அத்தியாயம் 27.2

 

அவர்களை பார்த்தவுடன் ஆதவன் சந்தோஷமாக கையாட்ட ஜோஸ்வினியோ அமைதியாக வந்தாள்.

“மச்சி உன் சார்ட்டர் பாக்ஸ்க்கு என்னாச்சு? ஏன் பேச மாட்டேங்கறா?” என்று வம்பிழுத்தான்.

ஆனால் அவளோ அபிஷேக்கின் கையை இறுக பிடித்து கொண்டு விடவில்லை.

அபிஷேக்கின் சைகையில் புரிந்து கொண்டவன் அமைதியாக வண்டியை ஓட்ட அவளோ ஆதவன் பொருட்டு கூட அபிஷேக்கை விட்டு நகரவில்லை.

வீட்டுக்கு வந்த போதும் ஜோஸ்வினி யாரிடமும் பேசாமல் அவளுடைய அறைக்கு சென்றாள்.

“ஜோஸ்வினி எங்கே நீ உன் ரூமுக்கு போற? அங்கிள், ஆன்ட்டிட்ட பேச மாட்டியா?” என கேட்டான்.

அவளோ இல்லையென்று தலையாட்டிய படி அமைதியாக சென்றாள்.

“அபிஷேக் என்னாச்சு அவளுக்கு?”

“எங்களுக்குள்ள நடந்த ஃபைட்ல நான் உண்மைய சொல்லிட்டேன் அங்கிள்”

“என்ன சொல்றீங்க?”

“ஆமா அங்கிள். அவ ஷியாம் பத்தி பேசினா. நான் டென்ஷன் ஆகி சொல்லிட்டேன்”

“ஐய்யய்யோ… என் பொண்ணு இத எப்டி தாங்குவா?” என்று காயத்ரி கலங்க ஆரம்பித்தாள்.

“ஆன்ட்டி நான் சமாதானப்படுத்தினேன். ஆனா அப்பப்போ அவ டிஸ்டர்ப்ட் ஆகறா. அவள கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளிய கொண்டு வரணும். டோன்ட் வொர்ரி ஆன்ட்டி”

“நீங்க கொஞ்ச நேரம் அவ கூட இருங்க. எப்டினாலும் அவ உங்கள எதிர்பார்ப்பா” என சொல்ல காயத்ரி அவசரமாக ஜோஸ் வினியின் அறைக்கு சென்றார்.

அவர் செல்கையில் படுத்திருந்தவளோ கண்ணீர் உகுக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளுக்கு ஏதேதோ ஞாபகம் வந்தது. இந்திய மண்ணை மிதித்த உடனே.

ஷியாமில் இருந்து அபிஷேக் பிரண்ட்ஷிப் ஆரம்பித்தது வரை ஞாபகம் வந்து அவளை அலைக்கழித்தது.

அதிலும் அபிஷேக்கை நினைக்கையில் அவளுக்கு குற்ற உணர்வாகி போனது.

அவன் தனது நன்மைக்காக செய்ததை தான் ஆரம்பத்தில் இருந்தே அவனை குற்றவாளியாக பார்த்தோம் என்று ஞாபகம் வர அவளுக்கு கண்ணீர் பொங்கியது.

“ஜோ… ஏன்டா அழற? நாங்க எல்லாம் இருக்கறப்ப நீ ஃபீல் பண்ணலாமா?”

“ம்மா… உங்க மேல நான் ரொம்ப கோபப்பட்ருக்கேன்மா. ஆனா இப்படி ஒரு ரீசன் இருக்கும்னு யோசிக்கவே தோணல மா. சாரிமா”

“ஜோஸ்வினி இதெல்லாம் பிராப்ளம் இல்லடா. நீ ஒண்ணும் நினைக்காத” என்று ஆறுதல் சொல்லும் போது ஆதவன் உள்ளே நுழைந்தான்.

