கெட்டவன் 11

“அனு,” என்று அவளின் கன்னங்களை பற்றி, முகத்தை நிமிர்த்தினான் வெற்றி.

தைரியமாக, அவளின் அருகில் நெருங்கி அமர்ந்தான்.

“ஐயோ, அம்மா வந்துருவாங்க, எழுந்திரிங்க கெட்டவன் சார்,” சிணுங்கலாக வெளி வந்தது அவளின் வார்த்தை.

அவன், இமைக்காமல் அவளை பார்த்தான். இன்னும் நெருங்கி அமர்ந்தான்.

இவளுக்குதான், அவனை நெருங்கி அமர்ந்ததில் உடல் சிலிர்த்தது.

அவன், சட்டென எழுந்து நின்றான்.

இவள், புரியாமல் அவனை பார்க்க, சுபத்ரா கையில் டீயோடு வந்தார்.

“பர்ஸ்ட் டைம் எங்க வீட்டுக்குள்ள வந்துருக்கிங்க தம்பி, டீ குடிங்க,” என்று அவனிடம் நீட்டினார் சுபத்ரா.

வெற்றியின் இதழ்களில், குறு நகை. டீயை வாங்கிக் கொண்டான் மறுக்காமல்.

“ஆமா, ஆமா, பர்ஸ்ட் டைம்தான்,” என்று முணு முணுத்தாள் அனு.

அவளின் முணு முணுப்பு, இவனுக்கு கேட்டது. அவளின் உதடுகள், இவனை சுண்டி இழுத்தது.

சுபத்ரா இருப்பதால், அமைதியாக இருந்தான்.

“அனுவுக்கு என்னாச்சிக்கா?” என்று மறுபடியும் அதிலேயே வந்து நின்றான் கெட்டவன்.

“ஹய்யோ! திரும்பவுமா?” என்று நினைத்து விட்டு, சுபத்ராவை பார்த்தாள் அனு.

“ஒண்ணும் இல்லை தம்பி, பொண்ணுங்களுக்கு வர்ற வயிற்று வலிதான்,” என்று நேரடியாக கூறிவிட்டார் சுபத்ரா.

இவளுக்குதான், மானம் போவது போல் இருந்தது. இதில், அவனின் குறு குறு பார்வை அவளுக்கு வயிற்றில் குளிர் பரவுவது போல் தோன்றியது.

அவன், இதழ் கடித்து சிரிக்கும் போது பேரழகாக இருப்பது போல், அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு.

“டீ சூப்பரா இருக்குது அக்கா,” என்றான் வெற்றி.

“தேங்க்ஸ் தம்பி,” புன்னகையோடு டீ கப்பை வாங்கிக் கொண்டார் சுபத்ரா.

“நீங்க நல்லா சமைக்கிறிங்க, உங்களுக்கு சொந்தமா ஹோட்டல் ஒண்ணு வச்சி தரேன், நீங்க பொறுப்பா பார்த்துக்கிறீங்களா?” என்று கேட்டான்.

சுபத்ராவின் விழிகள், பெரிதாக விரிந்தது. அதை விட, அனுவின் விழிகள் அதிர்ச்சியில் இருந்தது. அவனை, இமை சிமிட்டாமல் அவள் பார்க்க, “டிங்” என்று ஒற்றை கண்ணை அடித்தான் கெட்டவன்.

“அடப் பாவி,” என்று முணு முணுத்தாள் அனு.

“நான் எப்பவும் ரவி வீட்டுலதான் சாப்பிடுவேன், காலை, மதியம் ரெண்டு நேரமும் அங்கேதான். ஆனால், நீங்க இங்கே வந்த பிறகு எப்பவும் உங்க வீட்டுலதான் சாப்பிடுறேன், நிஜமா நல்லா இருக்குது சாப்பாடு,” என்றான்.

சுபத்ராவுக்கு, விண்ணில் பறப்பது போன்று ஒரு உணர்வு. அதிலிருந்து வெளியே வந்தவர், “நீங்க சொன்னதே போதும் தம்பி,” என்றார்.

அனுவுக்கு இப்பொழுதுதான், மூச்சு காற்று சீராக வெளி வந்தது.

“சரி, உங்க விருப்பம்,” என்றவன், அனுவை பார்த்தான்.

