“பாலியல் தொழிலில் ஈடு பட்டிருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நோய் தொற்று பற்றி எனக்குத் தெரிந்த மருத்துவருடன் பேசிய பொழுது அறிந்து கொண்ட சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நமக்குத்தெரிந்த எய்ட்ஸ் தவிரவும் நிறைய பிரச்சனைகளை அந்த பெண்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளது. பொதுவாக மேக வட்டை (கொணரியா) (std) சிபிலிசு ,கிளமிடியா போன்ற நோய்கள் தாக்குகின்றன. வலியுடன் கூடிய மாதவிடாய்,ஜுரம்,மாதவிடாய் அல்லாத சமயங்களில் எதிர்பாராத உதிர போக்கு, கூடலின் பின்னர் உதிரபோக்கு அரிப்பு நோய்கள்,கண் எரிச்சல் ,அடி வயிறு வலி வெள்ளை படுதல் ,போன்றவை இவ்வகை நோய்களுக்கான அறிகுறிகள். சில சமயம் இவர்களின் நிலை புற்றுநோய் வரும் அளவிர்க்கு அபாயகரமாகி விடுகிறது. பெண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்கள் பெரும்பாலானவை அவர்களின் உள்ளடங்கிய இனப்பெருக்க உறுப்புகளை பாதித்துவிடுகின்றன. சிகிச்சை அளிக்கப் படாத பால்வினை நோய்கள் மலட்டுத்தன்மை,வலி,அதிக உத்திரப் போக்கு மட்டுமன்றி சில சமயங்களில் மரணமும் சம்பவிக்கிறது..மேலும் அதிகமாக உட்கொள்ளப் படும் கருத்தடை மாத்திரைகள்,மற்றும் கருக்கலைப்புகள் அவர்கள் வாழ்வின் ஆதாரத்தை சூனியமாக்கி விடுகின்றன! மொத்தத்தில் உள்ளுறுப்புகளில் பலவிதமான பிரச்சனைகள் ..அதே சமயம் சரியான முறையான சிகிச்சை இன்மை.. மற்றவர்களுக்கு இன்பம் அளிக்கும் இவர்கள் வாழ்வு மொத்தமுமே துன்பம் மட்டும்தான் “.
மயங்கி விழுந்த தேனுவை கண்டு “நா ஒண்ணுமே பண்ணலயே!பிறகு ஏன் மயங்கி விழுந்துட்டா?” அவள் கண்களில் முதல் நாள் கண்ட வலியின் நினைவு.அவள் “ஏதோ உடல் பிரச்கனையுடன்தான் இங்கு வந்திருக்கிறாள்..நல்லவேளை..நானும் என்னோட பங்குக்கு எதையும் செஞ்சு வைக்கல” என்று எண்ணியவாறே…அவளை மெதுவாக கைகளில் ஏந்தி வீட்டு சாவியையும் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு விரைந்தான் மருத்துவ மனையை நோக்கி.விஷயம் பரவக் கூடாது என்று முன் எச்செரிக்கையாக ஷங்கரை அழைத்துவிட ஷங்கருக்கோ இவன் திரும்ப அந்த பொண்ணை என்ன செஞ்சான்னு தெரியலயே..அவ திரும்பவும் எதுக்கு இவங்கிட்ட வந்தா எனும் குழப்பத்துடன் அவனும் விரைந்தான். இருவரும் ஒரே சமயம் மருத்துவமனை நுழைய தேனுவை அனுமதித்துவிட்டு ரிஷி, “டேய் நா என்னுடைய லேப்டாப் கொண்டு வரல…அனேகமா இன்னிக்கி இங்கதான்னு நினைக்கிறேன்..நா ஒரு மணி நேரத்துல வந்துடறேன்..நீ பாரு” என்றான. ஷங்கரோ உஷ்ணம் ஏறியவனாக “இவ ஏண்டா உன்கிட்ட திரும்பவும் மாட்டினா?என்ன செஞ்ச இவளை” என்று இரைந்தான்.அதர்க்குள் உள்ளே நர்ஸ் வர டிரிப்ஸ் ஏத்த தேவையான மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு ரிஷியை அழைத்துக்கொண்டு தன்னறை விரைந்தான் ஷங்கர்.அவனுக்கு தேனு மயக்கமாய் இருப்பது பற்றி கேட்க வேண்டி இருந்தது…
“சத்தியமா நா அவளை ஒண்ணுமே பண்ணலடா.நேத்து அவ வரும்பொழுதே ஒரு மாதிரி உறைஞ்சு போயி ..நா முன்னால நடந்த விஷயங்கள் ஞாபகம் வந்திருக்கும்னு நினைச்சேன்… அதனால அவளுக்கு சண்ட்விச் ஜூஸ் குடுத்து குட் நைட் சொல்லிட்டேன்..காலைல எழுந்து பாத்ரூம் போனா..அப்படியே மயங்கி விழுந்தவள அள்ளிக்கிட்டு உன்கிட்ட வந்தா நீ என்னயே என்ன பண்ணான்னு கேக்குற…”ரிஷிக்கு நடப்பு வெகுவாக அயர்ச்சியை உண்டுபண்ணி இருந்தது!
