ஏனோ ..ஒழுங்காய் வளர்க்கப்பட்ட ரிஷி-தேனு இருவருமே இவ்வாறு துன்பத்தின் வலையில். ஒழுக்கமாய் இருப்பதே பெரிய தவறோ? எனும் ஐயம் என்னுள்.
நினைக்கவே என்னுள் நான் நடுங்கிய பதிவு ..தேனுவிர்க்கானது…இதை எழுதும்பொழுது நிச்சயம் நான் நானாய் இல்லை…சமூகத்தில் நிகழும் பெண்களுக்கெதிரான நிகழ்வுகளை பதிவு செய்ய முற்படும்பொழுது சிலவற்றை தவிர்க்க முடிவதில்லை! என் கண்கள் நான் எழுதியவற்றை மீண்டும் படிக்கும் பொழுது கண்ணீரை விடாமல் பொழிகின்றன!
இனி வரும் ஒரு சில பதிவுகளில் நான் படித்து தெரிந்துக்கொண்ட விஷயங்களில் ஒரு சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். நான் ஏற்கனவே கூறி இருந்தேன்..இது சமூகத்தில் நடக்கும் அவலத்தின் ஒரு சில அவலங்களைப்பற்றியது.அப்படி பார்க்கும்பொழுது ஒரு சில விஷயங்களை நாம் தேடி படித்து தெரிந்து கொள்ள முடிவதில்லை.ஆனாலும்,சில அடிப்படை செய்திகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது.
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சாற்றுரை இவ்வாறு கூறுகிறது:
காலங்காலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமனில்லா செல்வாக்கின் வெளிப்பாடே பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்”
ஆண்களை விடத் தாழ்ந்தநிலைக்குப் பெண்களைத் தள்ளும் இக்கட்டானச் சமுதாயச் செயற்பாடுகளுள் ஒன்று பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்.
ஐக்கிய நாடுகள் பெண்களுக்கான வளர்ச்சி நிதியின் வலைத்தளத்தில் ஒரு அறிக்கையில்ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரானகோபி அன்னான்அறிவித்துள்ளதாவது:
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைஉலகெங்கும் பரவும்,அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோபுணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ,துன்புறுத்தப்படுகின்றனர்!
இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை பல விரிந்த வகைப்பாடுகளில் அடங்கும்.
பெண்களுக்கெதிரான வன்முறையை ஆய்ந்த உலக சுகாதார அமைப்பு,இவ் வன்முறை பெண்களின் வாழ்நாளின் ஐந்து நிலைகளில் நடைபெறுவதாக வகைப்படுத்தி உள்ளது: பிறப்பிற்கு முன்னர்மழலைப் பருவம்சிறுமியர்வளர்சிதை மாற்றம் மற்றும் வயது வந்தோர் முதியோர்
அண்மை ஆண்டுகளில் பன்னாட்டளவில் நெறிமுறைகள்,சாற்றுரைகள் போன்றவற்றின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஐரோப்பிய ஒன்றியம் பாலினத் துன்புறுத்தலுக்கான வழிகாட்டுதலையும்மாந்தக் கடத்துகைக்கு எதிரான வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.
விலைக்கு சந்தையில் கிடைக்கும் மலரா மாதர்? ஆனால் விரும்பாவிட்டாலும் கசக்கி முகரப்படும் மலராக மங்கையர் விலைமாதர் எனும் பெயரில்.. அவர்களுக்கென்று மனம் குணம் இரண்டையும் தொலைத்து சமுதாயத்தின் சாக்கடையில் தேனுவும் இனி அங்கு அப்படித்தான் .ஒருமுறை சிக்கிவிட்டால் சீரழிவு..பேரழிவுதான்! சுகம் கொடுக்கும் மனித எந்திரமாய்(எந்திரங்கள் சுகம் தருமா?இங்கு மட்டுமே சாத்தியம் )
“முடியாது…நா உயிரே போனாலும் இந்த மட்டமான செயல செய்யமாட்டேன் எனப்போராடி, பட்டினி கிடந்து.அடிகள் பல வாங்கி உடல் மரத்த பின்னும் உணர்வுகள் போராட.. கண்ணீரை தவிர நிச்சயம் அவளுக்கு வேறு துணையில்லை. அவளால் முடியும்வரை போராடியாகி விட்டது..பலன் பூஜ்யம் தான். உடல் தொய்ந்துவிட்ட நிலையில்,ஏற்கனவே ஆலையில் இட்ட கரும்பாக சாறு பிழியப்பட்ட நிலையில் எவ்வளவுக்கு போராட முடியும்? அரை மயக்கமாக இருந்ததில் நடப்பவை கனவாகிவிட கூடாதா என்ற ஏக்கம் நெஞ்சைக் கவ்வியது.
