50
இந்த முறை ACP ஷர்மா கொண்டு வந்த அந்தப் புதிய வரைபடம், சாதாரணமான கடத்தல் வேலைக்கானது அல்ல. சர்வதேச அளவில் கோடி கணக்கில் மதிப்புள்ள, ரகசிய ஆயுதங்களும், பொருட்களும் அடங்கிய ஒரு பிரம்மாண்டமான திட்டம். ஷர்மா விவரித்த ஒவ்வொரு நுணுக்கத்தையும் கேட்ட பிறகு, ரோலக்ஸும் பைரவனும் பல இரவுகள் கண்விழித்து, அந்தத் திட்டத்தைச் சுவர்க்கம் போலச் செதுக்கினர்.
ஆனால், விதி தன் கொடூரக் கரங்களை வேறு விதமாக நீட்டியது.
அவர்கள் கிளம்ப வேண்டிய அன்றைய தினத்தில், பாபியின் பங்களாவிலிருந்து அவசரத் தகவல் வந்தது. துறைமுகத்தின் தெற்குப் பகுதியில் ஒரு பெரிய நிலக்கரி பரிவர்த்தனையில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும், அதை உடனடியாக நேரில் சென்று கவனிக்க வேண்டும் என்றும் பாபி உத்தரவிட்டிருந்தான்.
ரோலக்ஸின் கண்கள் நொடிநேரம் குளிர்ந்து மாறின. அவனது மாபெரும் திட்டத்திற்கு இது ஒரு பெரிய இடைஞ்சல். ஆனால், பாபிக்கு சந்தேகம் வரக்கூடாது.
ரோலக்ஸ் தன் கைகளால் பைரவனுக்குச் சைகை செய்தான், “பைரவா… நீ இந்த நிலக்கரி பிரச்சனையைப் பார்த்துக்கோ. ‘நான் ரோலக்ஸ் கூடத்தான் இருக்கேன்’னு பாபிக்குத் தகவல் மட்டும் அனுப்பிடு. இந்த அரபிக் கடல் கடத்தல் திட்டத்தை நான் தனியாவே போய் முடிச்சிட்டு வந்துடுறேன்.”
பைரவன் கவலையோடு தலை அசைத்தான். ரோலக்ஸ் தனியாகத் தன் கறுப்பு நிறச் சீறும் படகில் அரபிக் கடலின் ஆழத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.
திட்டமிட்டபடியே, அரபிக் கடலில் சர்வதேச எல்லைக் கோட்டின் அருகே, கப்பலை ஜாம் செய்து, நடுக்கடலிலேயே கன்டெய்னர்களைத் தன் படகுகளுக்கு மாற்றி, குஜராத் எல்லை வழியே டெல்லிக்குச் சரக்குகளைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தான் ரோலக்ஸ். அனைத்தும் மிகக் கச்சிதமாக, ஒரு சுவடு கூட இல்லாமல் நடந்து முடிந்தது.
காரியம் முடிந்ததும், டெல்லியின் மாபெரும் அரசியல் புள்ளியான சௌத்ரி, ரோலக்ஸின் இந்த அசாத்திய திறமையைப் பாராட்டி ஒரு பிரம்மாண்டமான வெற்றியின் கொண்டாட்டப் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார். டெல்லி மேலிடத்தின் முக்கிய நபர்கள் கலந்துகொண்ட அந்த விழாவில், அரசியல் ஆதரவை இன்னும் வலுவாக்க வேண்டிய கட்டாயத்தால், ரோலக்ஸ் கலந்துகொள்ள நேரிட்டது.
அதனால், அவன் திரும்பி வரச் சில நாட்கள் தாமதமானது.
ஆனால்… அந்தச் சில நாட்கள் தாமதம், அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப்போடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
விசாகப்பட்டினத் துறைமுகத்தின் எல்லையை ரோலக்ஸின் படகு நெருங்கியபோது, அங்கே நிலவிய நிசப்தம் வழக்கம் போல இல்லை. அது ஒரு பெரிய பிணத்தின் மீது கவிழ்ந்திருக்கும் மௌனம் போலிருந்தது.
