அத்தியாயம் 36

இந்த விஷயத்தை எதுக்கு ம்மா இவ்ளோ நாள் என்கிட்டே சொல்லாமல் மறச்சிட்ட? என்று கோபமாக கேட்டான் கார்த்திக். 

சொல்லக் கூடாதுனு நினைக்கல ப்பா. உன்கிட்டே சொல்ல பயமா இருந்துச்சு என்றார் கனி. 

 

ஆமா. அப்படியே எனக்கு பயப்படுற ஆள் தான நீ? என்ற கார்த்திக், இப்படி தங்கச்சி வாழ்க்கையை அழிச்சிட்டிங்களே ரெண்டு பேரும். நீங்க சொன்ன பொய்யால நானும் அவனை தப்பா நினைச்சி அவளை அவள் புருசனோட பேச விடாமல் பண்ணிட்டேன் என்று தன் பக்க தவறையும் கூறினான் கார்த்திக். அவனின் மனம் முழுதும், ” அவனின் காலில் விழுந்தாவது தங்கையை அவனோடு சேர்த்து வைக்க வேண்டும் ” என்ற எண்ணம் தான் ஓடியது. ஆனால், அதற்கு அவசியம் இல்லை. அந்த அளவுக்கு ஆகாஷ் விட மாட்டான். 

 

கனி சுற்றி முற்றி யாரையோ தேடினார். ஹய்யோ கார்த்திக் ” ஆகாஷ்னியை காணோம் ” என்றார். 

கார்த்திக் அதிர்ந்து விட்டான் தாயின் வார்த்தையில். 

அவர் தான் தூக்கிட்டு போயிருப்பாரு என்று சரியாக கூறினாள் கார்த்திகா. 

****

அந்த எல்லையை விட்டே தாண்டி சென்றது ஆகாஷின் புல்லட். 

அகிலா புல்லட்டை பறக்க விட்டாள். 

ஆகாஷ் தன் மகளை தனக்குள் புதைத்து கொண்டு கோடி முத்தங்களை வழங்கி கொண்டே வந்தான். 

ஆகாஷ்னி அவனின் திண்ணிய மார்பு கூட்டில் இருந்து வெளி வந்தது அவனின் தாடியை பிடித்து இழுத்தாள். 

ஆகாஷ் தன் செல்ல மகளை அணைத்து கொண்டான். 

இங்க ஒருத்தி புடவை கட்டிட்டு கஷ்டப்பட்டு பைக் ஓட்டிட்டு வந்துட்டு இருக்குறேன். ஆனால், அப்பாவும் பொன்ணும் நல்லா கொஞ்சிட்டு வரீங்களா? என்று கேட்டாள் அகிலா. 

என் பொண்ணுக்கு என்னைய அடையாளம் தெரிஞ்சிருச்சு போல. நான் தூக்கிட்டு வந்துருக்குறேன். ஆனால், இவள் ஒரு தடவை கூட இன்னும் அழல என்று கூறியவனுக்கு கண்கள் கலங்கியது. 

ஐயோ ப்ரோ, ரொம்ப சிலுத்துக்காதீங்க. இதுக்கும் கார்த்திக் எதாச்சி பிளான் பண்ணிருவான் என்றாள் அகிலா. 

எனக்கு யாரை பற்றியும் பயம் இல்லை. என் பொண்ணு என்னோட இருக்குறாள் அது போதும் எனக்கு என்றான். 

****

கார்த்திகா தன் அறையில் கட்டிலில் கிடந்தாள். அவளின் கண்கள் நிற்காமல் நீரை வெளியேற்றி கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஆகாஷின் அழைப்பை துண்டித்து விட்டதற்காக கண்ணீர் சிந்தினாள். 

 

அவனின் எண்ணை பிளாக் செய்ததற்கு கண்ணீர் விட்டாள். தன்னையே சுற்றி வந்தான். தன்னையே ஒவ்வொரு நொடியும் நினைத்து கொண்டிருந்தான். அவனை தனிமையில் தனியாக விட்டு வந்ததற்காக கண்ணீர் சிந்தினாள். 

