“திருட்டும் பாலியல் தொழிலும் முன்காலத்தில் இருந்து கொண்டிருந்தது. பழங்காலத்தில் ஒரு திருமணம் தாரம் குடும்ப வரை முறைகள் இல்லாதபோது பாலியல் தொழில் வளர்ந்தது. அது நாகரிகம் வளர்ச்சி அடையாத காலம் என்று புறம்தள்ளி விடலாம். ஆனால் தற்போது நாகரிக வளர்ச்சி அடைந்த பின்பும் படுஜோராக நடைபெறுகிறது பாலியல் தொழில். ஆண்டுதோறும் இந்தியாவில் ரூ.50 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை பாலியல் தொழிலில் புழங்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கோடிகள் புரளும் இந்தத் தொழிலில் கொடுமைகள் ஏராளம். அதிர்ச்சிகளும் தாராளம்.
நூறு நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 49 சதவீத நாடுகள் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அனுமதிக்கின்றன. இந்தியா உள்ளிட்ட 12 சதவீத நாடுகளில் நிபந்தனைகளோடு பாலியல் தொழில் நடக்கிறது. 39 சதவீத நாடுகளில் அங்கீகாரம் இல்லாமல் பாலியல் தொழில் அரங்கேறுகிறது.
உலகில் 1½ கோடி பேர் விபசாரத்தில் ஈடுபடுவதாக சர்வே தெரிவிக்கிறது. 50 லட்சம் பேர் வரை ரகசியமாக விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கணிக்க முடிகிறது. இந்தியாவில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 30 லட்சம்.
முன்னாவை வரவழைக்க நினைத்த ரிஷி சட்டென தான் முடிவை மாற்றிக்கொண்டான். தானே அந்தப் பெண் குணமாகும்வரை அவளைப் பேணுவது என முடிவெடுத்தவனாக சங்கரை அணுகினான் ரிஷி.
சொல்லுடா…அந்தப் பொண்ணு இப்படி ஆனதுக்கு நீதானே காரணம்? ஜுரம் வந்ததே உன்னோட உச்சகட்ட வன்முறையாலத்தானே?
மௌனமே தனது தாய்மொழியென அமர்ந்து தன் கைகளை தலைக்கு அண்டை கொடுத்து தலை குனிந்து ரிஷியை இவ்வாறு காண ஷங்கருக்குமே தொண்டை அடைத்தது. அவன் ஆளுமையில் ஆண்மையும் கம்பீரமான தோற்றத்தில் நேர்மையில் மனோதிடத்தில் தெளிவில் ஷங்கர் ரிஷியை தனது நண்பனாக கொண்டுள்ளோம் என கர்வம் கொண்டுள்ளான்.இன்று .தான் செய்தது என்ன என்று சரியாகப் புரியாமல் கலவரத்தில் அதே ரிஷி.
“சரி ரிஷி..உன்னோட டிவோர்ஸ் கேஸ் எப்ப முடியுது?”
நிமிர்ந்து பார்த்த ரிஷியின் முகம் இறுக்கத்தை ஏற்றுக்கொண்டது.
“இன்னும் பதினஞ்சு நாள்ல முடியுது..” அவன் வேற்றுப்பார்வை மனதில் பிசைய
“ஓஹோ…அப்ப அதோட பிரதிபலிப்புதான் இந்த பொண்ணா?”
“ஷங்கர்..பிளீஸ்…புரிஞ்சுக்கோ..என்ன நடந்ததுன்னே என்னால அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியல. அந்த சமயம்… ப்ச்ச..எப்படி புரிவைப்பேன்.. அவள் நிலான்னு நினைச்சேன்…இன்னொரு பக்கம்.. நா மட்டும் எதுக்கு ராமனா இருக்கணும்னு தோணிச்சு..சத்தியமா.எனக்கு புரியலடா.ரொம்ப குழப்பமா கலவையா இருக்கு.
