காலை பொழுது இனிதாய் மலர, தன் கரங்களைக் கொண்டு சூரிய கதிரை மறைத்தவாறு எழும்பிய ஆஷிக், “டேய் ஆதர்ஷ், என் வீட்ல என்னடா பண்ற? ஓ… நைட்டு நல்லா ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு, போதையில என் வீட்டுக்கே வந்துட்டியா?”
“நான்… போதையில… போடா.”
“என்னடா?”
“எரும மாடு, நல்லா பாரு இது என் வீடு. போதையில இருந்தது நீ, டைம் ஆச்சு சீக்கரம் கிளம்பி ரெடி ஆகு.” என்ற ஆதர்ஷ், தன் தலையைத் துவட்டியவாறு கண்ணாடியின் முன்பு நின்று கொண்டிருக்க,
புன்னகைத்தவாறு அவனது அருகில் வந்து அவனது தோளில் கை போட்டவாறே, “அப்படினா நேத்து நைட்டு நீ பாலிவுட் ஸ்டைல்ல என்னை உன் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்க.”
“என்ன உளர்ற?”
“அதான்டா ஹீரோயின் தெரியாம ட்ரிங்க்ஸ் பண்ணிருவாங்க, அப்புறம் போதையில என்னலாமோ பேசுவாங்க. ஹீரோ வேற வழியே இல்லாம தான் வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு. அப்புறம் அவங்களுக்குள்ள போடா… எனக்கு வெக்கமா இருக்கு. எதுவும் தெரியாத மாதிரி கேட்ப? ஸ்கூல் படிக்கும் போதே குரூப் ஸ்டடினு சொல்லிட்டு, நாம இதைப் பத்திதான் பேசுவோம்.” என்று கண்ணடித்தவன் மேலும் தொடர்ந்து,
“டேய் வெயிட்… நீ என்னை எதுவும் யூஸ் பண்ணிக்கலையே?” என்று கேட்க, தன் கையில் இருந்த டவலால் ஆதர்ஷ், ஆஷிக்கை அடிக்க,
ஆஷிக், “டேய் விடுடா.” என்று ஓட,
“இனிமே இப்படி பேசுவ?”
“மாட்டேன்… மாட்டேன்…” என்று கூற,
“போ, டைம் ஆச்சு. ரெண்டு பேருக்குமே இன்னைக்கு மார்னிங் ஃப்ளைட் இருக்கு.” என்று கூற,
“போலாம்டா.” என்றவன்,
ஆதர்ஷை தன் பக்கம் திருப்பி, “டேய் மச்சான், இப்போ எல்லாம் நீ நல்லா மெயின்டெயின் பண்ற போல, கட்டு கலையாம இருக்கியேடா?” என்றவன் அவனது இடுப்பில் கிள்ள,
ஆதர்ஷ் சிரித்தவாறே, “டேய் அப்படிப் பண்ணாதடா, கூச்சமா இருக்குடா ப்ளீஸ்…” என்று கூற, ஆஷிக் அவனைச் சீண்டி கொண்டே இருக்க, ஆதர்ஷ் அவனை நோக்கி,
“டேய் உனக்கு வேற வேலையே இல்லையா? யாரோட இடுப்பு கிடைச்சாலும் இப்படிக் கிள்ளுவியா?” என்று கேட்க,
அவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டிருந்த ஆஷிக் வாடிய முகத்துடன், “ஆமாடா, தப்புதான். இதுதான் எல்லாத்துக்கும் காரணம், மாத்திக்கிறேன்.” என்று கூறிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டான்.
ஆதர்ஷ் கதவைத் தட்டியவாறு, “டேய் சாரிடா, நான் அதை நினைச்சு சொல்லலை.” என்று கூற, ஆஷிக், ஜியாவுடன் தனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பை தனக்குள் நினைத்து பார்த்து,
“இவ்ளோ வலி நீ எனக்குக் குடுப்பனு தெரிஞ்சிருந்தா, நான் உன்னை பார்க்காமலே இருந்துருக்கலாம் ஜியா.” என்றவன், கோபத்தில் தன் முன்னே இருந்த கண்ணாடியை ஓங்கி தன் கரம் கொண்டு அடித்தான்.
