கெட்டவன் 13

இரவு நேரம், வழக்கத்தை விட சீக்கிரம் வீட்டுக்கு வந்த சாமி நாதனை கேள்வியோடு பார்த்தார் சுபத்ரா.

“இன்னைக்கு முதலாளி என்னை சீக்கிரம் வீட்டுக்கு போக சொல்லிட்டாரு சுபி” என்றார்.

சாமி நாதன் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மாத சம்பளத்துக்கு வேலை செய்கிறார்.

தான் எதுவும் கேட்காமல் விளக்கம் கொடுக்கும் கணவனை சுபத்ரா புன்னகையோடு பார்த்தார். இதுதானே புரிதல். புரிதல் நிறைந்த ஒருவரோடு குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது அவரின் எண்ணம்.

“அனுவுக்கு அவங்க ஃப்ரெண்ட்ஸ் கால் பண்ணிட்டே இருந்தாங்க. அனு இப்போ எப்படி இருக்கா சுபி?” என்று கேட்டார் சாமி நாதன்.

“இப்போ அனு கொஞ்சம் பரவாயில்லை. நல்லாதான் இருக்கா. நீங்க போய் ஃப்ரெண்ட்ஸ் கால் பண்ணதை சொல்லுங்க” என்று கூறிவிட்டு இரவு உணவை சமைக்க சென்றார் சுபத்ரா.

சாமி நாதன் அனு இருக்கும் அறைக்கு சென்றார். அனு சோர்வாக படுத்திருந்தாள். அவளின் தலையை வருடினார். அவள் கண் திறந்து விட்டாள்.

மாதத்தில் மூன்று நாள் இப்படி அனு சோர்வாக படுத்திருக்கும் பொழுது அவருக்கு வருத்தமாக இருக்கும். கடும் வயிற்று வலியில் அவள் தூக்கத்திலும் முணு முணுக்கும் சத்தத்தை கேட்டதும் அவர் துடித்து போவார்.

தலையை வருடி கொடுக்கும் தந்தையின் சோக முகத்தை பார்த்தவள், “நான் நல்லாதான்ப்பா இருக்கேன்” என்றாள்.

“உன் ஃப்ரெண்ட்ஸ் கால் பண்ணாங்க பாப்பா” என்று பழைய சாம்சங் அன்டிராய்ட் மொபைலை எடுத்து அவளிடம் நீட்டினார்.

“எதுக்கு எனக்கு கால் பண்ணாங்க? நான்தான் அவங்களோட பேசுறதே இல்லையே” என்று மனதுக்குள் நினைத்தவள், தந்தையிடம் சொல்லாமல் மொபைலை வாங்கி பார்க்க, த்ரீ ரோசஸ் வாட்சப் க்ரூப்பில் இருந்தும் போட்டோக்கள் குவிந்து கிடந்தது.

போட்டோவை பார்த்ததும் அனுவின் விழிகளில் ஆச்சர்யம் மின்னியது.

அனு ஆன்லைன் என்று நோட்டிஃபிகேசன் காட்டியதும் கான்ஃபரன்ஸ் கால் வந்து விட்டனர் அவளின் தோழிகள் இருவரும்.

“அனு கோபத்துல கால் கட் பண்ணாத. எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்த்துருக்காங்க. நீ சொன்னதாலதான் அனு நான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்” என்று பட படவென பேசினாள் விஷாகா.

“வாழ்த்துக்கள்” என்றாள் அனு.

“அனு எங்கள மன்னிச்சிறேன். நாங்க நிஜமா இனிமே எந்த தப்பும் பண்ண மாட்டோம். ப்ளீஸ் எங்களோட எப்பவும் போல பேசு” என்றாள் நிஷா.

“சரி” என்றாள் அனு.

“ஹேய் அனு. இங்கே பாரு நீ நிஷாவோட பேசு. இல்லை பேசாட்டி போ. ஆனால், என்னோட பேசணும். ஏனா நம்ம லாஸ்ட் செமஸ்டர் முடிஞ்சதும் எனக்கு மேரேஜ்” என்றாள் விஷாகா.

“அடி பாவி விஷா” என்று கத்தினாள் நிஷா.

