அத்தியாயம் 1

 

இருபுறமும் உள்ள மரங்கள் பின்னால் நகர பாரிஸ் பழமையும், புதுமையும் கலந்து பார்ப்பவர்களை வியக்க வைத்தது.

நகரம் முழுவதும் பளிச்சென்று இருக்கக் கட்டிடங்களின் பழமை பார்ப்பவர்களை கவர்ந்தது.

வேலைக்குச் செல்பவர்கள் காரை விரட்டிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் சைக்கிளில் செல்பவர்கள் தனிப் பாதையில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த இளங்காலை நேரத்தில் அந்த ஆடி கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது‌.

பாரிஸின் அழகை ரசித்தபடி 

“செல்லம்மா செல்லம்மா

அங்கம் மின்னும் தங்கம்மா

பொன்னம்மா மெல்லமா கட்டி

கிள்ளேன்மா

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணு ரெண்டும் கன் அம்மா

கொஞ்சமா கொஞ்சமா சுட்டுத் தள்ளேன்மா”

என்று அனிருத் பாடிக் கொண்டிருக்க அதற்கேற்ப தாளம் போட்டபடி காரை சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான் அபிஷேக்.

அபிஷேக் இருபத்தேழு வயது இளைஞன். தமிழும், ஃபிரெஞ்சும் கலந்த கலவை.

சிறு வயதில் இருந்தே சமையல் மேல் உள்ள பற்றால் செஃப்க்கான படிப்பை முடித்தவன் அதனை தொடர்ந்து எம்பிஏ ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தான்.

அவனது அப்பா சிறிய அளவில் ஆரம்பித்தது. தற்போது அவன் உள்ளே வருகையில் பெரிய ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரன்டாக வளர்ச்சி அடைந்தது.

படித்து முடித்ததும் தொழிலை கையிலெடுத்தவன் அதைப் பல வழிகளிலும் விரிவாக்கும் முயற்சியில் இறங்கினான்.

தனது ரெஸ்டாரன்டிற்கு முன் காரை நிறுத்தியவன் ஹோட்டலில் நடப்பவை ஒவ்வொன்றையும் கவனித்தபடி உள்ளே வந்தான்.

அவனை பார்த்த ஊழியர்கள் அவனுக்கு விஷ் செய்ய தலையசைத்தபடி தனது அறைக்குள் வந்தவன் அன்றைய மெனுவை ஒரு முறை பார்த்தான். பிறகு பொதுவாக எல்லாவற்றையும் செக் செய்த பின் தனது ஹோட்டலின் கிச்சனை நோக்கிச் சென்றான்.

அவன் உள்ளே நுழைந்த போது கிச்சன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவனது ரெஸ்ட்டாரன்ட் இந்தியன் உணவுகளுக்கு பெயர் பெற்றவை.

அவனது அப்பா பாலகிருஷ்ணன் இங்கு வந்த புதிதில் தனக்கு தெரிந்த இந்தியன் சமையலை வைத்துச் சின்ன ரெஸ்ட்டாரன்ட்டாக ஆரம்பித்தார்.

அது அங்குள்ள இந்தியர்களுக்கு மட்டுமல்லாது பிரெஞ்ச் நாட்டவர்களோடு சேர்த்து அங்கு வாழும் பிற நாட்டவர்களுக்கும் பிடித்துப் போகக் கொஞ்சம் கொஞ்சமாக அவரது தொழில் வளர்ச்சி பெற்றது.

அவன் உள்ளே நுழைந்த போது கிச்சன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அதே நேரம் ஹெட் செஃப் சைமன் இன்னொரு செஃப்பை திட்டிக் கொண்டிருந்தான்.

அதைக் கவனித்தவன், “இங்க என்ன சத்தம்?” எனக் கேட்க,

“அபிஷேக்! லூயிஸ் செஃபோட அம்மாக்கு திடீர்னு ஒடம்பு சரியில்ல. அதனால அவன் வரல” என தலைமை செஃப் தயங்கியபடி சொன்னார்.