“உலக அளவில் விபசார தொழிலில் இந்திய மதிப்பில் 12.45 லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. விபசாரத்தில் அதிக பணம் புழங்கும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. உலக விபசார வருவாயில் 40 சதவீதத்தை சீனா பெறுகிறது. அடுத்த இடத்தில் ஸ்பெயினும், ஜப்பானும் உள்ளன. இந்தியா இந்தப் பட்டியலில் 7–வது இடத்தில் இருக்கிறது. இங்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குவதாக கணிக்கப்படுகிறது. கணக்கில் வராமல் இன்னும் பல மடங்கு தொகை ரகசிய பரிமாற்றத்தில் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. வல்லரசான அமெரிக்கா இந்த பட்டியலில் 5–ம் இடத்தில் இருக் கிறது.
பிரான்சில் சராசரியாக 207 டாலர்கள் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. மெக்சிகோவில் மணிக்கு 50 டாலர் என்ற வீதத்தில் வசூலிக்கிறார்கள். அமெரிக்காவில் தெருவோர விபசாரிகள் 50 டாலர் விலைக்கு கிடைக்கிறார்களாம். இந்தியாவில் 100 ரூபாய் முதல் பல லட்சம் மதிப்பில் விலை நிர்ணயிக்கிறார்கள்.”
வெகு மலிவாக சந்தையில் கிடைக்கக் கூடியது பெண்களின் சதையோ!
“இப்ப அந்த பொண்ணு கண்டிஷன் என்ன ஷங்கர்?”–கேட்டவனின் ரிஷியின் குரல் நலிந்து ஒலித்தது.
“ம்ஹூம்..வந்து பாத்த லேடி டாக்டர் பயந்து போயிட்டாங்க. உயிருக்கு பயமில்லை..ஆனாலும்..யார் இப்படி பண்ணதுன்னு என்ன குடையிறாங்க இது வரை நானே உன்னை போலீஸ்ல சொல்லிடலாம்னு நினைச்சிருக்கேன்…பட் வந்த பொண்ணுங்க ஒப்புக்கல.இதெல்லாம் எங்க லைஃப் ல சகஜம்ணுட்டு நடைய கட்டிட்டாங்க…இவ நிலை வெரி கிரிடிகல்.. அண்ட் உன்கிட்ட இன்னுமும் பேசணும்..அதுவும் பெர்சனல் விஷயங்கள்..ஐ ஹோப் யு வில் அண்டர்ஸ்டாண்ட் … பட் நாட் ஹியர்..வி வில் மீட் டுடே ஈவினிங் இன் மை பிளேஸ்…இப்போ…நீ வீட்டுக்கு போறதுன்னா போயிட்டு வா..அந்த பொண்ணு நேம் ஏதோ சொன்னீயே” , என்று ரிஷியை ஆழம் பார்த்தான் ஷங்கர்.அவன் ஊகித்தவாறே நீண்ட யோசனைக்குப்பின் அவ பேரு தேனுன்னு சொன்னதா ஞாபகம்.நா வீட்டுக்குபோய்ட்டு ஒன் ஹவர் ல வரேன்.. எமெர்ஜென்சி வந்தா கால் பண்ணு.. என்றவாறே..கிளம்பினான் ரிஷி.
ஷங்கர் நினைத்தவாறே தன்னையும் அறியாமல் பெண்களை படுக்கையறை வக்ரங்களில் துன்புறுத்தி சுகம் கண்டிருந்தான் ரிஷி. கண் விழித்தாலும் மருந்துகளின் வீர்யத்தால் வலி தெரியாமல் அரை மயக்க நிலையில் தேனு அவளால் ரிஷி பற்றி கணிக்க முடியவில்லை..இவன் யார்?”தி க்ரேட் ரிஷி” என்றான் எனில் என்னவாக இருக்கிறான்? தான் இவனை முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம்! இவன் தன்னை இவ்வாறு கையாள காரணம் என்ன? யார் மீதோ கோவம் என்றானே என அவள் ஆழ்மனம் முழுதும் ரிஷியின் சிந்தனைகள் புருவ சுளிப்புடன் நெற்றியில் சுருக்கங்களைக் கண்ட ஷங்கர் இவற்றை மனதில் இருத்திக்கொண்டான்.
