அசுரன்-5

அங்கிதா ஆராய்ச்சி செய்யும் விதமாய் ஒவ்வொரு இடத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை ஜோ கவனித்து விட்டான்.

 

“ஓய்… அங்கிட்டும் இங்கிட்டும் வேடிக்கை பார்க்காம ஒழுங்கா என் பின்னால வா” என்று அவளின் கரம் பற்றி இழுத்தான்.

 

அங்கிதாவின் உடல் அவனோடு சென்றாலும் பார்வை அந்த வீடுகளின் மேலேயே பதிந்திருக்க, “இது என்ன மாதிரியான வீடு? இத எப்படி டிசைன் பண்ணீங்க? எந்த என்ஜினியர் உங்களுக்கு இந்த ஐடியாவ கொடுத்தான்?” என்றாள்.

 

“நீ எங்கள பாராட்டுறயா, இல்ல கேலி பண்றியா?”

 

“பாராட்டுறேன், இந்த வீடுகளெல்லாம் செம சூப்பரா இருக்கு…”

 

அவள் பாராட்டில் உச்சி குளிர்ந்த ஜோ, “நான்தான் பேபி டிசைன் பண்ணேன்” என்றான்.

 

அங்கிதா, “நீ எப்போ எப்பிடி என்ஜினியரிங் படிச்ச?” என்று அடுத்த கேள்வியை முன்வைக்க, இம்முறை அவன் எந்த பதிலும் சொல்லாமல் நடந்து கொண்டே இருந்தான்.

 

“ஜோ.. பதில் சொல்லு..” என்றாள் அங்கிதா.

 

முதல் முறையாக அவள் நாவால் தன் பெயர் உச்சரிக்கப்பட, புது வித போதை ஜோவின் மனம் எங்கிலும் பரவியது.

 

இருந்தும் அந்த இடும்பன் ஈவு இரக்கமின்றி, “நீ கேக்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது, சிலதுக்கு மட்டும் தான் பதில் வரும்..” என முரட்டுத் தனமாகவே பதிலளித்தான். 

 

“எனக்கு இந்த வீட்ட பத்தி தெரிஞ்சுக்கனும், ப்ளீஸ் சொல்லு..” 

 

அவள் கண்ணில் மின்னிய ஆர்வம் அவனைப் பேசத் தூண்டிட, “இது எல்லாமே இந்த மலையில கிடைக்கிற மரத்தால செஞ்ச கட்டைகள். இது ரொம்ப வெயிட் லெஸ், ஆனா உறுதியானது.. அதனால யூஸ் பண்றது எங்களுக்கு சுலபம்..

 

இந்த கிராமம் மாதிரி இந்த மலை முழுக்க ஒவ்வொரு இடத்திலேயும் ஒரு செட் ரெடிமேட் கட்டைகள் வச்சு இருக்கோம். எங்களோட சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி எங்க எப்ப தங்கனுமோ அங்க அப்படி தங்கிப்போம்‌..” என்றான்.

 

“உங்கிட்ட கோடிக் கணக்குல பணம் இருக்கே?.. நீயும் உன் ஆளுங்களும் பந்தாவா ஒரு வீடுகட்டி வாழ்றத விட்டுட்டு ஏன் இப்படி ஒரு இடத்துல தங்கி இருக்கீங்க?..”

 

“நாங்க வாழ்றதுக்கு பணம் மட்டுமே போதாது, பவர் வேணும்..”

 

“உங்களுக்கு யாரு பவர் கொடுக்குறா? ஆளுங்கட்சியா?..”

 

“……..”

 

அவன் பதில் சொல்லவில்லை என்றதும் அங்கிதா அடுத்த கேள்விக்கு தாவினாள், “இங்க இருக்குற எந்த வீட்டுலயும் ஜன்னலே இல்லையே, அப்புறம் எப்படி உள்ளே இருக்கிறவங்களால மூச்சுவிட முடியுது?”

