடைக்கல. காப்பாத்தி கூட்டிட்டு வந்த சூர்யா சாரோட கால் தடமும், பிங்கர் பிரிண்ட்ஸும் மட்டும் தான் இருக்கு. நாங்க ஸ்பெஷல் டீம் வச்சு விசாரணை பண்ணிட்டு இருக்கோம் சார்…” என்று போலீஸார் சட்ட ரீதியாக கதைகளை அடுக்கினார்கள்.
“என் பையன் சாதாரண ஆள் இல்ல. இன்டியன் கிரிக்கெட் டீம் கேப்டன். அவனுக்கு நடந்த அட்டாக், நம்ம நாட்டுக்கே நடந்த மாதிரி. நீங்க மட்டும் ஒழுங்கா அக்யூஸ்ட்டை கண்டுபிடிக்கலைன்னா, நான் சிபிஐ வரைக்கும் போவேன் பார்த்துக்கோங்க” என்று மிரட்ட,
“கொஞ்சம் பொறுமையா இருங்க சார். சுஜித் ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பண்ணியிருக்காரு. அந்த பொண்ணுதான் அட்டாக் பண்ணிட்டு வெளிய போய் இருக்கு. சிபிஐ விசாரணைக்கு போனா, நம்ம சுஜித் பேரு இன்னமும் கெட்டுப் போகும். அது வேணுமா வேண்டாமானு நீங்களே யோசிச்சுக்கோங்க…”
“அதையெல்லாம் எப்படி சரி கட்டணும்னு எனக்கு தெரியும். அந்த பொண்ணு யாருனு கண்டுபிடிக்கிற வழியை பாருங்க” என்று கர்ஜித்தார் அவர்.
ஆனால் ஏற்கனவே சூர்யா மறைமுகமாக தன் இந்த கேஸை ஒன்றுமில்லாமல் செய்வதற்கான எல்லா வேலைகளையும் ஆரம்பித்து இருந்தான். எனவே ஆகாஷ் என்ன செய்தாலும் ஒரு எல்லையை தாண்டி போகவே முடியாது! பாவம் இது தெரியாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்.
எப்போதும், “என் அழகுதான் எனக்கு முக்கியம்” என்று கர்வமாகச் சொல்லும் சுஜித், இன்று முகத்தையே சிதைத்துக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்தார் ஆகாஷ்.
அவர் மகன் விஷயத்தில் தெளிவாகும் முன்னே, மதுவின் போதையிலிருந்த அப்சரா ஒருமாதிரி துவள ஆரம்பித்தாள்.
“டாட், எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்று சோபாவில் சரிந்தாள்.
“என்னாச்சு அப்சரா? என்ன பண்ணுது உனக்கு?” என பதறியவர், உடனே அவளையும் பக்கத்து அறையில் அனுமதித்தார். அப்சராவுக்கு உடனடியாய் ட்ரீட்மென்ட் தர ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு பரிசோதனைகள் தீவிரமாக நடந்தேறின.
சரியாக அரை மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவர் கையில் ஒரு ரிப்போர்ட்டுடன் வந்து நின்றார். அவரது முகத்தில் தெரிந்த அந்தத் தயக்கம், ஆகாஷிற்குள் ஏதோ ஒரு விபரீதத்தை உணர்த்தியது.
“டாக்டர்… என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? எதுக்காக திடீர்னு மயங்கி விழுந்தா? யாராவது சாப்பாட்டில் எதையாவது கலந்து கொடுத்துட்டாங்களா?” என பதற்றமாகக் கேள்விகளைத் தொடுத்தார்.
மருத்துவர் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, “சார்… அப்சராவோட பிளட் ரிப்போர்ட் வந்துடுச்சு. அவங்க மயங்கி விழுந்ததுக்குக் காரணம், அவங்க உடம்புல ‘ஹெபடைடிஸ் பி’ (Hepatitis B) வைரஸ் ரொம்ப வீரியமா பரவிட்டு இருக்கு…” என்றார்.
ஹெபடைடிஸ் பி என்பது ஒருவகை பாலியல் நோய். விந்து மூலமோ, பிறப்புறுப்பு திரவங்கள் மூலமோ உடலுறவின் போது மட்டுமே எளிதில் பரவும்.
தன் மகளுக்கு அந்த நோய் வந்திருப்பது தெரிய ஆகாஷ் ஒரு நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்.
“என்ன டாக்டர் சொல்றீங்க?”
“அவங்க ரத்தத்துல இருக்கிற வைரஸோட அளவை வச்சுப் பார்த்தா, இந்தக் கிருமி அவங்க உடம்புல ஏறிச் சரியா ரெண்டு வாரம் ஆகுது. இப்போதான் அது கல்லீரலைத் தாக்கி, அதோட வெளிப்பாடா மஞ்சள் காமாலை அறிகுறிகளைத் தோல்ல காட்ட ஆரம்பிச்சிருக்கு. அதனாலதான் அவங்க தோல் இப்போ ஒருமாதிரி மஞ்சள் நிறமா மாறி இருக்கு…” என்று அடுத்தடுத்த அணுகுண்டுகளை போட்டார்.