“சரிடா..அவ திரும்ப உன்கிட்ட வர காரணம்? நீ அவள முன்னாகிட்ட சொல்லி வரச் சொன்னியா?”
கிடுக்கிப்பிடி போடும் ஷங்கர் வெறும் நண்பன் அல்ல..மருத்துவனும் என்று உள்வாங்கியவனாக..பதில் கூறாமல் அமைதி காத்தான் ரிஷி.
“ஓகே..பட் வொய் ?”
“இல்லடா…வேற எந்த பொண்ண பாத்தாலும் இவள பாக்கணும்னு தோணிச்சு.அதான்…முன்னாகிட்ட இவள பதினஞ்சு நாட்களுக்கு கம்பனி குடுக்க அனுப்ப சொன்னேன்.” கேட்ட ஷங்கர் மெய்யில் அதிர்ந்துதான் போனான்.
“உன் கொடுமைய அவள் அவ்வளவு நாள் எப்டிடா தாங்குவா…ஆர் யு மேட்? நீ ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும்னு சொல்லி இருக்கேன்..அதுக்கு இதுவரைக்கும் சர் வரல…ஓ மை காட் …”
“இல்ல ஷங்கர்..அவள ஒண்ணும் பண்ணணும்னு வர வைக்கல… அவளோட போன முறை இங்க இருந்தது ரொம்ப மனசுக்கு இதமா இருந்தது..ஸோ.. அவளோட இருந்தா எப்டி பீல் பண்ணுறேன்னு டெஸ்ட் பண்ண நினைச்சேன்!”
இம்முறை ஷங்கர் வியப்பின் உச்சிக்கே சென்றான்…மனதின் விந்தைகள் எளிதில் புரிவதில்லையே.. “சரி..உன்னோட ட்ரீட்மெண்ட் பத்தி” …
“நிச்சயம் எடுத்துக்கறேன் .. தேனுவ முதல்ல அட்டென்ட் பண்ணு…நா ஒரு மணி நேரத்துல வரேன்…. ரிஷி சென்ற பிறகு ஷங்கரால் நடப்பதை நம்ப முடியவில்லை..ரிஷியை சந்திக்க முன் அனுமதி இல்லாமல் யாராலும் பார்க்க முடியாது..இவனோ இந்த பெண்ணை நன்கு அறிந்தும் இவளுடன் இருப்பது திடம் என்கிறான்..இந்த விஷயத்தால் தன் பெயரை ரிஷி கெடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே!
பத்திரிக்கைகள் மோப்பம் பிடித்தால்? ஏற்கனவே நிலாவின் பெயரை வைத்து ரிஷியை விளையாட்டு பொம்மையாக்கிய விவகாரங்கள் நிறைய ..இவற்றை யோசிக்க வேண்டியவனோ…உப்ஸ்ஸ்..சிக்கல்கள் ரிஷியை விட்டு அகலுவதில்லையா..இல்லை..ரிஷி சிக்கல்களை விட்டு நகர மறுக்கிறானா? இந்த பெண்ணையும் இவனையும் இணைத்து மீண்டும் எழுதப்பட்டால்,அதன் சிலுவையை ரிஷி மீண்டும் இவள் மீதல்லவா இறக்கி வைப்பான்?
