9. ராட்சசனின் காதல் பாவை..
போன பகுதியில்:
“எருமைக்கு ஏதாவது ஒரு வேலை செய்யணும்னாலே கஷ்டம்! எப்படி ஓடுறதைப் பாரு! வேலைக்குப் பயந்துகிட்டு இருக்கா. இதையெல்லாம் வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப்போறேன்னே எனக்கே தெரியல” என்று சொல்லியவள், வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
இவர்களுக்கு இந்த இரவு இப்படிச் செல்ல, அங்கே விதுரனுக்கோ சுனில் சொன்னதைக் கேட்டதிலிருந்து, ஒரு சிங்கத்தைப் போல அவளை எப்பொழுது வேட்டையாடுவோம் என்று காத்துக்கொண்டிருந்தான்.
இனி…
விதுரன் மிகவும் கோபமாகத் தன்னுடைய அறையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.
அப்பொழுது, மாடல் உலகின் அழகி என்பதுபோல் தன்னுடைய அங்கங்கள் தெரியும்படியான உடையை அணிந்துகொண்டு ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.
ஆனால், அவளைக்கூடப் பார்க்காதவன், கோபத்துடன் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான் விதுரன்.
சிங்கத்தைக் கூண்டில் அடைத்ததுபோல் அவன் கோபத்துடன் இருக்க, அங்கே வந்தவளோ அவனை மோகமாகப் பார்த்துக்கொண்டே நெருங்கினாள். பின்னால் இருந்து அவனை அணைத்துக்கொண்டாள்.
ஆனால், அடுத்த நொடியே அவள் கீழே விழுந்திருந்தாள்.
இதை எதையும் எதிர்பார்க்காதவளுக்கு அடி பலமாக இருக்க, அதில், “ஐயோ, அம்மா!” என்று அலறியவள், எதிரில் நின்றவனை என்ன ஆனது என்பதுபோல் பார்த்தாள்.
ஆனால், அவனோ முழு அரக்கனாக மாறியிருந்தான்.
“ஏய்! கெட் லாஸ்ட்! ஒன் செகண்ட் இங்க இருந்தா கொன்னுடுவேன். கெட் அவுட்!” என்று கத்தினான் விதுரன்.
அவனுடைய கர்ஜனையைக் கேட்டவள், விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடினாள்.
இந்த விஷயம் சுனிலுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டவனுக்கு, ‘ஐயோ!’ என்றிருந்தது.
‘இந்தப் பிரச்சினை எப்போதுதான் முடிவுக்கு வருமோ!’ என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.
“ஏய்! எங்கடி இருக்க? நீ மட்டும் என் கைல கிடைச்சா, அதுக்கப்புறம் உன்னால தப்பிக்கவே முடியாதுடி!” என்று அந்த அறையே அதிரும் அளவுக்குக் கத்தினான் விதுரன்.
கத்தியது மட்டுமல்லாமல், அவளை நினைக்கும்போதெல்லாம் அவனுடைய கோபம் நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதில், அறையில் இருந்த அனைத்துப் பொருட்களையும் உடைக்கத் தொடங்கினான் விதுரன்.
இப்படியே அவளை நினைத்துக்கொண்டிருந்த விதுரனுக்கு, அந்த இரவு தூங்காத இரவாகவே போனது.
(அவ கைல கிடைச்சா என்ன பண்ணப்போறீங்க? அதுக்கு ஏதாவது ஐடியா இருக்கா, சகோ?)
மறுநாள் காலை..
சுனில் தன்னுடைய அறையில் டென்ஷனாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான்.
அப்பொழுது அவனுக்கு ஒரு போன் வந்தது. நேற்று கே.கே. குரூப்ஸில் அவளைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தவன்தான் அழைத்திருந்தான்.
உடனே போனை அட்டென்ட் செய்தவன்,
“என்ன, அந்தப் பொண்ணைப் பத்தின எல்லா டீடைல்ஸும் கிடைச்சுதா?” என்று கேட்டான் சுனில்.