“சித்தி நீங்க அவங்களுக்கு குடிக்க ஏதாவது குடுங்க. நான் அவகிட்ட பேசிக்கறேன்”

அவனை ஒரு பார்வை பார்த்தவள் அமைதியாக அவனை வெறித்தாள்.

“என்ன ஜோ… ஏன் இப்டி இருக்கற?”

“என்னால உங்க எல்லாருக்கும் கஷ்டம்டா” என்றவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.

“ஜோ… ஃபர்ஸ்ட் அழறத நிறுத்து” என்றவன் நடந்ததை சொல்ல அதிர்ச்சியில் உறைந்தாள்.

“அபிஷேக் முழுக்க முழுக்க உனக்காக மட்டும் தான் மேரேஜ் பண்ணான்.‌ நீ புரிஞ்சிப்பேனு நம்பறேன்” என்று சொல்ல அமைதியாய் தலை அசைத்தாள்.

“நீ ரெஸ்ட் எடு. நாளைக்கு வரேன்” என்று சொன்னவன் அங்கிருந்து அகன்றான்.

காயத்ரி ஜோஸ்வினியை சாப்பிட வைத்தவள் தூங்க வைத்தாள்.

அபிஷேக் உள்ளே வந்த போது அவள் தூங்கி கொண்டிருக்க அவன் ஜோஸ்வினியின் முடியை கோதினான்.

அபிஷேக் வந்ததை கவனித்தவள் அவன் மடியில் படுத்து கொண்டாள்.

“பேபி தூங்கலையா?”

“தூக்கம் வரல” என்றவள் அவனை உற்று பார்த்தாள்.

“என்னடா என்னையே பாக்கற?”

“நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தறேனா?” என்று கலங்கிய குரலில் பேசினாள்.

“ஏன்டா… தேவையில்லாம யோசிக்காத. யூ ஜஸ்ட் ஸ்லீப்” என்றவன் அவள் தூங்கும் வரை அங்கேயே இருந்தான்.

உண்மை தெரிந்த அன்று அவளை தூங்க வைக்க வேறு வழியில்லாமல் தூக்க மாத்திரையை பயன்படுத்தினான்.

ஆனால் இப்படியே அவள் இருந்தால் என்ன ஆகும் என்று அவனுக்கு ரொம்ப பயமாகி போனது.

அதில் தன்னையறியாமல் அவளை இறுக அணைக்க

“ஐ ஆம் சாரி அபி” என்று முனகியவள் அவனோடு ஒன்றினாள்.

அவளை தனது இதய கூட்டில் பத்திரப்படுத்தியவன்

“ஐ ஆம் ஆல்வேஸ் வித் யூ பேபி” என முத்தமிட்டான்.

                *****

அடுத்த நாள் அபிஷேக் வெளியே கிளம்பி கொண்டிருந்தான்.

“எங்கே அபி போற?”

“போற இல்ல.‌ போறோம்”

“எங்க?”

“அது நீ வந்து தெரிஞ்சிக்கோ. ஆது வரான். நீங்க ரெடியாகுங்க” என்றதும் கிளம்ப ஆரம்பித்தாள்.

ஆதவன் வந்தவுடன் மூவரும் கிளம்பினார்கள்.

கார் நகரத்தை தாண்டி ஒரு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது.

“எங்கடா எங்கெங்கேயோ போறீங்க?”

“வெயிட் பேபி. டென் மினிட்ஸ் தான்” என்று சொல்ல கார் சில கிலோ மீட்டர்கள் தாண்டி ஒரு ஓட்டு வீட்டின் முன் நின்றது.

அது பார்க்க இரண்டு அறைகளும், ஒரு சிறிய அறையும் கொண்டு காற்றே புகாதவாறு இருந்தது.

ஜன்னல் எங்கோ ஒரு ஓரத்தில் இருந்தது.

இவர்கள் சென்ற போது வீட்டின் முன் இருந்த ஒருவன் அபிஷேக்கிற்கும், ஆதவனிற்கும் வணக்கம் வைத்தான்.