அனுவின் இதழ்களில் சிறு கீற்று போல புன்னகை வந்தது.

அவளுக்கு அழைத்து விட்டு இருவரும் சண்டை போடுவதை சுவாரசியமாக கேட்ட அனு, “ரெண்டு பேரோடயும் பேசுறேன் போதுமா” என்றாள்.

நிஷா, விஷாகா இருவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.

அதன் பின் இன்று வெற்றியை பார்த்து விட்டு வந்ததை அனுவிடம் கூறினாள் நிஷா. ஆனால், கடைசியாக வெற்றி கேட்டதை மட்டும் யாரிடமும் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை.

அனுவுக்கு திகைப்பாக இருந்தது தோழியை நினைத்து. “எனக்காக உதவி கேட்டியா நிஷா?” அவளால் நம்ப முடியவில்லை.

“ஆமா. உனக்காகதான் அனு. நீ நாளைக்கு காலேஜ் வரும் போது இன்னும் டீடெயிலா பேசுவோம்” என்று நிஷா கூற, “இன்னும் இரண்டு நாட்களுக்கு அனு வர மாட்டேன்” என்று கூறியதும் நிஷா அதிர்ந்து விட்டாள்.

அனுவுக்காகதான் வயிற்று வலியை பற்றி வெற்றி சார் கேட்டாரா? என்று சிலையாகி விட்டாள் நிஷா. ஆனால், அனுவிடம் அதை பற்றி பேசவில்லை.

இருவரிடமும் பேசி விட்டு போனை தந்தையிடம் நீட்டினாள் அனு.

அவர் ஆப்பிள் பழங்களை துண்டு துண்டாக நறுக்கி கொண்டிருந்தார்.

“என் ஃப்ரென்ட் விஷாகாவுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுப்பா” சந்தோஷமாக கூறினாள் அனு.

“சரி பாப்பா. ரொம்ப நல்ல விஷயம்” என்றார் சாமி நாதன்.

துண்டு துண்டாக நறுக்கிய ஆப்பிள் பழங்களை உண்ண ஆரம்பித்தாள். ஏனோ இந்த மாதிரி நேரங்களில் இவளுக்கு உணவு உண்ணவே பிடிக்கவில்லை.

யாரோ அழுத்தி பிடிப்பது போல் அடி வயிற்றில் சுரீரென்ற வலி அடிக்கடி வந்து செல்லும். அவளின் கால்கள் நேராக நிற்காமல் தளர்ந்து விடும். மூன்று நாட்களும் அவளை குழந்தை போல் கவனித்து கொள்வார்கள் சுபத்ராவும், சாமி நாதனும். ஒற்றை மகள் அல்லவா?

அதுவும் தன் அன்னையின் சாயலை கொண்டு பிறந்தவளை இது வரை மனம் நோகும் படி ஒற்றை வார்த்தை பேசியதில்லை இந்த அன்பு தந்தை.

ஆப்பிள் பழங்களை அவள் சாப்பிட்டதும், “ரெஸ்ட் எடு அனு” என்று கூறி சென்று விட்டார் சாமி நாதன்.

*****

வெற்றி எதையோ தீவிரமாக கைபேசியில் தேடிக் கொண்டிருந்தான். அவன் தேடியது கிடைக்காமல் போக, அவனின் கண்களில் எரிமலை வெடித்தது.

ரவியும் வெற்றியை போல் கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான். “வயிற்று வலி” என்று அவன் சர்ச் செய்து பார்த்ததில் புது புது வயிற்று வலிக்கான நோய்கள் வந்தது. அது ஒவ்வொன்றையும் பார்த்தவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. “என்ன வயிற்று வலி? விட்டால் அழுது விடுவான் போலும்” அவனின் கண்கள் கைபேசியை வெகு நேரமாக பார்த்து சோர்ந்து விட்டது.

“அண்ணே… நாங்க கிளம்பலாமா?” ரமேஷ்ஷும், சுரேஷ்ஷும் வெற்றியின் காலடியில் இருந்து கேட்டனர்.

ப்ப்ச், தேடியது கிடைக்கவில்லை அவனுக்கு. கோபத்தில் இருவரின் முகத்திலும் ஓங்கி மிதித்தான் வெற்றி.

