மலர் -28

மலர் -28

இவன் வீட்டு வாயிலில் வந்து வெளில வாடி என்பான். இவள் ஓடி வருவாள். 

 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கு அழைத்துச் செல்வான். நிறைய பேசுவான். மனம் விட்டுப் பேசுவான். 

 ஒரு நாள் பீச்சுக்கு அழைத்துப் போனான் . நிறைய பேசினான். தான் கஷ்டப்பட்டு படித்தது, மாநிலத்திலேயே முதலாக வந்தது, கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கியது, தந்தையுடன் சேர்ந்து தொழில் கற்றுக் கொண்டது எல்லாம் பேசினான். 

 முதலில் வெறும் ஆத்தங்குடி டைல்ஸ் மட்டுமே செய்து கொண்டிருந்தவர்கள் இவன் காலத்தில் மற்ற மாநிலங்களிலும் கால் பதிக்க  ஆரம்பித்தனர். இப்போது இத்தாலியன் மார்பிளில் நம்பர் ஒன்னாக இருப்பவர்கள். அதை தவிரவும் வீட்டிற்குத் தேவையான இன்டீரியர் , பாத்ரூம் பிட்டிங்ஸ் என்று இவர்களே செய்து கொடுப்பார்கள். நேரத்திற்கு முன்னதாகவே இவர்கள் வேலையை முடித்து விடுவார்கள்  என்பதால் ஈலைட் எனப்படும் பல உயர்தர அடுக்குமாடிகளில்  இவர்களின் கை வண்ணமே இருக்கும்.

 தரை, அதற்கு ஏற்ற பெயின்டிங்,அதற்கு ஏற்ற அலங்காரங்கள், அதற்கு ஏற்ற பாத்ரூம் என்று அத்தனையும் இவர்களின் தரத்தை பேசும். அதனால்தான் சமீப காலமாக ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஹோல்டல்களிலும்  ஆனந்தன் கால் பதித்திருந்தான். 

அவனை பற்றி கேட்கக் கேட்க இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை சாதனைகளுக்கு பின்னால் இருந்த அவனின் உழைப்பு புரிந்தது. 

“நீங்க இவ்ளோ ஹார்ட் ஒர்க் பண்ணதாலதான் இத்தனை வருசம் கல்யாணம் பத்தி யோசிக்கலையா ?”

“சாப்பாடே நினைவு இருக்காது. எங்கேர்ந்து  லவ் கல்யாணம் இதெல்லாம் பத்தி யோசிக்கறது?”

மெதுவாக பின்னே வந்து கொண்டிருந்தவளை  திரும்பி பார்த்தான். காற்றில் அவள் முந்தானை அசைந்தது. அது அவனுக்கு எதை எதையோ காட்டிக் கொடுத்தது. கஷ்டப்பட்டு தன்னை  அடக்கிக் கொண்டான்.

முன்னெல்லாம் தள்ளியே நடந்தவர்கள் இப்போது அருகருகே நடக்க ஆரம்பித்தனர். உட்கார ஆரம்பித்தனர். முதல் முறை அவன் உரிமையாக அவள் அருகில் அமர்ந்த போது அவன் தொடை இவள் தொடை மீது படவும் இவளுக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது. அதேப் போலத் தான் அவள் கைகளை உரிமையாக தன் தொடை மீது அவன் வைத்துக் கொண்ட போதும். வாரத்தில் ஒரு நாள் என்று வந்து கொண்டிருந்தவன் வாரத்திற்கு இரு முறை மூன்று முறை என்று வர ஆரம்பித்தான். ஏதேதோ காரணம் சொன்னான். 

ஒரு முறை, “வா உனக்கு வைரத்தில் கம்மல் வாங்க வேண்டும்” என்று அழைத்து சென்றான். இவள் மறுப்பை ஏற்பவனா அவன் ?

வேறு ஒரு நாள், “உன்னை சும்மாதான் பார்க்க வந்தேன்” என்றான். அன்று காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தொழிலில் நன்றாக வளர தொடங்கிய காலத்தில் தந்தையின் இழப்பு தாத்தாவின் உதவி இவற்றை பற்றி சொன்னான்.