“அனுவை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகணுமா?” என்று கேட்டான்.

“இல்லை தம்பி, வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுத்தா சரி ஆயிடுவா,” என்றார் சுபத்ரா.

“ம்ம், சரிக்கா, நான் கிளம்புறேன்,” என்றான்.

“ஹான், சரி தம்பி,” என்றவர் அவன் கிளம்பும் பொழுது வாசல் வரை சென்று வழி அனுப்புவோம் என்று காத்திருக்க, “குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்று கேட்டான்.

“ஹான்…. இதோ கொண்டு வரேன்,” என்று சுபத்ரா கிச்சனுக்கு ஓட, அனுதான் அவனை புரியாமல் பார்த்தாள்.

“இப்போதான டீ குடிச்சீங்க? உடனே தண்ணியா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

அவளை நெருங்கி வந்தவன், அவளின் பின்னந்தலையில் கை வைத்து, முகத்தை நிமிர்த்தி, அவளின் செம்பருத்தி இதழ்களை கவ்விக் கொண்டான்.

வன்மையான முத்தம்தான் அது, ஆனால், அவளுக்கு வலியை தரவில்லை.

முத்தமிட்டு விலகியவன், அவளின் விழிகளில் தன் விழிகளை கோர்த்தான்.

“உண்மையை சொல்லு டி, லிப்ஸ்ல எதாவது அப்ளை பண்ணியா?” என்று இறங்கிய குரலில் கேட்டான்.

“ஹான்….” புருவம் சுருக்கினாள் அனு.

“லிப்ஸ்டிக் போட்டுருக்கியா டி?” என்றான்.

“இ… இல்லை..” என்றாள் திக்கி திணறி. அவளின் முகமும், உதடுகளும் பிங்க் நிறத்தில் மாறி விட்டது.

“லிப்ஸ்டிக் எதுவும் போடாத, இந்த டேஸ்ட்தான் எனக்கு பிடிச்சிருக்குது,” என்றான்.

உதட்டை கடித்து, வெட்கத்தை மறைத்தாள் அனு. அதற்குள் சுபத்ரா வர, அவர் பார்ப்பதற்குள் அனுவை விட்டு விலகி நின்று விட்டான்.

“இந்தாங்க தம்பி தண்ணி,” அவனிடம் குவளையை நீட்டினார்.

“டீ குடிச்சிட்டு தண்ணி குடிக்கிறது என்னோட பழக்கம், அதான், உங்ககிட்ட தண்ணி கேட்டேன். ஆனால், உங்க டீ டேஸ்ட் கொஞ்ச நேரம் அப்படியே இருக்கட்டும், அதுனால இப்போ தண்ணி வேண்டாம்,” என்று கூறி சென்றவனை புன்னகையோடு பார்த்தார் சுபத்ரா.

அனுவுக்குதான், அவன் கூறியது புரிந்ததும், அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.

தன்னுடைய உதட்டை தொட்டு பார்த்துக் கொண்டிருந்தவள், சுபத்ராவின் கேள்வியில் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

“அம்மா நல்லா டீ போடுறேனா அனு? நிஜமா நல்லா இருக்கா டி? அந்த தம்பி நல்லா இருக்குனு சொல்லுறாரு,” என்று நம்ப முடியாமல் மகளிடம் கேட்க, “ஹய்யோ அம்மா! கெட்டவன் உனக்கு ஐஸ் வைக்கிறாருன்னு எனக்கு தோணுது, எதுக்கும் நீ கொஞ்சம் உஷாரா இரு,” என்றாள் அனு.

“எனக்கு ஏன் டி ஐஸ் வைக்கணும்? நான் போடுற டீயை நீயும், உன் அப்பாவும் வேணும்னா குடிச்சிட்டு கிண்டல் பண்ணி பேசுவீங்க, அந்த தம்பி புகழ்ந்து சொல்றாரு, அப்போ என்னோட டீ நல்லாதான் இருக்குது,” என்று கூறிவிட்டு சென்றார் சுபத்ரா.

சுபத்ரா சென்றதும், மறுபடியும் தன் உதட்டைத் தொட்டு பார்த்தாள் அனு.

அவன் முத்தம் தந்த இடம், குறு குறுப்பாக இருந்தது.