அங்குள்ள எந்த பெண்ணும் இவ்விஷயத்தை ஈடுபாட்டுடன் செய்ய இயலாது.வீட்டில் இருக்கும் குழந்தையின் பசி தீர, காமப்பசியை தணிக்கும் மாதரும் உண்டு.எல்லாவற்றிர்க்கும் ஒரு விலை உண்டு எனில்…இங்கு விலை மாதரின் சதை..தேனுவால் இந்த நரகத்தை பொறுக்க இயலவில்லை..தற்கொலை செய்துக்கொள்ள அவளேடுத்த முயற்சிகள் அனைத்தும் கடும் தோல்வியில் முடிய அதற்க்குமான தண்டனைகள் அதிகமாயின..
“மர்னா ஹீ ஹை தோ குச் சால் கமானே கே பாத் மர்னா. தேரி வஜஹ் சே முஜேஹ் தோடா தோ பைசா கமானா ஹை” (சாவர்தா இருந்தா கொஞ்ச வருஷம் சம்பாரிச்சு கொடுத்துட்டு சாவு..உன்னால கொஞ்சமாவது காசு பாக்கணும்.) என்று தீயை சுமந்து வெளிவந்த வார்த்தைகள் அவள் கையறு நிலையை தெளிவாக புரிய வைத்தது… சிறுவயது, இளமை,உடலின் செழுமை, அங்க லாவண்யம் என்று அவளுக்கு பெரிய எதிரிகள் ஆயின.நிறைய ஆண்கள் இவளுக்காகவே வந்தனர்.காசு நிறைய கிடைக்க கிடைக்க இவளை சக்கை பிழிய ஆரம்பித்தனர்..கருக்கலைப்புகள் அவளை மேலும் சீரழித்தது.ஏனோ, அவளது மெருகு. இன்னும் குறையவில்லை.அவள் விதி அவளை ஒரே வருடத்தில் மும்பைக்கு அழைத்து சென்றது.பெரிய பணக்காரர்களுக்கு அதிக பணத்திர்க்காய் அவள் அனுப்பப்பட்டாள்..(பதவி உயர்வு?)
பெரிய மாற்றம்…இத்தனை நாட்கள் மூச்சு காற்றுக்கு கூட சரியான வழியின்றி வியர்வை வழிய ஒரு நாளைக்கு பலரை நிறைவு செய்த தேனு இப்பொழுது நல்ல வசதியான விடுதிகளில் குறைவான நபர்களுடன் கழிக்கிறாள்…நிறைய பணமும் அவளை வைத்து சம்பாதிப்பதால் அவளுக்கு ஆரோக்ய குறைவு வாராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.அவளை வைத்து தொழில் செய்வோர்.