படகு கரையைத் தொடுவதற்கு முன்பே, கடலில் மிதந்த ஒரு சிறிய மீன்பிடிப் படகிலிருந்து இருவர் பாய்ந்து ரோலக்ஸின் படகிற்கு வந்தனர். அவர்கள் பாபியின் அடியாட்களாக இருந்தாலும், உள்ளுக்குள் ரோலக்ஸிற்கு மட்டுமே விசுவாசமாக இருக்கும் ரகசிய ஒற்றர்கள்.
அவர்களின் முகத்தில் மரண பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. “அண்ணே… ரோலக்ஸ் அண்ணே! பெரிய ஆபத்து அண்ணே!” ஒருவன் பதற்றத்தில் கத்தினான்.
ரோலக்ஸ் அவனை நிதானமாகப் பார்த்தான். அவனது கண்கள் ‘என்ன?’ என்று கேட்டன.
“அண்ணே… நீங்க இல்லாத நேரம்பார்த்து எல்லாமே தலைகீழா போயிடுச்சு! பாபிக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு அண்ணே… இத்தனை நாளா அவனுக்குத் தெரியாம நீங்க பண்ணின அத்தனை அண்டர்வேர்ல்ட் கடத்தல், டெல்லி கனெக்ஷன் எல்லாமே அவனுக்கு அம்பலமாகிடுச்சு!”
ரோலக்ஸின் நெற்றி சுருங்க, “எப்படிடா?” என்று பைரவன் இல்லாததால், அந்த ஒற்றனே தொடர்ந்தான்..
“அண்ணே… ஒரு வெளிநாட்டுக்காரன் ஒரு மாபெரும் சர்வதேசச் செல்வமும், தங்கமும், வைரமும் நிரம்பிய ஒரு பிரம்மாண்டமான சொத்துக் கப்பல் இந்தத் துறைமுகத்துக்கு வந்துச்சு. நீங்க இங்க இல்லாத சமயம், அந்தச் சரக்கைப் பாபி கைப்பற்றப் போனப்போதான், உங்களோட ரகசிய ஆட்களும், நீங்க அமைச்ச அண்டர்வேர்ல்ட் நெட்வொர்க்கும் அவ கண்ணு முன்னாடி வந்து நின்னது. நீங்க அவனையே ஒரு பொம்மையா வச்சு ஆட்டிப்படைச்சது அவனுக்குத் தெரிஞ்சிடுச்சு!”
அவன் நிறுத்தி, ஆழமாக மூச்சு வாங்கிவிட்டு, அடுத்த அதிர்ச்சிச் செய்தியைச் சொன்னான்:
“அண்ணே… பாபி வெறிபிடிச்சு ஆடுறான்! பைரவன் அண்ணனைப் பிணைக்கைதியா பிடிச்சு வச்சிருக்கான். அவ உடம்புல ரத்தமே இல்லாத அளவுக்கு அடிச்சு நொறுக்கி வச்சிருக்கான்… அதுமட்டும் இல்ல அண்ணே…” என தயங்க… ரோலக்ஸ் அவனது சட்டையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தான். அவனது கண்கள் ரத்தச் சிவப்பாக மாறின.
“உங்க மனைவி… மயூரா அண்ணியையும் அந்தக் கப்பல்ல வச்சி வச்சிருக்கான் அண்ணே! ‘ரோலக்ஸ் என் முன்னாடி வந்து நிக்கலனா, ரெண்டு பேரையும் துண்டு துண்டா வெட்டி கடல்ல தூக்கி போடுவேன்’னு சவால் விட்டுட்டு, உங்களுக்காகத்தான் காத்துட்டு இருக்கான்!”
அந்தச் செய்தியைக் கேட்ட அடுத்த நொடி… ரோலக்ஸின் உலகமே ஒரு கணம் உறைந்துபோனது.