“ஓகே. டூ யுவர் வொர்க்” என்றவன், தனது கோட்டைக் கழட்டி விட்டு ஏப்ரனை அணிந்து கொண்டான். அங்கு பின் செய்திருந்த ஆர்டரைப் பார்த்தவன் மளமளவென சமைக்க ஆரம்பித்தான்.

முதலில் இரண்டு முட்டைகளை உடைத்து போட்டவன், பின் கட் செய்து வைத்திருந்த வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை போட்டு தோசை சுடும் கல்லில் வெண்ணையை அந்த கல் முழுவதுமாக தடவியவுடன் கலந்து வைத்திருந்த முட்டை கலவையை எடுத்து அதை மெல்லிசாக வருவது போல் ஊற்றியவன் அது வெந்தவுடன் திருப்பி போட்டு அடுத்த பக்கமும் வேக வைத்தவன் ஒரு பக்கம் சீஸை துருவி முட்டையை இரண்டாக மடித்து சீஸ் கரையும் வரை அடுப்பில் விட்டவன் பின் அதனை எடுத்து பிளேட் செய்தான்.

இதே போல ஒவ்வொரு ஆர்டராக அவனும் சேர்ந்து செய்ய வேலை வேகமாக நடந்தது.

அபிஷேக் இப்படித் தான். எங்கேயும் தான் பெரிய ஆள் என்றே காட்டி கொள்ள மாட்டான். ரொம்பவும் சாதாரணமாக அந்த சூழலில் பொருந்திப் போய் விடுவான். 

பொறுமையின் சிகரம். ஆனாலும் கோபம் வந்தால் எதிராளி அவ்வளவு தான்.

அன்று ஓரளவு ரெஸ்ட்ராரெண்ட்டில் கூட்டம் குறைவான பின்பே கிச்சனை விட்டு வெளியே வந்தவன் வேலை முடிந்தவுடன் ஸ்டீபனை தன்னை வந்து பார்க்கச் சொன்னான்.

அவன் தன்னறைக்கு வந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கையில் அவனுடைய போன் அடிக்க அதை எடுத்துப் பேச ஆரம்பித்தான். 

“ஹே சொல்லு டியூட்”

“டுடே பார்ட்டி டே டா. டூ யூ ரிமெம்பர்?”

“ஐ கம் டா. நீ ஏன்டா கடுப்படிக்கற?”

“ஆமா. எப்போ பார்த்தாலும் வரேன்னு சொல்லுவ. லாஸ்ட்ல வரமாட்டே”

“டேய் அப்போ ஆர்டர் அதிகமா இருந்தது. என்னால நகர முடியல. கூல் ஃபட்டி. ஷார்ப்பா கரெக்ட் டைம்க்கு அங்க இருப்பேன்” என்று போனை கட் செய்தவன் சிறிது நேரம் அக்கவுன்ட்டை ஆராய்ந்தான்.

அதே போல அடுத்த நாள் மெனுவைப் பற்றிய யோசனையில் இருக்கும் போது சைமன் உள்ளே வர அவனிடம் யூரோவை கொடுத்து லூயிஸிற்கு அந்தப் பணத்தைக் கொடுக்கச் சொன்னவன் அடுத்த நாள் தான் அவனை வந்து பார்ப்பதாகச் சொல்லச் சொன்னான்.

பின் அடுத்த நாளுக்கான மெனுவைப் பற்றி சைமனிடம் விசாரித்து விட்டு பார்ட்டிக்குச் சென்றான்.

அவனைப் பார்த்த ஆடம் கை ஆட்ட அவன் அருகே சென்று அமர்ந்தான்.

இவர்கள் ஒரு பக்கத்தில் அமர்ந்திருக்க இன்னொரு பக்கம் இசையோ காதை கிழித்தது.

அதற்கேற்ப ஆண்களும், பெண்களும் ஜோடியாய் ஆடிக் கொண்டிருந்தனர்.

