இந்தியாவின் இருண்ட தெருக்கள் – மறைக்கப்பட்ட உண்மைகள்
இந்தியாவின் பெருநகரங்களில் சில தெருக்களுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. பகலில் சாதாரண வணிகப் பகுதிகளாகக் காட்சியளிக்கும் அவை, இரவு நேரத்தில் வேறொரு உலகமாக மாறுகின்றன.டெல்லியின் GB Road, மும்பையின் காமாத்திபுரா, கொல்கத்தாவின் சோனாகாச்சி ஆகியவை இந்தியாவின் புகழ்பெற்ற சிவப்பு விளக்குப் பகுதிகளாக அறியப்படுகின்றன.
ஆனால் இந்த இடங்களைப் பற்றிய விவாதம் வெறும் பாலியல் தொழிலுடன் முடிந்துவிடுவதில்லை. அதன் பின்னால் வறுமை, மனிதக் கடத்தல், பெண்களின் பாதுகாப்பின்மை, குழந்தைகளின் எதிர்காலம், அதிகாரம் மற்றும் பணப் புழக்கம் எனப் பல அடுக்குகள் மறைந்துள்ளன.
மாறிவரும் முகங்கள்
டெல்லியின் GB Road பகுதியில் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதச் செய்தியின்படி சுமார் 2,800 பாலியல் தொழிலாளர்கள் வாழ்ந்து வேலை செய்கின்றனர்.
மும்பையின் காமாத்திபுராவில் பழைய பாலியல் தொழில் விடுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2011-ல் 570 ஆக இருந்த எண்ணிக்கை, 2025-ல் 404 ஆகக் குறைந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் இதனால் அந்தத் தொழில் முற்றிலும் மறைந்துவிட்டது என்று கூற முடியாது. அது நகரின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
கொல்கத்தாவின் சோனாகாச்சியில் சுமார் 15,000 பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக 2025 செய்தி மதிப்பிட்டுள்ளது.
யாருடைய கட்டுப்பாட்டில் இந்த உலகம்?
இந்தப் பகுதிகளில் செயல்படும் ஒவ்வொரு இடத்திற்கும் பின்னால் ஒரே மாதிரியான நிர்வாக அமைப்பு இருப்பதில்லை. கட்டிட உரிமையாளர்கள், விடுதி நடத்துபவர்கள், இடைத்தரகர்கள், வாடிக்கையாளர்களை அழைத்து வருபவர்கள் எனப் பல தரப்பினர் தொடர்புடையவர்களாக இருக்கலாம்.
ஆனால் இவர்களின் முழுமையான வலையமைப்பு குறித்த நம்பகமான தேசிய அளவிலான கணக்கெடுப்பு இல்லை.
இந்தியர்களின் செக்ஸ் மோகம் வித்தியாசமானது. இங்கே மலிவாக சுமார் 100 ரூபாய்க்கும் பாலியல் சுகம் கிடைக்கிறது. உச்சபட்சமாக ஒரு லட்சம் முதல் பல லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவும் விலை மாதுகள் கிடைக்கிறார்கள். இந்திய ஆண்களின் ‘கன்னித்தன்மை’ மோகமே சிறுமிகள் கடத்தப்படுவதற்கும், கற்பழிக்கப்படுவதற்கும் முக்கிய காரணமாகும்.
இந்தியா மற்றும் அண்டை நாடுகளான வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 1¼ லட்சம் டெல்லி சிறுமிகள் கடத்தப்பட்டும், பெற்றோர் சம்மதத்துடன் விலைக்கு வாங்கப்பட்டும், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கன்னித்தன்மைக்கு ஆசைப்படும் இந்தியர்களின் எண்ணம் மட்டுமல்ல பால்வினை நோய் வாய்ப்பு குறைவு என்பதாலும் 14 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு எப்போதுமே ஏக கிராக்கி. அதனால்தான் முதல் ஒரு சில உறவுகளுக்கு மட்டும் லட்சங்களில் விலைபோகிறார்கள் சிறுமிகள்–இளம் பெண்கள்.
2016–ம் ஆண்டு மட்டும் டெல்லியில் கடத்தப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 22 ஆயிரம். ஆண்டுக்கு 7 ஆயிரம் பெண் குழந்தைகள் நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவில் விபசாரத்திற்காக வாங்கப்படுவதாக தெரிகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டாலும் கடத்தல்கள் அரங்கேறத்தான் செய்கின்றன.