தேனுவிர்க்கோ மயக்கம் தெளிவேனா என்று ஆட்டம் காட்டியது. கொடுக்கப் பட்ட மருந்துகள் அவளை சிறிது அமைதிப் படுத்த தூக்க நிலைக்கு சென்றுவிட்டாள்.ரிஷி திரும்ப வரும் ஸமயம் ஆழ்ந்த உறக்கத்தில் அவள்.வெகு அமைதியாக காணப்பட்ட அந்த முகம்..இவனுக்குள் ஏதோ செய்தது! நான் நினைத்தது என்ன..நடப்பது என்ன… இந்தப் பெண்ணிர்க்கு என்னவாயிற்று?
“அவளுக்கு அப்டமன் ஸ்கேன் எடுக்கணும் ரிஷி…இன்னும் என்னவெல்லாம் டெஸ்ட் எடுக்கணுமோ அதவெல்லாம் நா பாத்துக்கறேன்! முதல்ல அவ கண் முழிக்கட்டும்”! வேறு நோயாளிகளை கவனிக்க ஷங்கர் சென்று விட்டான்.
நிலாவிர்க்கு இப்பொழுதெல்லாம் சோர்வு வெகுவாக காணப்படுகிறது! யாருமற்ற இந்த நிலை அவளை வெகுவாக ஆட்டம் காண செய்தது.தொடர்ந்து களித்து வந்த விஷயங்கள் அவளுக்கு முன்பு போல சந்தோஷத்தை அள்ளி வழங்க மறுத்தது.வெறுமையை அவள் உணர ஆரம்பித்திருந்தாள்.
உத்தம்பூரில் கள்ள கடத்தல் கும்பல் போதை பொருள் கடத்தலை கேள்விபட்ட சாரதா ..நடு இரவில் அவர்களை பிடிக்க வலை விரித்தாள்…ஆவலுடன் மூன்று அதிகாரிகள் ! ஆளில்லா அவ்விரவில் அந்த கும்பலில் ஐந்து பேர் ஒரு டெம்ப்பொ வண்டியில்..பார்க்க அவ்வளவு ஆபத்தானவர்களாக தெரியாவிட்டாலும் உயர் ரக ஆயுதங்களுடன் நாட்டுத் துப்பாக்கியும் வைத்திருந்தனர்.நீண்ட நெடிய போராட்டதிர்க்குப் பிறகு அவர்களை சுற்றி வளைத்து காவல் துறை பிடிக்க முயல. மூன்று பேர் தப்பியோடிவிட்டனர்..அதில் ஒருவன் சுட்டதில் சாராதவின் தொடை பகுதியை ஊடுருவிச்சென்றது துப்பாக்கி குண்டு…
மீதமுள்ளவர்களையும் வண்டியையும் பிடிக்க முடிந்தாலும் சாரதாவின் மனதில் ஆறுதல் இல்லை. மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட சாரதாவை காண அம்மா வீடு மாமியார் வீடு இரு தரப்பிலிருந்தும் உறவினர் வர..அவள் மனமோ அவளவனை தேடியது! பணியை விட்டு பாதியில் வர முடியாமல் சென்னையில் அவன் தவித்துக்கொண்டிருந்தான்! இருவருள்ளும் ஒருவரை ஒருவர் தேடும் கண்ணாமூச்சி விளையாட்டு! அவன் நிலை புரிந்தாலும்..அவன் அருகில் இருப்பது போலே எதும் இல்லை. அவனை மட்டுமே என் மனம் நாடுகிறது!காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவருடன் நான் இருந்த தருணங்கள் நான் நல்ல மனைவியாக நடந்து கொண்டதில்லை.அவர் என்னை எனக்காகவே நேசிக்கிறார்…
மூன்று மாதங்கள் கடின வேலைகள் கூடாது..பணியில் சேர கூடாது என மருத்துவர் கூறிவிட சாரதா விஜயனுடன் இந்த நாட்களை கழிக்க விரும்பினாள். விஜயனுக்கோ..மனைவி உடனிருப்பதே சுகம் எனும் நிலை..