தனது அவசர வேலைகளை முடித்துக்கொண்டு மடிக்கணினியுடன் தேனுவின் அறையின் ஒரு ஓரத்தில் அட்டெண்டர் இருக்கையில் அமர்ந்து வேலை செய்துக்கொண்டு தேனுவின் இருப்பையும் கவனித்தவாறே அமர்ந்திருந்த ரிஷியின் தோற்றம் தேனுவின் மனதில் பயமேனும் புயலையும் ஆச்சர்யமேனும் ஆழியையும் ஒருங்கே அவள் மனதில் தோன்றச்செய்தது.
அவளின் நிலையை அறிந்தவனாக..சாரி தேனு..உன்னோட வலி எனக்கு புரியுது..பட், என்னோட நிலைதான் எனக்குப் புரியல உனக்கு நா இங்க ஸ்டே பண்ணுறது கஷ்டமா இருந்தா பிளீஸ் பொறுத்துக்கோ இப்ப நீ இருக்குற நிலையுல புதுசா யாரையும் உன்னை கவனிக்க அனுமதிக்க இயலாது. புரிஞ்சுகோ ..” .என்றுவிட்டு அழுத்தமாய் அமர்ந்து கொண்டவனைக் கண்டு தேனுதான் அயர்ந்துபோனாள்.
நான் தவறு செய்யவில்லை என அவன் வாதாடவில்லை…தான் செய்த தவறுகளின் விடைகளை சரி செய்ய முயல்கிறான்…இந்த நிலையில் என்னை கைகழுவாமல்…என்னோடு இங்கு அமர்ந்திருக்கிறான். ஹாஸ்பிடலின் உட்புறங்களை ஆராய்ந்த தேனுவிர்க்கு நிச்சயம் புரிந்தது.இது ஏழைகளோ மத்திய வர்கத்தை சேர்ந்தவர்களோ வரக்கூடிய இடமன்று.அப்படியெனில் இவன் சமூகத்தின் உயர் அந்தஸ்த்தில் இருப்பவன். பின்னர் இங்கு இவன் அமர்ந்திருப்பதின் அர்த்தமென்ன? எதுவும் கேட்பதில் பயனில்லை என்பது புரிந்ததால் மௌனியானாள்.
தன் இருப்பிடத்திற்க்கு திரும்ப செல்லாமல் இப்படியே இருக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.இந்தக்ஷணம் இவுலகிலிருந்து விடுதலை கிடைத்தால் ..நான் நிச்சயம் புண்ணியம் செய்தவளே என்று அவள் மனம் அழுதது.
“ஓகே தேனு..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ..போயிட்டு..ஒரு டூ ஹவர்ஸ்ல வரேன்..உனக்கு ஏதாவது வேணுமா?” கண்ணீருக்கு இடையே வேண்டாமென தலையசைத்த தேனுவை குனிந்த தலையுடன் கண்டுவிட்டு சென்றான் ரிஷி.
ரிஷியிடமிருந்து எவ்வளவு கரக்கலாம் என்று தன் நண்பர்களுடன் மிழற்றிக்கொண்டிருந்தாள் நிலா.கண்டிப்பார் யாருமற்ற நிலையில்..அவளது பணத்தில் ராஜ போகங்களை ஒரு கூட்டமே அனுபவித்தது.தங்களுக்கும் அனுபவிக்க பணம் தாராளமாக கிடைக்கும் என்ற நிலையில் அவளுக்கு புதுப்புது துர் உபதேசங்கள் இலவசமாகவே கிடைத்தது..இதை உணர்ந்துதானே செல்வா சொத்துக்களின் கடிவாளத்தை ரிஷியிடம் கொடுத்தார்.ரிஷியிடமிருந்து அவன் சொந்த சொத்துக்களில் ஏதும் கிடைக்காது..அதை அவன் என்றும் அனுமதிக்க மாட்டான் என்று அந்த மடாக்குடி மடையர்களுக்கு தெரியவில்லை! ரிஷி தனது சொத்துக்களை கையாள்வது நிலாவிர்க்குள் வெப்பத்தை ஏற்றி விட்டது. அவளுக்கு இன்னும் நிதர்சனம் புரியவில்லை…
ரிஷி கிளம்பியதை ஊர்ஜிதப் படுத்திய பின்னர் ஷங்கர் தேனுவின் அறைக்குள் வந்தான்..மருத்துவனாக அவனுக்கு தேனுவின் மீது எல்லையற்ற கருணை இருந்தது..அவளருகே அமர்ந்து மெல்லிய குரலில் கேட்டான்…
தேனு “நீங்க…உங்க தொழில்….******?”