அவளை பொறுத்தவரை, அவன் கெட்டவன். கெட்டவனுக்கு கொஞ்சம் குடிப் பழக்கம் இருக்கிறது, வாங்கிய பணத்தை திரும்ப தரவில்லை என்றால் அடிப்பான், மிரட்டுவான், என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

அவனின் முத்தத்தில் மயங்கியவள், அவனின் உண்மை முகம் தெரிந்தால் அவனை ஏற்று கொள்வாளா? இல்லை நிராகரிப்பாளா?

****

அனுவை பார்த்து விட்டு, வெகு நேரம் கழித்துதான் வெற்றி ஆபிஸ்க்கு சென்றான்.

அது வரை, ரேவதி அவனுக்காக ஆபிஸ்ஸில் காத்திருந்தாள்.

அவளின் கணவன், தரையிலேயே கிடந்தான்.

வெற்றியை பார்த்ததும், ரேவதி வேகமாக எழுந்தாள்.

அவன், அவளை தாண்டி சென்று, நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

“ரவி,” என்றான் சத்தமாக.

ரவி, ரேவதியின் கணவன் மேல் தண்ணீரை ஊற்றினான். அவன், அலறி அடித்துக் கொண்டு எழுந்தான்.

“ரேவதியின் கணவன், வெற்றி,” என்றான் வெற்றி சிரிப்போடு. “எப்படியாவது மனைவியை வைத்து பேசி, ஒரு பத்தாயிரம் கறந்து விடலாம்,” என்று நினைத்தான்.

ஆனால், அதற்கு மாறாக அவனின் மூக்கில் ஒரு குத்து விட்டான் வெற்றி.

அவனின் மூக்கு உடைந்து, குபு குபுவென்று ரத்தம் கொட்டியது. ரேவதி, அவனின் அருகில் துள்ளி ஓடி வந்தாள்.

“இங்கே பாரு ரேவதி,” என்ற வெற்றியின் குரலில் கடுமை அதிகமாக இருந்தது.

இவளுக்கு, உடம்பு நடுங்கியது.

“உன் புருஷன் ஏற்கனவே வாங்குன பணத்துக்குதான், நான் உன் வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். இப்போ மறுபடியும் உன் புருஷன் என் ஆபிஸ் வாசல்ல வந்து நிக்குறான். நானே உன்னை பாவம் பார்த்து, உன் வீட்டுக்கு வர்றதை நிறுத்திருக்கேன், அது உனக்கும் நல்லா தெரியும். இப்போ இவன் தினமும் வந்து, பணம், பணம்னு கேட்கிறான், இவனை என்ன பண்றது,” என்று கேட்டான்.

வெற்றி, பற்களை கடித்த சத்தம் வெளியே கேட்டது.

அவள், கண்ணீர் தேங்கியிருந்த விழிகளோடு அவனை பார்த்தாள்.

“உனக்கு உன் புருஷன் வேணுமா?” அழுத்தமாக கேட்டான் வெற்றி.

ரேவதி, அவனின் கேள்வியில் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.

“எ… என்ன சொல்றிங்க? எனக்கு புரியல,” திக்கி திணறி கேட்டாள் ரேவதி.

“உனக்கு நான் ரெண்டு ஆப்சன் தரேன், ஒண்ணாவது ஆப்சன், இவனை நீ விவாகரத்து பண்ணிரு,” என்றவனிடம், “என் பிள்ளைங்க அப்பாவை பற்றி கேட்டா, நான் என்ன சொல்லுவேன், இவன் பாசமில்லாத அப்பனா இருக்கலாம், ஆனால், என் பிள்ளைங்க இவன் மேல பாசமா இருக்குது, வீட்டுக்கு வந்ததும் இவனைதான் தேடுதுங்க,” என்று விசும்பினாள்.

“ரெண்டாவது ஆப்சன், இவனை நான் கொன்னு புதச்சுறேன், பிள்ளைங்க கேட்டா, குடிச்சிட்டு லாரில விழுந்து செத்துட்டதா சொல்லு,” என்றான்.

“ஹய்யோ!” பதறினாள் ரேவதி.

ரேவதியின் கணவனுக்கு, உயிர் பயம் வந்து விட்டது.