“ஏதாவது ப்ராப்ளம் பண்ணுனாங்களா?”

“இல்ல சார்”

“நீ மட்டும் தான் இருக்க. இன்னொருத்தன் எங்க?”

“பக்கத்தில போனான் சார்.‌ வந்துருவான்”

“தேவையில்லாம வெளிய போக கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல”

“சரி. டோர் ஓப்பன் பண்ணு” என்றதும் அவன் கதவை திறந்து விட்டான்.

ஜோஸ்வினி மிரட்சியுடன் பார்த்த படி உள்ளே சென்றாள்.

அபிஷேக் அவளை கவனித்தவன் தனது கை வளைவில் கொண்டு வந்தான். அபிஷேக்கை ஏக்கமாக பார்த்தவள் அவனது கைகளை இறுக பற்றி கொண்டாள்.

ஆனால் அபிஷேக்கிற்கு தான் அவளது பார்வை என்னவோ செய்தது.

‘ஷியாம‌ பாக்க தான் இவங்க நம்மள இவ்வளோ ஏக்கமாக பாக்கறாங்களா?’

‘அப்போ ரெண்டு நாளா அவ்ளோ சொல்லியும் புரிஞ்சிக்கலயா?’ என அவன் மனது சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ ‌பிதற்றியது.

அபிஷேக் இத்தனை நாட்கள் அவளுடைய விஷயத்திற்காக தான் மன உளைச்சலில் இருக்கிறான் என நினைக்க அவளது பார்வையை பார்த்தவனுக்கோ இதயம் எம்பி குதித்தது.

அவனது இதயம் என்னவென்று தெரியாமல் படபடவென்று அடித்து கொள்ள அவன் இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கு துல்லியமாக கேட்டது.

கதவை திறந்ததும் ஷியாமை பார்த்தவள் திடுக்கிட்டாள்.

அவன் மிகவும் ஒல்லியாகி இருந்தான். கண்கள் இரண்டும் உள்ளே போனது போல இருந்தது. ஏதோ பைத்தியக்காரன் போல இருந்தான்.

“ஜோஸ்வினி என்ன காப்பாத்து ஜோஸ்வினி… இவன் என்ன கொல பண்ணிடுவான். என்ன காப்பாத்து” என கதறி அழுதான்.

அபிஷேக்கோ இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

“நீ என்ன பண்ண உன்ன காப்பாத்த? உனக்கு எது பண்றதா இருந்தாலும் என் அபி கரெக்டா பண்ணுவான். அதுக்கு இப்போ நீ இருக்கிறதே சாட்சி.‌ உன்னய ஓட ஓட விரட்டி சாகடிக்கணும்டா” என்றவள் அபியிடம்

“நீ இவன தான் பாக்க வரேனு கூப்ட்ருந்தா நான் வந்திருக்க மாட்டேன்டா. ஷியாம் நம்மள பிரிக்க பாத்தான். அவன் முன்னாடியே சொல்றேன். ஐ லவ் யூ அபி” என்றவள் ஷியாமை பார்த்து

“எந்த‌ பொண்ணும் ஒரு ஆண்கிட்ட செக்யூரிட்டியூம், லவ்வும் தான் விரும்புவா. ஆனா நீ பண்ணது…” என்றவளுக்கு குரல் நடுங்கியது.

“பேபி”

“என் லைஃப்ல நான் ஷியாம்னு ஒருத்தன் மீட் பண்ணவே இல்ல. அபி ஏன்டா இவன உயிரோட விட்டு வச்சிருக்க? இவன பாக்கறதே பாவம்” என அங்கிருந்து வெளியேறினாள்.

ஷியாமோ அவள் பேசியதை ஏற்று கொள்ள முடியாதவன் போல அவளை கத்தி கூப்பிட்டான்.