“ஆமாம் டாக்டர்….நா அந்த தொழிலில் இருக்குறவதான்!
“இட்ஸ் ஓகே, ரிஷி அன்னிக்கி உங்ககிட்ட எப்படி நடந்துகிட்டான்னு எனக்கு சொல்ல முடியுமா, பிளீஸ்..என்ன தவறா நினைக்காதீங்க…!ஒரு டோக்டரா இத தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு…”
“யெஸ் டாக்டர்..ஐ அக்ரீ… அவர் ரொம்பவே முரட்டுத்தனமா இருந்தாரு…பெண்களை பிடிக்காதோன்னு நினைச்சேன்.பட் ..அவர் உணர்வுகள் காமத்தை வெளிப் படுத்தல… அதே சமயம் என் வாழ்நாள் முடிஞ்சுதோன்னு சந்தோஷமா இருந்தது. அவள் வார்த்தைகளின் உள்ளிருந்த வலி ஷங்கரின் மனதை வெகுவாய் அதிரச் செய்தது..
“தென்…ரிஷி மேல கம்ப்ளைண்ட் பண்ண விரும்புறியா தேனு. நா ஹெல்ப் பண்ணுறேன்…” வார்த்தைகளின் வலி அவன் கண்களில் தெரிந்ததோ?
“நோ சர்…நா இருக்குற தொழிலுக்கு போலீஸ் உதவாது…அப்படி நா போலீஸ் கிட்ட போனா..எனக்கு வேற சிக்கல்கள் வரலாமே தவிர நிச்சயம் விடிவு இல்ல.. அண்ட் ரிஷி மறுநாளேந்து எங்கிட்ட நடந்த முறை…நோ வே ..அவர் தப்பிச்சு ஓட நினைக்கல ..ஸோ .. அவருக்கு வேற எதுவும் பிரச்சனைகள் இருக்கலாம்…. அவளது மிகத் தெளிவான உரையாடல் அவள்மீது மதிப்பு வரச் செய்ய .நீ படிச்சிருக்கியா…”குரல் வேறுபாட்டில் நிமிர்ந்து பார்த்த தேனு, “ஏன் சர்.. வேலை தரப் போறீங்களா? “ என்று எள்ளினாலும்..அவனுக்கான பதிலை தரவே செய்தாள்.
“யெஸ் டாக்டர்… நா பி.காம் மெடலிஸ்ட்.விதி என்ன இந்த சாக்கடியில தள்ளிடுச்சு..ஓகே சர். ஐ நீட் ரெஸ்ட்” என்றுவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்..அவளது குமுறல்கள் கண்ணீராய் விழ நிலை புரிந்தவனாய் கிளம்பினான் ரிஷியை சந்திக்க. காரில் செல்லும்பொழுது அவன் மனம் தேனுவிர்க்காக போராடியது..இவ்வளவு நடந்தாலும் இந்த பெண்கள் போலீசை அணுக முடியாதா? அவர்கள் வாழ்க்கையில் விடிவே இல்லையா!இந்த கேள்விகள் விடை தெரியாமலே..பல மைல்கள் கடந்து வந்துவிட்டதே! படித்த பெண் எதற்க்கு இந்த தொழிலுக்குள் வந்தாள்? அவளுக்கு என்ன ஆனது..என்றெல்லாம் அவன் மனம் யோசனைகளில் பிரயானித்தது.
ரிஷி..ஷங்கரின் பங்களாவில் அவனுக்காய் காத்திருந்தான்…
இந்த பதிவில் மன நோய் பற்றி நான் படித்ததை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்!
மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே – படித்தவர் உட்பட – பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது (‘பராசக்தி’ வசனம்!). மருத்துவப் படிப்பில் மனநோய் பயிற்சி மிகக் குறைவே. தமிழ் இலக்கியங்களிலும் புனை கதைகளிலும் கூட மனக்கோளாறுகள் உள்ள கதை மாந்தர்களைக் காண முடியாது! படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும்-விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல் பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இப்பகிர்வின் நோக்கம்.
