26. ராட்சசனின் காதல் பாவை
போன பகுதியில்:
“இதுக்கு மேல எங்களுக்கு வேற எதுவும் தெரியாது சார். நீங்க எங்களைக் கொன்னாலும் இதுதான் எங்களுக்குத் தெரிஞ்சது” என்று சொன்னான் அவன்.
இனி…
அதைக் கேட்ட சுனில், அவர்கள் இருவரையும் விடும்படி தனது ஆட்களுக்கு உத்தரவிட்டான். உடனே அவர்கள் இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர். ஆனால், மீதி இருந்த இருவரையும் மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கினார்கள். அதில் ஒருவனோ,
“ஐயோ, நிறுத்துங்க! இதுக்கு மேல என்னால முடியாது. நான் அது யாருன்னு சொல்லிடுறேன். தயவுசெய்து என்னை அடிக்காதீங்க” என்று சொன்னான்.
அதைக் கேட்ட பக்கத்தில் இருந்தவன்,
“இதோ பாருடா, நம்ம மாட்டுனா கூட அவரைப் பத்திச் சொல்லக் கூடாதுன்னு சொல்லி பணம் கொடுத்தார் இல்ல. இப்போ என்ன, இந்த அடிக்கு அவரைப் பத்திச் சொல்லப் போறியா?” என்று எகிறினான் இன்னொருவன்.
“இதோ பாரு, உனக்கு குடும்பம்னு ஒன்னு இல்ல. நான் ஏதோ கொஞ்சம் அடி அடிச்சிட்டு விட்டுருவாங்கன்னு பார்த்தேன். ஆனா, இவங்க அடிக்கிறதைப் பார்த்தா என் உயிரே இங்க போயிடும் போல இருக்கு. நான் பணத்துக்காகப் பார்த்தா என் குடும்பத்தை யார் காப்பாத்துறது? இதுக்கு மேல என்னால அடியைத் தாங்க முடியாது. நான் அவங்ககிட்ட உண்மையைச் சொல்லத்தான் போறேன்” என்று சொன்னான் அவன்.
“வேணாம்டா, அப்புறம் உன் குடும்பமே இருக்காது” என்று சொன்னான் இவன்.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன் சுனிலைத் திரும்பிப் பார்த்தான். அவனும் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வை தங்கள் மீதுதான் இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவன் பேசத் தொடங்கினான்.
“சார், சார்! இதைச் செய்யச் சொன்னது வேற யாரும் இல்ல. குகன் சார்தான்” என்று சொன்னான் அவன்.
அவன் சொன்னவுடன் ஒருவன் வந்து அவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டு, அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
ஆனால், இன்னொருவனோ அப்படியே இருக்க, தன்னையும் அவிழ்த்துவிடுவார்கள் என்று நினைத்தவன் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் அந்த இருவரும் மீண்டும் அடிக்கத் தொடங்கினார்கள். அதில் அலறியவன் சுனிலிடம் கெஞ்சத் தொடங்கினான்.
“அதான் உங்களுக்குத் தேவையானதெல்லாம் கிடைச்சிருச்சு இல்ல? எதுக்கு மறுபடியும் என்னைப் போட்டு இப்படி அடிக்கிறீங்க? அவனை மட்டும் விட்டுட்டீங்க. என்னை மட்டும் போட்டு அடிக்கிறீங்க. என்னை விடுங்க” என்று கேட்டான்.
“அது எப்படி உன்னை விட முடியும்? நான் கேட்கும்போதே ஒழுங்கா சொல்லியிருந்தா பரவாயில்லை. ஆனா, என்ன ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சீங்க. ஆனாலும் அவன் ஒரு கட்டத்துல சொல்லிட்டான். சொல்ல வந்தவனையும் நீ சொல்லக்கூடாதுன்னு தடுத்த இல்லையா? அப்படி இருக்கும்போது உன்னை நான் எப்படி விடுறது? என்ன சொன்ன? நாளைக்கு நாங்க ஹெட்லைன்ல வருவோமா? நாளைக்கு ஹெட்லைன்ல வரப்போறது நீதாண்டா” என்று சொன்னான் சுனில்.
தனது ஆட்களைப் பார்த்துக் கண் அசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
ஏற்கனவே குகனின் மீது சந்தேகத்தில்தான் இருந்தார்கள். இப்போது அவன்தான் என்று முழுவதுமாகத் தெரிந்துவிட, அதை விதுரனிடம் சொல்வதற்காக சுனில் வந்து கொண்டிருந்தான். அப்போது சுனிலின் போன் அடித்தது. அதை எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ சார், அந்த வீடியோ எடுத்தவனை நாங்க தூக்கிட்டோம். இப்போ அவனை எங்க கூட்டிட்டு வர்றது?” என்று கேட்டனர் அடியாட்கள்.
“அவனை நம்ம குடோனுக்குக் கூட்டிட்டு வந்துருங்க. மத்ததை நான் அப்புறமா சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் சுனில்.
