கெட்டவன் 10

வெற்றி பேசி விட்டு சென்றதும், ரேவதி விக்கித்து நின்றிருந்தாள் அதே இடத்தில்.

எப்பொழுதும் இறுக்கமாக இருக்கும் வெற்றியின் முகம், இன்று மென்மையாக இருந்தது போல் அவளுக்கு தோன்றியது.

கணவனை எதற்காக தூக்கி சென்றிருக்கிறான் என்று புரியாமல், அவளின் விழிகளில் நீர் சுரந்தது. காலையில் ஆபிஸ் வர சொல்கிறான். வட்டி பணத்தை கேட்பானோ, அவளின் இதயம் தடக், தடக் என்று அடித்து கொண்டது.

நேரம் நள்ளிரவை தாண்டி விட்டதால், அவளுக்கு தூக்கம் வரவில்லை.

காலை விடிந்ததும், இரு பெண் பிள்ளைகளையும் குளித்து தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு, அவனின் ஆபிஸ்க்கு சென்றாள்.

ஒரு பக்கம் பயம், மறு பக்கம் தயக்கம் என்று உணர்வுகளில் சிக்கிக் கொண்டாள் ரேவதி.

உள்ளே சென்று பார்த்தவளின் விழிகளில் இருந்து, கண்ணீர் அருவி போல் கொட்டியது.

அவளின் கணவன் பாதி உயிரோடு இருந்தான். கை, கால்களை கட்டி கொடூரமாக அடித்திருப்பார்கள் போலும். கை, கால்களில் ரத்தம் வடிந்து காய்ந்து போய் இருந்தது.

உதட்டில் இருந்து இன்னும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

“ஹய்யோ!” கதறிக் கொண்டு ஓடியவளை தடுத்து நிறுத்தினான் ரவி.

“அண்ணே வர்ற வரை வெயிட் பண்ணுங்க” என்றான்.

இவள் கோபமாக அவனை பார்த்தாள். “எதுக்கு இப்படி என்னோட புருஷனை அடிச்சிருக்கீங்க” என்று கேட்டு அழுதாள்.

“அண்ணேதான் அடிக்க சொன்னாரு. வெயிட் பண்ணுங்க, வந்துருவாரு அண்ணே” என்றவன், அமைதியாக சென்று கணக்கு வழக்குகளை பார்த்தான்.

ரேவதிக்கு எதுவும் கூற முடியவில்லை. குலுங்கி அழுதாள் தன்னிலையை நினைத்து.

ஆபிஸில் இருந்த மற்றொரு அறைக்குள் இருந்து, அலறல் சத்தம் கேட்டதும் அவள் பயந்து விட்டாள்.

“டேய், வாயை கட்டிட்டு அடிங்க டா” இருந்த இடத்தில் இருந்தே கத்தினான் ரவி.

அதன் பிறகு சத்தம் வெளியே வரவில்லை.

“ரேவதி, என்னை காப்பாத்து ரேவதி” குழரலாக கூறினான் அவளின் கணவன்.

“நீ என்னய்யா செஞ்ச. திருப்பியும் அவர்கிட்ட கடன் வாங்கிட்டியா” அழுகுரலில் கேட்டாள் ரேவதி.

“இல்லை ரேவதி. குடிக்க காசு இல்லை. அதுனால மறுபடியும் காசு கேட்கதான் செஞ்சேன். அதுக்கே என்னை தூக்கிட்டு வந்துட்டாரு டி. அவர் வந்ததும், அவரோட கையில, கால்ல விழுந்தாவது என்னை காப்பாத்து டி” கெஞ்சினான் அவளின் கணவன்.

ரேவதிக்கு முகம் செத்து விட்டது. அவனை தூக்கி வந்த காரணம் தெரிந்ததும், உள்ளுக்குள் துடி துடித்தாள்.

ரவி இருவரின் வாக்கு வாதத்தையும் கண்டும் காணாதது போல் வேலையை பார்த்தான்.

“ஏற்கனவே நீ வாங்குன காசுக்கு, நான் தினமும் நைட் அவரோட…” என்றவள், சொல்ல முடியாமல் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்.

பாவம், பக்கத்தில் இருந்த இளகிய மனம் உடைய ரவிக்கு, ரேவதியின் அழுகையை பார்த்து சங்கடமாக இருந்தது.

“இங்கே பாருங்க. உங்கள வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்க சொன்னேன்” என்று மிரட்டினான் ரவி.

