Episode 2

ஒருவருக்கொருவர் புரிதலின் பின்னர் கூடலில் இணையலாமென ரிஷி  நினைத்திருக்க அவன் மனையாட்டியோ.,”சில்லி ரிஷி…ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணுறது உடம்பால ஒருதருக்கொருத்தர் புரிஞ்சுக்கத்தான்…காலம் பூரா இருக்கு நாம மனச புரிஞ்சுக்க.” என்று தன் தேவையை அவள் கூற…தவறில்லை என தலையாட்டினான் ரிஷி. நீண்ட காத்திருப்புக்குப்பின் பெண்ணின் தேகத்தில் இணைந்தும் அவனுள்ளே ஒரு அவஸ்த்தை…நிச்சயம் அது இன்பத்தால் வந்த அவஸ்த்தை அல்ல…

தேன் நிலவு காலத்திலும் உடல் சார்ந்த தேவைகளுக்கு மட்டுமே ரிஷியை நாடிய நிலா..தன்னை பற்றி பகிர்ந்து கொள்ளவும் இல்லை…அவனை பற்றி அறிய விழயவும் இல்லை…எதிலோ தோற்ற உணர்வுடன் வழக்கமான அலுவல்களில் தன்னை ரிஷி நுழைத்துக்கொள்ள அதுவே நிம்மதி என்று அவளும் இருந்துவிட்டாள்.  

நிச்சயம் ரிஷி எதிர்பார்க்கும் திருமண வாழ்க்கை இது போன்றது இல்லை.அவனது பெற்றவர்களை போல தனது இணையிடமும் மனமொத்து, காதலுடன் கூடிய இனிய வாழ்க்கையை, திகட்டாத கூடலை அவன் எதிர்பார்த்தான். வாழ்நாள் முழுவதும் இருவருமாக இருக்கும் பேரின்ப வாழ்வு எனும் எண்ணம் ஒரு கனவு போல அவனுக்கு இப்போது தெரிகிறது. 

அமெரிக்கா சென்றுவிட்ட தன் பெற்றோருடன் பேச நிலாவிர்க்கு விருப்பமில்லை..  அவர்களும் மகள் குடும்ப வாழ்வில் புக நாம் விலகியிருத்தல் அவசியம் எனக்கருதி விலகி இருக்க முடிவெடுத்தனர்.  ரிஷியின் பெற்றோருடன் வசிப்பது தன் சுதந்திரத்திர்க்கு தடை எனக்கருதி சென்னையிலிருந்து மும்பை அல்லது பெங்களூரு சென்றுவிட ரிஷியை துளைக்கலானாள்.  

ரிஷியும் மும்பை சென்றால் தொழிலை இன்னும் விரிவு செய்ய வசதி என நினைத்து சரி என்றான்…

 

 

இன்று வரை ராஜா போல இருக்கும் ரிஷியை வைத்து விளையாட விதி தனக்கான வேலைகளை தொடங்கிவிட்டது. அதுவும் ஒரு மஞ்சள் கயிற்றை வைத்து. 

மும்பை மாநகரம் தனது அலாதியான சுறுசுறுப்பில் வேகமாய் இயங்கிக் கொண்டிருந்தது.. பாந்த்ரா மேற்க்குப் பகுதியில் குடியிருப்பு… ரிஷிக்கு சொந்தமான மூன்று படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட் ஒன்றை அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கி இருந்தான் ரிஷி.

