மலர் 6

மலர்-6

ஆனந்தை தனிமையில் அழைத்து பேசியவன் ,

“ஆப்ரேசன் பொறுத்த வரைக்கும் நான் முடிச்சுட்டேன். இனிமே பேஷண்டை  நீங்க எப்படி கவனிச்சுக்கறீங்க, அவங்க எப்படி கோஆபரேட் பண்ணி நடக்கறாங்க இதெல்லாம்தான் அவங்கள பழைய மாதிரி நடக்க வைக்கும்”

“ஓகேடா! அதெல்லாம் பார்த்துக்கலாம். ரொம்ப தாங்ஸ் டா ” அவனையும் அறியாமல் கண் கலங்கியது.

“என்னடா இது? சின்ன குழந்தை மாதிரி!” ஆனந்தின் தோளில் தட்டி கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் அருண். 

 “இல்லடா அவங்க இல்லனா இன்னிக்கு நான் இல்ல. உனக்குத்தான் எல்லாம் தெரியுமே ?”

“கம்மான்  ஆனந்த்,  போடா  போய் செப்க்கிட்ட சொல்லி பாயசம்  பண்ண சொல்லு. முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க”

கிளம்புவதற்கு முன் “அமிர்தாவையே எனக்கு நர்சா அனுப்புடா அருண்!” பாட்டியின் கண்ணில் ஒரு வித பயம் தெரிந்தது.

“இல்ல பாட்டி! எல்லாரும் மத்தவங்க வீட்டுல போய்  பார்த்துக்க வர மாட்டாங்க. எங்களுக்கு ஒரு கம்பெனியோட டீல் இருக்கு. அவங்கதான் நமக்கு தேவையான ஆயா  நர்ஸு எல்லாரையும் அனுப்புவாங்க”

“டே! டே! ப்ளீஸ் கண்ணா” பாட்டிக்காக, தாத்தா கெஞ்சினார்.

“என்ன செய்வது ?” நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான்.

‘முதலில் அமிர்தாவிடம் பேச வேண்டும். அவளை சமாளிக்கலாம். ஆனால்  தன்  உயிர் நண்பன்! அவனுக்கு அவளை பிடிக்கவில்லை. ஏனோ அவளை கண்டாலே எரிந்து விழுகிறான். அவள் மட்டும் வீட்டிற்கு வரவே கூடாது என்று முரட்டு பிடிவாதம் . காரணம் ஏழை என்பதால் மட்டுமா? பல யோசனைகள்  வந்தது. சரி சமாளிப்போம்.’ 

“ஓகே பாட்டி! இப்போ உங்க கூட உங்க வீட்டுக்கு வர்ரதுக்கு  மட்டும் அவங்கள அனுப்பறேன். நைட் வேற ஒரு பொண்ணு வரும். ஓகே ?”

“என்னவோ போ! இங்க என்ன எல்லாம் நான் சொல்லிதான் நடக்குதா ?”அலுத்துக்கொண்டார் சுந்தரி.

அவன் சென்றதும் “ஏண்டி அவனை படுத்தற ?” கதிரேசன் மனைவியை கடிந்து கொண்டார்.

“என்னவோ தெரியலைங்க. அந்த பொண்ண பார்த்தா மனசுக்கு அவ்ளோ இதமா இருக்கு. அவளே எனக்கு பொண்ணா  இல்ல மருமகளா..”

“ஏ! ஏ! இரு அடுத்து வேற எங்கையோ போகாத. உன் பேரனுக்கு என்னால பதில் சொல்ல  முடியாது”

முதலில் அமிர்தாவுக்கு விஷயம் சொல்லப்படவே இல்லை.

திடீரென்று அருண் அழைத்து  விஷயத்தை சொல்லவும் முடியவே முடியாது என்று விட்டாள் .

“நோ டாக்டர்.  நான் யார் வீட்டுக்கும் போக மாட்டேன்.”