அதே நேரம், இங்கு ஆபீஸில்…
விதுரன் சென்று தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். எப்போதும் வேலையில் கவனத்தைச் செலுத்துபவனுக்கு இன்று வேலையில் கவனமே செல்லவில்லை. அதில் கடுப்பானவன், எப்போதும் வேலை நேரத்தில் மதுவைப் பற்றிச் சிந்திக்காதவன், இன்று மதுவின் நினைப்பும் அவனை வந்து சேர, இதற்கு மேல் தன்னால் இங்கு இருக்க முடியாது என்று நினைத்தான்.
உடனே சுனிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று மெசேஜ் செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினான்.
அவன் எப்போதும் செல்லும் பப்புக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் நேராக வந்தான். இவன் வந்ததைப் பார்த்து மேனேஜர் வேகமாக ஓடி வந்தான்.
“சார், என்ன இப்போ வந்திருக்கீங்க?” என்று கேட்டான்.
ஆனால், அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாதவன், எப்போதும் தான் அமரும் இடத்திற்கு வந்தான் விதுரன். அவன் பின்னாலேயே வந்த மேனேஜர், இதற்கு மேல் ஏதாவது கேட்டால் தனக்குத்தான் பிரச்சனை என்று நினைத்து அவன் முன்பு அமைதியாக நின்றான்.
இவ்வளவு நேரம் இவன் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாத விதுரன், இப்போது அவனைப் பார்த்துச் சில மதுபானங்களை ஆர்டர் செய்தான். அதைக் கேட்ட மேனேஜரும் எந்த மறுப்பும் சொல்ல முடியாமல் உடனே மதுபாட்டில்களை அவன் முன்பு அடுக்கினான்.
மது பாட்டில்களை வைத்ததுதான் தாமதம். அடுத்தடுத்து இரண்டு மூன்று பாட்டில்களைத் தனது வாயில் சரித்திருந்தான்.
அவனுடைய மனநிலையோ ஒரே நேர்கோட்டில் இல்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. அவன் கண்களை ஒரு நிமிடம் மூடினாலே பெண்ணவளின் கண்கள் அவன் கண்ணுக்குத் தெரிய, அதில் கடுப்பானவன் இன்னும் ஒரு மதுபாட்டிலை எடுத்து சரித்தான்.
அப்போது அங்கு விதுரன் எப்போதும் வந்தால் அவனைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே ஒருத்தி இருப்பாள். விதுரன் வந்திருப்பதைக் கேட்டவுடன் அவள் வந்தாள்.
அங்கு வந்தவள், அவன் மது அருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவனிடம் நெருங்கி, அவனுடைய தேகத்தோடு தன் தேகத்தை உரசியபடி அமர்ந்தவள்,
“என்ன, இந்த டைம்ல வந்திருக்கீங்க?” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள்.
அவனோ வேறு யாரோ கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல், மது பாட்டிலை மீண்டும் வாய்க்குள் சரித்தான்.
இன்னும் அவனிடம் நெருங்கியவள், மெல்ல அவன் அணிந்திருந்த கோட்டைக் கழற்றினாள். அதற்கு அவனிடம் எந்த மறுப்பும் இல்லாமல் போக, கோட்டைக் கழற்றியவள் முன்னால் வந்து அவனை நெருங்கினாள். தன் முன்னழகை அவன் முகத்தில் உரசும்படி சென்றவள், பின்பு அவன் கழுத்தோரம் தன் விரல்களால் வருடிவிட்டாள்.
அதற்கும் அவனிடத்தில் எந்த மறுப்பும் இல்லாமல் போக, மெல்ல மெல்லத் தன் விரல்களால் கோடிட்டு வந்தவள், அவன் ஷர்ட் பட்டன்களைக் கழற்றி, அவன் மார்புக்கு மத்தியில் தன் இரண்டு கைகளையும் அவனுடைய ரோமத்துக்குள் புகுத்தி, விரல்களை விளையாடச் செய்தாள்.
அதுவரை அமைதியாக இருந்தவன், சட்டென்று அவளுடைய பின்னந்தலையைப் பிடித்து இழுத்து, அவள் கழுத்தில் முகம் புதைத்திருந்தான்.
என்னவோ அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள் போல், அவளுடைய கைகள் அவன் பின்னந்தலையை வருடின. அதில் இன்னும் பித்து பிடித்தவன், தன் பற்களால் அவள் கழுத்தில் அச்சாரம் விட, அதில் அவளுடைய முனகல் சத்தம் அதிகமானது.
அவனுடைய தேடல் கொஞ்சம் கொஞ்சமாக அவள் உடலில் தொடங்க, அவளுடைய முனகல் சத்தமும் அதிகமானது. அது பிரைவேட் அறை என்பதால், இவனுடைய அனுமதி இல்லாமல் யாரும் அங்கு வரமாட்டார்கள்.
அவள் கழுத்தில் அச்சாரம் இட்டவன், அவள் உடலில் தன் தேடலைத் தொடங்கலாம் என்று நினைத்தாலும், அது அவனால் முடியாமல் போனது. அதில் கோபம் கொண்டவன், அவளை ஒரே தள்ளாகத் தன்னிடமிருந்து தள்ளினான்.
