அன்றைய ஞாபகத்தில் அபிஷேக் கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.
“டேய் பக்கி… செர்ரிக்கு மீனிங் கேட்டா சம்பந்தமே இல்லாம சிரிக்கிற?”
“அன்னைக்கு என்னைய மெய்ட்னு என்ன என்னன சொன்னீங்க? ஆது சொன்னவுடனே உங்க ஃபேஸ பாக்கணுமே” என்றவன் அப்போதும் விழுந்து விழுந்து சிரித்தான்.
“அது… நீ சொல்லாம விட்டுட்டு இப்போ என்னய சொல்றியா டா?” என்றவள் கோபப்பட்டாள்.
“அப்றம் அங்கிள் கிட்ட எவ்ளோ திட்டு வாங்கினீங்க?” என்றவன் இப்போதும் சிரிக்க அவளும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
“ஆமா. அப்றம் என்ன ஒரு வழி பண்ணிட்டாரு” என்றதும் இருவருக்கும் அன்று நடந்தது ஞாபகம் வந்தது.
“ஜோஸ்வினி இதென்ன ஆதுவோட ஃபிரெண்ட நீ வேலைக்காரன் மாதிரி ட்ரீட் பண்ணிட்டு இருக்க?”
“ப்பா… இவரு எதும் சொல்லலப்பா. இந்த ஆதுவும் அங்க இல்ல” என்று சங்கடமான குரலில் சொன்னவளை நோக்கியவன்
“அங்கிள் நானா தான் அங்கிள் பரிமாறினேன்” என்று அபிஷேக் விளக்கம் சொல்லவும் இப்போது ஆதவனை முறைத்தார்.
“ஆது… என்ன இது? நம்மளோடது என்ன பாரம்பரியம்? வந்த கெஸ்ட்ட நாம இப்படி நடத்தலாமா? நம்ம தானே நல்லா சாப்பிட்டாங்களானு கவனிக்கனும்? என்ன இப்படி பண்ணி வெச்சிருக்க?”
“சாரி சித்தப்பா. எனக்கு அப்போ ஒண்ணும் தோணல” என்றவன்
“சாரிடா” என்று அபிஷேக்கிடமும் மன்னிப்பு கேட்டான்.
“மச்சி… இதிலென்ன டா இருக்கு?” என்றவன் அவரிடம்
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அங்கிள். இது நம்ம வீடு தான” என சமாதானம் சொன்னான்.
ஆதவனே அபிஷேக்கிடம் மன்னிப்பு கேட்கவும் ஜோஸ்வினிக்கு சங்கடமாக போய் விட்டது.
“சாரி அபிஷேக்” என்றவள் மெல்லிய குரலில் மன்னிப்பு கேட்டாள்.
“ஃப்ரீயா விடுங்க ஜோஸ்வினி” என்றவன்
“இப்பவாவது சாப்பிட போலாமா?” என கேட்க இருவரும் அபிஷேக்கை உபசரித்தார்கள்.
அங்கே விதவிதமான பலகாரங்கள் இருந்தது.
கவுனி அரிசி, வெள்ளை பணியாரம், பால் பணியாரம், சீயம், மால்பூ, ஸ்ப்ரிங் ரோல், இட்லி, தோசை, பொங்கல் என களை கட்டியது.
சாப்பிட உட்கார்ந்த அபிஷேக் மலைத்து போய் ஆதவனை பார்த்தான்.
“மச்சி என்னடா இவ்ளோ இருக்கு?”
“இது செட்டிநாடு ஸ்பெஷல். சாப்டு பாருடா” என சொன்னான்.
அவர்கள் கூட வந்த ஜோஸ்வினியோ
“என்ன அபிஷேக் இன்னிக்கே திணறினா எப்டி? மேரேஜ் முடியற வரையும் எவ்ளோ வெளுத்து வாங்கலாம் தெரியுமா?” என்று புன்னகையுடன் சொன்னாள்.
அவள் சொன்னதில் சிரித்தவன் “நீங்க சொல்றது கரெக்ட் தான். பட் நான் இப்படி சாப்பிட்டா ஒரு ரவுண்ட் இன்கிரீஸ் ஆகிடுவேன்”
“அட… சும்மா சாப்பிடுங்க அபிஷேக்” என்றவள் சொன்னதும் அவளையும் சாப்பிட கூப்பிட்டான்.
