காதல் 11

கதவைத் தட்டும் சப்தம் கேட்கவும் தன்னிலை அடைந்தவள், “இந்த நேரத்துல யாரா இருக்கும்?” என்று யோசிக்க உடனே ஆஷிக், 

“மே பீ உன் ஹஸ்பண்ட் மிஸ்டர் கார்… த்திக்… கா இருக்கும்.” என்று கூறி விஷமமாய்ச் சிரிக்க, அவனைத் தன் பார்வையாலே முறைத்தவள், 

செக்யூரிட்டி லென்ஸ் வழியாகப் பார்த்த நொடி சிறிது ஐயம் கொண்டவள், “அச்சோ எதிர்வீட்டு ஆன்ட்டி வந்திருக்காங்க, இந்த நேரத்துல ஏன் வந்திருக்காங்க? ஒருவேளை உன்னைப் பார்த்திருப்பாங்களோ?” என்று புலம்ப, 

“விடுடா செல்லம், ஏன் டென்ஷன் ஆகுற? உனக்குப் பயமா இருந்தா, நான் திறக்கிறேன்.” என்றவனைத் தடுத்தவள், 

“கொஞ்ச நேரம் எதுவும் பேசாத, அவங்க மட்டும் உன்னை என்கூடப் பார்த்தாங்க அவ்வளவுதான்!” என்று மீண்டும் புலம்பியவளைப் பார்த்து ஆஷிக் சிரிக்க, அவனது வாயைத் தன் கரம் கொண்டு மூடியவள், தன் கண்களால் அவனைக் கெஞ்ச, அந்தப் பெண்மணி மேலும் கதவைத் தட்ட, 

அப்பொழுது அந்தப் பெண்மணியின் கணவர், “ஏய் இந்த நேரத்துல போய் கதவை தட்டிட்டு இருக்க? எதுவா இருந்தாலும் காலையில பார்த்துக்கலாம்.” என்று தன் மனைவிடம் கூற, அவரோ தன் கணவர் கூறியதைத் தன் காதில் வாங்காதவராய், 

“நீங்க சும்மா இருங்க, ஆம்பளை பேசுற சத்தம் கேட்டுதுனு சொல்லிட்டு இருக்கேன், நீங்க சொன்னதே சொல்லிட்டு இருக்கீங்க. உங்களுக்குத் தூக்கம் வந்தா போய் தூங்குங்க, என்னைத் தொல்லை பண்ணிட்டு இருக்காதீங்க. வயசு பொண்ணுங்களுக்கு வீடு குடுத்தா இப்படிப்பட்ட பிரச்சனை எல்லாம் வரும்னு சொன்னா கேட்டாதானே?” என்று தன் கணவரைக் கடிந்து கொண்டவர், “கதவைத் திறக்க இந்தப் பொண்ணுக்கு ஏன் இவ்வளவு நேரம்?”

“மணி என்ன, தூங்கிட்டு இருப்பா. பின்ன எல்லாரும் உன்னை மாதிரி இப்படி அடுத்தவங்க வீட்டை வேவு பார்த்துக்கிட்டா இருப்பாங்க?” என்றவர், தன் மனைவியின் ஒற்றைப் பார்வையிலே அடங்கிப்போக,

ஜியா, ஆஷிக்கைப் பார்த்தவாறே நிற்க அவன், “செல்லக்குட்டி என்னை அப்புறம் பாரு, முதல்ல போய் கதவை திற, அவங்க தட்டிகிட்டே இருக்காங்க.” என்று கூற, 

“ஆஷிக் உன்னைக் கெஞ்சி கேட்டுக்கிறேன்…”

“ஏன் செல்லம், நீ கெஞ்சலாம் வேண்டாம், என்னைக் கொஞ்சினாலே போதும்.” என்று கண்சிமிட்ட, 

“ப்ளீஸ்… அவங்க உன்கூட என்னைப் பார்த்தாங்கனா அவ்வளவுதான். ரொம்பக் கஷ்டப்பட்டு எனக்கு இந்த வீடு கிடைச்சிருக்கு ப்ளீஸ்…”

“சரி, மேல சொல்லு.” என்றவனிடம், 

“கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசாமா இரு.” என்று கெஞ்சியவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்தவன்,

“ஓகே ஓகே… பாவமா இருக்கு, பொழைச்சு போ.” என்று கூற, அவனை மனதிற்குள் திட்டி தீர்த்தவள் அவன் முன்பு எதுவும் காட்டிக்காமல் மெலிதாய் புன்னகைத்தாள். 