 

“ஜன்னல் வச்சா காட்டு மிருகங்கள் உள்ள வந்துடும், அதனால காத்து வந்து போக ரொம்ப மெல்லிசான துளைகள் போட்டேன். ஒவ்வொரு மரக்கட்டையிலயும் குறைஞ்சது நூறு துளைகள் இருக்கும். நான் உருவாக்கின ஓட்டைகள சாதாரணமா பார்த்தா தெரியாது, லென்ஸ் வச்சு பார்த்தா தெரியும்.”

 

லென்ஸ் வச்சு பார்க்கனுமா?.. என்று தலையைச் சொரிந்தாள் அவள்.

 

“சரி சமையல் செஞ்சா புகை சுத்தாதா?..”

 

“…..”

 

“உங்களுக்கு சமையல் செய்ய பொருள் எல்லாம் எங்கிருந்து வரும்?..”

 

“……”

 

“இங்க கரெண்ட் எப்படி வருது?”

 

“……”

 

“ஜோ.. ஜோசித்… பதில் சொல்லு…”

 

“……”

 

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஜோ முன்னே நடக்க, “அடபோய்யா..” என்று சலித்துக் கொண்ட அங்கிதா, தன் சுற்றுப்புறத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

 

அந்தக் கிராமத்தில் தொண்ணூறு சதவீதம் ஆண்களே இருந்தனர். மீதம் பத்து சதவீதம் தான் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். மொத்தமாகக் கூட்டினால் ஒரு நூற்றைம்பது பேர் இருக்கலாம்.

 

ஒரு சில வீடுகளில் மட்டுமே குடும்பமாய் வாழ்ந்து கொண்டு இருந்தனர். மீதமிருந்த வீடுகள் அத்தனையும் வேறு விதமாய் தோற்றம் காட்டியது.

 

முயன்று உள்ளே எட்டிப்பார்த்த அங்கிதா, அவர்கள் ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு வேலைக்காக உபயோகிப்பதைப் புரிந்து கொண்டாள்.

 

ஆயுதம் வைப்பதற்கென ஒரு வீடு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதை மோகன் கண்காணித்துக் கொண்டிருந்தான். 

 

காய்கறி வைப்பதற்கும் சமையல் செய்வதற்குமென ஒரு வீடு பயன்படுத்தப்படுவதை, அங்கிருந்து வரும் வாசனையைக் கொண்டே அங்கிதா உணர்ந்து கொண்டாள்.

 

அங்குதான் அவளுக்குத் தினமும் சாப்பாடு தரும் மோனிகா பாப்பா விளையாடிக் கொண்டு இருந்தாள்.

 

இவை அனைத்தையும் தாண்டி கடைசியாக இருந்த வீட்டிற்கு ஜோ அங்கிதாவை அழைத்துச் சென்றான்.. அவள் உள்ளே சென்று பார்க்க, பலத்த காயம்பட்ட சிலர் அங்கே படுத்திருந்தனர்.

 

ஜோ அங்கிதாவிடம், “டாக்டர் மேடம், இனி இதுதான் உங்க டிபார்ட்மெண்ட். காயம்பட்ட என்னோட ஆட்களுக்கு மருந்து போட்டு காப்பாத்துறதுதான்  உன் வேலை.

 

இனிமே நீயும் எங்க கூட்டத்துல ஒரு ஆள். பகல்பொழுது முழுக்க நீ இங்க இருந்து ட்ரீட்மென்ட் கொடுக்குற வேலைய செய்யனும். ராத்திரியானதும் நம்மளோட வீட்டுக்கு போய் படுத்து தூங்கணும். 

 

மாட்டேன்.. முடியாது.. என்னை விட்ருங்க..னு எந்த வார்த்தையும் எனக்கு கேட்கப் பிடிக்காதுனு உனக்கே நல்லா தெரியும்.

 

உனக்கு வேண்டிய மருந்து, ட்ரீட்மென்ட் கொடுக்கிறதுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் எல்லாமே எண்ணி இருபத்துநாலு மணி நேரத்தில் இங்க வந்து சேரும்.