மும்பையில் தங்க வேண்டி இருந்த சமயங்களில் சொந்தமாய் தன் கையே தனக்குதவி என்று ஏதாவது எளிய சமையல் செய்துக்கொண்டு அலுவலகப் பணிகளை கவனிக்கும் வழக்கம் அவனது.  வீடு நேர்தியாக பரமரிக்கப் பட்டிருந்தது. அடுக்களையில் சமயலுக்குத் தேவையான பொருட்கள் ஓரளவிர்க்கு.. தனியாய் இருக்க வேண்டி இருந்ததால் வேலைக்கு ஆட்கள் இல்லை..  நிலாவிர்க்கு எப்பொழுதும் கூப்பிட்ட குரலுக்கு வேலையாள் வந்து நிற்க வேண்டும். தேவையானவற்றை ரிஷி  தனியாகவே செய்ய வேண்டி இருந்தது.. கடைகளுக்கு மனைவியுடன் செல்லத்தான் அவனுக்கு விருப்பம்..வேலையாட்கள் வைப்பது கூட அவனுக்கு பிடித்தமில்லை..தனியாக மனைவியுடன் களிக்க அவன் இதயம் விரும்பியது.

அவன் மனைவிக்கோ நேரெதிர் விருப்பங்கள்.  விட்டுக்கொடுக்கவும் அவளை சந்தோஷமாகவும் வைத்துக்கொள்ள அவன் பிரயர்தனப்படுகிறான்.

அங்காடிகளில் வீட்டுபொருட்கள் வாங்கக்கூட அவள் வர விரும்புவதில்லை…தன் பிடித்தமின்மையை நிலா வெகுவாக காண்பிக்க ஆரம்பித்திருந்தாள். தொழில் சாம்ராஜ்ய மன்னன் வீட்டில் கண்ணியமுள்ள கணவனாக இருக்கவே விருப்பம்.  திருமணம் முடிந்து ஆறுமாதங்கள்,மும்பை வந்து மூன்று மாதங்கள்…தான் மனைவிக்காக வெகுவாக வெளிநாட்டுப் பயணங்களை ரிஷி குறைத்துக்கொண்டிருந்தான்.

அவளோ “என்ன ..மாமனார் வீட்டு சொத்தோட நிறையத் தேறும்னு தொழில விட்டுட்டியா?” என கூரம்புகளை வீசினாள்.அவர்களைப்போல பத்து மடங்கான சொத்து அவனிடம் இருப்பது அவளுக்குத்தெரியும். தன் தந்தையின் யோசனைகளை முறியடிக்க அவள் முன்கூட்டியே எய்த சொல்லம்பு. இனி செல்வபதியின் தொழிலை ரிஷி ஏற்ப்பது சந்தேகமே.!  

ரிஷி வெளிநாடுகள் சென்றாலாவது தான் எண்ணப்படி வாழலாமென நினைத்திருந்த நிலவிர்க்கு அவனது நடவெடிக்கைகள் எரிச்சலையே கொடுத்தது.  சாதாரண பெண்ணை மணந்திருந்தால் இவன் காதலில் அவள் சிக்கி மூழ்கீருப்பாள்…வெறுப்பான எண்ணங்கள் நிலாவை அவனிடமிருந்து பிரித்து வைத்துள்ளது.  

நிலவின் வெறுப்பான நடவெடிக்கைகள் ரிஷிக்கு ஆச்சர்யத்துடன் கலந்த மன துக்கத்தையே பரிசளித்தது.. “ இந்த கல்யாணம் பிடிக்கலைன்னா முதலிலேயே அவள் ஏன் சொல்லவில்லை..தவறு எங்கே” என புரியாமல் தவித்தான் அந்த காதலன்.

அருமையான கணவன் கிடைத்தாலும் அகங்காரத்தில் ஆடும் பெண்களை என்ன செய்ய முடியும்?  எவ்வளவு தூரம் அவனால் பொறுத்துப்போக முடியும்? தொழில் உலகில் தன்னிகரில்லா அந்த சிங்கம் வீட்டில் மனைவியின் காதலை பெறமுடியாமல் அவளது வெறுப்பிலும் புறக்கணிப்பிலும் உள்ளுக்குள் கடினமாகிக்கொண்டு வருகிறது..விளைவை அனுபவிப்பார் யார்?