ஆனால், தேனுவின் இம்முன்னேற்றம் மும்பையில் அவளுக்கு நிறைய எதிரிகளை சம்பாதித்துக்கொடுத்தது.அவளை மட்டுமே கேட்கும் பணக்கார வாலிபர்கள் சக பெண்களிடத்தில் அவளுக்கு வெறுப்பை தேடிக் கொடுத்தது. இதிலுமா என்று கேட்காதீர்கள். அவரவர் வலிகள் அவரவர்க்கு. தேனு மட்டும் தப்பிக்கும் வழியை தேடிக்கொண்டிருக்கிறாள்..இதுவரை…ம்ஹூம்…ஒன்றும் தெளியவில்லை…ஹிந்தியும் மராட்டியும் கூட கற்றுக்கொண்டு விட்டாள்.எங்காவது ஒளி தெரியாதா எனும் ஏக்கம் .சூழலில்,சுழலில் சிக்கியுள்ள மெல்லிய மலர்…விசும்பல்களுக்கு இடையே…தன் தாய் மடியை அப்பாவின் அரவணைப்பை அக்காவின் தோழமையுடன் கூடிய கதகதப்பை, அத்தானின் அக்கறையை. தேடிக்கொண்டு.தவிக்கிறது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூல பொருட்கள் குறிப்பிட்ட தரத்தில் இல்லை. ஆதலால் திருப்பி அனுப்பிவிடுங்கள்..வேறு நிறுவனகளைப் பற்றிய தகவல் தொகுப்பு தயார் செய்யுங்கள் என்று தனது செயலாளரிடமும்விற்பனைப்பிரிவு மேலாளரிடமும் உத்தரவுகள் பிறப்பித்துக்கொண்டிருந்தான் ரிஷி… மூல பொருட்கள் இதுவரை செல்வபதியின் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டு வந்தது..ராஜேஸ்வரி திருமணம் நிச்சயம் ஆனத்திலிருந்து அப்படித்தான். ஆனால் நிலா-ரிஷி திருமணம் திருமண பந்தத்தை மட்டுமின்றி தொழில் பந்தத்தையும் அறுத்தது.
செல்வபதி மனதளவில் தளர்ந்து போனார்.ரிஷியிடம் தனது நிறுவனப் பொறுப்புகளை கொடுத்துவிட்டு நிம்மதியாக இனி இந்தியாவில் உறவினர்களுடன் இருந்து விடலாம் என்ற அவரது ஆழ்மன ஆசை நொறுங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது..நிலாவை திருமணம் செய்து கொடுத்து அற்புதமான உறவை பகைத்துக்கொண்டோமே.. நல்ல மனிதனின் வாழ்வை சீர் குலைத்துவிட்டோம் எனும் கழிவிரக்கத்தில் வேறு எதிர்வினைகள் ஆற்றாமல் அமைதி காத்தார். ஆனால், ரிஷியின் தொழில் நடவடிக்கைகள் அவரது மற்ற வாடிக்கையாளர்களையும் சந்தேகம் கொள்ள வைத்தது.
தொழில் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என ரிஷிக்கு புரியவைக்க வேதநாயகம் பெரு முயற்சிகள் செய்தார்..பழி நெருப்பில் எரிந்துகொண்டிருந்த ரிஷிக்கு அவரது வார்த்தைகள் தூபமிட்டது..செல்வபதி தந்தையின் மூலமாக தன்னை அடக்க நினைப்பதாகவே எண்ணினான்..அவரது நிலை, மனம் இரண்டுமே அவனுக்குப் புரியவில்லை. அவனது நடவெடிக்கைகள் இன்னும் தீவிரமாயின. ஆனால் ,தொழில் நசிவைப்பற்றிய கவலைகள் எதுவும் செல்வபதியை பாதிக்கவில்லை. தனக்குப் பிறகு தொழில் நடத்த ஆள் இல்லாத பொழுது தொழில் வளர்த்து என்ன செய்வது என எண்ணலானார்…நிலா தன் குடும்ப வாழ்க்கையை நட்டத்தில் இழந்ததின் பலன் இவரது தொழில் நட்டம் என்பது அவருக்கு பெருத்த துயரைக்கொடுத்தது. இவை எவற்றை பற்றிய தகவல்களும் தெரியாமல் தோழர்களுடன் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் நிலா.
தொலைந்த சொர்கத்தை பற்றிய எண்ணங்கள் அவளுக்கு இல்லை.. தான் அனுபவிக்கும் நிலையே இன்பம் என்று கானல் நீரை கையால் எடுத்துக்கொண்டிருந்தாள் அந்த முட்டாள். இரவினில் ஆட்டம். பகலினில் தூக்கம் என்று சென்றுக்கொண்டிருந்தது அவள் நாட்கள்.