நியூயார்க் நகரில் ஆண்டு தோறும் சராசரியாக 4 ஆயிரத்து 200 பேர் விபசார வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள். அதிகபட்சமாக தென்கொரியாவில் கடந்த 2009–ல் 73 ஆயிரம் பேர் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை சரிவர பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுவதில்லை.
இந்தியாவில் 2,137 பாலியல் வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளதாகவும், 3283 பேர் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தகவல் பதிவு சொல்கிறது.
“எனக்கோ இல்ல..என்னய மாதிரி இந்தத் தொழில சிக்கின பொண்ணுகளுக்கு உடம்புல காயமோ இல்ல மரணமோ ஏற்பட்டாகூட கேட்க ஆளில்ல..நாங்க எதையும் வெளியில சொல்லவும் முடியாது…வெளியுலக தொடர்பும் எங்களுக்கு அனுமதிக்கப் படுவதில்லை.”. தேனுவின் மிக மெல்லிய குரல்..ஷங்கரின் காதுகளில் கிசுகிசுப்பாய் ஒலித்துக்கொண்டிருந்தது!
தன் நண்பனும் அந்த பெண்ணை படுத்தியிருக்கும் பாடு..நினைக்கவே பயமாகவும் அருவறுப்பாகவும் ஒருவிதத்தில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கலவையான ஒரு மனநிலையில் தவித்துக்கொண்டிருந்தான் ஷங்கர்.தான் முன்னறே ரிஷியை பற்றிய விஷயங்களை சீர் தூக்கிப் பார்த்திருந்தால் இன்று தன் தோழன் இதுபோன்ற மனவழுத்தத்திற்க்கு உள்ளாகி இப்படிப் பட்ட கீழ் செயலை செய்திருக்கமாட்டான்..இந்த சூழ்நிலைக்கு தானும் ஒரு காரணமே என்று அவன் மனது அவனை குற்றம் சாட்டியது.
இதோ இன்று தேனு தன் இருப்பிடத்திற்க்கு சென்றாக வேண்டும்.மீட்சியே அற்ற நரகம்.. இவளின் உடல் நிலை பற்றியெல்லாம் அங்கே யாருக்கும் கவலை இல்லை. மீண்டும் மேக்அப் செய்துகொண்டு சிரித்த முகத்துடன் தன்னை பலியிட்டாக வேண்டும். இந்த எண்ணமே டாக்ட்டருக்குள் கசந்தது.
ரிஷி- நிலா தொடர்பான ஹியரிங்க் இன்றுதான்! மொத்த குடும்பமும் மும்பையில். ரிஷியால் தேனுவிடம் தன் நினைப்பை செலுத்த சூழ்நிலை அனுமதிக்கவில்லை! பல மாதங்களுக்கு பின்னர் இன்று அவன் நிலாவை காண்கிறான். உடல் இளைத்து எந்த நேரமும் போதையில் திளைக்கும் அவளது கண்களில் எந்த உணர்வும் இல்லை. சிறந்த குடும்ப அமைப்பு கிடைத்தும் இந்தப் பெண் ஏன் பாதை மாறினாள்,என்று அவள் மீது இரக்கம் சுரந்தது ரிஷிக்கு. ஆனால், இதற்கெல்லாம் விட்டு கொடுக்க முடியாது,அவளுடன் இணைந்து வாழ்வதுவும் நடக்காது, என்று நினைத்துக்கொண்டான்.
உதட்டில் புன்னகை பூசி..அதீத அலங்காரத்துடன் தன்னை நோக்கி வந்த நிலாவை கண்ட ரிஷியின் முகத்தில் ஏளன சாயல்…சிறிது திகைத்தாலும், பின்னர் சுதாரித்தவளாக “என்ன ரிஷி..நா உன்னோட வொய்ஃப் .மறந்துட்டியா?” என்று அவனை குற்றம் சாட்ட நிலா எத்தனிக்கையில்.”.நா உன்ன மறக்காததாலத்தான் இப்போ கோர்ட்டுக்கு வந்திருக்கோம் நிலா”என பதிலடி கொடுத்தான் ரிஷி..குடும்ப பெரியோர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அவளது அலங்காரம் அவனுக்கு உமட்டலை வரவழிப்பதாய் அவனுக்கு தோன்றியது.. அலங்காரத்தையும் மீறிய பால் முகம்..குழந்தைதனத்துடன் ..அந்த முகம்..அந்த ஒரு நாள் இரவு வரும்பொழுது மட்டுந்தான் அவள் அலங்காரம் செய்து கொண்டு காணப்பட்டாள்.. கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாய் அவனுடன் இருக்கும் பெண்ணின் முகம்…ஏதோ ஒரு வகையில் அவனை அமைதி படுத்திய முகம்..