“டிசோலே..(சாரி) கொஞ்சம் ரொத்தார் (லேட்) ஆகிடுச்சு”

“ஏன்டா நான் முன்னாடியே வரல? அப்போ எங்களுக்கு எல்லாம் வேல இல்லையா என்ன?”

“கூல் டியூட். இப்போ சொல்லு. என்ன விஷயம்?”

“ஏன்டா விஷயம் இருந்தாத்தான் பார்க்கணுமா? இல்லேனா நீ பார்ட்டிக்கு வர மாட்டியா?”

“அப்டி இல்லடா. ரெஸ்ட்ராரென்ட்டில ஒரு கஸ்டமர் பார்ட்டிக்கு ஆர்டர் கொடுக்க வந்தாங்க. அதான்”

“ஓகே டா” என்ற ஆடம் அவர்களுக்கு அடுத்த டேபிளில் பேசிக் கொண்டிருந்த பெண்ணை கூப்பிட்டான்.

“லயா” எனக் கூப்பிட அந்த பெண் ஆடம் அருகே வந்து ஒட்டி அமர்ந்து கொள்ள அபிஷேக் இருவரையும் யோசனையாய் பார்த்தான்.

“ஹனி இல் ஸப்பெல் அபிஷேக்… மொன்னமி (இவனுடைய பெயர் அபிஷேக்… என் ஃபிரெண்ட்)” என அறிமுகப்படுத்தியவன் அபிஷேக்கிடம்,

“அபி எல்லே ம குப்பின் (இவ மை லவர்) லயா” என சொல்லத் தன்னை அதிர்ச்சியாய் பார்த்த அபிஷேக்கை கவனித்தவன்,

“ஹனி நீ போ. நான் உன் கூட அப்பறம் வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன்” என்றவன் சொல்ல அவளும் சென்று விட்டாள்.

“என்னடா பாக்குற?”

“எத்தன பேர தான்டா மாத்துவ? நடாஷா என்ன ஆனா?”

“அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்றதில்லனு பிரேக் அப் பண்ணிட்டாடா”

“என்ன சொல்ற?”

“அட போடா. செட்டாகல. அவ்ளோ தான்” என ஆடம் சொல்ல அபிஷேக் அவன் கூறியதில் எரிச்சலானான்.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது பார்ட்டியில் ஆடிக் கொண்டிருந்த ஒரு பெண் அவனை ஆட அழைக்க அவனோ ‘நோ’ என்று தலையசைத்தவன் ஆடமிடம் பேச ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் திரும்பவும் அந்தப் பெண் அழைக்க அதில் கோபமடைந்தவன் அவளை உதறித் தள்ள ஆடம் அதிர்ச்சி அடைந்தான்.

“அபி” என்றவனை எரித்து விடுவது போலப் பார்த்தான்.

“ஏன்டா இப்படி பண்ற?”

“ஃபர்ஸ்ட் ஒரு பொண்ண உருப்படியா லவ் பண்ணு. அப்பறம் என்னைக் கூப்டு. ஓகேவா?”

“டேய்…”

என்ன இவன் இப்படி பேசறானு யோசிக்கிறீங்களா?. என்ன தான் பிரஞ்சு தேசத்துல வளர்ந்தாலும் பாலகிருஷ்ணன் தமிழோடு சேத்து அப்பப்போ கலாச்சாரத்தப் பத்தியும் சொன்னதால அவனுக்குத் தமிழ் கலாசாரம் மேல ஒரு கிரேஸ் வந்தது.

அவனோட அப்பா, அம்மா அன்னியோன்யத்த பாத்துட்டு மத்தவங்கள பாத்ததுல அவனுக்கு பெரிசா லவ் மேல இன்ட்ரெஸ்ட் வரல.

“குட் பாய்” என்று சொல்லியவன் அங்கிருந்து கிளம்ப ஆடம் என்ன செய்வதென்று புரியாமல் திணறினான்.

