episode 7

2012 இல் டெல்லியில் பேருந்தில் பயணித்த ஜோதி சிங் என்ற மாணவி கும்பலால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொதுவெளியில் பரவலாக பேசப்பட்டது. அது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க ஒரு முக்கிய காரணமானது.

அந்த சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தல் செய்யும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்துதல் தொடர்பாக உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட. இச்சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.

பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்கான ஒரு பெண்ணின் தலைமையில் குழு ஒன்றை நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்று இந்த சட்டம் அறிவுறுத்துகிறது. குழுவின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கவேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை தொடர்பாக பணியாற்றும் அரசு சாரா அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவரும் அந்தக் குழுவில் இடம்பெறவேண்டும்

 

பொதுவாகவே பாலியல் தொழில் செய்யும் பெண்களின் நிலையை இந்த சமூகம் பெரிய அளவில் பேசுவது இல்லை.அவர்களது மனக்காயத்துடன் உடற்காயங்களும்  நோய்களும், ஆரோக்கிய சீர்கேடும்  அவர்களது வாழ்க்கையை நரகமாக்குகின்றன. அவர்களால் அதை வெளியே பொதுவெளியில் முன்வைக்க முடிவது இல்லை.அதற்க்கு அவர்களை அனுமதிப்பதும் இல்லை. குடும்ப சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு இவர்களின் வாழ்க்கையை பற்றி கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. 

இந்தத் தொடரை படித்த எனது நெருங்கிய தோழி என்னிடம் கேட்டது தேனு ரிஷி சந்திப்பார்களா? அவர்கள் வாழ்வில் சந்தோஷம் மலருமா?இருள் என்றிருந்தாலும் மறையத்தான் வேண்டும்!வெளிச்சம் பரவத்தான் வேண்டும்!   .

ரிஷி நடப்பை பழகிக்கொண்டான்.ஆனால் அவனால் ஏற்பட்ட காயங்களுடன் வரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் ரிஷியின் நெருங்கிய நண்பனும் மருத்துவனுமான ஷங்கருக்கு புரிந்தது ரிஷியின் மன நிலை..எப்பேற்பட்ட உத்தமமான குணங்களை கொண்ட ரிஷிமன வாழ்வின் அவலங்கள் தோல்விகள் அவனது மென்மையான மனத்தை கிழித்துள்ளது..அதன் வெளிப்பாடுகள். இந்த மன அழுத்தம்.அவன் தீவிரமாக நிச்சயம் மன நல மருத்துவரை அணுக வேண்டும்.

இல்லையெனில் ,வருங்காலம் தோல்விகளையும் அவமானங்களையும் நிச்சய பரிசாக வழங்கக்கூடும்!

ரிஷியின் தனிப்பட்ட வாழ்க்கை அவனது விவாகரத்து மனுவைத் தொடர்ந்து,விரிவாக  தெளிவாக ஊடகங்களால் அலசப்பட்டது.  நிலா குடித்துவிட்டு பாரிலிருந்து வெளிவருதல் அவளது நண்பர்கள் வட்டம் அவளது நடத்தை ரிஷியுடனான அவளது உறவு நிலை இருவரது பின்னணி அனைத்துமே சினிமா துறையை அலசுவதை காட்டிலும் அதிகமாகவே அலசப்பட்டது.அனைத்தையும் தூசியை போல தட்டிச்சென்றால் நிலா. ஆனால் தொழில் துறையில் முன்னணியில் இருக்கும் ரிஷியால் இவற்றை தாங்க இயலவில்லை.சட்டத்தின் வாயிலை நாட ரிஷி விரும்பினான்.  “சும்மா விடுங்க ரிஷி,எந்த ரியாக்ஷனும் வேணாம்.தானே அடங்கிடும் .இல்லாட்டி இன்னும் பரபரப்பு கூட்டிடுவாங்க.அவங்க விற்பனையை அதிகரிக்க நாம செய்தியாக வேண்டாமே ! என்று அறிவுரை கூறினார் அவர்களது கம்பனி வழக்கறிஞர்.தான் என்னதான் யோசித்தாலும் தனது தந்தை வயதில் இருக்கும் அவரது வார்த்தைகளை மறுக்க மனமில்லாதவனாக அன்றைய நாளிதழில் அவனையும் நிலாவையும் பற்றிய சமாச்சாரங்களில் அவன் பார்வை நிலைத்தது..