“ சட்…நான் ஏன் அவளை நினைக்கிறேன்? அவன் முகம் தானாய் மென்மையாகியது.. நிலாவின் கண்கள் கிரோதமாய் அவனை அளவெடுக்கத் தொடங்கியது. அந்த பெண்ணை இப்பொழுதே காண வேண்டும் என்ற துடிப்பை அடக்க ரிஷியால் முடியவில்லை. வேறு வழியில்லை.அடுத்த சில நாட்கள் அவளை காண செல்ல முடியாது எனும் நிதர்சனம் உறைக்க அமைதி காத்தான் ரிஷி.
ரிஷியை பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் தேனு மருத்துவமனையிலிருந்து முன்னாவால் அழைத்துச் செல்லப் பட்டாள். அவன் வராதது மனதை நெருடினாலும் தனக்கு இந்த அளவிர்க்கு அவன் செய்ததே பெரிது. எனது நிலையை நான் மறக்கவோ மாற்றவோ முடியாது எனும் முடிவில் நின்றாள் அந்த அப்பாவி..
கோர்ட்டில் சமர்பிக்க வேண்டிய ஆதாரங்களை உரிய முறையில் குடும்ப நீதிமன்றத்தில் சமர்பித்தார் ரிஷியின் வழக்குரைஞர்.நிலா இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. நீதிபதி முன்னர்.தான் மனம் திருந்திவிட்டதாகவும் இப்பொழுதெல்லாம் தவறுகள் செய்வதில்லை எனவும் மீண்டும் ரிஷியுடன் வாழ விரும்புவதாகவும் தனது ஓரங்க நாடகத்தை நிலா நடத்திக்காட்ட ரிஷி ஏளன நகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்!
அவனிடம் எந்த சலனமும் இல்லை.ஏற்கனவே ஆதாரங்களை பார்வையிட்டிருந்த நீதிபதி ஒரு பெண்.அதை வைத்து அவரைகரைய வைக்கநிலா திட்டமிட்டிருக்க ஆதாரங்களை கண்டிருந்த அவருக்கோ.இந்த நாடகம் அவருக்கு அயர்ச்சியை உண்டு பண்ணுவதாகவே அமைந்தது.
ரிஷி இனி நிலாவுடன் வாழ தனக்கு விருப்பமில்லை அவளது நேற்று வரையிலான நடவெடிக்கைகள் இந்திய பாரம்பர்யத்தை சேர்ந்தவை அல்ல.அவை தனக்கு ஒத்துவராது என்றும் வாழ்வாதாரத்திற்க்கு நிலாவின் தந்தை வழி சொத்துக்கள் இருப்பதால் தனது நிதியுதவி அவளுக்குத் தேவைப்படாது எனவும் ..அவன் தீர்மானமாக கூறிவிட்டான். இதற்குமேல் வருத்தப்பட அவனுக்கு விருப்பமில்லை.ரிஷியின் வாதங்கள் வலுவானவை…அவனுக்கு இந்த திருமண உறவிலிருந்து விடுதலை அளிப்பதாக குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்தது . தனது திட்டங்கள் பலிக்கவில்லை என்றதும் நிலா செல்வபதியிடம் பாய்ந்தாள்..சொத்துக்களை தன் பெயரில் தன் ஆளுகையில் கொடுக்கும்படி சண்டையிட அவரா அசறுவார்?
நிலாவின் கைகளில் பணப் புழக்கத்தை குறைப்பதே நோக்கமேன்பதால் அவர் எதையும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.மகளின் வாழ்வை எப்படியாவது சீரமைக்க அவரது மனம் துடித்தது.
எப்பொழுதும் போல நிலாவின் வாழ்க்கை ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம்தான்!
