தாரகையின் மாயோன்

மாயோன் _ 14

    ஸ்ருதி, “அம்மா எனக்குத் தெரிந்ததை மட்டும் நான் சொல்றேன் என்றவள் என் பக்கத்தில் படுத்திருந்த இனியா நான் எழுந்து பார்க்கும்போது இல்ல. அதனால நான் பயந்து போய் தேடின.. எங்கேயும் அவள் இல்லாததால் இவங்க மூன்று பேரையும் எழுப்பினேன் .எனக்கு அவ்வளவு தான் தெரியும்” என்றாள்.

“ஆமாம்மா அவ வந்து எழுப்பியதும் எங்களுக்கும் ஒன்னும் புரியல .நாங்க எல்லா இடத்திலேயும் தேடி பார்த்தோம் எங்கேயும் இல்லை . உங்க அறையும் மூடி இருந்துச்சு.கார்த்திக் அறையில் லைட் எரிவது தெரிஞ்சிச்சு

.அதனால கார்த்திக் அறையை தட்டினோம் “என்று அபிஷேக்கும் தனக்குத் தெரிந்ததை கூறினான்.

” நீங்க சொல்றதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு குழப்பமா இருக்குடா .ஆனா கார்த்திக் ஏன் இப்படி நடந்துக்கிறான்.. அவன் இதுவரை எந்த பெண்ணிடமும் இப்படி நடந்து கொண்டது இல்லையே டா”என்று கல்பனா தேவி புலம்பினார்.

“அம்மா கொஞ்சம் இருங்க என்ற அபிஷேக் ஸ்ருதி நீ இனியாவை அழைச்சிட்டு ரூமுக்கு போ .நாம காலைல பேசிக்கலாம் என்றவன் இனியா இங்க பாரு எதையும் போட்டு குழப்பிக்காத போய் தூங்கு”என்றான் .

“எனக்கு தூக்கம் வரலை டா.தலை வலிக்குது”என்றாள் இனியா.

“இனியா இங்க வாடா என்று கல்பனா அவளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்றவள் கந்தசஸ்டி கவசத்தை அவளின் கையில் கொடுத்தவர் ,”போய் கொஞ்ச நேரம் இதை படி அப்புறம் தூங்கு சரியா”

“சரிங்க ஆன்ட்டி”என்றவள் ஸ்ருதியுடன் அறைக்குச் சென்றாள்.

சரவண ராஜன்,” இப்போ இதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்  எல்லோரும் போய் தூங்குங்க காலையில பேசிக்கலாம்” எனவும் அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.

கார்த்திக் இரண்டு வருடம் முன் நடந்த நிகழ்வுக்கு சென்றான்.

கார்த்திக் அப்பொழுது  தன் நண்பர்களுடன் வெளியே சென்று வீடு திரும்பியயவன் எதிரே ஒரு பெண் வேகமாக ஓடி வந்து அவனின் வண்டியின் மீது விழ இவனோ சுதாரித்தவன் வண்டியை பிரேக் பிடித்து நிறுத்தி, கீழே இறங்கி அந்த பெண்ணை திட்டுவதற்குள் அவள் மயங்கி சரிந்தாள்.அதில் அவளைத் தாங்கியவன்  ஆபத்துக்கு பாவம் இல்லை என்று நினைத்து தன் மடியில் படுக்க வைத்து அவளை எழுப்ப முயற்சித்தவன் அவளின் முகத்தை பார்த்தவனுக்கு இதுவரை நிறைய பெண்களை கடந்தவனுக்கு எவரையும் ஏறெடுத்து பார்த்திராத வனுக்கு அவளையே பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற இந்த உணர்வு அவனுக்கு புதிதாக இருந்தது.தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினான்.

அதில் எழுந்து அமர்ந்தவள், “என்னை காப்பாத்துங்க சார். எனக்கு பயமாயிருக்கு” என்றவளை ஒன்றும் புரியாதவனாக பார்த்தவன் ,”இங்க பாருங்க பயப்படாதீங்க ..என்ன ஆச்சு எதுவா இருந்தாலும் சொல்லுங்க”என்றான்.

“அங்க அங்க ஏதோ ஒரு உருவம் என்னை துரத்த்திக்கிட்டு வந்துச்சு.அதனால நான் ஓடி வந்தேன்.என்னை காப்பாத்துங்க” என்று அரற்றினாள்.

