மலர் -19

மலர் -19

 

காரில் இருவரும், 

“அமிர்தா! நீ வந்து கொஞ்சம் தாத்தா பாட்டியா  பாக்க முடியுமா? அவங்க ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. தன்னுடைய விஷயங்களை பற்றி அவனால் சொல்ல  முடியவில்லை. அவனுக்கு அசிங்கமாக இருந்தது. வாய் கூசியது 

நிச்சயம் நடந்தது, போதை மருந்து தடுப்பு பிரிவில் இருந்து வந்தது இதை பற்றி மட்டும் சொன்னான். அமிர்தாவால் இதை நம்ப கூட முடியவில்லை. அவளுக்கு உடனே பெரியவர்களை பார்க்க வேண்டும் போல இருந்தது. அவர்களும் இவளைத்தான் எதிர் பார்த்தார்கள் போலும். ஆனந்தம் இல்லத்திற்கு போனதுமே அவர்களின் அறைக்கு ஓடினாள். 

“வாடி கண்ணா! எங்க நிலைமையை பார்த்தியா?” பாட்டி ஓ வென கதறினார் . தாத்தா  எதுவும் பேசாமல் அமைதியாக ஜன்னலின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு இருந்தார். பாட்டியை வயிற்றோடு கட்டிக் கொண்டாள் . எத்தனை அழுதாலும் முதியவரின் மனம் சமாதானம் ஆகவில்லை. பாட்டியின் தலை முகம் கோதியவள், வேகமாக சமையல் அறைக்கு சென்று அனைவருக்கும் ஹார்லிக்ஸ் கலந்து கொண்டு வந்தாள் . தாத்தாவை அதட்டி குடிக்க வைத்தாள் . பாட்டிக்கு சொட்டு சொட்டாக வாயில் ஊட்டினாள். ஆனந்தும்  எதுவும் சொல்லாமல் குடித்து விட்டான். தானும் நேற்று முதல் எதுவும் உண்ணவில்லை என்பது கூட அவளுக்கு மறந்து தான் போய் இருந்தது. 

‘தாத்தாவுக்கு ஒன்று நன்றாகவே தெரிந்தது, இவ  தான் இந்த வீட்டோட உயிர்ப்பு. இவ  இங்கதான் இருக்கனும்.’ 

“நீயும் ரொம்ப சோர்வா இருக்க. போ நீயும் ஏதாவது குடி” அவள் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சமயல் அறைக்கு விரைந்தாள். அவள் எதையும் குடிக்கவில்லை.

அவள் அறைக்கு திரும்பினாள். 

“அப்பா போய்ட்டாங்களாடி அம்மு ? பாட்டிதான் கண்ணீருடன் கேட்டார். அப்படியும் எனக்காக வந்தியா? ஐயோ கடவுளே இது என்ன சோதனை? நெஞ்சில் அடித்துக் கொண்டார். நல்லவங்களை நல்ல இருக்கவே விட மாட்டியா?”

“ஐயோ பாட்டி !ப்ளீஸ் அழாதீங்க..ப்ளீஸ்..”

மீண்டும் அவரை நெஞ்சில் சாய்த்து அவளே சமாதானப்படுத்தினாள் . அவளின் அழுதழுது வீங்கி இருந்த கண்களையும் முகத்தையும் பாக்க ஆனந்திர்க்கே பாவமாகத்தான் இருந்தது. சற்று நேரம் கழித்து ,

“ஆனந்த்  இவளை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு” தாத்தாதான் சொன்னார். 

செல்லும் வழியில் நீண்ட மௌனம். காரில் தலை சாய்ந்து கண் மூடி இருந்தாள் . இரண்டு நாட்களாக தூங்காமல் இருந்தது, கண்ணை அழுத்தியது. ரோடு சரியில்லாத இடத்தில் அவள் தலை லேசாக காரில் முட்டியது. தன்னையும் அறியாமல் அவளை தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான். இதே கரிசனம் எப்போதும் இருக்குமா? 

“வீடு வந்துருச்சு அமிர்தா” அவன் குரல் கேட்டதும் கண்ணை திறக்க முடியாமல் திறந்தாள். 

