Rolex 56

56

அன்று இரவு 2 மணி அளவில் ..

கொல்கத்தாவின் பிரதான துறைமுகத்தை ஒட்டிச் சென்ற அந்த இருண்ட, யாருமற்ற மாற்றுப்பாதையில் நள்ளிரவின் கார்மேகங்கள் அடர்ந்து கவிழ்ந்திருந்தன. வானம் தன் இருண்ட மேலாடையால் ஒட்டுமொத்தப் பூமியையும் போர்த்திக் கொண்டது போலக் காற்று கூட இல்லாமல் ஒருவிதப் பயங்கர அமைதி நிலவியது.

மழைச்சாரலும் பனிமூட்டமும் கலந்திருந்த அந்தச் சாலையில், பல டன் எடையுள்ள ஆயுதக் கன்டெய்னரைச் சுமந்து கொண்டு, அதிவேகமாக லாரியை ஓட்டிக் கொண்டிருந்தான் பைரவன். அவனது கைகள் ஸ்டீயரிங் வீலை இரும்புப் பிடியாய் இறுகப் பற்றியிருந்தன. அவனது கூர்மையான கண்கள் சாலையின் ஒவ்வொரு திருப்பத்தையும், பக்கவாட்டுக் கண்ணாடிகளையும் கழுகு போல வேவு பார்த்துக் கொண்டிருந்தன. நெற்றியில் வியர்வை முத்துக்கள் திரண்டு வழிய, மூச்சுக் காற்று வேகமாக வெளிப்பட்டது.

கொல்கத்தா எல்லையில் ரோலக்ஸின் ஆயுதங்களை மீட்பதற்காகப் புறப்பட்டு வந்த அவனுக்கு, ஏதோ ஒரு விவரிக்க முடியாத ஆபத்தின் வாடை கொல்கத்தா துறைமுகப் பகுதியிலேயே அடிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது.

“டமால்…!” திடீரென..வெடிப்புச் சத்தம் கேட்டது .

லாரியின் பின் பக்க இடது டயர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது!

லாரி நிலைதடுமாறி இடப்பக்கமாகச் சாய்ந்தது. கொஞ்சமும் பதற்றமடையாமல் பைரவன் ஸ்டீயரிங்கை இடதுபுறமாகத் திருப்பி லாரியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றான். அவன் பக்கவாட்டுக் கண்ணாடி வழியே பின்னால் பார்த்தான்.

அங்கே… கரிய நிறச் கார்களும்,  ஜீப்புகளும் அதிவேகத்தில் அவனைத் துரத்திக் கொண்டு வந்தன. காரின் கண்ணாடிகள் இறக்கப்பட்டு, வெளியே நீட்டிய தானியங்கித் துப்பாக்கிகள் லாரியின் டயர்களை நோக்கியே தோட்டாக்களின் மழையைப் பொழிந்து கொண்டிருந்தன!

அடுத்த விநாடி… “டமால்..! ” வெடிப்புச் சத்தம்:… இன்னொரு டயரும் வெடித்துச் சிதறியது!

கன்டெய்னரின் கனம் தாங்க முடியாமல் லாரியின் ஒரு பகுதி அப்படியே சாய்ந்து, சாலையில் இரும்பு உரசிப் பொறிகள் பறக்கத் தொடங்கியது. லாரி முற்றிலுமாகத் தலைகீழாகக் கவிழ்ந்து உருளப் போகும் அந்த நெஞ்சை உறைய வைக்கும் செகண்டில்…

“டும்ம்ம்..!… என எதிர்பாராத விதமாக, மற்றொரு பிரம்மாண்டக் கன்டெய்னர் லாரி பக்கவாட்டில் இருந்து சீறி வந்து, பைரவனின் லாரியை உரசியபடியே முட்டுக் கொடுத்து வந்து மோதியது… !

சாய்ந்து விழப் போன பைரவனின் லாரியை, தன் லாரியின் பிரம்மாண்ட இரும்பு பலத்தால் தாங்கிப் பிடித்துக் கொண்டு, அதே அசாத்திய வேகத்தில் அந்தப் புதிய லாரி வீதியை அதிர வைத்தது!

