அத்தியாயம்- 1

அன்புடை நெஞ்சம் தாம்

கலந்தனவே!!

 

அத்தியாயம் 1

 

“ஏய் அவளை விடுங்கடா. உங்களுக்கு என் கூட தானே பிரச்சனை. என்னை என்ன வேண்டுமானாலும் செய்துக்கோங்க. அவளை விட்டு விடுங்க டா… பாவம் டா அவள். இதுவரை சின்ன ஆசை கூட அவளுக்கு நிறைவேறுனது இல்லை. இப்போ தான் எல்லாம் கை கூடி வருது. அவள் வாழணும் வாழ வேண்டியவளை எதுவும் செய்யாதீங்கடா. த்தூ…நீங்க உண்மையான ஆம்பளைங்களா இருந்தா என் கூட ஒத்தைக்கு ஒத்த நின்னு சண்டை போட்டு என்னை மீறி  அதுக்கு அப்புறம் இவளை தொட்டு பாருங்கடா. இப்படி கோழை மாதிரி ஒருத்தன் கை காலை கட்டி போட்டு ஒரு பொண்ணை நாசம் பண்ண போறீங்களா?”

“இதோ பாருடா ஹீரோ வசனம் பேசுறாரு. ஆமாடா நாங்க கோழைங்க தான். முதல இவளோட அழகை ருசித்து விட்டு பிறகு உன்னை சொர்க்கத்துக்கு அனுப்புறோம்.”

“டேய் மாச்சான் சார் ரொம்ப துள்ளுறாரு அவருக்கு நம்ம தண்டனை கொடுக்க வேண்டாம்.”

“கண்டிப்பா மச்சி கொடுத்து தானே ஆகணும்.”

“அப்போ நம்ம அவரோட காதலியை அணு அணுவா ரசித்து ருசித்து பங்கு போட்டுகிறதை நேரடியா லைவ் ஆஹ் பார்க்க வைச்சிடலாமா?”

“அப்படியா சொல்ற மச்சி. ஆனா எனக்கு கூச்சமா இருக்குமே.”

“அட மச்சி, இதுக்கெல்லாம் கூச்ச படலாமா? போடா முதல நீயே தொடங்கு.”

அந்த கயவன் அவளை நெருங்க நெருங்க… அவளுக்கோ தன் மானத்தை காத்துக் கொள்ள வழியை தேடினாள் நான்கு புறமும் சுற்றி…

“பகவானே வாசுதேவ் கிருஷ்ணா அன்று  திரௌபதியின் மானத்தை காக்க தாம் வந்தீர்கள். ஆனால் இன்றோ என் மானத்தை காக்க யார் உள்ளார்..?”

“கட்…கட்…கட்…” என டைரக்டர் கத்த. 

வசனம் பேசிக் கொண்டு இருந்த சாராவோ, “ஏன் சார்?” 

“மேடம் கடைசி டைலாக்  காப்பாற்ற யார் வருவார் சொல்லணும் காக்க உள்ளார் இல்லை” என்று சொல்லி கடுப்பானார். 

“ஓ..! ஓகே சார், மறந்துட்டேன்.”

“மேடம் இதோட இருபதாவது டேக் மேடம். உங்க வசனம் மட்டும் சரியா சொல்லிட்டீங்கனா பேக் பண்ணிடலாம் மேடம். இப்பவே மணி நடுராத்திரி மூன்று மணியாச்சு. நாளைக்கு வேற சங்கத்துல மீட்டிங் இருக்கு. டேக் முடிச்சிட்டா நல்லா இருக்கும்.”

“ஹான் சரி சார் புரியுது புரியுது இந்த டேக்ல சரியா பினிஷ் பண்ணிடுறேன்” என சொல்லி விட்டு தன் டச்சப்பை அழைத்து தன்னோட மேக்கப்பை சரி பார்த்தாள். 

பின் மீண்டும் வசனங்கள் தொடங்க ஹீரோ தன் வசனத்தை அதே போல் சொல்ல இவள் முறை வரும் போதோ மீண்டும் மீண்டும் தவறாக கூறினாள். 

இப்படியே மேலும் பத்து டேக் போக கடைசியா ஒருவழியாக சரியாக சொல்லி முடித்தாள். பின் அவசரம் அவசரமாக பேக் சொல்லிவிட்டு அனைவரும் கலைந்தவாறு இருக்க இவளோ அப்படத்தின் ஹீரோவை தேடிச் சென்றாள்.

“ஹாய் வருண் கிளம்பலையா..?”

“போகணும் சாரா, நீ போகல.”

“என்  ஹீரோ இங்கே இருக்கும் போது எப்படி நான் போவேன் சொல்லு” என சொல்லிக் கொண்டே அவன் மடியில் அமர போக. 

