“அடடே அமிர்தாவா இது ? இப்போ நீயா சிரிச்ச?”
“ம்” லேசாக தலையாட்டினாள்.
அவளுக்கு கையாலேயே திருஷ்டி கழித்தார். “என்னிக்கும் இப்படியே சந்தோசமா சிரிச்சுகிட்டே இருக்கனும். என்னிக்கும் யாருக்காகவும் நம்முடைய சிரிப்பை மட்டும் விட்டுடக் கூடாது” தன் பேரனாலேயே அவளின் சிரிப்பு மொத்தமாக தொலைய போவது தெரியாமல். பாட்டியே தொடர்ந்தார்.
“உனக்கும் வீட்டுல மாப்ள பாக்க சொல்லுடி. இத்தனை அழகான பொண்ண யாரு வேண்டாம்பா?
மலர்-16
“இல்ல பாட்டி. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். தம்பி தங்கச்சி படிக்கணும். தம்பி ஓரளவு செட்டில் ஆனாதான் என்ன பத்தி யோசிக்க முடியும்.
“தம்பி என்ன பண்ணறான் ?”
“அவன் இஞ்சினீரிங் முடிக்க போறான். தங்கச்சி ஐ ஐ எஸ் எஸ் க்கு போகனுன்னு ஆசை . பாக்கலாம்”
“அப்டின்னா?”
“அதான் பாட்டி இந்த விண்வெளி ஆராய்ச்சி பண்ணுவாங்களே! அதுல போக ஆச”
“கல்பனா சாவ்லா மாதிரியா? அது ரொம்ப கஷ்டம் இல்ல?”
“ம்ம்! ஆமா பாட்டி ரொம்ப நிறைய மார்க் எடுக்கணும். நல்லா படிப்பா . அத பத்தி கேட்டா பேசிக்கிட்டே இருப்பா, ஏதேதோ சொல்லுவா. ஆனா எனக்கு கொஞ்சம் தான் புரியும். அவ பொறுப்பு முழுக்க முழுக்க முரளியோடதுதான்.”
அவள் தம்பி தங்கையை பற்றி பேசும்போது இருந்த மலர்ச்சியை மாடியில் இருந்து ஆனந்த் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஏனோ அவன் முகமும் அவளுடன் சேர்ந்தே மலர்ந்தது.
இனியாவை விக்ரம் வீட்டிலிருந்து பார்க்க வந்திருந்தார்கள். அமிர்தா அழகிதான். விக்ரமுக்குத் தான் இனியாவை விட்டு கண்ணை அகற்ற இஷ்டமில்லை. தன்னவள் என்று வந்து விட்டால் எந்த உலக அழகியும் பார்க்கத் தோன்றாதே. தலை குனிந்திருந்த இனியாவைப் பார்க்க அமிர்தாவுக்கே ஆச்சர்யம்தான். “ஆனந்த் சாருகிட்ட சண்டை போட அந்த பஜாரி எங்க?”
“சீ !போ அம்ரு ” முகம் முழுவதும் சிகப்பாகி இருந்தது. தோழிகள் இங்கே தனிமையில் பேசிக் கொண்டிருக்க அங்கே பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“அக்கா ! ரெண்டுப் பேரும் கொஞ்சம் அமைதியா அவங்க என்ன சொல்லறாங்கன்னு கேளுங்களேன்” இனியாவின் தங்கை சொன்னதும் கவனித்தார்கள் தோழிகள். விக்ரம் சித்தப்பா என்ன சொன்னார்?
நாட்கள் நகர்ந்தன. பாட்டி இப்போதெல்லாம் தானாகவே எழும்பி அமர்ந்து என்று தனது வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்தார், குளியல் அறைக்குச் செல்வது உட்பட. அதனால் அந்த வாரத்துடன் இவர்கள் வீட்டில் முடித்துக் கொண்டு மருத்துவமனைக்கே வரச் சொல்லி விட்டான் அருண்.
அதன் இறுதி நாளில், தன் வாழ்க்கையில் நடக்கப் போகும் பல மாற்றங்களுக்கு முதல் நாளாக அமைய போவதுத் தெரியாமல், விடியலிலேயே எழுந்து உடற்பயிற்சி செய்து வழக்கம்போல அமிர்தாவிடம் இருந்து காபி வாங்கி கொண்டான்.