களைத்து நிமிர்கையில் ரிஷிக்கு தேனுவின் ஞாபகம் உரசி பார்த்தது.அவனால் தன்னை நிலைசெய்து செய்துக்கொள்ள விடாத தவிப்பு. மருத்துவமனைக்கு விரைந்தான். ஷங்கர் ரிஷி இருந்த நிலையில் அவனை தொந்திரவு செய்ய விரும்பாமல் தேனுவை அனுப்பிவிட்டான்..ரிஷி இதைக்கேட்டு அதிர்ந்ததென்னவோ உண்மை.அடுத்த கணமே அவளுக்கும் தனக்குமான உறவு அவ்வளவுதான் என்று முடிவு செய்துக் கொண்டான்.
இனம் புரியா கோவம்…எதுவும் புரிபடவில்லை. இப்படியே நாட்கள் கழிய வேறொரு ஆணுடன் கழிப்பதை ஏற்கனவே வெறுக்கும் தேனுவுக்கு இப்பொழுது முற்றிலுமே ஜீரணிக்க முடியவில்லை..கழிவிரக்கத்தில் தவித்தாள்.கண்ணீர் பெருக்கெடுக்க உடனிருப்போராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.
முன்னாவை எதிர்த்து கையுயசைக்கவும் யாராலும் இயலாது..தேனுவும் விதிவிலக்கல்ல.ஒவொருமுறையும் ரிஷியுடன் கழித்த இரவும் அதற்கு பின்னருமான நாட்களுமாக அவளை அலைக்கழித்தன.
ரிஷி அதற்க்குப் பின்னர் தன் தொழிலில் மூழ்கிப்போனான்..அவனுக்கே இன்னொரு பெண்ணை வாட்டி விடுவோமோ எனும் அச்சம் தலை தூக்கி இருந்தது. ஷங்கரிடம் சொல்லி, நல்ல மன நல மருத்துவரை அணுக முடிவெடுத்திருந்தான்.
கொஞ்ச நாளாக தேனுவிர்க்கு வயிற்றுவலி கடுமையாக இருந்தது.ஆனாலும் நோய்கிருமிகளை ஒத்த மனிதர்கள் முடிந்தவரை அவளை உறிந்து தூக்கி எறியவே விரும்பினர்.அவளுக்காக செலவு செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை. அவள் மனம் மருத்துவனான ஷங்கரை காண வேண்டும் என விரும்பியது. ஆனால்..தன்னை போன்ற ஒரு பெண்ணுக்கு இலவச மருத்துவம் பார்க்க அவன் தயாரா என்று தெரியா நிலை. அவனது மருத்துவமனையும்,அதைத்தொடர்ந்து அட்டெண்டராக தன்னருகே அமர்ந்திருந்த ரிஷியின் நினைவுகளும் அவளுள்ளத்தில் பேரதிர்வையும்,ஏற்படுத்தத் தவறவில்லை.!
“ இஸ்ரேல் நாட்டில் சராசரியாக பத்து ஆயிரம் ஆண்கள் மாதம் தோறும் பாலியல் இன்பத்திற்காக விபசார விடுதிக்கு செல்கிறார்களாம். அமெரிக்காவில் பத்து சதவீத ஆண்கள் பாலியல் ஆசையை தீர்த்துக் கொள்ள, விபசார விடுதிக்கு சென்று பணம் செலவு செய்வதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
மும்பை பாலியல் தொழிலாளி ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறு பேரிடமாவது உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதில் கிடைக்கும் பெரும்பாலான பணம், அவர்களின் கண்காணிப்பாளரும், பாதுகாவலருமான ‘அத்தைமார்’களுக்கே சென்றுவிடும். மூன்றில் ஒரு பங்கு தொகையே விபசார பெண்களுக்கு கிடைக்கிறது. அது அவர்களது மருத்துவ செலவுக்கும், குழந்தைகளின் பராமரிப்பிற்குமே போதாத நிலை நீடிக்கிறது. விலைமாதுகள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எய்ட்ஸ் போன்ற நோய்களும் அவர்களை தாக்குகின்றன.
பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகளின் பாடு திண்டாட்டம்தான். பொது இடங்களில் செல்ல முடியாது, பள்ளி செல்ல முடியாது. வேறு தொழிலுக்கு செல்ல முடியாது. தானும் அதே தொழிலுக்கு வர வேண்டும் அல்லது அந்த தொழிலுக்கு உதவியாக ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட நேரிடும். இதுவே விபசாரிகளின் குழந்தைகளின் சோக நிலை.