அவனோ அவளை தவிர்த்து, “என் மனதை கொள்ளை கொள்ளும் பெண் நீ அல்ல சாரா. என் மனதை வெல்பவளுக்கு மட்டுமே இந்த வருண்வித்யூத்தின் மனதிலும் சரி மடியிலும் சரி அமர உரிமை பெற்றவள். அது நிச்சயமாக நீ கிடையாது.” என மிகுந்த திமிருடன் சொல்லி விட்டு போறவனை பார்த்து பொறாமை கொண்டாள். இவனை தனதாகிக் கொள்ள துடித்தாள். 

இவன் தான் வருண்வித்யூத்… இப்படத்தின் ஹீரோ. அழகு என்றால் அழகு அப்படி ஒரு அழகு. ஆண்களே பார்த்து பொறாமைப்படும் அழகன் இவன். 

பெண்களின் மனதில் நொடி பொழுதில் நுழைந்து இம்சை செய்யும் கள்வன் இவன். நம் நாட்டில் பல பெண்கள் இவன் மேல் பைத்தியமாக இருக்க இவன் யார் என்றே அறியாத ஒருத்தி இவனால் தன் வாழ்க்கையின் பயணத்தை மாற்றி நடக்க போவதை அறியாமல்  இவ்வுலகில் ஒரு ஓரத்தில் வாழ்ந்துக் கொண்டு இருந்தாள்.

இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் நம் நாயகி டிவி முன் அமர்ந்து காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் அருகில் வந்து அமர்ந்தபடி, “என்னங்க மேடம் இன்னிக்கு எந்த கலாட்டாவும் பண்ணாம சாப்பிட்டுட்டு இருக்க. ஏதோ ஒன்னு சரியில்லையே” என தன் தோழியிடம்  கேட்டாள் யாழினி.  

“இன்னும் கொஞ்ச நேரத்தில் என் ஆளு படம் போட போறாங்க டி, அதான் எந்த கலாட்டாவும் பண்ணல. இல்லனா இப்படி ஒரு கேவலமான கிச்சடிய போய் அமைதியா உட்கார்ந்து சாப்பிடுவேனா?” என்று யாழினி காதில் கிசுகிசுத்தவள்,

“எப்போ எல்லாம் என் ஆளு படம் போடுறாங்களோ அன்னிக்கு எல்லாம்  இந்த வார்டன் வேணும்னே இப்படி ஒரு கேவலமான சமையலை செய்ய சொல்றா டி. இவ தான் சொல்றானா அந்த உமா அம்மாவுக்கு என்னாச்சு? ஏன் இப்படி பண்ணுது?”  என தான் தங்கி இருக்கும் ஆசிரமத்தில் உள்ள புது வார்டனையும், சமையல் செய்யும் உமாவையும் திட்டிக் கொண்டு இருந்தாள் நம் நாயகி வர்ணிகா.

பிறந்ததும், பெண் பிள்ளை என்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு மனசாட்சியே இல்லாமல் பெற்றோர்கள் போக. அந்த வழியே வந்த மனிதர்கள் பிள்ளையை காப்பாற்றி போலீஸில் ஒப்படைத்தார்கள். 

அவர்கள் அந்த பெண் குழந்தையை காப்பகத்தில் கொண்டுச் சென்று சேர்த்தனர். அங்கே பல குழந்தைகள் ஏதோ ஒரு  விதத்தில் கை விடப்பட்டு உறவு இருந்தும் இது போல் ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார்கள். 

பிறந்ததிலிருந்தே ஆசிரமம் தான் அவளுக்கு எல்லாமே. பள்ளி படிப்பு முடித்து மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று கல்லூரி படிப்பிலும் கோல்ட் மெடல் வாங்கி தான் வாழ்ந்த ஆசிரமத்திற்கு மட்டும் இல்லாமல் பள்ளிக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்தாள். 

படித்த படிப்புக்கு வேலைகள் அவளுக்கு வந்த வண்ணம் இருக்க வர்ணிகாவோ அயல்நாட்டில் சென்று வேலை செய்ய பிடிக்காமல் தான் பிறந்து வளர்ந்த இந்தியாவிலேயே இருந்து வேலை செய்ய ஆரம்பித்தாள். 

யாழினியும், நம் நாயகி போல் யாரும் இல்லாமல் கைவிட பட்டவள் தான். என்ன யாழினிக்கு விவரம் தெரிந்த ஆறு வயதில் இங்கே வந்து சேர்ந்தாள்.

பெற்றோர்களுக்கு பிள்ளை பாரமாக இருந்தார்கள். 

யாழினியும் நன்றாக படித்து முதல் மதிபெண் எடுக்க முடியவில்லை என்றாலும், கிட்ட தட்ட அவளும் நன்றாகவே படித்தாள். என்ன இன்னும் முயற்சித்தால் நம் நாயகி போலவே முதல் இடம் பிடித்து இருக்கலாம். 

இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தனர். ஆனால் இருவருக்கும் டிபார்ட்மெண்ட் பிரித்து அனுப்ப  இருவரும் பிரிந்து சென்று வேலை செய்ய ஆரம்பித்தனர். ஒரே கம்பெனி என்றாலும் இந்த சின்ன பிரிவு கூட இருவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!