முதலில் எல்லாம் அவனின்  பேச்சும்  வரவும்  ஆனந்தமாகவே தான் இருந்தது. ஆனால்  நாள் ஆக ஆக  அவனின்  தீன்டலிலும்  மாறுதல் தெரிய ஆரம்பித்தது. இப்போதெல்லாம் அடிக்கடி  இடையை பிடித்து அருகில் இழுத்தான். அவன்  மீது மோதி  விழுவதை ரசித்தான். இடையில்  கைகள் கோலம் போடத்  தொடங்கி  இருந்தது. கண்ணடித்தான். கன்னத்தில் முத்தமிட்டான். அவளை வர்ணிக்கத் தொடங்கினான்.

ஒரு நாள்  சினிமாவிற்கு சென்றார்கள். ஆளில்லாத அந்த  இடம் அவனுக்கு வசதியாகப் போயிற்று. இடையில்  ஊர்ந்த கைகள்  மேலே  ஏறியதும் இவளுக்குத் தூக்கி  வாரிப் போட்டது. “நாந்தான்டி!” கழுத்தில் வாசம் பிடித்தான். காதைக் கடித்தான். இவளின்  உணர்ச்சிகளைத் தூண்டி  விட்டான்.

 வழக்கம்போல  இவளின் எந்த  மறுப்பும்  கெஞ்சல்களும் அவனிடத்தில் வேலை செய்யவில்லை. கண்களில்  துளிர்த்த கண்ணீரும் அந்த இருட்டில் காணாமலே  போனது. பல  பெண்களின் மன நிலையை  அந்த  நேரத்தில்  கூட  அறிந்து  கொள்ள விரும்பாத  பல ஆண்களில் இவனும்  ஒருவன். அப்படித்தான் எடுத்துக் கொள்ள முடியுமா?

 இடைவெளியில் மனைவியின் முகத்தைப் பார்த்தவன்  அறிந்து  கொண்டான்.

“என்னடி ஆச்சு?”

“இல்ல ஒன்னும் இல்ல”

இவளின்  பொய் அங்கே  பலிக்காது. அவன் ஆனந்தன்.

அடுத்து அவன் கேட்ட கேள்வியில்  இவள் விக்கித்து அமர்ந்திருந்தாள்.

 

“என்னடி புடிக்கலையா ? “

அவன் கேட்ட கேள்வியில் அவள் விக்கித்து போனாள் .

“இல்ல அப்டி இல்ல” பயத்தில் வார்த்தைகள் வரவில்லை.

“ஓ! மேடத்துக்குத்தான் என்ன புடிக்காதில்லை” அவளையே அழுத்தமாக பார்த்தான். 

“இல்ல! அதனால இல்ல. இங்க வீட்டுல..” உளறினாள்.

அவளிடமிருந்து நகர்ந்து கொண்டான். நான் பாப் கார்ன் வாங்கிட்டு வரேன். சென்று விட்டுத் தாமதமாகவே வந்தான். படம் ஆரம்பித்திருந்தது. அவன் தன்னை விட்டு விட்டுச் சென்று விட்டானோ என்று இவள் பயந்து கொண்டே இருந்தாள். அதைத் தவிரவும் அவனை எப்படி சமாளிப்பது அல்லது சமாதானப்படுத்துவது. விழி பிதுங்கிய நிலையில் பயத்துடனே அமர்ந்திருந்தாள். 

அவன் வந்தபோது படம் ஆரம்பித்திருந்தது. அவன் அவள் அருகில் வரவே இல்லை. அத்தனை முக்கியமாகப் பாப் கார்னை  காலி செய்தான். இந்த உலகத்தில் படத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற அளவில் சீரியஸாக படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான…

 இவள் எங்கே படத்தைப் பார்த்தாள்? இப்போதே வீட்டிற்கு ஓடி விட வேண்டும் என்று தானே அமர்ந்திருந்தாள். அவன் தன் கைகளைப் பிடித்துக் கொள்ள மாட்டானா என்று  மனம் ஏங்கியது.

தானாகவே அவன் தொட்டாள். மெதுவாக விலக்கிக் கொண்டான். இவள் முகத்தைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அவன். 

 ஒரு வழியாகப் படம் முடிந்தது. பயத்தில் இவளுக்கு வியர்த்திருந்தது. தலை வலித்தது.

காரில் ஏறி அமர்ந்த பின்னும் அவன் எதுவும் பேசவில்லை. அவள் ஆரம்பிக்கக் காத்திருந்தான்.

