“மாமா…” என்று பத்ரனின் கைகளை பிடித்தாள் திகள்விழி.
அவளை ஒரே உதறு உதறித் தள்ளினான் பத்ரன். அதில் பிடிமானம் இல்லாமல் தடுமாறி விழப்போனவளை அருகிலிருந்த பேபி தாங்கிப் பிடித்துக்கொண்டான்.
“டேய்!” என்று விமல் பத்ரனை நோக்கி ஆவேசமாகச் செல்ல, பேபி அண்ணனை பிடித்து நிறுத்தினான். ஆனால் பத்ரனோ அவர்களைவிட அதிகமான கோபத்தில் இருந்தான்.
“மாமாவா? திட்டம் போட்டுட்டு என் அம்மா, பாட்டியை ஏமாத்தியிருக்க. அவங்க உன்மேல உண்மையான பாசத்தைக் காட்டினாங்க. அவங்களை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்தது திகள்விழி?” ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டினான்.
“நேத்து எனக்கு உண்மை தெரிஞ்சப்போ கூட உன்கிட்ட கேட்டேன். அப்போவாவது உண்மையைச் சொல்லியிருக்கலாம் இல்லையா? வாயை திறக்காம சமாளிச்சு ஓடுன, என் மேல காதல் இருந்திருந்தா சொல்லிருப்ப!”
“பைத்தியம் மாதிரி நாங்க உனக்காகக் காத்திருந்தோம். உன்னை நம்பினோம். நீ என் குடும்பத்தோட பழகினது நாடகம்னா, என்னைக் காதலிச்சதும் நடிப்புதானே? இனிமேல் உன் காதல் நாடகம் தேவையில்லை, எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சு!”
பத்ரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுடைய இதயத்தை சுக்கலாக நொறுக்கியது!
திகள் மறுத்து பேசுவதற்குள் பத்ரன் என பெயர் பொறிக்கப்பட்டிருந்த செயினை அவளுடைய கழுத்திலிருந்து அறுத்து எறிந்தான்.
அவனிடம் இவ்வளவு கோபத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. உண்மை தெரிந்தால் கோபப்படுவான் என்று தெரியும். தன் காதலால் அவனைச் சமாதானப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை அவளுக்குள் இருந்தது.
ஆனால் இப்போது? அவளுடைய காதலையே நடிப்பு என சொல்லிவிட்டானே!
‘நடிக்க வந்தது உண்மைதான், ஆனா ஒரு நாளும் உங்க அம்மா, பாட்டிக்கிட்ட பொய்யான அன்பைக் காட்டலையே! அவங்களோட பழகின ஒவ்வொரு நிமிஷமும் உண்மைதானே!” என மனதிற்குள் கதறினாள்.
அவனாக நெருங்கி காதலித்தான், இப்போது அவனே அவளை மறுத்துவிட்டு விலகிச் செல்கிறான்.
“அபி…” என்று அபிராமியை நோக்கி ஓடினாள். ஆனால் அவளை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் மருமகளுடன் வெளியேறினார் அபிராமி.
ருத்ராவின் குடும்பம் கிளம்பியதும், அளுகையோடு நின்றிருந்த மகளை கண்டு உள்ளம் வெதும்பியது!
“திகள்… அழாதடா” என இரண்டு அண்ணன்களும் அவளைச் சமாதானப்படுத்த முயன்றனர்.
அவளால் பத்ரனின் ஒருதலைப்பட்சமான பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“எனக்கு மாமா வேணும் அண்ணா…”
என்றவள் அழுதாள்.
தரையில் கிடந்த பத்ரன் தூக்கி எறிந்த செயினை எடுத்துத் தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டாள்.
“எல்லாம் முடிஞ்சிடுச்சா அண்ணா? அவருக்கு நான் வேணாமா?” திகள் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.
தங்கையின் கண்ணீரைத் துடைத்து அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அது பார்வதி குடும்பத்துக்கு சொந்தமான பங்களா. அங்கே வந்ததிலிருந்து நிலா அறையை விட்டு வெளியே வரவில்லை. திகள்விழியும் தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்தாள்.
வீடே வெறிச்சோடிக் கிடந்தது, ஒரு வாரம் இப்படியே போக, இனியும் இருவரையும் அறைக்குள் அடைந்து கிடக்க விடக்கூடாது என்று முடிவு செய்தான் பேபி.