இந்த தருணங்கள் அவளை பணி இட மாறுதலுக்கு விண்ணப்பிக்க வைத்தது. அவளுக்குள் மறைந்திருந்த காதல் ஒளி விடும் சிறு விளக்கல்ல.கவனிக்காமல் விட்டால் அவளை சுட்டு பொசுக்கும் நெருப்பு என்பதை அவள் பூரணமாக உணர்ந்த நாட்கள்..இவ்வளவு காலம் விஜயனை அவனது காதல் தொல்லையால் மட்டுமே மணந்தேன் என்று நினைத்திருந்தேன்.விஜயன் தன் காதலால் எனை என்றோ வீழ்த்திவிட்டார்… அவள் மனம் உண்மையை ஒப்புக்கொண்டது! அதில் அவளுக்கு ஈகோ ஏதுமில்லை!அவரது பொறுமை..எனக்காக எனது விருப்பங்களை புரிந்து கொண்டு விட்டு கொடுக்கும் உன்னத காதல் அவரது. இனி..அவருக்கான நல்ல மனைவியாகவும் நான் இருக்க வேண்டும் என்று அவள் மனம் உறுதி கொண்டது! அவள் மாமியார் மாமனாருடன் சென்னை செல்லும் விமானத்தில் சாரதா.
“ரிஷி..தேனுவுக்கு கர்பபை பக்கத்துல சின்னதா ஒரு கட்டி.உடனே எடுத்தாகணும்.வயித்தவலி ரொம்ப நாட்களா இருந்திருக்கணும்.இன்னியோட மயக்கம் வலி அதிகமானதால.மத்த டெஸ்ட் எல்லாமும் எடுத்து பாத்தத்துல..எச்.ஐ.வி வேற தொற்று நோய்களும் இல்ல… பட் நிறைய கருத்தடை மாத்திரைகள் உபயோக படுத்தி இருக்கணும்..அண்ட் கருச்சிதைவும் செஞ்சிருக்கணும்…பாப்போம். .உயிருக்கு பயமில்லடா..”
நிலாவின் வயிற்றில் தன் உயிர் அது அழிந்த விதம்… ரிஷியின் மனதின் ஒரு பகுதி விவரிக்க முடியாத துயர நிலையில்.தேனுவிற்காக மருத்துவ படிவங்களில் ரிஷியே கையெழுத்திட்டான். கார்டியன் என்று… அவனால் இன்றைய நிலையில் வேறேதும் செய்ய முடியாது…ஆனால் தான் ஏன் அவளுக்காக இவை அனைத்தையும் செய்ய வேண்டும்? அதுதான் புரியா மர்மம். ஞாயிறு அன்றைய மீட்டிங் ரத்து செய்வதாக மெயில் அனுப்பிவிட்டு ..கண் மூடி கதிரையில் சாய்ந்திருந்தான் ஷங்கர்…அவனால் ஒரு முடிவிர்க்கும் வர முடியவில்லை.. தேனு இங்கிருக்கும் பொழுதே..ரிஷிக்கான மனநல மருத்துவ ஆலோசனைகளை ஆரம்பித்துவிட வேண்டும் என்று முடிவு செய்து ரிஷியிடம் தெரிவிக்க..இந்த நிலையிலா என்று தயங்கியது ரிஷி மனம்.