“சார்!சாரி சார்!”

“எதுக்கு ?”

“அங்க தியேட்டர்ல நடந்ததுக்கு…”

“என்ன நடந்தது ?”

அவள் பதில் சொல்லவில்லை. என்னவென்று சொல்வாள்? கணவனைப் பார்த்து என்னைத் தீண்டாதே என்றா சொல்ல முடியும்? அதிலும் இந்தச் சில நாட்களாக அவனின் தீண்டல்களுக்கு பழக்கப்பட்டிருந்தவளுக்கு ?

அவளை அதற்கு மேல் பயபடுத்த வேண்டாம் என்று நினைத்தவன் சட்டெனச் சிரித்து விட்டான். 

“என்ன உனக்குக் கம்பர்ட்டபிலா  இல்ல. அவ்ளோதானே? அதைச் சொல்லறதுக்கு  எதுக்கு பயப்படற?”

“இதோ நான் ரெடி” என்று கண்களில் கண்ணீர் வெயிட் செய்து கொண்டிருந்தது. 

“ஹே! நான் கெட்டவன்தான். இருந்தாலும் இந்த மாதிரி விஷயத்துல நான் உன்ன வற்புறுத்தமாட்டேன். செக்ஸ் புல்லா இருந்தாலும் சரி பார்ஷியலா இருந்தாலும் சரி எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ அதே அளவு உனக்கும் உரிமை இருக்கு. நீ வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உனக்கு வேண்டான்னா நீ யோசிக்காம சொல்லலாம். 

நீயா வந்து என்கிட்ட சொல்லற வரைக்கும் உன்ன தொட மாட்டேன். போதுமா ? வேண்டானா வேண்டாம் தான். பயப்படாத”

“அப்போ வேணுன்னா ?” யோசிக்காமல் சொன்னவள் டக்கென நுனி நாக்கை கடித்து  கொண்டாள் .

“நீ வந்து என்ன கட்டிக்கோ. நான் புரிஞ்சுப்பேன். இல்ல இன்னிக்கு நான் ஆரம்பிச்ச மாதிரி நீயும் செய்யலாம். நான் வேண்டான்னு எல்லாம் சொல்ல மாட்டேன் .”

ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வில் சூடான முகத்தை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள் . அவளுக்கு அப்போதே அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும். அவனோ  சீரியஸாக பேசிக் கொண்டிருந்தான்.

“உன்கிட்ட சொல்லறத்துக்கு என்ன ? எனக்கும் ரெஜிதாவுக்கும் பிரேக் அப் ஆனதுக்கு காரணமே இதுதான். அவளுக்கு என்கிட்டேர்ந்து செக்ஸ் தேவை பட்டது. ஆனா நான் கல்யாணதுக்கு அப்புறம்தாங்கறதுல முடிவா இருந்தேன். நீயெல்லாம் ஒரு ஆம்பளையான்னு  கேட்டா ? ஒருத்தன் ஆம்பளையா இல்லையான்னு காட்டறதுக்கு இதுதான் வழியா ? எங்கம்மா வீட்டை விட்டு போனபோது எங்கப்பாவுக்கு வயசு 37தான் . ஆனா அவரு வேற கல்யாணம் பண்ணிக்கல. ஏன் எங்கப்பா ஆம்பளை இல்லையா? ஆம்பளைன்னு நிரூபிக்க இது ஒண்ணுதான் வழியா ? 

அதோட செக்ஸ்ங்கறது வெறும் உடல் தேவைக்கு மட்டும்னு அவ நினைக்கறா . அது வேறு உடலை சேர்ந்தது மட்டும் இல்ல. உனக்காக நான், என்னோடது எல்லாமே இனி உனக்கும் சொந்தம்னு வாய்ல சொல்லறதை உடம்புலையும்  மாத்திக்கறோம். அடுத்த தலைமுறைக்கு நாம போடபோற வித்து. வெறும்  உடம்ப மட்டும் மாத்திக்கறதுக்கு நாம ஒன்னும் மிருகம் இல்லையே ? கட்டுப்பாடோட இருந்து பொண்டாட்டிக்கு ஆச வரும்போது அவளை திருப்தி படுத்தறதும் ஆம்பிளைத்தனம்தான். என்னால என்ன கட்டுபடுத்திக்க முடியும். அதுக்காக என்ன இன்னும் முப்பது வருஷம் காக்க வச்சுராத பொண்டாட்டி” அவன் பேசிக் கொண்டிருந்தானே தவிர அவனின் நகமும் அவள் மீது படவில்லை. 