“போதும்! இன்னும் எத்தனை நாள் ரூம்குள்ளயே இருக்கப்போறிங்க? வெளியே போய்ட்டு வரலாம் வாங்க!”
“நான் வரல அண்ணா, நீங்க போங்க”
“எனக்கும் வர விருப்பமில்லை” என இருவரும் மறுக்க, அவர்களை முறைத்தான்.
“எல்லாம் முடிஞ்சது கேர்ள்ஸ்! சரபன் கம்மி எண்ணப்போறான், கோர்ட்ல கேஸ் ஹியரிங் வரப்போகுது. நீங்களும் நடந்ததை மறந்துட்டு ஹாப்பியா இருங்க. ரூம்ல அடைஞ்சு கிடந்தா எதுவும் மாறப்போறதில்லை. வெளியே வாங்க!” என்று வற்புறுத்தி இருவரையும் படம் பார்க்க மால் அழைத்துச் சென்றான்.
விமல் நேராக மூவிக்கு வந்துடுறேன் என்று சொல்லிவிட மூவரும் காரில் கிளம்பினார்கள். அங்கே வந்த பிறகும் திகள்விழி பழைய உற்சாகத்துடன் இல்லை.
ஒரே வாரத்தில் முற்றிலும் அமைதியான பெண்ணாக மாறியிருந்தாள்.
“திகள்… ஏதாவது பேசுடி.”
“என்ன பேசுறது பேபி?” என்றவளை அவளை முறைத்தான்.
“என்ன பேசவா? நீ ரொம்ப மாறிட்ட திகள், காதல் மட்டும் வாழ்க்கை கிடையாது. உன்னைப் புரிஞ்சுக்காத ஒருத்தருக்காக ஒரு சொட்டுக் கண்ணீர்கூட நீ விடக்கூடாது. உன்னோட வாழ்க்கை உனக்காகக் காத்திருக்கு, அதை மறந்துடாத!”
அண்ணன் சொன்ன அறிவுரை அறிவுக்கு புரிகிறது, மனதுக்கு புரியவில்லை. நிலா மெதுவாக அவளுடைய கைகளைப் பற்றினாள்.
“சாரி திகள்! என்னாலதான் உனக்கு இவ்வளவு கஷ்டம்”
“உன் மேல எந்தத் தப்பும் இல்ல அக்கா!”
நிலா கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள்.
“இப்படித்தான் ஆகும்னு முன்னாடியே தெரிஞ்ச விஷயத்துக்கு, நான் அதிகமா நம்பிக்கை வச்சிருக்கக்கூடாது. என் மனசைத் தடுமாற விட்டுட்டு, இப்போ அதுக்காக வருத்தப்படுறேன். நான் சரியாகிடுவேன், நீ கவலைப்படாத!”
“நாம பெங்களூரு போயிடலாம் திகள். கொஞ்சம் இடம் மாறினா நீ பெட்டரா ஃபீல் பண்ணுவ” என்று தங்கையைத் தோளில் சாய்த்துக்கொண்டாள் நிலா.
சிறிது நேரம் அமைதியாக இருந்த திகள் மீண்டும் பேசினாள்.
“ஒரு தடவை மாமாகூட பேசிக்கிறேன் அக்கா. ஒருவேளை கோபத்துல என்னை போக சொல்லிருப்பாரு, இப்போ கோபம் குறைஞ்சிருக்கும்ல?” என்ற எதிர்பார்ப்பை கண்ணில் தேக்கிவைத்து கேட்டவளை பாவமாக பார்த்தனர்.
“இன்னும் ஒரு மாசத்துல நீ அமெரிக்கா போகணும் திகள். ஆல்ரெடி ஒரு செமஸ்டர் முடிஞ்சிருக்கு, உன் ஸ்டடீஸை முடிக்கணும்” என்று நினைவூட்டினான் பேபி.
“நியாபகம் இருக்கு அண்ணா. ஆனா அதுக்கு முன்னாடி ஒரே ஒருமுறை அவர்கிட்ட பேசிடுறேன்” அவளுடைய மனம் இன்னும் பத்ரனைச் சுற்றியே இருந்தது.
மூவரும் மாலுக்கு வந்து இறங்கியதும் விமலும் அவர்களோடு சேர்ந்துகொண்டான்.
