கண் கொண்டு பாரடா(டி ) என்னை
திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம்.