அவனுக்கு அதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

இவன் பரிவாக அவளிடம் பேசி, அதை வெற்றி பார்த்து விட்டால், அவனின் தோலை கழட்டி விடுவான். அதனால் மிரட்டி மட்டும் வைத்தான்.

“ரேவதி, வலி தாங்க முடியல டி. ஒரு தடியன் ஏறி நின்னு என்னை மிதிச்சிட்டான்” என்று திக்கி திணறி ரேவதியிடம் பேசினான் அவளின் கணவன்.

“டேய், இப்போ நீ மூடிட்டு இருக்கலனு வை, நான் மறுபடி அவனை கூப்பிட்டு உன் வாயில மிதிக்க சொல்வேன்” என்றான் ரவி.

அதன் பின் ரேவதியின் கணவன் வாயை திறக்கவில்லை.

“அண்ணே வர லேட் ஆகும்” இப்போ கால் பண்ணலாமா, வேணாமா என்று கைபேசியில் எண்களை அழுத்தி விட்டு, சுண்டு விரலை கடித்து யோசித்தான் ரவி.

எதோ தைரியத்தில் அழைத்து காதில் வைத்து விட்டு, கீழ் இதழைக் கடித்துக் காத்திருந்தான்.

ஆளுயர டெடி பியரை கட்டிப் பிடித்துக் கொண்டு, முகத்தில் சோகம் நிறைந்து வழிய, பஞ்சு மெத்தையில் படுத்திருந்தாள் நிஷா.

அவளின் கைபேசி சிணுங்கியதும், அவளின் முகத்தில் சலிப்பு தட்டியது. ரமேஷ்தான் அழைப்பான், பணம் கேட்பான் என்று வேண்டா வெறுப்பாக கைபேசியை எடுத்தாள்.

திரையில் புது எண்ணை கண்டதும், புருவங்கள் ஏறி இறங்க, அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹெலோ” என்றாள் மெல்லிய குரலில்.

அவளின் “ஹெலோ” என்ற குரலில், ரவியின் இதயம் தாறு மாறாக தடுமாறியது.

“க்கும்” இவன் தொண்டையை செருமிக் கொண்டு, “நான் ரவி” என்றான்.

“ரவியா!” புருவம் உயர்த்தி அவள் யோசிக்கும் நேரம், சட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

நிஷாவிடம் பேசும் பொழுது, வெயிட்டிங் காலில் வெற்றியின் பெயரை பார்த்த ரவிக்கு, அடி வயிற்றில் பயப் பந்து உருண்டு நிஷாவின் அழைப்பை துண்டித்து விட்டான்.

இதில் வெற்றி நேரில் வந்தால் என்ன செய்வானோ தெரியவில்லை. பாவம்.

இங்கே நிஷாவோ, “யாரா இருக்கும். கால் பண்ணி ரவினு சொல்லிட்டு கட் பண்ணிட்டாரு” என்று புலம்பினாள்.

இன்று கல்லூரி செல்லவே அவளுக்கு விருப்பம் இல்லை. அனு அவளிடம் பேசாததும் ஏதோ போல் உணர்ந்தாள்.

“அன்னைக்கு நான் அனுவை சுயநலவாதினு சொன்னேன். ஆனால், உண்மையில நான்தான் சுயநலவாதி” என்று வருத்தப்பட்டாள்.

ரமேஷ் பெரிய தொழிலதிபரின் மகன் என்றுதான் காதலித்தாள். அவனை திருமணம் செய்து கொண்டால், இங்கு எப்படி சொகுசாக இருக்கிறாளோ, அதே போல் புகுந்த வீட்டிலும் சொகுசாக இருக்கலாம் என்று நினைத்தாள். ஆனால், அவனோ பணம், பணம் என்று கேட்டு இவளை நச்சரிக்கிறான்.

“அவனை விட்டு விடலாமா?” என்று யோசிக்கும் பொழுதே இதயம் கனத்தது. “அவனுக்காக அப்பா சட்டையில் இருந்து பணம் திருடினேன். வட்டிக்கு வாங்குனேன். இப்போ கடைசியா அனுவை அந்த வட்டிகாரன்கிட்ட அடகு வச்சிட்டேன். காதல்ல அவனுக்கு உண்மையா இருந்தேன். என் ஃப்ரென்ட் அனுவுக்கு உண்மையா இருக்க முடியல. இதுக்கு மேல ரமேஷ்ஷை விரும்பணுமா? அவனோட தம்பிதான சுரேஷ்ஷும். ரெண்டு பேரும் கடஞ்சி எடுத்த பொறுக்கிங்க. விஷாகா என்ன முடிவு எடுக்க போறானு தெரியல” புலம்பினாள் நிஷா.