 

அதுக்குப் பிறகு நீ தான் முழு இன்சார்ஜ் எடுத்து எல்லா வேலைகளையும் செய்யணும்..” என்றான் ஜோ.

 

அதுவரை இருந்த குதூகலமான மனநிலை மொத்தமாய் தொலைந்து போக, அங்கிதா கதறும் குரலில், “என்ன விளையாடுறீங்களா? நான் மெடிக்கல் படிச்சது அப்பாவி மனுஷங்களை காப்பாத்துறதுக்காக, கொலை கொள்ளை கடத்தல் பண்ற மிருகங்களை காப்பாத்துறதுக்கு இல்ல. 

 

நான் உங்க பிணைக்கைதி தான?.. என்னால எப்படி உங்க கூட்டத்துல ஒருத்தியா ஆக முடியும்? என்ன ட்ரீட்மென்ட் செய்ய சொன்னீங்கனா கொஞ்சம் கூட யோசிக்காம நானே இங்க இருக்குற எல்லாரையும் கொன்னு போட்டுடுவேன்..

 

அப்படி ஒரு ரிஸ்க் எடுக்குறதுக்கு பதில் நீங்களே என்னை ரிலீஸ் பண்ணிடலாம். நான் உங்கள பத்தி எந்த தகவலையும் யாருக்கும் சொல்லமாட்டேன், எங்கேயாவது போய் பிழைச்சுக்குறேன் விட்ருங்களேன்…” என்று கெஞ்சினாள்.

 

அங்கே இருந்த அத்தனை பேரும் அங்கிதா கூறியதைக் கேட்டு அடக்க முடியாமல் சிரித்தனர். ஆனால் ஜோ மட்டும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

 

அவன் அமைதியினுள் பொதிந்திருக்கும் கோபத்தைக் கண்டு மற்றவர்களும் சிரிப்பினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

அங்கிதா இறுதி முயற்சியாக உறுதியான குரலில், “நான் சீரியஸா சொல்லுறேன், டிரீட்மென்ட்ன்ற பேர்ல உங்க ஒவ்வொருத்தரையும் என்னால கொல்ல முடியும்..” என்றாள்..

 

பெருமூச்சு விட்ட ஜோ, “நாளையிலிருந்து நம்ம டாக்டர் மேடம்  உங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பிப்பாங்க. அவங்களுக்கு தேவையானதெல்லாம் இப்ப இருந்தே ரெடி பண்ணிடுங்க..” என்றான். 

 

கூட்டத்தினர் அனைவரும் சம்மதமாய் தலையாட்டினார்கள்..

 

அவள் மற்றவர்கள் மீது இருந்த கோபத்தையும் சேர்த்து அவனிடம் காட்டுவதைப் போல முறைத்துக் கொண்டு நிற்க அவனோ, “விளையாடினது போதும்.. வா, நாம நம்மளோட வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்” என்று அவளின் கரம் பற்றி அழைத்துச் சென்றான்..

 

தன் உணர்ச்சிகளுக்கும் வார்த்தைகளுக்கும் அங்கே மதிப்பில்லாமல் போனதைக் கண்டு ஆற்றாமை கொண்ட அங்கிதா, “வரமாட்டேன்.. என்ன விடுடா ராஸ்கல்..” என்று அவன் பிடியிலிருந்து துள்ளித் தாவினாள்… 

 

கைகளை வளைத்து நெளித்து முறுக்கி, அவன் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தாள்.‌ உடும்பு பிடிக்காரனிடம் அவளின் சாகசங்கள் செல்லுபடியாகிடுமா?..

 

தரதரவென இழுத்துச் சென்றான் ஜோ.

 

‘கால்கள் நடந்து கொண்டு இருப்பதால்தானே இழுத்துச் செல்கிறாய்?.. இப்போது பார் என் ராஜதந்திரத்தை’ என்று மனதிற்குள் கருவிய அங்கிதா, நடக்க மறுத்து தரையில் உட்கார்ந்துவிட்டாள். 