மும்பையில் பல்வேறு இடங்களில் ‘ரெட்லைட்’ பகுதிகள் செயல்படுகின்றன. வீதியோர விபசாரிகளும் இளைஞர்களுக்கு வலைவீசுவது உண்டு. கொல்கத்தாவில் பதினோரு இடங்கள் ரெட்லைட் பகுதியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. மும்பை, கொல்கத்தா மட்டுமல்லாது கோவா, பூரி பகுதிகளும் பாலியல் சுற்றுலா மையங்கள் என்ற பெயரை பெற்றிருக்கின்றன.
ஐரோப்பா முழுவதுமிருந்து தாய்லாந்துக்கு செக்ஸ் பிரியர்கள் படையெடுக்கிறார்கள். ஜப்பான் மற்றும் அமெரிக்க செக்ஸ் பிரியர்கள் இலங்கைக்கு செக்ஸ் சுற்றுலா வருகிறார்கள். எங்கும் திருப்தி கிடைக்காத செக்ஸ் பிரியர்கள் இறுதியாக அடைக்கலமாகும் இடம் இந்தியா என்றும் ஒரு அதிர்ச்சியான தகவல் கூறுகிறது.
வெகு சமீபத்தில் ஒரு சிலர் சென்னையிலும் ரெட் லைட் பகுதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்…ஒழிக்கப்பட வேண்டிய முக்கியத் தொழில்களில் ஒன்று பாலியல் தொழில். பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படையும், குற்றங்கள் மிகுதியாக நடைபெறும் இடங்களும் உடல் மோகம் (காமம்)தணிக்கும் பகுதிகளே. செழிக்க வேண்டிய தொழில்கள் நசிவதும்,நசிய வேண்டிய தொழில்கள் செழிப்பதும், நம் பாரத தேசத்தில் மட்டுமல்ல..உலகெங்கிலும் இதே நிலைதான்.
“ஷங்கர் தனது அறையில் கண் மூடி கதிரையில் அமர்ந்திருந்தான். கண்ணுக்குள் தேனுவின் தெளிவற்ற வீங்கிய உதடுகளுடன் கூடிய முகமே வந்து போனது… தன்னால் அவளுக்கு ஏதேனும் நல்லது செய்ய முடியுமெனில் வெளிப்படையாக அவளுக்கு உதவி செய்ய முனைந்தால் தன்னைப் பற்றிய கருத்துக்கள் வெளியுலகில் வேறுமாதிரி ஆகிவிடாதா… ஆனால் மருத்துவம் படித்துவிட்டு இவ்வாறேல்லாம் யோசிக்கிறேனே! மனிதாபிமானம்? சை…நானும் இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டேனே!
ரிஷியும் கொஞ்ச நாளாக வேறு எந்தப் பெண்ணையும் இங்கு அனுப்புவதில்லை..அப்படியென்றால் அவனது நிலை? யோசிக்க முடியாமல் அவன் தலை சுழன்றது.. முதலில் தேனுவை கவனிப்போம் என்று முடிவு எடுத்தவனாக தனது மருத்துவமனை பெண் மருத்துவர்களை மட்டும் முதலில் தனது மருத்துவமனையின் மீட்டிங் ஹாலுக்கு ஞாயிறு அன்று காலை பத்து மணிக்கு வருமாறு மெயில் அனுப்பிவிட்டு கிளம்பினான். “எதுக்கு கேக்கறீங்க?ஏதாவது வேலை தரப் போறீங்களா” என்று அவள் ஏளனமாக கேட்டது பசுமையாய் அவன் நினைவுகளில்..