அறையை விட்டு வெளியே வந்தாள்.

“சரோஜா அக்கா, ஒரு காஃபி” என்று சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

“சரோஜா” நிஷாவின் வீட்டில் சமையல் செய்பவர்.

“பாப்பா, காலேஜ் போகலையா?” காஃபியை கொடுத்து விட்டு, அக்கறையாக கேட்டு அவளின் தலையை வருடினார்.

“இல்லைக்கா, போகல. உடம்பு சரியில்லை. அம்மா கிளம்பிட்டிங்களா?”

“ஆமா, கிளம்பிட்டாங்க பாப்பா. சமைச்சிட்டேன். நானும் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு புறப்பட்டு விட்டார்.

அவளின் கைபேசி அலறியது. அழைத்தது விஷாகாதான். “இவ இன்னும் காலேஜ் போகலையா?” அழைப்பை ஏற்றாள் நிஷா.

“ஹேய் நிஷா, இன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வராங்க டி” என்றாள் விஷாகா.

“உனக்கு ஓகே வா விஷா” என்று சுரேஷை நினைத்து பதற்றமாக கேட்டாள்.

“அனு சொன்னது லேசா உறுத்தலா இருக்கு நிஷா. அவ பேசாததும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. அதான் அப்பா சொன்னதும் ஓகே சொல்லிட்டேன்” என்றாள் விஷா.

“ஒரு வேலை சுரேஷ் வந்து பிரச்சனை பண்ணா என்ன பண்ண?” என்று கேட்டாள் நிஷா.

“எனக்கும் அதான் யோசனை. அதுக்குதான் நான் ஒரு ஐடியா பண்ணிருக்கிறேன்” என்றாள் விஷாகா.

“என்ன ஐடியா?” திக்கி திணறி கேட்டாள் நிஷா.

“அவனுங்களுக்கு கோபம் வந்தா, நம்மகிட்ட பிரச்சனை பண்ண மாட்டாங்க நிஷா. டைரக்டா அனுவைதான் போய் தொல்லை பண்ணுவானுங்க. அனு சொல்லிதான் நாம அவனுங்கள விட்டு பிரிஞ்சிட்டோம்னு நினைப்பானுங்க” என்றாள் விஷாகா.

நிஷாவுக்கும் அப்படிதான் தோன்றியது.

“நீ என்ன பண்றனா, வெற்றி சாரை பார்த்து ஹெல்ப் கேளு” என்றாள் விஷாகா.

“நானா” அதிர்ச்சியாக கேட்டாள் நிஷா.

“நீ தான் கேட்கணும். நான் இன்னைக்கு வர மாட்டேன். நீயும் காலேஜ்க்கு லீவ் போட்டுரு. வீட்டுல எதாவது சொல்லி சமாளிச்சிட்டு, அவரோட ஆபிஸ் போ. நடந்ததை சொல்லி அனுவுக்காக ஹெல்ப் கேளு” என்றாள்.

“தனியா போக பயமா இருக்கு டி. அன்னைக்கு பணம் வாங்கும் போது, நீயும் இருந்ததால தைரியமா இருந்தேன். இப்போ எப்படி…” யோசித்தாள்.

“அனுவுக்காக போ நிஷா. நேற்று காலேஜ்ல இருந்து, வெற்றி சார் அவளை அழைச்சிட்டு போகும் போது, அவரோட முகத்தை பார்த்தியா? அனுவையே பார்த்துட்டு இருந்தாரு. அனு பேசுனதால மட்டும்தான் அவர் நம்மள விட்டாரு. இல்லைனா அன்னைக்கே நம்ம வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும். நீ அனுவுக்காக அவர்கிட்ட போய் ஹெல்ப் கேளு, கண்டிப்பா பண்ணுவாரு” என்றாள்.

“சரி, நான் போய்ட்டு வந்துட்டு உனக்கு சொல்றேன். நீ மாப்பிள்ளை போட்டோ அனுப்பி வைக்கணும்” என்று கூறிவிட்டு வைத்தாள் நிஷா.

****

இங்கே ஆபிஸில், ரவி வெற்றியிடம் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு.

