தீ 🔥 – 11

அத்தியாயம் 11

 

இப்போ இந்த நிமிஷமே என்னோட காதல நான் என் கண்மணி கிட்ட சொல்ல போறேன்.

 அன்று ஒரு நாள் ருத்ரன் ஏதோ ஒரு வேலை விஷயமாக வீட்டில் இருந்து வெளியே கிளம்ப அந்நேரம் சரியாக போஸ்ட் வந்தது..

 “ சார் இது மித்ரன் வீடா….?”  என்று அந்த போஸ்ட்மேன் கேட்க

 “ ம்… ஆமா … சொல்லுங்க.. அது என் அண்ணன் தான்” என்று ருத்ரன் கூற

 “சார் அவரை கொஞ்சம் கூப்பிடுறீங்களா.. அவருக்கு போஸ்ட் வந்திருக்கு” என்று அந்த போஸ்ட்மேன் கூற

 “ அது…. அண்ணா இப்போ இங்க இல்ல… அவர் ஒரு முக்கியமான வேலையா வெளியே போய் இருக்காரு … எதா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க’ என்று ருத்ரன் பொய் கூற

 “ அப்போ ஓகே சார் நீங்களே கையெழுத்து போட்டு வாங்கிக்கோங்க …” என்று கூறிய அந்த போஸ்ட்மேன் ருத்ரனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு அந்த போஸ்ட் அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட

 “என்ன போஸ்ட்?” என்று பிரித்துப் பார்த்துக் கொண்டே மித்ரன் அறை நோக்கி நடந்த ருத்ரனின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை மெல்ல நடந்து சென்றவன் அதை பார்த்தவுடன் வேகமாக மித்ரனின் அறைக்குள் ஓடி சென்று

 “டேய் மித்ரா எங்கடா இருக்க? டேய் அண்ணா ….” என்ற ருத்ரன் அந்த அறையே அதிர சத்தம் போட

 “டேய் இடியட் நான் குளிச்சிட்டு இருக்கேன் டா இரு வரேன்…” என்று மித்ரன் கூற

 “ அண்ணா கொஞ்சம் சீக்கிரம் வாடா சந்தோஷமான விஷயம் சொல்லணும்” என்று மித்ரன் வெளியே இருந்து குரல் கொடுக்க

 “ஆஹான்… வர வரேன்.. இருடா.” என்று மித்ரன் உள்ளிருந்து கூறினான்.

 அப்பொழுது சரியாக மித்ரானின் போன் ஒலிக்க அதை எடுப்பதற்குள் ஃபோன் கட் ஆகிவிட்டது. யார் என்று பார்ப்பதற்காக ருத்ரன் போனை எடுத்து‌ஆன் செய்ய சரியாக மீண்டும் அவனுக்கு அழைப்பு வர அதை அட்டென்ட் செய்து பேச அவன் கட் செய்து விட்டு போனை கீழே வைக்கப் போக அப்பொழுது‌தான் ருத்ரன் அதை கவனித்தான். மித்ரனின் போன் திரையில் நம் அக்னி பைரவியின் அழகான புகைப்படம் ஒளிந்து கொண்டிருக்க அதை பார்த்த ருத்ரனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

 வேகமாக தன் அண்ணனின் போன் லாக்கை ஓப்பன் செய்து உள்ளே சென்று பார்த்தவன் மேலும் மேலும் அதிர்ந்து போனான்… காரணம் அக்னி பைரவியின் ஒவ்வொரு புகைப்படமும் அவ்வளவு அழகாக தன் அண்ணனின் போனில் இருப்பதைக் கண்டு ருத்ரன் அதிர்ச்சியாக நின்றிருந்தான்.

 

 

அப்பொழுது சரியாக மித்ரன் குளித்து முடித்து விட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான் …

 “டேய்….. நீ என் ரூம்ல என்னடா பண்ற ?  அதுவும் என் போனே நீ எதுக்கு எடுக்குற?” என்றாரே தன் தம்பியின் கையில் இருந்த போனை மித்ரன் பிடுங்க

 “அண்ணா உன் போன்ல இருக்க போட்டோ …” என்று ருத்ரன் கேட்க

 ” என்ன போட்டோ? அதுல ஒன்னும் இல்லையே …” என்று கூறி மித்ரன் சமாளிக்க முயற்சிக்க

 “அண்ணா பொய் சொல்லாத இப்ப தான் பார்த்தேன் அது ஃபுல்லா பைரவியோட போட்டோ இருக்கு…  அவளை எப்படி உனக்கு தெரியும்? மொத உன்னோட போன்ல எப்படி அவளோட போட்டோ வந்துச்சு?” என்று ருத்ரன் சற்று கோபத்தோடு கேட்க

 “டேய் …. நீ உன் வேலை என்னவோ‌ அத‌‌ பாரு ….முதல்ல  என் பர்மிஷன் இல்லாமல் நீ எதுக்கு என் ரூமுக்கு வந்த ?வந்தது வந்துட்ட என் போனை எதுக்கு எடுத்த?” என்று இல்லாத கோபத்துடன் மித்ரன் தன் தம்பியிடம் பேச