 

ஜோ யோசிக்காமல், அடம்பிடிக்கும் அந்தக் குமரியைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டான். பொம்மையைப் போல அவளை தன் இஷ்டத்திற்குத் தூக்கிச் செல்லும் அவனைக் கேள்வி கேட்க ஆளில்லை அங்கே.

 

சொல்லப் போனால் சண்டை போடும் அங்கிதாவைப் பார்த்துச் சிரித்தது அந்த மக்கள் கூட்டம்.

 

“பாவி, பொண்ணுனு கூட பார்க்காம ஈவு இரக்கம் இல்லாம நடந்துக்குறான். இவங்க என்னடான்னா என் நிலமைய பார்த்து சிரிக்கிறாங்க..

 

போயும் போயும் இந்த மிருகங்களுக்கா நான் வைத்தியம் பார்க்கணும்? இதுக்காகவா நான் என்னோட ஆசைகளை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு டாக்டருக்கு படிச்சேன்? என்னை ஏன் இப்படி சோதிக்கிற ஆண்டவா?” என்ற வருத்தத்துடன் ஊமையாய் அழுதாள் அங்கிதா.

 

அன்று முழுவதும் அவள் அந்த அறையின் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தாள். ஜோ கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொண்டான்.

 

இரவானதும் ஜோ எப்போதும்போல குளிக்கக் கிளம்பினான். அவன் கையில் கோட் சூட் இருப்பதைக் கவனித்த அங்கிதா, இன்றும் எங்கோ வெளியில் போகிறான் எனப் புரிந்து கொண்டு ஜோவுக்கு முன்னால் வந்து நின்றாள்.

 

‘என்ன?..’ என்பதைப் போல புருவம் உயர்த்தி கேட்டான் ஜோ.

 

“என்னைப் பத்தி ரொம்ப சுலபமாக நினைச்சுட்டு இருக்கீங்க. நான் கண்டிப்பாக உன் ஆட்கள கொலை செய்வேன். வாய்ப்பு கிடச்சா உன்னையும் என் கையாலேயே கொல்லுவேன். 

 

ரிஸ்க் எடுக்கிறதுக்கு பதிலா நீ என்ன ரிலீஸ் பண்ணுறதுதான் புத்திசாலித்தனம்..” என்று அதே பல்லவியை மீண்டும் ஒருமுறை பாடினாள்..

 

ஜோ தன்னுடைய இடுப்பில் கை வைத்துக் கொண்டு அங்கிதாவின் கண்களை முறைத்துப் பார்த்தான்…

 

“நான் உண்மையாத்தான் சொல்றேன் ஜோ. கண்டிப்பா நான் சொன்னதை செய்வேன்…” என்று அவள் மீண்டும் ஒரு முறை ஆரம்பிக்க, ஜோ அவளைத் தூக்கிக்கொண்டு பாத்ரூமிற்குள் சென்றுவிட்டான்.

 

‘இவ்வளவு நாட்கள் ஒரே அறையில் இருந்தும் அவன் என்னை நெருங்க முயற்சி செய்யவில்லை. இனிமேலும் ஏதும் செய்ய மாட்டான்..’ என்ற தைரியத்தில் இவ்வளவு நேரமும் ஜோவிடம் வீராப்பாக வசனம் பேசினாள் அவள்…

 

ஆனால் ஜோ திடீரென்று அவளைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்குள் போவான் என அங்கிதா கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. 

 

அவனின் அதிரடி அதிகப்பிரசங்கித்தனத்தால் அங்கிதாவிற்கு நாடி நரம்பெல்லாம் ஆடிப் போயிற்று. 

 

அந்த நொடியில் அடுத்து என்ன செய்யப் போகிறானோ எனும் அச்சம், ஆயிரத்தெட்டு தப்பான சிந்தனைகளை உருவாக்கி அவள் மனதையும் உடலையும் நடுங்கச் செய்திருந்தது.

