episode 1

உயர்ந்து ஒரு மதம் கொண்ட யானையின் கம்பீர அழகுடன் நிமிர்ந்த நின்றிருந்தது உயர்திரு.வேதநாயகம் அவர்களின் அரண்மனை..  முன் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் வேதநாயகத்தின் முன்னோர்கள்..இப்பொழுது சர்வ வல்லமை படைத்த தொழிலதிபராக “வேதநாயகம்.”.

நாளை அவர்களது சீமந்த புத்திரன் ரிஷி வேதநாயகம் தனது பிறந்த நாள் அதுவும் முதல் வயதில் அடி எடுத்து வைக்கும் பெருநாள்…அவரது மாளிகையே தேவேந்திரனை கொண்டாடும் மாயலோகமாய்..ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு பிறகு மன்னர் பரம்பரையையும் தொழில் சாம்ராஜ்யத்தையே கட்டியாள மதம் கொண்ட யானையை ஒத்த கருமையான நிறத்தையும் கம்பீரத்தையும் பெற்று பிறந்திருந்த ஒற்றை வாரிசு. மூன்று தங்கைகளுடன் பிறந்திருந்த வேத நாயகத்திர்க்கு ஒற்றை பிள்ளையுடன் நிறுத்தி வைத்தது விதி ..ஏனோ பெண் குழந்தைக்கான அவர்களது ஏக்கத்தை விதி புறக்கணித்தது.

ஒற்றை பிள்ளையானாலும் ஆள பிறந்த மகவாதலால் வேதநாயகம் தம்பதியினர் அதிக செல்லம் குடுக்காமலும் சமூக நியாய தர்மங்களை கற்பித்தும் வளர்த்தனர்.  ரிஷியின் அன்னை மகாபாரததையும் ராமாயணக் கதைகளையும், தன் மகனுக்கு புகட்டி வளர்த்தார்.  

திரௌபதி துகிலுரிப்புப் படலத்தில் ரிஷியிடம் திரௌபதிக்கான கண்ணீர் வெளிப்படும் அளவிர்க்கு மென்மையானவனாய் ரிஷி …  வளரும் பருவத்தில் பெண்ணை அணைவாய் காக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளவன் ஆண் என்பதை போதித்தார் அவன் அன்னை..  பெண்களின் மாதாந்திர உடல்சோர்ரவபற்றிக் கூட அவன் அறிந்திருந்தான்… உன்னால எந்த பொண்ணும் அழக் கூடாது ரிஷிஅப்படி நடந்தா நீ  தோத்துப் போய்ட்டன்னு நினைச்சுக்கோ.! எனும் போதனை அவன் பெற்றோரிடமிருந்து அவனுக்கு கிடைத்தது ..  அவன் பிரயாணப்படப்போகும் தொழில் உலகில் எப்பேர்பட்ட சோதனைகளையும் கடக்க அவனை அவன் பெற்றோர் தயார் செய்தனர்…அவன் கடக்க வேண்டிய பெண்களும் உண்டு….ஏற்க வேண்டிய பொறுப்புகளும் ஏராளம் மன்னனாயிற்றே.! 

போரினை சந்திக்க மாவீரன் தயார்….போர்க்களம் அவனுக்காக வைத்திருக்கும் போர் முறையை அவன் வெல்வானா?அவனுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் அவனுக்கு வாழ்க்கை பாதையில் வரப் போகும் முர்க்களை அகற்றி வெற்றி பெற துணை செய்யுமா?

“போர்க்களம் மாறலாம்,

போர்கள்தாம் மாறுமா?”

கரிய நிறம் யானையை ஒத்த உயரம்.சிங்கத்தின் கம்பீரம்….சிறுத்தையின் வேகம்…கருணையை காட்டும் விழிகள்..ராஜ வம்சம் என்று காட்டும் அங்க அமைப்பு..கருமையானாலும் எதிரில் நிற்போரை மயக்கும் காந்தப் பார்வை. அகன்ற புஜங்கள்…முட்டிக்கு கீழே வரும் நீண்டகைகள்,தொழிலில் பாயும் புலி….நெருங்கியவர்களின் குழந்தை கண்ணன்….ரிஷி வேதநாயகம் …

