அஅத்தியாயம் 5
கீர்த்தி அறையில் இருந்து வெளியே வந்தவள். சுற்றி முற்றி குமரனை தான் தேடிக் கொண்டிருந்தாள்.
குமரனோ பந்தியில் நின்று அனைவருக்கும் ஆர்டர் போட்டுக் கொண்டிருக்க, இவளோ அமைதியாக அங்கு வந்து மாமா என்று துள்ளி குதிக்க,
கீர்த்தியை பார்த்ததும் குமரனின் முகம் அப்படியே 1000 வாட்ஸ் பல்பு போல அத்தனை மலர்ச்சியாக மாற,
“ ஏய் கீர்த்தி எப்ப வந்த ”
“நான் வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆயிருக்கும் .”
“ என்ன ”
“ ஆமா மாமா நான் வந்தது கூட தெரியாம நீங்க பிஸியா இருக்கீங்க. அப்படின்னா என்ன நீங்க எதிர்பார்க்கல. உங்களுக்கு என் மேல சுத்தமா அன்பு இல்லன்னு தான அர்த்தம். ”
“ஏ புள்ள என்ன நீ பொசுக்குன்னு இப்புடி பேசி புட்ட . உன் மேல எனக்கு பாசமில்லையா புள்ள. நான் காலையில இருந்து அயித்த கிட்ட கீர்த்தி வராளா இல்லையான்னு கேட்டுட்டே தான் புள்ள இருந்தேன். அயித்தை கிட்ட வேணா போய் கேட்டு பாரு. ”
“ நம்பிட்டேன் மாமா. நம்பிட்டேன் நம்பிட்டேன்”
“நெசம்தா புள்ள நம்பேன். ”
“நான்தான் நம்பிட்டேன்னு சொல்றேன்ல மாமா”
“சரி வா அத்தா ஒரு வாய் சாப்பிடுவியாம் ”
குமரன் பந்தியில் இருப்பதற்காக ஒன்றும் அவளிடம் அப்படி கேட்கவில்லை. எப்பொழுதுமே கீர்த்தியை பார்த்தால் அவளுக்கு முதலில் சாப்பாடு கொடுப்பதுதான் அவனது வழக்கமே, பல நாட்கள் கீர்த்தி சிறு வயதில் தன் தந்தையிடம் அடி வாங்கி சாப்பிடாமல் அழுதுக் கொண்டிருக்கும் போது,
இவன்தான் அவளை சமாதானம் செய்து, வீட்டில் அவனுக்கு போட்ட சாப்பாட்டை எடுத்து வந்து ஊட்டி விடுவான் யாருக்கும் தெரியாமல்,
அந்த அளவுக்கு கீர்த்தி மீது பாசக்காரன். ஆனால் காதல் என்பது அப்பொழுதெல்லாம் அவனுக்கு தோணவில்லை. எப்பொழுது கீர்த்தி சென்னை சென்றாளோ அப்பொழுதிலிருந்து அவனுக்குள் ஒரு வெறுமை. நாட்கள் ஆக ஆக அதுதான் காதல் என்று அவனும் உணர்ந்து அவளின் வரவுக்காக தான் காத்திருந்தான்.
அத்தியாயம் – 7
குமரன் கீர்த்தி மீது பாசக்காரன். ஆனால் காதல் என்பது அப்பொழுதெல்லாம் அவனுக்கு தோணவில்லை. எப்பொழுது கீர்த்தி சென்னை சென்றாளோ அப்பொழுதிலிருந்து அவனுக்குள் ஒரு வெறுமை. நாட்கள் ஆக ஆக அதுதான் காதல் என்று அவனும் உணர்ந்து அவளின் வரவுக்காக தான் காத்திருந்தான்.
இரண்டு மூன்று முறை அவளும் ஊருக்கு வந்திருக்கிறாள் தான். ஆனால் காதல் செய்ய தெரிந்த நம் குமரனுக்கு அதை அவளிடம் கூற தான் அத்தனை தைரியம் வந்திருக்கவில்லை. அதனாலே அவனது காதல் இப்படி ஒருதலையாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
” மாமா என்ன பண்ணிட்டு இருக்க சாப்பாடு எடுத்து வை. உன் கையால சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு ”
அவள் சாப்பிட்டு இருந்தாலும் குமரன் கேட்டதற்காக அவளும் பந்தியில் சென்று அமர்ந்து விட,
அவனும் அவளுக்கு ஆசையாக பரிமாற, அவளும் வயிறு முட்ட முட்டவே சாப்பிட்டுவிட்டு, அவனின் கையை பிடித்து “மாமா உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். தனியா வரியா ” என்று கேட்டதும் குமரனுக்கு ஒரு நொடி வெடவெடத்து தான் போனது.