இனியா அப்போது இரண்டாம் வருடம் படித்து கொண்டிருந்தாள்.

கார்த்திக்கு அவள் கூறியது ஒன்றும் விளங்காமல் இருக்க ,”என்ன சொல்றீங்க ஏதோ ஒரு உருவமா?  யார் அது பேயா பிசாசா? என்று விளையாட்டாய் கேட்

“அதுவந்து அதுவந்து ஆமா அப்படித்தான் இருக்கு என்னை அப்பப்போ வந்து மிரட்டிக்கிட்டே இருக்கும் ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க”

“என்ன  சொல்றீங்க .நீங்க சொல்றது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு மனுஷனாய் இருந்தாலும் சண்டை போடலாம். பேய் ,பிசாசு கூட எல்லாம் சண்டை போட  நான் ஒன்னும் மாயோன் இல்ல சாதாரண மனிதன் “என்றவன் அவளின் விலாசம் கேட்டு அவளை அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டான்.

தமிழில் முல்லை நில வேந்தன்  தான் மாயோன் எனும் கண்ணன்…

அந்த மாயவன் கண்ணனை கல்பனா தேவிக்கு மிகவும் பிடிக்கும். கார்த்திக் அவனும் கருமை நிறம் கொண்டவன்.அதனாலோ என்னவோ கல்பனா தேவி கார்த்திக்கை சமயத்தில் கார்த்திக் கண்ணா என்றும் , சிறுவயதில் அவன் செய்த சேட்டைகளை ரசிப்பவர் மாயோன் ,மாயக்கண்ணன் என்றும் விளையாட்டாய் அழைப்பது உண்டு.

கண்ணன் புராணத்தை சிறுவயதில் கல்பனா அடிக்கடி சொன்னதால் கார்த்திக்கு கண்ணனை மிகவும் பிடிக்கும் .அதனால் அவன் அந்த பெயரை அப்பொழுது உபயோகப்படுத்தினான்.

அன்று இனியாவுக்கு கல்லூரி முடிந்து ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில்  வந்து கொண்டிருந்தவளுக்கு ஏதோ  உருவம் தன்னை பின் தொடர்வது போல் இருக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தவள்.கார்த்திக்கின் மீது விழுந்தாள். அந்த பதட்டத்திலும் ,பயத்திலும் அவள் கார்த்திக்கின் முகத்தை பார்த்தவளுக்கு தன்னை காப்பாற்ற வந்த ஆபத் ஆண்டவனாய் தெரிந்தான் கார்த்திக்.இனியாவுக்கு அவன் கூறிய மாயோன் என்ற பெயர்  மட்டும் மனதினில் பதிந்தது.

கார்த்திக் அவனுக்கு அடிக்கடி பெண்ணவளின் ஞாபகம் வர அவளை மனதார காதலிக்க ஆரம்பித்தான்.அவளை எப்போது சந்திப்போம் என்று காத்திருந்தவனுக்கு அன்றொருநாள் இனியாவை காப்பாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது .அவளை காப்பாற்றியவன் அவளின் முகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தவனுக்கு பலநாள் பொக்கிஷம் தன்கையில் கிடைத்ததை நினைத்து பெரும் உவகைக் கொண்டான் . அதே நேரம் சரியாக. அபிஷேக்கின் ஃபோன் வர முதலில் குழம்பியவன் அவள் இனியா என்று உறுதி செய்தவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தான் காதலித்தவளும் தன் தம்பியின் உயிர் தோழியும் ஒருத்தியே’என்று குதூகலித்தான்.

இப்பொழுது நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்த  கார்த்திக் ராஜனுக்கு  இனிய கூறியதில் இருந்தும் அவள் ஏன் மாயோன் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறாள் என்றும் தன்னை ஏன் மாயோன் என்று அழைக்கிறாள்  என்ற கேள்விக்கான விடை தெரிந்தது.

கார்த்திக் மாயோன் என்ற பெயரை கூறியதால் இனியா இந்த கனவு வரும்போதெல்லாம் மாயோன் வந்து காப்பாற்றுவதாக நினைத்து கொண்டிருக்கிறாள்.

மறுநாள் காலை யாருக்கும் காத்திராமல் அழகாய் விடிய இனியா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அனைவரும் கார்த்திக்கின் அறையில் குழுமினர்.