“கெட் லாஸ்ட்” என்று சொன்னான் விதுரன்.
அவனிடம் உணர்ச்சிகளோடு நெருங்கியவள், அவன் தள்ளிவிட்டதில் அதிர்ச்சியில் இருந்தாள். இப்போது அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள். இருந்தும் தன்னை ஒரு அளவுக்குச் சமாதானம் செய்துகொண்டு அவனை நெருங்கினாள்.
அவள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தவன் சிங்கம் போல் கர்ஜித்தான்.
“கெட் லாஸ்ட், ஐ சே!” என்று சொன்னான் விதுரன்.
அதில் அவனுடைய கோபம் அப்பட்டமாகத் தெரிய, இதற்கு மேல் இங்கு இருந்தால் தன் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தவள் உடனே அங்கிருந்து சென்றுவிட்டாள்.
ஆனால், விதுரனுக்குத் தனது மனநிலை ஏன் ஒரே இடத்தில் இல்லாமல் அலைபாய்கிறது என்று புரியவில்லை. அதில் இன்னும் கோபம் கொண்டவன் மதுவை அருந்திக் கொண்டே இருந்தான்.
இப்படியே ஒரு மணி நேரம் சென்றிருக்க, மெல்ல அவனுக்குப் போதையும் ஏறியது. ஆனால், அவனைப் பார்த்தால் குடித்தவன் போல் தெரியவில்லை.
அங்கிருந்து கிளம்பியவன், இந்த முறை ஹோட்டலுக்கோ பீச் ஹவுஸுக்கோ செல்லாமல் தனது வீட்டிற்குச் சென்றான். இல்லை, இல்லை… அவனுடைய மாளிகைக்குச் சென்றான்.
பப்பில் இருந்து கிளம்பியவன், ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு அவனுடைய வீட்டை வந்து சேர்ந்தான். அவனுடைய காரைப் பார்த்த வாட்ச்மேன் வேகமாக அந்தப் பிரம்மாண்டமான கேட்டைத் திறந்தான்.
அதனுள் அந்தக் கார் நுழைந்தது. வீட்டிற்கும் அந்தக் கேட்டிற்கும் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் கூட இருக்கும் என்று சொல்லலாம்.
இவனுடைய கார் உள்ளே நுழைந்ததும் அங்கு வேலை செய்யும் ஆட்களுக்குப் பதற்றம் அதிகமானது. இதுவரை இந்த நேரத்தில் அவன் வீட்டிற்கு வந்ததே கிடையாது. அதுவும் இல்லாமல், அவன் எப்போதும் இரவில் மட்டுமே வருவான். அதுவும் எப்போதாவது ஒருமுறைதான். ஆனால், இன்று பகலில் வந்திருப்பதைப் பார்த்து அனைவருக்கும் வியப்பாகத்தான் இருந்தது.
அவன் வந்ததைப் பார்த்து வியப்பு மட்டுமில்லை, பயமும் கூடவே சேர்ந்துகொண்டது. அவரவர் வேலைகளைக் கவனமாகச் செய்யத் தொடங்கினார்கள்.
அவன் வீட்டை அடைந்திருக்க, காரில் இருந்து கீழே இறங்கினான். அங்கு வேலை புரியும் ஆட்கள், காவலுக்கு நிற்கும் காவலர்கள் என்று அனைவரும் சல்யூட் அடித்தனர். ஆனால், இவனோ இதையெல்லாம் எனக்குத் தேவையே இல்லை என்பது போல் வேகமாக வீட்டுக்குள் நுழைந்து மாடிப்படி ஏறினான்.
சரி, வாங்க! இந்த வீட்டைப் பத்திச் சின்னதா பார்த்துடுவோம். ஏன்னா, நாளைக்கு நமக்கு யூஸ் ஆகும்.
அந்த வீடு கிட்டத்தட்ட பல ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. அதை வீடு என்று சொல்லாமல், அந்தக் காலத்து ராஜாக்களின் அரண்மனை என்றே சொல்லலாம்.
கேட்டில் இருந்து வீட்டிற்குச் சுமார் மூன்று கிலோமீட்டர் இருக்கும். போகும் வழியெல்லாம் பூந்தோட்டங்கள். அதற்கு நடுவில் வீடு… சாரி, மாளிகை!
அந்த மாளிகை பத்து தளங்களைக் கொண்டது. அதில் இவனுடைய அறையோ பத்தாவது தளத்தில்தான் அமைக்கப்பட்டிருந்தது.
அந்தத் தளம் முழுவதும் இவனுக்குத் தேவையானவை மட்டும்தான் இருந்தன. ஸ்டடி ரூம், ஜிம், ஆபீஸ் ரூம் என்று இன்னும் சில அறைகள் இவனுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தன.
அந்த வீட்டைச் சுற்றி ஆங்காங்கே தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இது போதும். இதற்குப் பிறகு நமக்கு எப்போதாவது தேவைப்படும்போது பார்த்துக்கலாம்.
காதல் பாவை தொடரும்…
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
இப்படிக்கு,
உங்கள் அன்புத் தோழி…