ஜன்னலின் கம்பிகளை இறுக்கி பற்றியவாறு கீழே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் சில்வண்டுகளின் சத்தத்தில் தன்னை மறந்து லயித்திருந்தாள் நிலா. இந்த அடுக்குமாடி கட்டிடத்திற்க்கு அவள் வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது.ரிஷி அவளுக்காக வாங்கிக் கொடுத்திருந்த மூன்று படுக்கை அறைகளுடன் கூடிய அவள் மட்டுமே வசிக்கும் அவளுக்கான வீடு.எப்பொழுதும் போதையில் இருந்த அவளுக்கு அவை எல்லாம் சலித்த பிறகு வாழ்க்கையின் வெறுமை திரும்பவும் சூழ ஆரம்பித்துவிட்டது. பதின்ம வயதில் வீட்டில் அநாயாச சொத்துக்கள் இருந்தும் பள்ளியிலிருந்து வீடூ திரும்பினால் பாசமற்ற பணத்திற்காக உடனிருக்கும் வேலைக்காரர்கள் புடை சூழ அம்மாவை எதிர்பார்த்திருந்த அதே தனிமை.அந்நிய தேசத்தில் தொழிலில் கோலோச்ச செல்வாவிற்க்கு ராஜேஷ்வரியின் துணை தேவைப்பட பரம்பரை பாரம்பர்யத்துடன் நிர்வாகத்திறமையும் ஒருங்கே அமையப்பட்ட அவரும் கணவருடன் தொழிலில் முழு மனதுடன் இறங்கி விட்டார். ஒரு வரையறுக்கப்பட்ட வயது வரை நிலாவை அவரால் ஓரளவிர்க்கு இந்திய பாரம்பர்யத்தில் வளர்க்க முடிந்தது.தொழில் வளரும்பொழுது நிலைமை மாறிவிட்டது….நிலாவின் வேறுபாடுகள் கண்ணில் படும் அளவிர்க்கு வீட்டில் தங்க இருவராலும் முடியவில்லை.தனிமை துன்பம் அவளின் மொத்த நடவடிக்கைகளையும் புரட்டி போட்டது..! அன்றைய வாழ்வு அன்றன்றைக்கு எனும் கோட்பாடு வளர..நிலாவின் இன்றைய வாழ்வு அதனால்தானோ…என்னவோ பாசம் காதல் போன்ற உணர்வுகள் புரியாமல் ரிஷி போன்ற ஒருவனின் மன அழுத்தத்திர்க்கு காரணமும் ஆகிப் போனாள். நிலா போன்ற குழந்தைகள் நம் சமூகத்தில் அநேகம்..தேவைக்காக பெற்றோர் இருவரும் வேலைக்குப் போக..வீட்டில் பெரியவர்களும் இன்றி கூடப் பிறந்தவர்களும் இன்றி ஒற்றைப் பிள்ளைகளாய் வளர்வது நிச்சயம் அவலமே.. ஒருவேளை செல்வா-ராஜேஸ்வரி இருவரும் சேர்ந்து நிலாவை தங்களால் கவனிக்க முடியாத நிலையில் இங்கு தாதா பாட்டியிடமோ வேதநாயகத்திடமோ அனுப்பி வைத்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ என்று என்னால் நினையாதிருக்க முடியவில்லை.!
ரிஷி தேனு இருவரின் பாதைகளும் வேறுவேறு! அவர்களின் தலைவிதி அவர்களை ஒன்றாக இந்த நாட்களை பிராயாணிக்க வைக்கிறது.தேனு சத்ர சிகிச்சைக்கு ஒருபுறமும்,ரிஷி தன் மன அழுத்தத்தை சரி செய்ய மன நல மருத்துவரிடம் செல்ல இன்னொருபுறமும் தயாராகிறார்கள். இருவருக்கும் சரியான சிகிச்சை நிச்சயம் தேவை… ஷங்கர் தகுந்த எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டான். அவனுக்கு தெரிந்த மருத்துவரை தனது மருத்துவமனைக்கு வரச்செய்து ரிஷிக்கான சிகிச்சையை தொடர ஆயத்தங்கள் செய்து வைத்திருக்கிறான்.. அவனுக்கு தனது சிறு வயது நண்பனுக்கு எதுவும் தவறாக நிகழக்கூடாது!
சிகிச்சைக்குபிறகு தேனுவை என்ன செய்வது என்று ஷங்கர் குழம்பித் தவித்தான். ரிஷிக்கு இதுபோன்ற எந்த குழப்பமும் இல்லை. தேனுவை தன்னுடன் அழைத்துச் செல்ல அவன் தீர்மானித்துவிட்டான்…இதையே ஷங்கரிடம் சொல்ல ஷங்கரோ “உங்க வீட்டுக்கோ…வேற யாருக்கோ தெரிஞ்சா நல்லா இருக்காதுடா” என்றான்…
ஏளன சிரிப்புடன் “ஐ நெவர் அலோ தெம் டூ ஸ்பீக் அபௌட் அண்ட் டூ எண்டர் இன் டூ மை பெர்சனல் ஸ்பேஸ் (I never allow them to speak about and enter into my personal space )என்னோட கல்யாணம் பிரச்சனை ஆனபொழுது என்னோட வீட்டுல என்ன பண்ணாங்க இல்ல வெளியுலகம் எனக்கு சப்போர்ட் பண்ணிச்சா…ஸோ ..ஐ ஹாவ் டிசைடட்…(I have decided)” முடித்துவிட்டு சென்றுவிட்டான்.
