நேசப்பிணி-13

அந்தச் சிறிய குகைக்குள் இருவரும் நெருக்கமாக ஒண்டிக்கொண்டனர். வெளியே பெருமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. அடர்ந்த மரங்களின் இலைகளின் ஊடாக நீர் குகைக்குள் தெறித்தது. இது போதாதென பாறையினில் வழிந்து வந்த நீரும் அவர்கள் மீது பட்டு வழிந்தது.

 

யானைகளோ, ‘இன்றைக்கு ஒரு முடிவு தெரியாமல் நகர மாட்டோம்!’ என்பது போல, அந்த இடத்திலேயே அசையாமல் நின்றிருந்தன. 

 

“இன்னிக்கி பொழுது இப்படித்தான் போகுமா மச்சான்?” என்று கேட்டவளை திரும்பி பார்த்தான்.

 

மயிலாவின் புடவை மழைநீரில் நனைந்து அவளது உடலோடு ஒட்டி இருந்தது. மெல்லிய துணியினூடே அவளது அங்கங்கள் குமரனுக்குத் தெளிவாகத் தெரிந்தன. அவளது நனைந்த கூந்தல் கன்னங்களில் ஒட்டிக்கொண்டிருக்க, அவள் உதடுகள் லேசான நடுக்கத்துடன் தந்தியடித்தது. அந்த நெருக்கமான சூழலில், குமரனின் மனதில் மோக உணர்வுகள் அரும்பத் தொடங்கியது. 

 

‘அவள் இதழை, அப்படியே கவ்விக் கொண்டால் என்ன?’ யோசித்தவன் தலையைச் சிலுப்பி தன்னை சமன் படுத்த முயன்றான்.

 

“என்னாச்சு மச்சான்? உடம்புக்கு எதும் பண்ணுதா?” அவன் கன்னத்தில் கை வைத்து கேட்டாள். 

 

அந்த அக்கறையான வார்த்தைகளில் மீண்டும் அவள் பக்கம் திரும்பினான். அவளது நனைந்த மேனியின் காட்சி அவனுள் அளப்பரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவளது மெல்லிய மூச்சுக்காற்று அவன் முகத்தில் படர்வது இதமாக இருந்தது. அவளது இடையோடு உரசிக்கொண்டிருந்த அவனது கரம், மெதுவாய் மேலும் கீழும் ஊர்ந்து போனது.

 

ஏற்கனவே தன்னவன் மீது வானளாவிய காதலில் இருப்பவள்! அவன் தீண்டிய தருணத்தில் தள்ளிப் போவாளா? அவனது ஒவ்வொரு விரலும் தன்னை தீண்டி ஒருவித மின்சாரப் பாய்ச்சலை உருவாக்குவது போல உணர்ந்தாள். போதாக்குறைக்கு பார்வையாலேயே துகிலுரித்தான்! அதிலும் காமத்தோடு காதல் கலந்திருக்க, மறுத்து விலக அவளுக்கென்ன பித்தா பிடித்திருக்கிறது?

 

அவளது நாணமும் நடுக்கமும் அவனது ஆண்மையை மேலும் தூண்டியது. புதிதாய் உருவான நெருக்க உணர்வு, அவன் மனம் கொண்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அவனது கண்கள் அவளது நனைந்த உடலை வெறித்துப் பார்த்தன. அவளது கழுத்தின் வளைவும், மெல்லிய தோள்களும் அவனது கவனத்தை ஈர்த்தன. 

 

“மச்சான்…” என்று மீண்டும் மீண்டும் அழைக்கும் அவளது உதடுகள், அவனை நெருங்கி முத்தமிட அழைப்பது போல் தோன்றியது. அவனது தேகம் அவளைத் தொட்டு தீண்ட வேண்டும் என்ற வேட்கையை அடைந்துவிட்டது. 

 

குமரனின் உடல் கொதிக்கும் உலையின் வெப்பநிலையை அடைந்தது. அவனது மனதில் காம எண்ணங்கள் அலைமோதின. அவளை நெருங்கி அணைத்து, அவளது பயத்தைப் போக்கி, அவளுக்குள் தன் வெப்பத்தை புகுத்திவிட வேண்டும் என்ற ஆவல் அவனுள் முழுமையாக எழுந்தது. 

 

“அடியே, என் அழகி!” அவன் மெதுவாக அவள் இதழை நெருங்கினான்.

 

“மச்சான்…” அவன் சட்டையை இறுக்கி பிடித்து தன் ஒப்புதலைச் சொன்னாள்.  

 

“குளிருதுலடி? டிரஸ்ஸ கழட்டி விடவா?” 

