அத்தியாயம் 27.3

 

பாரீஸ்

ஏறக்குறைய ஆறேழு மாதங்கள் சென்றது.

பாரீஸின் ஒரு காலைப் பொழுதில் ஜோஸ்வினி அபிஷேக்கை எழுப்பி கொண்டிருந்தாள்.

“டேய் எந்திரி டா”

“பேபி நைட் ரெஸ்ட்டாரன்ட்ல செம வொர்க். இன்னும் கொஞ்ச தூங்கிக்கறேனே”

“ஓ… அப்டியா… தூங்கு… நான் போறேன்” என சத்தமாக சொல்லியவள் அவன்  அருகில் மெல்லமாக வந்து அவனை கன்னத்தை கடித்து வைத்தாள்.

“ஹே… ராட்சசி என்ன பண்ற டி? காலைலயே” என அவன் அலறினான்.

“பின்ன எழுப்பி விட்டா எந்திருக்கணும் மேன். இல்லேன்னா இப்டி தான் ட்ரீட்மென்ட் இருக்கும்” என்றவள் முறுக்கி கொள்ள அவனோ

“நான் வேற டீரீட்மென்ட் குடுக்கட்டுமா பேபி?” என்று ஹஸ்கி வாய்ஸில் கூறியவன் அவளை தன் கை வளைவில் கொண்டு வந்து முகத்தில் கோலமிட்டான்.

“டேய் எந்திரி டா. காஃபி போட்ருக்கேன்”

“எனக்கு இந்த காஃபி தான் வேணும்” என அவளை முத்தமிட ஆரம்பித்தான்.

“ஏதோ போனா போகுதுனு பாவமேனு காஃபி போட்டு குடுத்தா பிகு பண்றியாடா?”

“ஒரு கிஸ் மட்டும் குடு பேபி.‌ நான் அப்றம் காஃபி குடிக்கறேன்” என்றவன் கெஞ்ச அவனை முறைத்தாள்.

“சார் இப்போ என்ன பண்ணீங்க?”

“எப்டினாலும் உன் ஸ்டடிஸ் முடியணும் தானே. சோ என் செர்ரிய நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீயே கிஸ் குடுத்துடுவியாம்” என்றவனை ‘அவ்ளோ நல்லனாடா நீ’ என்பது போல பார்த்தாள்.

இன்னும் சிறிது நேரத்தில் காபிக்கு பண்ணும் அலப்பறையை யோசித்தவள் அவனது அருகில் சென்றாள். அவன் ஆவலாக அவளை பார்க்க அவளோ கண்களில் காதலுடன் மற்றொரு கன்னத்தை கடித்து விட்டு ஓடி விட்டாள்.

“பேபி… நில்லு… என்ன நீ இப்படி விளையாட்டு பண்ணிட்டு இருக்க?”

“ஆமா. அப்படி தான் பண்ணுவேன். நான் கேக்குறது மட்டும் ஏதாவது நீ பண்றியா?”

“நான் என்னடா பண்ணல?”

“நான் டிரைவிங் கத்துக்கணும்னு சொன்னேன்ல”

“பேபி அதுக்கு இப்போ என்ன அவசரம்? மெல்லமா கத்துக்கலாம்”

“நோ.. எனக்கு கத்து தரணும்”

“ஓகே. டிரைவிங் கிளாஸ் ஜாயின் பண்றியா?”

“உன்ன சொல்லி தர சொன்னேன்டா”

“ஏன் பேபி என்ன வெச்சு சம்பவம் செய்யணும்னு நினக்கற? உன் ஆசைய ஏன் கெடுக்கணும்?”

“டேய்”

“இல்லடா. ஆயிரத்தெட்டு ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும்”

“நம்ம ஹவுஸ் கிட்ட டா. ப்ளீஸ்… ப்ளீஸ்” என்றவள் அவனது கன்னத்தில் முத்தம் கொடுக்க அவன் திகைத்து போய் அவனை பார்த்தான்.

“ப்ளீஸ்டா” என அவள் கண்களை சுருக்கி கேட்ட பாவனையில் சரியென தலையாட்டினான்.

“ஹூர்ரே…” என சந்தோஷத்தில் குதித்தவள் காஃபியை நீட்டினாள்.

காஃபியை குடித்தவன்

“இந்த காஃபி நல்லால்ல பேபி. அந்த காஃபி குடு” என அவள் குடித்து கொண்டிருக்கும் காஃபியை கேட்டான்.

“ஏன் எல்லாம் கரெக்டா தான போட்டேன்” என்றவள் கேட்க அவள் காஃபியை வாங்கி ருசித்தவன் கண் மூடி சிலாகித்தப்படி

“இதுல ஈச் பார்ட்ஸ் லவ் இருக்கு தெரியுமா? ஐ லைக் திஸ் வெரி மச்” என கண்ணடித்தான்.

“போடா. நீ வர வர‌ பேட் பாயா மாறிட்டு வர”

“எங்க நான் தான் மாறலாம்னா தான் விட மாட்டேங்கறீங்களே” என்று பெருமூச்சு விட்டவன் பிரேக்ஃபாஸ்டை ஆரம்பித்தான்.

அவள் கிச்சனுக்குள் நுழையவும் ஆசைப்பட்டாள்.

 ஆனால் அவன் தான் அவள் படித்து முடிக்கும் வரை எந்த வேலையும் செய்ய வேண்டாமென சொல்லி விட்டான்.

காலை காஃபி மட்டும் அவள் போடுவாள். அப்போது மட்டும் அவளை வம்பிழுப்பவன் மாலையில் அவளை எதுவும் சீண்டுவதில்லை. அவளது படிப்பின் நலன் கருதி.