ரிஷி தொழில் உலகில் நுழைந்து நான்கு வருடங்கள் கடந்து விட்டது..அயல் நாட்டில் தொழில் முறை பற்றிய உயர் கல்வியை பயின்றபடியே அன்னாட்டில் தங்கள் தொழிலின் ஒரு பகுதியை ஏற்று நடத்தி வந்தாலும் முழு வீச்சில் நான்கு வருடங்களாக பாய்கிறான்.  இருபத்தெட்டு வயதாகிய ரிஷிக்கு அவன் மூன்றாவது அத்தை மகளையே மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டுள்ளது…அமெரிக்க கலாசாரத்தில் வளர்ந்த நிலாவிர்க்கு ஈர்ப்பு நிச்சயம் ராஜ வம்சம் என்பதிலும் இல்லை… ரிஷியிடமும் இல்லை…ஏனோ மனதிர்க்குப் பிடிக்காவிடினும் இந்த திருமணத்தை அவள் நிறுத்த முயற்சிக்கவும் இல்லை…மஞ்சள் கயிறு மாஜிக் அவளிடம் வேலை செய்யுமா..ரிஷி தன் பண்பால் அவளை வெல்வானா  என்பதெல்லாம்  எனக்குத் தெரியவில்லை…காலம் மட்டும்தான் விடை அளிக்க இயலும்.

என்னை பொறுத்தவரை..முழு மன ஈடுபாடின்றி திருமணம் புரிதல் சரியல்ல… திருமண பந்ததின் வாசல் முதலிரவு அறையுடன் நிச்சயம் முடியப்போவதும் இல்லை …ரிஷிக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.  திருமணம் பற்றி அவன் ஏன் நிலாவிடம் பேச விழையவில்லை…அவன் பெற்றோரிடம் நம்பிக்கையும் ..திருமண பந்தத்தின் மீதான அவன் ஈர்ப்பும் காரணமாக இருக்கலாம்..தொழிலதிபனான ரிஷி இந்த விஷயத்திலும் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக கையாண்டிருக்க வேண்டும்..ஆனால் பெற்றோரை அவன் முழுமையாக நம்புகிறான்..இதில் தவறேதும் இல்லையே!..ஊருக்கே ராஜாவானாலும் பெற்றோரின் உயிரான கண்ணன் அல்லவா

.  நிலா அவன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்பவளாய் இருக்க இறைவனை வேண்டுவோம். !நிலா  நிஜத்தை புரிந்துக் கொள்ளப்போகிறாளா ,இல்லை தன்னை வானின் நிலா என்று மமதை கொள்ளப்போகிறாளா எனத்தெரியவில்லை.. மென்மையானமேன்மையான ரிஷி அவளுக்கு இந்திய கலாசாரத்தை புரிய வைக்கவும் தனக்கேற்றவளாக அவளை மாற்றவும் நிறைய சிரமங்களை சிலுவைகளை சுமக்கப்போகிறான் என்பது நிச்சயம் எனக்குத்தெரியும்.!

அவன் கனவில் பாவாடை சட்டை அணிந்து இரட்டைப்பின்னலுடன் மல்லிகைச்சரத்தை  இருபுறமும் தொங்குமாறு அணிந்து குடைஜிமிக்கி ஆட..காற்கொலுசின் சலங்கைகள் இசைக்க மாளிகையை ரீங்காரத்துடன் சுற்றிவரும் பதினொரு வயது நிலா ஆட்சி செய்கிறாள்..பள்ளி விடுப்பு விட்டவுடன் நிலாவின் அம்மா ராஜேஸ்வரி மகளை அழைத்துக்கொண்டு இந்தியா வந்துவிடுவார். மாமியார் வீட்டில் ஒருமாதமும் தமையனின் வீட்டில் ஒருமாதமும் நிலவை இருக்கச்செய்வது அவரது வழக்கம்..ஆனால் வயது ஏறும்பொழுது நிலாவிர்க்கு இந்தியா வருவதில் விருப்பம் குறைந்து பின்னர் அவள் வருவது நின்றே போனதுவெகு வருடங்கள் கழித்து இனிதான் அவன் நிலாவை காணபோகிறான் .