“ஏய், என்ன எதுவும் சொல்லாம போற?” என்றவன் கேள்வியாய் பார்த்தவளைப் பார்த்து, “ஒருத்தங்க ஹெல்ப் பண்ணினா பதிலுக்கு நன்றி சொல்லணும்னு உங்க டீச்சர் சொல்லித் தரலையா?” என்று கேலியாகக் கேட்டவனைக் கண்டு முறைத்தவள், 

“ரொம்ப நன்றி!” என்று தன் இருக்கரங்களையும் கூப்பிக் கூற, 

“போ போ… நன்றியை வாயால சொல்லணும்னு அவசியம் இல்லை, மனசுல வச்சுக்கோ.” என்று தன் காலரை தூக்கிவிட்டவனைக் கண்டு ஜியா கண்களில் கோபம் தெறிக்க முறைக்க,

“சரி சரி, பார்த்தது போதும் போய் கதவை திற.” என்றவன், அவளது பின்னால் உள்ள சுவற்றில் மறைவாகச் சாய்ந்து கொண்டான். 

ஜியா கதவை முழுவதுமாய் திறக்காமல் செக்யூரிட்டி செயின் வழியாகப் பார்த்து, “ஹலோ ஆன்ட்டி, எல்லாம் ஓகேவா, என்னாச்சு இந்த நேரத்துல வந்திருக்கீங்க?” என்று தூக்க கலக்கத்தில் இருப்பது போல கண்களைத் தேய்த்துக்கொண்டே கேட்க,

“அது ஒன்னும் இல்லைமா, சத்தம் கேட்டுச்சு அதான்…” என்று அந்த பெண்மனியின் கணவர் கூறி முடிப்பதற்குள், அந்தப் பெண்மனி ஜியாவின் வீட்டை நோட்டம் விட்டவாறே,

“ஆம்பளை பேசுற மாதிரி சத்தம்… சொல்றத முழுசா சொல்லுங்க.” என்று தன் கணவரை அதட்ட, அவருக்கோ தர்மசங்கடமாக இருந்தது. 

ஆஷிக்கோ அடித்தது லக்கி ப்ரைஸ், என்று அவள் பின்னால் நின்றுகொண்டு அவளது முடியைப் பிடித்து இழுப்பது, இடையில் கிச்சலம் காட்டுவது என்று சீண்டிக்கொண்டிருந்தான். ஜியா அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்மனி

“யாரோ உன் வீட்டுக்கு வந்த மாதிரி இருந்ததே? யாரும் வந்தாங்களா?” என்று கேட்க,

மேலும் முன்னேறிய ஆஷிக் அவளது முதுகில் தன் விரல் கொண்டு வீணை மீட்ட, அந்த நேரம் பார்த்து அந்தப் பெண்மனி, “உன்கிட்ட தான்மா கேட்குறேன், உன் வீட்டுக்குள்ள யாரும் வந்தாங்களா என்ன?”

“இல்ல, இல்ல ஆன்ட்டி.” என்றவாறே கூச்சம் தாங்காமல் சட்டென்று ஜியா துள்ள, 

அந்தப் பெண்மணி, “என்னாச்சு, நீ ஏன் ஒருமாதிரியா இருக்க? முதல்ல கதவை திற.” என்று கூற,

ஜியா வேறு வழியில்லாமல் கதவைத் திறக்க அவரது கணவர், “ஏய் காலையில பேசிக்கலாம்டி.”

