அத்தியாயம்- 6
மறுநாள் காலை வழக்கம் போல் எழுந்து உடற்பயிற்சி செய்ய கிளம்பினான் கேஷவ்.
காதில் ப்ளூடூத் மாட்டியவன் அப்போது தான் அவனின் கைப்பேசி அவனிடம் இல்லை என்பதையே உணர்ந்தான்.
“ஷீட் அங்கேயே விட்டுட்டேன்ல. எப்படி மறந்தேன். நைட் தூங்கும் போது கூட போன் என்கிட்ட இல்லனு தெரியும். தெரிஞ்சும் மார்னீங் ஏதோ நினைவுல ப்ளூடூத் மாட்டிட்டேன்” என்று சொன்னவன், நேராக கீழே சென்று அங்கே நடப்பயிற்சிக்கு தயாரகிக் கொண்டு இருந்த தங்கையிடம் வந்து நின்றான்.
காலில் ஷூ லேசை மாட்டிக் கொண்டு இருந்த ரதிபாலாவிற்கு முன் நிழல் ஆடுவதை கவனித்து நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன அண்ணா” என்று எழுந்து நிற்படி கேட்டாள் ரதி.
கேஷவ்வோ “உன் போன் கொடு. ஜாகிங் முடிச்சிட்டு தரேன்” என்று கரத்தை அவள் முன் நீட்டினான்.
அவனுக்கோ வழக்கமாக அதிகாலை வானொலியை கேட்காமல் ஓடுவது என்னவோ போல் தோன்றியது. அன்றைய நாள் அவனுக்கு எதுவும் சரியாக இருக்காது போன்றே இருக்கும்.
அதிகாலையில் வானொலியின் மூலம் கூறும் தத்துவங்களை கேட்டு பழகியவனுக்கு அதை தவிர்பது என்பது கடினம்.
அதனாலயே தங்கையின் முன் வந்து நின்றான்.
ரதியோ புருவத்தை உயர்த்திக் கொண்டே “உன் போன் எங்கண்ணா” என்று கேட்டாலும் அவள் கரம் அவளின் கைப்பேசியை அண்ணனிடம் கொடுத்தது.
அதை வாங்கிய கேஷவ் காலை வானொலியை உயிர்ப்பித்தபடி “நேத்து போன வீட்ல மிஸ் பண்ணிட்டேன். அப்புறமா ஆளை விட்டு வாங்கிட்டு வர சொல்லனும்” என்று எந்த வித உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் கூறிவிட்டு வெளியே ஓடினான் கேஷவ்.
அதை கேட்ட ரதியின் மனம் தான் கணத்தது. அவளின் உணர்வுகள் மீண்டும் கட்டுக்கடாங்காமல் அவளுள் சூழன்றது.
“என்ன மாதிரியான பொண்ணு அது. ச்சை கொஞ்சம் கூட யோசிச்சி பேசனும் இல்ல. அவ என்ன என் அண்ணனை வேணாம் சொல்றது. என் அண்ணன் பக்கத்துல கூட அவள் நிக்க ஹைட் பத்தல குள்ளக்கத்திரிக்காய்” என்று அதிகாலையிலே சௌந்தர்யாவிற்கு திட்டிக் கொண்டே நடந்தாள் ரதிபாலா.
அதே நேரம் அந்த வீட்டின் பின் பகுதியில் வாசல் சுத்தம் செய்து கோலாம் போட்டு முடித்து இருந்தார் தாட்சாயிணி.
பின் குளித்துவிட்டு, முன் வீட்டினுள் வந்தவர் சமையலறைக்கு சென்று காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தார்.
மற்ற பணியாட்கள் வீட்டை சுத்தம் செய்வதும் தோட்டத்தை சுத்தம் செய்வதும் வாசலை கூட்டி கோலமிட்டு ரோஜா பூக்களுக்கு தண்ணீர் விடுவதும் என்று வழக்கமாக நடக்கும் அனைத்து வேலைகளையும் செய்ய தொடங்கினர்.
யாருமே நேற்று அப்படி ஒரு விசியம் நடந்ததை மறந்தும் பேசிக் கொள்ளவில்லை.
அதற்கு இன்னொரு காரணம் தங்கள் முதலாளி அம்மாவின் மனம் நோக கூடாது என்றே அமைதியாக இருந்தனர்.
அங்கே வேலை செய்யும் அனைத்து பணியாட்களையும் தாட்சாயிணி அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக தான் இது நாள் வரை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.