காரணங்கள்
- உடற்கோளாறுகள் / உடல் நோய்கள் நேரடியாக கண்ணுக்குத் தெரிபவை; மனக்கோளாறுகள் உளம் சார்ந்தவை, பெரும்பாலும் நோய் முதிர்வடையும் வரை கண்ணுக்குத் தெரிவதில்லை. கால் உடைந்து கட்டுப் போட்டுக்கொண்டிருப்பவனுக்கு காட்டப்படும் அனுதாபமும் கரிசனையும் மனச்சோர்வினால் துயரத்தில் ஆழ்ந்திருப்பவனுக்கு கிடைப்பதில்லை.
- பொதுவாக, மனக்கோளாறுகள் உண்மையானவை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அவை மன பவீனத்தினாலும், ஆளுமை குறைபாட்டினாலும் உண்டாகின்றன என்பது பலரின் கருத்தாக இருக்கிறது; தானாக வலுவில் உருவாக்கிக் கொள்ளப்பட்டவை என்ற அபிப்பிராயமும் உண்டு. “என்ன செய்றது? சரிதான், வேலையைப் பாக்க வேண்டியதுதான்” என்று மனக்கோளாறை ‘இயல்புபடுத்தும்’ ஒரு மனப்பாங்கு காணப்படுகிறது.
- மனக்கோளாறுகளைக் கொச்சைப் படுத்துவதும், எள்ளி நகையாடுவதும் எமக்கு ஒரு பொழுதுபோக்கு (தமிழ்ப் படங்களில் மனநோய்கள் சித்தரிக்கப்படுவதை காண்க). ‘பைத்தியம்’. ‘கிறுக்கு’, ‘லூசு’, ‘மென்டல்’ என்று பல ‘செந்தமிழ்’ சொற்களால் வர்ணனை செய்யயும் பாரம்பரியம் நமக்குண்டு.
- மனநோயாளர் காரணமில்லாமல் வன்முறையில் ஈடுபடுபவர்கள், கொலைகாரர்கள் என்ற அச்சம் பலரிடையே உண்டு. உண்மையில் மனக்கோளாறுகள் உள்ளவர்களில் மிக மிகச் சிலரே ஆக்ரோஷமாக நடந்துகொள்கிரார்கள்.
மனநோய் என்றால் என்ன?
மனதில் ஏற்படும் பிறழ்வுகளை என்ன பெயரிட்டு அழைப்பது என்பதில் பல சங்கடங்கள் உள்ளன. எல்லா மனப் பிறழ்வுகளும் மனநோய்கள் அல்ல. நோய் என்ற சொல்லுக்கு அறிவியல் சார்ந்த மருத்துவ ரீதியிலான வரையறை ஒன்றுண்டு. நோய் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம்/ காரணங்களை அறிந்தாக வேண்டும். உடல் உறுப்பில் நோயின் பாதிப்பை உறுதியாக நிரூபிக்க வேண்டும்; வெவ்வேறு நோய்க்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்க வேண்டும். ஒரு நோய் ஏற்பட்ட பின் அது எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று அனுமானிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இந்த விதிகளுக்கு ஏற்றதாய் இருந்தால் மட்டுமே நோய் என்ற பதத்தை பாவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மன ‘நோய்’களைப் பொறுத்தவரை, இதுவரை அதன் காரணங்கள் தெளிவுற கண்டுபிடிக்கப்படவிலை. ஒவ்வொரு நோயுக்கும் வெவ்வேறான காரணங்கள் உண்டு என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, அதே மரபணுகள் வெவ்வேறு மனநோய்களை தோற்றுவிக்கின்றன
(மறதிநோயைத் தவிர்த்து) மூளையில் ஏற்பட்டும் பாதிப்புகள் ஐயத்துக்கிடமின்றி எடுத்துக்காட்டப்பட வில்லை! சில ‘மனநோய்’களில் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மன”நோய்’) மூளையில் மின் தூண்டல் கடத்திகள் (neuro-transmitters) போன்ற வேதிப்பொருள்கள் ஏற்படுத்தும் மாற்றங்களே காரணம் என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் மட்டுமே உள்ளன.