அவனது ஆருயிர் நண்பன், தன் கண்ணும் கருத்துமாக இருந்து தன் நிழலாக வாழ்ந்த பைரவன்… ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்! அவனது மூச்சு, அவனது உயிர்… அவன் உலகம் … மயூரா, எதிரியின் பிடியில் ஆபத்தில் இருக்கிறாள்!
ரோலக்ஸின் நெஞ்சுக்குள் எரியும் பழிவாங்கும் நெருப்பு, இப்போது எரிமலையாக வெடித்தது. அவனது தாடை இறுகியது. நரம்புகள் புடைத்தன.
இத்தனை காலம் அவன் பொறுமையாக இருந்தது, பாபியைக் கண்டு பயந்து அல்ல, தன் சாம்ராஜ்யத்தை வலுவாக்குவதற்காக! இப்போது அவனிடம் டெல்லி அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கு, சர்வதேச மாஃபியாவின் ஆயுத பலம் இருக்கு, அனைத்துக்கும் மேலாகத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த ஆட்களும் அவன் பக்கமே இருக்கிறார்கள்.
பாபி என்பவன் இவனுக்கு முன்னால் வெறும் ஒரு சாதாரணப் பூனை! இவனோ… இந்த நிழல் உலகத்தை ஆளும் வேட்டைச் சிங்கம்!
“இனிமே தாமதிக்கிறதுக்கு எதுவுமே இல்லை…” ரோலக்ஸ் தன் கையில் இருந்த ரோலக்ஸ் கடிகாரத்தை இறுக்கமாகப் பூட்டினான். தன் இடுப்பில் அந்த வெள்ளைத் துப்பாக்கியைச் செருகினான்.
அவனது ஒற்றைச் சைகையில், துறைமுகத்தின் மூலைமுடுக்கில் ஒளிந்திருந்த நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய மாஃபியா வீரர்கள் கறுப்பு உடைகளில் வெளியே வந்தனர். ஏகே-47 துப்பாக்கிகள், தானியங்கி சுடரிகள் என அதிநவீன ஆயுதங்களுடன் அவர்கள் ரோலக்ஸின் பின்னால் அணிவகுத்தனர்.
“இன்னைக்கு பாபியோட சாம்ராஜ்யம் அழியப் போகுது… புறப்படுங்கடா!” ரோலக்ஸின் படை, பாபியின் பிரம்மாண்டமான கோட்டையை நோக்கிச் சீறிப் பாய்ந்தது!
பாபியின் தலைமைப் பங்களா, கிடங்கு வளாகம், ஒரு சிறிய கோட்டை போல இருந்தது. அதன் பிரதான இரும்பு கேட் பூட்டப்பட்டு, சுற்றிலும் பாபியின் கூலிப் படையினர் துப்பாக்கிகளோடு நின்றிருந்தனர்.
“டும்மமம்மாம்…!”
ரோலக்ஸ் வந்த கனரக ராணுவ டிரக், அந்த பிரம்மாண்டமான இரும்பு கேட்டைக் சுக்குநூறாக உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது!
டிரக்கின் மேல் கூரையில் இருந்து குதித்த ரோலக்ஸ், இரு கைகளிலும் தானியங்கித் துப்பாக்கிகளை ஏந்தியபடி களத்தில் பாய்ந்தான்.
டக் டக் டக் டக் டக்! பாங்! பாங்! பாங்!.
தோட்டாக்கள் மழையாகப் பொழிந்தன. பாபியின் ஆட்கள் சுதாரிப்பதற்குள், ரோலக்ஸின் தோட்டாக்கள் அவர்களின் மண்டைகளையும் நெஞ்சுகளையும் துளைத்தன.
ரோலக்ஸின் வெளுத்த சட்டை மீது எதிரிகளின் ரத்தம் தெளித்து, அது சிவப்பாக மாறத் தொடங்கியது. அவன் ஒரு கொடூரமான மிருகத்தைப் போலச் செயல்பட்டான். தன்னை நோக்கி ஓடிவந்த ஒருவனின் கழுத்தை இடது கையால் பிடித்து முறித்து, அவனது உடலையே கேடயமாகப் பயன்படுத்தி, பின்னால் வந்தவர்களைத் தன் வெள்ளைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான்.
