2..ராட்சசனின் காதல் பாவை

2. ராட்சசனின் காதல் பாவை..

போன பகுதியில் :

“பீச் ரெஸ்டாரன்ட் முன்பு ஒரு பிஎம்டபிள்யூ கார் வந்து நின்றது. அதில் கிரே கலர் சூட் அணிந்து கொண்டு இறங்கி நின்றான் அவன். அதைப் பார்த்து ஜீகே வேகமாக வந்தவர்…

இனி..

“வாங்க விதுரன். உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று அழைத்தார் அவர்.

ஆனால் இவனோ, அவருக்கு மரியாதை நிமித்தமாக ஒரு தலை அசைவை கூட கொடுக்காமல் நடக்க, அவனைப் பற்றி தெரிந்ததால் அதை பெரிதுபடுத்தாமல் அவரும் அவனுடனே நடந்து வந்தார்.

அங்கு வந்திருந்த சில பிஸ்னஸ்மேன்களை அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் அவனோ ஒரு பார்வை மட்டும் பார்த்தவன், அவனுக்கென்று இருக்கும் இடத்திற்குச் சென்று அமர்ந்து விட்டான். இவனுக்குப் பதிலாக சுனில் அனைவரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு, அவன் இருக்கும் இடத்திற்கு வந்து நின்று கொண்டான்.

அங்கு இருக்கும் அனைவருக்கும் அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் எவ்வளவு பெரிய நல்லவன் என்று!

இதிலும் என்ன கொடுமை என்றால், அங்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் அவனைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனின் அழகைப் பார்த்தவுடன் பெண்கள் அனைவரும் அப்படியே பிரமித்துப் போனார்கள்.

இவன்தான் நம் கதையின் நாயகன் விதுரன்.

பார்க்கும் பெண்கள் அனைவரும் அவன் அழகில் மயங்கத்தான் செய்வார்கள். ஆனால் அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்று பழமொழி உள்ளது. அதை மறந்து அவனின் அழகை மட்டும் கருத்தில் கொண்டு பெண்கள் அனைவரும் மயங்கியே விடுவார்கள்.

அவன் உயரம் ஆறு அடிக்கும் சற்று உயரம். அவன் நிறமும் பாலையும் அவனையும் ஒன்றாக வைத்தாலும், இரண்டுக்கும் வித்தியாசம் என்பதே தெரியாது. தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளான்.

பெண்ணாகட்டும், பொருளாகட்டும், எல்லாம் இவனின் கண் அசைவில் நடக்க வேண்டும். அப்படி ஏதாவது ஒன்று தவறினாலும், இவனின் உள்ளே இருக்கும் அரக்கன் வெளியே எட்டிப் பார்த்துவிடுவான்.

சாரி… சாரி… உள்ளே இருக்கிறது மட்டுமல்ல, அவனே ஒரு அரக்கன்தான்.

(இவனைப் பற்றி ஏதோ கொஞ்சம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.)

ஜீகே மேடை ஏறியவர்,

“ஹலோ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன். இந்த பார்ட்டி எதுக்குன்னு உங்களுக்கு ஆல் ரெடி தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் இன்னொரு வாட்டி நான் சொல்றேன். விஷன் கார்ப்பரேஷனோட ஜீகே குரூப்ஸ் இப்போ ஒரு ப்ராஜெக்ட் சைன் பண்ண இருக்கோம்.

மிஸ்டர் விதுரன் பத்தி எல்லாருக்கும் தெரியும். இந்த சின்ன வயசுலேயே இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்காரு. அவர உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தணும்தான் இந்த பார்ட்டியை அரேஞ்ச் பண்ணி இருக்கேன். அதுவும் இல்லாம, அந்த ப்ராஜெக்ட்டுக்கு உங்க முன்னாடிதான் நாங்க சைன் பண்ணப் போறோம்” என்று அவர் சொன்னதும்,

ஒருவன் அவர் முன்பு வந்து சில பைல்களை அவரிடம் கொடுத்தான்.

அந்த பைல்களை வாங்கிக் கொண்டு விதுரனிடம் சென்று, அந்த பைல்களில் கையெழுத்து விட்டு அவனிடம் கொடுத்தார்.

ஆனால் அவனோ அதை வாங்காமல் சுனிலை ஒரு பார்வை பார்த்தான்.

சுனில் அதை புரிந்து கொண்டவன், அந்த பைலை கையில் எடுத்து அதில் இருக்கும் அனைத்தையும் படித்துப் பார்த்தவன், மீண்டும் விதுரனிடம் கொடுத்தான்.

அதை வாங்கியவன் அவனும் சைன் செய்தான்.

அவன் சைன் செய்து முடிக்கவும், வானத்தில் வெடிகள் சத்தம் அதிகமாகக் கேட்கவும் சரியாக இருந்தது. அங்கிருந்த அனைவரும் நிமிர்ந்து பார்க்க, வானவேடிக்கைகள் வெடித்து, ‘ஹேப்பி நியூ இயர்’ என்று இருக்க, அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லிப் பரிமாறிக் கொண்டனர்.