வேதநாயகம் செல்வபதியிடம் ரிஷி நடந்துகொள்வது பிடிக்காமல்..அவனிடம் கோவத்தை வளர்த்துக்கொண்டார் வேத நாயகம்…அவன் செய்கைகளில் குற்றம் பார்க்க முற்பட்டார்…தன் தங்கை ,அவளது கணவர் இருவரும் நல்லவர்களே என்பதில் அவருக்கு வேறு கருத்தில்லை…ரிஷிக்காக ரத்தம் வடிக்கும் அதே மனம் தங்கைக்காகவும் அவளது மகளுக்காகவும்கூட அழுதது.
தன்னைப்பற்றி அக்கறை கொள்ளாத அப்பாவிடம் இனி எதற்கும் போவதில்லை என்று உறுதி பூண்டான் ரிஷி..பல வருடங்கள் தவமியற்றி பெற்ற மகனின் திருமண தோல்வி ரிஷியின் அம்மாவுக்கு உடல் நலத்தை குறைத்தது. ரிஷியின் கோவம் அவனது நற்குணகளை மறைத்தது..சென்னை வருவதை தவிர்க்கலானான் ரிஷி…அரவணைக்க யாருமற்ற நிலையில் மன அழுத்தம் ரிஷிக்கு அதிகரித்து வருகிறது..
தீர்வு?
சிறு வயதிலிருந்தே உடனிருப்போர் யாராக இருப்பினும் அவர்களது நலம் பேணுதலை தான் முக்கிய வேளையில் ஒன்றாக நினைத்திருந்தான் ரிஷி. செல்வபதி இந்தியா வந்திருப்பது தெரிந்து நிலா தான் வாசிப்பிடத்தை மாற்றிக்கொண்டாள்..வங்கியில் பணம் இருக்கையில் எதுவுமே சாத்தியம்தான்.ரிஷிக்கோ தான் மனையாள் எங்கிருக்கிறாள் என்பதுவும் தெரியா நிலை. தேடுவதற்க்கு அவனுக்கு விருப்பமும் இல்லை. ஆனால், அவளால் அவனுக்கு ஒரே ஒரு விஷயம் ஆக வேண்டிய உள்ளதுதான்….அது விவாகரத்து. அவளிடமிருந்து எப்படியாவது ,எதை செய்தாவது அதை பெற்றுவிட வேண்டும்..
பெண்களுக்கெதிரான வன்முறைகள் தலை தூக்கும்பொழுது தட்டிக்கேட்க சட்டங்கள் உள்ளது போல் ஆண்களுக்கும் பாதுகாப்புக்காக சட்டங்கள் இருக்கிறதா என்றுத் தெரியவில்லை.நிலா இவனிடம் நடந்துக்கொள்ளும் முறை நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்!
இம்முறை அவன் தொழிலுடன் உடன்படிக்கையாக நிலாவுடனான விவாகரத்தை முடிச்சிட்டு செல்வாவிடம் பேச அவரோ..தொழிலுக்காக இல்ல மாப்பிள்ளை உன்னுடைய வாழ்க்கைய சரி செய்ய என்னோட பிரயிசித்தமா இத செய்யுறேன்…ஆனா..அவள எந்த நிலையுலயும் விட்டுராதீங்க…மனைவியா இல்ல …உங்க அத்தை மகளா அவள விடாம பாத்துக்கொங்க என்றுவிட்டு சென்றுவிட்டார்…அவனுக்கும் நிலாவின் மீது வேறு கோவமில்லை..சரியாக ஆராயாமல் தானே சிக்கிகொண்டோம்..புத்தி கொள்முதல் என தேற்றிக்கொண்டான்…முடிவை மாற்றிக்கொள்ள அவன் நிச்சயம் தயாராக இல்லை. ஆனால், அவனது வளர்ப்புமுறை அவனை ஒருபாதையில் சிந்திக்க வைக்கஅவனுக்குப் பட்டிருக்கும் உட்காயமோ அவனை சிறிதும் அவதானித்துக்கொள்ள அனுமதிக்கப் போவதில்லை.