 

பித்தம் தலைக்கேறி பிதற்றயபடி அவள் புடவையில் கை வைத்தான். மறுகணமே அவன் மார்பில் சாய்ந்துவிட்டாள் அவள். பக்குவமாய் வெந்திருக்கும் கிழங்கின் தோலை உரிப்பது போல, புடவையை அவளில் இருந்து உரித்து எடுத்தான். அவளது நனைந்த மேனியின் ஒவ்வொரு அங்குலமும் அவனைப் பரவசப்படுத்தியது. அவளது மென்மையான முனகல்கள் அவனது காமத்தை மேலும் தூண்டின. 

 

“நீ இவ்வளவு அழகா இருக்கிறதால தான் இந்த யானைங்க போக மாட்டேங்குதுடி. உன்னையும் தன்னோட தூக்கிட்டு போகணும்னு நினைக்குது போல.”

 

விட்டால் இன்னும் ஏதாவது உளறுவான் என்று எண்ணினாளோ?! அவளே முனைந்து அவன் இதழோடு தன் இதழைப் பொருந்தினாள். கண்களை மூடி அந்த காந்தலை உள்ளுக்குள் வாங்கினான். 

 

வெளியே மழை வலுத்துப் பொழிந்தது. யானைகளும் அடிக்கடி குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் குகைக்குள் அவர்கள் இருவரின் சுவாசம் மட்டுமே கேட்டது. அதைத்தவிர இருவருக்கும் வேறெந்த சப்தமும் கேட்கவில்லை!

 

அவளோடு இரண்டறக் கலந்த பிறகும் குமரனின் மோகம் முழுமையாகத் தணியவில்லை. அவனது விரல்கள் அவள் மேனியின் ஒவ்வொரு வளைவிலும் தடவி விளையாடிக் கொண்டிருந்தன. அவளது சருமத்தின் ஸ்பரிசம் அவனுக்குள் புதுவித பரவசத்தை ஏற்படுத்தியது. 

 

அவளது கலைந்த கூந்தலை வருடியும், அவள் கன்னத்தில் இதமாக இதழால் உரசியும் தனது அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தான். அவளோ களைப்பிலும், அவனது அரவணைப்பின் இதத்திலும் அப்படியே அவன் தோள் சாய்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிப் போனாள். அவளது அமைதியான முகத்தையும், களைத்திருந்த கண்களையும் அவன் வாஞ்சையுடன் பார்த்தான்.

 

மீண்டும் மயிலா கண் விழித்தபோது, சூரியன் மேற்குத் திசையில் மெல்ல மறையத் துவங்கியிருந்தது. வானம் லேசான நீல நிறத்தில் லேசாய் வெளிச்சம் பரப்பியது. குகைக்கு வெளியே மழை ஓய்ந்து, ஈர வாசனை மெதுவாகக் காற்றில் கலந்து வந்தது. யானைகள் இரண்டும் இப்போது அங்கு இல்லை. 

 

மயிலா கண் விழித்து தன்னை மடியோடு அணைத்தபடி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த குமரனைப் பார்த்தாள். அவனது முகத்தில் இருந்த களைப்பும், சாந்தமும் அவளது மனதை நெகிழச் செய்தது. ஆழ்ந்த உறக்கத்திலும் அவள் வயிற்றை, அழகாய் அணைத்திருந்தான் அவன். 

 

‘இப்படியே காலம் முழுக்க இருந்து விடக்கூடாதா?’ என்று இஷ்ட தெய்வத்திடம் கோரிக்கை வைத்தாள் பெண்ணவள். அந்த அளவிற்கு அந்த குகை அவர்களுக்குள் ஒரு புதிய பந்தத்தையும், நெருக்கத்தையும் உருவாக்கியிருந்தது. 

 

அந்த ஆபத்தான சூழ்நிலையிலும் அவர்கள் ஒருவரையொருவர் நெருங்கிய அந்தரங்கமான தருணம், அவர்களின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது. மெதுவாக அவன் தோளில் இருந்து விலகி எழுந்தாள். அவளது உடல் ஒருவித சுகமான வலியையும், அதே நேரத்தில் புதியதொரு காதல் உணர்வையும் சுமந்திருந்தது. 

 

அவள் அசைவால் கண் விழித்த குமரன், “முழிச்சிட்டியாடி?” என்று‌ கேட்டுக் கொண்டே மீண்டும் அணைக்க வந்தான்.

 

“இருட்டுது மச்சான், வீட்ல எல்லாரும் நமக்காக காத்துட்டு இருப்பாங்க. நாம இப்ப கிளம்பினாதான் வெளிச்சம் போறதுக்குள்ள வீடு போய்ச் சேர முடியும்.”

 

விருட்டென அவளில் இருந்து விலகினான் குமரன். 

 

“மச்சான்?!” 

 

“சீக்கிரம் துணிய மாட்டிட்டு வா” என்று கூறிவிட்டு குகைக்கு வெளியே சென்றான். இவளும் உடனே‌ புடவையை‌ அணிந்து கொண்டு வந்தாள். 