 

அவளின் நடுக்கத்தைப் பார்த்து மெல்லச் சிரித்த ஜோ, முதலில் கட்டிப்பிடித்து இருந்ததை விடவும் இப்போது இன்னும் இருக்கமாகக் கட்டிப் பிடித்தான்.

 

“ஐயோ!… சீ!… விடுடா… யாராவது இங்க வாங்க… என்னை இவன்கிட்ட இருந்து காப்பாத்துங்க…” என்று கத்தினாள்.

 

ஜோ அவளின் காதுமடல்களை தன் மூக்கால் உரசிக்கொண்டே, “எத்தன தடவ சொல்றது பேபி? அந்தக் கடவுளே வந்தாக் கூட என்கிட்ட இருந்து உன்னை காப்பாத்த முடியாதுனு… 

 

அப்புறமும் ஏன் எப்ப பாரு யாராவது இங்க வாங்க, என்ன இவன்ட்ட இருந்து காப்பாத்துங்கனு கத்திட்டே இருக்க?..” என்று சொல்லி அவளை இன்னும் பயத்தில் நடுங்க வைத்தான்.

 

“நான் தெரியாம உங்கள எதிர்த்துப் பேசிட்டேன். இனிமே எப்பவும் இப்படி ஒரு தப்பு செய்ய மாட்டேன்… தயவு செஞ்சு என்னை வெளியில விடுங்க” என்று கெஞ்சிக் கேட்டபடி அவனுடைய பிடியிலிருந்து தப்பிக்க முற்பட்டாள் அங்கிதா…

 

பூந்தளிர் தேகங் கொண்டிருக்கும் பூவையை, ஜோ தனது இரும்புக் கரங்களால் இறுக்கமாகக் கட்டியணைத்திருக்க, அவனின் உடல் பலத்தை மீறி அவளால் அசையக் கூட முடியவில்லை…

 

அதற்காக தன் பெண்மைக்கு ஆபத்து வரும் நொடியில், அவன் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று அவள் அப்படியேவா இருக்க முடியும்?

 

கையால் அவன் முகத்தில் அடித்தும், காலால் அவன் காலை உதைத்தும் சண்டை போட முயற்சித்தாள்.  

 

‘தனக்கும் அவனுக்கும் நடுவில் ஒரு சிறு இடைவெளியை உருவாக்கி விட்டாலும் போதும். அதன் மூலமாகத் தப்பித்து வெளியே ஓடி விடலாம்..’ என்று வலையில் சிக்கிய அந்த நண்டு நினைத்தது.

 

தன் சக்கர வியூகத்தில் பிறரை ஆட்டுவிக்கும் மாயக்காரன் அவன். அவனுக்கு இந்த சிறு சிட்டுக்குருவி போடும் திட்டம் புரியாமல் போய்விடுமா?.. 

 

ஜோவின் இதழ்களில் குரூரப் புன்னகை நிறைந்து நின்றது. அவளைக் கட்டி அணைத்தபடியே ஷவரை திறந்து விட்டான் ஜோ…

 

தண்ணீர் அவர்கள் இருவர் மீதும் பொல பொலவென்று கொட்டியது.

 

ஏற்கனவே அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்த அங்கிதாவின் மேனியில், குளிர்ந்த தண்ணீர் விழுந்ததும் குளிர் ஜுரம் வந்த ஆட்டுக்குட்டி போல வெட வெடத்தாள்.

 

தண்ணீரில் நனைந்ததும் அவளுடைய ஆடைகள், தனது எஜமானனாகிய ஜோவைப் போலவே தன் குணாதிசயத்தை மாற்றிக் கொண்டு கண்ணாடியாக மாறிவிட்டது. 

 

ஏற்கனவே பாதி ராவணனாய் மாறி நிற்கும் ஜோவின் பார்வை போகும் பாதையைப் பார்த்த பிறகுதான் அங்கிதாவிற்கு, ‘இதற்குமேல் இவனுடன் சண்டை போடுவது வீண், சரணாகதி கொள்வதே புத்திசாலித்தனம்…’ எனும் அறிவு வந்தது..