தன் கோபம் தீர ஷவரில் தன்னை நனைத்தவன், பின்பு கதவை லேசாகத் திறந்து இருமுவது போல பாவலா செய்ய,
சத்தம் கேட்டு ஆதர்ஷ், “மச்சான் என்னடா?” என்று கேட்க,
ஆஷிக்கோ யாரிடமோ பேசுவது போல, “டவல்…” என்று மட்டும் கூற,
“வா, இங்கதான் இருக்கு வந்து எடுத்துக்கோ.”
“கிறுக்காடா பிடிச்சுருக்கு? டவலை தாடா.”
“அப்போ மன்னிச்சுட்டேன்னு சொல்லு.”
“உன்னோட பெரிய தொல்லையா போச்சுடா.”
“இப்போ என் சாரியை ஏத்துக்கப் போறியா, இல்ல நான் உள்ள வரட்டா?” என்ற ஆதர்ஷிடம்,
“டேய் வந்து கிந்து தொலைச்சுறாத, மன்னிச்சு தொலையிறேன்.” என்றவன் சிறிது நேரம் கழித்து டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்த ஆஷிக்கிடம்,
ஆதர்ஷ், “சாரி மச்சான்.” என்று மன்னிப்பு கேட்க,
ஆஷிக், “விடுடா, எனக்கு உன் மேல கோபம் எல்லாம் இல்லை. எனக்கு என் மேலயே கோபம். சொல்ல தெரியலைடா, அவளைப் பத்தி யாராவது நியாபகப்படுத்துனா எனக்குக் கோபம் வருது. அதே நேரம் அவளைப் பார்த்தால் என்னோட கோபத்தை வெளிகாட்ட முடியல. என் மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கு. சில நேரம் எனக்கு என் மேலயே கோபம் இருக்கு. ஒருவேளை என் குடும்பத்தைப் பத்தின உண்மையை ஏற்கனவே சொல்லிருந்தா, அவ என்னை விட்டுப் போயிருக்க மாட்டாளோ, தெரியலடா. ரொம்ப கன்ஃபியூஷனா இருக்கு.”
“டேய் வாடா, வந்து உக்காரு.” என்று ஆஷிக்கை பெட்டில் அமரவைத்த ஆதர்ஷ், அவனது கரத்தைப் பற்றிக்கொண்டு,
“எனக்குத் தெரியும்டா, நீ ஜியாவ எவ்வளவு உண்மையா லவ் பண்ணினனு. நீ எத்தனையோ பொண்ணுங்க கூடப் பழகிருக்க, ஆனா ஜியாவ லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து, நீ அவகிட்ட எவ்வளவு நேர்மையா இருந்தனு எனக்குத் தெரியும். நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்குக் காரணமே நீங்க ஒருத்தர ஒருத்தர் சரியா புரிஞ்சிக்காம போனதுதான். நீ எதுக்கும் வருத்தப்படாத, எல்லாம் சரியா நடக்கும்.” என்று ஆறுதல் கூற, பதிலுக்குத் தன் தலையை மட்டும் ஆட்டிய ஆஷிக்,
“டேய் மச்சான் ராத்திரி குடிச்சுட்டு நான் ஏதும் கலாட்டா பண்ணலைல?”
“அப்படி எதுவும் பெருசா பண்ணல, ஆனா கொஞ்சம் பண்ணின.”
“அம்மா என்ன சொன்னாங்க?”
“நீ அதிகமா குடிச்சா என் வீட்டுக்கு வர்றதும், நான் மட்டையானா உன் வீட்டுக்கு வர்றதும் என்ன புதுசா?”
“ஏதும் திட்டுனாங்களா?”
“அவன் குடிச்சா நீ குடிக்கிறது இல்லை, நீ குடிச்சா அவன் குடிக்கிறது இல்லை. என்னைக்காவது ஒரு நாள் நீங்க ரெண்டு பேரும் குடிச்சு ட்ரங் அண்ட் ட்ரைவ்ல மாட்டி போலீஸ்காரங்ககிட்ட உதை வாங்கணும். அதை நானும் அவன் அம்மாவும் பார்த்து ரசிக்கணும். தோளுக்கு மேல வளர்ந்துட்டீங்க உங்கள எங்களால அடிக்க முடியல. அட்லீஸ்ட் அவங்களாவது அடிக்கட்டுமேனு சொன்னாங்க. அப்புறம் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.”