அவனது தேகம் முழுதும் தீ பற்றிய வேதனை.நிலா தன் முன்னிருந்தால் அவளுக்கு இந்தக்கணம் மரணம் நிச்சயம்.

இப்பொழுதெல்லாம் ரிஷி விலை மாதர்களுக்கு அதிக பணம் கொடுத்து அவர்களை துன்புறுத்துவதில் நிலாவை பழி வாங்கிய திருப்தியை உணரத்தொடங்கிவிட்டான்.அவனது உயர் மன அழுத்தத்திர்க்கு இது வடிகாலாகிவிட்டது துர்பாக்கியமே. படுக்கையில் அவன் மனைவியிடம் கூட வன்முறையை கையாலாதவன் இதற்காகவே அதிகமாக பணம் செலவழிக்கலானான்.காயங்கள் மீறும் சமயம் அப்பெண்களுக்கு மருத்துவம் பார்க்க ஷங்கரிடம் அனுப்பி வைப்பான்.அவர்களும் மருத்துவ உதவிக்குப்பின் தங்கள் இருப்பிடம் சென்றடைவர்.ஆனால்,ரிஷிமீதான அப்பெண்களின் பயம் உயிர் மீதான பயமாக மாறி இருந்தது.பணத்திற்க்காக சதையை விற்பவர்களாயினும் அவர்களால் ரிஷியிடம் காணப்படும் வேட்டையாடும் விலங்கின் கொடூரத்தாக்குதல்களை சமாளிக்க முடியவில்லை.எந்தப்பெண்ணுடனும் கூடலில் ஈடுபட அவன் மனம் ஒப்பவில்லை.ஆனால் அவனது படுக்கையறை வக்ரங்கள்..அப்பாப்பா…

தேனு ..இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ரிஷியிடம் வரப்போகிறாள்…ஆம்! ஏற்கனவே, அவள்மீதான காழ்புணர்வை வளர்த்துக்கொண்டிருந்த சில பெண்கள் ரிஷியின் இன்றைய வடிகாலாக தேனுவை அனுப்ப திட்டம் தீட்டிவிட்டார்கள்.  இந்த மாதிரி பெண்களை சப்ளை செய்யும் கும்பலுக்கு  அப்பெண்களை விட அவர்கள் சம்பாதிக்கும் பணமே முக்கியம் எனும் பொழுது தேனுவோ  வேறு ஒரு பெண்ணோ!எல்லாம் ஒன்றுதானே! ஒரு உயிரே போனாலும் அவர்களுக்கு ம்ஹூம்..கவலை ஏதுமில்லை.  

இன்று நாளிதழை கண்டத்திலிருந்து  வெறியை அடக்கி வைத்துள்ளான் ரிஷி. இன்று இரவு வரப்போகும் பெண் நிலாவுக்கு ஒப்பானவள்..நிலாவிடம் காட்ட இயலாத பல விஷயங்களை இன்று வரப்போகும் பெண் சந்தித்தாக வேண்டும். இரவிர்க்காக ரிஷி காத்திருக்கிறான்.