இரண்டு கனரக லாரிகளும் சாலையில் ஈ உரசித் தீப்பொறிகளைச் சிதறடித்தபடி அதிவேகத்தில் சீறிப் பாய்ந்தன.

பைரவன் ஆச்சரியத்துடன் ஜன்னல் வழியே தலை நீட்டி எட்டிப் பார்த்தான்.

அங்கே… முட்டுக் கொடுத்துக் கொண்டு வந்த லாரியின் டிரைவர் சீட்டில், கம்பீரமாக அமர்ந்து ஸ்டீயரிங்கை இடதுபுறமாகத் திருப்பிக் கொண்டிருந்தான் நம்ம கணேஷ்!

துறைமுகத்தின் உயர் அதிகாரியும், ரோலக்ஸின் நிழல் உலக ரகசிய நண்பனுமான கணேஷா கொல்கத்தாவின் இந்த இருண்ட மாற்றுப்பாதையில்?

சற்றும் எதிர்பார்க்காத அந்த நேரத்தில் கணேஷைப் பார்த்த பைரவனுக்கு மாபெரும் குழப்பமும் ஆச்சரியமும் ஏற்பட்டன. இவன் தனக்கு உதவுகிறானா இல்லை தன்னை பிடிக்க வந்திருக்கிறானா ? துரத்துவது இவனின் காவல் அதிகாரிகளோ ?” என குழப்பமடைந்தான் பைரவன்

ஆனால் கணேஷ் தன் வலது கரத்தை உயர்த்தி, தன் கட்டைவிரலைக் காட்டி, ‘நான் பார்த்துக்கிறேன், பயப்படாதே!’ என்று சைகை செய்தான்.

பைரவனின் நெஞ்சில் இருந்த அழுத்தம் லேசானது. அவனது முரட்டு முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்ப, கணேஷ் தனக்கு உதவி தான் செய்கிறான் என நம்பிக்கை வந்தது … பதிலுக்கு பைரவனும் தன் கையை வெளியே நீட்டி, கணேஷைப் பார்த்து கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.

அடுத்த நிமிடம், கணேஷ் பைரவனை நோக்கி வேகமாக சைகையால் எச்சரித்தான்,  ‘லாரியை இடது பக்கமாக ஓரமாகக் கொண்டு போ பைரவா! பின்னாடி பெரிய கூலிப்படை கும்பல் துப்பாக்கிகளோட துரத்திட்டு வருது!’ என்றான் 

பைரவன் பக்கவாட்டுக் கண்ணாடி வழியே பின்னால் இருந்தவர்களைக் கவனித்தான். துரத்தி வந்த கார்களில் இருந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நெருங்கிக் கொண்டிருந்தனர்.

உடனே, பைரவனின் லாரியும் கணேசனின் லாரியுடன் இணைந்தபடியே அந்த மாற்றுப்பாதையில் வேகம் எடுத்தது. இரு பிரம்மாண்ட லாரிகளும் ட்வின்ஸ்போல ஒட்டிக் கொண்டன.

கணேஷின் அசாத்தியமான, துணிச்சலான திறமையால், அந்த இரண்டு இராட்சதக் கன்டெய்னர் லாரிகளும் குறுகிய வளைவுகளில் புயல் போலச் சீறிப் பாய்ந்தன. பின்னால் வந்து வழிமறிக்க முயன்ற எதிரிகளின் கார்களின் பாதையை அந்த இரண்டு லாரிகளும் தங்களது இரும்பு உடலால் முழுமையாக மறித்துத் தடுத்து நிறுத்தினர். இறுதியில், எதிரிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு, எந்தவிதப் பெருத்த அசம்பாவிதமும் இல்லாமல் ஆளில்லாத தனிமையான பழைய தொழிற்சாலைப் பகுதிக்கு அந்த லாரிகள் வந்து தடதடவென நின்றன.