ஆனால் இவனோ அடுத்த நிமிடமே அங்கிருந்து கிளம்பி இருந்தான். ஜீகேவிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல்.

அதைப் பார்த்த சுனில் வேகமாக ஜீகேவிடம் வந்தவன்,

“சரி, தப்பா எடுத்துக்காதீங்க சார்” என்று சொன்னான் சுனில்.

“நோ ப்ராப்ளம் சுனில். எனக்கு விதுரன் பத்தி தெரியும்” என்று சொல்லியவர், அவனைப் பார்த்து மெல்ல சிரித்தார்.

“ஓகே சார், கிளம்புறேன்” என்று சொல்லியவன் அங்கிருந்து வேகமாகச் சென்றான்.

இல்லையென்றால் அவன் விட்டுவிட்டுச் சென்று விடுவான் என்பதற்காக அல்ல. இதற்கும் சேர்த்து நாளை மொத்தமாக வைத்து செய்வான் என்பதற்காக.

ஆபீஸ்…

அந்தக் கட்டிடம் சுமார் 72 மாடிகளைக் கொண்டிருக்க, அதில் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்பொழுது அனைவரும் வேலையை நிறுத்திவிட்டு, பயத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

சேர்மன் அறையில் இருந்து அவனின் கர்ஜனை கேட்டதிலிருந்து…

“சார், இதை உடனே சரி பண்ணப் பார்க்கிறேன்” என்று சொன்னான் சுனில்.

“வாட்? சரி பண்ணப் பார்க்கிறியா? இந்த மிஸ்டேக் எப்படி நடந்ததுன்னு கேட்கிறேன்” என்று கர்ஜனையாய்க் கேட்டான் விதுரன்.

அவன் கேட்ட கேள்வியிலேயே இவனுக்குப் பயம் எழுந்துவிட, எச்சிலை விழுங்கியபடியே பேசத் தொடங்கினான்.

“சார், நீங்க சொன்ன ப்ராசஸ் படிதான் எல்லாமே பண்ணுது. இந்த மிஸ்டேக் எப்படி நடந்ததுன்னு தெரியல சார்” என்று பயத்தோடவே சொன்னான் சுனில்.

அவன் சொல்லியது தான் தாமதம். அவன் மீது அங்கு இருக்கும் அனைத்து பைல்களும் வந்து விழுந்தன.

அதுமட்டுமில்லாமல், அவன் ஏதோ தேட, அதைப் பார்த்துப் பயந்தவன்,

“சார்… சார்… கோவப்படாதீங்க சார். இன்னும் ஆஃப் அன் ஹவர்ல நான் இந்த ப்ராப்ளத்தை சால்வ் பண்ணிடுறேன் சார்” என்று சொன்னான் சுனில்.

அவன் சொல்லியதைக் கேட்டு, ஆனால் பறக்கும் பார்வையைப் பார்த்தவன்,

“ஆஃப் அன் ஹவர் கிடையாது. டென் மினிட்ஸ்” என்று சொல்லினான்.

அதைக் கேட்டவனுக்கு ஐயோ என்று இருந்தாலும், தனக்கு வேறு வழியில்லை என்று தெரிந்தவனுக்கு, சரி என்பது போல் தலை அசைத்துவிட்டு அங்கிருந்து சிட்டாகப் பறந்து சென்றான் சுனில்.

விதுரனின் அறையிலிருந்து சுனில் வெளியே வருவதற்கும், அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் கலவரத்துடன் அவனைப் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது.

அதைப் பார்த்தவன் சற்று கடுப்பாகி,

“இங்க என்ன ஃபேஷன் ஷோ எதுனா நடக்குதா? எல்லாரும் வேலையை விட்டுட்டு அப்படிப் பாத்துட்டு இருக்கீங்க. ஒழுங்கா வேலையைப் பாருங்க. அப்படி வேலை வேணாம்னு நினைக்கிறவங்க மத்ததப் பாருங்க” என்று சற்று தோரணையாய்ச் சொன்னான் சுனில்.

அவனின் குரலைக் கேட்டு, அனைவரும் அடுத்த நொடியே அலறிக்கொண்டு அவர்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

சுனில் என்னதான் மேனேஜராக இருந்தாலும், விதுரனின் அடுத்த நிலையில்தான் அவனை வைத்திருந்தான் விதுரன். அதனாலேயே அவனைக் கண்டு அனைவருக்கும் ஒரு பயம் இருக்கத்தான் செய்யும்.

இவன் நினைத்தால் வேலையில் இருந்து எடுக்கவும் செய்யலாம், புதிதாக ஒரு ஆளை வைக்கவும் செய்யலாம்.

அவன் சொல்லியது போல் அடுத்த பத்து நிமிடத்தில் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்பதால், வேக வேகமாக தனது லேப்டாப்பைத் திறந்தவன், எங்கு தவறு நடந்திருக்கிறது என்று பார்க்கத் தொடங்கினான்.

ஐந்து நிமிடங்கள் இப்படியே கடந்து இருக்க, அவனுக்கு எந்த ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை.