பெண்கள் இருவரும் ஆர்வமே இல்லாமல் கடைகளை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது நிலா தன் எதிரே வந்த ஒருவனை பார்த்து பல்லைக் கடித்தாள். அவனை கண்டதும் அவளுடைய முகம் சிவக்க ஆரம்பித்தது.
வேற யாரு அவள் அரைக்கிறுக்கு காதலன்தான்!
அவள் போறேன்னு சொன்னா விட்ருவானா? ஒருவாரம் அவளுக்கு ஓய்வு கொடுத்தவன், இதோ அவளுடைய உயிரை வாங்க மீண்டும் வந்துவிட்டான்.
அன்று வீட்டுக்கு போனதும் அனைவரும் ருத்ராவைச் சுற்றி அமர்ந்துகொண்டனர்.
“சரி ருத்ரா, இப்போ நீ உன் பக்கத்துக் கதையைச் சொல்லு!” என்று கேட்டார் அபிராமி.
ருத்ரா ஒரு பெருமூச்சோடு சொல்ல ஆரம்பித்தான்.
“ஆரம்பத்துல எனக்கு ஆரலியை பார்த்தாலே கோபம் வரும். அவ தொண தொணனு பேசுறது, எப்பவும் என் பின்னாடியே சுத்துறது, கேள்வி கேட்டுட்டே இருக்குறதுனு எல்லாமே எரிச்சலா இருக்கும்” என்றவன் இடைவெளி விட்டு சிறுபுன்னகையோடு தொடர்ந்தான்
“ஆனா ஒரு கட்டத்துக்கு மேல நான் திட்டுறேனு தெரிஞ்சும் என் மேல பாசம் காட்டுற பொண்ணை என்னால வெறுக்க முடியல. நான் எவ்வளவு கடுமையா நடந்துக்கிட்டாலும் அவளோட அரவணைக்குற குணம் மாறவே இல்ல”
“ஆரலி மேல சொல்லமுடியாத உணர்வு வந்ததும் எனக்கு என் மேலயே கோவம் வந்தது, அதுக்கும் சேர்த்து அவளை காயப்படுத்துனேன்”
“நான் நினைச்சிருந்தா அவளை வேலையை விட்டு மட்டும் இல்ல, ஊரைவிட்டே விரட்டியிருக்க முடியும். நான் அதை பண்ணல தினமும் காலையில அவ வந்துட்டாளானு தோட்டத்து பக்கம் கண்ணு போகும்!”
“அன்னைக்கு நைட் அவளோட இருந்ததுக்குப் பிறகு எனக்குள்ள சில மாற்றங்கள், அடுத்த இரண்டு நாள் நான் நானா இல்ல… அவ சின்னப்பொண்ணு தேவையில்லாம நான் யோசிக்குறேனு புரிஞ்சது, முதல்ல அவளை ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கணும். அப்புறம் என் உணர்வுகளுக்கு பெயர் குடுக்கலாம்னு முடிவு பண்ண நேரத்துல தான் ஆரலி வீட்டுல பிரச்சனைனு எனக்கு கால் பண்ணா!”
“எனக்கு அந்த கயிறு தாலினு தெரியாது பாட்டி. அப்போ இருந்த சூழ்நிலையில நானும் பெருசா யோசிக்காம அவ கழுத்துல போட்டுட்டேன். என்னை ஏமாத்திட்டாங்கன்னு தெரிஞ்சதும் வந்த கோபம் என்னை எதையும் யோசிக்க விடல” ருத்ரா தன் குரலை செருமிக்கொண்டு தொடர்ந்தான்.
“அடுத்த நாள் ஆரலியை பார்த்தப்போ அந்தக் கோபத்தை அவகிட்ட காட்டிட்டேன். ஏமாத்திட்டாங்கன்ற கோவத்துல அவளை பேசுனேனே தவிர என்னை கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு தகுதி இல்லைனு நான் பேசவே இல்லை.
அவள் அழுதுட்டே போறதை பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. எவ்வளவு கோவமா இருந்தாலும் அவளை சாகச் சொன்னது தப்புனு தோணுச்சு, இருந்தும் என் ஈகோ என்னை இறங்கி வர விடல”
“அடுத்த நாள் ஆரலி இறந்துட்டான்ற செய்தி வந்தப்போ என்னால அதை ஏத்துக்கவே முடியல. இல்ல அது பொய்! என் ஆரலி என்னை விட்டு போய்ருக்க மாட்டானு மனசு அழுத்தமான சொன்னப்போ, நான் அவளை காதலிக்கிறேனு புரிஞ்சது.