இவர்களை கவனித்த லயா அவன் அருகே வர

“டார்லிங் வாட் ஹாப்பன்ட்?” என விசாரிக்க

“நந்திங் பேஃபே” என்று சொல்லிச் சமாளித்தான்.

பின்னர் அங்கிருந்து வெளியேறிய அபிஷேக் வீட்டை நோக்கிக் காரை செலுத்தியவனின் மனம் அப்போதும் ஏனோ எரிச்சலாகவே இருந்தது.

வீட்டை  அடைந்ததும் அவனது அம்மா அவனுக்காக காத்துக் கொண்டிருக்க அவர்களை பார்த்ததும் புன்னகத்தவன்

“ஹாய் மாம்… இன்னும் தூங்காம என்ன பண்றீங்க?” 

“நீ வருவேனு தான் வெயிட் பண்றேன்” 

“நான் தான் லேட் ஆகும்னு சொன்னேன்ல”

“அட போடா. எப்போ நீ செஃப் ஆனயோ அப்போ இருந்து உனக்கு யாரையும் தெரியல”

“ஓ… மாம்… ஜஸ்ட் கூல்” என்றபடி அவரை அணைக்க,

“என்னடா கட்டிப்பிடி வைத்தியம் பண்றியா?” என‌ பாலகிருஷ்ணன் கலாய்த்தார்.

“டாட்… நீங்க கொஞ்சம் சைலண்ட்டா இருக்கீங்களா?”

“சரி. வா. சாப்பிடு” என அவனை அழைத்த ஏஞ்சலின் அவன் சாப்பிடும் வரை அவனோடு பேசிக் கொண்டிருந்தார்.

“அபி இந்த வீக்கெண்ட் இளங்கோ அங்கிள் இன்வைட் பண்ணிருக்காங்க‌. அங்க போலாமா?”

“ஓகே டாட். போலாம்” என்றவன்

“டாட் நெக்ஸ்ட் வீக் நான் இன்டியா போகணும். நான் வர வரையும் கொஞ்சம் ரெஸ்ட்ரான்ட்ஸ்ஸ மேனேஜ் பண்ணுங்க” என்று சொல்ல

“ஏன்டா என் ரெஸ்ட்ரான்ட்ட என்னையே மேனேஜ் பண்ணச் சொல்றியே?”

“டாட்” என்று புன்னகைத்தவன்,

“டாட் இன்டியா லாஸ்ட் இயர் போனது. எல்லாம் ஆன்லைன்ல தான் பாக்கறேன். நம்மளோடத  நேர்ல ஒரு வாட்டி பாக்க வேண்டாமா?”

“சரிடா. அப்படியே இன்டியாவையும் சுத்திட்டு வா” என சொல்ல 

“ஓகே டாட்” என்றவன் இருவரிடமும் சொல்லிக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்.

அடுத்த நாள் மாலை லூயிஸின் அன்னையை அவன் பார்க்கச் செல்ல அவனை எதிர்பார்க்காத லூயிஸ் திகைப்படைந்தான்.

“அபிஷேக்” என்று அவன் திணற,

“ஹௌ ஈஸ் யுவர் மம்மா மேன்?”

“மைல்ட் அட்டாக் அபிஷேக். நௌ ஷீ ஈஸ் ஓகே” என சொல்ல அவனிடம் சிறிது நேரம் அவரைப் பற்றி விசாரித்தவன் அவன் அம்மாவையும் பார்த்து ஆறுதல் கூற லூயிஸ் மிகவும் சந்தோஷமடைந்தான்.

அதே போல கிளம்பும்போது எந்த உதவியானாலும் கேட்கச் சொல்ல அபிஷேக்கின் வார்த்தையில் அவன் நன்றியுடன் புன்னகைத்தான்.

அடுத்து வந்த நாட்களில் வேலைகள் அவனை மூழ்கடிக்க முழு மூச்சுடன் அதை முடித்தவன் ஏர் ஃபிரான்ஸில் இந்தியாவிற்குப் பறந்தான்.

தொடரும் 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page