“என்னடா வில்லன் ரேஞ்சுக்கு சொல்லிருக்காங்க?”
“ஆல் மம்மிஸ் அப்படித்தான்டா.”
“சரியா சொன்னடா.”
“வேலைக்கு வர்றதா ஏதும் ஐடியா இருக்கா இல்ல, இப்படியே பேசிட்டு இருக்கப் போறியா? சீக்கிரமா கிளம்பு, நான் கீழ வெயிட் பண்றேன்.” என்று கூறிய ஆதர்ஷ் அங்கிருந்து செல்ல, சிறிது நேரம் கழித்து இருவரும் ஏர்போர்ட் வந்தடைந்தனர்.
இருவரும் இன்று தங்களுக்கான ஷெட்யூல் என்ன என்று பார்த்துக் கொண்டிருக்க,
ஆஷிக், “ச்ச… என்னப்பா இது?” என்று எரிச்சல் அடைய, அதை வாங்கிப் பார்த்த ஆதர்ஷ், “என்னடா?”
“பாருடா கூட வர்ற கோ பைலட்ல ஆரம்பிச்சு, டாக்டர்ஸ் எல்லாரும் ஆம்பளைங்க, அதுவும் வயசானவங்க. போரடிக்கும்டா… அதுவும் சென்னை வெயில் வேற அங்க அதிகமா இருக்கும். சரி, நீ ரொம்ப ஹாப்பியா இருக்க, உனக்கு எங்க?” என்று ஆதர்ஷின் கையில் இருந்த ஷெட்யூலை வாங்கிப் பார்த்தவன்,
“என்னடா, உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு போ. இன்னைக்குக் கோவா போற, அதுவும் கோ பைலட் நிஷா. கோவா வேற பயங்கரமான ஏரியா, ஒரே மஜாதான்னு சொல்லு. டேய், நீ எல்லாம் அங்க போய் என்னடா பண்ணுவ? நான் வரேன்டா.” என்று சொல்ல,
“என்னடா ஜியா கூட டைம் ஸ்பென்ட் பண்ணணுமா?” என்று ஆதர்ஷ் அவனை வம்பிழுக்க,
“என்ன உளர்ற?” என்று ஆஷிக் மழுப்பினான்.”
“ஓ… சாருக்கு ஜியா கோவா வர்றது தெரியாது, கீழ அவங்க பேரை நீங்க பார்க்கலை?”
“எனக்கு ஃப்ளைட்க்கு டைம் ஆச்சு, பாய்.” என்ற ஆஷிக் அங்கிருந்து ஓடாத குறையாகச் செல்ல, அதைக் கண்ட ஆதர்ஷ் சிரித்தவாறு தன் ஃப்ளைட்க்கு சென்றான்.
ஃப்ளைட்டில் ஆதர்ஷைக் கண்ட இரு கண்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க, ஆதர்ஷோ எதையும் காணாமல் ஜியா பையை வைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளது அருகில் சென்று,
“என்கிட்ட குடு, நான் ஹெல்ப் பண்றேன்.” என்று கூறி, அவளது பையை வாங்கிப் பெட்டிகள் இருக்கும் இடத்தில் வைத்து, “சிம்பிள், முடிஞ்சிருச்சு.” என்று கூறிவிட்டு பொதுவாக அவளுடன் பேசிக்கொண்டிருக்க, நடாஷாவின் இரு கண்களோ அவனை ஏக்கமாகப் பார்த்தது.
இதைக் கவனித்த ஜியாவிற்கு நடாஷாவின் கண்களில் காதல் கலந்த ஏக்கம் புலப்பட, சின்னதாகப் புன்னகைத்தவள் எதுவும் கூறாமல் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் அறையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
ஃப்ளைட் ஸ்டார்ட் ஆகி ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்க, நடாஷாவின் அருகில் வந்த ஜியா அவளிடம் நட்பாகப் பேசிக்கொண்டிருக்க, திடீரென்று மணியைப் பார்த்த நடாஷா டீ போட ஆரம்பிக்க ஜியா, நடாஷாவிடம்,
“என்னாச்சு, மணியைப் பார்த்த உடனே டீ போடுற? யாருக்கு இவ்வளவு அவசரமா போடுற?”