கார் எடுத்துட்டு நானே அவ வீட்டுக்கு போனேன். அங்க வழியில மண் குவியல்கள், போலீஸ் சத்தம், அழுகைச் சத்தம்னு என்னை தடுமாற வச்சது. அந்த சத்தங்கள் அவளை நான் தான் கொன்னுட்டேனு சொல்றது போல பிரம்மை… என் மனசாட்சியே என்னைக் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுச்சு” என்ற குரல் சற்றே தடுமாறிட, உடனே சுதாரித்துக்கொண்டு மீண்டும் கம்பீரமாய் தொடர்ந்தான்.
“ஆரலி எங்க தேடியும் கிடைக்கல, அவளை இழந்துட்டேன்ற கவலைல யாரையும் பார்க்காம ரூம்க்குள்ள அடைஞ்சு கிடந்தேன்.
ஒருநிமிஷம் கூட விடாம அவளோட பேச்சு சத்தம் என் காதுல கேட்டுட்டே இருந்தது. ஏகரா சார்னு அவ கூப்டுற மாதிரி! என்னால முடியல… எங்கையாவது ஓடினா போதும்னு காரை எடுத்துட்டுப் போகும் போதுதான் விபத்து நடந்தது”
“நான் பிழைச்சு, ஆரலியோட நினைவுகள்ல மாட்டியிருக்க நேரம் சரபன் அவனுக்கு சாதகமா நிறைய விஷயம் பண்ணிட்டான். ஆனாலும் எனக்குள்ள ஏதோ ஒரு குரல் ஆரலி சாகலன்னு சொல்லிட்டே இருந்தது.
சரபன் நடிக்காறானு சந்தேகம் வந்ததும் எல்லாத்தையும் விசாரிக்க ஆரம்பிச்சேன். எந்த இடத்துலயும் ஆரலி உயிரோட இருக்கான்னு உறுதியா தெரியல” என்றவன் கண்கள் சிறிது கலங்கினாலும், வெளியே தெரியாமல் மறைத்துக்கொண்டான்.
“இருந்தும் பைத்தியம் மாதிரி அவளை தேடுனேன், அப்போ தான் அவ பிணம் கிடைக்கலன்ற விஷயம் தெரிய வந்தது.
ஊரைவிட்டு போய் வேற எங்கையாவது ஒரு மூலையில் இருந்துற மாட்டாளா! ஏதோ ஒரு இடத்துல அவ கிடைச்சிட மாட்டாளானு தினமும் தேடுனேன்.
என்னை மன்னிக்க மாட்டானு தெரியும், ஏகரானு என்னைத்தேடி வரமாட்டானு புரிஞ்சும் ஆரலியை தேடுனேன். இப்போ இருக்குற நிலாவை நான் காதலிக்கல! என் ஆரலியை ஆரம்பத்திலிருந்தே நான் காதலிக்குறேன்”
அவனுடைய காதலை கேட்டு வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தார்கள்.
“சரபனுக்கு தண்டனை ஆரலி கையால கிடைக்கணும்னு அமைதியா இருந்தேன்” என்று கதையை சொல்லி முடித்தான்.
“சரிடா… நீ நல்லா இருக்கிறதை எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?” என்று ஆதங்கமாய் கேட்டார் சாம்பவி.
“இல்லம்மா! எனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த மாதிரி உங்களுக்கும் ஏதாவது பண்ணிட்டா? என் மேல இருக்கிற கோபம் உங்களைப் பாதிச்சிடக்கூடாதுனு உங்களை விட்டு தள்ளி இருந்தேன்”
சிறிது நேரம் அமைதியாக இருந்த ருத்ரா, சரபனை நினைத்ததும் மீண்டும் கோபமானான்.
“நான் சிரிச்சாலே அவங்க அப்பாவை டார்ச்சர் பண்ணுவான்மா அந்த நாய்!”
“பூபதி என்ன ஆனாருப்பா?” என்று கேட்டார் தாத்தா.