தேனுவிர்க்கோ சுற்றியுள்ள சில பெண்கள் தீட்டி உள்ள திட்டம் தெரியாது..தெரிந்தாலும் வேறு வழியும் இல்லை.  அவளுக்கு ரிஷி வேத நாயகம் யார் என்றே தெரியாது .சிறிய ஊரிலிருந்து பல கனவுகளுடன் படித்து வேலைக்கு முயற்சி செயவிருந்த தருணம்  எல்லாமே மாறிப்போனது. தன் குடும்ப உறுப்பினர்களை பற்றி மட்டுமே அறிந்திருந்த அந்த சிற்றூர்  தேவதை… இன்று இரவு மாபெரும் தொழிலதிபனின் வெறிக்கு இரையாகப்போகிறாள்….நான் நடுங்குகிறேன்…இவர்களது  சந்திப்பு!விடையறியா வினாக்களுடன்…

 

ரிஷி தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான்.அவனது பாதங்கள் வழக்கத்திர்க்கு மாறாக செருப்பு அணிய மறந்திருந்தது. அவன் தனது அவமானங்களால் தன் நிலை மறந்திருந்தான்.மது சிகரெட் புகை இரண்டும் அவனுக்கு பிடிக்காது.”சை, நான் ஏன் இவற்றை பழக முடியவில்லை. என்னை முழுவதுமாக மறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எனக்கு அதற்க்கும் குடுப்பினை இல்லை போலும்.”அவன் ஆழ் மனத்திலிருந்து பெருமூச்சு வெளியேறியது.இரவு மணி பத்தை காட்டியது.

முன்னா..ரிஷிக்கு பெண்களை அனுப்பும் தரகன்..தேனுவை சாயங்காலமே அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். தேனுவிடம் அவனுக்கு என்றுமே மயக்கம்தான். தன் இருப்பிடம் அழைத்து சென்று  அவளை முற்றும் முழுதுமாய்..ரசித்துவிட்டு அவளை மீண்டும் தயார் செய்து ரிஷியிடம் கூட்டிக்கொண்டு வந்தான்..இவ்வளவு வருடங்களுக்குப் பின்னரும் தேனுவிர்க்கு அருவருப்பு தாங்க இயலாமல் கண்ணீர் வெளி வந்தது..மனத்தாலும் உடலாலும் சோர்ந்து கிடந்த அவளை தேற்றுவார் இல்லை.’இவளைப்போல போதை தரும் மதுவும் இல்லை,மாதுவும் இல்லை’ என முன்னா மனம் அவளை இன்னொருமுறை அனுபவிக்க துடித்தது..ஆனால் முடியாது.இன்று இரவு இவள் ரிஷியின் படயல்..நாளை,  இவளை எந்த கோலத்தில் காண்போமோ என உள்ளூர எண்ணியவனாக தனது மகிழ்வுந்தை செலுத்தினான். தான் வரும் இடம் எதுவென்பதைக்கூட அறியாதவளாக  அரைமயக்க நிலையில் கண்ணீர் கோடுகளுடன் அவளை காண்போருக்கு நிச்சயம் பரிதாபம்வரும். முன்னாவோ “இங்கப்பாரு தேனு…கஸ்ட்டமர் முன்னால இந்த நாடகம் வேணாம்..முகத்த சரி பண்ணு…எனக்கு பைசா முக்கியம்” என்று மிரட்டினான்.  சொன்னதை செய்யாவிட்டால் பின்னர் என்னவெல்லாம் நடக்கும் என உணர்ந்திருந்த தேனு அவசரமாக முகத்தை ஒப்பனைகள் மூலம் சரி செய்துக்கொண்டாள் .

 

எத்தனை பேர் எத்துணை விதமாக பேசினாலும் தேனுவின் பெற்றோர் தங்களது வளர்ப்பை அவர்கள் சந்தேகம் கொள்ளவில்லை.வெகு காலங்கள் கடந்தபின்னர் தாய்மைபேறை அடைந்திருக்கும் தேனுவின் அக்கா மதிக்கு தன் சிறு தங்கையின் முகம் அதிகமாய் நிழலாடியது! தேனுவை பற்றிய அவளது ஏக்கம் தன் தங்கையை ஒத்த பெண்குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என ஏங்கியது.  காணாமல் போன தங்கையை தன் பிறக்கப்போகும் குழந்தையை கொண்டு ஈடு செய்ய இயலுமா?  தேனு இங்கிருந்தால் என்னை தன் உள்ளங்கையில் தாங்கியிருப்பாளே! என்ன ஆயிற்று அவளுக்கு? ஜோசியர் சொன்ன மூன்றாண்டுகள் முடிந்த பின்னராவது கிடைப்பாளா,என வேவேறு எண்ணங்களின் போக்கில் மதி வீட்டின் வாசலில் கோலம் இட்டாள்.தேனுவுடன் அவள் சேர்ந்து இட்ட கோலங்கள்தான் அழிந்து போயீனவே!