இதுவரை யாரிடமும் ஒரு வார்த்தை கடினமாக அவள் பேசியதே இல்லை. நேற்று தான் முதல் முறை கருப்பனை கூட அறைந்தது. அதுவும் குனிந்து நிமிர்ந்து கஷ்டப்பட்டு போட்ட அந்த பெரிய கோலத்தை வீணாக்கியதால் தான்.
அதே போல் தான் கேஷவ்வும் ரதிபாலாவும் நேற்றைய பொழுதுகளை மருந்துக்கு கூட தாயின் முன் பேசவில்லை.
தாட்சாயிணியும் அதே போல் தான். அப்படி ஒரு நிகழ் நடந்ததாக கூட காட்டிக் கொள்ளவில்லை.
கேஷவ்வும் ரதிபாலாவும் தங்கள் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர்கள் நேராக அறைக்கு சென்று குளித்துவிட்டு தயாராகி சாப்பாடு மேடையின் முன் வந்து அமர்ந்தனர்.
இதே சமயம் அங்கே தில்லைநாதன் இல்லத்தில் ஆராதனா எப்போதும் போல் எழுந்தாலும் நேற்றைய பொழுது நடந்த நிகழ்கள் அவளை கவலைக் கொள்ள செய்தது.
இயந்திரமாக வீட்டின் வேலைகளை அவள் செய்தாலும் பெண்ணவளின் மூளையும் மனமும் தாட்சாயிணியை நினைத்து வருத்தமடைந்தது.
சோர்வுடன் எழுந்த தில்லை நாதனுக்கு காபியை கொடுத்த ஆராதனா “பெரியப்பா அவங்க வீட்டுக்கு எத்தனை மணிக்கு போறீங்க” என்று கேட்டாள்.
அப்போது எழுந்து வந்த கௌசல்யா ஆராதனா வைத்து இருந்த தட்டிலிருந்து காபியை எடுத்தபடி கோபத்துடன் “யார் வீட்டுக்கு?” என்று கேட்டாள்.
தில்லைநாதனோ “ம் அதான் நீ பெத்து வச்சிது நேத்து ஒரு பெரிய மனிஷியோட மானத்தை வாங்குச்சே. அந்த அம்மா வீட்டுக்கு தான்” என்று கடுப்புடன் சொன்னார்.
அதை கேட்ட கௌசல்யா காபியை ஒரு வாய் குடித்துவிட்டு “ஓ உங்க சம்மந்தி அம்மாவா” என்றாள் நெக்கலாக.
“அதான் இல்லையினு ஆக்கிட்டாளே உன் மவ”
“என்ன சும்மா சும்மா என் மவ என் பொண்ணு சொல்றீங்க. அப்போ அவ உங்களுக்கு பொண்ணு இல்லையா?” என்று கழுத்தை முறித்தவர் மொத்த காபியையும் குடித்து டம்ளரை ஆராதனா கையில் இருந்த தட்டில் பட்டென்று வைத்து,
“அதான் எதுவும் இல்லனு ஆகிடுச்சில. அப்புறம் என்ன அங்க போயிட்டு. என் பொண்ணுக்கு பிடிக்கல. பிடிக்காத இடத்துல எப்படி அவளால வாழ முடியும். நேத்து நடந்ததை மறந்துட்டு அந்த தரகருக்கு போன் போட்டு வேற இடத்துல நல்ல சம்மந்தமாக பெரிய குடும்பமா இருந்த சொல்ல சொல்லுங்க” என்று பேசிவிட்டு அங்கே நிற்காமல் நேராக அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டார்.
அதற்கு மேல் அங்கேயே நின்றால் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவரா கௌசல்யா.
நேற்றைய இரவு மகளின் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டு இருந்தவரிடம்,
“ம்மா, அப்பா கிட்ட சொல்லி அந்த தரகர் கிட்ட நல்லா பெரிய பணக்காரனா இருக்கிற மாப்பிளையா பார்த்து சொல்ல சொல்லுங்க” என்று வலியின் மிகுதியிலும் கட்டளையிட்டாள்.
அதை கேட்டு அதிர்ந்த கௌசல்யா “அடியே இன்னிக்கு வாங்கிது பத்தலையா. கொஞ்சம் பொறுமையா இரு. இந்த விசியம் ஆறட்டும். அப்புறம் ஒரு நல்ல சந்தர்பமா பார்த்து உங்க அப்பா கிட்ட பேசுறேன்” என்றாள்.