“ஹேய்… டோன்ட் ஷவுட். அவ பேர சொல்ல கூட உனக்கு தகுதியில்ல” என்றவன் அவனை ஓங்கி அறைந்தான்.

“ஆது நீ இவன‌ லாக் பண்ணிட்டு வா. ஜோ தனியா இருக்காங்க.‌ நான் வெளியே போறேன்” என்று கிளம்பினான்.

அவன் வெளியே சென்று பார்க்க ஜோஸ்வினி கண்களை மூடியபடி அமர்ந்திருந்தாள்.

“ஜோஸ்வினி ஏன் வந்தீங்க? ருத்ரன பாக்கலயா?”

“எனக்கு யாரையும் பாக்க வேணாம். எனக்கு உன் கூட தான் இருக்கணும். நீ இருந்தா தான் எனக்கு நிம்மதியா மூச்சு விட முடியுது.‌ மத்த யாரையும் பாக்க பிடிக்கல. என்ன விட்டு எங்கயும் போகாதாடா” என்று உடைந்த குரலில் சொன்னாள்.

அவளது கதறலை கேட்டதும் அவளை தனது நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன்

“பேபி தேங்க்ஸ் பேபி… தேங்க்ஸ் பேபி” என்று பிதற்றியவன் அவன்‌ முகமெங்கும் சந்தோஷம் ஊற்றெடுக்க அசுர வேகத்தில் முத்தம் கொடுத்தான்.

அவளும் அவனது முத்தத்தினை கண்களை மூடியபடி ஆழ்ந்து அனுபவித்தாள்.

அவனோ

“எனக்கு நீ அவன பாக்க வர்றப்ப எங்க நீ அவன லவ் பண்றேனு சொல்லிடுவியோனு பயமா இருந்தது பேபி” என்றவன் கலங்கிய குரலில் சொல்ல அவனை சப்பென்று அறைந்தாள்.

“என்ன பாத்தா உனக்கு எப்டி இருக்குடா? மேரேஜ் பண்ணிட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போற மாதிரி இருக்கா?” என‌ பத்ரகாளியாய் முறைத்தவளை பாவமாக பார்த்தான்.

“இல்ல பேபி” என்று அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது ஆதவன் வர

“ஒன் மினிட்‌ பேபி” என்றவன் ஆதவனிடம் சில நிமிடங்கள் பேசினான்.

இருவரும் விவாதித்து ஒரு முடிவுக்கு ‌வந்தார்கள்.

அதன்படி ஆதவனை அங்கே விட்டு விட்டு இருவரும் புறப்பட்டார்கள்.

“ஆது வரலையா?”

“இல்லடா. அவனுக்கு இன்னொரு‌ வேல இருக்கு. அப்றம் வருவான்” என சொன்னான்.

சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தவள் 

“என்ன பாத்தா உனக்கு ஓடி போற மாதிரி இருக்காடா?” என்று தலைமுடியை பிடித்து ஆட்டினாள்.

“ஆ…ஆ…‌ பேபி…” என அவன் கத்த கார் அவன் கைகளில் தடுமாறியது.

“ஏய்… என்னடி பண்ற? விடு” என்றவன் சொல்ல பதறி போய் அவனை விட்டாள்.

அவன் காரை நிறுத்தியும் அவள் தனது கோபப் பார்வையை விடவில்லை.

“செர்ரி நான் உன்ன அப்டி நினப்பேனா?”

“பின்ன என்னடா சொன்ன? அவன பாக்கறப்ப உனக்கு ஏன் சம்பந்தமே இல்லாம பயமா இருக்கணும்?”

“ஆமா. நீ உள்ளே போறப்ப என்ன எவ்ளோ ஏக்கமா பாத்த? அப்போ எனக்கு எப்டி இருக்கும்?”

“எரும மாடு… எரும மாடு… இந்த ப்ராப்ளம் தெரிஞ்சதுல இருந்து என் பக்கத்திலேயே இருக்க மாட்டேங்கறியே. அதான் கூடவே இருன்னு பாத்தேன்” என்றவளை விழி விரிய பார்த்தான்.