தன் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள அவனது சுயமரியாதை தடை விதித்துள்ளது…இப்பொழுதெல்லாம் ரிஷி அதிக நேரம் அலுவலக்திலேயே இருந்து விடுகிறான்..அவன் தொழில் பயணங்களும் அதிகரித்துவிட்டது..நிலாவின் சந்தோஷமும்தான்..

ஆனால்,அவளது காதல்,அவனை நோக்கி ..பூஜியம்தான்!!

ரிஷி ஆஸ்திரியா சென்றிருந்த நேரம் கருவுற்றிருப்பது தெரியாமல் கண்மூடித்தனமாக குடித்துவிட்டு பபில் ஆடிக்களைத்து வீடு வந்த நிலாவிர்க்கு கரு கலைந்ததே அடுத்த நாள் மதியம் போதை தெளிந்த பின்னர்தான் வேலைக்காரி பார்த்து சொன்னதில் தெரிந்தது.முறைப்படி மருத்துவமனை சென்று வயிற்றை சுத்தப்படுத்திக்கொண்டவள் இதுபற்றி ரிஷியிடமோ ஏன் பெற்றோரிடம் கூட சொல்லவில்லை…வேலைக்காரியின் கைகளிலும் பணத்தை திணித்து,வெளியே விஷயம் தெரிந்தால் விளைவுகள் வேறுவிதம் எனும் மிரட்டல் வேறு.” தொல்லை தானே விட்டது”என்று அவள் இருந்துவிட தன் மகவு கருவில் கருகியது தெரியாமல் ஏதோ பெரும் மன வேதனையில் உழன்று கொண்டிருந்தான் ரிஷி..  தாயகம் திரும்ப அவனது ஒவொரு அணுவும் துடித்தது.ஆனால் வேலை முடிய இன்னும் ஒருவாரம் இருக்கிறதே.

    

 

‘சோலைவனம்’அழகிய சிற்றூர்….தன் வீட்டு வாசலில் பெரிய சிக்குகோலத்தை தேனுகா அனாயாசமாக தான் அக்காவுடன் சேர்ந்து வரைந்து கொண்டிருக்க… “ ஏடி சுருக்கெழுத்து வகுப்பில இன்னிக்கி மாடல் டெஸ்ட் குடுக்குறாங்க சீக்கிரம் கிளம்பணும்னு நேத்து சொல்லிட்டு இருந்தியே..கெளம்பு சீக்கிரம் ”என்று அவள் அப்பா வெற்றிவேல் குரல் கொடுத்தார்,வெற்றிவேல் அரசுப்பணியில் இருக்கிறார்..இந்தா வந்தேம்ப்பா …என்று அவசரமாக கோலத்தை முடித்துவிட்டு டவுனிர்க்கு கிளம்பினாள் தேனு..  

 

தேனு பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சுருக்கெழுத்து,மற்றும் கணினி வகுப்பிர்க்குச் செல்கிறாள்…கல்லூரியில் விண்ணப்பிதுள்ளாள்.  எப்படியாவது அரசுவேலையில் சேரவே அவள் இவ்வளவு பாடு படுகிறாள்…பொறுப்பு மிகுந்த பெண் ஆதலால்பெற்றோருக்கு இவள் மீது பாசமும், அதிகமே…தேனுவிர்க்காக அவளும் அவள் பெற்றோரும் ஆயிரம் கனவுகள் வைத்துள்ளார்கள்..விதி அவளுக்கு எவற்றுடன் காத்திருக்கிறது? 

  தேனு…  குழந்தை முகம் இன்னும் மாறவில்லை…மாநிறம்.  ஐந்தரை அடி உயரம்..படிப்பு மிக மிக பிடிக்கும்.. கல்லூரி படிப்பை முடித்து எப்படியாவது தமிழக அரசு வேலை பெற்று திருமணம் செய்துக்கொண்டு மற்ற பெண்களைப்போல வாழவே விருப்பமுள்ளவள்.  

