அன்னபூரணியின் அழுகை சத்தம் அந்த இருள் சூழ்ந்த குடோனில் எதிரொலித்தது.
குடோனுக்கும் காது இருந்திருந்தால், அவளின் அழுகுரல் கேட்டு கண் கலங்கியிருக்கும். இருட்டு குடோனில் அவளின் அழுகுரல் மட்டும் இன்னும் நிற்கவில்லை.
நேரம் ஆக, ஆக அன்னபூரணிக்கு வயிற்றில் பயப்பந்து உருண்டது. இது நாள் வரையிலும் இரவு நேரம் தனியாக இருந்து பழக்கம் இல்லாதவளுக்கு, குடோன் மரண பயத்தை காட்டியது.
நடு இரவில், கையில் மது பாட்டிலோடு அன்னபூரணியை நெருங்கினான் காளி.
அழுது, அழுது சோர்ந்து போன முகத்தோடு லேசான மயக்கத்தில் கிடந்தாள் அன்னபூரணி.
அவளின் முன்னால் மண்டி இட்டு அமர்ந்த காளி, அவளின் நெற்றியில் வியர்வையில் குளித்த முடி கற்றைகளை காதோரம் தள்ளி விட்டதில் துள்ளி விழுந்தாள் அன்னபூரணி.
அவளின் பயத்தை ரசித்த காளி, கையில் இருந்த மதுவை ஒரே வாயில் சரித்துக் கொண்டான்.
இப்பொழுது முன்னால் இருக்கும் மாதுவின் கன்னங்களை மென்மையாக வருடினான்.
கட்டிப் போட்டிருந்த தன் கைகளால் காளியின் கைகளை சிரமப்பட்டு தள்ளி விட முயற்சி செய்தாள் அன்னபூரணி.
அவனுக்கோ அவளின் செய்கையில் சிரிப்பு வர, குடோன் அதிரும் வரை சத்தமாக சிரித்தான்.
பயத்தில் எச்சில் விழுங்கி, நெஞ்சு குழி ஏறி இறங்க, கண்களில் இருந்து வழியும் நீரோடு, உதடுகள் துடிக்க, “ப்ளீஸ், விட்டுருங்க!” என்று திக்கி, திணறி கூறினாள் அன்னபூரணி.
அவளின் வார்த்தை கேட்டு இன்னும் சத்தமாக சிரித்தவனின் கண்கள் போதையில் சிவக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால், அவனின் கண்களுக்கு மெழுகு பொம்மை போல் அன்னபூரணி மட்டும் தெரிய, காட்டு மிருகத்தை விட மோசமாக அவன் நடந்து கொண்டான்.
அன்னபூரணியின் கைகளையும், கால்களையும் இன்னும் அழுத்தமாக இறுக்கி கட்டினான் காளி.
ஏற்கனவே நன்றாக சிவந்து எரிச்சலைக் கொடுத்த அன்னபூரணியின் கைகளும், கால்களும் இப்பொழுது உயிர் போகும் வலியை அனுபவித்தது.
அந்த இரவு அவள் வாழ்க்கையிலேயே மிக மோசமான இரவாக மாறியது. அவன் கொடுத்த கொடுமைகளை தாங்க முடியாமல், ஜடம் போல் கிடந்தாள்.
நிமிடங்கள் கடக்க, கடக்க அன்னபூரணியின் உடல் மரத்து விட்டது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.
அந்த மிருகம் தன் கொடுமைகளை முடித்து விட்டு எழுந்து நின்று சத்தமாக சிரித்தது.
“என்னை எதிர்த்து கேள்வி கேட்க இங்கே ஒரு கொம்பனும் இல்லை. இது என்னோட ஊர். நான் வச்சதுதான் சட்டம். காக்கி சட்டை போட்டவன் கூட என்னை கேள்வி கேட்க முடியாது. இனிமே உன்னை கூட்டிட்டு போக எவனும் வர போறதும் இல்லை!” என்றவனுக்கு, அன்னபூரணியின் மேல் வந்த கோபம் மட்டும் இன்னும் தீரவில்லை.