“டேக் கேர்” சொல்லி விட்டு கிளம்பினான். வீட்டில் அவள் விஷயத்தை சொன்னதும் அனைவருக்கும்  பேரதிர்ச்சி. விஷயங்களை கேள்வி பட்டதும் கேட்க முடியாதவளாக அவள் அன்னை சிவ சிவா என்று காதுகளை மூடிக் கொண்டார். யாரோ என்று  அவர்கள் யாராலும் ஆனந்தின்  குடும்பத்தை நினைக்க முடியவில்லை.

மறு  நாளே முதலாளியே வந்து தன் ஆட்கள் நடந்து கொண்ட விததிற்கு மன்னிப்பு கேட்டு பத்திரங்களை  கொடுத்து விட்டு போனார். உறவு முறையில் யாருக்கோ உடல் நலமில்லை என்று இனியா  ஊருக்கு சென்றிருந்தாள் . அதுவும் தவிர்க்க முடியாமல்தான்.

என்னதான் இருந்தாலும் ஆனந்திடம் இருந்து பணம் வாங்குவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள  முடியவில்லை. அமிர்தாவின் அன்னை கழுத்தில் இருந்த தாலியை அவிழ்த்து, “முரளி இதை வித்துடு என்ன வருதோ அதை  ஆனந்தன் சாரு கிட்ட குடுத்துடு.”

“ அம்மா என்னம்மா இது? இதுக்கு சடங்கு பண்ணாம? ஏம்மா இப்டி பண்ண?”

“ என்னடி? என்ன பண்ணேன் ? உங்கப்பா பண்ணத விடவா? வீட்டுல கல்யாணத்துக்கு பொண்ண வச்சுக்கிட்டு இப்டி ஊரு ஊரா  கடனை வாங்கி ., பாத்தல்ல ? நாம ஒவ்வொருத்தரையும் எப்படி பார்த்தாங்கன்னு. இது கழுத்துல  ஒரு பொண்ணுக்கு இருக்கறதே  பாதுகாப்புக்கத்தான் . எல்லாத்தையும் விட்டுட்டு உங்கப்பன் பின்னாடி வந்தேன். எனக்குன்னு என்ன கேட்டேன்? உங்கள கரை சேக்க வேணாம் ? அது எங்களோட பொறுப்பில்லை? இப்டி யாரோ ஒருத்தன் ஓடிப் போனவனுக்காக பணத்தையும் குடுத்து உசுரையும் குடுத்துட்டு போய்ட்டாரே மனுஷன். அவருக்காக நான் இதை வச்சுக்க வேணாம். என்னன்னவோ போச்சு. எல்லாம் போச்சு, இதுவும் போச்சு. முந்தானையில் மூக்கை சிந்திக் கொண்டார். 

 இனிமே என்ன? இதோ இவன் வேலைக்கு போகற வரைக்கும் உன் தலைலதான் எல்லா  பொறுப்பும். இதோ இது என்ன பண்ண போகுதோ ? அப்பா அம்மா கட்டி வச்சிருந்தா அண்ணனுங்க வீட்டுலையாவது போய் நிக்கலாம் . அதுக்கும் வழி இல்ல. போடா நீ போய் சொன்னதை செய்” 

 

பாவமாக நின்றிருந்த முரளி சரி என்று கிளம்பினான். அவனை வழி நிறுத்தி, “இதை அடகு வை. விக்க வேணாம். அம்மா கிட்ட எதுவும் சொல்ல வேணாம்” 

“சரிக்கா !”

 மறு  நாள் மாலைதான் ஆனந்தை பார்க்க முடிந்தது. எந்த முன் அறிவிப்பும் இன்றி வந்தவர்களை முதலாளி பார்க்க ஒத்துக் கொண்டது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதுவும் சாதாரண உடையில் எந்த அலங்காரமும் இல்லாமல் பரிதாபமாக வந்தவர்களுக்கு!