அவனுக்கு அன்று பெரியதாக வேலை எதுவும் இல்லை. அதனால் வாழக்கம்போல காலையிலேயே அலுவலகத்துக்கு சென்று விட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து விட்டான். அன்று அமிர்தா அந்த வீட்டில் வேலை செய்யப் போவது இறுதி நாள் என்பதால் பாட்டிக்கு பிடித்த பாயசமும், தாத்தாவிற்கு பிடித்த வெஜிடபிள் புலாவும் செய்து கொடுத்தாள் .
“பாருடி! எங்க முன்னாடியே செய்து கொடுத்தா சமயக்காரியாக்கிடுவோன்னு இன்னிக்கு செய்திருக்கா ?
“அதுனால என்ன தாத்தா? நீங்க எப்ப வேணுன்னாலும் எங்க வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு என்ன வேணுமோ நானும் எங்க அம்மாவும் செய்து குடுக்கறோம். எங்க அம்மா சமையல் இன்னும் சூப்பரா இருக்கும்”
“டேய்! அது என்னன்னு தெரியாமலே காலி பண்ணிட்டியா?”
“எது? இந்த எல்லோ கலர் டிஷா “
“ஆமாண்டா! என்னடா இது எவ்ளோ ஆசையா வச்சிருந்தேன் தெரியுமா?” குறை பட்டுக் கொண்டார் பாட்டி.
“அதனால என்ன மறுபடியும் செய்து குடுக்க சொல்லுங்க!” விரலில் இருப்பதை கூட வீண் செய்ய விரும்பாதவன் நக்கிக் கொண்டிருந்தான்.
“டேய்! அது அம்மில அரைச்ச பருப்பு துவையல். உன்னோட ஆளுங்களுக்கு அதெல்லாம் செய்ய தெரியாதுடா”
“அப்போ இது மட்டும் யாரு செய்தா ? ” இப்போதும் கருத்தாக விரல்களை நக்கிக் கொண்டிருந்தான்.
“நாந்தான்” தலை குனிந்து அமைதியாக சொன்னாள் அமிர்தா .
“இட்ஸ் ஓகே! நாளைக்கு அவங்களுக்கு செய்து குடுத்துடு, இவ்ளோ நல்லா இருந்தா யாருதான் காலி பண்ண மாட்டா ? புகழ்ச்சியைக் கூட போற போக்கில் அள்ளி வீசிவிட்டு அசால்ட்டாக கை கழுவச் சென்றான். அமிர்தா எதையும் கண்டுக் கொள்ளவில்லை.
அன்று மதியத்திற்கு மேல் ,
திடீரென அவளுக்கு அந்த மூன்று நாட்கள் வந்து விட்டது. கைப் பையில் தேவையானதை தேடினால், இல்லை.
“ ச!” என்ன இது இப்டி மிஸ் பண்ணிட்டியே அமிர்தா ? யாரு கிட்ட கேட்கறது. என்ன பண்ணறது? அவ்ளோ தூரம் பஸ்சுல வேற போகணுமே? அது வரைக்கும் தாங்குமா ?” தன்னையே நொந்து கொண்டாள் .
வெளிறிய முகத்துடன் தன்னிடம் ஏதோ சொல்ல விழைபவளிடம் ,
“என்ன அமிர்தா ? என்ன ஆச்சு ? முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு? உடம்புக்கு முடியலையா?
தாத்தா எதிரில் சொல்லத் தயங்கியவள் “ஒன்னும் இல்ல பாட்டி” என்று விட்டாள் .
மாலை ஆனந்த் தன் அறையில் இருந்து வந்தவன் பாட்டியிடம் கொஞ்சினான்.
பாட்டி மடியில், படுத்திருந்த பேரனிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.
“என்ன பாட்டி இதுக்கு போய் என்னை போக சொல்லறீங்க ? ட்ரைவரை அனுப்புங்க.
“இல்லடா கண்ணா! இந்த மாதிரி சமயத்துல அது வேணாம்”
“துறைக்கு போக முடியல்லன்னா நான் போகிறேன் சுந்தரி” தாத்தா கடுமையாக சொன்னார்.
“எதுக்கு இப்டி கம்பல் பண்ணறீங்க ?”