“ஃபர்ஸ்ட் நீங்க சாப்பிடுங்க. அம்மா என்ன தேடுவாங்க. ஆது பாத்துக்கோ டா” என்றவள் அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் போவதையே கண்ணெடுக்காமல் பார்த்த அபிஷேக்கை பார்த்தவன்
“மச்சி என்னடா அப்டி பாக்கற?”
“இவங்க பேச ஸ்டார்ட் பண்ணா நிறுத்த மாட்டாங்களா? என்ன பேசவே விடல. அங்கிள் வந்ததுக்கு அப்புறம் தான் அமைதியானாங்க” என்று சொன்னவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.
“அவ அப்டி தான். கண்டுக்காத” என்றவன் சொல்ல அவன் மனமோ
‘எங்க அவங்கள பாத்தாலே ஆட்டோமெட்டிக்கா கண்ணு அவங்க கிட்ட தான் போகுதே’ என்று யோசித்தபடியே சாப்பிட்டான்.
“மச்சி காலைல ஏதாவது ஃபங்ஷன் இருக்கா?”
“ஆமாடா. எங்கேஜ்மென்ட் இருக்கு”
“இப்போ தான் பண்ணுவாங்களா என்ன?”
“இல்லடா. முன்னாடியும் பண்ணுவாங்க. பட் யுவ்ராஜ் நேத்து தான் வந்தாங்க. அதான் இன்னைக்கு வெச்சுட்டோம்”
“யுவ்ராஜ் யாரு”
“அவரு தான் மாப்ளை டா” என்று இவர்கள் சாப்பிட்டு முடித்து உள்ளே வந்த போது நிறைய தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
“டேய் என்னடா இது? இப்படி வெச்சிருக்காங்க”
“ஆமாடா. நான் சொன்னேன்ல எங்கேஜ்மென்ட்னு. அந்த ப்ரிப்ரேஷன் தான்” என்று விளக்கம் கொடுத்தான்.
அங்கே பூ, பழம், பாக்கு, வெத்தலை, மிட்டாய், தேங்காய் ஆகியவை தட்டுகளில் ஒவ்வொரு தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இவனிடம் பேசி கொண்டே அபிஷேக் சுற்றுப்புறத்தை கவனிக்க அங்கே ஜோஸ்வினி அவளது உறவினரிடம் வாயடித்து கொண்டிருந்தாள்.
அந்த பக்கம் சென்ற பார்வை அவளை விட்டு எங்கேயும் அகலவில்லை.
அப்போது சாதாரணமாக இருந்தவள் இப்போது மிதமான மேக் அப்பில் இருந்தாள்.
அவனிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்த ஆதவன் அவன் தன்னை கவனிக்கவில்லை என்றதும் அபி என்று கத்தினான்.
“மச்சி…”
“என்னடா யோசிச்சிட்டு இருக்க?”
‘உன் கசின தான்டா பாக்கறேன்’ என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியே
“இல்லடா. நிறைய ரிலேட்டிவ்ஸ்… எவ்ளோ பெரிய ஹவுஸ்? எப்படிடா இத மேனேஜ் பண்ணுவீங்க?”
“இப்போ எல்லாம் வெளியூர்ல செட்டில் ஆயிட்டதால மேரேஜ் அப்போ எல்லாம் மீட் பண்ணிப்போம் டா. இங்க மேரேஜ் செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்” என்றவன் சொல்லி கொண்டிருக்கும் போது அவன் வீட்டில் அனைவரும் பரபரப்பானார்கள்.
“மச்சி… என்னடா நடக்குது?” என்று அபிஷேக் அவனை விசாரிக்க ஆதவன் வெளியே அவனை கூட்டி சென்றான்.
அங்கு ஒரு ஊரே வருவது போல வந்து கொண்டிருந்தார்கள்.
“மச்சி என்னடா இவ்ளோ கூட்டம்? ஊர்ல ஏதாவது ப்ராப்ளமா?” என்று பதறி போய் கேட்டான்.
“டேய் எங்கேஜ்மென்ட்டுக்கு எல்லாம் வராங்கடா. ஏன்டா நீ வேற?”
இவர்கள் பார்த்து கொண்டிருக்கும் போது அவர்கள் பின்னால் வந்தவர்களை வரவேற்க வீட்டில் இருந்து ஆட்கள் வந்தனர்.
இவர்களை பார்த்ததும் அருகில் வந்த ஜோஸ்வினி
“என்ன உன் ஃபிரண்ட் காத கடிச்சிட்டிருக்காரு?” என்று அபிஷேக்கை பார்த்து கேட்டாள்.