அதனால், அவளை அப்படியே தூக்கிக் கொண்டு காரில் போட்டான். அவளும் ஒரு உயிர் என்று அவன் நினைக்கவில்லை. அவளை வெறும் பொருளாக மட்டுமே பார்த்தான்.
இதோ அவளை துண்டை (டவல்) போல் தோளில் போட்டுக் கொண்டு தன்னுடைய மாளிகை போன்ற பெரிய வீட்டுக்குள் நடந்து வந்தான்.
அவனைக் கண்டதும் வீட்டில் இருந்த பணியாட்கள் அனைவரும் பயந்து நடுங்கி ஓரமாக நின்றிருந்தனர்.
அவனின் மாளிகை போன்ற வீட்டில் எண்ணற்ற பணியாட்கள் வேலை செய்கின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் பணியாட்களே இல்லை. அவனிடம் பணம் வாங்கி திருப்பி தராதவர்களை அடித்து இழுத்து வந்து இங்கே வேலையாட்களாக அடிமை படுத்தி வைத்திருக்கிறான் இந்த காளி.
இப்பொழுது அவனிடம் சிக்கிய சிறு பெண்ணை பார்த்ததும் அனைவர்க்கும் பரிதாபம் வந்தாலும், அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாத சூழல்.
விழிகளை விரித்து அவனை அதிர்ச்சியாக பார்க்கும் அடிமைகளை பார்த்தவன், “இவளை தப்பிக்க வைக்க இங்கே யாராவது பிளான் பண்ணிங்கனு தெரிஞ்சா, அவங்களோட உடம்புல உயிர் இருக்காது!” என்று கர்ஜித்து விட்டு தன்னறைக்கு சென்று அன்னபூரணியை கட்டிலில் போட்டான்.
கரும்பு மெஷினில் மாட்டிய சக்கையாக கிடந்தாள் அன்னபூரணி.
உடலில் அசைவு இல்லை. சுயநினைவு இல்லாமல் இருந்தவள், கண் திறக்கும் நேரம் அவளின் அருகில் உணவு தட்டு இருந்தது.
மெதுவாக உடலை அசைத்தவளின் உடல் உறுப்புகள் மரணத்தை தொட்டு மீண்டது.
அறை வாசலில் நின்ற பெண்மணி, அன்னபூரணி எழுந்ததை கவனித்து விட்டு அவளின் அருகில் வந்தார்.
“ஐயா உங்கள சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னாரு ம்மா. நைட் வருவாராம்!” என்று உடைந்த குரலில் கூறும் பெண்மணியை நிமிர்ந்து பார்த்த அன்னபூரணியின் விழிகளில் அதிர்ச்சியும், அதை விட அதிகமான வலியும் தெரிந்தது.
“சுபாம்மா!” குரலும் உடைந்து விட்டது அவளுக்கு.
அவரின் விழிகள் கசிந்தாலும் அதை கட்டுப்படுத்திக் கொண்ட சுபாவின் தாய், பதில் கூறாமல் சென்று விட்டார். ஏனெனில் எப்பொழுதும் காளியின் ஆட்கள் அங்கும் இங்கும் கையில் துப்பாக்கியோடு சுற்றி கொண்டிருப்பார்கள்.
சிறு பெண்ணாக இருந்த அன்னபூரணிக்கு ஓரளவு விஷயம் புரிந்து விட்டது.
வேலைக்கு செல்கிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு செல்லும் தன் ஊர் பெண்மணிகள் அனைவரும் இந்த காளியின் வீட்டில் அடிமைகளாகதான் வேலை செய்கின்றனர்.
குலுங்கி அழுதவளுக்கு மன வலியை விட, உடல் வலிதான் அதிகமாக இருந்தது.
தினம், தினம் இரவு அவளை கட்டி போட்டு சித்திரவதை செய்தான் காளி.
காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் உணவு அவளை தேடி வரும். இரவு நேரம் மட்டும் அவளுக்கு நரகமாக இருந்தது.
நாட்கள் செல்ல, செல்ல அன்னபூரணியின் வயிற்றில் வெற்றி உருவாக ஆரம்பித்து விட்டான்.
அதை பரிசோதித்த சுபாவின் தாய், அன்னபூரணிக்கு யாரும் அறியாமல் சில யோசனைகள் வழங்கினார்.