மனநல மருத்துவரிடமும் தன் பிரச்சனைகளை அலசியவன் தேனு பற்றியும் ஷங்கரிடம் சொன்னதையே சொல்ல மனதின் விந்தை அவரை ஆச்சர்யமூட்டியது !
“தென்…நீங்க தேனுவ விரும்பறீங்களா?”
“ஓஹ் நோ.அவளோட இருந்தா மனசு அமைதியா இருக்கு.. ஐ நெவர் எக்ஸ்பெக்ட் ஹெர் டூ ஷேர் எனி கைண்ட் ஆஃப் ஃபிசிகல் ரிலேஷன்ஷிப் …பட் சிம்ப்ளி வான்ட் ஹெர் டூ ஸ்டே வித் மீ ஃபோர் சம்டைம்…(oh,no… I never expect her to share any kind of physical relationship,but simply want her to stay with me for sometime)
திரும்பவும் கல்யாணம்..காதல்…ம்ஹூம் எனக்கு சரிப்படாது…”
“சரி…அப்புறமா அவள என்ன செய்ய போறீங்க மிஸ்டர்.ரிஷி?”
சிறிது யோசித்தவனாக…”அவளுக்குன்னு ஏதாவது ஒரு வழில லைஃப் அமைய ஏதாச்சும் செய்யணும் ! அகைன் ..அந்த சாக்கடைக்கு அனுப்ப முடியாது!”
“ஓகே ..பதினஞ்சு நாள் கழிச்சு மீட் பண்ணுவோம்…ஹோப் நீங்க மனசுவிட்டு பேசியதால யு ஃபீல் பெட்டர் நௌ.. என்று தூக்கத்திற்கான மருந்து மட்டும் பரிந்துரைத்தார்…இந்த மெடிசின் தேவைப்பட்டா மட்டும் எடுங்க ரிஷி…otherwise நீங்களே தூங்க முயற்சி செய்யுறது நல்லது” என முடித்து கொண்டார் மருத்துவர்.
போக போக தான் ரிஷியின் மனதை புரிந்துகொள்ள முடியும்….
தேனுவிர்க்கு அறுவை சிகிச்சை முடிந்து அறைக்கு மாற்றப் பட்டாள.ஷங்கர் ஒரு பெண் ஆயாவை அவளுக்காக ஏற்பாடு செய்தான்.ரிஷியை அனுமதிக்கவில்லை.ரிஷியும் மறுக்கவில்லை.
அலுவலகம் செல்லாமல் முடியாது என்று உணர்ந்தவனாக காலை மாலை இருவேளையும் தேனுவை காண வருவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
ரிஷியிடம் வாங்கிய பணத்தில் முன்னா கோவா சென்று கடலோடு கடலாக சுகபோகத்தில் திளைத்தான்.அவனை கேள்வி கேட்பார் யாருமில்லை.
அவனுக்கு தேனு பற்றிய கவலை இல்லை.மேலிடத்தில் புது பெண்களை தேடுவதாக அறிவித்துவிட்டான். அவனது வேலைகளை செய்ய மும்பையில் அத்தைமார்கள் நிறைய உண்டு.எனவே கவலை இல்லை.
திருமண உறவு ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளுடன் நாயகன் ரிஷிக்கு ஆரம்பிக்கிறது. தேனு வாழ்க்கையின் முன்னேற்றங்களை மட்டுமே மனதில் வைத்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது ஏற்படும் எதிபாராத விஷயங்கள் அவளை வேறு வழியில் கூட்டி செல்கிறது. ரிஷி = தேனு இருவருக்கும் இடையில்…