அவனின் வார்த்தைகள் எந்த மனைவியைத்தான் சந்தோசபடுத்தாது ?

சிக்னலில் வண்டியை நிறுத்தினான். சட்டென அவன் எதிர்பாராத வண்ணம் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். 

அதிர்ச்சியானவன், “என்னடி பொண்டாட்டி இப்டி ஷாக் குடுக்கற?”

அவன் புஜத்தை கட்டிக் கொண்டு தோளில்  சாய்ந்து கொண்டவளுக்கு வாயில் வார்தைகள் வரவில்லை. வண்டியை ஓரமாக நிறுத்தினான். அவனும் அவள் இடையை சுற்றி வளைத்து கட்டிக் கொண்டான். அங்கே ஒரு பேரமைதி நிலவியது. இருவருமே அந்த தனிமையை அனுபவித்தனர். அவர்களுக்கு இனி எந்த  கான்ட்ராக்ட்டும் இல்ல. அதை அவனே சொன்னான்.

“வரு “

“ம்! “

“நமக்குள்ள இன்னும் எதுக்கு கான்டராக்ட்? வீட்டுக்கு போனதும் கிழிச்சு போட்டட்டுமா ?”

இந்தக் கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்வது? பதில் அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. அமைதியாகவே இருந்தாள். முடிவை அவனே எடுக்கட்டும்.

இனியாவும் அமிர்தா வீட்டில் தான் இருந்தாள். 

பிறகு வந்த நாட்களும் இப்படித்தான் இருந்தது. ஒரு நாள் இரவில் வந்தான். அவன் அழைத்ததும் இவள் ஓடினாள். கணவன் வரும் நாட்களில் எல்லாம் அக்கறையாகத் தலை வாரிப் பவுடர் போட்டு மைத்தீட்டிப் பொறுப்பாகத் தானி ஒப்பனை சீய்த்துக் கொள்ள ஆரம்பித்திருந்தாள் அம்ரு. இல்லையில்லை அவனின் வரு.

“என்னடி ! பவுடர் எல்லாம் போட்டுக்கிட்டு இப்படி அசத்தலா வந்து நிக்கற?”

பேசிக் கொண்டே அவள் காது மடலில் வாசம் பிடித்தான். தலையில் வைத்திருந்த ஜாதி மல்லி வாசம் தூக்கியது. 

“வரு ப்ளீஸ் வரு ஒன்னே ஒன்னு” என்று பல முத்தங்களைத் தந்து அதற்கு வட்டி போட்டி திருப்பி வாங்கி கொண்டான். இதேதான் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன? இருவருக்குமே தெரியும். இருப்பினும் அதைப் பற்றிப் பேசாமல் இந்த நொடி எனக்கு வேண்டும் என்றிருந்தார்கள். அவனுக்கு அன்னை வேண்டாம். அவளுக்கு அவன் அன்னை இல்லாத வீடு வேண்டாம். தெளிவாகத் தான் மனதளவில் இருந்தார்கள். இருப்பினும் இருவருக்குமே தேவையான முடிவை வெளியில் சொல்லத் தயக்கம். வரு தீர்மானகச்சொல்லி விட்டாள். 

“உங்க அம்மா இல்லன்னா நமக்குள்ள எதுவும் வேணாம். “சொல்லுவாளா? இதை அவள் தெளிவாகச் சொல்ல வேண்டும் 