வெகு நேரம் அழுதிருப்பாள் போலும். முகமே வீங்கி விட்டது. கண்கள் வற்றி விட்டது. தன் கைபேசியை கையில் எடுத்தாள். அதன் முகப்பு திரையில் கூட அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் தான் போட்டோவாக இருந்தது. இதை பார்த்து கூடவா அவனிடம் பேசாமல் இருந்து விட்டாய்? உண்மையில் நீ ஒரு சுயநலவாதி தான். அதை விட கல் நெஞ்சக்காரி என்று அவளின் மனசாட்சி அவளை காரி துப்பியது. 

பிளாக்கில் இருந்த ஆகாஷின் எண்ணை அன்ப்ளாக் செய்தாள் கார்த்திகா. 

அம்மணிக்கு புத்தி வந்து விட்டது போலும். 

****

ப்ரோ ஒரு நிமிஷம் என்ற அகிலா டூ வீலரை நிறுத்தினாள். அவள் நிறுத்திய இடத்தில் இருந்தது பல் பொருள் அங்காடி. 

எதுக்கு இங்க நிறுத்துன? என்று தன் பிள்ளையை தூக்கி கொண்டே கேட்டான் ஆகாஷ். 

ப்ரோ நாளைக்கு எங்க அக்காவுக்கு பர்த்டே. பொதுவா எங்க அக்கா பர்த்டே செலிபிரேட் பண்றது விரும்ப மாட்டாள். ஆனால், அதுக்காக என்னால கிப்ட் தராமல் இருக்க முடியாது. ஒவ்வொரு வருஷமும் மறக்காமல் கிப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணிடுவேன். இந்த முறையும் கிப்ட் பண்ணனும். என்னைய ஃபாலோ பண்ணுங்க என்று கூறிவிட்டு அங்காடிக்குள் நுழைந்தாள். 

 

அபிராமியோட பர்த்டேவா நாளைக்கா? என்று முனு முனுத்து கொண்டே அகிலாவின் பின் சென்றான் ஆகாஷ். 

அகிலா கடையை சுற்றினாள். அக்காக்கு என்ன வாங்கி தரலாம் என்று யோசித்தாள். 

ட்ரெஸ், ஹேர் க்ளிப், டெடி பியர் எல்லாமே வாங்கி கொடுத்துருக்கோம். இந்த முறை என்ன வாங்குறது என்று யோசித்தாள். 

சுற்றி சுற்றி பார்த்தவள், ஒரு இடத்தை பார்த்து விட்டு அசந்து நின்றாள். அடுக்கு அடுக்கான பொம்மைகளின் நடுவில் இருந்த பொம்மையை பார்த்து வியந்தாள். 

அழகான ஒரு பெண் தன் நிறை மாத வயிற்றை ஏந்தி கொண்டு தன் கணவனின் மார்பில் சாய்ந்து இருப்பதை போல் அழகாக வடிக்கப்பட்டு இருந்தது அந்த சிற்ப பொம்மை. உடனடியாக அதை எடுத்து போய் பில் போட்டு கிப்ட் பேக் செய்தாள். 

 

அவளின் அன்பு பரிசில், ” வாவ் ” என்று தான் வாய் திறந்தான் ஆகாஷ். 

தேங்க் யூ என்றாள் அகிலா. 

வாங்க வாங்க அப்படியே குட்டி பாப்பாக்கு ட்ரெஸ் எடுத்துருவோம் என்று ஆகாஷ்னியை தூக்கினாள். 

அந்த நேரம் சரியாக ஆகாஷின் மொபைல் சிணுங்கியது. 

பேசிட்டு வாங்க ப்ரோ என்ற அகிலா நடையை கட்டினாள். 

” மை கியூன் ” என்று திரையில் பெயர் வர, ஆகாஷ்  பெரு மூச்சு ஒன்றை இழுத்து விட்டு அட்டென் செய்தான். எவ்வளவு நாள் இந்த அழைப்பிற்கு ஏங்கி இருப்பான். ஆனால், அது இன்று தான் வருகிறது. 

அவன் அட்டென் செய்து ஹெலோ என்று கூட கூறவில்லை. அதற்குள் கார்த்திகா “மாமா ” என்று அழைத்தாள். 