செல்வபதி யார் சொல்லியும் கேட்காமல் தனது மீதமுள்ள சொத்துக்களை நிலாவின் பெயரில் எழுதியவர் காப்பாளராக ரிஷியின் பெயரை பதித்திருந்தார்.ரிஷிமீது அவர் கொண்ட நம்பிக்கை வேதநாயகத்தையே பிரமிக்க வைத்தது.மணவாழ்வு தான் மகளூக்கு முடிந்தது என்பதை தெளிவாக உணர்ந்து நிலா சொத்துக்களை தான் வாழ்நாளின் இறுதிவரை அனுபவிக்க அதே சமயம் அத்துமீறாமல் இருக்க ஏற்றவாறு ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் ரிஷியின் கையில் சாவியை கொடுத்துநிலாவை பொம்மையாக்கி ஒரு உயில்.மீதமுள்ள வாழ்க்கையை ஷிம்லாவில் கழிக்க விருப்பமாய் நிலாவின் பெற்றோர் சிம்லாவில் உள்ள அவர்களது பங்களாவிர்க்கு சென்றுவிட்டனர்…தொழிலை வேதநாயகம் ஒரு பங்குதாரராக இருந்து கவனித்துக்கொண்டதால் ரிஷி தான் குடும்பத்தோழிலை வளர்ப்பதில் கவனத்தை செலுத்தினான்.
ரிஷி சார்பில் விவாகரத்து சம்மந்தப்பட்ட வேலைகளை அவனது வழக்கறிஞர் ஆரம்பிக்க ரிஷியின் அம்மாவிர்க்கு தன் ஒரே மகனின் வாழ்வை எண்ணி எண்ணிரத்த அழுத்தம் ஏறியது.
தேனு தன் இரு கைகளிலும் மெஹந்தி வரைந்திருந்தாள். அவள் மனமோ அவர்கள் வீட்டின் கொல்லை புறத்தில் வளர்ந்திருந்த மருதாணி மரத்தின்மீது…பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை அவளது அம்மா தன் இரு பெண்களுக்கும் மருதாணி இழைத்து வைத்துவிடுவார்..நீண்ட கூந்தலுக்கு மருதாணி தைலமும் காய்ச்சுவார்.. சூடு குறையனும்னா மருதாணில புளி பாக்கெல்லாம் சேக்கக்கூடாது என்று வெறும் இலைகளை அவர் இழைக்க… ஏ!தேனு…மருதாணி சிவப்ப வச்சு உன்னோட வருங்கால புருஷன் உம்மெல எம்புட்டு அன்பு வைக்குரான்னு தெரிஞ்சுப்போம்டி…எங்கிருந்தோ ஒலித்தது அக்காவின் குரல்..அக்குரல் கேட்டவேளையில் தன் நிலையையும் மறந்து நாணத்தில் சிவப்பை பூசிக்கொண்டது தேனுவின் முகம்….மருதாணி வரைந்துக்கொண்டிருந்த சக பெண் தேனுவை வித்யாசமாக பார்த்தாள்.எதையும் உணரும் நிலையில் தேனு இல்லை.