“ரெண்டு பேரையும் கொல்லுங்க அண்ணே!” கடுப்போடு கூறிய ரவியை பார்த்து, “உனக்கென்ன டா?” என்று கேட்டான்.

“அண்ணே! அது என்ன வயிற்று வலினு சொன்னா நல்லா இருக்கும்” என்று அசடு வழிந்தான் ரவி.

“உனக்குதான் அம்மா இருக்காங்கல்ல. அவங்ககிட்ட போய் கேளு டா சொல்லுவாங்க” என்றான்.

“அது அண்ணே! நீங்க சொன்னா நல்லா இருக்கும். அம்மாகிட்ட எப்படி? அவங்களுக்கு எப்படிண்ணே தெரியும்” என்று கேட்டவனை முறைத்து பார்த்தான் வெற்றி. அதோடு ரவி கப்சிப்பென்று அமைதியாகி விட்டான்.

“இப்போ இவனுங்க மேட்டர்க்கு வா ரவி. இவனுங்கள பெத்தவன் எங்கே போனான்” என்று கேட்டான்.

“அண்ணே இவனுங்கள தூக்குனதும் அவனுக்கு தகவல் சொல்லிட்டேன். ஆனால், அவனுக்கு பிள்ளைங்க மேல அக்கறையே இல்லை போல” என்றான் ரவி.

அவன் வெற்றியிடம் சொல்லி முடிக்கவும், வெளியே கார் சத்தம் கேட்டது. காரிலிருந்து இறங்கி வேகமாக ஓடி வந்தான் லெட்சுமணன்.

அவனை பார்த்ததும் ரமேஷ்ஷும், சுரேஷ்ஷும் எழுந்து நின்று “அப்பா” என்று சிறு பிள்ளை போல் தேம்பி அழுதனர்.

“ஹேய் ச்சீ” என்றான் வெற்றி.

“என்ன வெற்றி நான்தான் உன்கிட்ட டைம் கேட்டிருந்தேன்ல. அதுக்குள்ள ஏன் என் பசங்கள தூக்குன?” என்று கேட்டான் லெச்சுமணன்.

“நீ அவசரமா கேட்டேன்னுதான உனக்கு அஞ்சி லட்சம் கொடுத்தேன். அதுவும் சொல்லி கொடுத்தேன். சீக்கிரம் பணம் திரும்ப வரணும்னு. வாங்கிட்டு போய்ட்டு உன் மூச்சு காற்று கூட வெளியே வரவே இல்லை. பணம் வாங்குனது ஞாபகம் இருக்குதா? இல்லையா?” என்றான் சிகரெட்டை பற்ற வைத்து.

“அதான் சொன்னேனே வெற்றி. ஒரு டீல் ஸ்டக்காகி இருக்குதுனு. அது இப்போதான் முடிஞ்சிது” என்றான் லெச்சுமணன்.

“அப்போ கொள்ளை லாபம் பார்த்துருப்பியே?” வெற்றி ஓரக்கண்ணால் லெச்சுமணனை பார்த்தான்.

“உன்னோட அஞ்சி லட்சம் நான் கொண்டு வந்துட்டேன் வெற்றி. என் பசங்கள விட்டுரு” என்றான் லெச்சுமணன்.

“அஞ்சி லட்சமா? தப்பா இருக்குது லெச்சு” உதட்டை குவித்தான் வெற்றி.

லெச்சுமணனுக்கு பயம் நெஞ்சை கவ்வியது.

“பதினைந்து லட்சம் எடுத்து வச்சிட்டு கிளம்பு” என்றான்.

நல்ல வேலை பணத்தைதான் கேட்டிருக்கான் என்று நிம்மதி மூச்சை வெளியிட்ட லட்சுமணன், அவன் கேட்ட பதினைந்து லட்சத்தை வெற்றியிடம் நீட்டினான்.

“ரவி” என்றான் வெற்றி.

ரவி பணத்தை வாங்கிக் கொண்டான்.

“உன் பசங்க ரெண்டு பேரும் பத்தாயிரம் வாங்கிட்டு போனாங்க” என்றதும் ரமேஷ்ஷும், சுரேஷ்ஷும் தலை குனிந்து விட்டனர்.