“அவரை ஹாஸ்பிடல்ல சேர்த்தாச்சு தாத்தா. இத்தனை வருஷமா தப்பான மருந்து கொடுத்திருக்கான். இனிமேல் ப்ராப்பரா ட்ரீட்மென்ட் எடுக்கணும்”
என்று பெருமூச்சுடன் முடித்தான்.
“போதும் ருத்ரா! இனிமேல் தனியா இருக்காத, நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம்” என்று மகனை அணைத்துக்கொண்டார் சாம்பவி.
ம்ம் என்றவன் எதுவும் பேசாமல் தாயின் தோளில் முகம் புதைத்துக்கொண்டான்.
பத்ரனின் முகம் சரியில்லாமல் இருப்பதை கவனித்தார் அபிராமி.
“பத்ரா நீ தானே விழியை வேண்டாம்னு சொல்லிட்டு வந்த? அப்புறம் ஏன் முகத்தை தூக்கி வச்சிருக்க? உனக்கு உண்மை எப்படி தெரிஞ்சது?”
“ம்ச்… இவன் லவ் மேட்டரை அரைகுறையா சரபன் சொல்லும்போதே எனக்கு சந்தேகம் வந்துச்சு. என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க ஆட்களை ஏற்பாடு பண்ணேன். கடைசி நேரத்துல இவன் ஆட்கள் மூலமாவே நிலா ஃபேமிலி பத்தி முழுசா தெரிஞ்சது” என்று ருத்ராவை காட்டினான்.
“அவங்க டிராமாவுக்கு நம்மளை யூஸ் பண்ணியிருக்க வேண்டாம் பாட்டி!” என்று பல்லை கடித்தான் பத்ரன்
அவனைப் பார்த்த சிரித்த ருத்ரா,
“விழி உன்னைக் காதலிக்கிறது பிளான் இல்ல பத்ரா அதை முதல்ல புரிஞ்சுக்கோ. அம்மா, பாட்டி கூட க்ளோஸாக முயற்சி பண்ணது மட்டும்தான் பிளான். நீ தான் அவளைக் காதலிக்க ஃபோர்ஸ் பண்ண, அவளும் உன் காதலை பார்த்து பதிலுக்கு காதலிச்சிருக்கா. இப்போ தப்பை முழுக்க அவ மேல திருப்புற?” என்று நக்கலாகக் கேட்டான்.
“என்கிட்ட அவளா வந்து உண்மையை சொல்லியிருக்கணும். இல்ல நான் கேட்கும்போதாவது சொல்லியிருக்கணும். ரெண்டையும் பண்ணாம எனக்கென்னனு இருந்திருக்கா, அப்போ காதல் எல்லாம் நடிப்புதான?”
“முட்டாள்! அவ உண்மையை மறைச்சது தப்பு. ஆனா அதுக்காக உன்னைப் பொய்யாக் காதலிச்சானு எதை வச்சுச் சொல்ற? உன்மேல நம்பிக்கை வச்ச தைரியத்துல, நீ அவளைப் புரிஞ்சுப்பன்னு நினைச்சு உண்மையை மறைச்சிருக்கலாம்.
நீ அவளை எந்த அளவுக்கு காதலிச்சியோ அதே அளவுக்கு அவளும் உன்னை விரும்பியிருக்கலாம். கொஞ்சமாவது யோசிச்சுப் பேசு!” என்று கண்டிப்பான குரலில் சொன்னான் ருத்ரா.
பத்ரனால் பதில் பேச முடியவில்லை.
அவன் மனதில் ஏதோ ஒன்று நெருடிக்கொண்டே இருந்தது.
“சரி நீ இப்போ என்ன பண்ணப்போற ருத்ரா?” என்று கேட்டார் அபிராமி.
“கொஞ்ச நாள் போகட்டும் பாட்டி. என் ஆரலியைத் தூக்கிட்டு வந்துடுவேன்!”
என்று சிரித்தான் ருத்ரா.
‘நீ தூக்குறதை நிறுத்தமாட்டியா?” என அனைவரும் தலையில் அடித்துக்கொண்டனர்.
பத்ரனின் மனமோ இன்னும் குழப்பத்தில் இருந்தது. குழம்பட்டும் அப்போ தானே ஏதாவது சிக்கும்.
சொன்னது போல அவள் வெளியே வந்த அன்றே முன்னால் வந்தவனை முறைத்த நிலா, ருத்ராவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அமைதியாக கடந்து சென்றாள்.