திருமணத்திற்க்கு இன்னும் ஒருவாரமே இருக்கிறது.  நிலா இந்தியா வந்து பத்துநாட்கள் ஆகிறது..ரிஷியும் அவளும் ஒத்தாற்போல ஆடைகள் தேர்வு செய்கிறார்கள்..இருவரது ரசனையும் ஏறத்தாழ ஒரேபோல இருப்பதை கண்டு இருவரின் பெற்றோரும் மகிழ்ச்சியாய் புன்னகையை ,பரிசளித்துக்கொள்கிறார்கள்.  ராஜகுடும்பத்து வாரிசான ரிஷி..- நிலா திருமண ஏற்பாடுகள் நிச்சயம் உலக அளவில்பேசத் தகுந்ததாக இருக்கும்…இந்தியாவிலும்உலகின் அவர்கள் தொழில்புரியும் நாடுகளில் இருந்தும் திருமணத்திற்காக வருகை தருவோர் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர்..இதுதவிர உறவினர் மற்றும் தொழிலாளிகள்…திருமணதிர்க்காக பணிபுரிவோர் அனைவருக்கும் ஊக்கத்தொகையுடன்,ஆடைகளும் பரிசளித்து இருந்தார் வேதநாயகம். மக்கள் நலன் மன்னன் கடன் என்பதை அவர் இன்னும் மறக்கவில்லை.. சைவ அசைவ உணவுகள் தனித்தனியே பரிமாறப்பட்டது..ரிஷி வயதிர்க்குறிய கல்யாணக் கனவுகளுடன்…இத்தனை நாட்களாய் மனைவியிடம் மட்டுமே அற்பணிக்க வேண்டி காப்பாற்றி வைத்திருந்த கற்புடன் ,

 

நீ என் தேவதை எனும் நினைப்பில்  உந்தன் எண்ணங்களில்    

உயிர்த்திருக்கிறேன்!  உனக்காகவே தனித்திருக்கிறேன் !

எனை உறையச் செய்பவளும் நீ…உன் வெப்பத்தில் உருகச்  

செய்பவளும் நீ ! நிலா தகிக்குமா இல்லை எனை அணைக்குமா

உனக்காய் மட்டுமே காத்திருக்கிறேன் என் மணவாட்டியே !

எவ்வளவோ காலம் முன்னேறி இருப்பினும் மங்கள நாண் பூட்டிய பின்னர்தான் தற்பொழுதுள்ள நாகரீகதின்படி திருமண வரவேற்பு போன்றவை என ரிஷி தீர்மானமாக சொல்லிவிட்டதில் அவனது பெற்றோர் மகிழ்ச்சியின் எல்லைக்குச்செல்ல ஒரு பட்டிக்காட்டான என் தலையுல கட்டறீங்க என்று தன் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள் நிலா…உள்ளூர தன் தமையன் மகன் பற்றிய மகிழ்ச்சியே அந்த அன்னையிடம்.  நிலாவின் தந்தை இந்த காலத்தில் இப்படியொரு பையனா என மெச்சிக்கொண்டிருந்தார்.வெளியில் சொல்லி நிலாவை தூண்டிவிட இருவருமே விரும்பவில்லை… 

அமெரிக்காவுல வளந்த தன்னை இந்த பந்தத்தில் மாட்டிவிட இவர்கள் எண்ணுவதற்க்குக் காரணம் ரிஷி வீட்டினரின் சொத்துதான் என அவள் தீர்மானமாக நம்பினாள் ..திருமணத்திற்க்கு சம்மதிக்காவிட்டால் தன் பெற்றோரின் சொத்துக்கள் தனக்கு கிடைக்காதோ எனும் அச்சமும் நிலாவின் மௌனத்திர்க்கு ஒரு காரணம்..திருமணம் முடிந்த பின்னர் ரிஷி வரவில்லை என்றாலும் தான்மட்டும் அமெரிக்கா சென்று விடலாம் என்பது அவள் கணக்கீடு..

ஆனால் எங்கு தன் மகள் திருமண பந்தத்தின் சிறப்பறியாது லிவ் இன் கலாசாரத்தில் மூழ்கிவிடுவாளோ எனும் அச்சமே அவர்களது இந்த ஏற்பாட்டிர்க்குக் காரணம். அண்மை காலங்களில் இரவு

நேர விடுதிகளில் இருந்து நிலா சுய நினைவுடன் திரும்புவதில்லை…தனக்குப்பின் தன் மகள் தொழிலை எடுத்து நடத்துவாள் என நினைத்திருந்தார் நிலாவின் தந்தை செல்வபதி..

ஆனால் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தவுடனேயே நிலாவின் போக்கு திசை திரும்பியது..கல்வியில் நாட்டம் குறைந்து அத்துணை நாட்களாய் அருமையாக தன் பெற்றோரால் வளர்க்கப்பட்ட நிலாகட்டுப்பாடுகளுடன் கூடிய இந்திய வளர்ப்புமுறையை வெறுக்கலானாள்.  சுதந்திர வானில் பறக்க விரும்பிய அவளுக்கு தோதான தோழமைகள் கிடைக்க…  இன்று நிலைமை திருமண ஏற்பாட்டில் வந்து நிற்கிறது.ஏனோ அந்நிய மண்ணில் அருமையாய் வளர்க்கப்பட்ட அற்புதமான நல்ல தோழமைகள் அவளுக்கு வாய்க்கவில்லை.