“இங்க பாரு நான் அட்மின் கிட்ட ஹெச் ஆர் கிட்ட  பேசிக்கறேன்.  அவங்க ரொம்ப கெஞ்சறாங்க அம்ரிதா.

நீதான் அவங்கள முதல்லேர்ந்து பார்த்துக்கற. அவங்களுக்கு கொஞ்சம் மெண்டல் சப்போட்டா இருக்கும்.”

“சாரி சார்! உங்ககிட்ட நான் எப்படி சொல்லுவேன்? என்ன புரிஞ்சுக்கோங்களேன். வீட்டுல ரொம்ப திட்டுவாங்க சார்” ஏதேதோ காரணங்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் பொறுமை இழந்தவன் “ஓகே அமிர்தா! நீயே போய்  அவங்ககிட்ட எனக்கு உங்க வீட்டுக்கு வர இஷ்டம் இல்லைனு சொல்லிடு. உன்கிட்ட கேட்காம அவங்ககிட்ட சொன்னது என்னோட தப்புதான். அசிங்கம் எனக்குதானே . இட்ஸ் ஓகே.”

“ம் ஆ !அதே மாதிரி அட்மின்கிட்ட சொல்லி வேற ஒரு நர்ஸ்,ஒரு ஆயாவும்  ஒடனே அனுப்ப சொல்லு. நர்ஸ் ரெடியானதும் அப்புறம் நாம அவங்கள வீட்டுக்கு அனுப்பலாம்.  நைட்டுக்கு ஒரு நர்ஸ், ஆயா மார்னிங் அதே. சோ 4 ” சொல்லிவிட்டு இருக்கையில்  இருந்து எழுந்தவனை பார்க்கவே இவளுக்கு சங்கடமாக இருந்தது.

“சார்! நான் கண்டிப்பா உங்கள அவமானப்படுத்தமாட்டேன். ஆனா” எச்சில் விழுங்கினாள்.

“ஆனா?” அவனே கேட்டான்.

“உங்க பிரண்டு. அவர் நான் போனா கொலவெறி ஆகிடுவார்” ஒரு வழியாக சொல்லி விட்டாள் .

“அதெல்லாம் தாத்தா பார்த்துக்குவார். நீ பயப்படாத. அவனை நான் பார்த்துக்கறேன்”  தோளில்  லேசாக தட்டினான். 

“ஓகே சார்! நான் எதுக்கும் அப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடறேன்.”

“ஓகே ! அமிர்தா ஒரு முக்கியமான விஷயம். அவங்க ரொம்ப பெரிய இடம். பார்த்து நடந்துக்க. அவங்க ரொம்ப நல்லவங்க. பட்  நீ கவனம். டேக் கேர். இதுல நம்ம ஆஸ்பத்ரியோட பேரும்  இருக்கு. ரொம்ப கவனம்.”

“எஸ் டாக்டர்” பணிவாக  சொல்லி விட்டு இவள் வெளியில் வரவும், ஆனந்த்  அருண் அறைக்குள் விடை பெற நுழைந்தான்.

“நாங்க எப்போ கிளம்பலாம் அருண்? பாட்டிய வீட்டுல விட்டுட்டு நிறைய வேலை இருக்கு. ஈவினிங் ஒரு மீட்டிங் வேற இருக்கு”

“உடனே கிளம்பலாம். பட்  ஒரு விஷயம்டா..”

“என்ன?” சந்தேக பார்வையுடன் கேட்டான் ஆனந்த் .”இல்ல இன்னிக்கு ஒரு நாள் மட்டும் உங்க கூட அமிர்தா  வருவா. ஜஸ்ட் கொஞ்ச நேரம்தான்.நைட்டுக்கு வேற ஆள் வந்துடுவாங்க.”

கை கட்டிக் கொண்டு முதலாளி போல அழுத்தமாக பார்க்கும் நண்பனை எப்படி சமாளிப்பது? பாட்டி பெயரை  சொல்ல வேண்டாம். பிறகு அவர் நிலை திண்டாட்டமாகி விடும். 