“ஆதர்ஷ் சாருக்கு மேடம், சார் எப்பவும் ஃப்ளைட் டேக் அப் ஆனா அரைமணி நேரத்துல கிரீன் டீ கேப்பாரு.”
“அப்படியா? உங்க ஆதர்ஷ் சார் வேறென்ன எல்லாம் கேட்பாரு?”
“மார்னிங் ஃப்ளைட்னா கிரீன் டீ மட்டும்தான், மதியம்னா டீ சாப்பிட மாட்டாரு, ஜஸ்ட் வெஜ் பர்கர் மட்டும் சாப்பிடுவாரு.” என்று அவள் ஆர்வமாகக் கூற, அதைப் புன்னகையோடு ஜியா கவனிக்க, அப்பொழுது ஜியா தன்னைக் கேலி பார்வை பார்ப்பது புரிந்து கொண்டு, “சரி மேடம், இப்போ வந்திடுறேன்.” என்றவாறு நடாஷா அங்கிருந்து கிளம்பப் போக,
“ஏய் நடாஷா நில்லு, கொஞ்சம் நேரம் கழிச்சு போனா உங்க சார் எங்கையும் போக மாட்டாரு.” என்று அவளைத் தடுத்த ஜியா, “என்ன ஆதர்ஷ பிடிச்சுருக்கா?”
நடாஷா அமைதியாகவே இருக்கவும், “பயப்படாம சொல்லு, நான் அவன்கிட்ட சொல்ல மாட்டேன்.” என்று கேட்க,
“எங்க மேம்? எனக்குப் பிடிச்சு என்ன செய்ய? அவர்தான் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டிக்காரே? அவரு இதனால் வரை என் பேரை கூட ஒழுங்கா சொன்னதில்லை.” என்று சலிப்பாய் கூறியவளை, சில நொடிகள் கண் கொட்டாமல் பார்த்த ஜியா,
“அவன்கிட்ட பேசிருக்கியா?”
“இல்ல, என்ன மேடம் பேச?”
“நீ பேசாதவரைக்கும் இந்த உலகம் உன்னைக் கேட்கணும்னு நீ எப்படி எதிர்பார்ப்ப? நீ பேசு, அது மட்டும் இல்லாம அவனையும் கேட்க வை.”
“என்ன பேச?” என்றவளைப் பார்த்து புன்னகைத்தவள்,
“ஏதாவது பேசு, உங்க ஷர்ட் நல்லா இருக்கு, அப்படி எதாவது சொல்லி ஸ்டார்ட் பண்ணு.”
“ம்ம் முயற்சி பண்றேன்.” என்றவள் ஜியா கொடுத்த பூஸ்ட்டில் உள்ளே காக்பிட்க்குள் சென்றாள்.
அவளைக் கண்டவன், “எனக்குக் கிரீன்…” என்று கூறுவதற்குள்,
“சார் உங்க கிரீன் டீ.” என்று கொடுக்க,
“உனக்கு எப்படித் தெரியும்?”
“எப்பவும் இந்த டைம்க்கு நீங்க கிரீன் டீ குடிப்பீங்க சார்.” என்ற அவளது பதிலில் வியந்தவன்,
“இம்ப்ரெஸ்ட்! தேங்க்ஸ் ஷாஷா.” என்று கூறியவாறு டீயை பருக, சற்று எரிச்சல் அடைந்த நடாஷா, ஜியா கூறிய வார்த்தைகளைத் தன் நினைவில் கொண்டுவந்து,
“சார் ஐயம் நாட் ஷாஷா, ஐயம் நடாஷா!” என்று சற்று சத்தத்தோடு சேர்த்து அழுத்தமாகக் கூற, அதுவரை தன் வேலையிலே மும்முரமாக இருந்தவன், முதன்முதலாக அவளை நிமிர்ந்து பார்த்தான்.