“சார், கொஞ்சம் பொறுங்க, சார்! எடுத்தவுடனே டீடைல்ஸ் கிடைச்சுதான்னு கேக்குறீங்க. நேத்து அந்தப் பொண்ணோட போட்டோ கொடுத்தீங்களே தவிர, பெயரைச் சொல்லவே இல்ல. உங்களோட அர்ஜென்ட்டைப் பார்த்து நானும் அந்தப் பொண்ணோட பெயரைக் கேட்க மறந்துட்டேன்.
நான் அனுப்பின இன்ஃபார்மர் எனக்கு இப்போதான் மெசேஜ் பண்ணான். அப்போதான் எனக்கும் அந்தப் பொண்ணோட பெயர் தெரியணும்னு ஞாபகம் வந்தது. அந்தப் பொண்ணோட பெயரைச் சொல்லுங்க, சார். இன்னும் ஒன் ஹவர்ல யாரு, என்னன்னு எல்லா பயோடேட்டாவையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னான் அவன்.
அவன் சொன்னதைக் கேட்டபோதுதான் சுனிலுக்கு அந்த விஷயம் ஞாபகம் வந்தது.
அவளுடைய புகைப்படம் மட்டும்தான் தன்னிடம் இருக்கிறது. அவளைப் பற்றி வேறு எதுவுமே தெரியாது. ஏன், அவளுடைய பெயரைக்கூட நேற்று அந்தப் பெரியவரிடம் கேட்கவில்லை என்று நினைத்தவனுக்கு, ‘ஐயோ!’ என்றிருந்தது.
சிறிது நேரத்தில் பிரச்சினை முடிந்துவிடும் என்று நினைத்தவனுக்கு, இப்போது நேரம் கடந்து கொண்டே செல்வதைப் பார்த்ததும் பயம் அதிகமானது.
நேற்று விதுரன் நடந்துகொண்ட விதத்தையும், இன்று அவன் தன்னை என்ன செய்வானோ என்பதையும் நினைத்துப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பயம் தோன்றியது.
“சரி, கொஞ்சம் வெயிட் பண்ணு. கொஞ்ச நேரத்துல அந்தப் பொண்ணோட பெயர் என்னன்னு உனக்கு மெசேஜ் பண்றேன்” என்று சொல்லியவன், போனைக் கட் செய்துவிட்டு மீண்டும் ஒருவனுக்குப் போன் செய்தான்.
ரிங் சென்றுகொண்டே இருந்ததே தவிர, போனை அட்டென்ட் செய்யவில்லை.
அதில் கடுப்பானவன் மீண்டும் மீண்டும் போன் செய்துகொண்டே இருந்தான்.
இரண்டு, மூன்று முறை அழைத்திருந்தும் எடுக்காதவன், இப்போது நான்காவது முறை அழைத்தபோது, கடைசி ரிங்கில்தான் அட்டென்ட் செய்தான்.
“ஹலோ, சொல்லுங்க, சார்!” என்றான் அவன்.
“டேய், பரதேசி நாயே! எத்தனை தடவை போன் பண்றேன். உனக்குப் போன் எடுக்க முடியாத அளவுக்கு என்னத்தப் புடுங்கிட்டு இருக்க?” என்று உலகத்தில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி அவனைத் திட்டினான் சுனில்.
“ஐயோ, சார்! போதும், சார்! இதுக்கு மேல திட்டாதீங்க. காதுல இருந்தே ரத்தம் வந்துரும் போல! சாரி, சார். போன் சைலன்ட்ல போட்டுட்டேன். இனிமே போனை சைலன்ட்ல போடவே மாட்டேன். என்ன விஷயம் சொல்லுங்க, சார்” என்று மூச்சுவிடாமல் சொன்னான் அவன்.
“நீ சைலன்ட்ல போடு. அடுத்த வாட்டி நீயே சைலன்ட் ஆயிடுவ, பார்த்துக்கோ! சரி, அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணச் சொன்னேனே, என்ன ஆச்சு? அந்தப் பொண்ணு இப்போ என்ன பண்ணிட்டு இருக்கா?” என்று கேட்டான் சுனில்.
“சார், நீங்க சொன்ன மாதிரி நைட்ல இருந்து அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணிட்டுத்தான் இருக்கேன். அந்தப் பொண்ணு வீட்டுல இருந்து எங்கேயுமே போகல. இன்னும் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை.