 

அவ்வளவு நேரமும் அவனை அடிப்பதற்காக உபயோகப் படுத்திக் கொண்டிருந்த தன்னுடைய இரு கைகளையும் வேகமாக இழுத்து தன் உடலை மூடிக் கொண்டாள்.

 

ஆசையெனும் வலையில் சிக்கிவிட்ட ஜோ அதிலிருந்து மீள வழி தெரியாமல், அந்த வலையோடே செல்லத் துணிந்தான்.

 

அரக்கனின் பிடிமானம் அணுவளவும் நெகிழ்ந்திடாததால் அவளே, “நான் போகணும், விடு” என்று வாய்விட்டுக் கேட்டாள்.

 

அதிகாலைப் பனிபடர்ந்த ரோஜா தோட்டம் போன்று நிற்கும் அவளிடம், அவன் மனம் நிபந்தனையின்றி சரண்டராகி  விட்டது. 

 

‘ரசனை என்றால் என்ன?..’ வென்று கேட்கும் பழக்கம்கொண்ட ஜோ, அணு அணுவாய் அவளை ரசித்தான். 

 

ஜோவின் பார்வை அவளுடைய நெற்றி மூக்கு உதடு என்று படிப்படியாக இறங்கிச் சென்றது. 

 

அவன் விழிகள் அபாய கட்டத்தை நெருங்குவதை உணர்ந்த அங்கிதா, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள என்ன செய்வதென்று தெரியாமல், மீண்டும் தன் பாணியில் கண்ணீரைக் கையிலெடுத்தாள்..

 

“அழுதா விட்ருவேனா?..” என்று அதற்கும் தகிடுதத்த பதில்களையே உதிர்த்தான் ஜோ.

 

அன்று திரௌபதை மானம் காக்க அரசவையில் ஆயிரம் கரங்கள் இருந்தும், நீயே கதி கண்ணா என்று சரணாகதி அடைந்த பின்பே அவள் மானம் காக்கப்பட்டது.

 

அங்கிதாவும் இப்போது வேறு வழி இல்லாமல், தனக்கு ஆபத்தான அவனின் மார்பிலேயே தன் முழு உடலையும் அட்டை போல ஒட்டிக் கொண்டாள். 

 

தன் கண்களுக்குப் பக்கத்திலேயே தஞ்சம் அடைந்திருக்கும் தங்கத் தாரகையாளின் மாம்பழக் கண்ணங்களை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜோ..

 

தக்காளிப் பழம் போல் அளவுக்கதிகமாய் சிவந்திருந்த அங்கிதாவின் மூக்கினை, ஒரு முறை தொட்டுத்தடவச் சொல்லி அவனுள் இருந்த ஆண்மை கூத்தாடியது.  

 

அதன் பேச்சைக் கேட்டு தன் சுட்டு விரலால் அவளின் முகத்தை மெல்லத் தடவினான். அந்தத் தீண்டலுக்கு அவளின் மொத்த உடலும் தொட்டாச்சினிங்கியாய் விரிந்து மூடியது. 

 

முதன் முதலாகப் பெண்மையின் கூச்சத்தை அருகிலிருந்து பார்த்த ஜோ, அந்த நொடியில் அண்ட சராசரங்களுக்கும் அப்பால் தன் மனம் சஞ்சரிப்பதை உணர்ந்தான்.

 

அவன் தன்னைத் தான் பார்க்கிறான் என்ற அச்ச உணர்வின் காரணமாய் அங்கிதா தனது முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு அழுதாள்…

 

அந்தக் குரலிலிருந்த விருப்பமின்மை அவன் மனதைப் பிசைந்திட சிறிதும் யோசியாமல், “லவ் யூ..” என்றான் ஜோ.

 

காதல் கேட்டதை நம்பமுடியாமல், அவள் அதிர்ச்சியாய் அவன் முகம் பார்க்க, அவன் இரண்டாம் முறையாய், “மேட்லி லவ்விங் யூ…” என்றான்.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!