 இவள்தான் தன்னுடைய வருங்கால முதலாளியாக வர போகிறவள் என்பது அவர்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இரண்டு லட்சங்களை கவனமாக பையில் கொண்டு வந்திருந்தார்கள்.

” வா முரளி! வா அமிர்தா ! எப்படி இருக்கீங்க? ஓரளவு சமாதானம் ஆச்சா?” அவர்களை அமரச் சொன்னவன் முரளி அருகில் வந்து நின்றுக் கொண்டான்.  

“எப்படியும் நீங்க ரெண்டு பேரும்  மீண்டு  வந்துதான் ஆகணும். அதுலையும் இனிமே உனக்குத்தான் பொறுப்பு, நீதான் பார்த்துக்கணும்  வீட்டுல எல்லாரும் பொண்ணுங்க நீதான் ஆம்பிள , இனிமே எல்லாத்தையும் சிங்கிளா ஹாண்டில் பண்ண கத்துக்கணும். தைரியமா பேஸ்  பண்ணனும்.

சொல்லறது ஈஸி. ஆனா அது எவ்ளோ டப் , எனக்குத் தெரியும். அட்வைஸ் யாரு வேண்ணாலும் பண்ணலாம். ஆனா உதவி? உனக்கு எந்த உதவி வேணாலும் நான் இருக்கேன். பயப்படாத” தோளில்  தட்டிக் கொடுத்தான். முரளியும் அந்த வார்த்தைக்காகத்தான் ஏங்கினானோ ? சட்டென ஆனந்தின் இடுப்பைக்  கட்டி கொண்டான்.  தேம்பி தேம்பி அழுதவனின் தலையை இவன் கோதி விட்டான். 

 தலை குனிந்திருந்த அமிர்தாவுக்கும் கண்களில்  இருந்து சில கண்ணீர் முத்துக்கள் விழுந்தன.  பாவம் அவளை கவனிப்பார்த்தான் யாரும் இல்லை. தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள் . ஆனந்த், “ஆசையா இருக்கற அப்பாவை இழக்கறது எவ்ளோ பெரிய வலின்னு எனக்கு தெரியும்” முரளியை சமாதானம் செய்து கொண்டிருந்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே முரளியின் அழுகை நின்றது. 

“ரொம்ப தேங்க்ஸ் சார்”

“ம்ம்! இட்ஸ் ஓகே” முரளியின் தோளில்  தட்டினான். 

 இவர்கள் வந்த வேலை  முடியவில்லை. ஆனால்  ஏதோ பெரிய மனதைரியம் வந்தது போல இருந்தது. நாம் கஷ்டத்தில் இருக்கும்போது உனக்காக நான் இருக்கிறேன் என்ற வார்த்தையே பெரிய தெம்பு கொடுக்கும். அமிர்தாவின் குடும்பத்திற்கென்று எந்த உறவுகளும் இல்லை. ஆனால் அருண் , இனியா , ஆனந்த்  இவர்கள்தான் இப்படிப்பட்ட தோழமைதான் அவர்களின் மிக பெரிய சக்தி. பல நேரங்களில் நம் வாழ்க்கையிலும் இது போல நடப்பது சகஜம்தானே ?

 

 அன்று அமிர்தா ஆனந்தின் வீட்டுக்கு  வந்தபோது அமைதியாக இருந்த தாத்தா அன்று முழுவதுமே அமைதியாகத்தான் இருந்தார். அதன் அர்த்தம் அவர் ஏதோ ஒரு பெரிய முடிவு எடுக்கப் போகிறார் என்பதே. அவர் ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது அவர் அமைதியை யாரும் கெடுக்க கூடாது. அவர் எடுத்த முடிவு அமிர்தாவுக்கும் ஆனந்துக்கும்  திருமணம். 

 இதைச் சொன்னபோது ஆனந்த்  வானுக்கும் பூமிக்கும் குதித்தான். அவள் தந்தை  இறந்தது  ஆனந்திற்கு வருத்தமே. இது ஒரு சாதாரண மனிதாபிமானம். இரக்கம். ஆனால்  அதையே சாக்காக வைத்துக் கொண்டு இவர்களின் இரக்க சுபாவத்தை  வைத்து அவளே அந்த வீட்டின் உள்ளே வருவதோ அல்லது உரிமை கொண்டாடுவதோ இயலாத காரியம். எந்தக் காரணத்திற்காகவும் அவளை நான் திருமணம் செய்யமாட்டேன் என்று அடம் பிடித்தான்.