அதில் டென்ஷன் இன்னும் அதிகமாக, ஒரு புறம் பயமும் அதிகமானது. அந்த அரக்கனிடம் மாட்டிக் கொண்டால் என்ன செய்வான் என்று நினைக்க நினைக்க, முகத்தில் வேர்வைத் துளிகள் பூத்துக் கொண்டே இருந்தன.

சரியாக எட்டு நிமிடங்கள் கடந்து இருக்க, அப்பொழுதுதான் எங்கு தவறு நடந்திருப்பது என்று தெரிந்தவனுக்கு, அதை உடனே சரி செய்யத் தொடங்கினான்.

அவன் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டாலும், அவன் கொடுத்த நேரத்தை விட 5 நிமிடங்கள் கடந்திருந்தன.

அதைப் பார்த்தவனுக்கு இன்னும் வேர்வைத் துளிகள் பூத்தன.

ஒரு வழியாக அவன் அந்த வேலையை முடித்தவன், மணியைப் பார்க்க, அவன் கொடுத்த நேரத்தை விட ஒன்பது நிமிடங்கள் அதிகமாக இருந்தது.

அதை நினைக்கும்பொழுதே அவனுக்குத் தொண்டைக்குழி வறண்டு போக, அவன் மனதில் பயம் தொற்றிக் கொண்டது.

“ஐயோ கடவுளே, பாஸ் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திடு. அவர் சொன்ன டைமுக்கு விட ஒன்பது நிமிஷம் அதிகமாயிடுச்சு. இப்போ நான் போறதுக்குள்ள எப்படி மூணு நிமிஷம் ஆயிடும். அவரோட கணக்குல அதையும் சேர்த்துவிடுவாரு. அதுவும் இல்லாம, இது யாரு பண்ணதுன்னு தெரிஞ்சா நான் செத்தேன். என்ன எப்படியாவது காப்பாத்திருப்பா” என்று அந்தக் கடவுளிடம் வேண்டியவன், வேகமாக விதுரனின் அறை முன்பு நின்று கதவைத் தட்டினான்.

கதவு தட்டியது தான் தாமதம். கர்ஜனையாக விதுரனின் குரல் கேட்டது.

அவன் குரலைக் கேட்டு பயந்தவன், மெல்ல கதவைத் திறந்து கொண்டு சுனில் உள்ளே நுழைய, அவனை அனல் பறக்கும் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன்.

அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவன்,

“சார், எல்லா ப்ராப்ளத்தையும் சால்வ் பண்ணியாச்சு” என்று மெல்ல சொன்னான் சுனில்.

ஆனால் விதுரனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதற்குப் பதிலாக அவன் பார்வை மட்டும் அனலைக் கக்கிக் கொண்டிருந்தது.

அவன் கண்களை நேராகப் பார்க்க முடியாதவன்,

“சார், இன்னும் 1 ஹவர்ல கஸ்டமர் இருக்கு. ப்ராடக்ட் எல்லாம் போய்ச் சேர்ந்துடும். இந்த ப்ராப்ளம் ஆக்சிடென்ட் கிடையாது” என்று அவன் பேச்சை அப்படியே நிறுத்தியவன், மெல்ல விதுரனைப் பார்த்தான் சுனில்.

விதுரனின் புருவங்களோ சுருங்க, அதை பார்த்தவன் எச்சிலை விழுங்கியபடி மீண்டும் பேசினான்.

“இது ஆக்சிடென்ட்டா நடந்த ப்ராப்ளம் இல்ல சார். இது வேணும்னே ஏற்படுத்தின ப்ராப்ளம். அதாவது, இது வேற யாரும் பண்ணல… கேகே குரூப்ஸ்” என்று சுனில் சொல்லி முடிக்கும் முன்பே, அந்த அறையே அதிரும் அளவுக்குக் கத்திருந்தான் விதுரன்.

“வாட்?” என்று கர்ஜனையாய் அவன் கேட்டிருக்க,

அவனின் கோபத்தைப் பார்த்த சுனிலுக்கு உடல் எல்லாம் நடுங்கிவிட, நடுக்கத்தோடு அவன் முன்பு நின்றிருந்தவன், அடுத்து என்ன சொல்வது என்றே புரியாமல் அவன் முகத்தைப் பயந்தபடி பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் சுனில்.

அதைப் பார்த்த விதுரனுக்கு இன்னும் கோபம் வர,

“இப்போ முழுசா சொல்லப் போறியா இல்லையா?” என்று கொலைவெறியில் கேட்டான் அவனைப் பார்த்து விதுரன்.

அதில் பதறியவன்,

“கேகே குரூப்ஸ் குகன்தான் பண்ணியிருக்காரு” என்று சொன்னான் சுனில்.

இவன் சொல்லி முடிக்கவும், விதுரனின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது.

அந்தத் திரையில் ‘கேகே குரூப்ஸ்’ என்று இருக்க, அதை அனல் பறக்கும் பார்வையுடன் பார்த்தவன், அந்த காலினை அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.

எதிர் முனையில் இருந்து…

இதை எல்லாம் தெரிந்து கொள்ள இனிவரும் அத்தியாயத்தைப் படியுங்கள்.

காதல் பாவை தொடரும்…

இப்படிக்கு,

உங்கள் அன்பு தோழி

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!