உள்ளாடை போன்ற சிறு பாண்டும் உடல் முழுதும் அப்பட்டமாய் தெரியுமாறு மேலாடையும் அணிந்து..அந்த நக்ஷத்திர விடுதியில் நிலா நண்பர்கள் புடை சூழ நிலா கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தாள். ரிஷியின் தொழில் முறை போட்டியாளன் சுஜன் தன் குடும்பத்துடன் அங்கு வந்திருக்க…சுஜனின் மனைவி நிலாவையும் அவள் கூட்டத்தையும் பார்த்து முகம் சுழிக்க… சுஜனுக்கு அருமையான எண்ணம் ..ரிஷியின் மானத்தை வாங்க….என்னதான் முன்னாள் கணவனாக இருந்தாலும் ரிஷியின் எண்ணங்கள் சுஜானுக்குள் நம்பிக்கையை விதைக்க… மனைவிக்குத் தெரியாமல் தனது ஆப்பிள் போனில் ஒரு கிளிக்….செய்து தனது மெயிலுக்கு அனுப்பி விட்டு அழித்து விட்டான்..மனைவி கண்டால் முதல் ஆபத்து அவனுக்குத்தானே!
தொழில் முறை பயணங்கள் முடிந்து ரிஷி இந்தியா வரும் நாளை கணக்கிட்டு தனது பத்திரிக்கை நண்பனுடன் சேர்ந்து..”யாரிந்த புது நக்ஷத்திரம் “என்ற தலைப்புடன் நிலாவின் படமும் அவளைப் பற்றிய தகவல்களும் மீண்டும் வெளியுலகத்திற்க்கு கடை விரிக்கப் பட்டிருந்தது.. நொந்து போன ரிஷி.அவன் ஆழ் மன கட்டளைப் படி மீண்டும் முன்னாவை தொடர்பு கொண்டான்.அவன் இம்முறையும் தன் நிலையில் இல்லை.
இம்முறை வந்த பெண்ணிடம் அவன் தேனுவை தேடினான்..அது பெரிய விந்தைதான்.ஆனாலும் அவன் வெறி அவனை சிந்திக்க அனுமதிக்கவில்லை. ஒன்று-இரண்டு-மூன்று…ம்ஹூம்…அவன் வெறி அடங்கவில்லை… மறுநாள் வந்திருந்த பெண்ணின் நிலையை கண்டுத்தான் ரிஷி வந்ததே ஷங்கருக்குத் தெரிந்தது..ரிஷியின் நிலை… முன்னாவிடம் அவன் தேனுவை அனுப்புமாறு நேரிடையாகவே கேட்க…ஒரு மர்ம புன்னைகையுடன் முன்னா ஒப்புக்கொண்டான்..அவனுக்கு தேனுவின் உடல்நிலை தெரியும்…தேனுவால் அவனுக்கு வருமானம் இப்போதெல்லாம் சொல்லிக்கொள்ளும் அளவிர்க்கு இல்லை. தேனுவிடம் தயாராகச் சொல்ல..அவள் முடியாதென மறுக்க திராணி இன்றி கிளம்பினாள்.ரிஷிக்கு நிலா பற்றிய கோவத்தைவிட தேனு தன்னிடம் சொல்லாமல் கிளம்பியது பெரும் சீற்றம்…அவள் எதற்கு தன்னிடம் சொல்ல வேண்டும் என்று அவன் யோசிக்கவில்லை.இம்முறை தான் தேனுவுடன் பதினைந்து நாட்கள் கழிக்க விரும்புவதாகக் கூறி பெரும் தொகையை முன்னாவிடம் கொடுத்திருந்தான் ரிஷி. முன்னா இவ்விஷயத்தை தன் மேலிடத்தில் தெரிவிக்கவில்லை..மொத்த பணத்திர்க்கும் அவனே அதிகாரி…இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அவள் உயிருடன் வருவது நடக்காது.அப்படி வந்தாலும் கவலை இல்லை.யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை ..விஷயம் பரவக்கூடாது என்றெண்ணி தேனுவை மாற்றுடை எடுத்து வைக்கவும் முன்னா கூறவில்லை..வழக்கம் போல தனது ஹேண்ட் பேக் அதில் ஒரு செட் உடை சகிதமாக முன்னாவின் காரில் அவள்.வலியின் வேதனையில் அவள் முகம் வெளிறி பசையின்றி காணப்பட்டது.