 

உத்தம்பூர் காவல் நிலையம்! பெண்புலி காவல் அதிகாரியாக வந்திருக்கிறதோ என்று அச்சப்படும் அளவிர்க்கு ஐ.பி.எஸ் முடித்து அதிகாரியான  சாரதா விஜயசந்திரன் ஐ.ஜி யாக பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகிறது! விஜயசந்திரனை ஐ.பி.எஸ் முடித்த அடுத்த வருடமே  திருமணம் செய்துக்கொண்ட சாரதாவிர்க்கு ஏனோ ஆண்கள் செய்யும் தவறுகளை எளிதில் மன்னிக்க முடிவதில்லை..அவர் பொறுப்பேற்ற பின்னர் தன் மனையாளை அடிக்கவும் உத்தம்பூர் ஆண்கள் நடுங்கினர்.அவ்வளவு கண்டிப்புடன் செயல்பட்டது அங்கிருந்த காவல் நிலையம். சென்னையை அடுத்த செங்கல்பட்டை சொந்த ஊராகக் கொண்ட சாரதா ஐ.பி.எஸ் பயிற்சி சமயம் உடன் பயிற்சிக்கு வந்த விஜயனை சந்தித்தாள். விஜயன் கேரளத்தை சேர்ந்தவன்.இப்பொழுது அவன் இருப்பதோ அமைச்சரின் அந்தரங்க பாதுகாப்பு நிர்வாகத்தில்சென்னையில்.இருவரும் சந்திக்கும் தருணங்கள் மிகக்குறைவு எனினும் அவர்களுக்குள்ளான காதல் அதிகமே!

 

விஜயனின் தந்தையும் வேதநாயகமும் தொழில்முறை  பங்குதாரர்கள்.குடும்ப நண்பர்களும்கூட. தொழிலில் அதிக ஆர்வமில்லாத விஜயன் காவல்துறைக்கு வந்துவிட்டான்.அவனது அண்ணன் தந்தையுடன் தொழிலில் இருக்கிறான்..ஆனால் விஜயனுக்கு தோழன் அதுவும் மிக நெருங்கிய தோழன் ரிஷி. அவனது உதவியுடந்தான் சாரதாவை கைபிடித்தான் விஜயன்.தொழில் குடும்பத்தில் சம்மந்தம் வைக்க விஜயனின் தந்தை சந்திரன் விரும்பினார்..ரிஷியினது ஒரு வார்த்தைக்கும் மரியாதை அதிகமே. தெரிந்த நபர்களுக்கு அவன் போல தன் பிள்ளை இல்லை எனும் எண்ணம் நிச்சயம் வரும்.  ரிஷியின் திருமணத் தோல்வி விஜயனிடம் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருந்தது. தன் மனத்தாங்கல்களை தன் மனையாளிடம் பகிர்ந்து கொள்ளவும் தவறவில்லை..சாராதவிர்க்கும் வருத்தம் கலந்த ஆச்சர்யமே! இப்பேற்பட்ட ஒருவன் தன் மனைவியிடம் ஏமாறுவானா? என்றும் குடும்ப வாழ்வில் நம்பிக்கையை அடித்தளமாக வைத்துதான் மற்ற அனைத்து நிகழ்வுகளும் ரிஷியின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது நிலாவின் தவறு எனவும் அவள் மனம் இரு வேறு திசைகளில் யோசித்தது..எப்படி ஆயினும் ஆண்கள் பற்றிய அவளது எண்ணத்தில் இப்படியும் ஆண்களில் இருப்பார்கள் எனும் எண்ணம் வந்திருந்தது.  வரும் காலத்தில் அவளது எண்ணத்தை மீண்டும் ரிஷி மாற்றி அமைக்காமல் இருந்தால் சரி.!