அவனோ இளைமை திரும்புதே ரஜினி போல, ஃபுல் லவ்வர் பாய் மோடில் நிலா பின்னால் ஜாலியாக சுற்றினான்.
“ஆரலி நில்லு… மஃபின்…”
நீ கிறுக்கு மாதிரி கத்து, நான் கிளம்புறேன் என அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
அப்போது பின்னால் அபிராமியின் குரல் கேட்டது. “டேய்! படம்பார்க்கணும்னு கூட்டிட்டு வந்துட்டு உன் அண்ணன் எங்க போனான்?”என்றதும் நால்வரும் திரும்பி பார்த்தனர்.
அங்கே பாட்டி, அம்மா, பத்ரன் என மூவரையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தான் ருத்ரா. அவர்களைப் பார்த்ததும் திகள்விழியின் முகம் சட்டென்று மலர்ந்தது.
“மாமா!” என்றபடி பத்ரனை நோக்கி ஓடினாள்.
அபிராமியும் சாம்பவியும் அவளைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டனர். அது இதயத்தில் சிறு வலியை ஏற்படுத்தினாலும், பத்ரனின் கைகளை பற்றிக்கொண்டாள்.
“மாமா சாரி! நான் உண்மையை மறைச்சது தப்புதான். உங்க அம்மா, பாட்டியோட நெருங்கி பழகணும்னு நடிக்க வந்தேன் தான், ஆனா என்னால நடிக்க முடியல மாமா. என் குணமே இதுதான்.
இயற்கையாகவே அவங்களோட எனக்கு ஒத்துப்போச்சு. அவங்க என்மேல காட்டின பாசம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் எதிர்பார்க்காத விஷயம் நீங்க… உங்க காதல்!” என்றவளுடைய கண்கள் கலங்கியது.
“இதெல்லாம் நடிப்பு உங்களை காதலிக்கக்கூடாதுனு என்னை நானே கட்டுப்பாடா வச்சுக்க நினைச்சாலும், உங்க காதல் என் மனசைத் தொட்டுடுச்சு. என்னால அந்தக் காதலை மறுக்க முடியல. நான் உண்மையாவே உங்களை விரும்புறேன் மாமா, என்னை வெறுத்துறாதிங்க!” என கிட்டத்தட்ட கெஞ்சினாள்.
ஆனால் பத்ரனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல், அவள் பேசுவதை கதை கேட்பதுபோல் அமைதியாக நின்று கேட்டுக்கொண்டிருந்தான். அதில் அவள் உள்ளம் பலமாய் அடிவாங்கியது.
“பதில் சொல்லுங்க மாமா! என் காதல் ஒரு நிமிஷம் கூடவா உண்மைனு உங்களுக்கு தோணல! அதுக்குள்ள என்னை மறந்துட்டிங்களா?” என்று கண்களில் உயிரைத் தேக்கி வைத்துக்கொண்டு கேட்டாள்.
“சாரி என்னை ஏமாத்துனவங்களை நினைவு வச்சுக்கிற பழக்கம் கிடையாது”
என்றவன், அடுத்ததாக சொன்ன வார்த்தை அவளுடைய இதயத்தை சுக்கு நூறாக்கியது.
“சொல்ல மறந்துட்டேன், நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்”
“விளையாடாதிங்க மாமா!”
“ஏய் முதல்ல மாமான்னு கூப்பிடுறதை நிறுத்து!” பத்ரன் கர்ஜனையில் அவளுடைய அழுகை பொங்கியது.
“உன்கிட்ட விளையாட நான் யாரு? எனக்கு கல்யாணம் நடக்கும், தயவுசெய்து இனிமேல் என்னைத் தேடி வந்திடாத!” என்றவன் விருவிருவென அங்கிருந்து வெளியேறினான்.
