அத்தியாயம்- 4

அத்தியாயம் 4

இருவரும் ஆசிரமத்திற்கு வந்ததும் அங்கே மற்றவர்கள் இவர்களை சூழ்ந்துக் கொண்டு விசாரித்தனர். 

பின் வார்டன் வந்து இருவரையும் நிர்வாகம் அழைக்கிறது என கூறி விட்டு அவர்களை அழைத்துக் கொண்டுச் சென்றார். 

ஆபிஸ் ரூமிற்கு சென்றதும் அந்த பெரிய சுழலும் நாற்காலியில் அமர்ந்து இருந்த பெண்மணியை பார்த்ததும் இருவருக்கும் கால்கள் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. 

“இரண்டு பேரும் என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்கீங்க தெரியுமா?” என்று அவர் கோபமாக கேள்விக் கேட்டு தன் முன் இருந்த டிவியை ஆன் செய்தார். 

“அதில் மிக பெரிய சினிமா நடிகர் வருண் வித்யூத் இன்று இரு பெண்களுக்கு விபத்தை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் அதில் ஒரு பெண்ணை தன் தோளோடு அணைத்தவாறு தன் காரில் ஏற்றிக் கொண்டுச் சென்றார். 

இதையெல்லாம் பார்க்கும் போது இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பது போல் வெளிவட்டாரத்தில் பேசுகிறார்கள். இன்னும் தெளிவாக சொல்ல போனால், இப்பெண் வருண் வித்யூத்தின் ஆசை காதலியா? இல்லை நாயகியா? என்று பல கேள்விகள் வந்த வண்ணம் இருக்க. இதற்கு பதில் அளிப்பாரா வருண் வித்யூத்?” என்ற கேள்வியோடு அந்த செய்தி முடிந்தது. 

இதை பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி. சாதாரணமாக நடந்த விஷயத்தை இந்த சேனல்காரர்கள் எப்படியெல்லாம் கதைக்கட்டி சொல்கிறார்கள் என்று. 

நிர்வாகப் பொறுப்பில் உள்ள பெண்மணி, “சொல்லுங்க, இப்போ உங்க பதிலை” என்று கேட்டார்.

வர்ணிகாவோ, “என்ன பதில் சொல்லணும் அம்மா? இவங்க சொல்றது உண்மை இல்லைனு உங்களுக்கு தெரியும். இந்த ஆளு ஒரு நடிகர்னு எனக்கே இப்போ தான் தெரியும். நாங்க ஸ்கூட்டியில் போயிட்டு இருக்கும் போது ரோட்டுக்கு நடுவுல ஒரு நாய் வந்துடுச்சி அதை காப்பாற்ற நான் சடன் ப்ரேக் போட்டேன்” என பொய் சொன்னவளின் முன் மீண்டும் டிவி ஆன் செய்து பார்க்க சொல்ல. 

இப்போது இவர்கள் இருவரும் காரில் பேசியது அனைத்தும் ஒன்று விடாமல் ஓடியது. 

“இதை எப்போ டி சேனல்காரங்க எடுத்தாங்க?” என்று அப்பாவியாக அவள் கேள்விக் கேட்க. 

யாழினி வாயை பிளந்துக் கொண்டு,  “நம்ம முகம் கூட டிவில எல்லாம் வருதுடி” என்று நிலைமை புரியாமல் சொல்ல. 

அப்பெண்மணியோ கோபத்துடன் தன் நற்காலியில் இருந்து எழுந்து, “ஸ்டாப் இட், நான் என்ன பிரச்சனையை பேசிட்டு இருக்கேன். நீங்க என்ன பேசுறீங்க? இப்போ உங்களால நம்ம ஆசிரமத்திற்கு எவ்வளவு கெட்ட பெயர் தெரியுமா?” என கத்தினார். 

எத்தனை முறை இவர் கோபத்தை பார்த்து இருந்தாலும், இன்று ஏனோ கோபத்தின் விளைவு என்னவாக இருக்குமோ என்று பயந்தார்கள். வர்ணிகாவிற்கோ சிறிது நேரத்திற்கு முன் அவன் மேல் கரைந்த கோபம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.

“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. எங்க மேல் தான் தப்பு நான் தான் டக்குனு ப்ரேக் போட்டேன். அது இவ்வளவு பெரிய விஷயமா மாறும்னு எதிர்பார்க்கல. இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள். இதன் பிறகு எந்த தப்பும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்” என்று ஏதோ ஏதோ பேசி அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தாள். 

அவரோ இவளை பிஞ்சிக் குழந்தையில் இருந்து எடுத்து வளர்த்த காரணத்தினாலோ என்னவோ அவளின் சமாதானத்திற்கு இறங்கி வந்தார்.