அதில் முதலாவது யோசனை, காளியிடம் பேச்சு வளர்ப்பது.
அவளை அடிமைப்படுத்தி ஆட்கொண்ட இத்தனை நாளில் அவளிடம், “உன்னால் இங்கு இருந்து தப்பி செல்ல முடியாது!” என்பதை மட்டும்தான் கூறுவான். மற்றபடி அவளிடம் எதுவும் பேச மாட்டான். அவளும் பேச முடியாதபடி அவளின் கை, கால்கள் கட்டப்பட்டு வாயிலும் பிளாஸ்டர் ஒட்டி இருக்கும்.
அன்று இரவும் அதே நிலையில்தான் இருந்தாள் அன்னபூரணி.
இவனிடம் சிக்கிவிட்டோம். இனிமேல் தப்பிக்க வழி இல்லை என்று நினைத்து ஒவ்வொரு இரவும் உள்ளுக்குள்ளேயே உடைந்து இருந்த அன்னபூரணிக்கு இன்று புதுத் தெம்பு வந்து விட்டது.
அதனால், அவளால் முடிந்த வரை கை, கால்களை அசைத்து, காளியை திசை திருப்பினாள்.
அவளின் செய்கையில் காளிக்கு கோபம் கொப்பளிக்க, அவளின் செவியில் மிருகத்தை விட, மோசமாக அறைந்தான்.
அப்பொழுதும் அன்னபூரணி விடவில்லை. தன்னால் முடிந்தவரை அவனிடம் போராடிக் கொண்டிருந்தாள்.
அன்னபூரணியை அறைந்து, அறைந்து காளியின் கைகளே சிவந்து விட்டது. பற்களை கடித்தவன், அவளின் வாயில் ஒட்டி இருந்த பிளாஸ்டரை கிழித்து எரிந்தான்.
அவள் நிம்மதியாக மூச்சு விடும் நேரம், அவளின் காதுகளில் கெட்ட வார்த்தை நுழைந்தது.
தன்னை தடுத்த கோபம் அவனுக்கு. அவளின் பின்னந்தலையை வலிக்கும் அளவுக்கு இறுக்கி பிடித்தான்.
“எனக்கு காலையில மட்டுமாவது வீட்டுக்குள்ள எழுந்து நடக்க அனுமதி கொடுங்க!” கண்களால் அவனிடம் கெஞ்சினாள் அன்னபூரணி.
பற்களை கடித்த காளி, அவளின் முகத்தை ஒரு முறை உற்று பார்த்தான்.
“நீ இங்கே இருந்து வெளியே போகணும்னு நினைச்சாலே, எனக்கு தெரிஞ்சிரும். இந்த சுற்று வட்டார கிராமம் முழுக்க என்னோடதுதான். என்னோட ஆட்கள் நாலா பக்கமும் இருக்காங்க. நீ கால் வைக்கிற ஒவ்வொரு இடமும் எனக்கு சொந்தமானது!” என்றவனை விழியில் ஒளி இல்லாமல் பார்த்தாள் அன்னபூரணி.
“நான் உன்னை இங்கே தூக்கிட்டு வந்ததுக்கு காரணம், உன்னை சந்தோஷமா வச்சிக்க இல்லை. என்னால வெளியே போய் எவளையும் தேட முடியல. எனக்கு அந்த வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சி போச்சு. நீயும் நல்லா இருந்த, அதான் சரினு தூக்கிட்டு வந்துட்டேன்!” என்றான்.
“நான் எங்கேயும் போகல. வீட்டுக்குள்ளயே இருக்கேன். ஆனால், இந்த ரூமை விட்டு வெளியே வர மட்டும் எனக்கு அனுமதி வேணும்!” என்று மீண்டும், மீண்டும் கெஞ்சியவளிடம், “சரி, வெளியே வரலாம். ஆனால், தப்பிச்சி போக நினச்சா உன்னை கொன்னு புதச்சிருவேன்!” என்று மிரட்டி வைத்தான் காளி.
“இல்லை, கண்டிப்பா தப்பிக்க மாட்டேன்!” என்றவள் இட, வலமாக தலை அசைத்தாள்.