“ஏய் கைய விடு புள்ள. யாராவது பாத்துற போறாக. ”
“யார் பார்த்தா என்ன மாமா. நீ என்ன பொம்பள புள்ளையா உன் கைய புடிச்சி இழுத்த உடனே பஞ்சாயத்த கூட்ட ”
“ஏ புள்ள விளையாடாம கையை விடு” என்று அவளிடம் இருந்து கையை பிடுங்கிய பிறகுதான் அவனுக்கு சீரான மூச்சே வந்தது.
“வெளிய வா” என்று மட்டும் கூறிவிட்டு இவன் முன்னே விறுவிறுவென்று சென்றுவிட,
அவனின் கூச்சத்தை பார்த்த கீர்த்திக்கு சிரிப்புதான் வந்தது. அவன் காதலின் ஆழம் இவளுக்கு தெரியாமல் போனது விதியின் சதியோ ? எல்லோரும் இந்த வயதில் மாமன் மகள் மீது ஆசைப்படுவது போல மாமன் தன் மீது ஆசைப்பட்டு விட்டான் என்று மட்டுமே நினைத்துக் கொண்டாள்.
ஆனால் குமரனோ இவள் மீது உயிரே வைத்திருந்தது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். காதல் விஷயத்தில் ரகசியம் கூடவே கூடாது. காதலை வெளிப்படையாக கூறினால் மட்டுமே அந்த காதல் வெற்றியை 50% ஆவது நெருங்கும் இப்படி தனக்குள்ளே புதைத்து கொண்டாள். அந்த காதல் வெற்றி பெறுவது மிகவும் அரிது. அது தெரியவில்லை நம் குமரனுக்கு.
சரி என்று கீர்த்தியும் குமரன் சென்ற பாதையில் வேகவேகமாக செல்லும் பொழுது, நெடுநெடுவென்று வளர்ந்திருந்த ஒரு பனைமரத்தின் மீது பலமாக மோதிக் கொண்டாள்.
உடனே விலகி சாரி என்று கேட்டபடி நிமிர்ந்தவள். சத்தியமாக அங்கு வாசுவை எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்ததும் வார்த்தை எதுவும் வராமல் திரு திருவென்று விழிக்க,
வாசுவோ தன் கைகளை கட்டியபடி, இவளை கூர்மையாக அளவிட்டபடி நிற்க,
என்ன ஆச்சு .எதுக்கு இவன் இப்படி பார்க்கிறான். ஒருவேளை நம்ம பிளான் போட்டது இவனுக்கு தெரிஞ்சிருச்சா? இல்லையே , தெரிய ஜான்சே இல்லையே! பின்ன எதுக்கு இப்படி பார்க்கிறான் என்று என்ன எண்ணியபடி அவள் அவனை நோக்க,
அவனோ பல்லை கடித்து அவளை நோக்கி. ” பார்த்து வர மாட்டியா இடியட் “என்று சற்று கோபமாகவே கூறியவன். ஆமா நீ ரம்யா சிஸ்டர் தான, உன்ன எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே.இது இதுக்கு முன்னாடி நம்ம மீட் பண்ணி இருக்கோமா என்று கேட்டதும் தான்.
கீர்த்திக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. உடனே இவனும் எனக்கும் அதே டவுட்டு தான் இருக்கு உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி என்று கூறியவள் .
இதோ வந்துட்டேன் மாமா என்று யாரோ அழைப்பதாக பெயர் செய்து விட்டு ஓடியே விட்டாள்.
அத்தியாயம் 6
வாசுவிற்க்கோ இவள் ரம்யாவின் தங்கை என்று இப்பொழுது தான் தெரியும். ஆனால் அவளை முதலில் பார்த்தபோது அவனுக்கு இந்த சந்தேகம் இருந்தது தான். கேட்கலாம் என்று நினைக்கும் போது தான் அவள் மயங்கி விழுந்து விட்டாள். இப்பொழுது திடீரென்று அவள் வந்து இடிக்கவும். தன் சந்தேகத்தை கேட்டே விட்டான். ஆனால் என்ன அவனுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.