அவனது ஆட்கள் கைகலப்பில் ஈடுபட, ரோலக்ஸ் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ரத்த வெள்ளத்தைக் கடந்து பிரதான ஹாலை நோக்கி முன்னேறினான்.
அங்கே… பிரம்மாண்டமான மர நாற்காலியில் பாபி அமர்ந்திருந்தான். அவனது வாயில் சுருட்டு புகைந்து கொண்டிருந்தது. அவனது முகத்தில் கொடூரமான நக்கல் புன்னகை இருந்தது.
ஆனால், அவனது பாதத்திற்கு அடியில்… பைரவன் தோலெல்லாம் உரிக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அரை மயக்க நிலையில் கிடந்தான்!
இன்னொரு பக்கத்தில், தூணோடு சேர்த்து மயூராவின் கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. அவளது முகத்தில் காயங்கள் இருந்தன.
அருகில், அந்த சர்வதேச வர்த்தகனான (Edward) கைதியைப் போல ஒரு ஓரத்தில் பலத்த காயங்களுடன் விழுந்துகிடந்தான். அவனது பிரம்மாண்டமான சொத்துக் கப்பலைத்தான் பாபி கைப்பற்றி வைத்திருந்தான்.
இந்தக் காட்சியைக் கண்டதும், ரோலக்ஸின் கண்களில் குருதி பாய்ந்தது.
ரோலக்ஸைக் கண்டதும் பாபி உரக்கச் சிரித்தான். தன் வாயிலிருந்த சுருட்டைத் தரையில் துப்பினான்.
“வாடா… என் தயவுல வாழ வந்த கூலிப் பயலே! ரோலக்ஸ்!” பாபி கோபத்தில் கத்தினான். “என் குணாவைக் கொன்னது மட்டும் இல்லாம… என் சாம்ராஜ்யத்தையே எனக்குத் தெரியாம உன் பக்கம் திருப்பப் பார்த்தியாடா? கடல்ல எனக்குத் தெரியாம அண்டர்வேர்ல்ட் நடத்துறியா? உன்னை இந்த விசாகப்பட்டினத்துல வாழ வச்சதுக்கு என்னைக்கே என் முதுகில குத்திட்டல்ல!”
பாபி தன் இடுப்பிலிருந்த பெரிய கத்தியை உருவிக்கொண்டு, ரோலக்ஸை நோக்கிப் பாய்ந்தான்.
“உன்னை வெட்டிப் போட்டுட்டு, இந்த மயூராவையும் பைரவனையும் கடல்ல தூக்கி வீசுறேண்டா!” என்று கத்தியபடி பாபி ஆக்ரோஷமாகத் தாக்கினான்.
ரோலக்ஸ் அசையவில்லை. அவன் பாபியின் கத்தி வீச்சைத் தன் கையிலிருந்த துப்பாக்கியின் இரும்புப் பகுதியால் தடுத்தான்.
இருவருக்கும் இடையே உக்கிரமான கைசண்டை நடந்தது. பாபி தன் முழு பலத்தையும் பிரயோகித்து ரோலக்ஸைக் குத்த வந்தான். ரோலக்ஸின் சட்டை கிழிய, பாபியின் கத்தி ரோலக்ஸின் விலாப்பகுதியில் லேசாக உரசி ரத்தம் பீறிட்டது.
பாபி மீண்டும் கத்தியை உயர்த்தி, மறைமுகமாக ரோலக்ஸின் நெஞ்சில் குத்த ஓங்கிய அந்த விநாடி…
திடீரென, ஓரத்தில் கிடந்த எட்வர்ட், தன் முழு பலத்தையும் திரட்டிப் பாய்ந்து வந்து, பாபியின் காலைப் பிடித்துக் கீழே தள்ளினான்!