“இது தான் உங்களுக்கு முதலும், கடைசியுமா இருக்கணும். இதுக்கு அப்புறம் அந்த வருண் விஷயத்தில் உங்களை சம்மந்தப்படுத்தி எதாவது நியூஸ் வந்துச்சுனா அதுக்கு பிறகு உங்க இரண்டு பேருக்கும் இந்த ஆசிரமத்தில் இடம் இல்லை.” என சொல்லியவர், “ஆமா நம்ம ஆசிரமத்தை பத்தி எதாவது அந்த நடிகர் கிட்ட சொன்னீங்களா?” என கேட்க இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முழித்துக் கொண்டனர். 

யாழினியோ மனதில், ‘பாவி அந்த ட்ரைவர் அட்ரஸ் கேட்டதும் பெரிய இவளாட்டும் விசிட்டிங் கார்டு தூக்கிக் கொடுத்துட்டு வந்து இருக்காளே’ என யாழினி யோசிக்க.

வர்ணிகாவோ, அவசரம் அவசரமாக, “இல்லை அம்மா நம்ம ஆசிரமத்தை பத்தி ஒரு வார்த்தை கூட வாய் திறக்கல” என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வாட்ச்மேன் உள்ளே வந்து,

“அம்மா நடிகர் வருண் சார் கார் ட்ரைவர் வந்து நம்ம பசங்க ஸ்கூட்டியை கொடுத்துட்டு போனாரு இந்தாங்க சாவி.” என சொல்லி சாவியை டேபிளில் வைத்து விட்டு போக.

அவரோ இருவரையும் பார்த்து கோபமாக கத்த ஆரம்பிக்க. இருவரும் அங்கே இருந்து விட்டால் போதும் என்று ஓடினர். 

அதிலும் அவள் போகும் போது தன் ஸ்கூட்டி சாவியையும் எடுத்துக் கொண்டு போனாள். 

அவர்கள் போனதும் வார்டன், “அம்மா இதுனால பிரச்சனை எதுவும் வராதா?” என கவலையுடன் கேட்க 

அவரோ, “தெரியவில்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு இந்த பிரச்சனைக்கான தீர்வை யோசிக்க ஆரம்பித்தார். 

வெளியே வந்த இருவரும் ஸ்கூட்டியை பார்க்க அங்கே தன் வண்டியுடன் காலையில் தான் எடுத்துக் கொண்டு போன உடமைகளும் ஒன்று விடாமல் இருப்பதை பார்த்த இருவருக்கும் சற்று நிம்மதியை கொடுத்தது. 

என்ன அவளுக்கு தான் இத்தனை நாள் சேர்த்து வைத்த நல்ல பெயரும் கெட்டு போய் கஷ்டப்பட்டு செய்த வேலையும் வீணாகியதை நினைத்து அவன் மேல் மீண்டும் மீண்டும் கோபம் அதிகம் ஆகிக் கொண்டே போனது. 

பின்னர் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு இருந்த சமயம் அவள் ப்ராஜெக்ட் அச்சு அசலாக அவள் வடிவமைத்தது போலவே இருக்க. அதை எடுத்து பார்த்தவள் யாழினியிடம் காட்டினாள். 

“இது தான் அங்கேயே நாசமாகிடுச்சில டி. அப்புறம் எப்படி?” என்று கேட்க. 

வர்ணிகாவோ, “எல்லாம்  அவன் வேலையா இருக்கும்” என சொல்லிக் கொண்டு இருந்த சமயம் ஸ்கூடியில் ஒரு கார்ட் இருக்க அதை எடுத்து படித்தாள். 

“என்னால் ஏற்பட்ட நஷ்டத்தை நான் திரும்ப உன்னிடம் லாபத்துடன் கொடுத்து விட்டேன். ஆனால் உன்னால் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு நீ என்ன செய்ய போகிறாய்?” என்று எழுதி இருக்க 

அவள் வாயோ, “பார்த்தியாடி இவன் எழுதி இருக்கும் எழுத்தில் கூட எவ்வளவு திமிரு தெரியுது.” என்று சொல்ல 

யாழினி, “என்னடி இப்படி சொல்லி இருக்காரு. இப்போ என்ன செய்யுறது?” என்று பாவமாக கேட்க 

அவளோ, ‘அதற்கு ஒரு வழி இருக்கு நாளைக்கு அந்த நடிகனை போய் பார்த்துட்டு பதிலுக்கு பதில் கொடுத்துட்டு வரலாம்’ என மனதில் நினைத்தவள் தன் தோழியிடம் எதுவும் கூறாமல் சென்றாள். 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!