அவளுக்கு சென்னை சென்று கல்வி கற்றால் தன்னம்பிக்கை மேம்படும் என தோழிகள் வட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட சென்னை கல்லூரிகளில் அதிகமாக விண்ணப்பித்திருந்தது அந்த தேன் சிட்டு.   அவள் எதிர்பார்த்தபடிக்கு சென்னை மாநகரில் புகழ்பெற்ற ஒரு மகளிர் கல்லூரியில் பி.காம் கிடைக்க அத்துணை மறுப்புக்களையும் முறியடித்து சென்னை ரயில் ஏறியவள் தன்னை காப்பாற்றிக்கொள்ள மிகுந்த போராட்டங்களை சந்தித்துத் தோற்றுபோவாள்..தன் பெற்றோரைப் பிரிந்து எதற்க்கு வந்தேன் என ஏங்கக்கூடும்,என கனவுக்கூட கண்டிருக்கப்போவதில்லை. 

இதோ விளையாட்டுப்போல தேனு சென்னை வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது.  மூன்றாம் ஆண்டு பயிலும் அவள் சுருக்கெழுத்து,கணினிபயிற்சிகளில் சில முடித்து வேலைக்குப்போக தன்னை தயார் செய்து கொள்கிறாள். அரசு வேலைக்கான பயிற்சி நிலையம் ஒன்றில் மாலை நேர வகுப்புகளுக்கு தனது விடுதியிலிருந்து பேருந்து ஏறி செல்லும் அனுபவம் அவளுக்கு ஆசையான ஒன்று. பேருந்து கடற்க்கரை சாலையில் செல்லும்பொழுது ரசிக்காத்தார் எவருண்டு ?

சோலைவனத்து சுந்தரி சென்னையில்..மன்னவனோ மும்பையில் ..விதி இருவரையும் இணைக்கும் சந்தர்ப்பம் ..கண்டிப்பாய் விதி இருக்கிறது என நான் நம்புகிறேன்..

 

கடற்கரை சாலையில் இறங்கி மைலாபூர் செல்லும் வழியில் இருக்கும் தனது மாலை நேர வகுப்புக்குள் நுழைந்தாள் தேனு …அதே அடுக்கின் இன்னொரு பகுதியில் அமைந்திருக்கும் வெளிநாட்டு பிரயாணங்களுக்கு ஏற்பாடு செய்து தரும் நிறுவனமும் அமைந்திருந்தது.  அதில் ஆண்களுடன் பெண்களும் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.  அந்த பெண்கள் பேசும் உயர்தர ஆங்கிலமும் அவர்களது ஆடை உடுக்கும் விதமும் கிராமத்து வாழ்க்கையில் வளர்ந்த தேனுவுக்குள் பெரும் ஆசார்யத்தை விதைத்தது…  தானும் உயர்ரக ஆங்கிலத்தில் உரையாடவேணும் ..அதற்க்கு உண்டான பயிற்சி வகுப்புகளில் சேரவேணும் என மனதிர்க்குள் முணுமுணுத்தாள் தேனு.  இவளது அதிக அலட்டல் இல்லா நடவடிக்கைகளுக்கு பயிற்சி வகுப்பிலும் …அதனருகில் இருந்த அலுவலகத்திலும் ரசிகக் கூட்டம் உண்டு என்பதும் …சிலரின் ரசிப்பு எல்லைகள் கடந்தது என்பதோ நிச்சயம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.  

ரசிகர்கள் பலவிதம்…பெண்ணின் மனதைவிட…அவளது மென்மை பாகங்களுக்கே மதிப்பு அதிகம்.  அந்த வகையில் தேனுவின் மதிப்பெண்கள் நூறு சதவிகிதமே.!!   கூடப்பயிலும் ஆண்களுக்கு இவளது வனப்பு ஈர்ப்பு கொடுத்தாலும் தன்னுடன் பயில்பவள் என்ற ஒருவித பற்றுதலையும்.இவளை நல்லமுறையில் நடத்தவேணும் என்ற எண்ணமும் கொண்டிருந்தாலும் வெளி ஆண்களும் அப்படி இருக்கவியாலாதே !!  