கார்த்திக் இவ்வளவு காலையில் அவர்களை எதிர்பாராதவன் இவர்கள் அனைவரும் இனியாவின் மீது வைத்திருக்கும் அக்கறையும் ,பாசத்தையும் கண்டு மகிழ்ந்தவன்,”

ஸ்ருதி இனியா என்னடா பண்ணிட்டு இருக்கா” 

“அண்ணா அவ தூங்கிட்டு இருக்கா  ..நீங்க நேத்து நடந்ததைச் சொல்லுங்க ப்ளீஸ்.”

கல்பனா,”கார்த்திக் கண்ணா அப்படி என்னதான் நடந்துச்சு சொல்லுடா”

“சொல்றேன்மா” என்றவன் நேத்து நடந்த நிகழ்வை கூற அதில் அனைவரும் அதிர அபிஷேக் அதிர்ச்சியின் உச்சக்கட்டத்திற்கு சென்றவன் ,”என்னடா சொல்ற அச்சோ அந்த மாதிரி நடந்து இருந்தா நம்மால் நிம்மதியா இருந்திருக்க முடியுமா? நீ இல்லனா அவளின் நிலைமை என்னவாகியிருக்கும் ..நான் முட்டாள்தனம் பண்ணிட்டேன் டா .நான் அவளை தனியா விட்டு இருக்கக்கூடாது அம்மாவின் பக்கத்தில் படுக்க வைத்து இருக்கனும்…” என்று புலம்பினான்.

அபிஷேக் பேசியதைக் கேட்ட ஸ்ருதி,”அபி சாரிடா நான் தான் அவளை சரியா கவனிக்கல..நான் அசதியில் தூங்கிட்டேன். என்னாலதான் அவளுக்கு இந்த நிலைமை.” என்று கலங்கினாள்.

அபிஷேக்,”ஏய் லூசாடி நீ இப்போ எதுக்கு உளறிட்டு இருக்க .ஃநைட்ல தூங்காம என்ன முழிச்சுகிட்டா இருப்பாங்க .நான் தான்டி கொஞ்சம் கவனமா இருந்திக்கனும்”

“நாங்களும் தான்டா அபி .அவளுக்கு நல்லது செய்றேன்னு  அழைச்சுட்டு வந்துட்டு இப்போ இப்படி ஒரு நிலைமை வந்திருச்சு.அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா. நினைச்சு பார்க்கவே பயமா இருக்குடா” என்றனர் பாலாஜி , அன்பு இருவரும்…

“அடச் சே வாய மூடுங்கடா ஆளாளுக்கு ஏதாவது புலம்பிகிட்டு இருக்காதீங்க.அடுத்து என்ன செய்யனும் அதைப் பத்தி யோசிங்கடா” என்ற சத்தம் போட்டான் கார்த்திக்.

அபிஷேக்,”கார்த்திக் நான்தான் அன்னைக்கே சொன்னேனே உனக்கு தெரிஞ்ச சைக்காலஜிஸ்ட் டாக்டர் இருக்காரே ? அவர்கிட்ட அவளை அழைச்சிட்டு போலாம் டா”

“ஆமா நானும்  அந்த எண்ணத்தில் தான் இருக்கேன் .சரி நான் இன்னைக்கு டாக்டரை நேர்ல பாத்து பேசிட்டு வரேன் ”

“டேய் என்னடா சொல்றீங்க ஒரு பொம்பள பிள்ளைய சைக்காலஜிஸ்ட் டாக்டரிடம் அழைச்சிட்டு போறேன்னு சொல்றீங்களே அவளுடைய எதிர்காலம் என்னாகும் டா” என்று கல்பனா பதறினார்.

“அம்மா நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க .நான் சொல்றது சைக்காலஜிஸ்ட் ,சைக்காட்ரியஸ்ட் கிடையாது.சைக்காலஜிஸ்கிட்ட போனா கூட தப்பு இல்ல மாநீங்க கவலை படாதீங்க…”

“அண்ணா எங்களுக்கும் பயமா இருக்கு.”என்று மற்றவர்களும் கூற அவன் அவர்களுக்கு ஆறுதல் கூறியயவன் முக்கியமான விஷயத்தை கூற அனைவரும் நம்ப முடியாதவர்களாய் நின்றனர்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!