“ஆனா அவன விட்டு பிரிய முடியாம தான் அப்டி பாத்தியோனு நினைச்சேன் பேபி” என்றவனை தலையில் அடித்து கொண்டாள்.

“பேபி நீ எப்போ என் மனசுக்குள்ள வந்தேனு தெரியல. மேரேஜ் முடிஞ்சப்போ கூட ஒண்ணும் தோணல. ஆனா ஆஃப்டர் ஒன் மந்த் நான் ஃப்ரான்ஸ் போனப்புறம் தான் உன்ன ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருந்தது”

“அப்றம் உடனே அங்க இருக்க வேலைய முடிச்சுட்டு அடிச்சி பிடிச்சு இங்க வந்தா எனக்கு உன்ன பத்தின டீடெய்ல்ஸ் அவ்வளவா தெரியல. ஆதவன் கிட்ட‌ கொஞ்சம் கொஞ்சமா விசாரிச்சு உன்ன பத்தி டீடெய்ல்ஸ் தெரிஞ்சிகிட்டு உன்ன பாக்க ஈவ்னிங் உன்னோட காலேஜ்க்கு வருவேன்”

“அப்போவேவா…” என்று ஆச்சரியப்பட்டவள்‌ 

“ஆனா நான் உன்ன பாத்ததில்லையே”

“நீ பஸ்க்கு வெயிட் பண்றப்ப சைலண்ட்டா நான் உன்ன சைட் அடிப்பேன்” 

“டேய் நீ கேடிடா”

“அந்த டைமிங்ல உங்கள ரெண்டு நாளா பாக்க முடியலையேனு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் நீங்க புரோஜெக்ட் சென்டர்ல ஷியாம் கூட பேசிட்டு இருந்ததா கூட்டிட்டு வந்தான். அந்த டே என்னால மறக்க முடியாது”

“என்னாச்சு டா? ஏன் இவ்வளோ டல்லா பேசற?” என்று ஆறுதலாக அணைக்க அவனோ அன்றைய நினைவில் கண்ணீரை சிந்தினான்.

“அபி… என்னாச்சு? ஏன் அழற?” என்று அவன் கண்ணீர் துளி பட்டதும் திகைத்தாள்.

“நத்திங் செர்ரி” என்று சமாளித்தவன்

“அன்னைக்கு தான் நான் உன்ன லவ் பண்றேனு புரிஞ்சது. அதே டைம் நீ எனக்கு இல்லேன்னும் அன்னைக்கு தான் புரிஞ்சுது” என்று சொல்ல அவள் வார்த்தை வராமல் திணறினாள்.

“அ…‌ அபி” என்றவளை இறுக அணைத்தவன் அவளை தனது கை வளைவிலேயே வைத்து கொண்டான்.

இருவரும் இப்போது கடற்கரையில் இருந்தனர்.

“நானும் சில பல போராட்டங்களுக்கு அப்புறம் உன்ன அவனோட சேத்து வைக்கலாம்னு முடிவு பண்ணப்ப தான் எனக்கு அவன் கிட்ட ஏதோ சரியில்லனு புரிஞ்சுது. அப்போ விவேக் கிட்ட ஹெல்ப் கேட்டேன். ஆக்சுவலி அன்னைக்கு நான் உங்கள ஃபாலோ பண்ணி கூட வந்தேன். அப்போ எவ்ளோ போல்டா நீங்க ஃபேஸ் பண்ணீங்க?” என்றவன்

“இப்போ அந்த தைரியம் எங்கங்க‌ ஜோ?” என்று வினவினான்.