பாட்டியோ, “முதல்ல அவளை இங்க கூட்டிகிட்டு வரணுன்னு நான் ஆசப்பட்டது  என்னவோ உண்மைதான். ஆனா எப்ப அவன் ரெஜித்தாவ விரும்ப ஆரம்பிச்சானோ அதுக்கு மேல அது சரி இல்லைன்னு விட்டுட்டேன். அதுக்கும் மேல நம்ம வீட்டுல இவ்ளோ பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு. அந்தப் பொண்ண ஜெயில்ல வச்சுருக்காங்க. நம்ம வீட்டுல போலீஸ் ரெய்டு. அமிர்தா வீட்டுல ஏகப்பட்ட பிரச்சனை. அவங்க அப்பா இப்போதான் இறந்து போய் இருக்காரு. இவனுக்கும் மனச மாத்திக்க கொஞ்சம் டைம் வேணாமா?” என்றார்.

அதற்குத் தாத்தா, ” நீ சொன்னது எல்லாமே சரிதான்” என்றார்.

“என்னங்க இது ? திடீர்னு ஏன் இந்த முடிவெடுத்தீங்க? “

“ஏண்டி! நீ இவ்ளோ யோசிக்கும்போது நான் யோசிக்க மாட்டேனா ? நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப வயசாகிடுச்சு. இவனுக்கு டைம் குடுத்தா  மறுபடியும் இவன முருங்கை மரத்திலிருந்து கீழ இறக்க முடியுமா? ஏற்கனவே அவங்க அம்மா விஷயத்துல ரொம்ப அடிபட்டிருக்கான். இப்போ இந்தப் பொண்ணு வேற. நாளைக்கு நமக்கு ஏதாவது ஆகிடுச்சுனா இவன  மடில சாய்ச்சு ஆறுதல் சொல்லவாவது ஒருத்தி வேணாமா? அவனுக்கு அது புரியாது. அதே மாதிரி அமிர்தா வீட்டுல ஒரு துக்கம் நடந்திருக்கு. சுபஸ்யசீக்கிரம். அடுத்து அவங்களுக்கு இப்போ ரொம்ப பெரிய பண கஷ்டம். நாம என்னதான் உதவி செய்தாலும், அதுல ஒரு உரிமை இருக்காது. ஒரு இந்த மாதிரி நிலமைல நாம் அவங்களுக்கு செய்யற உதவி அந்தப் பொண்ணுக்கு கெட்ட பெயரைக் குடுத்துடக் கூடாது. அவர்களுக்குத் தேவை சில லட்சங்கள்தான். ஆனந்துக்கு இப்போ இருக்கற நிலமைலை அது ஒரு விஷயமே இல்ல. அதனால் அவங்களோட எல்லா பிரச்னையும் தீர்ந்துடும். எல்லாத்துக்கும் மேல ஆனந்துக்கு  மனசுக்குள்ள இந்தக் கணவன் மனைவி உற்வுன்னாலே ஒரு வித பயம் இருக்கு. ரெஜிதாவோட அழகுல மயங்கினானேத் தவிர அவன் மனசால தாம்பத்ய உறவுக்குத் தயாரானான்னு தெரியல என்று தாத்தா தான் யோசித்த விஷயங்களை விளக்கினார்.

” நீங்க சொல்லறது எல்லாம் சரி . ஆனால் இவனுக்கு ஸ்டேடஸ்  பைத்தியம் புடிச்சுருக்கே? அதுக்கு நாம என்ன செய்ய?”

“இவன் எடுத்த உடனே அமிர்தாவ ஏத்துக்க மாட்டான். நாம தான் அவங்கள ஒன்னு சேர்க்கணும்.”

 

முள் மலரும் ..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!