மருத்துவர் சொன்ன அந்த ‘இரண்டு வாரக் கணக்கு’ ஆகாஷின் நெற்றிப் பொட்டில் சுத்தியலால் அடித்தது போல இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாகச் சூர்யா டெல்லியில் இல்லை, அவன் சென்னையில்தான் இருந்தான். அப்சரா மட்டும்தான் டெல்லியில் தன் தோழிகளுடன் பார்ட்டி என்று சுற்றித் திரிந்தாள்.
எனில், அவள் வேறொருவனுடன் உறவில் இருந்தாளா? கௌரவமான தன் குடும்பத்தின் வாரிசு, இப்படி ஒரு கேவலமான நோயைச் சுமந்து கொண்டு வந்திருக்கிறாளா?
தூரத்திலிருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சூர்யாவின் இதழ்களில் ஒரு குரூரமானப் புன்னகை வந்து மறைந்தது.
“டாக்டர்… இதைச் சரி பண்ணிடலாம்ல?” என்று ஆகாஷ் கெஞ்சும் குரலில் கேட்க,
“ட்ரீட்மென்ட் தரலாம் சார்… ஆனா கல்லீரல் பாதிப்பு அதிகமா இருந்தா, அது அவங்க முகத்தை நிரந்தரமா பாதிக்கும். வடுக்கள் கூட வர வாய்ப்பு இருக்கு. இப்போதைக்கு அவங்க உடம்புல இருக்கிற வைரஸ் மத்தவங்களுக்குப் பரவாம பார்த்துக்க வேண்டியதுதான் முக்கியம்” என்று கூறிவிட்டு மருத்துவர் நகர்ந்தார்.
அவரும் தான் டிவியில் சக்சஸ் மீட் லைவ் ஷோ வை பார்த்திருந்தாரே! சூர்யாவும் அப்சராவும் கட்டிக் கொண்டு நிற்பதை பார்த்த எவரும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நினைப்பது எதார்த்தம் தானே! எனவே முன்னெச்சரிக்கையாக அப்படி சொல்லி இருந்தார்.
ஆகாஷ் அதிர்ச்சியில் தள்ளாடி, அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
சுஜித்திற்கு ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டது என்ற தகவல், காட்டுத்தீயைப் போல டெல்லி முழுவதும் பரவிவிட்டது. அவர் உயிருக்குப்போராடுகிறார் என்ற செய்தி கசிந்த அடுத்த ஐந்தாவது நிமிடம், மருத்துவமனை வாசலில் ஓபி வேன்கள் வந்து குவியத் தொடங்கின. மீடியாக்கள் ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தன.
“இந்திய அணி கேப்டன் சுஜித் மர்மமான முறையில் படுகாயம்! இது விபத்தா அல்லது சதியா?” என்று ஒரு சேனல் அலற, “டெல்லி ஹோட்டலில் பார்ட்டி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சுஜித்திற்கு அடி?” என்று இன்னொரு சேனல் துப்பு துலக்க ஆரம்பித்திருந்தது.
ஆகாஷ் தன் தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தார். சுஜித் இன்னும் மயக்கத்திலிருந்து கண் விழிக்கவில்லை. அதைவிடக் கொடுமை, அவனது அந்தச் சிதைந்த முகம்!
அந்தச் சிதைந்த முகத்தை எப்படிச் சரி செய்வது? பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும் பழைய களை வருமா? இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இப்போது உண்மையான காரணம் வெளியே கசிந்தால், ஒரு பெண்ணிடம் அத்துமீறி அடி வாங்கினான் என்ற அசிங்கம் தெரிந்தால், சுஜித்தின் கிரிக்கெட் கேரியர் அத்தோடு முடிந்துவிடும்.
விளம்பர ஒப்பந்தங்கள் ரத்தாகும், கோடிக்கணக்கான நஷ்டஈடு கொடுக்க வேண்டியிருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாகச் சட்ட ரீதியான சிக்கல்கள் கழுத்தை நெரிக்கும்… என்று ஏதேதோ யோசித்தவருக்கு, திடீரென மூளையில் பல்ப் எரிந்தது.
அடுத்த நொடி ஆகாஷின் பார்வை சூர்யாவின் பக்கம் திரும்பியது. அவர் மனதிற்குள் அடுத்தடுத்த திட்டங்கள் அணிவகுக்க, மீண்டும் நிமிர்ந்து அமர்ந்தார்.
அவனோ இதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தது போல, உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான்.