“டேய் என்னடா இது பேச்சு ? நம்ம வீட்டுலேர்ந்து ஒரு பொண்ண எப்பிடிடா ட்ரைவரோட இந்த சமயத்துல அனுப்பறது? கொஞ்சமாவது மனதாபிமானம் வேணாம்? ட்ரைவரும் சின்ன பையன். எங்களால உங்கள மாதிரி மாடெர்னா யோசிக்க முடியாது. உனக்கு அவளை புடிக்காதுன்னா நீ போகாத. நான் போகிறேன்” தாத்தாதான் அதட்டினார்.
“சரி! நானே போறேன்”. தோட்டத்தில் சாரில் அமர்ந்திருந்தவளை கிளம்பச் சொன்னான். காரணம் புரியவில்லை என்றாலும் உடனே கிளம்பி விட்டாள் .
வயதானவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளப்பினாள் . பாட்டியைக் கட்டிக் கொண்டாள் . சிறு பிள்ளை போல தேம்பித் தேம்பி அழுதாள்.
கண்ணை துடைத்துக் கொண்டு “வரேன் தாத்தா . நீங்களும் உடம்ப பார்த்துக்கோங்க. ரெண்டு பேரும் டயத்துக்கு சாப்பிடுங்க. பாட்டி! சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை விடாம பண்ணுங்க. நான் ப்ரீயா இருக்கும்போது கால் பண்ணறேன் ” முதலில் அழுதாலும் இறுதியில் புன்னகை முகமாகவே கிளம்பினாள்.
இது எல்லாம் ஆனந்த் பார்த்துக் கொண்டிருந்தான். இது என்ன விதமான உறவு என்று அவனுக்குப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. வேலைக்காக வந்தவளுக்கு இத்தனை அன்பா? முத்து வைரனை பார்க்கத் தெம்பில்லை. அவர்களின் அன்பு இவளுக்குத் தெரியும். இருந்தாலும் தாத்தா பிடிவாதமாக அழைத்துச் சென்றார். அவர்களிடமும் சொல்லி விட்டு தான் சென்றாள்.
“நான் அப்பப்ப வீடியோ கால் பண்ணறேன். சமத்தா இருக்கனும்” பெற்ற மகன்களிடம் சொல்வதுப் போலவே இருந்தது. அதை பார்த்தால் மற்றவர்களுக்கு எப்படியோ இருக்கும், இவனுக்கு எப்படியோ இருந்தது. முகத்தை திருப்பிக் கொண்டுவிட்டான். அந்தக் காட்சியை பார்க்க தெம்பில்லாதவன் காரில் ஏறி அமர்ந்து விட்டான் . மனதில் ஏதேதோ எண்ணங்கள். அவன் எண்ணத்திற்கு காரணமானவள் இதோ கண்ணெதிரே இருக்கிறாள். பார்க்கப் பிடிக்கவில்லை. வெறுப்பு கோபம் எல்லாம் அவள் மீது கொட்ட முடியாது. பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். எங்கோ வெறித்தபடி.
காரில் பின் பக்கத்தில் ஏறப் போனவளை முன் பக்கம் ஏறிக் கொள்ளச் சொன்னான். அவளின் தயக்கம் புரிந்தாலும், “பரவால்ல. முன்னாடியே உட்காரு. இல்லைனா நான் ட்ரைவர் போல இருப்பேன்”
அமைதியாக தலையாட்டி அமர்ந்து வழி சொன்னாள் . வெளியிலேயே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவள் கண் சட்டென ஸ்டியரிங்கில் இருந்த அவன் கைகளில் பதிந்தது. மோதிரம் அவன் கைக்கு அழகா? இல்லை அவன் விரலே மோதிரத்திற்கு ஆபரணம். அதே போல் தான் அவன் அணிந்திருந்த பிரேஸ்லெட்டும் , வாட்சும்.
அவள் கவனிப்பதை கவனித்த அவன் என்னவென்று வலது புருவத்தை உயர்த்தினான்.