சொல்லு என்றான் சலிப்பாக. 

ஒரு நிமிடம் மௌனம் நிலவியது. 

அவள் அழுகிறாள் என்று புரிந்து கொண்டான் ஆகாஷ். 

சொல்லு டி என்றான் உரிமையாக.

சாரி மாமா என்னைய மன்னிச்சிருங்க என்றாள் கார்த்திகா. 

அவ்ளோ தான வேற ஒன்னும் இல்லையே. நான் வச்சிரவா?  என்று கேட்டான். 

வீட்டுக்கு வாங்க மாமா என்று அழைத்தாள். 

வேணாம் என்றான் விரக்தியாக. 

நான் கூப்பிட்டா வர மாட்டிங்களா?  என்று கேட்டாள். 

 

இப்போ வரல என்றான். 

ப்ளீஸ் எனக்காக என்றாள். 

ம்ம் என்றான். 

இப்போ எங்க இருக்குறீங்க? என்று கேட்டாள். 

ஆகாஷ் முகவரியை கூறினான். 

சரி மாமா. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என்று கூறி விட்டு அவள் அழைப்பை துண்டித்தாள். 

ஆகாஷ் தன் கைபேசியை அணைத்து விட்டு பாக்கெட்டுக்குள் திணித்து விட்டு திரும்ப, கார்த்திக் நின்றிருந்தான். 

 

அட பாவி. அதுக்குள்ள எப்படி டா வந்த என்று மனதிற்குள் புலம்பினான். 

சாரி மச்சான் என்று கார்த்திக் வேறு தன் பங்கிற்கு மன்னிப்பு கேட்டு கொண்டு நிற்க,

ப்ரோ பாப்பாக்கு ட்ரஸ் எடுத்தாச்சு வாங்க கிளம்புவோம் என்று வந்தாள் அகிலா. 

அகிலா கார்த்திக்கை வெறித்து பார்த்தாள். 

நீங்க எங்க வீட்டுக்கு போங்க மச்சான். நான் இவளை வீட்டுல விட்டுட்டு வரேன் என்றான் கார்த்திக். 

நான் தான் அழைச்சிட்டு வந்தேன். நானே பார்த்துக்கறேன் என்றான் ஆகாஷ். 

போங்க மச்சான் என்ற கார்த்திக், ஆகாஷ்னியை தூக்கி ஆகாஷின் கைகளில் கொடுத்து விட்டு அவளை இழுத்து கொண்டு சென்றான். 

 

நான் உங்களோட வரல என்றாள் அகிலா. 

உன்னைய வரியானு கேட்கல. வான்னு சொன்னேன் என்று வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி அமர வைத்தான். 

ஆகாஷ் சிறு புன்னகையை உதிர்த்து விட்டு பைக்கை இயக்கி கொண்டு சென்றான். 

****

கார்த்திக் பைக்கை ஒரு பார்க்கில் நிறுத்தினான். 

இவனிடம் என்ன சொன்னாலும் புரியாது என்று மனதிற்குள் நொந்து கொண்டாள் அகிலா. 

கார்த்திக் தரையோடு மண்டி இட்டு அவளின் இடையை கட்டி கொண்டு சிறு பிள்ளை போல் தேம்பினான். 

பார்க்கில் இருப்பவர்கள் நல்ல வேலையாக இவர்களை கவனிக்கவில்லை. 

கார்த்திக் ப்ளீஸ் எழுந்திரிங்க என்ற அகிலா பதறி தான் போனாள் அவனின் செயலில். 

என்னைய மன்னிச்சிரு அகி ப்ளீஸ் என்று, இன்னும் அதே நிலையில் இருந்து கூறினான் கார்த்திக்.

 

சரி மன்னிச்சிட்டேன் எழுந்திரிங்க என்றாள் அகிலா. 

கார்த்திக் எழுந்து நின்று அவள் முகம் பார்க்க முடியாமல் திணறினான். 

அன்னைக்கு பாப்பா காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வரல. நானும் அப்பாவும் ரொம்ப பயந்துட்டோம் என்றான். 