“அதுக்கும் பணத்தை எடுத்து வச்சிட்டு போ” என்று வெற்றி கூறியதும் தன்னுடைய பசங்களை முறைத்து பார்த்து விட்டு அதற்கு ஐம்பதாயிரம் தண்டம் அழுது விட்டு இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான் லெச்சுமணன்.

“நல்ல வேலை உங்க ரெண்டு பேரையும்தான் தூக்கி இருக்கான்” என்று காரை ஸ்டார்ட் செய்த லெச்சுமணனுக்கு இப்பொழுதுதான் பட படப்பு நின்றது.

****

ரவியை சீக்கிரம் அனுப்பி வைத்துவிட்டு வெற்றி நள்ளிரவுதான் வீட்டுக்கு சென்றான்.

ஏற்கனவே அனுவின் நினைவிலேயே இன்று முழுதும் இருந்தவனுக்கு, தன் வீட்டுக்கு செல்ல விருப்பமில்லாமல் அனு இருக்கும் வீட்டை திறந்து உள்ளே சென்றான்.

வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டோம் என்ற நினைப்பே அவனுக்கு இல்லை போலும். அடிக்கடி இரவு நேரம் எதிர் வீட்டை திறந்து கொண்டு செல்கிறான் இந்த கெட்டவன்.

அனுவின் அறைக்கு சென்றான். அனு குழந்தை போல் துயில் கொண்டிருந்தாள்.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் நிலவை போல் ஜொலித்தவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு.

ஸ்லீவ்லெஸ் குட்டி டாப்பும், முட்டுக்கு கீழே சற்று நீண்டிருந்த பேன்ட்டும் அணிந்திருந்தாள். அவளின் உடையை பார்த்தவன், கீழ் இதழைக் கடித்து சிரித்துக் கொண்டான்.

அவளின் ஆடை மறைக்காத கால்களை வருடினான். அவளின் குட்டி குட்டி கால் விரல்கள் பத்துக்கும் முத்தம் வைத்தான்.

“அனு” என்று அவளின் செவியில் கிசு கிசுத்தான்.

“அ.. ம்..மா” என்று முனகியவளின் அடி வயிற்றில் தூக்கத்தில் வருடி கொடுத்தார் சுபத்ரா.

அனு அமைதியாகி விட்டாள்.

அதை பார்த்த வெற்றியின் உதட்டில் புன்னகை மிளிர்ந்தது.

அவனின் பூனைக் குட்டியை கைகளில் ஏந்திக் கொண்டான் கெட்டவன்.

அனுவுக்கு தூக்கத்தில் வானில் பறப்பது போல் ஒரு உணர்வு. அதில் அவளின் உதடுகள் அழகாக விரிந்தது.

அவளை அள்ளிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து தன்னுடைய வீட்டுக்குள் புகுந்து கொண்டான்.

வந்தவன் தன்னறைக்கு சென்றான். அவன் படுக்கும் பஞ்சு மெத்தையில் அவளை பூவை விட மென்மையாக படுக்க வைத்தான்.

அவள் அணிந்திருந்த குட்டி டாப்ஸ்ஸை, அவளிடம் அனுமதி கேட்காமல் மேலே உயர்த்தி, அடி வயிற்றில் மென்மையாக முத்தம் பதித்தான்.

அடி வயிற்றில் சில்லென்ற உணர்வு அனுவை மெதுவாக தாக்கியது. ஆழ்ந்த உறக்கத்திலும் அவளால் அந்த உணர்வை அனுபவிக்க முடிந்தது.

அவள் அறியாமல் எண்ணற்ற முத்தங்களை அவளுக்கு கொடுத்து விட்டான் கெட்டவன்.

விடியற்காலை நேரம் தூக்கம் கலைய, அனு மெதுவாக புரண்டு படுத்தாள் மெத்தையில். கண்களை திறந்தவள், வெகு அருகில் கெட்டவனின் முகம் பார்த்து பதறி எழ போக, அவனின் கையணைப்பில் இருந்தாள் அனு.

அடுத்த பதிவில் பார்ப்போம். 

இந்த எபி பிடிச்சிருந்தா குட்டி ஹார்ட் ப்ளீஸ். 

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!