லாரி நின்ற அடுத்த நொடி, பைரவன் தன் கையில் இருந்த மரணத்தின் தூதுவனான அதிநவீன AK-47 துப்பாக்கியோடு லாரியின் கதவைத் தள்ளித் திறந்துவிட்டு வெளியே குதித்தான். அவனது கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன.

துரத்தி வந்த கார்களில் இருந்து முகமூடி அணிந்த கொடூரமான கூலிப்படை கும்பல் கைகளில் நவீன ரக ஆயுதங்களுடன் கீழே இறங்க முயன்றனர். ஆனால், பைரவன் அவர்களுக்கு அந்தச் சிறிய அவகாசத்தைக் கூடக் கொடுக்கவில்லை..!

“டக் டக் டக் டக்…..!

பாங்! பாங்…!”

பைரவனின் துப்பாக்கியிலிருந்து தீப்பொறிகள் தெறிக்க, தோட்டாக்கள் காற்றில் மரணச் சீற்றத்துடன் சீறிப் பாய்ந்தன. எதிரிகள் கொஞ்சமும் எதிர்பாராத இந்த மின்னல் வேகத் தாக்குதலால் நிலைகுலைந்து, சுதாரிப்பதற்குள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சரிந்து விழுந்தனர். பைரவனின் துல்லியமான தோட்டாக்கள் அவர்களின் நெஞ்சையும் தலையையும் துளைத்துப் பிளந்தன. இரும்புச் சாலையில் எதிரிகளின் இரத்தமும் சடலங்களும் சரிந்தன.

அடுத்த விநாடி, கணேஷ் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிறப்பு அதிரடிப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் அங்கு வரவைத்திருந்தான்.

கணேஷ், தன் ஆட்கள் நெருங்குவதை பார்த்ததும், மின்னல் வேகத்தில் பைரவனிடம் வந்து, அவனது காதைத் தொட்டு, “பைரவா! நிலைமை கைமீறிப் போகுது. நீ உடனே இங்கிருந்து ஒதுங்கிக்கோ! எந்த போலீஸ் கண்ணுலேயும் நீ படவே கூடாது! இது ஒருவேளை கிரிமினல் கேஸ் ஆனா உன்னை இங்கிருந்து காப்பாற்ற முடியாது!” என தாழ்ந்த குரலில் எச்சரித்தான்,

“காவல்துறை! யாரும் அசையக் கூடாது! கைகளை மேலே தூக்குங்கள்! அசைந்தால் சுட்டுத் தள்ளுவேன்!” என்று இடிமுழக்கக் குரலில் கணேஷ் கர்ஜித்தான்.

அவனது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, மீதமிருந்த கூலிப்படை கும்பல் அவனது அதிரடிப் படையினர் தங்களது அதிகாரப் பலத்தால் சுற்றி வளைத்துத் தரைமட்டமாக்கி மடக்கிப் பிடித்தனர். 

அதே கணத்தில், தன் சாதுரியமான மூளையைக் கட்டவிழ்த்துவிட்டான் கணேஷ். அங்கிருந்த அமலாக்க அதிகாரிகளை நோக்கி அதிகாரத் குரலில் உத்தரவிட்டான், “கஸ்டம்ஸ் டியூட்டி, சட்டவிரோதக் கடத்தல் வழக்குப் பதிவு செய்யுங்க! துறைமுகப் பகுதியில் இருந்து முறையான அனுமதியின்றி இந்த லாரியில் ஆயுதங்களையும் விலைமதிப்பற்றப் பொருட்களையும் சட்டத்துக்கு எதிராகக் கடத்திச் செல்கிறார்கள். அதனால் தான் இந்தத் தடியர்கள் இவர்களைத் துரத்தி வந்துள்ளனர்!”

கணேஷின் இந்த மாஸ்டர் பிளான் உத்தரவால், அந்தத் துரத்தி வந்த ரவுடிகளும் கூலிப்படைகளும் இப்போது சட்டவிரோதக் கடத்தல் வழக்கில் அதிகாரப்பூர்வமாகக் குற்றவாளிகளாகக் கைது செய்யப்படுவதற்கான கட்டளையை முகாம் காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் செயலில் இறங்கி நிறைவேற்றினர்.