மனநோய் என்று அழைப்பதைவிட ‘மனக்கோளாறுகள்’, மனப்பிறழ்வுகள்’, ‘மனச் சீர்குலைவுகள்’ என்ற பதங்கள் பொருத்தம்மானவை என்பது பொதுவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்து. இதனால்தான், உலகளவில் DSM 5 வட அமெரிக்காவிலும், ICD 10 [4] என ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்படும் நோய் வகைபாடு முறைமைகளில் mental disorders என்ற சொற் பிரயோகம் பாவனயில் உள்ளது.
மூளையின் உயர் செயல்பாடுகளான உணர்தல், சிந்தித்தல், நினைவுத்திறன் (memory), நடத்தை ஆகியவை குறிப்பிடும் படி சீர்குலைந்தும், அதனால் அன்றாட செயல்திறன் குறைவடையவும் போதும், அதை மனக்கோளாறு என்று அழைக்கிறோம்.
மனக்கோளாறுகளை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக் கொள்வதும் மனக்கோறுகள் பற்றிய தெளிவின்மைக்கு ஒரு காரணம்.
- கடுமையான மனக்கோளாறுகள் (severe and enduring mental disorders; severe mental illnesses): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையில் தீவிர தாக்கத்தை உண்டாக்கும், நீண்டகாலம் நீடிக்கும் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மனக்கோளாறு). இந்த வகையான மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை அப்போதைக்கு சீர்குலைந்து, அகத்துக்கும் புறத்துக்கும் உள்ள வித்தியாசம் அற்றுப் போய், நடத்தை தாறுமாறாகவும் சமுதாய வழமைகளுக்கு மாறுபட்டதாகவும் காணப்படும். இவற்றை, பொது மொழியில், உளப் பிறழ்வுகள் (psychoses) என்று அழைக்கப் படுகின்றன.
- பொதுவான மனக்கோளாறுகள் (common mental disorders): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையை பெரும்பாலும் சீர்குலைப்பதில்லை (எ-டு, மனப் பதற்றம் (anxiety), மனச்சோர்வு (depression)), பீதி (panic disorder), அதிர்ச்சியைத் தொடரும் மனஅழுத்தப் பிறழ்வு (post traumatic stress disorder), உள வழி உடல் பாதிப்பு (somatoform disorders), நிலைமாற்றப் பிறழ்வு (conversion disorder/hysteria).
மேலே கூறப்பட்ட மனக்கோளாறுகளுக்கப்பால் வேறு பல மனக்கோளாறுகளும் உண்டு. இவைகளில் பின்வருவன முக்கியமானவை:
- மறதினோய் (dementia). இதில் அல்செய்மர் நோய் (Alzheimer’s disease) முக்கியமானது
- தவறான மது பாவனை (alcohol abuse)
- போதைப் பழக்கம் (drug abuse),
- உளம் சார்ந்த பாலுறவுக் கோளாறுகள் (psycho sexual disorders).
- மனவளர்ச்சிக் குறைபாடும் (intelluctual disability/mental retardation) ஆர்டிசம் (autism) ஆகிய இரண்டும் மனக்கோளாறுகள் அல்ல; அவை வளர்ச்சிக் கோளாறுகள் (developmental disorders).
ரிஷியை பற்றி எழுதும்பொழுது ,ஓரளவிர்க்கு இது பற்றி தெரிந்திருத்தல் அவசியம் என நினைத்ததால் இது பற்றிய சில கட்டுரைகளை படிக்க நேர்ந்தது.அவற்றில் ஒரு சிறு பகுதியை பகிர்ந்துகொள்ளுதல் ரிஷியின் நிலையை உங்களுக்கு புரிய வைக்கும் என நம்புகிறேன்!
.