“அவன் நம்ம கூட்டத்த பாத்து பயந்துட்டான் ஜோ. என்ன ப்ராப்ளம்னு கேக்கறான்” என ஆதவன் விளக்கம் சொல்ல இவளோ விழுந்து விழுந்து சிரித்தாள்.
அபிஷேக்கோ தன்னை தான் அவள் கிண்டல் செய்கிறாள் என புரியாமல் தன்னை மறந்து அவளது புன்னகையை அவளது புன்னகையை ரசித்து கொண்டிருந்தான்.
“ஹே… அபி… இவங்க நிச்சயம் பண்ண வர்றவங்க. ஓகேவா?” என்றவள்
“அப்படியே கலவரம்னா நீ இருக்கேல்ல… எங்கள சேஃப் பண்ண மாட்டியா?” என்று கேட்க அபிஷேக் தான் அவளது அதிரடி கேள்வியில் திருதிருவென விழித்தான்.
அதனை பார்த்தவள் “சோ… சுவீட்” என்று தனது ஐஸ்கிரீம் குரலில் சொல்ல அவளை திகைத்து போய் பார்த்திருந்தான்.
பின் அனைவரும் வந்தவுடன் அவர்களை வரவேற்றவர்கள் தண்ணீர், ஜீஸ் என குடுத்து உபசரிப்பார்கள்.
பின்னர் முக்கியமானவர்கள் சேர்ந்து விவாதித்து நோட்டில் எழுத அபிஷேக் புரியாது ஆதவனை பார்த்தான்.
“என்னடா எங்கேஜ்மென்ட்னு சொன்ன? இப்போ நோட்ல எழுதிட்டு இருக்காங்க”
“அதுவா? ஃபங்ஷன் எப்போ வெச்சுக்கலாம்? எவ்ளோ நகை போடறோம்? அப்படினு எல்லா டீடெய்லும் அதுல எழுதுவாங்கடா”
“ஏன்டா பொண்ணோட பேரண்ட்ஸ் போடறது அவங்க இஷ்டம் தான? இத கூட நோட் பண்ணுவாங்களா?”
“மச்சி உனக்கு இன்னும் சரியா தெரியல. இந்த ஃபங்ஷன் முடியட்டும். உனக்கு நான் எல்லாம் காமிக்கறேன்டா” என்றவன் சொன்னவுடன் நடப்பதை கவனித்தான்.
நிச்சயம் முடிந்ததும் அங்கிருந்த ஒரு அறைக்கு அபிஷேக்கை கூட்டி சொல்ல அவன் பிரமித்து போய் பார்த்து நின்றான்.
அங்கு மாடியின் ஒரு பக்க நீளத்திற்கு குண்டூசியில் இருந்து தங்கம், வெள்ளி நகைகள்,வெண்கலம், எவர்சில்வர், பளிங்கு ஜாடிகள், மர சாமான்கள், நான்ஸ்டிக் மற்றும் தற்போது உபயோகிக்கும் இன்றியமையாத பொருட்களுடன் பெண்ணுக்கு தேவையான அனைத்து வகை உடைகளும் இருந்தன.
நலுங்கு தட்டு, வேவு கடகம், உள்ளாடைகள், சுரிதார்கள், பொட்டுகள், கிளிப்புகள், விதவிதமான காதணிகள் என அனைத்தும் இருந்தது.
“டேய் என்னடா இது? ஷாப் ஓப்பன் பண்ண போறீங்களா?” என்று கேட்டவனை ஆதவன் முறைத்தான்.
“இதெல்லாம் மாப்ள வீட்டுக்கு நம்ம குடுக்குற சீதனம்”
“என்னது?”
“ஆமாடா”
“இத தவிர ஆடி கார் வெளிய நிக்குது” என சொல்ல அபிஷேக் திகைத்து போய் அவனை பார்த்தான்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது ஜோஸ்வினி ஏதோ வேலையாக வந்தவள் அவர்களை பார்த்ததும் அங்கே வந்தாள்.
“இங்க என்ன பண்ற ஆது?”
“இவனுக்கு எங்கேஜ்மென்ட்ல என்ன பண்ணாங்கனு டவுட். அதான் இங்க கூட்டிட்டு வந்து காட்டினேன். சார் வாயடச்சு போய் நிக்குறாரு”
“இங்க பாரம்பரியமா இப்படி தான் பண்ணுவாங்க அபி” என்று ஜோஸ்வினியும் விளக்கம் கொடுத்தாள்.