அந்த ஒற்றைப் பார்வை அவளின் உயிரில் கலந்து விட்டது. “அப்பா பாக்கற பையனைத் தான் கல்யாணம் செய்துப்பேன்” பிடிவாதமாக இத்தனை வருடங்கள் யாரையும் பார்க்காதவள் இந்த நொடி தன்னை இழந்து விட்டாள். நொடியில் அவள் தன்னை இழந்ததுப் போல அவனும்தான் தன்னை இழந்து விட்டானோ. அந்த குட்டி உதடும் மாசில்லாத கன்னங்களும் என்னைத் தொட மாட்டியா? கேட்டதுப் போல இருந்தது. ரெஜிதாவிடம் தோன்றாத உணர்வு இது.
“ஒன்னும் இல்ல” லேசாக தலையாட்டினாள்.
விட்டுவிடுவானா?
“அதுக்குத்தான் இப்டி உத்து உத்து பார்த்தியா? வேணுன்னா கேளு. தரேன். பாட்டிக்கு எவ்ளோ பண்ணி இருக்க?”
“அதில்ல சார். உங்களுக்கு இந்த வாட்ச் பிரேஸ்லெட் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு”
‘கல்யாணத்துல நீங்க நீங்க எப்படி இருப்பீங்கன்னு நினச்சு பார்த்தேன். ரொம்ப கம்பீரமா அழகா இருக்கீங்க. இதை நான் தப்பான அர்த்ததுல சொல்லல. உங்களுக்கு நான் சொன்னது தப்பா இருந்தா இன்னொரு தடவை கால்ல விழறேன்.”
“இட்ஸ் ஓகே! இனிமே எங்க வீட்டுல வேலை செய்ய போகறதில்லை தைரியமா?” குத்தலாக கேட்டனா? இருந்தாலும் அவன் குரல் இத்தனை சாந்தமாக இருக்குமா?
இவள் வழி சொல்ல சொல்ல இவன் மனம் பதைபதைத்தது.
“அதை மட்டும் சொல்லிடாத, வரு! ப்ளீஸ்! ப்ளீஸ்!” என்று நினைத்தான். அதில் அவளுக்கு அவன் வைத்த பெயர் கூட கவனத்தில் இல்லை. ஆனால் எது இருக்கக் கூடாது என்று அவன் நினைத்தானோ அதுவே நடந்தது. அதே வீடு. வாழ்க்கையில் இருந்து அவன் தப்பித்து ஓடிய வீடு. அவனை அவமானங்களால் துரத்திய வீடு.
எந்த மனிதர்களையும் பார்க்க கூடாது என்று பயந்து ஓடி ஒளிந்தவன், ஒரு நாள் வருவான். கம்பீரமாக. தன் துணையை அழைத்துச் செல்ல என்று நம்புவோம்.
காரில் இருந்து இறங்கியவள்,
“ரொம்ப தேங்க்ஸ் சார். இது எனக்கு ரொம்ப பெரிய உதவி. டைம்லி ஹெல்ப். எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது ” சொல்லும்போது, அவள் முகத்தில் இருந்தது மனக் குன்றலா? அல்லது இயலாமையா ?அந்த சமயத்தில் அவன் ஆராய விரும்பவில்லை.
“இட்ஸ் ஓகே!” என்றுச் சொன்னவன் அடுத்த நொடி அங்கில்லை.
‘இவரை புரிஞ்சுக்கவே முடியலையே’ மனதின் ஆற்றாமையுடன் உள்ளே வந்தாள் .
வீட்டிற்கு வந்தவன் மிகவும் சோர்ந்து போய் இருந்தான். அவனை பார்த்த பெரியவர்களுக்கு கவலையாக இருந்தது. வந்ததும் நேராக சென்று பாட்டியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவன் கால்களை மடியில் வைத்து பிடிக்க தொடங்கினார் தாத்தா. பாட்டி மெதுவாக தலை கோத அப்படியே கண்ணயர்ந்தான். பெரியவர்களின் இந்த அன்பினால் தான் அவன் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. ஹனி ட்ராப் மூலம் அவனை கவிழ்க்க பலர் முயற்சி செய்தும் எந்த பலனும் இருந்ததில்லை. ரெஜிதாவும் அவனை நெருங்கி வர எத்தனையோ முயற்சித்திருக்கிறாள். ஆனால் திருமணத்திற்குப் பின்தான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். ஆனால் அவனின் இந்த ஒழுக்கமும் கட்டுப்பாடுமே அவர்களை பிரிக்க முக்கிய காரணமாக இருக்கப் போகிறது.
முள் மலரும்..