ஆனா, இங்க இருக்கிறவங்களுக்கு அந்தப் பொண்ணைப் பத்தி எதுவும் தெரியல. ஹவுஸ் ஓனருக்கு மட்டும்தான் தெரியும் போல. ஆனா, அவரும் இன்னும் வெளியே வரல, சார். இந்தப் பொண்ணு எப்போ வெளியே வரும்னுதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னான் அவன்.
“சரி, அந்தப் பொண்ணு வீட்டை விட்டு வெளியே வந்த உடனே, அவ எங்க போறான்னு ஃபாலோ பண்ணு. அதுமட்டுமில்லாம, அவளோட பெயரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிஞ்சுக்கிட்டு எனக்குச் சொல்லு. அவளோட பெயர் தெரிஞ்சாதான் என்னால அடுத்த மூவ் பண்ண முடியும்” என்று சொன்னான் சுனில்.
“ஓகே, சார். அந்தப் பொண்ணோட பெயர் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன்” என்று சொன்னான் அவன்.
அவன் சொன்னதும் சுனில் போனைக் கட் செய்தான்.
விதுரன் வந்தால் என்ன நடக்குமோ என்ற பயத்துடனேயே அவனுடைய வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
மறுநாள் காலை..
எப்பொழுதும்போல் காலையில் ஆபீஸுக்குக் கிளம்பிய கவி, ஸ்ரீனா இருவரும் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.
அப்பொழுது வீட்டின் ஹவுஸ் ஓனர்,
“கொஞ்சம் நில்லுங்கம்மா!” என்று சொன்னார்.
“என்னப்பா?” என்று கேட்டாள் ஸ்ரீனா.
ஆனால், அவர் இவர்களை நெருங்குவதற்கு முன்பே கவியோ, ஸ்ரீனாவின் காதில் மெதுவாக,
“என்னடி, இந்தப் பெருசு வேற காலையிலேயே நிக்கச் சொல்லுது. வாடகை ஏதாவது ஏத்திடுமோ?” என்று சொன்னாள்.
“கொஞ்சம் வாயை மூடுறியா? பெரியவங்களை எப்படி பேசணும்னுகூடத் தெரியாது. அவர் முதல்ல என்ன சொல்றாருன்னு பாரு. அதுக்குள்ள நீயே ஏதாவது ஒண்ணைக் கற்பனை பண்ணிப் பேச வேண்டியது!” என்று திட்டினாள் ஸ்ரீனா.
அவள் திட்டியதும் கவியும் அவளை ஒருமுறை முறைத்துவிட்டு, திரும்பிப் பெரியவரைப் பார்த்தாள்.
அந்தப் பெரியவர் இவர்களை நெருங்கியதும்,
“சீக்கிரம் சொல்லுங்க. எங்களுக்கு ஆபீஸுக்குத் டைம் ஆகுது” என்று சொன்னாள் கவி.
“நேத்தே இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்மா. அப்புறமா யோசிச்சேன். நைட் டைம்ல உங்களை எதுக்குத் தொல்லை பண்ணிக்கிட்டு, காலையில பேசிக்கலாம்னு விட்டுட்டேன்” என்று சொன்னார் அவர்.
“அப்படி என்ன விஷயம் சொல்லப்போறீங்க?” என்று கேட்டாள் கவி.
“ஏய், கொஞ்சம் சும்மா இருடி! அவரே சொல்லுவாரு. சும்மா தொணதொணன்னு ஏதாவது ஒண்ணைக் கேட்டுட்டே இருக்க!” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“யம்மா, உபதேச சிகாமணி! போதும், நிறுத்து. இதுக்கு அப்புறம் இப்படிப் பேச மாட்டேன்!” என்று ஸ்ரீனாவைப் பார்த்துச் சொன்னவள், மீண்டும் அந்தப் பெரியவரைப் பார்த்தாள்.
“சொல்லுங்க, என்ன சொல்லணும்னு நினைச்சீங்க?” என்று கேட்டாள் கவி.