 

ஹான்… என்று திரு திருவென விழித்த அகிலாவிற்கு இப்பொழுது தான் புரிந்தது. தன் கல்லூரி கால பழைய பிளாஷ்பேக் கூறி தன்னிடம் மன்னிப்பு கேட்க போகிறான் என்று. 

ஷாப்பா இன்று எத்தனை பிளாஷ்பேக் கேட்பது என்று காதை குடைந்தாள். வேறு வழி இல்லை கேட்டு தான் ஆக வேண்டும். 

சரி கேட்போம் என்று தன் காதை தீட்டி அவனின் குனிந்த தலையை நிமிர்த்தி, சரி சொல்லுங்க என்று கூறி விட்டு அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தாள். 

அன்னைக்கு பாப்பா காலேஜ் முடிச்சிட்டு வீட்டுக்கு வரல. நாங்க அவளை தேடாத இடம் இல்லை. கடைசியா காலேஜ் வந்து காலேஜ் வாசலில இருக்குற சி சி டி வி கேமரா பார்க்கனும்னு சொன்னதும் அவங்களும் எங்களுக்கு உதவுனாங்க. எங்க காலேஜ் புள்ளைக்கு நாங்க தான் பொறுப்புனு சொல்லி ஹெல்ப் பண்ணாங்க. 

பாப்பா காலேஜ் வாசலில நிற்க்கும் போது உன்னைய தவிர யாரும் அவள் பக்கத்துல இல்லை. கடைசியா ஒரு கார் வந்து அவளை அழைச்சிட்டு போச்சு. அதுல ஆகாஷை பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப ஷாக். 

 

அவனை பற்றி முழு விவரம் எங்களுக்கு தெரியாது. ஆனால், லவ் பண்றது தெரியும். பாப்பா லவ் பண்றது புடிக்காமல் அவளோட மொபைலை வாங்கி நாங்க வச்சிட்டோம். யாராவது அவளை லவ்னு சொல்லி ஏமாத்துறாங்களோனு நினச்சோம். அதுனால, அவளால ஆகாஷ்ஷோட பேச முடியாத அளவுக்கு செஞ்சோம். ஆனால், அவள் கடைசியா காலேஜ் வந்து ஆகாஷோட ஓடி போயிருவானு நாங்க எதிர்பார்க்கல. அவளுக்கு மொபைல் கொடுத்து  ஆகாஷோட பேச வச்சி அவளை ஓட வச்சது நீ தான்னு நாங்க உன்னைய தப்பா புரிஞ்சிட்டு  தான் உங்க வீட்டுக்கு வந்து, உன்கிட்டே சண்டை போட்டோம். பாப்பா எங்க இருக்குறான்னு தெரிஞ்சிக்கிட்டு அவளை அழைச்சிட்டு வந்துரலாம்னு பார்த்தோம். ஆனால், நீ கடைசி வர வாயை திறக்கல. அதுனால தான் கோபத்துல உன் மேல கை வைக்கிற நிலைமை வந்துருச்சு அகிலா, என்று அவளின் கைகளை பற்றி தன் கண்களில் வைத்து கொண்டான் கார்த்திக். 

புரியுது உங்க நிலைமை. உங்க வீட்டு பொண்ணை காணோம்னு நீங்க எவ்ளோ பயந்துருப்பிங்க! என்றாள் அகிலா. 

 

பாப்பா ரொம்ப வெகுளி. வெளி உலகம் தெரியாது. யார் பொய்யா பேசுறாங்க யார் உண்மையா பேசுறாங்கனு அவளுக்கு பிரிச்சி பார்க்க தெரியாது. அன்பா பேசிட்டாலே நல்லவங்கனு நினைச்சிருவாள். வெளியே வேற யார் கையிலயாவது சிக்கிருந்தா அவள் நிலைமை என்னாகியிருக்கும் என்று இப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு பயமாக தான் இருந்தது. 

அகிலா அவனின் வார்த்தையிலும், அவனின் பயத்திலும்,  அவனின் கன்னங்களை பற்றி அவனின் உதட்டில் தன் உதட்டை பதித்து அவனை எதுவும் பேச விடாமல் அமைதி படுத்தினாள். 

அடுத்த பதிவில் பார்ப்போம். 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page