“கொஞ்சம் சும்மா இருங்க.” என்றவாறு அந்தப் பெண்மனி உள்ளே வர, அதற்குள் ஆஷிக் கிச்சனுக்குள் சென்று மறைந்து கொண்டான். 

உள்ளே வந்த பெண்மனி அவளது பெட்ரூம் உட்பட எல்லா இடமும் சென்று பார்த்துவிட்டு, “பார்த்த மாதிரி இருந்துச்சு, ஆனா யாரும் இல்லை.” என்று அவர் கூறிய வார்த்தையில், கவலை தொனித்தாலும் உதட்டில் கட்டாயப் புன்னகை லேசாக மின்னலைப் போல எட்டிப் பார்த்து மறைந்தது. 

அந்தப் பெண்மனியின் கணவர் ஜியாவிடம், “மன்னிச்சிருமா, இந்த நேரம் போய் டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.” என்று கூற, அதற்கு ஜியா பதில் கூறுவதற்குள் அவரது மனைவி, 

“பரவாயில்லங்க, ஜியா ஒன்னும் தப்பா நினைக்க மாட்டா. நாம இவ நல்லதுக்காகத் தானே பண்றோம். எல்லாத்துக்கும் மேல காலம் கெட்டுப் போய் கிடக்குது, இந்த அப்பார்ட்மென்ட்டோட ப்ரெசிடெண்ட் என்கின்ற முறையில, எல்லாம் சரியா இருக்குதானு பார்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்குல… இந்த காலத்து பொண்ணுங்களை எங்க நம்ப முடியுது?” என்றவரின் வார்த்தை ஜியாவை சுட்டெரிக்க, அந்த பெண்மனியின் கணவர்,

“கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியா?”

“நான் நியாயத்தைத் தானே சொன்னேன், சரி சரி நேரம் ஆகிடுச்சு நீங்க காலையில ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொன்னீங்களே வாங்க.” என்று தன் கணவரை அழைத்துக் கொண்டு செல்ல போனவர் சில நொடிகள் கழித்துத் திரும்பி, 

“நான் கிட்சன்குள்ள போய் பார்க்கலை.” என்று கூறவும், ஜியாவிற்குத் தூக்கிவாரி போட்டது. ஐயோ என்ன செய்வது என்று ஜியா முழிக்க, இதற்கு மேல் பொறுக்க முடியாதவராய் அந்தப் பெண்மனியின் கணவர்,

“அங்க எல்லாம் எதுவும் இல்லை, எனக்குத் தூக்கம் வருது. இப்போ நீ வரப்போறியா இல்லை…” என்றவாறு தன் மனைவியின் கரங்களைப் பற்றிக்கொண்டு வேகமாகச் சென்றார். 

அவர்கள் சென்ற பிறகே நிம்மதி அடைந்தவள், நெஞ்சில் கை வைத்தவாறு தன் விழிகளை மூடி மூச்சு வாங்க நிற்க, “ஹாய்!” என்றவாறு, அவளது தோளைத் தட்டிய ஆஷிக், “யார் இவங்க? இப்படி வீட்டுக்குள்ள வந்து செக் பண்றாங்க?”

“நான் உனக்குப் பதில் சொல்லுவேன்னு எப்படி நீ நம்புற? ஆமா, நான் தெரியாமதான் கேட்குறேன் உன் மனசுல உன்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க?”

“ஹாட், டாஷிங், க்யூட், இன்டெலிஜெண்ட், ஹாண்ட்ஸம் இந்த மாதிரி நிறையா… பட் உன்னை மாதிரி குண்டா ஷேப்லஸ் அண்ட் போரிங் இல்லை.” என்று கண்சிமிட்ட, கோபமுற்றவள் அவனைப் பார்த்து,

“என்ன, என்ன சொன்ன குண்டா? நான் குண்டா ஷேப்லஸ்ஸா இருக்கேனா?”