திகள்விழியின் கால்கள் நடுங்க, அப்படியே மடிந்து அமர்ந்து அழ ஆரம்பித்தாள். அவளுடைய அழுகையைப் பார்த்த நிலாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“பாட்டி… ஆன்ட்டி… என் தங்கச்சி ஒருநாள்கூட உங்ககிட்டப் பொய்யா நடிக்கல. வீட்டுக்கு வந்த பிறகும் அபி, பவி உங்களைப் பத்தித்தான் பேசுவா. நீங்க அவளுக்குக் கொடுத்த அன்பை எவ்வளவு சந்தோஷமா சொல்லுவானு எனக்குத்தான் தெரியும்”
“நீங்க பத்ரனை பத்தி சொல்லி அவ மனசுல ஆசையை வளர்த்தாலும் அவ மனசை திடமா வச்சிருந்தா, இப்போ அவ காதலை பத்தி பத்ரன் பேசுறதை பார்க்க எனக்கே கஷ்டமா இருக்கு”
“தப்பு என் பேர்ல இருக்கு, நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன். என்னால என் குடும்பம் கஷ்டப்பட வேண்டாம்” என அவர்கள் காலில் விழப்போனாள்.
அதற்குள் திகள்விழி அவளைக் கையை பிடித்து நிறுத்தி “அக்கா என்ன பண்ற!” என்று கத்தினாள்.
“எனக்காக நீ யார் கால்லயும் விழ வேண்டாம். நடிக்க வந்தவங்க யாரும் உண்மையான அன்போட பேசி, பழக மாட்டாங்க, பணிவிடை செய்ய மாட்டாங்க. என்னை நம்பாதவங்க எனக்கு வேண்டாம்” என உறுதியாக சொல்லிவிட்டு தன் கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
“இவங்க பேரன் என்ன என்னை தூக்கிப் போடுறது? நான் சொல்றேன் அவரு எனக்கு வேண்டாம்!” என்று சொல்லியவள், தன் கழுத்தில் பத்ரன் கொடுத்த டாலர் மட்டும் இருந்த செயினைக் கழற்றி அபிராமி கையில் கொடுத்துவிட்டு ஒரு நொடிகூட அங்கே நிற்காமல் அக்காவுடன் நடக்க ஆரம்பித்தாள்.
“நான் அவர்கிட்ட பேசுறேன் திகள். உனக்காக பேசுறதுல எனக்கு என்ன அவமானம் வரப்போகுதுடி?”
“எனக்காக நீங்க அவர் கால்ல கூட விழுவிங்கனு எனக்குத் தெரியும். ஆனா இங்க பிரச்சனை நான் உண்மையை மறைச்சது மட்டும் இல்லையே அக்கா!
நான் காதலிச்சதே பொய்னு அவர் நினைக்கும் போது, என் காதலை கத்திக் கத்தி சொல்றதுல என்ன பிரயோஜனம்?”
“கல்யாணம் பண்ணிக்கப்போறாராம்!” என்று விரக்தியான புன்னகை சிந்தினாள்.
“அண்ணா பத்துநாள்ல எனக்கு டிக்கெட் போடு, நான் அமெரிக்கா போகணும்”
என்றவள் கண்களை மூடி கார் சீட்டில் சாய்ந்துகொண்டாள். வேண்டாம் என வாய் சொன்னாலும் மனம் மட்டும் இன்னும் பத்ரனின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தது.
இங்கே மாலில்… குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த விமல், அருகில் நின்றிருந்த ருத்ராவை பார்த்து
“ரொம்பக் கஷ்டமா இருக்கும் போல பாஸ்!” என்றான்.
பாப்கார்னை வாயில் போட்டுக்கொண்டிருந்த ருத்ரா அவனை திரும்பி பார்த்தான்.
“யாருக்கு?”
“வேற யாருக்கு? உங்க இரண்டு பேருக்கும் தான்” என்று நக்கலாக சொன்னான்.
“அதுக்காகத் தனியா இருக்க முடியுமா? என் தம்பி போல கோவத்துல முடிவெடுத்து என் ஜோடியை விட்டுக்கொடுக்க முடியாது, அவனுக்கு ஆரம்பித்துல நல்லா இருக்கும் அப்புறம் போகப்போக கதறிட்டு திகளை தேடி ஓடுவான்”
“அப்போ என்ன பிளான் பாஸ்?”
“இனி மீட்டிங், பேச்சுவார்த்தை எல்லாம் வேண்டாம். நேரடியா களத்துல இறங்குறேன்!” என்றவன் கண்களில் குறும்பு மின்னியது.
விமலோ குச்சி ஐஸை சுவைத்தபடி,
‘இனி என்னென்ன கூத்து பண்ணப்போறாரோ!’ என்ற கலவரத்தோடு ருத்ராவை பார்த்தான்.