“இல்லடா! அவளுக்குத்தான் பாட்டி பத்தி நல்லாத்  தெரியும் அதான். அதுமட்டும் இல்லாம இப்போ உடனே யாரும் கிடைக்கல”. 

எத்தனை முயன்றும் குரல் வெளியில் வரவில்லை.

“ஏன் இந்த உலகத்துல வேற நர்ஸே இல்லையா ?”

“ரைட் இன்னிக்கு நமக்கு சங்கு” அருணின்  மனம் பரிதாபமாய் அலறியது.

“வேற ஆள் மாத்து  உடனே. ஐ  வில்  வெயிட்”

சேரை இழுத்து போட்டு கால்  மீது கால் போட்டு ஆட்ட ஆரம்பித்தான். 

ரூட்டை மாத்து அருண் மூளை அலாரமிட்டது.

“டேய் டாக்டரா  இருந்து  உங்களுக்கு நடுவில வந்து பஞ்சாயத்து பண்ணறதுக்கு ஏதாவது ஒரு சொம்பு வாங்கி குடு. ஏதாவது ஊரு பேரு தெரியாத கிராமத்துல போய்  பஞ்சாயத்து பண்ணறேன். நிம்மதியாவது கிடைக்கும். இப்பதான் அவளுக்கு பஞ்சாயத்து பண்ணி முடிச்சேன் இப்போ நீ. அவளுக்கு உன்ன கண்டாலே பயம். அவ வரவே மாட்டேன்னுட்டா. நான்தான் கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சேன்.”

“ஏன்டா பேச மாட்ட அவ பின்னாடி சுத்தரல்ல. அவளுக்குத்தான் சப்போட் பண்ணுவ. உனக்கு நான் யாரு ?”

“கடுப்பேத்தாத ஆனந்த். அவளை மாதிரி ஒரு பொண்ண பாக்கறது ரொம்ப கஷ்டம். அவ கூட பழகினவங்களுக்குத்தான் தெரியும்.இப்போ என்ன உனக்கு வேற ஆள் வேணும் அதான. ரெடி பண்ணறேன். பட்  கொஞ்சம் டைம்  ஆகும். ஏதோ அவளுக்கு உங்க பாட்டி  பத்தி நல்ல தெர்யுமேன்னுதான் அவளை அனுப்பறேன். ஜஸ்ட் சில மணி நேரங்களுக்குத்தானே ?உன்ன கல்யாணமா பண்ணிக்க சொன்னேன்? உனக்கு என்னடா அவ்ளோ ஈகோ ? எனக்காக வேண்டாம். பாட்டி? அவங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும். அவங்கள நல்லா  பாத்துக்கணும். அப்புறம் உன் இஷ்டம்.”

நண்பன் சொன்னதை யோசித்தவன் “என்னவோ பண்ணு . இப்போ நீ சொல்றத தானே நான் கேட்கணும் ! அப்புறம் என்ன சொன்ன கல்யாணமா ? கனவுல கூட இந்த மாதிரி ஒரு பிச்சைகாரியோட எனக்கு நடக்காது. என்னோட லெவல் என்ன? அந்தஸ்து என்ன ? வேற யாராவதா இருந்தா மூக்கை ஒடச்சு உன்கிட்டத்தான் அனுப்பி இருப்பேன் ட்ரீட்மென்டுக்கு, மைண்ட் யுவர் வோர்ட்ஸ் ”

கோபத்துடன் வெளியேறியவனை பார்த்து அதிர்ந்து பெரு மூச்சு விட்டான் அருண் . முதல்ல அவளை இவன் கிட்டேர்ந்து காப்பாத்தணும். அட்மினிடம் சொல்லி ஆயாவும்  வேறு நர்ஸும் உடனே அனுப்ப சொன்னான். ஆனால்  விதியாக நான் சதி செய்யும்போது நடக்க விட்டுடுவோமா ?

 

 

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!