அம்மா சொன்னதை கேட்ட சௌந்தர்யா சட்டென்று எழுந்து அமர்ந்து கோபமாக “ம்மா நான் சொன்னதை நாளைக்கே செய். போய் உன் புருஷன் கிட்ட சொல்லு. இல்ல நானே எனக்கு மாப்பிளை பார்த்துப்பேன். அப்புறம் என்னை குத்தம் சொல்ல கூடாது. உங்களுக்கு நான் இங்கே இருந்து போகனும். அதை ஏன் தள்ளி போட்டுக்கிட்டு. நாளைக்கே அப்பா கிட்ட பேசுற. இல்ல நானே பேசிக்கிறேன்” என்று முடிவோடு சொல்லியவள் குளிரூட்டியை சற்று அதிகப்படுத்தி விட்டு உறங்க ஆரம்பித்தாள்.
மகள் சொன்னதை கேட்ட கௌசல்யா அதிர்ச்சியுடன் அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
‘உன்னை பெத்ததுக்கு, இதெல்லாம் செய்து தானே ஆகனும்’ என்று எண்ணியவர் இப்போது அதை வேகமாக கூறிவிட்டு தனது அறையில் மூச்சு வாங்க நின்று இருந்தார்.
அப்போது எழுந்து வந்த ரகுபதியோ “அப்பா, அம்மாவுக்கு பைத்தியம் ஏதாவது பிடிச்சிடுச்சா என்ன?” கேட்டுக் கொண்டே ஆராதனா கொடுத்த காபியை பருகினான்.
தலையில் கை வைத்து அமர்ந்து இருந்த தில்லை நாதன் “பைத்தியம் அவளுக்கு இல்ல. நமக்கு பிடிக்க வைக்க பார்க்கிறாங்க ஆத்தாளும் மகளும். கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லாம எப்படி பேசிட்டு போறா பாரு” என்று சிடுசிடுத்தார்.
ஆராதனா அவள் பெரியப்பாவை பார்த்து “விடுங்க பெரியப்பா. பெரியம்மா அப்படி தான். நீங்க போய் ரெடியாகிட்டு வாங்க. நான் டிபன் எடுத்து வைக்கிறேன். காலேஜிக்கு வேற நேரமாகுது. நீங்க கிளம்பும் போது சொல்லுங்க பெரியப்பா” என்று சொன்னவள் மனதிலோ,
‘பெரியப்பா போகும் போது அந்த போனை கொடுத்து அனுப்பனும். நேத்துல இருந்து அந்த போனு அடிச்சிட்டே இருந்துச்சி. யார் யாரோ பேர் எல்லாம் வந்துச்சி. நல்லவேளை நம்ம அந்த போனை ஆப் பண்ணிடோம். இல்ல காதே நமக்கு டமால் தான்’ என்று எண்ணிக் கொண்டே காலேஜிக்கு தயாரானாள்.
ஆராதனா கண்ணாடியின் முன் நின்று தன் நீண்ட கூந்தலை பிண்ணிக் கொண்டு இருந்த சமயம் பள்ளி சீருடையோடு அங்கே வந்தாள் அபர்ணா.
கண்ணாடி வழியோடு தங்கையை பார்த்து “சாப்பிட்டியாடி” என்று கேட்டாள்.
அவளோ “ம்” என்றவள் அங்கே ஆராதனாவின் பையின் மீது விலைவுயர்ந்த கைப்பேசி இருப்பதை பார்த்து கையில் எடுத்தாள்.
“வாவ் அக்கா ரொம்ப எக்ஸ் பெல்சோன மொபைல் போல இருக்கு” என்றவள் ஆராதனா தடுக்கும் முன் அதனை உயிர்ப்பித்தாள் அபர்ணா.
கண்ணாடி வழியாகவே அவள் தங்கை கைப்பேசியை எடுக்க போவதை பார்த்தவள் அவசரமாக திரும்பிய ஆராதனாவோ “அபர்ணா போனை தொட்ட கையை உடைச்சிடுவேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அபர்ணா அதை உபயோகித்தாள்.
“சொல்லிட்டே இருக்கேன் போனை ஆன் பண்ற” என்று கோபமடைந்தவள் தங்கையிடமிருந்து தொலைப்பேசியை பறிக்க முயன்றாள்.
ஆனால் அபர்ணாவோ மூத்தவளுக்கு பழுப்பு காட்டி “முதல இது யாரோடது சொல்லு. ஏன் இன்னும் ஆன் ஆக மாட்டிக்குது” என்று கேட்டுக் கொண்டு மெத்தயை சுற்றி சுற்றி வலம் வந்து கைப்பேசியை ஆராய்ந்தாள்.