வெகு நேர காத்திருப்புக்குப் பின்னர் வந்தாள் தேனு.வாசலுடன் விரைந்துவிட்டான் முன்னா…உள்ளே நுழைய அவனுக்கு அனுமதி கிடையாது.குழப்ப ரேகைகளுடன் உள்ளே மீண்டும் அதே அடுக்ககத்தினுள் நுழையும் பொழுது அனிச்சை செயலாக..அவள் கைகள் தான் போட்டிருந்த உதட்டுச்சாயத்தை தொட்டு பார்த்தது..தன் கைக்குட்டையால் அழுந்த துடைத்துக்கொண்டாள்.கால்கள் துவண்டன .சமாளிக்க முடியாதவளாக மடிந்து அமர முற்பட்ட சமயம் லிப்ட் கதவுகள் திறந்தன.வேறு வழியே இல்லை.ஓட முடியாது..உள்ளே சென்றுதான் ஆகவேண்டும்!
இவளைக் கண்டவுடன் ரிஷி கணித்துவிட்டான்..இவள் உதட்டு சாயத்தை கலைத்திருப்பதை.அவன் கண்கள் மெச்சுதலை காட்டியது.அவனால் இவளிடம் மோகம் கொள்ள முடியாது.நிச்சயமாய் …இப்போது காயப்படுத்தவும் முடியாது…
“நீ எதுக்காக என்கிட்ட சொல்லமே கிளம்பிட்ட? நா வர வரை பொறுக்க கூடாதா? அவன் கேள்வி அவளிடம் ஆச்சர்யத்தை காட்டியது.”பயம் தெளிந்தவளாக .குறும்பு தலை தூக்க…”எப்படி சர் ..நீங்களோ தி கிரேட் ரிஷி…நா சொல்லிட்டு கிளம்ப வைட் பண்ண முடியுமா? ரெண்டு நாள் நீங்க வரல… நா புரிஞ்சுக்கிட்டேன்.. டாக்டர் கிளம்ப சொன்னாரு..கிளம்பிட்டேன்…! “
ஆனாலும் அவள் கண்கள் காண்பிக்கும் வலி..யோசனையாய் ரிஷி” நீ வைட் பண்ணு…ஃபிரெஷ் ஆகிக்கோ..நா வரேன் ஜஸ்ட் டென் மினிட்ஸ்…”உள்ளே சென்றுவிட்டான்..தேனு உறைந்து நின்றாள். அவள் இதயம் வேகமாய் துடித்தது.அன்றைய நிகழ்வுகள் அவளை அலைக்கழித்தன.அவளுக்கு ஒரு தட்டில் பிரட் சாண்ட்விச் மற்றும் ஜூசுடன் எடுத்துவந்த ரிஷிக்கு அவள் நிலை புரிந்தது.தான் குற்றம் பெரியதாய் ஆனாலும் அவனால் மாற்றிக்கொள்ள முடியவில்லையே!
அவளை மெதுவாய் அழைத்து உண்ண வைத்தான்.பிறகு ஏளனமின்றி அவளை பற்றி தெரிந்து கொள்ள முனைந்தான்..சிறிது நேரத்தில் படுக்கை அறைக்குள் அழைத்து சென்றான்..அவளை கையாள தொடங்கும்போழுதே… அவள் வலி தாங்காமல் கண்ணீரை கட்டுப் படுத்த முயன்றாள். ரிஷி அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன் .அவளை தன் கையணைப்பில் வைத்துக்கொண்டு உறங்கலானான்..அவளும் வலி மறந்து உறங்க.மனதின் வெறி உணர்வு கட்டுப்பட்டவனாய் ரிஷியும் உறங்கினான். வெறி, பழியுணர்வு இவற்றை மீறிய ஒரு உணர்வு இருவரையும் உறங்க வைத்துக்கொண்டிருக்கிறது.. மறுநாள் சூரியன் உதித்து பல மணிநேரம் கழித்தே இருவருக்கும் விழிப்பூ தட்டியது.. தேனு வலியில் முகம் சுளிக்க.. “நாதான் ஒண்ணுமே பண்ணலையே என்று எண்ணியவனாக..ஆர் யு ஓகே?” என்றான்.ஆனால் பதில் அளிக்காமல்..திரும்பவும் தேனு படுத்து விட்டாள் ரிஷி குளித்து வெளி வரும்பொழுதும் அவள் படுத்திருந்தாள். அவளை எழுப்பி பாத் ரூமுக்குள் அனுப்பினான். “ஆம்.. நான் கிளம்ப வேண்டுமே” என்று யோசித்தவாறே..உள்ளே சென்றவள் மயக்கமுற்று கீழே சரிய ஒரே எட்டில் அவள் கீழே விழாமல் தாங்கினான்.