“கண்டிப்பா! நீ உன்னைக் கண்ணாடியில இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா? வெயிட், கம்.” என்று அழைத்துச் சென்றவன் அவளைக் கண்ணாடியின் முன்பு நிறுத்தி, 

“லுக் அட் யு, உன்னோட முகத்தைப் பாரு. முன்னாடியெல்லாம் சின்னதா இருக்கும், இப்போ பாரு நல்லா பம்கின் மாதிரி இதுல ரெண்டு கன்னமும் ரெண்டு ஆப்பிள் மாதிரி…” என்றவன், அவளது கன்னத்தைக் கிள்ளி, “அப்படியே கடிச்சு சாப்பிடணும் போல இருக்கு.

அப்புறம் உன்னோட கழுத்து முன்னாடியெல்லாம் நல்லா வளைஞ்சு சங்கு மாதிரி இருந்துச்சு, இப்போ…” என்றவாறு அவளது கழுத்தில் கை வைக்க, அவன் தன்னைக் கேலி செய்கிறான் என்று உணர்ந்தவள் அவனைத் தள்ளிவிட, அவன் நிதானம் இழந்து கீழே விழுந்தான். 

கீழே விழுந்த ஆஷிக், “அம்மா…!” என்று கத்த, 

“நடிச்சது போதும், முதல்ல எந்திருச்சு இங்க இருந்து கிளம்பு.”

“கீழ தள்ளிவிட்டது மட்டும் இல்லாம, என்னை நடிக்காதனு வேற சொல்றியா? என்னால எழும்ப முடியல, முதுகெல்லாம் வலிக்குதுடி.” என்று வலியில் முகத்தைச் சுளித்தபடி கூற, 

“கடவுளே! ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனையைக் குடுக்கிற?” என்று அவரைக் கடிந்தவாறு, வேண்டா வெறுப்பாக அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கட்டில் மீது ஜியா உட்கார வைத்தாள். 

“என்னால முடியல, எதாவது பண்ணு.”

“நான் என்ன பண்ண?”

“நீ டாக்டர் தான, என்ன பண்றதுனு கேட்குற?”

“முதுகு வலினா ஒரு படத்துல பார்த்தேன், உலக்கை இருக்குல அதை வச்சு உருட்டுனாங்க.”

“ஏய் நீ என்ன வசூல் ராஜ MBBSஸா? எதாவது மருந்தை எடுத்துட்டு வாடி, அதை விட்டுட்டு உலக்கைய வச்சு உருட்டுவியா?” என்றவனைப் பார்த்து சிரித்தவள் மருந்தை எடுத்துவந்து,

“இந்தா” என்று கையில் கொடுக்க,

“லுக் அட் மீ, நானே போடுற நிலைமையிலையா இருக்கேன்? தேச்சு விடு வலி தாங்கலை” என்றவனைப் பார்த்து முறைத்தவள், அவன் அருகில் அமர்ந்து தேய்த்து விடப் போக,

அவன், “ஏய் நீ நிஜமாவே டாக்டர்தான? வலி முதுகுல… ஷர்ட்ல இல்லை.” என்றவன், தன் மேல் சட்டையைக் கழற்ற, அவள் வேறு பக்கமாகத் தன் முகத்தை வைத்துக்கொள்ள, 

“ஏய் ஹெல்ப் பண்ணுடி, என்னால கழட்ட முடியலை.” என்று அவன் பாவமாய் கூறியதும், மெல்ல இளகியவள் அவனது அருகில் அமர்ந்து மெதுவாக அவனது சட்டையின் பொத்தானை ஒவ்வொன்றாக கழற்ற, மிக நெருக்கமாக அவளது அழகிய வதனத்தையும் அதில் மெல்லிய மலரைப் போல இதழ் விரிந்திருந்த செந்நிற அதரத்தை, மிகவும் அருகில் அதுவும் நூலளவு இடைவெளியில் பார்த்தவனின் கண்களில் காதல் பொங்கி வழிந்தது. 

சற்றே நிமிர்ந்தவனின் கண்களில் ஜியா தனக்கு வலிக்காமல் இருப்பதற்காக மெதுவாய் பார்த்து பார்த்து தன் மேல் சட்டையைக் கழற்றுவது பட, நாடி சிலிர்த்து மெய் மறந்தான்.

***

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!