காமத்திர்க்கும் காதலுக்கும் இடையில் இருப்பது  வெறும் சதை… மார்பை ரசித்தல் காமத்திர்க்கு வித்து… காமம் முடிந்தவுடன் கிளம்பிவிடும்.மார்பின் மறைப்பினுள்ளே நிஜமாய் மறைந்திருக்கும் மனதின் எல்லையில்லா அன்பை மட்டுமே ஆதாரமாய் கொண்டது காதல்.ஆதாரம் அகலாது. 

தேனுவிர்க்கும் மார்க்கு போட்டாயிற்று.!!  வழமை போல் தன் வெளிநாட்டுப் பிரயாணம் முடிந்து வீட்டினுள் நுழைந்த ரிஷியை அவன் மனையாள் வெகு அன்புடன் வரவேற்றாள்.  காரணம் ஒன்றும் பெரிதல்ல…அவள் அப்பா இவளுக்கான மாத செலவு ரிஷிதான் செய்யவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்.  இன்னுமொன்று …உடன் உறங்கும் ஆண்கள் இருந்தபொழுதும் அவள் மனம் இன்று அந்த வலிய தேக்கு மர தேகத்தானை தேடியது …அவனோடு கூடும் இன்பம்…நிச்சயம் வேறுதான் …நற்குடி பிறப்பும் அற்புத வளர்ப்பும் கொண்ட ரிஷிக்கு நிச்சயம் இவளது மற்ற நடவடிக்கைகள் தெரிந்திருக்கவில்லை,அல்லது தெரியா வண்ணம் பார்த்துக்கொண்டாள் நிலா .

என்றுமில்லா நேசத்துடன் அணுகும் மனைவியை காதல் எனும் மாயக்கண்ணாடி வழியாய் கண்டவனுக்கு தன் வாழ்வு சிறக்குமென்ற நம்பிக்கை வெகுவாய் வந்துவிட்டிருந்தது.  அவளுடன் தான் கற்பனையில் மட்டுமே வாழ்ந்திருந்த தருணங்களை நிஜமாக்கிட அவனது காதல் மனம் விழைந்தது.

“நிலா…இன்னிக்கி நாம டின்னர் போகலாமா? நாம வெளியில போயே ரொம்ப நாளாச்சே …”

“போகலாம் ரிஷி.”ஏனோ அவனுடன் வெளியில் செல்வதை தவிர்க்கும் நிலா உடனே சம்மதம் சொன்னாள்.  அவள் தன் நண்பர்களுடன் அடிக்கடி செல்லும் உணவு விடுதிகளை தவிர்ப்பதர்க்காக …நாம லோங்க் ட்ரைவ் போகலாமா ரிஷி…புனே ருட்டுல போவோமா? இதுவரைக்கும் போனதே இல்லயே… தன் மனைவி இதையெல்லாம்கூட கேட்பாளா!(?)   

“நிச்சயம் நிலா நா தயாராகி வரேன்.. நீயும் ரெண்டு நாளைக்கான பொருட்களை எடுத்து வச்சுக்கோ”என்றுவிட்டு தன் அறைக்குள் பிரவேசித்தான்.  ஆம். அவனறை மட்டுமே..வெகு தூய்மையாக…

படுக்கை விரிப்புகள் முதல் திரைசீலை வரை வெகு நேர்த்தியாக..கண்டிப்பாய் ஒரு ஆணின் அறை எப்படி இருக்குமென நினைக்கிறோமோ அதற்கு மாறாய்…  நிலா கூடலின் தருணங்களில் மட்டுமே உள் நுழைவாள்..அவளறைக்குள் இவனுக்கு என்றுமே அனுமதி இல்லை…என்னோட ப்ரைவசி ரொம்ப முக்கியம் என்று முதல் நாளே கூறிவிட்டாள் .( ப்ரைவசி?)

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!