கையில் மருதாணி இடுதலில் தொடங்கி கூரை சேலை உடுத்துவது வரை அனைத்துமே தகராறுத்தான்…என்னதான் சொந்த அண்ணனாக இருந்தாலும் சம்மந்தி முறையில் இருக்கும் வேதநாயகத்தின் காதுகளுக்கு எட்டாமல் சமாளிப்பதற்குள்…அம்மா…

நிலாவின் அம்மா ராஜேஷ்வரிக்கு இதய வலி வாராமல் இருந்தது அதிசயம்தான்!!  செல்வபதிக்கோ திருமணம் நல்லபடியாக முடிந்து நிலாவையும்வேறு குழந்தைகள் இல்லா நிலையில் தன் தொழிலையும் ஏற்க வருவான் .தன் மருமகன் ரிஷி எப்பொழுது தன் மகளின் கழுத்தில் மங்கள நாண் பூட்டுவான் என்ற ஏக்கம்!  திருமணம் முடிந்தபின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து தாயகம் திரும்பிவிடவே அவர் மனம் துடித்தது.  நிலாவின் மணக்கணக்கீடுகளும் ஒரு காரணம்.

ஆரம்பமே பல்வேறு முரண்பாடுகளைக்கொண்ட இருவரின் வேறுபட்ட மனோ நிலைகளுடன்..விதியோ இருவரது கை ரேகைகளுக்குள் முடிச்சிட முனைகிறது..முதல் கோணல் முற்றும் கோணல் என்று நிலாவின் நடவெடிக்கைகள் அவர்கள் வாழ்க்கையை வேடிக்கை ஆக்கிவிடுமோ என உள்ளூர என் மனம் தவிக்கிறது.  

பெண்களை பற்றி உயர்வாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டு  வளர்ந்திருக்கும் ரிஷியால் கட்டுப்பாடுகளை கட்டுப்பாட்டித்தனம் என சாடும் ,மீறும் நிலாவை மாற்ற முடியுமா?

 எனக்கென்னவோ சந்தேகமாய் உள்ளது.

இதோ திருமணநாள் காலை..அக்னியின் முன் நிலாவின் கை பிடிக்க (தீ குளிக்க) குளிர்ச்சியை அறியாதவளான அத்தை மகள் அருகில் ரிஷி.காதலை கண்களில் தேக்கியபடி….வெளுப்பான தன் கைகளுக்கருகே கரும்காரங்கள் உடையவனான மாமன் மகனை வெறுப்பேனும் கரும்காண்ணாடி அணிந்தவளாக பார்த்து அமர்ந்திருந்தாள் நிலா.

ஏ !உக்கிரத்தில் காயும் பெண்ணே! நிலாவேன்று பெயர் வைத்தால் மாசற்ற நிலாவாகி விடுவாயோ,மாசற்ற எம்மன்னவன் உனக்கு மாலையிட வருகையில் குளிரதென்றலாய் வீசாமல் சூராவளியாய் நீ அமர்ந்திருப்பதை காணும்பொழுது என் உள்ளுக்குள் குளிர்கிறதே.!!

ஒருவழியாக மந்திரங்கள் உச்சரித்து மங்கள வாத்தியமாம் நாகஸ்வரம் முழங்க திருமாங்கல்யத்தை உளப்பூர்வமாக நிலாவின் கழுத்தில் பூட்டினான் ரிஷி.அனைத்து ஸம்ப்ரதாயங்களும் முடிந்து மாளிகை உள்ளே நுழையும் பொழுது கூரை சேலை காலை தடுக்கிவிட ரிஷியின் கரங்களிலே தஞ்சம் புகுந்தது அந்த நிலவு…எத்துணை இடர் வந்தபோதும் உனக்காய் நான் உள்ளேன் சகியே !  என்று ரிஷியின் மனம் ஆரவார கொண்டாட்டம் இட்டது..

முதலிரவில் தனிமையில் மனையாளை சந்திக்க மனதில் ஆயிரம் ஒத்திகைகள் அவன் மனதில்….பூவை விட மென்மையான ரிஷியின் முகம் பாவையவள் வருகைக்காய் காத்திருக்க…நிலவு அவன் அறைக்குள்ளே அடியெடுத்து வைத்தது.    

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!