“நான் வர்ற லேட் ஆகும். ரேவதியை வெயிட் பண்ண சொல்லு. இல்லைனா, போய்ட்டு லேட்டா வர சொல்லு” என்றான் வெற்றி.

“ஆஹ்… சரிண்ணே” ரவி மூச்சை இழுத்துப் பிடித்து பேசினான்.

“என்னாச்சி ரவி உனக்கு?” அவனின் குரல் மாற்றத்தை கணித்து கேட்டான்.

“ஒண்ணும் இல்லைண்ணே. நீங்க வர எவ்ளோ நேரமாகும்” என்று கேட்டான்.

“அது சரியா தெரியல எனக்கு” என்றவன், அனுவின் வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

ரவி அவனின் அழைப்பை துண்டித்து விட்டு, ரேவதியை பார்த்தான்.

“அண்ணே வர லேட் ஆகுமாம். நீ வெயிட் பண்ணனும்னா வெயிட் பண்ணுவியாம், இல்லைனா போய்ட்டு லேட்டா வரணுமாம்” என்றான்.

அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு, கணவனை பார்த்தாள். “வர்ற வரை வெயிட் பண்றேன்” என்றாள். அவனிடம் சிக்கி இருப்பது தன் கணவன் ஆயிற்றே, என்ன செய்வது?

****

காலையில் அனு கோலம் போட வரவில்லை. காலை அனுவை பார்ப்பதற்காக, வேண்டுமென்றே சுபத்ராவுக்கு அழைத்து காலை உணவை கேட்டான். அதையும் அனுவை அனுப்பி வைக்காமல், அவரே கொண்டு வந்து தந்தார்.

“அனு எங்கே?” என்று அவரிடம் கேட்க முடியவில்லை. தவறாக எண்ணிக் கொள்வாரோ என்று புதிதாக வந்த சந்தேகம்.

மணியை பார்த்தான். அனு காலேஜ் செல்லும் நேரம். அதனால் எதிர் வீட்டை எட்டி எட்டி பார்த்தான் முதன் முறை.

அனு வெளியவே வரவில்லை. அவனுக்கு பொறுமை காற்றில் பறந்து போனது. சுபத்ராவுக்கு அழைத்தான்.

“அக்கா, அனு பாப்பா காலேஜ் போய்ட்டாளா? டைம் ஆயிடுச்சு. நான் போய் காலேஜ்ல விட்டு வரேன்” அக்கறையாக கேட்டான்.

சுபத்ராவின் இதயம், அவனின் பாசம் கண்டு இதமாக துடித்தது.

“அவளுக்கு உடம்பு சரியில்லை தம்பி. வீட்டுல ரெஸ்ட் எடுக்குறா” என்றார்.

“ஹய்யோ, என்னாச்சிக்கா? என்கிட்டே சொல்ல வேண்டியதுதான? ஹாஸ்பிடல் போயிருக்கலாம்” உண்மையாகவே அவளுக்காக துடித்தான் வெற்றி.

“இது சாதராண காய்ச்சல்தான். ஒரு அஞ்சி நாள் அப்படிதான் இருக்கும்” என்று அவர் போனில்தான் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் அவரின் முன்னால் நின்றிருந்தான் வெற்றி.

அவர் அதிர்ச்சியாக அவனை பார்க்க, அவன் அவரை கேட்காமலேயே அனுவின் அறைக்கு சென்று விட்டான்.

கால்களை குறுக்கிக் கொண்டு, கட்டிலில் படுத்திருந்தாள் அனு.

“அனு” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.

அவள் திடுக்கிட்டு எழுந்தாள், வெற்றியின் குரலில். வெற்றியை அவள் இங்கு, அதுவும் இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை.

“என்னாச்சி அனு? ரொம்ப காய்ச்சலா? ஹாஸ்பிடல் போகலாமா?” என்று கேட்டான்.

“இல்லை, சாதாரண வயிற்று வலிதான்” என்றவள், தடுமாறினாள் அவனின் விழிகளை பார்த்து.

அவளின் விழிகளில் தடுமாற்றம் புரிந்தவன், கீழ் இதழை அழுந்தக் கடித்து, ஒற்றை புருவம் உயர்த்தி அவளை பார்த்தான்.

“ஹய்யோ!” என்று முணு முணுத்த அனு, தலை குனிந்து கொண்டாள் அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல்.

அடுத்த பதிவில் பார்ப்போம். 

இந்த எபி பிடிச்சிருந்தா குட்டி ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ். 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!