“அப்போ உங்களுதுல மேரேஜ் பண்ணா ஈசியா செட்டில் ஆகிடலாம் போல”
“ஏன் உனக்கு இங்க செட்டில் ஆகணும்னு ஐடியா இருக்கா?”
“நீங்க மட்டும் ‘ஊம்’னு ஒரு வார்த்த சொல்லுங்க. இப்போவே மேரேஜ் பண்ணிக்கலாம்” என்று சொன்னவனை இருவரும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.
“அபிஷேக்” என்று இருவரும் ஒன்றாய் கத்த அப்போது தான் தான் சொன்னதை உணர்ந்தவன்
“ஏன்டா டேய் இவ்ளோ திங்க்ஸ் குடுத்தா யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா? நான் சும்மா ப்ளே பண்ணேன்டா. அதுக்கு ஏன்டா இப்படி பாக்கறீங்க ரெண்டு பேரும்?” என்றவனை ஜோஸ்வினி கொலை வெறியாய் பார்த்தாள்.
அவளை பார்த்தவன்
“ஏங்க கூல்ங்க” என சமாதானப்படுத்தினான்.
“நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி உன் வாயில இருந்து ஏதாவது வந்தது… நான் ஆது ஃபிரெண்டுனுலாம் பாக்க மாட்டேன். ஈவ்டீசிங் கேசுல உள்ள போட்ருவேன்” என்று சொன்னதும் ஜெர்க் ஆகி அவளை பார்த்தான்.
“ஏங்க நான் ஏதோ ப்ளே பண்ணேங்க. நீங்க போங்க” என்று அவளை போக சொன்னவனை ஆதவன் யோசனையாக பார்த்தான்.
“என்ன என்னடா பாக்குற?”
“நீ சும்மா தான் சொன்னியானு எனக்கு டவுட்டா இருக்கு”
“ஓ… காட். என்ன நம்பு டா. அவங்க உன் சிஸ்டர் டா. அப்படி எப்படிடா நினைப்பேன்?” என்று அபிஷேக் பீதியான குரலில் சொன்னான்.
“சோ வாட்? உன்ன மாதிரி ஒரு மாப்ள கிடச்சா எனக்கு ஓகே தான்” என்று சொல்லி ஆதவன் அபிஷேக் நெஞ்சில் பாலை வார்த்தான்.
என்ன தான் சொன்னாலும் இதற்கு மேலும் ஒரு வார்த்தை பேச கூடாது என்று அபிஷேக் மனதுக்குள் குறித்து கொண்டான்.
நிச்சயத்தின் போது எல்லா சம்பிரதாயங்களையும் முடித்தவர்கள் அனைவரையும் கல்யாணத்திற்கு வர சொல்லி அழைத்தார்கள்.
அதற்கடுத்த ஊர் பந்தி ஆரம்பமாகியது. அபிஷேக்கிற்கு தான் ஒவ்வொன்றையும் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருந்தது.
அடுத்து மாலையில் கொழு மேளம் வாசித்த பின் அங்காளி, பங்காளிகள் வந்ததும், சங்கு ஊதி மனைக்கு மண் எடுக்க பெண்கள் சென்றார்கள்.
அந்த மண்ணை வைத்து பூஜை செய்த பிறகு சாமியறையிலும், வளவின் முகப்பிலும் நடு வீட்டுக் கோலம் போட ஆரம்பிக்க அதனை அபிஷேக் கேள்வியாய் பார்த்தான்.
இந்த கொழு மேளம் என்பது இப்போதில் இருந்து மக்கள் வரக் கூடிய நிகழ்வுகள் ஆரம்பமாகிறது என்பதற்கு அறிகுறியாக நாதஸ்வரம், தவில் கொண்டு வாசிப்பார்கள்.
அபிஷேக்கிற்கு இவை எல்லாமே புதுமையாக இருந்தது. ஆதவனை ஒவ்வொன்றாக கேட்டு கொண்டிருந்தான்.
“டேய் என்னடா பண்றாங்க?”
“கோலம் போடறாங்க”
“வாவ்… பாக்க டிராயிங் செமயா இருக்கு”
“டேய் இதெல்லாம் ரிச்சுவல்டா”
“பட் ஒவ்வொன்னும் இன்ட்ரஸ்டிங்டா”
ஒவ்வொன்றாய் அபிஷேக் கவனித்து கொண்டிருந்தாலும் அவனையும் மீறி ஜோஸ்வினியிடம் பார்வை செல்ல அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறினான்.
அத்தியாயம் 24A
❤️ Loading reactions...