 

“வந்த வழியாத்தான திரும்பி போகணும்?” அவள் முகம் பார்க்காமலே கேட்டான்.

 

“ம்…” 

 

சருக்கி வந்த ஐந்தடி உயரத்தை ஆண்மகன் சுலபமாய் ஏறிவிட்டான். அவளுக்கோ அரையடி கூட ஏற முடியாதபடி உடல் நோகிற்று. ஆனாலும் பாறைகளைப் பிடித்து ஏறிட முயன்றாள். 

 

“இரு, நான் தூக்கிவிடுறேன்…” என்று கூறி திரும்ப இறங்கினான்.

 

“தேவையில்ல…” வீம்போடு பேசியவள், ஒரு கல்லை பிடித்து ஏற முயன்றாள். வலுவின்றி கால் வழுக்க, தடுக்கி குப்புற விழப்போனாள். அவள் தேகத்தை மண் தீண்டும் முன் தாங்கி பிடித்து விட்டான் குமரன். ஆனால் கால் லேசாக பிசகிவிட்டது.

 

காலை பிடித்துக் கொண்டு, “ம்மா…” வேதனையோடு முகத்தை சுருக்கினாள்.

 

“என்னாச்சுடி?” பதறினான் அவன்.

 

அவள் எதுவும் பேசாமல் அழுதுகொண்டே இருந்தாள். அவளருகே மண்டியிட்ட குமரன் அடிபட்ட காலில் நீவி விட முயன்றான். 

 

“வலிக்குது மச்சான், வேணாம்…” என கதறினாள்.

 

“நான்தான் தூக்கி விடுறேன்னு சொன்னேன்ல. சொல் பேச்ச கேட்காம உன்னை யாரு மேல ஏற சொன்னா?” என்று திட்ட, மயிலா எந்த பதிலும் சொல்லவில்லை. 

 

அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவளால் எழுந்து நிற்க முடியவில்லை என்று மட்டும் புரிந்தது. மெல்ல அருகில் வந்து அவளை தூக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால் இப்போது இருவரது முகத்திலும். கொஞ்சம் கூட சிரிப்பு இருக்கவில்லை. 

 

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மச்சான் என்கிட்ட ஆசையா பேசி நல்ல படியா நடந்துக்கிட்டாரு. ஆனா இப்போ என்னடான்னா பழைய படி மூஞ்சிய தூக்கி வச்சிருக்காரு. எனக்கு கால் முடியலேன்னு தூக்கிட்டு போறாரு. ஆனா எங்கிட்ட முகம் குடுத்து கூட பேச மாட்டேங்கிறாரு. இந்த மச்சான் என்னதான் நினைக்கிறாரு? எதுக்கு இப்படி ரெட்டை வாழ்க்கை வாழனும்?’ என்று யோசித்துக் கொண்டிருந்த மயிலா.

 

“மச்சான், என்னை இறக்கி விடு மச்சான்” என்று சொல்ல, குமரன் குழப்பத்தோடு அவளை பார்த்தான். 

 

“இறக்கி விடு மச்சான்…” என திமிறினாள்.

 

“வீட்டுக்கு போகணும். நேரமாயிடுச்சின்னு நீ தானே சொன்ன?” என்று கேட்க,

 

“நான் ஒண்ணு பேசணும், என்ன இறக்கி விடேன்…”

 

“அதெல்லாம் முடியாது. எது பேசுறதா இருந்தாலும் இப்படியே சொல்லு, கேட்டுக்குறேன்” என்றான்.

 

அவள் கண்கள் கலங்க பேச ஆரம்பித்தாள். 

 

“மச்சான், உன் அளவுக்கு நான் அழகு இல்ல தான். உன்னை ஏமாத்தி தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன். உனக்கு என்ன பிடிக்கலேன்னா கூட பரவால்ல. நம்ம செஞ்ச தப்புக்கு கெடச்ச தண்டனைன்னு நெனச்சு பொறுத்துக்குவேன். ஆனா நீ ஒரு நேரம் பாசமாவும், ஒரு நேரம் கோவமாவும் இருக்குறத மட்டும் என்னால பொறுத்துக்க முடியல மச்சான். எனக்கு எது உண்மை எது பொய்ன்னு பிடிப்பட மாட்டேங்குது. இப்படி மட்டும் பண்ணாதயேன்” என்று உருக்கமாக பேசினாள். 

 

அவள் பேசுவதை கேட்டு குமரனுக்கும் சற்று சங்கடமாக இருந்தது. அவன் எந்த பதிலும் சொல்லாமல் நடந்து கொண்டு இருந்தான்.

 

“ஏன் இப்டி எதுவும் பேசாம என்னை சாவடிக்கிற? சரி மாட்டேன்னு எதாவது சொல்லு.‌”

 

“ம்ச்சு, நசநசனு நச்சரிக்காதடி.”