தங்கையின் பின்னால் அவளை பிடிக்க துரத்தின ஆராதனா “அபர்ணா விளையாடாத. அது என்னோடது இல்லைடி”
“அது பார்க்கும் போதே தெரியுது உன்னோடது இல்லனு. நீ வச்சி இருக்கிறது டப்பா போன். இது பாரு எவ்வளவு பளப்பளப்பா மின்னுது” என்று கண்கள் மின்ன கூறினாள்.
அப்போது திரை வெளிச்சத்துடன் ஒளிர. சரியாக ஆராதனா போனின் முன் திரைமீது கரத்தை வைத்து அதை பிடுங்க நினைத்தாள்.
அபர்ணாவும் விடுவதாக இல்லை போல்.
ஆராதனாவிடமிருந்து அந்த கைப்பேசியை தன் புறம் இழுக்க. அதில் ஆராதனா சிறிது கீழே குனிந்து முன் பக்கம் வர, அதே சமயம் இவர்களின் கரங்கள் தொடுத்திரையில் கண்டமேனிக்கு விளையாடியதால் கைப்பேசியின் புகைப்பட கருவி தானாக உயிர்த்து அறைகுறை போல் காட்சியத்த ஆராதனாவை படம் எடுத்தது.
படம் எடுக்கும் சத்தம் கேட்டு இருப்பெண்களும் விழிகளை அகல விரித்து அதிர்ந்து போயினர்.
அப்போது தான் அபர்ணா தன் அக்கா எவ்வாறு குனிந்து நின்று இருக்கிறாள் என்பதை கவனித்தவள் விழிகள் சற்று நகர்ந்து கரங்களிலிருந்த திரையை பார்த்தது.
ஏற்கனவே விரிந்து இருந்த விழிகள் இப்போது வெளியே குதித்து விடும் அளவிற்கு விரிந்தது.
தங்கையின் அதிர்ச்சியை கண்ட ஆராதனா அபர்ணாவின் கரத்திலிருந்த கைப்பேசியை தன் புறம் திருப்பி பார்த்தவள் உறைந்தே போனாள்.
அபர்ணாவோ உடன் பிறந்தவளை உலுக்கி “அக்கா உடனே டெலிட் பண்ணிடு” என்று ஐடியா கொடுக்க.
ஆராதனாவோ அப்போது தான் நினைவுக்கு வந்தவளாக “ஹான்” என்றாள்.
“என்ன ஹான். முதல போட்டோவ டெலிட் பண்ணு. ஆமா இது யார் போன்” என்று சந்தேகமாக கேட்டாள் அபர்ணா.
“இது தாட்சாயிணி அத்தை போன் நினைக்கிறேன். ஏனா நான் போன் ஆன் செய்து பார்க்கும் போது அத்தை, மாமா, ரதி இவங்க மூன்னு பேர் தான் டிஸ்ப்ளே வால்பேப்பர்ல இருந்தாங்க” என்றாள் அதிர்ந்தபடி.
அவளின் எண்ணமோ மூவரின் புகைப்படம் இருப்பதை கண்டு, இது போல் கண்டிப்பாக தாட்சாயிணி தான் வைத்து இருப்பார்கள் என்று நினைத்தாள்.
இப்போது இருக்கும் பசங்கள் அவர்களின் புகைப்படத்தை மட்டும வைத்துக் கொள்வார்கள். எங்கே இருந்து தாய் தங்கை படம் எல்லாம் வைக்க போகிறார்கள் என்றே நினைத்தாள்.
ஆனால் அவள் அறியாத ஒன்று.. அவளின் எண்ணம் பொய் என்பது தான்.
கேஷவ்வும் சரி ரதிபாலாவும் சரி மூவரும் ஒன்றாக இருப்பது போன்றே படத்தை வைத்து இருந்தனர். தாட்சாயிணி மகன் மற்றும் மகளின் படத்தை மட்டுமே வைத்து இருந்தார்.
அதை கேட்ட அபர்ணா குதுகலத்துடன் “வாவ் அப்போ இது அத்தை போனா. நேத்து மிஸ் பண்ணிடாங்கல. அப்போ அக்கா நம்ம பயப்பட தேவையில்லை. கொடு நானே அந்த போட்டோவை டெலீட் பண்ணிறேன். ஆனா அக்கா நீ செம ஹாட் தான்” என்று கண்ணடித்து கிண்டல் செய்துக் கொண்டே ஆராதனாவின் கரத்திலிருந்த கைப்பேசியை பிடிங்கினாள்.
ஆனால் அது அவள் கரத்தோடு போகாமல் வழுக்கிக் கொண்டு தரையில் விழுந்து கைப்பேசி இரண்டாக சிதறியது.
அதை பார்த்த இருவரும் மேலும் மேலுல் அதிர்ந்து போயினர்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