“இனிமே நான் உன் வீட்டுக்கு வர மாட்டேன் ரேவதி, நீ உன் புருஷன் வாங்குன பணத்தையும் தர வேணாம், உன் வீட்டுல தையல் மிஷின் இருக்குது, நான் வரும் போது கவனிச்சிருக்கேன், உனக்கு டைலர் சாப் ஓபன் பண்ணி தரேன், நீ உன் பிள்ளைங்களோட சேர்ந்து சந்தோஷமா இரு, இவன் உனக்கு வேண்டாம்,” என்றான்.

ரவிதான், வெற்றியை புதுசாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் புது மாற்றம், ரவிக்கு பிடித்திருந்தாலும், எதனால் இப்படி மாறிக் கொண்டிருக்கிறான் என்று புரியவில்லை.

“வேணாம், நீங்க எனக்கு எந்த உதவியும் பண்ண வேணாம், அப்படி நீங்க எனக்கு உதவி பண்ணீங்கனா… அது நீங்க என்னோட ஒண்ணா இருந்ததுக்கு நீங்க கொடுக்குற விலை, என் புருஷன் வாங்குன கடனுக்கு, நான் என்னை உங்ககிட்ட அடகு வச்சிட்டேன், போதும், நீங்க தர்ற பணத்துல நான் என் தேவைக்கு எதாவது செஞ்சிகிட்டா, சாகுற வரைக்கும் என்னால அதை மறக்க முடியாது,” என்றவள் கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.

அனுவின் கண்ணீரை பார்க்கும் போது மட்டுமே, அவனின் உள்ளம் நொறுங்குகிறது. ஆனால், இவள் அழுதும் வெற்றி மரம் போல்தான் நின்றிருந்தான்..

“ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க வெற்றி, இவனை உயிரோட விட்டுடுங்க, ஆனால், இவன் திரும்பி எங்க வாழ்க்கையில மட்டும் வராமல் பார்த்துக்கோங்க, இவன் வீட்டுல இருந்து பணத்தை எடுக்காமல் இருந்திருந்தானா, நானே அவன் வாங்குன பணத்தை உங்களுக்கு திருப்பி கொடுத்திருப்பேன், ஆனால், அதுக்கு வழி இல்லாமல் போயிடுச்சி, என்னை அடிச்சி பிடுங்கி, பணத்தை எடுத்துட்டு போயிடுவான்,” என்றாள்.

“இனிமே இவன் உன் வாழ்க்கையில இருக்க மாட்டேன், நீ போ,” என்றான் வெற்றி.

இருவரின் உரையாடல்களையும் கேட்டுக் கொண்டிருந்த ரேவதியின் கணவன், “ரேவதி, ரேவதி,” என்று அவளின் பெயரை உருகி உருகி உச்சரித்தான்.

ரேவதி, திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள் அவனை.

மர்ம சிரிப்பை உதிர்த்த வெற்றியை, பயத்தோடு பார்த்தான் ரேவதியின் கணவன்.

நொடி நேரத்தில், ஒரு வெள்ளை நிற வேன் ஒன்று வந்து, ரேவதியின் கணவனை அள்ளிக் கொண்டு சென்றது.

“அண்ணே…… என்னன்னே திடிர்னு?” வெற்றியின் தோளில் கை பதித்தான் ரவி.

“என்ன டா?” வெற்றியின் முகம், பளிச்சென்று மின்னியது.

“அவனை கொல்லணும்னுதான இங்கே தூக்கிட்டு வந்தோம்,” என்று கேட்டான்.

“என்னன்னே தெரியல டா, எனக்குள்ள என்ன நடக்குதுன்னே புரியல, நல்லவனா மாறிட்டு இருக்கேனோ,” ஒற்றை புருவம் உயர்த்தி, அவன் கேட்கும் விதமே ரவிக்கு புரிந்து போனது.

“அண்ணே, நீங்க யாருகிட்டயோ சிக்கிட்டிங்க,” என்றான்.

“அப்படியா?” என்ற வெற்றி, இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து, நாற்காலியின் பின்னால் சாய்ந்து, கண்களை மூடினான்.

மூடிய விழிகளுக்குள், குழந்தை தனமான அனுவின் முகம் வந்து நின்றது.

அடுத்த பதிவில் பார்ப்போம். 

இந்த எபி பிடிச்சிருந்தா ஒரு குட்டி ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ். 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!