“நீ சொல்றப்ப எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது. என்னோட தைரியம், தன்னம்பிக்கை எல்லாமே நீ தான். நீ இல்லேனா நான் மீண்டிருக்க முடியாது”

“ஆனா ஜோஸ்வினி நீங்க டல்லா தான் இருக்கீங்க”

“நானும் பொண்ணு தானே”

“ஜோ… உங்களுக்கு புரியல. அந்த பொறுக்கிங்க பொறந்த குழந்தைய கூட விடறதில்ல தெரியுமா?”

“அ…‌அபி”

“ஆமா. இதுக்காக நாம ஏதாவது ஸ்டெப் எடுத்து ஆகணும். நம்மள மாதிரி பாதிக்கப்பட்டவங்க எவ்ளோ பேர் இருக்காங்க. அந்த சின்ன பேபிஸ் என்ன பாவம் பண்ணாங்க? இந்த மாதிரி யோசிங்க ஜோ” என்று சொல்ல

“ஆமாடா.‌ நீ சொல்றது கரெக்ட் தான். நம்ம இனி இதுக்கான ஸ்டெப்ஸ் எடுக்கணும்” என்றவள் அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.

“செர்ரி நீங்க லிப் கிஸ் தான் குடுக்கணும்”

“பப்ளிக் ப்ளேஸ்னு பாக்குறேன்”

“நான் என் ப்ளேஸ்ல தானே கேக்கறேன்” என்றவன் குறும்பான குரலில் சொல்ல  சிணுங்கியபடியே அவனை அடித்தவளை ரசித்தவன் சிரித்தபடியே அடிகளை வாங்கி கொண்டான்.

பின் ஏதோ யோசித்தவன்

“அன்னைக்கு ஏன் ஜோ அப்டி பேசினீங்க? நடு ரோட்ல நிக்கறேனு? எனக்கு அப்டியே குலையே நடுங்கிடுச்சு”

“அங்க தான் அப்டினா ஃபிரான்ஸ்ல அனாத மாதிரி விட்டுட்டியேனு கேக்கறீங்க? ஏன் ஜோ நான் உங்கள அப்படியே விட்ருவேனா? என் கூட பழகியிருக்கீங்க தானே? கொஞ்சம் கூடவா என் மேல நம்பிக்கையே வரல” என்று வேதனையான குரலில் சொன்னான்.

“அது அப்டி இல்லடா. நான் அப்போ ரொம்ப பயந்துட்டேன். அல்ரெடி நம்ம ஃபைட் பண்ணிட்டு இருந்தது வேற எனக்கு அது ஸ்ட்ரெஸாவே இருந்தது. அது எல்லாம் சேந்து பேச வெச்சிடுச்சு. சாரிடா”

“நான் உங்களுக்காக பாத்து பாத்து செஞ்சேனே ஜோ. உங்களுக்கு புரியலையா?”

“புரிஞ்சிதுடா. அதையும் மீறி ஷியாம் என்னால தான் அஃபெக்ட் ஆனானோனு ஒரு கில்ட்டி ஃபீலிங். சோ அத மீறி யோசிக்க முடியல”

“என்னது கில்ட்டி ஃபீலிங்கா? எதுக்கும் ஒரு நியாயம் வேண்டாமாங்க ஜோ?” என்றவன்

“அவன் ஃபேர்வெல் பார்ட்டில வெயிட் பண்றேனு சொன்னவுடனே நீங்க ஓகே சொல்லிட்டிங்கனு எப்படி இருந்தது தெரியுமா?”

“ஏன் ஜோ அது உங்களுக்கு அவ்ளோ நாளா தெரியலையா? ஜஸ்ட் அவன் சொன்னா போதுமா? ஏதும் ஆழமா யோசிக்க மாட்டீங்களா?” என்றவனை வியப்பாய் பார்த்தாள்.

“நீ சொல்ற அளவுக்கு ஆழமா யோசிக்கல தான். பட் ஏன் அவன் வெயிட் பண்றேனு சொல்றப்ப சந்தோஷமே வரலனு உனக்கு தான் போன் பண்ண எடுத்தேன். ஆனா நீ போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிட்டே” என்றவனுக்கு அன்றைய நினைவில் முகம் வாடியது.