இப்பொழுதெல்லாம் தேனுவிர்க்கு நிறைய ஓய்வு கிடைத்தது..பணக்கார வாலிபர்களுக்கு ஒருநாள் முதல் ஒருமாதம் வரை கம்பனி கொடுப்பதும் பின்னர் சிறிது காலம் ஓய்வு என்பதும் அவளுக்கு இப்பொழுது வழங்கப்பட்டிருக்கும் நிலை…ஆனால், ஒரு செல் ஃபோன் தொடர்புக்கு கூட நிச்சயம் வழியில்லை. வெளியுலகத்தொடர்பு பூஜியம் தான். அவளது மனம் தப்பிக்கும் வழியை அங்குலம் அங்குலமாக தேடிக்கொண்டுள்ளது… அங்கு அசையும் ஒரு ஒரு பொருளும் கூட கண்காணிக்கப்பட்டது..கண்காணிப்பவர் யார் என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. நிழல் உலகத்தின் நிழல் நீண்டு பரவியிருக்கும் தொழில்களில் பாலியல் தொழிலும் ஒன்று. இங்குள்ள பெண்களை யாரும் பெண்களாக மதிப்பதில்லை..சதையை விற்று பிழைக்கும் இந்த பெண்களின் மீதி வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியே.மது,மாது, போதை தரும் வஸ்துக்கள் அனைத்தும் மிக தாராளமாக புழங்கும் தொழிலும் இதுவே.தேனு, இங்கு அழைத்துவரப்பட்ட பொழுது அவளுக்கு சுயம் இழக்கும் மருந்துகள் தரப்பட்டுக்கொண்டிருந்தன.இப்பொழுது தப்பிக்க வழி இல்லை என்று அவள் உணர்ந்ததும் மருந்துகளும் நிறுத்தப்பட்டன.
பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாகும் இந்தப்பெண்களுக்கு மருத்துவமனைகளில் கிடக்கும் அவமரியாதகளும் சொல்லில் அடங்காது. நக்கல்,ஏளனம், மனம் புண்படும் விதமான கேள்விகள்,வார்த்தைகள் அவமரியாதையான நடவெடிக்கைகள்..இத்தனையையும் இவர்கள் மௌனமாக ஏற்றுக்கொள்ளும்பொழுது…ஒரு சக உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா? இந்தப்பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ளும் ஆண்களுக்கு..இந்த சமூகம் எந்த கெட்டப்பெயரையும் சுமத்துவதில்லை..நீ கற்பு நெறி பிழன்றுள்ளாய் என முத்திரை குத்துவதில்லை..ஏன் , உடல் உபாதைகளுடன் மன வன்முறைகளுக்கு ஆட்படும் இப்பெண்களுக்கு நான் தலைவணங்குறேன். இப்பேற்பட்ட நிலையில் தேனுவை காணும்பொழுது என்னுடைய இதயத்தில் நிச்சயம் முணுக்முணுக் என்றவலியை உணர்கிறேன். இங்குள்ள பெண்களுக்கு ..யாரேனும் வாழ்க்கையின் பாதையை மாற்றிக்கொடுங்களேன்… தேனுவின் வாழ்க்கை வெளிச்சத்தை நோக்கிப்ரயாணபடுமா ,இல்லை காரிருள் அவளை காவு வாங்குமா? அவளது கல்வித்திறன் அவளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கும்..ஆனால்…அவள் நிலை இன்று?
இருள் மெல்ல விடை பெற்று சூரியன் தனது பொன்னிற கிரணங்களை பூமி மீது படரச் செய்துக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம்..தேனுவின் அக்கா வாசல் தெளிக்க வெளியே வர அவளது கண்களோ தனது தங்கையை தேடியது.நாட்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களை இழுத்துச் செல்ல காலம் தேனுவை மட்டும் கூட்டி வரவே இல்லையே, ஏக்கப் பெருமூச்சு சூரியக்கதிர்களைவிட உஷ்ணமாய் வெளி வர..வாசலில் கோலமிட ஆயத்தங்கள் செய்யலானாள் !ஒவொருநாளும் எதிர்பார்ப்புடன் தடங்கும் நாள் ஏமாற்றத்துடன் முடிய…வெளியூர் சென்ற தேனுயாருடனோ சென்றுவிட்டதாக மெல்ல பேச்சுக்கள் பரவி இருந்தது…ஆனால் தேனுவின் குடும்பம் இவற்றை பற்றிக் கவலைகொள்ளுவதாய் இல்லை…பெண்ணை பெற்று நல்ல முறையில் வளர்த்திருந்த அவர்களுக்கு, இப்படிபட்ட அவலம் நிகழ்ந்திருக்கிறது!1