“வரு! நான் கொஞ்ச நாள் ஊருக்குப் போறேன். ஏதாவது எமெர்ஜென்சினா தாத்தா பாட்டிய பார்த்துக்கோ அதைச் சொல்லத் தான் வந்தேன். ஊருக்குப் போனான். தினமும் இரவில் பேசினான். ஆனந்தன் இத்தனை காதல் மொழிகள் பேசுவானா ? அவனுக்கே தெரியாது. ரெஜிதாவுடன் இருந்த காலத்தில் கூட அவள்தான் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பாள். இப்போது இவள் மற்றவர்கள் எதிரில் எதுவும் பேச முடியாமல் “ம்” கொட்டிக் கொண்டிருந்தாள். அவனோ காலை எழுந்தது முதல் நடந்தது எல்லாம் கூறிக் கொண்டிருந்தான். என்ன கலர் ட்ரெஸ், என்ன மீடிங் எல்லாம் ஒப்பித்துக் கொண்டிருந்தான். இவளும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தாள். ஊருக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்தான் அப்போது இனியாவும் அமிர்தா வீட்டில் தான் இருந்தாள். வழக்கம்போல அவன் அழைத்ததும் அமிர்தா வாயிலுக்கு வந்தாள். கைநிறைய துணிகளுடன் வந்திருந்தவன் அதையெல்லாம் அவளிடம் கொடுத்தான் “இது எல்லாம் உனக்கு இது கயலுக்கு “

“இனியாவுக்கு ?”

“கயலையும் இனியாவையும் ஷேர் பண்ணிக்க சொல்லு. எனக்கு அவசரமா போகணும் நான் நாளைக்கு உன்னைப் பார்க்க வரேன்” சொல்லிவிட்டு சென்று விட்டான் அடுத்த சில நிமிடங்களிலேயே உள்ளே வந்த தோழியைப் பார்த்தாள் இனியா. இருவரும் அவன் வாங்கி வந்திருந்த துணிகளைப் பிரித்துப் பார்த்தார்கள் அப்போது இனியா தோழியின் முகத்தை ஆராய்ந்தாள்.

 “ஏன் அம்ரு! நீ சந்தோசமா தான் இருக்கியா ?” தோழியின் அழுத்தமான பார்வைக்கு என்ன பதில் சொல்வது?

“தெரியல இனியா! அவரு அப்பப்ப வராரு. வெளில கூட்டிக்கிட்டு போறாரு. அவரை பாக்கற நேரம் இந்த உலகத்துல எதுவுமே நினைவுக்கு வர மாட்டேங்குது, வேற என்ன சொல்ல ?”

“என்னடி நீ? நீ பாக்கறது வெறும் கானல் நீர். இதுவே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சொல்லு. இப்டியே இருந்தீங்கன்னா எப்படி நீங்க அடுத்த நிலைக்குப் போகறது ? நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு முடிவெடு அம்ரு.”

“எனக்கும் தெரியுது. ஆனா என்ன முடிவுன்னு தான் தெரியல. அவரு கண்டிப்பா அவங்க அம்மாவை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. இவங்கள வேறு யார்கிட்டயும் இல்ல எங்கம்மா தலைல கட்டவும் எனக்கு விருப்பம் இல்ல. எப்ப அவரு அந்தப் பொறுப்பை எடுத்துக்கலயோ அப்போ அது என்னோட பொறுப்பாகிடுது. இவங்க சாதாரணமா இருந்தா வேற. பட்  இப்ப? நான் என்ன பண்ணணுன்னு எனக்குத் தெரியலடி.

இவங்க தப்பானவங்கன்னு அவரு சொல்லறாரு. தன்னை பத்தியே தெரியாதவங்களுக்கு இந்த உருவம் மட்டும் தெரியுது. அது எப்படி? எனக்கு என்னமோ இவங்க தப்பானவர்களா இருந்திருக்க மாட்டாங்கன்னு தோணுது. ஒரு வேளை அவர் சொல்லறது உண்மையாகவே இருந்து அவங்க தப்பா இருந்திருந்தாலும் அதுக்கு எல்லாம் பழி வாங்கற நேரம் இது இல்ல.”

“நீ சொல்லறது சரிதான். ஆனா ஏதோ ஒரு  ஆம்பிளை இந்த மாதிரி வந்துட்டு போனா உன்னோட பேரு  கெட்டு போயிடாதா ? அவருதான் உனக்குப் புருஷன்னு உனக்குத்தான் தெரியும். நீங்க ஒன்னும் ஊரு கூட்டி  கல்யாணம் பண்ணல. உனக்குத் தாலியும் கிடையாது. ப்ளீஸ் டீ எனக்கு என்னவோ ரொம்ப தப்பா தெரியுது. நீ என்னிக்குமே சந்தோசமா இருக்கனும். நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு முடிவெடு. அவரு ஆம்பிள. ரெஜிதா இல்லன்னா அம்ரு. அம்ரு இல்லன்னா…

முள் மலரும் .

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!