“நான் என் லவ் உன்ன சேராதானு ஏங்கிட்டு இருக்கறப்ப நீ அவனுக்காக வெயிட் பண்றேனு சொன்னதா விவேக் சொன்னப்ப என்னால எப்டி தாங்க முடியும் ஜோ?” என்றவன் விளக்கம் கொடுக்க ஜோஸ்வினி பதறி போனாள்.

“அபி என்னால தான் நீ அப்டி இருந்தியா? என் மனசாட்சி அப்போ என்ன கேள்வி கேட்டுச்சு தெரியுமா? உனக்காக உயிர‌ குடுக்க ஒருத்தன் உன் கூட இருக்கும் போது அவனோட கஷ்டம் என்னனு கூட தெரியாம நீ என்ன பண்ணேனு? அதான்  ஆதுவ நான் அனுப்பி விட்டேன். ஆனா அவன விட்டு பாண்டிச்சேரி போய்ட்டதா சொன்னாங்க. அங்கே போனா அங்கயும் நீ இல்ல. அந்த ஒன் வீக்கும் உன்ன எப்டி என் மனசு தேடுச்சுனு எனக்கு தான்டா தெரியும்” 

“நான் உங்கள அப்போவே கவனிச்சேன் செர்ரி‌. எனக்கு கை பரபரன்னுச்சு. மனசு வேற அவளுக்கு ஆறுதல் சொல்லுடா துடிச்சுது. ஆனா அப்ப இருந்த சிட்வேசனே வேற. அதான் உங்கள அனுப்பிட்டேன்”

“ஏன் அபி? என் போன கூட பிடுங்காத குறையா வாங்கிட்டு போன?” என அவள் யோசனையுடன் கேட்டாள்.

“அப்போ தான் ஷியாம் ஒரு லிங்க் அனுப்பி இருந்தான். ஆக்சுவலி அது ஒரு ஆப் லிங்க். அது எப்டினா” என்று தன் போக்கில் ஆரம்பித்தவன் அப்படியே நிறுத்தினான்.

“ஏன்டா நிறுத்திட்ட?”

“சொன்னா அழமாட்டேனு சொல்லுங்க. அப்போ தான் சொல்வேன்”

“அப்போ நீ அழற மாதிரி தான் சொல்வியா?”

“நான் இருக்கும் போது என் பேபி கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வர கூடாது”

“ஓகேடா. சொல்லு”

“நீங்க லாகின் பண்ணி மத்தவங்களுக்கு தப்பு தப்பா மெஸேஜ் பண்ற மாதிரி செட் பண்ணிருக்கான். அப்டிபட்ட மெஸேஜஸ் உங்க ஃபோனுக்கும் ஃபார்வேர்டு ஆக சான்ஸ் இருக்கு. அதான் அவசரமா அன்னைக்கு உங்ககிட்ட வாங்கினேன்” என்றவன் சொல்ல அவளோ அதீத பயத்தில் அவன் கைகளை இறுக பற்றி கொண்டாள்.

“ஜோ… ஏன் இப்ப பயப்படறீங்க? இதுக்காக தான் நான் உங்ககிட்ட சொல்லவே அவ்ளோ யோசிச்சேன். என்ன தப்பா நினச்சா கூட பரவால்லனு உங்ககிட்ட சண்ட போட்டேன்” என்றவன் அவளை இறுக அணைத்தான்.

“இப்படி பயந்துட்டு இருந்தா எப்டி பேபி? நான் ஹீரோவா என்ன வேல பண்ணேனு கேக்க மாட்டியா?” என விளையாட்டாய் கேட்டான்.

“நீ தானே… ஓடி ஒளிஞ்சிருப்ப”

“நம்ம‌ மேல எவ்ளோ நம்பிக்கை அபி?” என்று சத்தமாக சிரித்தவன்

“ஷியாம ஏன் ஹாஸ்பிடல் போய் பாத்திங்க?” என்று கேட்டான்.