“அது என்னன்னா, நேத்து காலையில ஒரு பையன் நல்லா டிரஸ் பண்ணிட்டு வந்து, உன்னோட போட்டோவை வச்சு, ‘இந்தப் பொண்ணு இந்த ஏரியாவுலதான் இருக்கா. ஆனா, வீடு மறந்துட்டேன். எங்க இருக்கான்னு தெரியுமா?’ன்னு என்கிட்ட வந்து கேட்டான்” என்று சொன்னார் அவர்.
அதைக் கேட்ட இருவருக்கும் குழப்பமாக இருக்க, இருவரும் ஒரே நேரத்தில்,
“என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்கள்.
“ஆமாம்மா! நானும் யார், என்னன்னு விசாரிச்சதுக்கு, உன்னைத் தெரியும்னுதான் சொன்னான். அப்புறம், வீடு இதுதானான்னு காட்டினேன். நீ வீட்டுல இருக்கியான்னு கேட்டான். நீ வேலைக்குப் போயிருக்கேன்னு சொல்லிட்டேன்.
‘எங்கே வேலைக்குப் போயிருக்கா?’ன்னு கேட்டான். நீ அன்னைக்குச் சொன்னியே, அந்தக் கம்பெனியோட பெயரைச் சொன்னேன். சரின்னு சொல்லிட்டு அவனும் போயிட்டான்மா” என்று சொன்னார் அவர்.
அவர் சொன்னதைக் கேட்ட இருவரும் மாறி மாறித் தங்களுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டார்கள்.
“நல்லாத் தெரியுமா? எங்களைத் தானா கேட்டாங்க?” என்று இருவரும் கேட்டார்கள்.
அப்பொழுது அவருடைய மனைவி இவர்களிடம் வந்தவர்,
“என்னம்மா, நீங்க இன்னும் வேலைக்குக் கிளம்பலையா? இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.
“இல்லை, ஆன்ட்டி. நேத்து யாரோ போட்டோவைக் காட்டி விசாரிச்சாங்கன்னு அப்பா சொன்னாரு. அதுதான் எங்களுக்கு ஒண்ணுமே புரியல” என்று சொன்னாள் கவி.
“ஆமாம்மா. எங்களுக்கு இங்கே யாரையுமே தெரியாது. எங்களைத் தேடி வர அளவுக்கு யார் இருக்காங்கன்னுகூட எனக்குத் தெரியல” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“அவரு நேத்து கண்ணாடி போட்டுக்காம போயிட்டாரு. யாரைப் பார்த்தாருன்னு தெரியல. வந்த உடனேயே இதை என் கிட்ட சொன்னாரு. அப்பவே அவரைப் பார்த்தேன். ஆனா, அவரு கண்ணாடி போட்டிருக்கல.
எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சு. அவங்க வேற யாரையோ கேட்டிருப்பாங்க போல. அவரு உங்களை நினைச்சுக்கிட்டு வந்து சொல்றாரு. நீங்க போங்கம்மா, நான் அவரைப் பார்த்துக்கிறேன். உங்களுக்கு டைம் ஆகுது இல்ல!” என்று சொல்லி இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தார் அவர்.
பிறகு தன்னுடைய கணவரைப் பார்த்தவர்,
“ஏங்க, நேத்தே சொன்னேன்ல? அந்தப் பிள்ளைங்களுக்கு இங்கே யாருமே தெரியாதுன்னு. அப்படி இருக்கும்போது அவங்களை எப்படி யாராவது தேடி வந்து கேப்பாங்க? ஏதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியது! வாங்க, உள்ளே!” என்று சொல்லி அவரை அழைத்துக்கொண்டு சென்றார்.
(ஹாய், சகோஸ்! விதுரன் தேடிட்டு இருக்கிறது இவங்க ரெண்டு பேர்ல யாரு? அதாவது ஸ்ரீனா, கவிகா இவங்க ரெண்டு பேர்ல யாருன்னு தெரிஞ்சா கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க!)
அப்புறம், சகோஸ்! இந்த எபிசோடை மூணு நாள் போட முடியல. அந்த மூணு நாளுக்குமான எபிசோடுகளில் ஒன்றை இன்னைக்கு, அடுத்த ரெண்டு எபிசோடுகளை நடுவுல போடுறேன்.
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..
இப்படிக்கு, உங்கள் அன்புத் தோழி..
மோகனா அருண்