மற்ற சாதாரணக் காவல்துறையினரின் கண்களில் பைரவன் ஒரு சிறு நிழலாகக் கூடப் படாதவாறு, அவனை மிகச் சாதுரியமாகப் பாதுகாத்துக் காப்பாற்றிய கணேஷ், அவனைத் தன் தனிப்பட்ட காரின் பின் இருக்கையில் மின்னல் வேகத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான்.

கார் கொல்கத்தாவின் இருண்ட, யாருமற்ற நள்ளிரவு வீதிகள் வழியே காற்றைக் கிழித்துக் கொண்டு, கணேஷின் கண்களுக்கு மட்டும் தெரிந்த பாதுகாப்பான இல்லத்தை நோக்கிச் சுவடு தெரியாமல் பறந்து சென்றது!

கணேஷின் harbor quarters…  

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான் பைரவன். இத்தனை பெரிய விபத்தில் இருந்தும், எதிரிகளின் தாக்குதலில் இருந்தும் தப்பிய நிம்மதி அவனிடம் இருந்தது.

எதிரே அமர்ந்திருந்த கணேஷைப் பார்த்த பைரவனின் முகத்தில் ஒரு புன்னகை வந்தது, பல வருடங்கள் கடந்த சந்திப்பு இது … அதே மகிழ்ச்சியுடன் கணேஷிடம் பேசத் தொடங்கினான்… 

“டேய் கணேஷா … உன்னை இங்க நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை! அதுவும் நீ வந்து இந்த ஆபத்தான நேரத்துல உதவி செய்வேனு நான் கனவுல கூட எதிர்பார்க்கவே இல்லை. ஆமா… அந்த நேரத்தில் நீ எப்படி கரெக்டா வந்த? ரோலக்ஸ் உனக்கு ஏதாவது தகவல் சொன்னானா? இல்ல வேற ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று பைரவன் ஆவலுடன் வினவினான்.

ஆனால்… கணேஷின் முகமோ முற்றிலுமாக வாடி இருந்தது! அவனது கண்களில் ஒருவிதக் சோகமும், பேரதிர்ச்சியும் தேங்கிக் கிடந்தன.

கணேஷின் முக மாற்றத்தைக் கண்டு, பைரவனுக்குள் ஏதோ ஒரு கெட்ட சகுனம் தட்டியது. அவனது புன்னகை மறைந்தது. பைரவன் நிமிர்ந்து அமர்ந்து, அவனது கண்களை உற்றுப் பார்த்தவன், “கணேஷ்… என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க?” என்று கேட்டான்.

கணேஷ் கனத்த இதயத்துடன் பேசத் தொடங்கினான், “பைரவா… நான் சொல்லப்போற விஷயத்தை ரொம்ப நிதானமாக் கேள். அவசரப்படாதே… அதே நேரம் ஏதும் பதற்றப்படாடே! நான் சொல்ற விஷயத்தை முழுசா கேட்டு முடி…”

அறையில் ஒரு கொடூரமான அமைதி நிலவ,  கணேஷ் மேலும் தொடர்ந்தான், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் எனக்கு ரோலக்ஸ் கிட்ட இருந்து சாட்டிலைட் மூலமா ஒரு ரகசியத் தகவல் வந்தது பைரவா! ரோலக்ஸ்டைய நிலைமை இப்போ எப்படின்னு தெரியல… அவன் இப்போ எதிரிங்ககிட்ட மாட்டிக்கிட்டு இருக்கான்!”

பைரவனின் உடம்பு ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது.

“அந்த ACP ஷர்மாவோட ஆளுங்க மூலமா… ரோலக்ஸ், அவனோட குடும்பம் முழுவதையும் கைப்பற்றி இருக்காங்க! அங்க என்ன நடக்கப் போகுது, என்ன ஏதுன்னு எதுவுமே தெரியாது. அங்க தனக்கு வரப்போற ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த ரோலக்ஸ்… உடனே சாட்டிலைட் போன் மூலமா எனக்கு ல Morse Code ல தகவல் அனுப்பி, உன்னைக் காப்பாற்றச் சொல்லிட்டான்!”