“நீ அடிச்சேனு சொன்னான்”

“இந்த ரீசன்னால தான் அவனுங்கள அடிச்சேன். எனக்கு அப்பவே கொல்லணும் போல வெறி வந்தது. இது தான் தடுத்துட்டான்” என கர்ஜித்தான்.

“அவன் என்கிட்ட அப்படியே மாத்தி சொன்னான் தெரியுமா? நான் ரொம்ப பிரேவ்னு பீத்திட்டு இருப்பேன். ஆனா நீ இப்போ சொல்றப்ப ஒவ்வொரு இடத்திலயும் எவ்ளோ முட்டாள்தனமா இருந்திருக்கேனு இருக்கு” என வருத்தமான குரலில் சொன்னாள்.

“ஃபேமிலில ஒருத்தங்க அறிவாளியா இருந்தா போதும் பேபி”

“டேய்”

“அந்த இஷ்யூவ என் ஃபிரண்ட் மூலமா அப்போவே சால்வ் பண்ணிட்டேன். பட் செகண்ட் உன்னோட செல்பிய எடுத்து ஃபார்ன் சைட்ல போட்டான் பாரு. அப்போ தான் அவன அணுஅணுவா சித்ரவதை பண்ண முடிவெடுத்தோம்”

“போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்து அவங்களே தப்பிக்கற மாதிரி சீன் கிரியேட் பண்ணி அவன நம்மள கஸ்டடில வர வெச்சேன்”

“நீ ஒவ்வொரு முறையும் ஷியாம் பத்தி கேக்கறப்பலாம் எனக்கு அவ்ளோ கோபம் வரும் தெரியுமா பேபி? இந்த ரீசனால தான்”

“நான் ஒவ்வொரு முறையும் பொறுமையா போகணும்னு நினைப்பேன்.‌ பட் நீ கேக்கற கேள்வில நான் என்ன மறந்து கத்திடுவேன்” என்று வேதனைப்பட்டான்.

“கூல்டா” என்றவள் அவனுக்கு முத்தமிட அவன் புன்னகைத்தான்.

“ஆனா நீ மேரேஜ் அப்போ எனக்காக அழுத பாரு. அது என்ன ஏதோ பண்ணிடுச்சு. யோசிச்சா நீ அப்போவே உள்ள வந்துட்டியோனு டவுட்”

“அட மக்கு பொண்ணே… நீ ஒவ்வொரு முறையும் என் அபினு சொல்லியே… நான் அப்போவே வந்துட்டேன். உனக்கு புரிஞ்சிக்க தான் முடில”

“நான் உனக்காக உங்க வீட்ட விட்டு வரேன்னவுடனே எவ்ளோ ஃபீல் பண்ண? ஷியாமால அஃபெக்ட் ஆனப்பவும் என்ன தானே தேடின? அவ்ளோ ஏன்… ஸ்விஸ் ஆக்ஸிடென்ட் ஆனப்ப எவ்ளோ பதறின? நான் என்னை மீறி அழுதப்போ என் கூடவே இருந்தில்ல? உனக்கு ஒண்ணுமே தோணலயா?” என்று பல்லை கடித்தான்.

“அ… அது தோணிச்சு. பட் அது கூட விவேக் எக்ஸ்பிளெய்ன் பண்ணப்போ தான் புரிஞ்சுது” என மெல்லிய குரலில் சொன்னாள்.

“ஓ… காட்… அபி… ரொம்ப கஷ்டம் போலவே… இப்டி இருந்தா உனக்கு அறுபது வயசுல தான்டா குழந்த பிறக்கும்” என்றவன்

“இனிமேல் நோ டாக். ஒன்லி ஆக்சன் தான்” என்றபடி அவளது இதழை நோக்கி குனிந்தான்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!