ரிஷியை கண்டவுடன் தன்னையும் அறியாமல் பூத்த மென்னகையுடன்..தன்னை வெகுவாக கட்டுப்படுத்தியபடி ரிஷி..கொஞ்சம் வைட் பண்ணு.வந்துடறேன் என்றவாறே..தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.குளியலில் தன்மீது விழுந்த நீர்த்துளிகளை இன்று ஷங்கரால் ரசிக்க இயலவில்லை. ரிஷி தான் கூறும் விஷயங்களை எவ்வாறு எடுத்துக்கொள்ளப் போகிறான் எனும் குழப்பம் அவனை ஆக்டோபஸை போல பற்றியிருந்தது. ஒருவழியாக வேறேதும் வழி இல்லை என புரிந்தவனாக இரவு உடையில் கையில் எலுமிச்சை சாறுடன் தன் நண்பனைக் காண விரைந்தான் .
ஷங்கர் உள் நுழைந்ததிலிருந்தே அவனையே கவனித்து அமர்ந்திருந்த ரிஷிக்கு அவன் கூறப் போவது தேனு மற்றும் தன்னை சம்மந்த படுத்தியதாக இருக்கும் என்ற ஊகம் இருந்தது..எதற்க்கும் தயார் நிலையில் அவன் மனம் இத்துணை கவனிக்காவிட்டால் நான் எப்படி இவ்வளவு பெரிய நிலையில் இருப்பேன் என்று மனதின் ஒரு பகுதியும் அப்படியா? பின்னர் நிலாவிடம் கோட்டை விட்டது ஏன் என்று மனதின் இன்னொரு பகுதியும் வாதிட்டது .இரண்டுக்குமே அவனால் பதில் கொடுக்க முடியவில்லை..அமைதியாக அமர்வதே நிம்மதி என புரிந்தவனாக அமைதி காத்தான்.
ஷங்கர் இவனுடன் மொட்டை மாடிக்கு போலாம் வரியா ரிஷி? என்று அழைக்க இருவரும் அங்கே சென்று ஊஞ்சலில் அமர்ந்து ஜூஸை பருகியவாறே சிந்தனையில் ஆழ்ந்தனர்..
“ரிஷி நா சொல்ல வரது ரொம்ப சென்ஸிட்டிவ் விஷயம்..ரொம்ப நாளா பேசாம விட்டது ரொம்ப தப்பு.. “
“புரியுது ஷங்கர்.. பதிலில் சற்று நிதானித்த ஷங்கர் ரொம்ப நல்லது ரிஷி.இதுக்குமேல தாமதிக்க முடியாது..நீ உடனடியா ஒரு சைக்காலஜிஸ்ட் ஹெல்ப் தேடணும்..உனக்கு விருப்பம்னா..நம்ம ஹோஸ்பீட்டல்ல பாக்கலாம்…இல்ல..வேற யாரையும் நா சஜெஸ்ட் பண்ணுறேன்.”
ரிஷியிடம் எந்த பதிலும் இல்லை…ஷங்கர் முகத்திலும் வெறுமை படர்ந்தது..
தன் நிலை இவ்வளவு தாழ்ந்து விட்டதா? ஓர் பெண்ணால் என் வாழ்வு இப்படி சிதிலமைடைந்துவிட்டதா, நான் மனநோயாளியா, என்று கழிவிரக்கத்தில் சுழன்ற நண்பனின் நிலை ஷங்கருக்குப் புரியாமல் இல்லை…வேறு வழி இல்லையே..இதுவும் ரண சிகிச்சையே!
“டேய்! நீ இதுவரைக்கும் விலைமாதர்களை வரவழைச்சு செஞ்ச கொடுமை…அப்பவே நா யோசிச்சேன்..பட்…எப்படி ஆரம்பிக்கணும்..எத கொண்டு சிகிச்சய தீர்மானிக்கணும்னு யோசிக்க டைம் தேவைபட்டது..இப்போ…இந்த பொண்ணுகிட்ட நீ நடந்துக்கிட்டது.. வக்ரத்தோட உச்சம்..இன்னும் சொல்லணும்னா..உனக்குத் தெரியாமையே நீ கொலை முயற்ச்சில இறங்கி இருக்க…அவ நிலா இல்லனு உனக்கு புரியல..சோ… அம் ரியலி அஃப்ரைட்… நிலா உன்கைல சிக்கி இருந்தா? உன்னை கொலைக்காரனா பாக்க என்னால முடியாது…நீ மனசு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கற்து வெளியில யாருக்கும் தெரியக் கூடாது.அது நிச்சயம் உன் பிசினேஸ்ஸ பாதிக்கும்…நிறைய சிக்கல்கள்….நீ சீக்கிரம் டிசைட் பண்ணுடா…பிளீஸ்!