மறுபடியும் அவளின் வாயில் பிளாஸ்டரை ஒட்டி வைத்து விட்டு அவளை வதைக்க ஆரம்பித்து இருந்தான்.
அவளுக்கோ வலியும் இல்லை, உணர்வும் இல்லை. அதற்கு மாறாக உயிர் இல்லாத ஜடமாக மாறியிருந்தாள் அன்னபூரணி.
ஆனால், காலை விடிவதற்காக இந்த இரவை மட்டும் பொறுத்துக் கொண்டாள்.
காலை எழுந்ததும் அவளின் முதல் வேலையே காளி குடிக்கும் டீயில் ஸ்லோ பாய்சன் கலப்பதுதான். சுபாவின் தாய்தான் வீட்டில் தயாரித்த உயிர்க்கொல்லி மருந்தை யாரும் அறியாமல் காளியின் வீட்டுக்குள் கொண்டு வந்தார்.
யாரும் அறியாமல் தினமும் இதையே செய்ய ஆரம்பித்து இருந்தாள் அன்னபூரணி. கிச்சன் பக்கம் காலடி சத்தம் கேட்கும் போது வேலை செய்வது போல் நடிக்க ஆரம்பித்தாள்.
சில பேர் காளிக்கு அடிமையாக வேலை பார்த்தாலும் அவனுக்கு உண்மையானவர்களாக இருந்தனர். அதனால், அவர்கள் அறியாமல் டீயில் ஸ்லோ பாய்சன் கலப்பதற்கு மிகவும் சிரமம். இருந்தாலும் அவனை கொல்ல வேண்டும் என்பதில் குறியாக இருந்ததில் கவனமாக அனைத்தையும் கையாண்டாள்.
நாட்கள் செல்ல, செல்ல காளியின் உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டானது. அவ்வப்பொழுது உடல் நிலை சரியில்லாமல் போகும். பின் நார்மலாகும். நாற்பத்து ஐந்து வயதானாலும் கட்டுமஸ்தான தேகத்தோடு இருந்தவனுக்கு இது வரை நோய் என்று ஒன்று வந்ததில்லை. ஆனால், சில தினங்களாக வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் ஓய்வு எடுத்தவனுக்கு எதனால் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது என்று யோசிக்க மறந்து விட்டான் காளி. சிறு துளி சந்தேகம் கூட எவரின் மேலும் அவனுக்கு வரவில்லை.
அதே நேரம் வெற்றியும் வளர ஆரம்பித்து இருந்தான். அதை காளிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டாள் அன்னபூரணி.
அவன் சோர்வாக, சோர்வாக உடலளவிலும், மனதளவிலும் அன்னபூரணி நன்றாக தேறிக் கொண்டிருந்தாள்.
மருத்துவமனைக்கே செல்லாத காளியை, பரிசோதிக்க வீட்டிற்கே மருத்துவர் வந்தார்.
தனது வாழ்நாளின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த காளியின் உடலில் ஸ்லோ பாய்சன் ஓடிக் கொண்டிருந்ததை கண்டறிந்த மருத்துவர், யாரிடமும் அதை பற்றி மூச்சு விடவில்லை.
ஒரு வேலை அவரைக் கூட இந்த காளி சீண்டி இருப்பானோ, என்னவோ தெரியவில்லை.
இருந்தாலும் இரண்டு மாதங்கள் காளியின் உயிர் அவனின் உடலை விட்டு போக மாட்டேன் என்பது போல் அடம்பிடித்தது.
கடைசியில் இரவு நேரம் அன்னபூரணி அவளின் கைகளாலேயே அவனின் உயிருக்கு விடை கொடுத்தாள்.
காளி இறந்து விட்டான். சில பேருக்கு அவன் இறந்தது வருத்தம். சில பேருக்கு அது கொண்டாட்டம்.
ஏழு மாத கருவை சுமந்து கொண்டு காளியின் வீட்டை விட்டு சுதந்திர காற்றை சுவாசிப்பது போல் வெளியே வந்தாள் அன்னபூரணி.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த எபி பிடிச்சிருந்தா ஒரு குட்டி ஹார்ட் ❤️ கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்.