அவள் ஓடியதை பார்த்தவன். சுற்றி முற்றி பார்த்துவிட்டு, எவன் தான் இந்த கல்யாணம் கருமத்தை எல்லாம் கண்டுபிடிச்சானோ? அவனை தூக்கி முதல்ல உள்ள போடணும். அவனவன் சுதந்திரமா எவ்ளோ என்ஜாய்மென்டோட வாழ்ந்துட்டு இருக்கான். அவனுக்கு கல்யாணம் பண்ணி ஆகணும்னு ஆயிரம் ரூல்ஸ் போட்டு கொல்றாங்கடா. எப்பதான் இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போறது. ஒரே இரிடேடிங்கா இருக்கு. எல்லாம் இந்த அம்மாவால தான் எல்லார்கிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேச சொல்லி வேற டார்ச்சர் பண்றாங்க.
தேடி வந்து எனக்குன்னு பொண்ணு பாத்து இருக்காங்க பாரு. சிட்டில எவ்வளவு மாடர்னான பொண்ணுங்க எல்லாம் இருக்கு. இங்க வந்து ஏதோ ஒரு நாட்டுப்புற பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வச்சு. என் கூட வாழ வைக்கணும்னு நினைக்கிறாங்க. அது நடக்கவே நடக்காதுன்னு அவங்களுக்கு தெரியவே மாட்டேங்குது. நாம எடுத்துச் சொன்னாலும் புரிய மாட்டேங்குது. பட்டு திருந்தட்டும். அதனாலதான் நானும் ஒரு கட்டத்துக்கு மேல இவங்க கிட்ட போராடாமல் உங்களுக்கு என்ன கல்யாணம் தானே பண்ணனும்னு பண்ணிக்க ரெடி ஆகிட்டேன்.
ஆனா இந்த கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட சுதந்திரத்தில கைய வச்சாங்க. அப்புறம் இருக்கு எல்லாருக்கும் என்று சிறிது சத்தமாகவே வாய்விட்டு புலம்பியபடி வாசு சென்றான்.
ஆதியிடமிருந்து தப்பி ஓடி வந்தவளோ, குமரன் அருகில் வந்து மூச்சு வாங்கிய படி, அருகில் இருந்த கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தவள்.
“ ஏன் மாமா எதுக்கு என்னை விட்டுட்டு இப்படி முன்னாடி ஓடி வந்தீங்க. ”
“நீ என்ன இன்னும் சின்ன புள்ளன்னு நினைச்சுட்டு இருக்கியா. நம்ம ரெண்டு பேரும் வயசுபுள்ளைக ஆயிட்டோம். தனியா நின்னு பேசினா. ஏதாவது கதை கட்டி போடுவாக. அதனால இது மாதிரி நாசுக்கா தான் புள்ள நடந்துக்கணும். ”
அத்தியாயம் – 8
“
ஏன் மாமா எதுக்கு என்னை விட்டுட்டு இப்படி முன்னாடி ஓடி வந்தீங்க. “
“நீ என்ன இன்னும் சின்ன புள்ளன்னு நினைச்சுட்டு இருக்கியா. நம்ம ரெண்டு பேரும் வயசுபுள்ளைக ஆயிட்டோம். தனியா நின்னு பேசினா. ஏதாவது கதை கட்டி போடுவாக. அதனால இது மாதிரி நாசுக்கா தான் புள்ள நடந்துக்கணும். ”
“அட போங்க மாமா. இந்த ஊரு உலகத்துக்கு நீங்க வேணா பயப்படுங்க. எனக்கெல்லாம் துளி கூட பயமில்லை. ”
“ அப்படியா அப்ப மாமன கூட்டியாரட்டுமா? ”
“ மாமா பாத்தியா”
“நீ தான புள்ள சொன்ன பயமில்லைன்னு ”
“பயமில்ல தான். ஆனால் மருவாதனு ஒன்னு இருக்கே. ”
“சரிதேன் புள்ள சரிதேன். அந்த ஆளு என்ன கொடுமை பண்ணுது உன்ன. அந்த ஆளு கிட்ட உனக்கு மருவாத வந்துடுச்சா”
“ என்ன பண்றது மாம்ஸ். ஆயிரம் தான் இருந்தாலும் என்ன பெத்தவர் ஆச்சே கொடுக்க வேண்டிய மரியாதையா கொடுத்து தானே ஆகணும்.”
“சரி விடு புள்ள இதை பத்தி பேசினா கண்டிப்பா நமக்குள்ள சண்டை வந்துபுடும். ஏதோ முக்கியமான சேதி சொல்லணும்னு சொன்னியே சொல்லு.”
– தொடரும்