இருவரும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வெளியே வந்தார்கள்.

ஜோஸ்வினி டிரைவிங் செய்ய அமர அபிஷேக் விளக்க ஆரம்பித்தான்.

“முதல் கியர்னா ஜஸ்ட் மூவ், செகண்ட் கியர்னா இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட், ஃபுல் ஸ்பீட்ல போகணும்னா ஃபிஃப்த் கியர்” என விளக்கம் சொன்னான்.

அவளும் அவன் சொன்னதை கேட்டவள் ஓட்ட ஆரம்பிக்க அவளது நேரமோ என்னமோ சாலையில் நடந்து சென்றவரின் மேல் இடிக்க பார்க்க அபிஷேக் கடைசி நிமிடத்தில் நிறுத்தினான்.

அதை கவனித்தவர் கத்த ஆரம்பிக்க ஜோஸ்வினி அபிஷேக்கை பாவமாக பார்த்தாள்.

“டோன்ட் வொர்ரி பேபி. நான் பார்த்துக்கறேன்” என்றவன் கீழே இறங்கியவன் சிரித்தபடியே அவனை சமாதானப்படுத்த ஜோஸ்வினி அவனை கண் கொட்டாமல் பார்த்தாள்.

‘இவனா அந்த காரியத்தை செய்தது’ என்று இன்று வரை அவளால் நம்ப முடியவில்லை.

அன்று ஷியாமை பார்த்த அடுத்த நாள் அவள் தொலைக்காட்சியை பார்க்க அதில் தோன்றிய செய்தி அவளை திடுக்கிட வைத்தது.

ஏனெனில் அபிஷேக்கும், ஆதவனும் இந்த இடத்தை பற்றி நேற்று பேசி கொண்டிருந்தனர்.

அங்கே காவல்துறைக்கு வந்த பெயர் தெரியாத காலில் வந்த செய்தியில் வந்த போது அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், காட்டு விலங்குகளால் அவர்கள் இறந்து இறக்கலாம் என்று செய்தி வர அருகில் அமர்ந்திருந்த அபிஷேக்கை பயமாய் பார்த்தாள்.

“ஏன்டா… உன் முகமே சரியில்ல” என்று அவளை கவனித்தவன் அவளது நெற்றி வியர்வையை துடைத்தபடி கேட்டான்.

“யாரு அது?”

“ஷியாம் அன்ட் ருத்ரன்”

“அபி”

“அவங்கள உயிரோட விட எனக்கு இஷ்டம் இல்ல. நீயும் அத தானே சொன்ன. அந்த மாதிரி மிருகங்களுக்கு இதான் கரெக்ட்” என்றவன்

“அதான் அவனுங்கள காட்டில விட்டுட்டு இன்ஃபார்ம் பண்ணிட்டோம்” என்று கர்ஜித்தான்.

“அபி… அபி…” என்றவள் ஓடிப் போய் அவனை கட்டி கொண்டு முத்தமிட்டாள்.

 ஆனால் அப்போதும் அவன் முகம் இறுகி இருந்தது.

“இவனுக்காக நீங்க என் லவ்வ அவமானப்படுத்தறீங்களே பேபி? என்னால தாங்க முடியல” என்ற போது அவன் குரல் தன்னை மீறி உடைந்தது.

“அச்சோ… இல்லடா… நீ இல்லேனா நான் இல்லடா. என்ன எப்டி ஒவ்வொரு டைமும் பாத்துகிட்ட. நீ தானே உன் லவ் எனக்கு புரிய வெச்ச. நீயே இப்டி பேசற? அப்போ நீ என்ன வெறுத்துடுவியா?”

“ஏன் செர்ரி இப்டி யோசிக்கறீங்க? நானும் மனுசன் தானே பேபி. அதான் சொன்னேன்” என்றவள் சொல்ல அவனை தனது மடியில் படுக்க வைத்து ஆறுதல் படுத்த அவனும் தாயை தேடும் சேயாய் அவளை கட்டி கொண்டான்.

அப்படிப்பட்டவன் இப்போது அவளுக்காக அந்த மனிதனிடம் செய்வதை பார்த்தவளுக்கு ஓடிப் போய் கட்டி கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

அதனை உடனே செயல்படுத்த நினைத்தவள் அவளை நோக்கி போக அவளை யோசனையுடன் பார்த்தான்.

“அபிமா” என்றவள் ஓடி வந்து கட்டி கொள்ள அவளை புன்னகையுடன் பார்த்தவன் தனக்குள் இறுக்கி கொண்டான்.

அவனிடம் சண்டை போட்டு கொண்டிருந்த மனிதர் “கியூட் கப்பிள்ஸ்” என முணுமுணுக்க இங்கோ தன்னை மறந்த நிலையில் காதலர்கள் தங்கள் கூட்டுக்குள் சென்றார்கள்.

அபிஷேக் சிறிது நேரத்தில் தன்னிலை அடைந்தவன்

“பேபி நாம நடு ரோட்ல நின்னுட்டிருக்கோம்” என கேட்டான்.

“சோ வாட்?”

“வீட்டுக்கு போய் ரொமான்ஸ் வெச்சுக்கலாமா?” என்று கேட்க ஜோஸ்வினி அவனுக்கு முத்தம் கொடுப்பது வந்தவள் சட்டென்று ஓட ஆரம்பித்தாள்.

“ஜோ… திரும்ப ஏமாத்தாத”

“அப்போ வந்து பிடி” என்றவள் வேகமாக ஓட அபிஷேக் அவளை துரத்தி கொண்டு ஓட ஆரம்பித்தான்.

முற்றும்

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!