 “நான் ஒன்னும் வேணுங்கிறதுக்கு உன்னோட ரூம் வரல இதோ இந்தா இதை கொடுக்கத்தான் உன்னோட ரூமுக்கு வந்தேன்”  என்றவன் உள்ளே வரும் போது சந்தோஷத்தோடு துள்ளிக் குதித்து கொண்டு வந்தானோ அதை இப்போது சிடுசிடப்பான முகத்தோடு தன் அண்ணனிடம் கொடுக்க அதை வாங்கி பார்த்தவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை சந்தோஷத்தில் தன் தம்பியை கட்டி அணைத்துக் கொண்டவன்…

 

” டேய்… ருத்ரா தேங்க்யூ டா இது எப்போ வந்துச்சு?”  என்று மித்ரன் கேட்க

 “ஜஸ்ட் நொவ் கொஞ்சத்துக்கு முன்னாடி தான் வந்துச்சு …. கையெழுத்து நான் தான் போட்டு வாங்கினேன் . இதை கொடுக்க தான் ரூமுக்கு வந்தேன். அப்ப தான் உன் பிரண்ட் கால் பண்ணா பேசிட்டு கட் பண்ணும் போது பார்த்தா என் பிரண்டோட போட்டோ உன் போன்ல இருக்க” என்று ருத்ரன் கோபத்தோடு கேட்க ஒரு பெருமூச்சு விட்ட மித்ரன் இதுவரை நடந்த அனைத்தையும் கூறினான் .

 “நான் அவளை ரொம்ப லவ் பண்றேன் டா அவ இல்லாம என்னால ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியாது இவ்வளவு நாளா அவ கிட்ட என்னோட லவ்வ சொல்லவே இல்ல அதுக்கு காரணம் என்னோட வேலை …… இப்போ அதுவும் கிடைச்சிடுச்சு இனி எனக்கு தடைக்குறதுக்கு எதுவுமே கிடையாது..  இப்போ இந்த நிமிஷமே என்னோட காதல நான் என் கண்மணி கிட்ட சொல்ல போறேன். அதான் யாராலயும் தடுக்க முடியாது ” என்று கூறிய மித்ரன் ருத்ரன் கூற வருவது எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாமல் வேக வேகமாக ரெடியாகி நம் அக்னி பைரவியை பார்க்க கிளம்பி விட்டான். தன் அண்ணன் கூறியது எல்லாம் கேட்டு அதிர்ந்து போய் நின்ற ருத்ரன் உடனடியாக தன் தோழி அக்னிக்கு கால் செய்ய அவளோ  போனை எடுக்கவே இல்லை

 “இந்த பைத்தியக்காரன் இத பஸ்ட் என்கிட்ட சொல்லி இருக்கலாம் ஆனா  இப்போ எல்லாம் கைமறி போனதுக்கு அப்புறம் சொல்றான். கண்டிப்பா அம்மா  இதுக்கு ஒத்துக்கவே மாட்டாங்க என்ன பண்றது?”  என்றவன் மீண்டும் மீண்டும் பைரவிக்கு அழைத்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அட்டென்ட் செய்து பைரவி பேச இங்கே நம் மித்ரனோ நம் அருந்ததியின் நாட்டிய அலையாவில் அருந்ததியின்  முன் புன்னகை முகத்தோடு பணிவோடு அமர்ந்திருந்தான்.

 “ம்‌….. சொல்லுங்க தம்பி….. யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று அருந்தி கேட்ட

 “ஹலோ மேடம் … நான் மித்ரன் இங்க தான் பக்கத்துல இருக்க இருக்கேன்… நான் உங்கள் பொண்ணு பைரவிய ஒரு தடவை பார்த்து இருக்கேன் அவளை பார்த்ததும் எனக்கு ரொம்ப புடிச்சிருச்சு அதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன் நானும் சின்ன பையன் இல்ல லவ் பண்ற உங்க பொண்ணு கிட்ட ப்ரொபோஸ் பண்ணி அவ பின்னாடி சுத்தி பேசி கல்யாணம் பண்றதுக்கு அவங்க போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்குன்னு ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கு அதான் ஸ்ட்ரைட்டா நான் உங்ககிட்ட பேசுறேன”  என்று முதல் முறை அவளை பார்த்ததுமே மித்ரன் அருந்ததியிடம் பைரவியை பெண் கேட்க

 ” இங்க பாருங்க தம்பி உங்கள பாத்தா ரொம்ப நல்ல பையன் மாதிரி தான் பா இருக்க … ஆனா, என் பொண்ணுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கணும்னு நினைக்கிறேன் நீ போலீஸ்ல இருக்க அப்படி இருக்கும் போது என் பொண்ணுக்கு எப்படி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் ? எந்த நேரம் என்ன ஆகும்  அப்படின்னு  உயிரே கைல புடிச்சுகிட்டு வாழ்வதை பார்க்கிறாய் திறன் எனக்கு இல்ல அவ எப்பவோ சந்தோஷமா சிரிச்ச முகத்தோட இருக்கணும் அவ ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுட்டா இதுக்கு மேலயும் ஒரு அம்மாவா அவள கஷ்டப்பட வைக்கணும் நான் விரும்பல அதனால மன்னிச்சிடுப்பா …” என்று கூறி அருந்ததி மறுத்து விட அதற்கு மேல் மித்ரனும் பைரவியையும் தொந்தரவு செய்யவில்லை அருந்ததியையும் தொந்தரவு செய்யவில்லை…

 ஆனால் விதிவசத்தின் காரணமாக அருந்ததிக்கு விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்த போது மித்திரன் தான் மருத்துவமனையில் சேர்த்து அவளுக்கான அனைத்தையும் பார்த்துக் கொண்டான் ….

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!