கணேஷின் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுக்க, “அவனுக்கு வைத்த பொறி போல உனக்கும் கொல்கத்தாவுல ஏதோ ஒரு ஆபத்து நேரிடும்னு அவன் நல்லாவே உணர்ந்திருக்கான் பைரவா! அதான் என்னை அனுப்பி உன்னைக் காப்பாற்றச் சொன்னான். ரோலக்ஸ் அனுப்பிய அந்தச் செய்தியை அப்படியே சொல்றேன் கேளு…

‘கணேஷ் … இனிமேல் இங்க என்ன நடக்குதுன்னு என்னால் இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. அதனால் பைரவனைக் காப்பாற்று! அதே நேரம், பைரவன் கிட்ட எனக்கு எதிராகவே எல்லாமே நடந்துக்கச் சொல்லு! ஏதும் எனக்குத் தோழமை கொடுத்தபடி இனிமேல் நடக்க வேண்டாம்.

இங்கு நடக்கும் விஷயத்துக்கெல்லாம் பைரவன் தான் ஒரு காரணமாய் இருப்பது போலப் பலர் நம்பட்டும்! ஆனால் பைரவன் என்னுடைய கடத்தல் சாம்ராஜ்யத்தைத் தொடரட்டும்! பைரவனை என்னுடைய சாம்ராஜ்யத்தை ஆளச் சொல்லு!

என்னைப் பற்றித் தகவல் எதுவும் இல்லைனாலும் பரவாயில்லை… என்னால் முடியும் போது நான் கண்டிப்பாகத் தகவல் கொடுப்பேன். அப்படி ஏதும் தகவல் வரவில்லை என்றாலும்… என்னைப் பற்றித் தேட வேண்டாம்!

பைரவன் சந்தேகப்பட்டபடி… அந்த ஏசிபி சர்மா நல்லவன் கிடையாது! அவன் கிட்ட உஷாரா இருக்கச் சொல்லு. அவன் உயிர் பிழைத்து வருவானா வரமாட்டானா தெரியாது… ஆனா வந்தாலும் அவனுக்கு நட்புடன் நடிக்க சொல்லு!

அதே நேரம்… இங்கு நடந்த விஷயம் யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் கணேஷ்! நீயும் பைரவன் கூட இப்போவே விசாகப்பட்டினம் துறைமுகத்துக்குப் போயிடுங்க… அங்கேயே இருங்க ரெண்டு பேரும்!

இது அவசர எச்சரிக்கை! மேற்கொண்டு என்னால் எதுவும் சொல்ல முடியாது… இது மட்டும்… இது மட்டும்… ரோலக்ஸ்’

கணேஷ் அந்தச் செய்தியைச் சொல்லி முடித்தான்.

“இதுதான் பைரவா… ரோலக்ஸ் கிட்ட இருந்து எனக்கு வந்த கடைசி சாட்டிலைட் தகவல்! தகவல் வந்த உடனே நீ எங்க இருக்கிறாய்ங்கிற விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு… நான் ஓடோடி வந்து உன்னைக் காப்பாற்றினேன்!”

கணேஷ் சொல்லி முடிக்க… பைரவனின் கண்கள் அசாத்தியமாக விரிந்தன! அவனது இதயம் உறைந்துபோனது!

தன் ஆருயிர் நண்பன்…… தன் குடும்பத்தைக் காப்பாற்ற நடுக்கடலில் மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது, தான் எதையுமே அறியாமல் இங்கே பாதுகாப்பாக இருப்பதை நினைத்து அவனது நெஞ்சம் வெடித்தது!

உடைந்த குரலில், கதறலின் விளிம்பில் பைரவன் கேட்டான்.. “அப்போ… ரோலக்ஸ்?!”

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!