 

தன் முகத்தை அழுந்த துடைத்து முகபூச்சு சரி செய்து தன்னுள் மரித்தவலாய் தன்னை மறந்தவளாய்..உயர் ரக மகிழுந்தில் முன்னாவுடன் மனம் வெட்கியவளாக தனது பிரயாணத்தை தொடர்ந்தாள் தேனு.அவளது உடலில் இருந்து வெளிப்பட்ட சந்தன நறுமணம் தொலைவிலிருந்தே  ஈர்த்தது…குதறும் வெறியுடன் நடை பயிலும் ரிஷிக்கு இவையெல்லாம் ஏதேனும் உணர்வைத் துண்டுமா? புரியுமா என்பது கேள்வியே.!  

 

ஒருவாறு இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தேனு ரிஷியின் இருப்பிடத்தை அடைந்தாள்.  முன்னாவை நோக்கி  ஒரு அருவருத்த பார்வையுடன் கண்ட ரிஷி பெரிய ரூபாய் நோட்டுக் கட்டை வீசி எறிய  தேனுவிடம் ஆண்மையைக் காட்டும் அந்த வீரன் கூழைக்கும்பிடு போட்டவாறே விரைந்தான். தேனுவின் புருவம் ஒருவித நெறிப்புடன் மேல்நோக்கி உயர அதுவும் ரிஷியின் கண்களில் இருந்து தப்பவில்லை. மீண்டும் தேனுவின் பிரயாணம் புனே நோக்கி தொடங்கியது..ஆம்..ரிஷி தானும் நிலாவும் தங்கியிருந்த அதே புனேவிற்க்கு இன்று இவளை அழைத்துச் செல்கிறான்.இப்பொழுது தனியாக அங்கும் ஒரு பிளாட் வாங்கி விட்டான்.யாருமே அவனை கேள்வி கேட்க முடியாது.அதே இரு நாட்கள்…அவனது கோபாவேசம் இவளை காயப்படுத்துவது உறுதி..மாற்றுமருந்து?

 

மும்பையிலாவது ஷங்கர் இருக்கிறான்..புனேயில் இரண்டு நாட்களில் அவளை உயிருடன் மீட்க இயலுமா என்பதே புரியவில்லை.

ரிஷியின் மெர்சிடிஸ் எஸ்.320 அந்த இரவு வேளையிலும் வேகமாக புனே நோக்கி பறந்தது… ஒருவிதத்தில் ஆச்சர்யமாகவும் மறுபுறம் வயிற்றின் அடியில் பயப்பந்து உருளுவதாகவும் உணர்ந்தாள் தேனு..இந்தப்பயணம் அவள் வாழ்வில் மாபெரும் நிகழ்வுகளை ஏற்படுத்தப்போவது ரிஷி தேனு இருவருக்குமே தெரியாது.விடை காணா ஒரு மாபெரும் புரிதலை ரிஷி அனுபவிப்பான் என்று அவனுமே நம்பவில்லை.அவனது இரட்டை படுக்கையறைகள் கொண்ட பிளாட் உயர் நிலையில் சமூகத்தில் வாழும் மக்களுடையது.  ரிஷியின் வீட்டில் எது நடந்தாலும் நாகரீகப் போர்வையில் ஒருவரும் எட்டிப்பார்க்கப் போவதில்லை..இதுதான் இன்றைய நாகரீகமோ!  

உத்தம்பூர் எனது கற்பனையே..நிஜத்தில் அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று சரியாகத்தெரியவில்லை.. நான் தேடியவரை கிடைக்கவில்லை.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!