இதழ் விரிந்த மொட்டு போல விரிந்த கண்களுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில், சில நொடிகள் மூழ்கி போயிருக்க, திடீரென்று ஃப்ளைட்டில் டர்புலென்ஸ் ஏற்பட்டு, லேசாக ஃப்ளைட் ஆட, அவனது கையில் இருந்த டீ அவனது சட்டையில் கொட்டி அவனது கையில் பட,
டீயின் சூட்டில், “ஸ்ஸ்…” என்று ஆதர்ஷ் சத்தமிட,
இதைக் கண்டு பதறியவள், உடனே ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எடுத்து வந்து அவனது கையைப் பிடித்து, காயப்பட்ட இடத்தில் லேசாக ஊதிவிட அதில் சில்லென்று சிலிர்த்து போனான்.
மருந்து தடவிவிட்ட பின்பு நடாஷா அவனைப் பார்க்க, அவளது ஸ்பரிசத்தில் லயித்திருந்த ஆதர்ஷ், சில நொடிகள் கழித்து அவளைப் பார்த்து,
“நீ புதுசா? உன்னை நான் இப்போதான் பார்க்குறேன்.” என்று கேட்க, அதில் லேசாகப் புன்னகைத்தவள்,
“நாலு வருஷமா இருக்கேன், நீங்க இங்க வேலைக்கு ஜாயிண்ட் பண்ணின நாள்ல இருந்து, நான் இருக்கேன். நீங்களும் நானும் CJ 216 டெல்லி, போபால், மும்பை ஃப்ளைட்லதான் ஃபர்ஸ்ட் ட்ராவல் பண்ணினோம். உங்களுக்கும் எனக்கும் அதுதான் ஃபர்ஸ்ட் ஃப்ளைட்.” என்று அவள் கூறியதில், சில நொடிகள் திகைத்து இருந்தவன் பின்பு தன் இயல்பு நிலைக்குத் திரும்பி,
“தெரியலை…” என்ற ஒற்றைப் பதிலை மட்டும் என்ன கூறுவதென்று தெரியாமல் கூற,
“ம்ம்… என்னை மாதிரி சாதாரண ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் எப்படிக் கேப்டன் உங்க கண்ணுக்கு தெரிவோம்?” என்ற நடாஷா அங்கிருந்து செல்லப் போக, அவள் கூறியதிற்குப் பதில் எதுவும் கூறாதவன் வெறும், “தேங்க்ஸ்” என்று மற்றும் கூறினான்.
நடாஷா தனக்குள், ‘இப்போ கூடப் பேரை சொல்ல மாட்டிக்காரு, மறுபடியும் மறந்திருப்பாரு.’ என்று நினைக்க, அவளது விழியில் தெரிந்த சிறு எரிச்சல் கலந்த கோபத்தில் அவள் மனதில் உள்ளதை புரிந்து கொண்டவன்,
அவளது கோபத்தை ரசித்தவாறே, தன் இதழ் ஓரம் புன்னகை தளும்ப, “நடாஷா, தாங்க் யு ஸோ மச்!” என்று தன் இரு கண்களையும் லேசாக மூடி திறக்க, அவளும் பதிலுக்குச் சிறு புன்னகையோடு,
“யு ஆர் வெல்கம் கேப்டன் ஆதர்ஷ்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றவுடன், உதட்டில் உள்ள புன்னகை மாறாமல் ஆதர்ஷ், “குட் மார்னிங் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன், திஸ் இஸ் யுவர் கேப்டன் ஆதர்ஷ் அண்ட் ஆபிசர் நிஷா. நவ் இட்’ஸ் டைம் டு தாங்க் ஆல் ஆஃப் யு ஃபார் ஃப்ளையிங் இன் ‘கோ ஆன் ஏர்’ ஏர்லைன்ஸ்.
வீ நவ் ரெடி ஃபார் யுவர் டெஸ்டினேஷன் இன் கோவா. வீ ஹோப் தட் யு ஆல் ஹட் அ என்ஜாயபுள் ஃப்ளைட் வித் அஸ். கேபின் க்ரூவ் ப்ரிப்பர் ஃபார் லேண்டிங்.” என்று அவன் கூறி முடிக்கவும், நடாஷாவும் ஜியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.
***