பாபி நிலைகுலைந்து கீழே விழ… அந்தச் சிறிய இடைவெளியைப் பயன்படுத்திய ரோலக்ஸ், தன் வெள்ளைத் துப்பாக்கியை ஓங்கிப் பாபியின் நெற்றியில் வைத்தான்.
“பாங்….!”
ஒற்றைத் தோட்டா! பாபியின் மண்டையைப் பிளந்து கொண்டு பின்னால் பாய்ந்தது. பாபியின் கண்கள் நிலை குத்தி நிற்க, அவனது கொடூரமான சாம்ராஜ்யம் அவனது ரத்த வெள்ளத்திலேயே மூழ்கி முடிவுக்கு வந்தது!
ரோலக்ஸ் மூச்சிரைக்க நின்றான். அவன் உடனே ஓடிச் சென்று, பைரவனைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டான். “பைரவா…” அவன் குரல் நடுக்கத்துடன் சைகை செய்தது. பைரவன் மெதுவாகக் கண்விழித்து, ரோலக்ஸின் கைகளைப் பற்றிப் புன்னகைத்தான்.
மறுபுறம், மயூராவின் கட்டுகளை ரோலக்ஸின் ஆட்கள் அவிழ்த்துவிட்டனர். அவள் ஓடிவந்து ரோலக்ஸைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதாள்.
எல்லாமே முடிந்தது. பாபி செத்துவிட்டான். அவனது ஒட்டுமொத்த மாஃபியா சாம்ராஜ்யமும் இப்போது அதிகாரப்பூர்வமாக ரோலக்ஸின் காலடியில் வந்து விழுந்தது!
ரோலக்ஸ் மெதுவாகத் திரும்பி, தன்னைக் காப்பாற்றிய எட்வர்டைப் பார்த்தான்.
எட்வர்ட் மூச்சிரைத்தபடி சுவரில் சாய்ந்திருந்தான். ரோலக்ஸ் அவனை அருகே வர சொல்லி அழைத்தான், அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ரோலக்ஸ் தன் இடுப்பில் இருந்த அந்த வெள்ளைத் துப்பாக்கியை எடுத்து எட்வர்டின் கைகளில் கொடுத்தான்.
எட்வர்ட் அந்தத் துப்பாக்கியைத் தன் கைகளில் வாங்கினான். அவன் அந்தத் துப்பாக்கியைப் பார்த்த கணத்தில்… அவனது கண்களில் ஒரு விசித்திரமான, ஆழமான உணர்ச்சி தோன்றி மறைந்தது. அவன் அந்தத் துப்பாக்கியின் கைப்பிடியில் இருந்த சின்னத்தையும், அதன் செதுக்கல்களையும் தன் விரல்களால் மிக அழுத்தமாகத் தடவிப் பார்த்தான்.
அவனது மனதிற்குள் ஏதோ ஒரு பழைய நினைவுகள் ஓடியது!
அன்று ரோலக்ஸால் காப்பாற்றப்பட்டு, இன்று ரோலக்ஸையே காப்பாற்றிய இந்த எட்வர்ட்… அந்தத் துப்பாக்கியை ஏன் அவ்வளவு அழுத்தமாக, ஒரு விசித்திரமான பார்வையோடு பார்க்கிறான்?
அந்த வெள்ளைத் துப்பாக்கிக்கும் எட்வர்டின் கடந்த காலத்திற்கும் என்ன சம்பந்தம்? அவன் இந்தத் துறைமுகத்திற்கு வந்ததன் உண்மையான காரணம் என்ன?
எட்வர்ட் தன் உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ளாமல், அந்தத் துப்பாக்கியைப் பத்ரமாக்கிக் கொண்டு ரோலக்ஸைப் பார்த்து லேசாகத் தலையசைத்தான்.
ரோலக்ஸ் தன் நண்பன் பைரவனையும், மனைவி மயூராவையும் அணைத்தபடி, தன் புதிய மாஃபியா அரியாசனத்தில் காலடி எடுத்து வைத்தான்..…
வேட்டை தொடரும் ..⚓