 

“என்ன புடிக்கயா உனக்கு? அப்புறம் ஏன் எங்கிட்ட உரிமை எடுத்துக்குற? நான் ஆசையா பேச வந்தா விலகி போற, அப்புறம் எதுக்கு அக்கறையா தூக்கிட்டு போற? எனக்கு இப்பவே விளக்கம் தெரிஞ்சாகனும்” என்று அழுதபடி கேட்க,

 

“இதோ பாருடி, எங்கிட்ட எதுவும் கேக்காத. என்னால இப்போதைக்கு ஒன்னே ஒன்னு மட்டும் தான் சொல்ல முடியும். நான் என் வாழ்க்கையில எவ்வளவோ பிரச்சனைகள பாத்துருக்கேன். எவ்வளவோ கஷ்டமான சூழ்நிலைகளை சமாளிச்சிருக்கேன். என்னால சமாளிக்க முடியாத ஒரே விஷயம் நீதான். என் நெஞ்சுக்குள்ள நுழைஞ்சு என்னை ஆட்டி படைக்கிறடி நீ” என்று சொல்லிவிட்டு நடந்து கொண்டே இருந்தான். 

 

அவன் சொன்ன வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று மயிலாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

 

‘இந்த மச்சான் என்ன சொல்ல வருது? இத நான் எப்படி எடுத்துக்குறது? என்னை புடிக்கிதா புடிக்கலியா? ஐயோ, ஒன்னும் புரியலியே. கேட்டா திரும்பவும் கோவப்படுமே” என்று யோசித்துக் கொண்டே அவளும் அமைதியாக இருந்தாள்.

 

இருவரும் இருள் சூழ்ந்த நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள். அவன் அவளை சாலை முழுவதும் தூக்கி வருவதை அந்த ஊரே வேடிக்கை பார்த்த்தது. 

 

‘நம்ம மயிலா நெசமாவே குடுத்து வச்சவ தான். மேலுக்கு முடியலனு அவ மச்சானே தூக்கிட்டு போறான் பாரேன்!’ என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். 

 

ஆனால் மயிலாவுக்கு தானே தெரியும். தன்னை சுமந்து செல்லும் மிருகத்துக்கு, அவளை இம்மியும் பிடிக்கவில்லை என்று… 

 

திண்ணையில் அமர்ந்திருந்த செவத்தம்மா அவர்களை பார்த்தவுடன் பதறியபடி, “ஏய்யா… என்னய்யா ஆச்சு அந்த புள்ளைக்கு? அவளுக்கு எதாவது ஒண்ணுன்னா அவ அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன்…” என்று சத்தம் போட,

 

“ஐயோ சத்தம் போடாத பாட்டி! ஆத்த கடக்கும் போது தவறி விழுந்துட்டா. கால் பிசகிடுச்சு, நீ கொஞ்சம் என்னன்னு பாரு” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான்.

 

பாட்டி அவள் காலை பார்த்து விட்டு, அவளுக்கு மூலிகையால் கட்டு போட்டு விட்டார். மயிலாவின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை பார்த்த பிறகுதான், சற்று நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது அவரால். 

 

“லேசான காயம்தான். ஓடாம ஒரு இடத்துல இருனா கேக்குறியா? இன்னும் ரெட்டை வால் குருவியாட்டம் சுத்துறியேடி…” என்று திட்ட,

 

“செத்து பொழச்சு வந்திருக்கேன். உன் பேரன் பண்றதெல்லாம் பாத்தா, செத்தே போயிருக்கலாம் போல தோணுது. நீ வேற எதையாவது சொல்லிட்டு இருக்காத கெழவி” என்று விசும்பினாள். 

 

“இங்க பாரு புள்ள, அவன் மனசுல உம்மேல பாசமெல்லாம் நிறைய இருக்கு. இல்லனா உன்னை இம்புட்டு தூரம் தூக்கிட்டு வருவானா? அத வெளியில காட்டுறதுல தான் அவனுக்கு ஏதோ ஒரு இடைஞ்சல். கவலைப் படாத, கூடிய சீக்கிரம் அதுவும் சரியாயிரும்.” 

 

மயிலாவுக்கு சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. அவள் அமைதியாக தலையை மட்டும் அசைத்தாள். இரண்டு மூன்று நாட்கள் இப்படியே கடக்க, அவள் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்து விட்டாள். 

 

குமரனும் அவளிடம் முன்பு போல கறாராக இருக்கவில்லை. குழைந்து பேசவில்லை என்றாலும் முகத்தை திருப்பிக் கொண்டும் போகவில்லை. 

 

எல்லாம் நல்லபடியாக சென்றால் எப்படி? அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் வந்து சேர்ந்தது அந்த நாள். 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!