அதுமட்டுமில்லாம..இன்னும் பத்து பதினஞ்சுநாள்ள நீ கோர்ட்டுக்கு போகணும்..அனேகமா..இந்தமுறை டிசைட் ஆகிடும்…ஸோ ..பிளீஸ்..அதுக்கும் முன்னால டாக்டரா பாக்கணும்னு நினைக்கிறேன்..டா…உனக்கு இப்போ கண்டிப்பா சப்போர்ட் தேவைங்கர்து என்னோட ஒபீனியன் ..இதுவரைக்கும் எந்த பொண்ணும் உன்மேல கம்ப்ளைண்ட் பண்ணல..ஆனா அதயே எப்பவும் எதிர்பாக்கவும் முடியாது!”
“இத்தனைக்கும் பிறகு ரிஷியிடமிருந்து வந்த ஒரே கேள்வி..தேனுவ எப்ப வீட்டுக்கு கூட்டி போகலாம்,என்பதே..
“நோ ரிஷி,அவள உன்னோட நீ இருக்குற நிலைல அனுப்ப நா ஒத்துக்க முடியாது! ஒண்ணு அவ கொஞ்சநாள் இப்படியே இருக்கட்டும்…ரெகவர் ஆனபிறகு, அவளோட இடத்துக்கு அனுப்புறேன்.இல்லன்னாலும். முன்னா நம்பர் வாங்கி அவங்கிட்ட அனுப்புறேன்.எனக்கு உன்னோட அனுப்ப பயமா இருக்கு ரிஷி!”
“இல்லடா,அவ உன் ஆஸ்பிடல இருக்கட்டும்..நா டெய்லி வந்து பாக்குறேன்.இந்த நிலைல அவள முன்னாகிட்ட அனுப்புறது சேஃப் இல்ல! “
உன்னோடு அனுப்புவது மட்டும் என்று கேட்ட ஷங்கரின் கண்கள்!
தலை குனிந்தவாறே, “ஓகே டா..நா கிளம்புறேன்.அவ வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாயென” கிளம்பிய ரிஷியை விசித்திரமாக கண்டான் ஷங்கர்.
நிலா கொழுத்த பணத்தை ஜீவனாம்ஸமாக கரக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அதே சமயம் ரிஷி அவளது நடத்தை தொடர்பான ஆதரங்களை சேகரித்துவிட்டிருந்தான்! அவளுக்கு மனைவி எனும் அங்கீகாரத்தை ஜீவனாம்சம் மூலம் வழங்கவும் அவனுக்கு உடன்பாடில்லை .
தேனுவின் அக்காவிற்க்கு இது நான்காம் மாதம்…வீடு முழுமையும் அவளைத்தாங்க..மசக்கையுடன் தங்கையை நினைத்தும் சோர்வுற்று காணப்படும் மதிக்கு ஒரு வாரமாய் மனது வேகமாய் கலவரத்தில்…தேனுவிர்க்கு நிகழ்ந்த கொடுமைகள்..எப்பொழுதும் அவளையே நினைக்கும் மதிக்கு அடி மனதில் கிலியை ஏற்படுத்தியதில் ஆச்சர்யம் இல்லை…குழந்தைக்கும் தங்கைக்குமாக சேர்ந்து சோர்ந்து துடித்தது அவளது தாய்மை உணர்வு.
தேனு எழவே ஒருவாரத்திர்க்கும் மேலாகும்..என்றுவிட்டான் ஷங்கர். அதுவரை அவளைப் பற்றி விசாரிக்காமல் இருக்க முன்னாவிர்க்கு கொழுத்த பணத்தையும்அவளை பற்றி துருவினால் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என்றும் ரிஷியின் தரப்பிலிருந்து மறைமுகமாக மிரட்டல் விடுக்கப் பட..முன்னா மட்டுமே அறிந்த ரகசியம் தேனு ரிஷியுடன் என்பது… ரிஷி இப்பொழுதெல்லாம் மனசாட்சி சொல்வதை கேட்பதில்லையே!!
